நிஜத்தை ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவாறே ஒருவர் ஞானமடைவது எப்படி?
கணவனும் மனைவியும் சாதாரண ஓர் இல்லற வாழ்க்கை வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் வைத்திருக்கும் கற்பனைகளை விட்டுவிட வேண்டும் என்று சிவபெருமான் சிவசூத்திரத்தில் சொல்கிறார்.
அவர் தேவியிடம் சொல்கிறார். ஒரு தம்பதியர் படுக்கையில் இருக்கும்போது அவர்கள் இருவராக அங்கு இருப்பதில்லை. நான்கு பேராக இருக்கிறார்கள். மனைவி, மனைவியைப் பற்றிய கணவனின் கற்பனைகள், கணவன், கணவனைப் பற்றிய மனைவியின் கற்பனைகள் என நான்கு பேர்கள் அங்கு படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இருவரும் தங்களுடைய கற்பனைகளை விட்டுவிட்டு, இருவருமே ஒருவருக்கொருவர் யாருக்காக வாழ்கிறோம் என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே, அந்தத் தம்பதியினருக்கு இடையே அன்பு மலரும். கற்பனைகளை விட்டுவிட்டு நாம் வாழும்போதுதான் மற்றவர்கள் நமக்கு கடவுளைப்போல தெரிவார்கள். அப்போதுதான் மற்றவர் நமக்கு ஒரு நிஜமான மனிதராக இருக்க முடியும். தங்களோடு வாழும் நிஜமான மனிதர்களைப் பார்க்க முடிந்தால், அங்கே ஒரு உண்மையான அன்பான உறவு நிகழும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லோருமே கடவுள்தான், உங்களையும் சேர்த்து!
ஆனால், நாம் ஒவ்வொருவரும் கடவுளைப் பற்றிய நமது சொந்தக்கருத்துக்களைச் சுமந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவரையும் அந்தக்கற்பனை வட்டத்திற்குள் பொருத்திப் பார்க்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். அவர்கள் அந்தக் கற்பனை வட்டத்திற்குள் பொருந்திவராதபோது, நம் மனத்தில் இருக்கும் கற்பனை வட்டத்தைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக நாம் அந்த மனிதரையே தூக்கி எறிந்து விடுகிறோம். சிவபெருமான், உங்களை அந்தக் கற்பனை வட்டத்தை எறிந்துவிடும்படி கேட்கிறார். அப்படியென்றால் மட்டுமே, உங்களால் எல்லோரையும் கடவுளாகப் பார்க்க முடியும்.
மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய உங்களுடைய கருத்துகள்தான், அந்தப் பொருந்தாத வட்டமாக இருக்கிறது.
உங்கள் கற்பனையில் இருக்கும் முகம், நிஜத்தோடு பொருந்தாததாலேயே நீங்கள் நிஜத்தை மாற்ற முயற்சி செய்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால், காலணியின் அளவுக்கு ஏற்ப நம் பாதங்களை செதுக்கிக் கொள்வதுபோல் இருக்கிறது. பாதத்தைச் செதுக்குவதை விட்டுவிட்டுக் காலணிகளை மாற்றுங்கள் போதும்!
நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால், இரண்டாவதாகச் சொன்னதைச் செய்வீர்கள்; ஆனால் பலபேர் முதலில் சொன்னதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நாம் எல்லோருமே, நம்முடைய மனைவி, கணவன், மகன், மகள், சகோதரர், அலுவலக அதிகாரி, நண்பர்கள் என அவர்கள் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என்று நம்முடைய சொந்தக் கற்பனைகளைச் சேகரித்து வைத்து இருக்கிறோம்.
நம்முடைய மனத்தில் இருக்கும் கற்பனை உருவத்தோடு, அவர்களைப் பொருத்திப் பொருத்திப் பார்க்கிறோம். பொருந்தி வராதபோது, அவர்களை மூச்சுத் திணறச் செய்கிறோம்.
கற்பனை
உருவங்களை
விட்டுவிடும்போது
மட்டும்தான்,
உங்களால்
மகிழ்ச்சியாக இருக்க
முடியும்.
அதனால்தான் மற்றவர்கள் நம்மை
எப்போதும் மூச்சுத் திணறச் செய்கிறார்கள்.
அதனால்தான், நீங்கள் உங்களுக்கான ஒரு
இடத்தைத் தேடுகிறீர்கள்.
உங்களுக்குத் தேவைப்படும் அந்த இடம்
என்பது உண்மையில் உங்களுடைய
கற்பனைகளுக்கான இடம்தான்.
காலப்போக்கில் இந்த இடம் எல்லை
இல்லாமல் விரிந்து கொண்டே செல்கிறது;
ஏனென்றால் உங்களுடைய கற்பனைகள்
வளர்ந்து கொண்டே செல்கின்றன.