KAILASA Library/பகவத் கீதை/உங்களுக்கு ஒருவழிகாட்டியாக இருக்கிறேன்Sign in
பகவத் கீதை

உங்களுக்கு ஒருவழிகாட்டியாக இருக்கிறேன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் கடும் உழைப்பால் உருவாக்கபட்டால் ஒழிய அந்தப் பாதை உபயோகமாக இருக்காது.

ஸ்வாமிஜி, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. ச'ரணாகதி என்றாலே முடிவெடுப்பதைக் குருவிடம் விட்டுவிடுவது என்று தானே அர்த்தம். ஆனால், யாராவது முடிவெடுப்பதை உங்களிடம் விட்டு விட்டால் அவர்கள் அதை அஹங்காரத்தால் செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். எனக்கு இது புரியவில்லை.?

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
கிருஷ்ணரிடம் விச்வரூப தர்சனத்தைக்
கேட்டபோது அர்ஜுனன் சரண் அடைந்தது
போல், நீங்கள் என்னிடம் சரணடைந்திருந்தால்
விச்வரூப தர்சனத்தின் போது உங்கள்
கண்களையே இழந்தாலும்கூட புலம்பவோ,
முறையீடு செய்யவோ மாட்டீர்கள்!

இதுதான் இங்கு இருக்கும் முரண்பாடு, வேறுபாடு.

நான் உங்களுக்கு
ஒரு வழிகாட்டியாக
மட்டுமே இருக்கிறேன்.
ஆனால்
உங்களில் பலர்
என்னையே சுமக்கச்
சொல்கிறீர்கள்.
இது சாத்தியமில்லை

எல்லா சீடர்களும் என்னிடம் சரணடைந்துவிட்டதாக உரிமை கொண்டாடுகிறார்கள். நான் அவர்களை ஆச்ரமத்தில் வந்து தங்குமாறு சொன்னால், ஒரு நூறு சமாதானங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

அவர்கள் என்னுடன் வந்து வாழ்வது, என்னுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மேம்படுத்தப் போவதில்லை. மாறாக அவர்களது சொந்த நலனுக்காகவே நான் அவர்களை ஆச்ரமத்தில் வந்து தங்குமாறு சொல்கிறேன்.

சரணாகதி பற்றிய எல்லாமே தத்துவரீதியான பேச்சுக்கள்தான். பொருளாதார ரீதியிலான லாபம் தகர்க்கப்பட்ட அடுத்த கணமே அல்லது தகர்க்கப்பட்டதாக நினைக்கும் அடுத்த கணமே எல்லா சரணாகதியும் மாயமாக மறைந்து போகிறது.

என் ஒவ்வொரு சீடனும் எங்கிருக்கிறார் என்பதும், அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதும் எனக்குத் தெரியும்.

இதனால்தான், அவர்களில் பலர் ஆச்ரமவாஸிகள் ஆகவேண்டும் என்று விரும்பும்போதும், காவி உடை அணிய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் போதும் நான் மறுக்கிறேன்.

ஏனென்றால் கருணையின் காரணமாகவும், அவர்கள் தயாராக இல்லை என்பதாலும் மறுக்கிறேன்

ஆனால் சிலர் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள். They insist they have what it takes. முடிவாக, உங்கள் விதியை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே நான் மனமிரங்கி உதவுகிறேன்.

உங்களில் சிலர் என்னுடைய சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டு நீந்தி கரையேறி விடுகிறீர்கள். உங்களுக்கு அந்தத் துணிச்சலும் அதை நிறைவேற்றிக் காட்டும் தீர்மானமும் இருக்கிறது.

அது உங்களுடைய அற்புதம்; நான் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கிறேன். ஆனால் உங்களில் பலர் என்னையே சுமக்கச் சொல்கிறீர்கள். இது சாத்தியமில்லை.

உங்கள் கடும் உழைப்பால் உருவாக்கபட்டால் ஒழிய அந்தப் பாதை உபயோகமாக இருக்காது.

அலங்காரப் படம்

உங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியமானது

உங்கள் கடும் உழைப்பால் உருவாக்கபட்டால் ஒழிய அந்தப் பாதை உபயோகமாக இருக்காது.

உங்கள் முயற்சி என்று நீங்கள் நினைப்பதுகூட உண்மையில் உங்கள் முயற்சி கிடையாது. ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

'மணலில் பதிந்த கால்தடங்கள்' (Footprints on the Sand) என்ற இந்தக் கதையை நீங்கள் முன்பே படித்து இருக்கலாம். இது ஓர் அழகான கதை.

பாலைவனத்தில் ஒரு மனிதர் வழி தவறி தனியாகத் தவித்துக் கொண்டிருந்தார். உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்து விட்டார்.

"என்னை இந்தப் பாலைவனத்தில் இருந்து வெளியேற்றி விடுங்கள்," என்று இயேசுவிடம் கெஞ்சி அழுகிறார். பதிலேசும் இல்லை. அவர் சிரமமப்பட்டு நடந்து நடந்து முடிவாகப் பாலைவனத்தின் எல்லையை அடைந்துவிடுகிறார்.

பின்னர் இயேசுவிடம் குற்றம் சாட்டுகிறார்: "கடவுளே, நீங்கள் கொஞ்சம்கூட கருணையில்லாதவராக இருந்தீர்கள். எனக்கு உங்கள் உதவி மிகவும் தேவைப்பட்டபோதுகூட நீங்கள் எனக்கு உதவ முன்வரவில்லை.

நீங்கள் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இருந்தேன். மணலில் எனக்கு அருகில் உங்கள் காலடித் தடங்களை ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் ஒரு ஜோடி காலடித் தடங்களை மட்டுமே பார்த்தேன். எனக்குத் தேவைப்படும்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?"

ஒரு குரல் ஒலித்தது, "ஏ முட்டாளே! நீ பார்த்த அந்தக் காலடி தடங்கள் என்னுடையவைதான். நான் உன்னைச் சுமந்து கொண்டிருந்தேன்!"

கடவுள் உங்களுக்காக தமது அடையாள அட்டையைக் கொடுப்பது இல்லை. உங்களிடம் இருந்து அவர் எதையும் விரும்புவதும் இல்லை.

நீங்கள் மிக அரிதாகவே நன்றி செலுத்துவீர்கள் என்பதையும் அவர் நன்றாக அறிவார்.

நீங்கள் வேண்டியது கிடைக்காதபோது குறை கூறுகிறீர்கள். ஆனால் இதுவரை கிடைத்த, இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் பலபல நன்மைகளுக்கும், நீங்கள் ஒருபோதும் கடவுளுக்கு நன்றி சொல்வதே இல்லை!

Hands playing flute