எதையும் ஏற்றுக்கொள்ளும் தைரியம் வேண்டும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இருந்தும் அர்ஜுனன் தயங்குகிறார். அவர் அறிய விரும்பிய போதிலும், ஸத்யத்தின் அனுபவத்தைத் தம்மால் தாங்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது.
"கிருஷ்ணா, என்னால் உமது வடிவத்தைப் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால்...," என்ற வாக்கியத்தை அர்ஜுனன் சொல்லும்போது, அது அவருக்குள் ஏற்கனவே ஒளிந்திருக்கும் அச்ச உணர்வை சுட்டிக் காட்டுகிறது.

அர்ஜுனனுக்கும் சந்தேகங்கள் இருந்தன. ஆம், அர்ஜுனனுடைய எல்லா எதிரிகளையும் ஏற்கனவே தாம் அழித்துவிட்டதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் அவர்கள் எல்லோரும் ஸ்தூல வடிவில் அர்ஜுனனின் முன்னால் இருக்கிறார்கள்.
கிருஷ்ணர் சொல்வதை அர்ஜுனன் நம்புகிறார். ஆனால் அவரது புலன்களோ அவருக்கு வேறு விதமான கதையைச் சொல்கின்றன.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை; நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் பொறுப்புக்களை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். என்ன வந்தாலும் அதை எதிர் கொள்ள வேண்டும். எந்த ஒரு எளிய ஸத்யத்தையோ அல்லது அனுபவத்தையோ கூட, மிகச் சுலபமாக கொடுத்துவிட முடியாது. ஏனென்றால் அதைப் பெறுபவர் தாம் பெற்றதைத் தக்க வைத்து கொள்ளும் பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும்.
த்யான பீட வெளியீடுகளில் ஒன்றான, ‘ஸ்வாமிஜி அஸ் வீ நோ ஹிம்’ (Swamiji as We Know Him) என்ற புத்தகத்தில் ‘இன் தி ஆர்ம்ஸ் ஆப் தி மாஸ்டர்’ (In the Arms of the Master) என்றவொரு அத்தியாயம் இருக்கிறது.
இங்கே அர்ஜுனன் கேட்பது போலவே, பக்தர்களில் ஒருவர் தொடர்ந்து ஆன்மீக அனுபவத்திற்காக என்னை நச்சரித்துக் கொண்டிருந்தார் என்பதை அந்த அத்தியாயம் ஒரு கதையாகவே விளக்குகிறது.
நான் அவரை தியானம் செய்யச் சொன்னேன். ஆனால் அவரோ, எனக்கு நீங்கள் நேரடியான அனுபவத்தைக் கொடுங்கள்," என்று என்னை வற்புறுத்தினார். ஆன்மீக அனுபவத்தை ஒரு தேங்காயைத் தூக்கிக் கொடுப்பதுபோல கொடுத்துவிட முடியாது!
அதைப் பெறுபவர், அதைத் தாங்கக்கூடிய அளவுக்குப் பக்குவத்தில் இருக்க வேண்டும். இப்படியே ஆறு மாதம் சென்று விட்டது. நான் தியானம் செய்ய சொன்னதையும் அவர் செய்யவில்லை.
தொடர்ந்து அந்தப் பக்தர் கேட்பதை நிறுத்துவதாகவும் இல்லை; மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். முடிவாக, நேரம் வந்துவிட்டது என்று நான் முடிவெடுத்தேன். அந்த அனுபவத்தை அவருக்குக் கொடுத்தேன்.
அந்த அனுபவத்தைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்பதை அவருடைய வார்த்தைகளிலேயே காண்போம்: "என்னுடைய இருப்புத் தன்மையின் அஸ்திவாரமே உலுக்கப்பட்டது, நான் எல்லையில்லாமல் விரிந்து பரந்து இருப்பதை உணர முடிந்தது. ஆனால் இவற்றையெல்லாம் என்னால் தாங்க முடியவில்லையாதலால் அந்த அனுபவத்தை நிறுத்திவிடும்படி ஸ்வாமிஜிடம் கெஞ்சிக் கேட்டுக் கதறினேன்."
> மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை; நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
இந்த அனுபவத்திற்குப் பிறகு இரண்டு நாட்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். நான் ஏதோ யோசிக்காமல் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்கியதாக வேறு புலம்பிக் கொண்டிருந்தார்!
2005ல் இமாலயத்தில், சார் தாம் என்ற இடத்திற்கு (புனித தலம்) புனித யாத்திரை சென்றபோது, அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு பக்தை, மகாவதார் பாபாஜியின் தர்சனத்தைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இமயமலைப் பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாபாஜி, பரமஹம்ஸ யோகானந்தாவின் பரமகுரு. நான் ஞானமடைவதற்கு முன்பு இமயமலையில் இருந்தேன். அப்போது ‘பரமஹம்ஸ நித்யானந்தா’ என்று பாபாஜி என்னை ஆசீர்வதித்துச் சென்றார். ஆகவே என் பரம்பரைக்கு அவரே பரமகுரு.
“நான் செய்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் பாபாஜி காட்சி தருவார்,” என்று நான் அவரிடம் சொன்னேன். கௌரிகுண்ட்-ல் இருந்து கேதார்நாத்துக்கு குதிரையில் அமர்ந்து சவாரி போனபோது பாபாஜி கடந்து சென்றதை அவர் பார்த்திருக்கிறார்.
அவர் என்னிடம் இதைச் சொன்னபோது, அவர் கைகளைப் பிடித்துப் பார்த்தேன். அந்த அனுபவத்தை அவர் உண்மையிலேயே பெற்று இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தச் சக்தியின் தாக்கத்தை சில காலம் அவர் அனுபவிப்பார் என்று சொன்னேன்.
அந்த ஆழமான சக்தியின் அனுபவத்தை
ஏற்று, அதனை தக்கவைத்துக்க கொள்வதற்கு
அவருடைய உடலுக்கு ஆறுமாத காலம்
தேவைப்பட்டது. ஆறு மாத காலம் கழித்து
நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது
அவரைக் குணப்படுத்தினேன்!
“என்னால் உங்களுடைய பிரபஞ்ச வடிவத்தை காண முடியும் என்று நீங்கள் நினைத்தால், பிரபுவே! மாயையால் மறைக்கப்படாத உங்களின் எல்லாம் வல்ல பிரபஞ்ச தாச்'ரூத்தை எனக்குக் காட்டுவீராக,” என்று இங்கே அர்ஜுனன் சொல்கிறார்.
அனுபவத்திற்குள் நுழையும் முன், எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தைரியம் உங்களுக்கு வேண்டும் என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

தெய்வத் தன்மை உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாது
எனக்குத் தெரிந்து, ஒரு வருட காலமாகத் தொடர்ந்து த்யானம் செய்பவர்கள் இந்த எல்லையற்ற தன்மையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் பயந்து நடுங்கிவிடுகிறார்கள். தங்களை இழந்துவிடுவோமோ என்று பயந்துவிடுகிறார்கள்.
இது எப்படி என்றால், உங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தினரை அழைக்க படாதபாடுபட்டுவிட்டு, அவர் வந்தவுடன் அவரின் வருகையைப் பார்த்து ஆச்சரியமடைவதைப்போல் இருக்கிறது. பொதுவாக எல்லோருமே இந்த அனுபவத்தை முதன் முறையாக அடையும்போது, பயந்து நடுங்கி தப்பித்து ஓடவே முயற்சி செய்கிறார்கள்.
த்யானம் என்பதே உங்களுக்கு அந்த எல்லையில்லாத் தன்மையின் அனுபவத்தை வழங்கக்கூடியதுதான் என்று நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு.
நிறைய சந்தர்ப்பங்களில், முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலை த்யான முகாம்களில் இருள் த்யானம் நடத்தப்படும்போது, மக்கள் தங்களுடைய உடல் என்னும் உணர்வு நிலையை இழந்து விடும் நிலைக்கு வருகிறார்கள். அவர்கள் பயந்து அந்த அனுபவத்தோடு ஒன்றிப் போக மறுத்து விடுகிறார்கள்.
த்யானம் வகுப்பு முடிந்த பிறகு, நடந்ததை என்னிடம் சொல்வார்கள். ஆனால் அப்போது காலம் கடந்து விட்டிருக்கும். அவர்கள் அந்த வாய்ப்பை இழந்து விட்டிருப்பார்கள்.
மந்த்ரங்களைத் தீவிரமாக ஜபிப்பவர்களும் கூட இதே போலத்தான். இறைசக்தி அவர்களுக்கு அனுபவத்தை வழங்கத் தொடங்ும்போது, பயந்து நடுங்கி நிறுத்தி விடுவார்கள்.
நீங்கள் இறைத் தன்மையின் மீதோ, ஒரு மந்த்ரத்தின் மீதோ அல்லது கடவுளின் மீதோ தியானம் செய்துகொண்டிருக்கும்போது தர்ச்'நமோ,
காட்சியோ கிடைக்கும் வேளையில் அந்த அனுபவத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்காதீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், தெய்வத் தன்மை உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாது. உங்கள் பயம்தான் உங்களைத் தொந்தரவு செய்யும்.
> தெய்வீகம் என்னும் இனிப்பு உங்களை ஒருபோதும் சர்க்கரை நோயாளி ஆக்குவதில்லை.

## ஒருபோதும் நீங்கள் இறக்கமாட்டீர்கள்
உங்களுக்கு அனுபவம் நிகழும்போது தைரியமாக அதனோடு இணைந்திருங்கள். கடவுளைவிட அதிகப்படியானது எதுவுமே இல்லை.
இராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கேட்கிறார், “அம்ரு'த ஸாகரத்தை நீ பார்த்தால், அமிர்தத்தை அதிலிருந்து எப்படி எடுத்துக் குடிப்பாய்?”
அதற்கு விவேகானந்தர் சொல்கிறார், “நான் ஒரு 'ஈ'யாக மாறி, கடலின் ஓரத்தில் அமர்ந்து மெதுவாகக் குடிக்க ஆரம்பிப்பேன்.”
“முட்டாளே, அதன் உள்ளே குதித்துக் குடி!” என்றார் இராமகிருஷ்ணர்.
விவேகானந்தர், தாம் இறந்துவிடுவோம் என்று பயப்படுகிறார். இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார், “அது அம்ரு'தக் கடல், நீ எப்படி இறப்பாய்?
அம்ரு'தம் என்றால் இறவாத் தன்மையை அளிக்கும். அதைப் பருகுவதால் நீ இறக்க முடியாது. அழிவில்லா, நிலையான நித்யமான கடலில் குதிப்பதால் நீ எப்படி இறக்க முடியும்?”
ஆன்மீக சக்தியிலும் ஆன்மீக அனுபவத்திலும் அதிகப்படியானது, அதீதமானது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஆகவே, ஆன்மீகத்தில் எதையும் அதிகப்படியாகச் செய்வதற்குக் கவலைப்பட வேண்டாம்.
அதிகப்படியான பக்தி, அதிகப்படியான தெய்வத் தன்மை, அதிகப்படியான ஆன்மீகம் அல்லது ஆனந்தம் என்று ஒருபோதுமே இருக்க முடியாது.
அந்தந்த நிலையில், எந்த அனுபவமும் இயல்பானதே, தேவையானதே.
அர்ஜுனன் இங்கே சொல்கிறார், "என்னால் உமது பிரபஞ்ச வடிவத்தைக் காண முடியும் என்று நீங்கள் நினைத்தால்...,"
அர்ஜுனன் அனுபவத்தை அடைய விரும்பினாலும், கிருஷ்ணரிடமே பொறுப்பைக் கொடுத்து விடுகிறார். அவர் சர்க்கரையை விரும்புகிறார், ஆனால் சர்க்கரை நோய் வரக்கூடாது என்று நினைக்கிறார்!
இயல்பாகவே, தெய்வீகம் என்னும் இனிப்பு உங்களை ஒருபோதும் சர்க்கரை நோயாளிாக்குவதில்லை.
இந்தியாவில் பிறந்த இராமானுஜாச்சாரியார் என்ற துறவி வாழ்ந்த மேலக்கோட்டை என்ற இடத்திற்குச் செல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அங்கே வழங்கப்பட்ட ப்ரசாதம்,
சுவையாகவும், ரொம்பவும் இனிப்பாகவும்
இருந்தது. அதைச் சாப்பிட்ட பக்தர்களுக்கு
சர்க்கரை நோய் வந்திருக்குமே என்று
பயந்தேன்.
ஆனால் தினமும் அந்த ப்ரசாதத்தைச் சாப்பிட்ட போதிலும்கூட, அந்த ஊரில் யாருக்குமே சர்க்கரை வியாதியே இல்லை என்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது!
ஆன்மீகத்தில்
எதையும் அதிகப்படியாகச்
செய்வதற்குக்
கவலைப்படவேண்டாம்!
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவு சக்தியூட்டப்பட்டு, அம்ருதமாக மாறிவிடுகிறது. படைக்கப்படும்போது உச்சரிக்கப்படும் மந்த்ரங்கள் ப்ரசாதத்தைச் சுத்தம் செய்து சக்தியூட்டுகின்றன.
தண்ணீரின் மீது செய்யப்பட்ட ஒரு முக்கியமான ஆராய்ச்சியைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் இதை உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் கூட, அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை மீண்டும் சொல்கிறேன்.
அண்மையில் வெளியிடப்பட்ட வாட் தி ஃப்ப்லீப் டூ வீ நோவ்? (What the Bleep Do We Know?) என்ற ஆங்கில திரைப்படத்தில் ‘தி ஹிட்டன்

மெசேஜஸ் இன் வாட்டர்' (The Hidden
Messages in Water) என்ற புத்தகத்தைப்
பற்றி விவாதிப்பார்கள்.
டாக்டர். மசாரு எமோட்டோ
என்ற ஜப்பானிய மருத்துவர், சில
கோப்பைகளில், தண்ணீர் எடுத்து அதன்
மேல் அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி என்ற
வார்த்தைகளை எழுதி ஒட்டி அதன்முன்
அமர்ந்து அந்த மாதிரியான நேர்மறையான
வார்த்தைகளைச் சொன்னார்
அதேபோல, வேறு சில கோப்பைகளில்
தண்ணீர் எடுத்துப் போர், வன்முறை, கோபம்
என்ற எதிர்மறையான வார்த்தைகளை எழுதி
ஒட்டி, அவற்றிற்கு முன் அமர்ந்து அந்த
மாதிரியான வார்த்தைகளைப் பேசினார்.
பிறகு அந்தக் கோப்பைகளில் இருந்த
தண்ணீரைப் பனிக்கட்டிகளாக உறைய
செய்து, நுண்ணோக்கியால் படம் பிடித்தார்.
அதில் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடை
த்தன.
தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்.
கடவுளுக்குப்
படைக்கப்பட்ட உணவு
சக்தியூட்டப்பட்டு,
அமிர்தமாக
மாறிவிடுகிறது.
நேர்மறையான வார்த்தைகளை உள்வாங்கிய தண்ணீரிலிருந்து உருவாகிய பனிக்கட்டிகள் ஜொலிக்கும் நகைகளைப் போலவும், அழகான வைரங்களைப் போலவும் காட்சி அளித்தன.
எதிர்மறையான வார்த்தைகளை உள்வாங்கிய தண்ணீரிலிருந்து உருவாகிய பனிக்கட்டிகள், பார்ப்பதற்கு அசிங்கமாகத் தோற்றமளித்தன. மசாரு எமோட்டோ - இந்தப் பரிசோதனையை நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் செய்து, நம்முடைய எண்ணங்கள் தண்ணீரைப் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துள்ளார்.
இந்த ஸத்யத்தின் அடிப்படையில்தான், புராதன காலத்திலிருந்து புனித நதியான கங்கையில் நின்று மந்த்ரங்களை ஜெபிக்குமாறு, குருமார்கள் மக்க ளுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இலட்சக்கணக்கான பக்தர்களின் மந்த்ர உச்சாடனத்தால் முழுநதியும் சக்தியூட்டப்படுகிறது.
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த காலத்தில், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் ஆங்கிலேயர்கள் தங்கள் குடிநீர் உபயோகத்திற்காகக் கப்பலில்கொண்டு வரும் தண்ணீர், பொதுவாக ஒரே மாதத்திற்குள்ளாகவே கெட்டுப் போய்விடுமாம். ஆனால் அவர்கள் திரும்பி போகும்போது, கல்கத்தாவில் இருந்து எடுத்துச் செல்லும் கங்கை நீர், அவர்கள் இங்கிலாந்து சென்று சேர்ந்த பிறகும்கூட கெட்டுப் போகாமல் இருந்ததாம்!
இதப் பற்றி ஆராய்ந்தபோது, கங்கை நீருக்குத் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் திறன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டது.
அதனால்தான், கங்கையில் மாசுபடுத்தும் பொருட்களை எவ்வளவுதான் கொட்டினாலும், கங்கை ஒருபோதும் மாசுபடுவதில்லை.
அதுபோல்தான், கோயில்களில் கடவுளுக்கு முன் படைக்கப்படும் உணவு, இடைவிடாது ஓதப்படும் மந்த்ரங்கள் மூலமாக வெளிப்படும் பவித்திரமான ஆன்மீக சக்தியைக் கிரகித்துக் கொள்கிறது.
அவை தெய்வீகத்தின் நேர்மறை சக்தியை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. ப்ரஸாதம் சாப்பிடுவதனால் ஒருபோதும், ஒருவருக்கு நோய் ஏற்படவே முடியாது.
தெய்வீக சக்தியின் பலன் எப்போதும் நேர்மறையாகவே இருக்கும். ஒருபோதும் எதிர்மறையாக இருக்காது. அம்ரு'த ஸாகரம் என்ற அமிர்தக்கடலில் குதிப்பதால், ஒருபோதும் நீங்கள் சாக மாட்டீர்கள்.
எனவே, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கடவுள் தன்மை உங்களை ஆட்கொள்ளும்போது உங்கள் முழுமையான உணர்வோடு உள்ளே குதித்து விடுவது தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தெய்வீக தன்மையில் தளர்வாக இருந்து, உருமாற்றத்திற்காகக் காத்திருக்க வேண்டியது மட்டும்தான்.
அர்ஜுனன் சொல்கிறார்:
மன்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ |
யோகேச்'வர ததோ மே த்வம் தர்ச'யாத்மாநமவ்யயம் ||
கங்கையில் மாசுபடுத்தும் பொருட்களை எவ்வளவுதான் கொட்டினாலும் கங்கை ஒருபோதும் மாசுபடுவதில்லை.
உங்களை உருவாக்குவதே குருவின் வேலை
"என்னால் உங்களுடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்த்து பற்றிக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைத்தால்... கடவுளே, மறைபொருளின் ஆற்றலே, தயவு செய்து உம்முடைய பிரபஞ்ச வடிவத்தை எனக்குக் காட்டுவீராக."
உங்களில் பலபேர் அர்ஜூனனைப் போலத்தான் இருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் எல்லோருமே அர்ஜூனனாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் எந்தவிதமான ஆபத்து தரக்கூடிய விஷயங்களையும் எதிர்கொள்ளத் துணிவதில்லை.
அம்ரு'த ஸாகரம் என்ற
அமிர்தக் கடலில்
குதிப்பதால்
ஒருபோதும்
நீங்கள் சாகமாட்டீர்கள்!
அந்த வேலையைக்கூட உங்களுடைய குருதான் உங்களுக்காகக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய குருவே உங்களுக்கு அந்த அனுபவத்தை ஆபத்தில்லாமலும் பாதுகாப்பாகவும் இனிமையாகவும் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக அப்படிச் செய்ய முடியாது.
ஆமாம்! அந்த அனுபவம் ஆனந்தமானது,
விடுதலை அளிப்பது, ஆனால் அந்த
ஆனந்த அனுபவம் உங்கள் அடையாளத்தை
அழித்து, அஹங்காரத்தைக் கொன்று,
தெய்வீக தன்மையை மறுபடியும் உங்களுள்
உருவாக்கும்.
நீங்கள் ஏற்கெனவே இருந்ததைப் போலவே இருக்க விரும்பினால், அனுபவம் வேண்டும் என்று தயவுசெய்து கேட்காதீர்கள், அனுபவத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களை உருமாற்றுவதே குருவின் வேலை.
குரு என்பவர் உங்கள் அஹங்காரத்தை அகற்றும் ஓர் அறுவை சிகிச்சை நிபுணர், ஒருமுறை அவரிடம் வந்துவிட்டால், நீங்கள் திரும்பிப் போகவே முடியாது. என்னிடம் வரும் மக்களிடம், நான் சொல்லும் ஸத்யம் ஒருமுறை நீங்கள் ஆச்'ரமத்திற்குள் நுழைந்துவிட்டீர்கள் என்றால், வாழ்நாள் முழுவதுமே, திரும்பிச் செல்ல முடியாத, மாற்ற முடியாத, ஓர் உறுதிமொழியை எடுத்து க்கொண்டு விட்டீர்கள்." அப்படியே அவர்கள் ஆச்ரமத்தை விட்டு வெளியில் சென்றாலும், என்னை அவர்களிடம் இருந்து வெளியேற்ற அவர்களால் முடியாது!
ஒரு குருவிடம் பாதியளவோ ஒரு பகுதியளவோ சரணடைய முடியாது. முழுமையாகத்தான் சரணடைய வேண்டும். "என்னால் என்ன குடிக்க முடியுமோ அதை மட்டும் கொடுங்கள். நான் சுவைத்துப்பார்க்கிறேன். எனக்குப் பிடித்திருந்தால் மேலும் கேட்பேன். இல்லை என்றால் இதற்குமேல் எனக்கு வேண்டாம்," என்றெல்லாம் ஒருபோதும் சொல்ல முடியாது, இதுபோன்று எதுவும் நடக்காது.
நீங்கள் தயாராக இருக்கிறீர்களா இல்லையா என்பது, உங்களை விட உங்கள் குருவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் உங்களோடு நான் படிப்படிப்பாகப் பல நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் தயாராகாதவரை, நான்
உங்களுக்குக் கொடுப்பதெல்லாம், உங்கள்
கண்ணுக்கும், மூளைக்குமான விருந்து
மட்டும்தான்.
நீங்கள் ஆனந்தமாகக் கண்குளிர தரிசித்து
விட்டுச் செல்லலாம். உங்களால் இந்த
வடிவத்தை மட்டும்தான் எடுத்துச் செல்ல
முடியும்.
உங்கள் தேடலின் தீவிரத் தன்மை உறுதியாக நிலைப்படும் போதுதான், அறுவை சிகிச்சை மேசையிலிருந்து நீங்கள் ஓடிவிட மாட்டீர்கள் என்ற தைரியத்தோடு உங்கள் மீது என்னால் செயல்படமுடியும்.
அதுவரையில், நீங்கள் சரணாகதி
அடைந்துவிட்டோம் என்ற
மாயையில்தான், இயங்கி
கொண்டிருப்பீர்கள். அது
இன்னொரு கற்பனையாக இருக்கும்,
அவ்வளவுதான்.

ஒரு முறை இமயமலைக்குச் சென்றபோது, 13,000 அடி உயரத்தில்
இருக்கும் கங்கையின் பிறப்பிடமான
கோமூக்கிற்குச் செல்ல வேண்டாம் என்று
கங்கோத்ரி என்ற இடத்திலேயே
தங்கிவிட்டோம்.
பனிச்சரிவு ஏற்படலாம் என்பதால்,
'கோமூக்கிற்கு' நாம் செல்ல வேண்டாம்
என்று சொன்னேன். ஆனால், தங்களைச்
சாதனையாளர்களாக நினைத்துக்கொண்டு,
தாங்கள் கண்டிப்பாக அங்குச் சென்றே ஆக
வேண்டுமென்று நினைப்பவர்கள் செல்லலாம்
என்று சொன்னேன்.
> குரு > > உங்கள் அகங்காரத்தை அகற்றும் ஓர் அறுவைசிகிச்சை நிபுணர், ஒரு முறை அவரிடம் வந்துவிட்டால் நீங்கள் திரும்பிப்போகவே முடியாது!
அவர்கள் செல்லக்கூடாது, அது பாதுகாப்பு கிடையாது என்பதை என்னுடைய உடல்மொழி தெளிவாக வெளிப்படுத்தியது. ஆனால் அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்து, அவர்களே முடிவெடுக்கட்டும் என்று நான் விட்டுவிட்டேன்.
erg தங்களுடைய குழு தலைவர்களிடம்கூட சொல்லாமல், பன்னிரண்டு பேர் கொண்ட ஒரு குழு கோமூக் நோக்கி அடுத்த நாள் காலை பிரயாணப்பட்டது.
வழிநெடுகிலும் நிலச்சரிவும், பனிச்சரிவும் இருந்ததால் அந்தச் சூழ்நிலை குழப்பத்தை மட்டும் அல்லாது கவலையையும் உண்டாக்கியது.
அன்று மாலை, இவ்வளவு எச்சரிக்கைகளை மீறியும் ஏன் சென்றீர்கள் என்று ஒரு குழுத் தலைவர் கேட்டபோது அவர்களில் ஒருவர், "நான் ஸ்வாமியிடம் சரணாகதி அடைந்து விட்டதால், அவர் பார்த்துக் கொள்வார்," என்றுதான் சென்றேன் என்றார்.
இது சரணாகதி அல்ல. இது அஹங்காரம். எதிர்மறையான அஹங்காரம்! உங்கள் முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கு நீங்கள் குருவைப் பொறுப்பாக்குகிறீர்கள்.
உண்மையிலேயே சரணாகதி நிகழ்ந்திருந்தால், நான் போக வேண்டாம் என்று எச்சரித்ததை, அவர்கள் கேட்டிருப்பார்கள்.
ஆச்ரமத்தில் பயிற்சி எடுத்து கொண்ட ப்றஹ்மசாரிகள் குரு வாக்கியத்தின் உள்ளாரீந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் கவனிப்பார்கள்; முழுமையாகக் கேட்பார்கள்; தர்க்கத்தையும், பகுத்தறிவையும் பயன்படுத்தாமல் கேட்பார்கள். தர்க்க அறிவும், பகுத்தறிவும் அஹங்காரத்தின் வெளிப்பாடுகள். நீங்கள் அஹங்காரம் இல்லாதவராக இருக்க வேண்டுமானால், தர்க்கத்தை விட்டவராகவும் மனமற்றவராகவும் ஆக வேண்டும்.
உண்மையான வடிவத்தைத் தரிசிக்கலாம்
அர்ஜுனன் உத்வேகத்தோடு கூடிய பக்குவம் அடைந்த ஒரு சீடர். ஆனால் அர்ஜுனன் சொன்னது, சாதாரண மனிதர் என்ன சொல்லி இருப்பாரோ அதையே எதிரொலிப்பதாக இருக்கிறது.
ஆனால் உண்மையில், அர்ஜுனன் உணர்த்த நினைப்பது, அதனினும் ஆழமானது.
"கிருஷ்ணா உங்களுக்கு சந்தோஷம் என்றால், உங்களது விச்வரூப தர்ச னத்தை எனக்குக் காட்டுவீர்களாக! நான் அதைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் முடிவு உன்னுடையது. நீ என்ன விரும்புகிறாயோ அதுவே நடக்கட்டும்!" என்று மிகவும் தாழ்மையோடு, கெஞ்சிக் கேட்கிறார் அர்ஜுனன்
இதைத்தான் தீக்ஷை அளிக்கப்பட்ட என்னுடைய த்யான சிகிச்சையாளர்கள், த்யானசிகிச்சையின்போது செய்கிறார்கள். அவர்கள் என் வடிவத்தை விட்டுவிடுகிறார்கள்; அவர்களுடைய அஹங்காரத்தையும் விட்டுவிடுகிறார்கள்; சிகிச்சை பெறுபவரின் நோய் குணமாக வேண்டும் என்ற எண்ணத்தையும் கூட விட்டுவிடுகிறார்கள்.
த்யான சிகிச்சை பெறுபவரின் மீது கை
களை வைத்துக்கொண்டு சிகிச்சையாளர்கள்
சொல்வது எல்லாம், "எது நல்லதோ, அது
நடக்கட்டும்," என்பதுதான். பிரபஞ்ச
மஹாசக்தி அறிவாற்றல் மிக்கது. அது
எப்போது எங்கே, பாயவேண்டுமோ
அங்கே பாய்ந்து, என்ன தேவையோ அதைச்
செய்துவிடும்.
அர்ஜுனனும் அதே மனநிலையில்தான்
இருக்கிறார். "எது நடக்க வேண்டுமோ, அதை
நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்,"
> பிரபஞ்ச மஹாசக்தி
> அறிவாற்றல் மிக்கது.
> அது எப்போது எங்கே
> பாயவேண்டுமோ
> அங்கே பாய்ந்து,
> என்ன தேவையோ
> அதைச் செய்துவிடும்.
என்று கிருஷ்ணரிடம் சொல்கிறார்.
அர்ஜுனன் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே; "நீங்கள் சொல்லியது அனைத்தையும் நான் கேட்டேன். என் கேள்விகள் அனைத்தும் மறைந்துவிட்டன. என் மாயைகளும் கரைந்துவிட்டன. உங்கள் ஒப்புயர்வற்ற பிரம்மாண்டத்தை என்னால் உண்மையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் உண்மையான வடிவத்தை நான் தரிசிக்கலாமா?
உங்களிடம் இதை எல்லாம் கேட்பதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. நான் ஏதோ சிறப்பான தவங்கள் எல்லாம் செய்து, இதற்காக என்னைத் தகுதி உடையவனாக ஆக்கிக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. நான் தர்க்க ரீதியாக உங்களை முழுமையாகப் புரிந்து கொண்டேன், அதனால் உங்களுடைய பிரபஞ்ச வடிவத்தைக் காணும் தகுதியைப் பெற்றுவிட்டேன் என்பதும் இல்லை. நான் பத்தியின் உச்சநிலையைத் தொட்டுவிட்டதால், உங்களுடைய தர்ச'நத்தைப் பெறுவதற்கான, தகுதியைப் பெற்றுவிட்டேன் என்றும் சொல்ல முடியாது. நான் உங்களிடம் இப்படிக் கோருவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை.
ஆனாலும், மிக்க பணிவுடன், உங்கள் பக்தனாக, உங்களிடம் முழுமையாக ச'ரணாகதி அடைந்தவனாக, உண்மையில் நீங்கள் யார் என்பதை எனக்குக் காட்டி அருளுங்கள் என்று உங்களிடம் கேட்கிறேன்.
தயவுசெய்து உங்கள் முழுமையான ஜோதி சொரூபத்தை, விச்'வரூபத்தை, துணிவை, ஞானத்தை, ஸத்யத்தை, எல்லாமுமாகிய உங்கள் தர்ச'நத்தை எனக்குக் காட்டுவீர்களாக!"