தெய்வீக வடிவத்தைப் பார்க்கலாம், வாருங்கள்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

11.1 அர்ஜுனன் சொல்கிறார்:
இறைவா! பிரபஞ்ச விழிப்புணர்வைப் பற்றிய மேலான இரகசியங்களைப் பற்றிய ஞானத்தை நீங்கள் சொல்லிக் கேட்டதால் என்னுடைய குழப்பமான எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதை உணர்கிறேன்.
11.2.ஹே! கமலக் கண்ணனே! எல்லா உயிர்களின் படைப்பு பற்றியும், அழிவு பற்றியும் உங்களிடமிருந்து கேட்டு அறிந்தேன். கூடவே தங்களுடைய எல்லையற்ற மேன்மையையும் மகிமையையும் கேட்டறிந்தேன்.
11.3 புருஷோத்தமா! நீ யார் என்பதைத் தெளிவாக அறிவித்துவிட்டாய். எல்லாவற்றிலும் இருக்கும் பிரபுவே, சிறந்தவனாக இருக்கும் பிரபுவே, தங்களுடைய தெய்வீக வடிவைக் காண விரும்புகிறேன்.
11.4 என்னால் காண முடியும் என்று நீர் நினைத்தால், யோகத்தின் இறைவா! மறைபொருளின் சாரமே! உம்முடைய ஆதி அந்தமற்ற முழுமையான பிரபஞ்சத் தன்மையை எனக்குத் தயவுசெய்து காட்டி அருள்வீராக.
நாம் இப்போது கீதையின் ஸ்லோகங்களுக்குள் நுழைவோம். பிறகு மூன்று கேள்விகளை எடுத்து ஆராய்வோம்.
அதாவது,
பிரபஞ்ச விழிப்புணர்வை ஒருவர் அனுபவமாகப் பெற முடியுமா?

இந்த அனுபவத்தைப் பெற ஒருவருக்கு என்ன அடிப்படை தகுதி தேவை?
ஒருவர் இதை அனுபவிக்கும்போது என்ன நடக்கும்?
இந்த மூன்று கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் மிக அழகாக விளக்கம் தருகிறார்.

ஸத்யத்தை உணர விவேகம் தேவை
பல மனித மனங்கள், கிருஷ்ணரை ஒரு அவதார புருஷராக கருதுகின்றன. இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் தம்மை ஓர் அவதார புருஷராக மட்டுமல்லாமல், எதிலிருந்து அனைத்து படைப்புமே வெளிப்பட்டுக்காண்டிருக்கிறதோ அந்த மூல ஆதாரமே தாம்தான் என்று தம்மை வெளிப்படுத்துகிறார்.
அவரே எல்லா மூலங்களின் மூலமாகவும், எல்லாக் காரணங்களின் காரணமாகவும், எல்லா உலகங்களையும், எல்லாப் பிரபஞ்சங்களையும் வெளிப்படுத்துகிற மூலமாகவும் இருக்கிறார்.
முதலிலேயே கிருஷ்ணரிடமிருந்து, தாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அர்ஜூனன் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருடைய கேள்விகள் எல்லாம் மாயமாக மறைந்து விட்டிருந்தன; அவருடைய எல்லாச் சந்தேகங்களும் குழப்பங்களும் கரைந்து போயிருந்தன.
முந்தைய அத்தியாயத்தில், உண்மையிலேயே தாம் யார் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் தெய்வீக தன்மை பற்றியோ, பெருமைகளைப் பற்றியோ விழிப்புணர்வு இல்லாமல் இல்லை.
அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் மேல் இருந்த ஆழ்ந்த நம்பிக்கைதான், அவர் ஆயுதம் ஏந்திப் போரிடப் போவதில்லை என்று தெரிந்திருந்தும், அவரையே தம் குருவாக அதாவது சாரதியாகத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.
ஆனால் துரியோதனனோ கிருஷ்ணரின் பிரம்மாண்டமான யாதவப் படையே தமக்குத் தேவை என்று தேர்ந்தெடுத்தார்.
அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் மீது நம்பிக்கை இருந்த போதிலும், சந்தேகங்களும் இருந்தன. சந்தேகங்களும் நம்பிக்கைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
ஏற்கெனவே, அர்ஜுனனின் தர்க்க ரீதியான சந்தேகங்கள் உதிர்ந்துவிட்டன. உணர்ச்சி ரீதியான சந்தேகங்களையும் உதிர்த்துவிட்டார். ஆனால் இருப்பு நிலையில் அதன் மையத்தில் மட்டும்தான் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிய குழப்பங்கள் இருந்தன.
புலன்களில் இருந்து பெறப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையினைப் பகுத்தாய்ந்து ஸத்யத்தை உணர்ந்து கொள்வதைத்தான் விவேகம் என்கிறோம்.
தம்முடைய வாழ்க்கையில், தாம் இப்போது அறிந்து வைத்திருக்கும் எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்த ஆச்சார்யார்கள், தம்முடைய ஆழமான அன்புக்குரியவர்கள், பெரியவர்கள், உறவினர்கள் என்று எல்லோரையும் எதிர்த்து அர்ஜுனனுடைய தேர் நிறுத்தப்பட்டிருந்தது.
இவர்களை எல்லாம் பார்த்த உடனேயே, 'இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? நான் இதுநாள் வரை மதித்து, நேசித்தவர்களை நான் ஏன் அழிக்க வேண்டும்? பதிலுக்கு நான் பெறப் போவதுதான் என்ன? அப்படி நான் வேண்டியதை அடைந்தாலும்கூட அதனால் ஏற்படப் போகும் பயன்தான் என்ன?' என்ற பல்வேறு ஆழமான சந்தேகங்களால் அலைகழிக்கப்பட்டார். அர்ஜுனனுக்கு இவற்றையெல்லாம் கேட்டுத் தெளிவடைவதற்கு யாருமே இல்லை; கிருஷ்ணரைத் தவிர! உள்ளுணர்வின் உந்துதலால், அர்ஜுனன் தம்முடைய சுய இருப்பை கிருஷ்ணரிடம் பார்க்கிறார்.
மனிதனான நரன் கடவுளான நாராயணரைச் சந்திக்கிறார். தம்முடைய இருப்பின் அடி ஆழத்திலிருந்து ஓர் உண்மையை அர்ஜுனன் உணர்கிறார். அதாவது தம்முடைய எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கிருஷ்ணர் ஒருவரால் மட்டும்தான் தெளிவைத் தர முடியும் என்பதை உணர்ந்திருந்தார்.
அர்ஜுனன், தம்முடைய சகோதரன் பீமனைப் போன்றோ அல்லது தம்முடைய பெரியப்பா மகன் துரியோதனன் போன்றோ இல்லாமல், எதையும் சரியாகச் சிந்திக்கும் தன்மை கொண்டவராக இருந்தார். அதனால்தான், இப்போது அவர், தாம் இதுவரை சரியென்றும் தவறென்றும் புரிந்து வைத்திருப்பவை சரிதானா என்கிற பெருங்குழப்பத்தால் தடுமாறிப் போயிருக்கிறார்.
அவருடைய செயல்கள் யாவும் ஆழமான அறிவுத் தன்மையில் இருந்து வெளிப்பட்டவைதானே தவிர, மிருக இயல்பூக்கத்திலிருந்து வெளிப்பட்டவை அல்ல; தம்முடைய புலன்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அர்ஜுனன் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.
புலன்களில் இருந்து பெறப்படும் விஷயங்களின் உண்மைத் தன்மையினைப் பகுத்தாராய்ந்து ஸத்யத்தை உணர்ந்து கொள்வதற்கு விவேகம் தேவை என்பதை அர்ஜுனன் நன்றாக உணர்ந்திருந்தார்.

தரிசிப்பதற்கான நேரம் வந்துவிட்டது
நம்முடைய புலன்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை!
படிப்படிஃயாக அர்ஜுனனின் சந்தேகங்களைக் கிருஷ்ணர் தெளிவுபடுத்துகிறார். முதலில், அர்ஜுனனின் அறிவுப்பூர்வமான சந்தேகங்களுக்குக் கிருஷ்ணர் பதில் சொல்கிறார். வேத நூல்களைப் படித்து, தவறாகப் புரிந்து வைத்திருந்த அவருடைய கருத்துகளில் எது சரி, எது தவறு என்பதையும் கிருஷ்ணர் தெளிவான முறையில் அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

"உன் முன்னால் இருக்கும் எல்லோரும்
ஏற்கெனவே இறந்துவிட்டவர்கள்தான்.
நான் அவர்களை ஏற்கனவே
அழித்துவிட்டேன். இதற்காக நீ
ஏன் கவலைப்படுகிறாய்? நீ எதைச்
செய்யவேண்டுமோ அதைத்
தயக்கமில்லாமல் செய்," என்று
கிருஷ்ணர் சொல்கிறார்.
பிரபஞ்ச குருவாகத் திகழும் தம்மைப் பற்றி விளக்கியதன் மூலம், கிருஷ்ணர், அர்ஜுனனைச் சுணங்கச் செய்து கொண்டிருந்த எஞ்சிய உணர்ச்சிரீதியான சந்தேகங்களையும் தீர்த்துவிட்டார்.
உண்மையில் தாம் யார் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார். தம்முடைய செயல்பாடுகளையும், மகிமைகளையும் விரிவாக எடுத்துரைத்த பிறகு, கிருஷ்ணர், தமது தெய்வீக சக்தியின் வெளிப்பாட்டிற்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார்.
எங்கெல்லாம் புகழ், மகிமை, சக்தி, செல்வசெழிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தாம் இருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். அனைத்தைப்பற்றியும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. ஏனென்றால் தம்முடைய இறைத் தன்மை நிறைந்த சுய இருப்பில் இருக்கும் ஒரே ஒரு இழைதான் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக்கொண்டிருப்பதாக ஆணித்தரமாகச் சொல்கிறார் கிருஷ்ணர்.
இப்போது முடிவாக, அர்ஜுனனுக்கு,
உண்மையில் கிருஷ்ணர் யார் என்பதை
உள்ளபடியே அறிந்து கொள்வதற்கான
நேரம் வந்துவிட்டது. அர்ஜுனன் இப்போது
கடைசி படியில் நிற்கிறார்.
"என்னுடைய மாயை நீங்கிவிட்டது; உமது
தெய்வத் தன்மையைப் புரிந்து கொண்டேன்.
நீங்கள் உண்மையில் யார் என்பதை எனக்குக்
காட்டுங்கள்," என்று அர்ஜுனன் கெஞ்சு
கிறார்.
> உங்களுக்கு
> அனுபவம் நிகழும்போது
> தைரியமாக அதனோடு
> இணைந்திருங்கள்.
> கடவுளைவிட
> அதிகப்படியானது
> எதுவுமே இல்லை!