KAILASA Library/பகவத் கீதை/உங்களுடன் இயல்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்Sign in
பகவத் கீதை

உங்களுடன் இயல்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நம்மால் ஓர் ஆணையோ, பெண்ணையோ அவர் இருக்கும் இயல்பு நிலையில், அப்படியே ஏற்றுக் கொள்ள முடிவதே இல்லை. மற்றவர்களின் இயல்பான இருப்பு தன்மை நம்மை அச்சுறுத்துகிறது.

நாம் எப்படி இருக்க வேண்டும், நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைகளோடும் கருத்துக்களோடும் குழந்தைப்பருவத்தில் இருந்தே வளர்க்கப்பட்டு வருகிறோம்.

Text banner: பாதத்தைச் செதுக்குவதை விட்டுவிட்டுக் காலணிகளை மாற்றுங்கள் போதும்!

நம்முடைய வருங்கால வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும்கூட நாம் ஒரு உறுதியான கருத்தை வகுத்து வைத்துக் கொள்கிறோம்.

நமது ஆதர்ச உருவம் ஊடகங்களைப் பார்த்தும், மற்றவர்களுடைய கருத்துகளைக் கேட்டும் ஏற்கெனவே வரையப்பட்டுவிடுகிறது.

நம்முடைய கற்பனை உலகின பல பகுதிகளிலிருந்தும் வெட்டி ஒட்டப்பட்ட அந்த உருவத்தை ஒன்றாகச் சேர்த்து, ஒப்பிட்டு பார்ப்பதற்காக, நிரந்தரமாக வைத்து கொள்கிறோம். நமக்குள் உருவாக்கி வைத்திருக்கும் அந்தக் கற்பனை உருவத்தோடு நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்த்து கொண்டே இருக்கிறோம்.

மடித்து, சுருக்கி வைக்கப்பட்டுள்ள உங்களுடைய மாதிரி உருவத்தோடு எந்தவொரு மனிதரும் ஒத்துப்ப போகவே முடியாது.

நம்முடைய எல்லா மன விகாரப் பிரச்சனைகளும் இந்த மாதிரி உருவத்துக்குள் ஊடுருவி கலந்துள்ளன. கடவுளின் படைப்புகள் எதுவுமே இந்தக் கற்பனை படைப்புகளோடு பொருந்திப் போவதற்கான சாத்தியமே இல்லை.

அதனால் நாம் வாழ்க்கையில் தங்கள் இயல்பிலே வாழும் நிஜமான மனிதர்களை சந்திக்கும்போது, அவர்களைச் செதுக்கி நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கற்பனை உருவத்தில் பொருத்த நினைக்கிறோம். இதனால் மன ரீதியாக நம்மையும் காயப்படுத்திக் கொண்டு, அவர்களையும் காயப்படுத்திவிடுகிறோம்.

மற்றவர்களை அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களோடு ஒரு இணக்கமான தொடர்பை உணரும்போது நீங்கள் அவர்களோடு ஒரு தெய்வீகமான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.

ஆனால் அப்படிச் செய்வதற்கு முன் முதலில் நீங்கள் உங்களுடைய சுய தன்மையை, இயல்புத் தன்மையை உள்ளபடியே ஏற்சுக் கொள்ள

sidebar illustration

மடித்து, சுருக்கி வைக்கப்பட்டுள்ள உங்களுடைய மாதிரி உருவத்தோடு எந்தவொரு மனிதரும் ஒத்துப் போகவே முடியாது.

வேண்டும். நீங்கள் தொடர்ந்து மற்றவர்களை
மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தால்,
உங்களுடைய செயலுக்கு முடிவே
இல்லாமல் போய்விடும்.

வெளியில் பார்க்கும் உருவத்தை மாற்ற முயற்சி செய்வதால், நீங்கள் ஒருபோதும் ஆனந்தத்தை அடைய முடியாது. மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் மாதிரி உருவங்களை, கற்பனைகளை விட் டால் மட்டுமே உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

முழுஉலகமுமே கடவுளாகக் காட்சி தரும்

ஒரு சின்ன கதை:

ஐம்பது ஆண்டு காலம் இல்லறம் நடத்திய ஒரு தம்பதியை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகப் பேட்டி எடுத்தார்கள்.

பேட்டி எடுப்பவர் முதலில் அந்த வயதான கணவரிடம் கேட்டார், “உங்களுடைய மனைவிக்கு என்ன வயது?”

முதியவர் சொன்னார், “அவர்களுக்கு வயது 92. அவர் 110 வயது வரைக்கும் வாழ்வார் என்று நம்புகிறேன்.”

பேட்டி எடுப்பவர் கேட்டார், "உங்களுடைய வயது என்ன?"

முதியவர்: "எனக்கும் 92 வயதுதான். நான் 111 வயது வரைக்கும் வாழ்வேன் என்று நம்புகிறேன்."

பேட்டி எடுப்பவர் ஆச்சரியத்தோடு கேட்டார், "உங்கள் மனைவி 110 வயது வரைக்கும் வாழும்போது, நீங்கள் 111 வயது வரைக்கும் வாழவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?"

அந்த முதியவர் சொன்னார்: "உண்மையில் நான் ஒரு வருடமாவது நிம்மதியாக இருக்க ஆசைப்படுகிறேன்!"

தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், தொடர்ந்து ஒருவரை ஒருவர் செதுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தீர்களானால், உங்கள் வாழ்க்கையே துக்ககரமாக மாறிவிடுகிறது. மற்றவர்களை அவர்களின் இயல்பு தன்மையோடு ஏற்றுக் கொள்ளும்போது முழு உலகமுமே கடவுளாகக் காட்சி தருகிறது.

இரண்டு வழிகளில் நீங்கள் இதைச் சாதிக்கமுடியும். முதலாவது, உங்களின் தபஸ் மூலமாக, அதாவது ஆன்மீக சாதனைகள் மூலமாக!

> வெளியில் பார்க்கும் உருவத்தை மாற்ற முயற்சி செய்வதால், நீங்கள் ஒருபோதும் ஆனந்தத்தை அடைய முடியாது.

இந்த அனுபவங்களுக்குள் நீங்கள் மீண்டும் மீண்டும் போகும்போது, இந்தப் பக்குவத்தை அடைகிறீர்கள்.

மற்றவர்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் கற்பனைகளை விட்டுவிடத் தொடங்க வேண்டும்; இதைத் தொடர் பழக்கமாக, ஒரு தினசரி சாதனையாக மேற்கொள்ள வேண்டும். மேலும், மற்றவர்களைப் பற்றிய கற்பனைக் கருத்துக்களை புதிதாக உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்

இரண்டாவது, இந்த அனுபவத்தை ஒரு ஞானமடைந்த குருவால் உங்களுக்குக் கொடுத்து விட முடியும். தீக்ஷையின் மூலமாக அதீதமான சக்தியை உங்களுக்குள் பாய்ச்சி, அவருடைய நிலைக்கு (அலைவரிசைக்கு) உங்களை மேலேகொண்டு வரமுடியும். ஆனால் குருவின் அந்த அளப்பரிய சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளக் கூட, உங்களுக்கு ஒருவிதமான பக்குவம் தேவைப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் அதுதான் நடக்கிறது.

கிருஷ்ணரின் விஸ்வரூப தர்சனத்தின் பிரபஞ்ச வடிவத்தின் அலைவரிசை அர்ஜுனனுக்கு மிக அதிகமாக இருக்கிறது. அவரால் அதைத் தாங்க முடியவில்லை. அதனால் கிருஷ்ணரை மீண்டும் மனித உருவம் எடுக்கும்படி கேட்டு அர்ஜுனன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறார்.

தர்க்க ரீதியான விளக்கங்களெல்லாம் உங்களை ஏமாற்றும் வேலை

குருவின்
அளப்பரிய சக்தியைத்
தக்க வைத்துக்
கொள்ளக் கூட
உங்களுக்கு
ஒருவிதமான பக்குவம்
தேவைப்படுகிறது.

ஒரு சின்ன உதாரணம்:

அமெரிக்காவில் வீசிய ‘ஹரிக்கேன் காத்ரீனா’ என்ற புயலின் பாதிப்புகளை ஒருநாள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆச்ரமவாசிகளில் ஒருவர், "ஏன் இப்படிப்பட்ட இயற்கை சீர்கேடுகள் நடக்கின்றன?" என்று கேட்டார்.

நீங்கள் உங்களுடைய அதிவேக
வாகனத்திலோ அல்லது காரிலோ பிரயாணம்
செய்யும்போது, ஒரு சின்ன எறும்புப்
புற்றில் உங்கள் காரோ அல்லது பைக்கோ
ஏற்றிவிடுவது போலத்தான் இதுவும் என்று
விளக்க முயற்சித்தேன்.

எறும்புகளைப் பொறுத்தவரைக்கும், அதுவொரு மிகப்பெரிய இயற்கை பேரழிவு. அவை அதற்கு “காத்ரீனா புயல்!” என்று பெயர் வைத்துவிடும்.

ஆனால் உங்களைப் பொறுத்தவரை இந்த விபத்து நடந்ததையே நீங்கள் கவனித்து இருக்க மாட்டீர்கள்.

நீங்கள் உங்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தீர்கள், அவ்வளவுதான். இந்த நிகழ்ச்சியில் எறும்புகளோடு உங்களைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பீர்களா? அல்லது எறும்புப் புற்றில் வண்டி ஏற்றியது, விதிவசத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று சொல்வீர்களா?

எறும்புகளின் தர்க்கமும் மனிதர்கள் வரிசையும்

எறும்புகளின் தர்க்கமும், உங்களுடைய
தர்க்கமும் வேறு வேறு. அவற்றாலும்
உங்களைக் கேள்வி கேட்க முடியாது,
நீங்களும் அவற்றுக்குப் பதில் சொல்ல
மாட்டீர்கள்.

காத்ரீனா புயலைப் பற்றிய கேள்வியை
நாம் எழுப்பினால், அது, கார்
சொந்தக்காரரை எறும்புகள் கேள்வி
கேட்பதுபோல இருக்கும்!

'இது கடவுளின் செயல்' என்றுதான் நம்மால் சொல்ல முடியும். எந்த ஒரு நிர்மாணிக்கப்பட்ட மத அமைப்பாக இருந்தாலும் இதைத்தான் சொல்லும்.

இயற்கைப் பேரழிவுகளுக்குத் தர்க்க ரீதியான பதிலோ, விளக்கமோ எப்பொழுதும் கொடுக்க முடிவதில்லை.

இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு, எந்த
ஒரு நிர்மாணிக்கப்பட்ட மத அமைப்பும்
எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது.
இது மாதிரியான அனுபவங்களுக்குத் தர்க்க
ரீதியான பதிலோ, விளக்கமோ எப்பொழுதும்
கொடுக்க முடிவதில்லை.

இது விதிவசத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்றும் அதை நியாயப்படுத்தவும் முடியாது; ஆயிரக்கணக்கான மனிதர்கள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஏன் இறந்தார்கள் என்பதற்குத் தர்க்க ரீதியாக எந்தப் பதிலும் சொல்ல முடியாது.

எறும்புகளின் எண்ணம், சிந்திக்கும் அலைவரிசை, தர்க்க அறிவு, புரிந்துகொள்ளும் தன்மை கோட்பாடுகள் இவை எல்லாமே நம்மிடமிருந்து முழுவதுமாக மாறுபட்டவையாக இருக்கின்றன. அதேபோல்தான் பிரபஞ்ச விழிப்புணர்வின் அலைவரிசையிலிருந்து, தன்மையிலிருந்து முற்றிலும் நாம் மாறுபடுகிறோம்.

உங்களுக்கு எப்படி உங்கள் வாகனம் ஆயிரக்கணக்கான எறும்புகளை அடித்துக் கொன்றது தெரியாதோ, அது போலவே பிரபஞ்ச விழிப்புணர்வுக்கு அல்லது பிரபஞ்ச சக்திக்குக் காத்ரீனா புயல் போன்ற நிகழ்வுகள் தெரிவதில்லை! பிரபஞ்ச சக்தியின் இயக்க அலைவரிசை முற்றிலும் வேறுபட்ட ஒரு கோண த்தில் இயங்குகிறது. பிரபஞ்ச பேரியக்க நிலையில் இருந்து பார்க்கும்போது நியூ ஓர்லியன்ஸில் (New Orleans) (USA) என்ற ஊரில் நடந்தது எப்படி இருந்தது என்றால், ஒரு குவளைத் தண்ணீரை எறும்புப் புற்றில் வீசினால் எறும்புகள் எப்படி அடித்துச் செல்லப்படுமோ, அதுபோல இருந்தது.

பிரபஞ்ச பேரியக்க நிலையையோ அல்லது அதனுடைய இயக்க அலைவரிசையையோ நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்போ அல்லது அதைப்பற்றி கணித்துக் கருத்து சொல்வதற்கான வாய்ப்போ கிடையாது. நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, நமது விழிப்புணர்வின் அலைவரிசையை உயர்த்தி, அந்தப் பிரபஞ்ச சக்தியோடு ஒருங்கிணைத்துக் கொள்வதுதான். அதனோடு எப்படிச் சேர்ந்து வாழலாம். அதை எப்படி அனுபவிக்கலாம் என்பதை வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம்.

> பிரபஞ்ச சக்தியின்
அலைவரிசை
முற்றிலும்
வேறுபட்ட ஒரு
கோணத்தில்
இயங்குகிறது.

உங்களால் உங்கள் கடவுளையோ,
மனைவியையோ ஒருபோதும் புரிந்துகொள்ள
முடியாது; வெறுமனே அவர்களுடன் வாழக்
கற்றுக் கொள்ளுங்கள்!

"ஏன் ஒரு குவளைத் தண்ணீரை எங்கள் மேல் கொட்டினீர்கள்?" என்று எறும்புகள் ஒருபோதும் உங்களைக் கேட்காது. அவற்றின் இயக்க அலைவரிசை 10 ஆக இருந்தால் உங்களின் இயக்க அலைவரிசை 100 ஆக இருக்கிறது. பிரபஞ்ச விழிப்புணர்வின் இயக்க அலைவரிசையோ எல்லையற்றதாக இருக்கிறது. தர்க்க ரீதியாக எதுவும் செய்ய முடியாது. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், யாராவது தர்க்க ரீதியாக இதற்கு விளக்கம் கொடுக்க முயற்சி செய்தால், அவர்கள் பொதுவாக உங்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.

சத்யம் மனித குலத்திற்குச் சொந்தமானது

நம்முடைய வாழ்க்கையில் ஏன் இத்தனை இயற்கை சீர்கேடுகள், ஏன் மரணம், ஏன் துரதிர்ஷ்டங்கள், ஏன் மனிதர்களுள் இத்தனை ஏற்ற த்தாழ்வுகள் - என்பதற்கெல்லாம் ஒருவர் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுக்க முயற்சிக்கும்போது, அவர் வெறுமனே மேலும் ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கி விடுகிறார்.

ஒருவர் வசீகரத் தன்மையோடும், வார்த்தை
ஜாலம் காட்டுபவராகவும் இருந்தால் போதும்,
ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கி மக்களின்
ஒரு பகுதியினரை ஏமாற்றிவிட முடியும்.

மக்களை ஏமாற்றுவதற்கு ஒருவர்
புத்திசாலியாக இருக்க வேண்டிய
அவசியமில்லை.

ஏனென்றால் நீங்கள் நினைப்பதுபோல
மக்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை.
இதனால்தான் மிகப்பெரிய தத்துவ மேதைகள்
தாங்களே நம்பாத விஷயங்களைக் கூட,
மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள் போலும்.

> உங்களால் உங்கள்
> கடவுளையோ,
> மனைவியையோ
> ஒருபோதும்
> புரிந்துகொள்ள முடியாது;
> வெறுமனே
> அவர்களுடன் வாழக்
> கற்றுக் கொள்ளுங்கள்!

மரணப் படுக்கையில் கடவுள் பெயரை உச்சரித்த மிகப்பெரிய நாத்திகவாதி ஒருவரை எனக்குத் தெரியும். மற்றவர்களை மனம் மாற்றி எந்தக் கொள்கையை நம்ப வைத்து கொண்டிருந்தாரோ, அந்தக் கொள்கையை அவரே நம்பவில்லை என்ற உண்மையை இந்தச் சம்பவம் வெட்ட வெளிச்சமாகியது.

teதயவு செய்து விழிப்புணர்வோடு இருங்கள். மதமாற்றம் என்பது ஒருவருடைய அறிவையும் மனத்தையும் சிதைவுக்குள்ளாக்கும் குற்றம். மதமாற்றம் செய்யப்பட்ட ஒருவர், மேலோட்டமாக நடைமுறையில் ஒரு முகத்தோடும், ஆழ்மனத்தில் அதற்கு இசைவில்லாத் தன்மையோடும் இருப்பார். இரண்டு மனங்களும் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொள்ளும். அவர் மனச்சிதைவு (Schizophrenic) நோய்க்கு ஆளாகிறார்.

மற்றவர்களை, மதம் மாறச் சொல்லிப் போதிக்கிற போதனையாளர்கள், கடவுள் தன்மை பற்றிய ஆழமான சுய அனுபவம் இல்லாததால், மோசமான மனச்சோர்விற்கு ஆளாகிறார்கள். தங்கள் செயல்களால் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்கிறார்கள்.

ஒக்லஹாமாவில், (Oklahoma) பாதிரியார் ஒருவர் நம்முடைய தியான முகாமை மிகவும் விரும்பினார்.

நம் தியான முகாம்கள் நடத்தும் ஆச்சாரியராக ஆவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். நான் ஒருபோதும் அவரை நம்முடைய மதத்திற்கு மாறச் சொல்லவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கென்று எந்த மதமும் இல்லை. அதற்குத் தேவையும் இல்லை. ஏனென்றால் நான் ஸத்யங்களைப் போதிக்கிறேன்.

மின்சார விளக்கு தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. எடிசன் கிறிஸ்தவராக இருந்ததாலேயே மின்சார விளக்குக் கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று சொல்ல முடியாது.

அது மனித குலத்திற்குச் சொந்தமானது. அதுபோல, கிருஷ்ணரால் வழங்கப்பட்ட உள்ளொளியின் ஸத்யமானது, மின்சார விளக்கைப் போலவே மனிதகுலத்திற்குச் சொந்தமானது.

ஸத்யங்கள், எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் சொந்தமானவை கிடையாது. யாரும் எந்த ஒரு மதத்திற்கும் மாற வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் ஸத்யத்தைப் புரிந்து கொண்டு, வாழ்வை ஆனந்தமாகவும், ஆழமாகவும் வாழ ஆரம்பித்தாலே போதும்!

நீங்கள் அனைவரும் கடவுளின் அச்சில் வார்க்கப்பட்டவர்களே

இந்தியாவில் வலுக்கட்டாயமாக மக்களை மதமாற்றம் செய்யும் ஒரு மதபோதகரைச் சந்தித்தோம். ஸத்யத்தைப் பற்றிய அனுபவத்தை தம்முள் உணராத அந்த மதபோதகர், மனச்சோர்விற்கு ஆளானார்.

அவர் என்னைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். நானும் சம்மதித்தேன். அவர் என்னிடம் த்யான சிகிச்சை (Healing) பெற விரும்பினார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகுதான் முன்னேற்றம் அடைந்ததை உணர்ந்தார்.

நாம் அவரிடம் கேட்டோம், "ஏன் மதமாற்றத்தில் இப்படி மூர்க்கத்தனமாக ஈடுபடுகிறீர்கள்?"

அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியம் கொடுப்பதாக இருந்தது. அவர் பேசுவதைக் கேட்க நிறைய மக்கள் கூடுவதாகவும், அதுவே அவருக்கு பலம் இருப்பது போன்ற உணர்வை கொடுத்ததால், காலப்போக்கில் அவர் போதித்துக் கொண்டிருக்கிற விஷயங்கள்தான் ஸத்யமானவை என்று நினைக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதை அனுபவமாக்க முயற்சி எடுக்காமல் இருந்துவிட்டதாகவும் சொன்னார்.

நான் இந்தச் சம்பவத்தை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு மனிதர் தமக்குள் ஆழ்ந்த அனுபவம் பெறாமல் போதிக்கும்போது, அவர் வெறுமனே தம்முடைய தன்னம்பிக்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்கிறார். அவரை நம்பி நீங்கள் முட்டாளாகிவிடாதீர்கள்!

பயத்தையும், பேராசையும் காட்டி மக்களைத் தங்களுடைய மதத் திற்கு மாற்ற முயற்சி செய்பவர்கள், தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாதவர்கள். தங்கள் மேல் நம்பிக்கை இருப்பவர்கள், மற்றவர்களை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள்.

ஒருவருடைய சொந்த நம்பிக்கையே,
மற்றவர்களை உருமாற்றம் அடையச்
செய்யும். அவர்களுடைய ஸத்யஅனுபவத்தை
மற்றவர்களும் உணர்வார்கள்.

இதற்கு மாறாக, தங்களுக்குள் ஆழமாக ஏதோ ஒரு மூலையில், தங்களைத் தாங்களே 'பாவிகள்' என்று நம்புகிறார்கள். அதனால் மற்றவர்களும் பாவிகள்தான் என்பதை நிரூபிப்பதில் இவர்கள் குறியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அதை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி இவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளே. நீங்கள் எல்லோரும் கடவுளின் அச்சில் வார்க்கப்பட்டவர்கள்தான். இப்பொழுது உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் நீங்களும் கடவுள்தான் என்று உணரும் விழிப்புணர்வு மட்டும்தான்!

இது போன்ற மனப்பான்மையின் மூலம் மதங்கள் பொருளாதார ரீதியாக லாபமடைய முடியாது. ஒருபுறம் அவர்கள் மக்களை, நீங்கள் இறைத் தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே, மறுபுறம் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. "நீங்கள் பாவிகள்," என்று சொன்னால் மட்டுமே மக்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியும். அதை வைத்துத்தான், அவர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், சொத்துக்களைச் சேர்க்கவும் முடியும்.

ஆன்மீக ஸத்யங்கள் மனிதனை உருமாற்றம் செய்ய வேண்டுமே தவிர; மதமாற்றம் செய்யக்கூடாது. ஆன்மீக ஸத்யங்கள் ஒரு கிறிஸ்தவரைச் சிறந்த கிறிஸ்தவராகவும், ஒரு இந்துவைச் சிறந்த இந்துவாகவும், ஒரு இஸ்லாமியரைச் சிறந்த இஸ்லாமியராகவும் மாற்ற வேண்டும்.

யார் மற்றவர்களைப் பாவிகள் என்று நம்பவைத்து, அவர்களை மதம மாறுமாறு வலியுறுத்துகிறார்களோ, அவர்களே பெரும் பாவிகள். அவர்களுக்கு விமோசனமே இல்லை.

இதுவே கிருஷ்ணர் என்ற அவதார புருஷருக்கும், ஹிரண்யகசிபு என்ற அசுரனுக்கும் இருக்கும் வித்தியாசம். ஹிரண்யகசிபு, மற்றவர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களைப் போதித்து, அவர்களை அதை ஏற்க வைத்து தன்னைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சி செய்கிறான்.

ஆழ்ந்த அனுபவம் இல்லாமலேயே தனக்கு அனுபவம் கிடைத்தது போல் வெறுமனே நடிக்க முயற்சி செய்கிறான். ஆனால். கிருஷ்ணரோ அனுபவங்களை நேரடியாகக் கொடுக்கிறார்.

நான் கடவுள் என்று கிருஷ்ணர் அறிவிப்பது அவரது அஹங்காரத்தைப் பூர்த்திச் செய்வதற்காகக் கிடையாது. நமக்கு அந்த ஸத்யத்தை அனுபவப்பூர்வமாக உணர்த்துவதற்காகத்தான்.

அர்ஜுனுடைய மேன்மைக்காகத்தான், தாம்
இதையெல்லாம் சொல்வதாக அர்ஜுனனிடம்
கிருஷ்ணர் சொல்கிறார்.

பிரபஞ்ச சத்தியங்களில் வித்தியாசம் ஏதுமில்லை

ஒவ்வொரு மதமும் ஒரு ஞானியின் ஆழ்ந்த ஆன்மீக அனுபத்தின் வெளிப்பாடே

கேள்வி : ஸ்வாமிஜி, தாங்கள் இயேசு ஒரு கிறிஸ்துவர் இல்லை, புத்தர் ஒரு பௌத்தரும் இல்லை என்று எங்கோ சொல்லி இருந்தீர்கள். இதைப் பற்றி விளக்க முடியுமா?

ஒவ்வொரு மதமும் ஒரு ஞானியின்
ஆழமான, சுய மெய்ஞான அனுபவத்தின்
வெளிப்பாடே! அப்படி அவருடைய
சொந்த அனுபவத்தைத் தனித்தன்மையோடு,
ஒப்பற்ற முழுமைப் பெற்ற விதத்தில்
வெளிப்படுத்துகிறார். அனுபவங்கள்
எல்லாம் ஒன்றே. ஆனால் வெளிப்படுத்தும்
விதங்கள்தான் மாறுபடுகின்றன. இந்த
எல்லா விதமான வெளிப்பாடுகளின் கீழ்
புதைந்துள்ள ஸத்யம் ஒன்றே.

தங்கள் மேல்
நம்பிக்கை இருப்பவர்கள்,
மற்றவர்களை
மதம் மாற்றுவதற்கு
முயற்சி செய்யமாட்டார்கள்

எல்லா ஞான குருமார்களும், கிருஷ்ணர், புத்தர், மஹாவீரர், இயேசுகிறிஸ்து அல்லது யாராக இருந்தாலும், அவர்கள் போதித்தது ஒரே செய்தியைத்தான். நாம் அதை விதவிதமாகவும் வித்தியாசமாகவும் உள்வாங்குகிறோம்.

ஏசுபிரான் வெளிப்படுத்தியதை, கிறிஸ்துவம் என்று முத்திரை குத்துகிறோம். புத்தர் போதித்ததை பௌத்தம் என்று முத்திரையிடுகிறோம். இவர்கள் சொன்ன ஸத்யங்களுக்கு நாம் சுயமாக முத்திரை குத்தி அதை வேறுபடுத்திக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அதில் முரண்பாடுகளையும் உருவாக்கிவிடுகிறோம்.

நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ஞான குருவின் பெயரால் மற்றவர்களோடு சண்டையிடுகிறோம்; அவர்களைக் காயப்படுத்துகிறோம்; கொல்கிறோம். எந்த ஞானியாவது தம்முடைய அனுபவத்தின் பெயரில் சண்டை போட்டு, மற்றவர்களைக் கொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறாரா? அப்படிச் செய்து இருப்பார் என்றால், அவர் உண்மையான ஞான குருவே இல்லை.

கிறிஸ்துவமதமாக மாறிய இயேசுபிரானின் வெளிப்பாடுகள் இயேசுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்ச ஸத்யம். அதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்; வெளிப்படுத்தினார். அவ்வளவே!

அதேபோல புத்தர் அவர் அனுபவத்தை வெளிப்படுத்தினார். அது பௌத்த மதமாக மாறியது; பௌத்தம், புத்தருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பெரும் ஞானிகள் வெளிப்படுத்திய இவை எல்லாமே பிரபஞ்ச ஸத்யங்கள்; இவை அத்தனையும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே சொந்தமானவை.

இந்த ஞான குருமார்கள் எல்லோரும் எல்லா வடிவங்களுக்கும் அடையாளங்களுக்கும் அப்பாற்பட்ட பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடாக இருக்கிறார்கள்.

நீங்கள் கிறிஸ்தவர் என்றும், இயேசுவைப் பின்பற்றுபவர் என்றும் சிந்திப்பதை நிறுத்துங்கள். பைபிளைப் படியுங்கள். இயேசு வெளிப்படுத்திய ஸத்யங்களை, புத்தர் வெளிப்படுத்திய ஸத்யங்களைப் போல் உள்வாங்குங்கள்.

புத்தரின் வெளிப்பாட்டினை, குரானில் சொல்லப்பட்ட ஸத்யங்களைப் போல பின்பற்றுங்கள். அப்போது மட்டுமே இந்தப் பிரபஞ்ச ஸத்யங்களில் எந்த வித்தியாசங்களும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

> ஆன்மீக ஸத்யங்கள்
> மனிதனை உருமாற்றம்
> செய்ய வேண்டுமே தவிர;
> மதமாற்றம்
> செய்யக்கூடாது.

இயேசுகிறிஸ்து, ‘கிறிஸ்துவம்’ என்னும் அடையாள சின்னத்தை (Trade Mark) உருவாக்கவில்லை. அவர் மறைந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவரைப் பின்பற்றுபவர்கள்தான் கிறிஸ்துவத்தை உருவாக்கினார்கள்.

புத்தர் சடங்கு சம்பிரதாய வழிபாடுகளைக் கண்டனம் செய்தார். இருந்தும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைக் கடவுளாக்கி அவர் விக்ரஹத்தை வழிபடுகிறார்கள்.

இந்த குருமார்களின் பெயரைச் சொல்லி, அவரைப் பின்பற்றுபவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு, ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள்.

இந்தப் பெரிய ஞானிகளின் ஆன்மீக வெளிப்பாடுகள் எல்லாம், அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு லாபகரமான வியாபாரமாகிவிட்டது.

இயேசுவும், கிருஷ்ணரும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள் என்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி ஆனந்தப்படுவார்கள். ஆனால், கிருஷ்ணரின் மாடுகளும், இயேசுவின் ஆடுகளும் யாருடைய குரு உயர்ந்தவர் என்று சண்டை போட்டுக் கொள்ளும்!