மூன்றாவது கண்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

11.5.பகவான் சொன்னார் ஓ பார்த்தா, விதவிதமான வண்ணங்களிலும் வகைவகையான தெய்வீக வடிவங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது வடிவங்களைப் பார்.
11.6. ஓ பார்த்தனே, ஆதித்யர்களையும் வஸுக்களையும் ருத்ரர்களையும் அஸ்வினி குமாரர்களையும் மருத்களையும் பார், ஒருபோதும் நீ பார்த்திராத அற்புதங்களை எல்லாம் பார்.
11.7. உறக்கத்தை வெற்றி கொண்டவனே! அசைகிற மற்றும் அசையாத எதையெல்லாம் பார்க்க விரும்புகிறாயோ, அனைத்தும் இந்த உடலில் ஒருங்கிணைந்து இருப்பதைப் பார்.
11.8. ஆனால் உன்னுடைய ஸ்தூல கண்களினால் என்னை நீ பார்க்க முடியாது.உனக்குத் தெய்வீக கண்களைத் தருகிறேன். என் தெய்வீக சக்தியை உள்வாங்கிக்கொள்.
என்னுடனான பந்தம் பிரத்யேகமானது
கிருஷ்ணர், இந்த ஒரு ஸ்லோகத்திலேயே இந்த அத்தியாயம் முழுவதும் தாம் விளக்கப்போகும் விச்'வரூப தா்ச'னத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார்.
இந்த மொத்த அத்தியாயமுமே, இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்துப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், "ஓ பார்த்தா, எனது நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தெய்வீக வடிவங்களைப் பார். இவை பல்வேறு வண்ணங்களிலும், பல்வேறு உருவங்களிலும், பல்வேறு அளவுகளிலும் இருக்கும் வித்தியாசமான தெய்வீக வடிவங்களே.
ஓ பார்த்தனே, யாருமே இதுவரை பார்த்தே இராத சூரியன், வசு, ருத்ரன், அஸ்வினி குமாரர்கள், மருத்துகள் போன்றவர்களின் அற்புதமான வெளிப்பாடுகளைப் பார்."
விச்'வரூப தா்ச'னம் அளிக்கும் முன்னர் கிருஷ்ணர் மிகவும் முக்கியமான, அழகான ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார். "ஓ அர்ஜூனா! இந்த வடிவத்தை உன்னுடைய சாதாரண கண்களால் பார்க்க முடியாது. எனது இந்த வடிவைப் பார்ப்பதற்கு, திவ்ய நேத்ரம் என்றழைக்கப்படும் மூன்றாவது கண் உனக்குத் தேவைப்படுகிறது. திவ்யம் ததாமி தே சகஷு... ஆதலால் நான் உனக்கு என்னைப் பார்ப்பதற்கும், அனுபவித்து உணர்வதற்கும், தெய்வீக கண்களை அளிக்கிறேன்."
கிருஷ்ணர் எல்லையில்லாக் கருணையாலும், அன்பினாலும் அதிசயமான, அற்புதமான எல்லா வடிவங்களையும் காட்டுகிறார்.
இந்த ஸ்லோகத்திலிருந்து இருந்து விச்'வரூப தா்ச'னத்தைக் கொடுக்க தொடங்குகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "ஓ அர்ஜூனா, எவையெல்லாம் படைக்கப்பட்டு இருக்கின்றனவோ அவை அனைத்தையும், ஜங்கம, அசையும் மற்றும் ஸ்தாவர, அசையாத உயிர்கள் அனைத்தையும், சாதாரண மனிதரால் பார்க்கவே முடியாத பிரபஞ்சத்தையும், மிக உயர்ந்த ஞானிகளும் ரிஷிகளும்கூட பார்த்திராத, அறிந்திராத படைப்புகளையும் நீ பார்க்கத் தொடங்குவாய்!''
அர்ஜூனன் கிருஷ்ணரின் ஆத்ம நண்பர். ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த நட்பு மிகவும் ஆழமானதாக இருந்தது. சிறுவயதில் இருந்தே அர்ஜூனனும் கிருஷ்ணரும் ஒருவரை ஒருவர் முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். பாண்டவர்களுடனும் கௌரவர்களுடனும் கிருஷ்ணர் நெருங்கிப் பழகி இருந்தாலும், அவர் அர்ஜூனனிடம் கொண்டிருந்த பந்தம் தனிப்பட்டதாக இருந்தது.
பிரபஞ்ச சக்தியின்
எல்லையில்லாக் கருணை
மட்டுமே
நம்மை
விச்வரூப
தரிசனத்திற்குத் தகுதி
உடையவர்களாக்குகிறது!
இந்த நட்பையும் தாண்டி, அர்ஜூனன் அவரளவில் ஒரு புத்திசாலியான, கற்றறிந்த மனிதராகவும் இருந்தார்.
ஆனால், அர்ஜூனனின் ஆழ்ந்த நட்போ, புத்திசாலித்தனமோ அல்லது மெய்யறிவோ கிருஷ்ணரின் நிஜமான இயல்பையும், அவருடைய பல சொரூபங்களையும் காண உதவவில்லை.
மனிதர்கள் பார்த்தே இராத வடிவங்களும், சக்தியின் வெளிப்பாடுகளும் எத்தனையோ இருக்கின்றன.
கிருஷ்ணர் அர்ஜூனன் மீது கொண்ட எல்லையில்லாக் கருணையாலும், அன்பினாலும் அவருக்கு இதுபோன்ற அதிசயமான, அற்புதமான எல்லா வடிவங்களையும் காட்டுகிறார்.
இங்கு ஓர் அற்புதமான கருத்து பொதிந்துள்ளது. விஞ்ஞானத்தின் இன்றைய அதீத வளர்ச்சியால், பூமியில் எந்த ஒரு மூலையில் எது நடந்தாலும் மனிதரால் அதைப் பார்க்க முடிகிறது.
உங்களுக்குத் தெரியுமா? கூகுள் எர்த் (Google Earth) என்ற ஓர் அற்புதமான மென்பொருள் (Software) இருக்கிறது. இதை வைத்து இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் உங்களுடைய வீடு இருந்தாலும், சரி அதைப்பாரக்க முடியும்.

பிடதி ஆச்ரமத்தைக்கூட பார்க்க முடியும். உங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடியும்.
ஆனால் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை மனிதன் பார்ப்பதற்கு எந்த ஒரு மென்பொருளோ, தொலைநோக்கியோ, கருவியோ இன்று வரைக்கும் கண்டு பிடிக்கப்படவில்லை.
இப்போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் பிரபஞ்சம் முழுவதிலும் என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்கும் சக்தியைக் கொடுக்கிறார்.
நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், கடந்த காலத்தில் நடந்ததையும், எதிர்காலத்தில் நடக்கப் போவதையும் பார்க்கும் சக்தியைத் தருகிறார்!
இந்த முழு அத்தியாயத்தின் சாரமாக
இருக்கும் அதே மூன்று கேள்விகளை
மீண்டும் பார்ப்போம்
நான் உங்களுக்குத்
தெளிவாகச் சொல்கிறேன்.
கடவுள் வடிவத்தைப்
பார்க்க முடியும்!

தெய்வீக வடிவத்தைக் காண்பது சாத்தியமே
கடவுள் வடிவத்தைப் பார்க்க முடியுமா?
கடவுள் வடிவத்தைப் பார்க்க என்ன அடிப்படை தகுதி தேவை?
கடவுள் வடிவத்தைப் பார்க்கும்போது உண்மையில் என்ன நடக்கும்?
நான் உங்களுக்குத் தெளிவாகவே பிரித்துச் சொல்கிறேன். கடவுள் வடிவத்தைப் பார்க்க முடியும். எத்தனையோ ஞானிகள் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவித்திருக்கிறார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
ஒன்பது வருட கால நீண்ட தவத்திற்குப் பிறகும், எனக்குள் ஞான அனுபூதி ஏற்படாததால், நான் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விரக்தியில் இருந்தேன். ஆன்மீகப் புத்தகங்களைப் படித்ததிலும், இதுவரை பல்வேறு ஞானிகளால் சொல்லப்பட்ட ஞானக்கருத்துக்களைப் பின்பற்றி, அதை என் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியும், என் மொத்த வாழ்க்கையையும் வீணடித்துவிட்டேனோ என்றுகூட நினைக்கத் தொடங்கினேன்.
‘ஞானமடைதல்’ என்று சொல்கிறார்களே, உண்மையிலேயே, அப்படி ஒன்று இருக்கிறதா? அல்லது என்னுடைய முழு வாழ்க்கையுமே வீணாகிவிட்டதா என்றுகூட நினைத்தேன்.
ஒரு கட்டத்தில், கடுமையான தவங்களைச் செய்தும், ஆன்மீக சாதனைகளைச் செய்தும் வாழ்வின் சாரமான என்னுடைய இளமையை வீணடித்து விட்டேனோ என்றுகூட பயந்தேன். "இது இத்தனை தியாகத்திற்கும் தகுதியானது தானா?'' என்றும் நினைத்தேன்.
திடீரென்று ஒரு தருணத்தில், நான் கடுமையான மனச்சோர்விற்கு ஆளாகி கொண்டிருப்பதையும் உணர்ந்தேன், உண்மையில், அது மனச்சோர்வு கிடையாது என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.
அப்பொழுது நான் நம்பிக்கை இழந்திருந்த
சமயம். ஓர் ஆழமான சுய தேடுதலும்,
ஞானம் அடைந்தே தீரவேண்டும் அல்லது
சாகவேண்டும் என்ற தீவிரமும் இருந்த
சூழ்நிலை.
ஸத்யத்தை உணர்வதற்கு முன்னால் ஒருவர்
இந்த நிலையை அடைந்தே தீர வேண்டும்
என்பது இப்போது எனக்குத் தெரிகிறது.
ஆன்மீக சாதனைகள் என்று எதை எல்லாம்
செய்ய வேண்டுமோ, அதை எல்லாம், ஒரு
துளி மீதமில்லாமல் செய்திருந்தேன்.
உதாரணத்திற்கு, ஒரு சமயத்தில் தூங்காமல் இருப்பதற்காக, ஆறு அடி விட்டம் கொண்ட நெருப்பு வட்டத்திற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு, தொடர்ச்சியாக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.
இப்படி எல்லாம், என் சக்திக்கு முடிந்த வரைக்கும் சிறந்த பல நூறு வழிமுறைகளையும், த்யான நுட்பங்களையும் முயற்சி செய்தேன். அப்படி இருந்தும் எனக்குள் எதுவுமே நடக்கவில்லை.
அதனால், ஒன்று ஞானமடைதல் என்று ஒன்று இல்லவே இல்லை அல்லது அது என்னால் பெற முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஞானமடைதல் சாத்தியமே
ஞானமடைதல் என்பது, சில மனிதர்கள் அவர்களுடைய சுய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு மனித குலத்தை ஏமாற்றுவதற்காகச்சொன்ன வார்த்தை என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன்.
மொத்தச் செயல்முறையிலும் நம்பிக்கை இழந்து சந்தேகப்பட ஆரம்பித்தேன். அதுநாள்வரை எனக்கு உற்சாகத்தையும் தூண்டுதலையும் யார் அளித்தாரோ, யாருடைய உருவப்படத்தைத் தினமும் பூஜித்தேனோ, அவருடைய புகைப்படத்தை - வெறுப்பில், கோபத்தில், மனச்சோர்வில் அந்தப் புகைப்படத்தின் கண்ணாடியே உடைந்து போகும் அளவுக்கு வேகமாகத் தூக்கி எறிந்தேன். அது, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் புகைப்படம்!
ஸத்யத்தை
உணர்வதற்கு
ஓர் ஆழமான
சுய தேடுதலும்,
ஞானம்டைந்தே
தீர வேண்டும் அல்லது
சாக வேண்டும்
என்ற தீவிரத்தன்மையும்
இருக்க வேண்டும்.
அப்போது நான், புனித நதியான
நர்மதையின் நதிக்கரையில் அமைந்திருக்கும்
மத்தியபிரதேசத்தின் வனப்பகுதியான
ஓம்காரேஷ்வரில் தங்கி இருந்தேன்.
என்னிடம் ஒரு ருத்ராக்ஷ மாலை இருந்தது.
அதை வைத்துத்தான் என்னுடைய
பிரார்த்தனைகளையும் ஆன்மீக
சாதனைகளையும் செய்வது வழக்கம். அந்த
மாலை என்னுடைய உயிர்மூச்சாக இருந்தது.
அதை மிகவும் மரியாதையோடு தொடர்ந்து
என் கூடவே வைத்திருந்தேன்.
கோபத்திலும் துக்கத்திலும் அந்த ருத்ராக்ஷ மாலையைக்கூட நர்மதை நதியில் தூக்கி எறிந்து விட்டேன்; அது மட்டுமில்லாமல் அந்த மந்த்ரத்தையும் மனத்தில் இருந்து வீசி எறிந்தேன்.
"இனி த்யானமும் வேண்டாம்; ஆன்மீகமும் வேண்டாம்; எல்லாம் போதும்!" என்று முடிவெடுத்தேன்.
ஞானமடைந்த குருமார்கள் என்று அழைக்கப்பட்டவர்களால் நான் பட்டபாடு போதும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டேன்; எல்லாவற்றையும் உதறி விட்டேன்.பிறகு, நர்மதை நதியை நோக்கி கண்களை மூடியபடியே நடக்க ஆரம்பித்தேன். அந்த இடத்தில் நதியின் ஆழம் குறைந்தபட்சம் 60 அடியாவது இருந்திருக்க வேண்டும். கண்களை மூடியபடியே நடந்து கொண்டிருந்தேன். பயம் என்னை உலுக்கினாலும் நான் தொடர்ந்து நடந்தேன். கண்களைத் திறந்து பார்த்தபோது, நதிக்கு அக்கரையில் இருந்தேன்! இன்று வரையில் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது.
வழியில் பாறைகள் இருந்ததா அல்லது நான் மிதந்தேனா அல்லது நதிதான் பிளந்து வழிவிட்டதா என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை.
ஆனால் மறுபடியும் அந்த நதியில் நடந்து போகும் மன உறுதி மட்டும் எனக்கு இல்லை என்பது தெரிந்தது! நான் முதலில் நின்றிருந்த இடத்தை அடைய, பக்கத்தில் இருக்கும் பாலத்திற்குப் போக வேண்டும் என்றால் கூட பல மைல்கள் நடக்க வேண்டும்!
இந்தச் சம்பவம் நடந்த ஏழாவது நாள்,
ஞானமடைந்த குருமார்களின் விளையாட்டில்
நானும் சேர்ந்துவிட்டேன்! ஞான
அனுபவமும், பிரபஞ்ச விழிப்புணர்வின்
அனுபவமும் என்னுள் மிக இயல்பாக
நடந்தது. அதன் பிறகு அது ஒருபோதும்
என்னை விட்டுப் போகவில்லை.
"இந்த அனுபவத்தை உணர முடியுமா?" என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால், "ஆமாம், முடியும்," என்பதுதான் ஒரே பதில். உங்களைப் போல்தான் நானும் இருந்தேன், இந்த எளிமையான ஸத்யத்தைப் பணிவோடு சொல்கிறேன், "ஆமாம், நேர்மையோடு, இதை அனுபவமாக உணர முடியும்."
கிருஷ்ணருடைய
போதனைகளுடன்
ஒன்றி இருப்பதே
உங்களுக்கு
அதிர்ஷ்டம்தான்.
இது திடமான ஸத்யம்; ஸத்யமாக இதை அனுபவமாக்க முடியும். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களை இந்தச் சித்தாந்தத்தை நம்ப வைப்பதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை.
ஒரு நண்பருக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை எடுத்துச் சொல்லி, வேறு பாதையில் போகச் சொல்வதுபோல, ஒரு சின்ன உதவி செய்கிறேன், அவ்வளவுதான்.
இந்தப் பிரபஞ்ச வடிவின் அனுபவத்தை, ஸத்யத்தை நம்முடைய வாழ்வில் நிச்சயமாக, நிச்சயமாக உணர முடியும்.
'இது எனக்கு இல்லை' என்று ஒருபோதும்
நினைக்காதீர்கள். இந்த அனுபவம்
எல்லோருக்கும் சாத்தியமே!
ஆனால் இந்த அழகான, ஆழமான
அனுபவத்தை நிச்சயமாகப் பெற முடியும்
என்று நம்பவில்லை என்றால், நீங்கள்
இதையெல்லாம் கேட்பதே வீணான வேலை
தான்!
இது நீங்கள் இன்னொரு கதையாக நினை
த்தால், உங்களுடைய நேரத்தை இங்கே
வீணடிக்காதீர்கள்.
இது சாத்தியமே என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், கிருஷ்ணர் சொல்வது உங்களுடைய இருப்புநிலையில் வேலை செய்யத் தொடங்கும்.
நீங்கள் இங்கிருந்து வெளியில் போகும்போது, இந்தப் பிரபஞ்ச வடிவ அனுபவத்தை அடைந்திருப்பீர்கள் என்றால், நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைவேன். குறைந்தபட்சம் அந்த அனுபவத்தின் ஒரு சிறு துளியளவாவது பெற்றுச் செல்லுங்கள்.
கிருஷ்ணரின் இந்த வார்த்தைகள் உங்களுக்குள் ஆழமாகச் செயல்பட வேண்டும் என்றால், முதலில் இந்தப் பிரபஞ்ச அனுபவம் உங்களுக்குள்ளும் நிகழ முடியும் என்பதை நம்புங்கள். இவை வெறும் வார்த்தைகள் இல்லை.
என் அனுபவத்திலிருந்து நேரடியாகவும், வெளிப்படையாகவும் சொல்கிறேன், "இது சாத்தியமே!"
கிருஷ்ணரின் இந்த வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் அல்ல, அவை, வெறும் வேத வாக்கியங்களும் இல்லை. அவர் வார்த்தைகள் அனைத்தும் நுட்பங்கள். உங்களுக்குள் ஆழமாக இறங்கி, அற்புதமான வேலைகளைச் செய்து பிரம்மிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் நுட்பங்கள்.
உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம், குருவின் மீது பரிபூரணமான நம்பிக்கைதான். குரு என்ன சொல்கிறாரோ அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நான் சொல்கிறேன், அது நிச்சயம் நடக்கும்.
நீங்கள் அனுபவத்திற்குத் தயாராகிவிட்டீர்கள்
அடுத்து, இதற்குத் தேவையான தகுதி என்ன? என்று பார்ப்போம்.
அடிப்படையில், அர்ஜுனனுக்கு இந்த அனுபவத்தை வழங்கியதன் மூலம், இதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதையே கிருஷ்ணர் நிரூபித்திருக்கிறார். ஏனென்றால் அர்ஜுனனுக்கே எந்தத் தகுதியும் இருக்கவில்லை.
அர்ஜுனன் எந்த பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ளவில்லை, கிருஷ்ணர் சொன்ன போதனைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. வெறுமனே, அவருக்குக் கிருஷ்ணரின் ஸாந்நித்யத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது, அவ்வளவுதான்.
அதேபோல, எங்கோ ஒரு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல், இங்கே இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!
இந்நேரம் நீங்கள் வேறு எங்கெல்லாமோ இருந்திருப்பதற்கான ஆயிரக்கணக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன; எவ்வளவோ வாய்ப்புகள் உங்களுக்கு இருந்திருக்கும். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு, இங்கே இருப்பதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். இந்த ஒரே தகுதிதான் தேவைப்படுகிறது.
உண்மையில், கிருஷ்ணரை முந்தைய உருவத்தில் தவற விட்ட, அர்ஜுனன்கள்தான் நீங்கள். நீங்கள் இங்கே கேட்டுக் கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பது, வெறுமனே தற்செயலாக நடந்த செயலோ அல்லது தெய்வ சங்கல்பமோ அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தோ அல்ல.
இங்கே நீங்கள் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறீர்கள். இந்தத் தகுதியே போதும். இந்த முறை கிருஷ்ணரைத் தவறவிடுவதில்லை என்ற உறுதியோடு இருங்கள்!
இங்கே என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ, அவை எல்லாவற்றையும், உங்களுடைய ஆழ்மனமும், உணர்வற்ற மனமும் ஏற்று கொண்டால்தான் நீங்கள் இங்கே
உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம். குருவின் மீது பரிபூரணமான நம்பிக்கைதான். குரு என்ன சொல்கிறாரோ அது நிச்சயம் நடக்கும். வருகிறீர்கள். அப்படி இல்லையென்றால், அடுத்த நாள் நீங்கள் இங்கே வரவும் மாட்டீர்கள் அல்லது இந்த அத்தியாயத்தை படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருக்கவும் மாட்டீர்கள்.
ஒரு அன்பர் பகிர்ந்து கொண்ட தகவல் இது: கடந்த சில தினங்களாக, அவர் காலையில் எழுந்ததிலிருந்தே மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஸத்ஸங்கத்திற்காகவே காத்திருப்பதாகவும், அதனால்தான் தம்மால் ஸத்ஸங்கங்களில் கலந்து கொள்ள முடிகிறது என்றும் அவர் சொன்னார்.
நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த வார்த்தைகள் எல்லாம் ஏற்கெனவே உங்கள் இருப்புத் தன்மையில் நுழைந்து விட்டது என்றுதான் அர்த்தம். எனவே, நீங்கள் அனுபவத்திற்கு தயாராகி விட்டீர்கள் என்று நம்புங்கள்.
இங்கே பிரச்சினை என்னவென்றால், நீங்கள்
தகுதி அடைந்திருந்தாலும், அதை நீங்கள்
நம்புவதே இல்லை.
இது ஏனென்றால், சமுதாயமும்
மதபோதகர்களும் தொடர்ந்து நிறைய
விஷயங்களுக்காக உங்களைக் குறை
சொல்லிச் சொல்லி உங்களுக்குள்
ஒருவிதமான குற்ற உணர்ச்சியை உருவாக்கி
விட்டார்கள்.
இதனால்தான், உங்களுக்கே உங்கள் மேல் உறுதியான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
இத்தனை நாட்கள் இவற்றை நீங்கள் கேட்ட பிறகும், நீங்கள் இங்கே இருப்பதே, உங்கள் விழிப்புணர்வற்ற மனம் இந்தக் கருத்துகளை ஏற்று கொண்டுவிட்டது என்பதற்கான ஆதாரம்.
உங்கள் விழிப்புணர்வுள்ள மனம் வேண்டுமானால், நாம் ஏன் இங்கே இருக்கிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் இங்கே இருப்பதே, விழிப்புணர்வற்ற மனம் இந்தக்கருத்துகளை ஏற்று, அனுபவிக்க ஆரம்பித்து விட்டது என்பதைக் காட்டுகிறது.

நீங்கள் தர்சனத்திற்குத் தகுதியானவர்கள்தான்
கிருஷ்ணருடைய உயர்ந்த போதனைகளுடன் நீங்கள் ஒன்றிப் போவதே உங்களுடைய அதிர்ஷ்டம்தான். இந்த வரிகளைப் புரிந்துகொண்ட பிறகு, அர்ஜூனனுக்குக் கிருஷ்ணர் கொடுத்த பிரபஞ்ச தர்சனத்தின் ஒரு துளியை அனுபவிப்பதற்காக, ஒரு த்யானத்திற்குள் நுழைவோம்.
கிருஷ்ணர் கொடுத்த தர்சனத்தைப் பெறுவதற்கு அர்ஜூனனுக்கு எந்தவித தகுதியும் இருக்கவில்லை. இருந்தும், அர்ஜூனனுக்கே அவர் வழங்கியபோது, நமக்கு வழங்கமாட்டாரா?
ஒன்று, அனுபவத்தைப் பெற முடியும்
என்பதை நம்புகிறோம். இந்த அனுபவம்
நமக்கும் சாத்தியமே என்பதையும் நாம்
எல்லோரும் புரிந்து கொண்டோம்.
இரண்டாவது அதற்கான தகுதி: இங்கே
வெறுமனே இருப்பதாலேயே, நாம் அந்தத்
தகுதியைப் பெற்றுவிட்டோம் என்பதையும்
நாம் எல்லோரும் புரிந்து கொண்டோம்.
"ஞானமடைவதற்கு என்ன தகுதி
வேண்டும்?" என்று பகவான் ரமண
மகரிஷியிடம் ஒருவர் கேட்டார். "உயிரோடு
இருந்தாலே போதும், அதுதான் தகுதி!"
என்று பகவான் பதில் சொன்னார்.
கிருஷ்ணருடைய
உயர்ந்த
போதனைகளுடன்
நீங்கள் ஒன்றிப் போவதே
உங்களுடைய
அதிர்ஷ்டம்தான்.
அதிகபட்சமாக, திறந்த மனத்தோடு இருப்பதுதான் ஒரே தகுதி. திறந்த மனத்தோடு இல்லை என்றால், நீங்கள் இங்கே வந்திருக்கவே மாட்டீர்கள். நம்முடைய இருப்புத் தன்மைக்குள் நம்மால் ஆழமாகப் போக முடியும், அதற்கான தகுதி நமக்கு இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் நம்புவதே இல்லை.
நான் சொல்கிறேன், எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். நீங்கள் இங்கே இருப்பதாலேயே அதற்கான தகுதியை அடைந்து விட்டீர்கள்.
அடுத்தது, அந்த அனுபவத்தைப் பெறும்போது என்ன நடக்கிறது?
கிருஷ்ணர் சொல்கிறார் :
ந து மாம் சக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா |
திவ்யம் ததாமி தே சக்ஷுஃ பச்ய மே யோகமைச்வரம் // 11-8
"அர்ஜூனா, உன்னுடைய சாதாரண கண்களால் என்னைப் பார்க்க முடியாது. திவ்ய சக்ஷு என்ற தெய்வீக கண்களால்தான் அது முடியும். என்னுடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்ப்பதற்கு நான் உனக்குத் தெய்வீக கண்களை அளிக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொன்னார்.
தெய்வீக கண்கள் என்றால் என்ன?
எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
> நம்முடைய
> இருப்புத் தன்மைக்குள்
> நம்மால் ஆழமாகப்
> போக முடியும்,
> அதற்கான தகுதி
> நமக்கு இருக்கிறது.
அந்த வயதில் நான் ஒரு வகையான த்யானம் செய்து வந்தேன். த்யானத்தைச் செய்து வந்தேன் என்று சொல்வதைவிட, என்னுடைய குருநாதரால் கற்றுக் கொடுக்கப்பட்ட அந்த த்யான நுட்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தேன் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அதுதான் என்னுடைய வழக்கமாக இருந்தது
எனக்குப் பத்து வயது இருக்கும்போது, இரமண மஹரிஷியின் சீடரான, அண்ணாமலை சுவாமிகளை, என்னுடைய பெற்றோரோடு பார்க்க போயிருந்தபோது, பக்தர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். "நாம் இந்த உடல் அல்ல, நாம் ஆன்மா. வலியோ அல்லது துக்கமோ நமக்குக் கிடையாது," என்று சொல்லிக் கொண்டிருந்தார். ''இது எப்படிச் சாத்தியம், என் தாயார் என்னை அடித்தால் வலிக்கிறதே' என்று நான் யோசித்தேன். இந்தியாவில் குழந்தைகள் குறும்பு செய்தால், பெற்றோர்கள் அவர்களை அடிப்பார்கள். இங்கே மாதிரி 911 -ஐ அழைக்க முடியாது
