பிரபஞ்சத்தின் சாரம் நான்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கிருஷ்ணர் இதுவரை மற்ற இடங்களில் எல்லாம் பரப்ரம்ம க்ருஷ்ணநிலையில் இருந்து பேசினாலும், அவர் இருந்தது என்னவோ அழியக்கூடிய, சாதாரண மனித வடிவில்தான்.
இப்போது, அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்க தம்முடைய உண்மையான நிதர்சனமான பிரபஞ்ச இருப்பை அர்ஜுனனுக்கு தர்ஸநமாக (விஸ்வரூப தர்ஸநத்தை) வெளிப்படுத்துகிறார்.
பகவத்கீதையின் மற்ற எல்லா அத்தியாயங்களைக் காட்டிலும் மிகவும்
> விஸ்வரூப தர்ஸனம்
> வெளிப்படுத்தப்படும்போது,
> அர்ஜுனன் இருந்த
> அதே உணர்வு நிலையில்
> மூழ்கி ஒருவர்
> இந்த அத்தியாயத்தை
> உள்வாங்கினால் போதும்
முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அத்தியாயமாக
இந்த அத்தியாயம் விளங்குறது.
ஆன்மீக மற்றும் தத்துவங்களுக்காக, இந்த
அத்தியாயம் முக்கியத்துவம் பெறவில்லை.
தெய்வீக தன்மை வெளிப்படுத்தப்பட்ட
காரணத்தினால் முக்கியத்துவம்
பெறுகிறது.
விஸ்வரூப தர்ஸனம் வெளிப்படுத்தப்படும்போது, அர்ஜுனன் இருந்த அதே உணர்வு நிலையில் மூழ்கி ஒருவர் இந்த அத்தியாயத்தை உள்வாங்கினால் போதும், அதன்பிறகு அவருக்கு வார்த்தைகளைக்கொண்டு விளக்க வேண்டியது ஒன்றும் இல்லை; அவர் அனுபவமாகப் பெற வேண்டியதும் ஒன்றும் இல்லை. முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனனுடன் சேர்ந்து நாமும், கிருஷ்ணரின் மகிமைகளைப் பற்றி அதாவது தெய்வீக தன்மையின் முழுமையான வெளிப்பாடுகளைப் பற்றிக் கேட்டோம்.
"நக்ஷத்ரங்களிலே நான் சந்திரனாக இருக்கிறேன். ரிஷிகளிலே நான் நாரதராக இருக்கிறேன். எதுவெல்லாம் சிறந்ததோ அவற்றிலெல்லாம் நான் ஒளிர்கிறேன்," என்று அறுதியிட்டுச் சொல்கிறார்.
தாமே சிறந்தவர் என்று கிருஷ்ணர் தற்பெருமை பேசவில்லை. அவர், எதுவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும் அவருக்குள்ளேயே இருக்கின்றன என்பதைத்தான் நமக்குச் புரியவைக்கிறார். பிரபஞ்சத்தின் சாரமாக அவரே இருக்கிறார். சந்திரன் ஒரு நக்ஷத்ரமாகக் கருதப்படுவதில்லை. இந்துக்களின் பஞ்சாங்கத்தில்கூட, சந்திரன் ஒரு நக்ஷத்ரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. புராணங்களின்படி, நக்ஷத்ரங்கள், சந்திரனின் மனைவியர்களாகக் கருதப்படுகின்றன!
ஆனால், தாக்கத்தைப் பொறுத்தமட்டில், பூமியின் மீதும் சரி, மனிதர்களின் மீதும் சரி சூரியனுக்கு அடுத்தபடியாக சந்திரனின் தாக்கம்தான் அதிகமாக இருக்கிறது. சந்திரனின் ஈர்ப்புவிசை, கடல்களில் அலைகளை உருவாக்கி, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், மனிதர்களின் மனங்களிலும், இதயங்களிலும் இருக்கும் எண்ண அலைகளின் மீதும் கூட ஆதிக்கம் செலுத்துகிறது.
கிருஷ்ணர் இந்த வகையில்தான், நக்ஷத்ரங்களின் நடுவில் தாம் ஒரு நிலவு என்று அறிவிக்கிறார்.
இப்போது, கிருஷ்ணர், வார்த்தைகளால்
விவரிக்க முடியாத, விளக்க முடியாத
ஓர் உன்னதமான அற்புத நிலைக்குச்
செல்கிறார். போதுமான அளவுக்கு
வார்த்தைகள் சொல்லப்பட்டுவிட்டன.
இப்போது அதை செயல்முறைப்படுத்திக்
காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஒரு திடமான அனுபத்தை அர்ஜுனனுக்குக்
கொடுத்ததன் மூலம், தாம் யார் என்பதை
நிரூபிக்கிறார்.
ஒரு சாதாரண மனிதரால்
சொல்லத்தான் முடியும்.
ஆனால், அந்த
ஸத்யத்தின் அனுபவத்தை
அவரே பெற்றிருக்கமாட்டார்.
ஞானமடைந்த ஒருவருக்கும், அஹங்காரம் நிறைந்த மனிதருக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், அஹங்காரத்தால் நிரம்பிய மனிதர், தாம் எதைப் புரிந்துகொண்டாரோ எப்படிப் புரிந்துகொண்டாரோ அதைத்தான் ஸத்யம் என்பார். ஆனால் ஞானமடைந்த ஒருவரால் மட்டும்தான் தாம் சொல்கின்ற ஸத்யத்தை அப்படியே அனுபவமாகக் கொடுக்கமுடியும்

ஒரு சாதாரண மனிதரால் சொல்லத்தான் முடியும். ஆனால், அந்த ஸத்யத்தின் அனுபவத்தை அவரே பெற்றிருக்கமாட்டார்.
எப்போதெல்லாம் உங்களைப் பற்றி
நீங்கள் பேசுகிறீர்களோ, அவற்றையெல்லாம்
உங்களுடைய உணர்ச்சிகளின்
தொகுப்பிலிருந்தும், நினைவுகளின் தொகுப்பில் இருந்தும்தான் பேசுகிறீர்கள்.
அது, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன் வெளிப்பாடாகவும், நீங்கள், இதுவரை அனுபவமாக உணர்ந்தீர்கள் என்று எவற்றையெல்லாம் நினைக்கிறீர்களோ அவற்றின் வெளிப்பாடாகவும் மட்டுமே இருக்கும்.
இந்த வகை வெளிப்பாடு உண்மையை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் அதை முழுமையான ஸத்யம் என்று பொருள் கொள்ள முடியாது.
இதைப்போலவே, சமுதாயம் நம்மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டுறு மனப்பான்மை, மதிப்பீடு முறை மற்றும் நம்பிக்கைகள் இவற்றை நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அவற்றையே நாம் மீண்டும் மீண்டும் நினைக்கும்போது, அவையே உண்மைகளாகத் தெரிகின்றன.

நம்மிடமிருந்து ஏதாவது உதவியை எதிர்பார்த்தோ அல்லது நம்முடைய கவனத்தைக் கவர விரும்பியோ வருகிற மற்றவர்களும், இதில் சேர்ந்துகொண்டு நம்மைப் பற்றிய இந்த ஆச்சரியப்படத்தக்க இல்லாத பொய்யான விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.
நாமும், 'நாம் ஒரு மிகச் சிறந்தவர்தான் போலும் என்று நம்பி விடுகிறோம். நாம் அறிந்தவரை, நமது இந்த மொத்த உடலே பொய்ையானதுதான், மாயைதான். (இல்லாத ஒன்று இருப்பதுபோல் தோற்றமளிப்பது) அப்படி இருக்கும்போது, அதைச் சார்ந்த எதுதான் உண்மையாக இருக்க முடியும்?
நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத நம்முடைய வாழ்க்கையைப் பற்றி நாம் எப்படிப் பெருமை பேச முடியும்? நாம் சுவாசிக்கும் அடுத்த சுவாசம்கூட நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை.
நாம் யாரை நேசிக்கிறோமோ, அவர்களுடைய ஆயுட்காலமும்கூட நம் வசம் இல்லை. நம்முடைய வாழ்நாளில் நடக்க போகும் சம்பவங்களின் மீதுகூட நம்முடைய கட்டுப்பாடு கிடையாது. அப்படி இருந்தாலும், நம்முடைய வாழ்க்கை மொத்தத்திற்குமான கட்டுப்பாடு நம்மிடம்தான் இருக்கிறது என்று நாம் முழுமையாக நம்புகிறோம்.
சத்தியம் வென்றே தீரும், வேறு வழியில்லை
இந்திய புராணங்களில் வரும் அசுரர் குல மன்னனான ஹிரண்யகசிபு, தன்னையே கடவுளாக நினைத்துக்கொண்டு தன் நாட்டு மக்களை எல்லாம், 'ஹிரண்யாய நமஹ' என்ற தன்னுடைய பெயரையே உச்சாடனம் செய்யச் சொன்னான்.

கிருஷ்ணரும் தம்மைக் கடவுள் என்றுதான்
சொன்னார். ஆனால் இரண்டு பேருக்கும்
இடையில் இருக்கும் வித்தியாசம்
என்னவென்றால், ஹிரண்யகசிபுவால்
கடவுள் நிலைக்கு உண்டான அனுபவத்தைத்
தன் மக்களுக்குக் கொடுக்க முடியவில்லை.
அவன், "ஒன்று என்னைக் கடவுள் என்று
நம்புங்கள். இல்லை என்றால் உங்களைக்
கொன்றுவிடுவேன்,'' என்று சொல்லி
மக்களை அச்சுறுத்தினான்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இரத்தத்தையும் அப்பத்தையும் கொடுப்பதால் மட்டும் மாறுதல் நடந்துவிடாது. இருவருமே உறுதியுடன் தங்களைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்டாலும், கிருஷ்ணரால் மட்டும்தான், அதை உண்மையாக நிரூபிக்க முடிந்தது. அவரால் மட்டும்தான் பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தை மக்க ளுக்கு வழங்க முடிந்தது
Hஹிரண்யகசிபுவின் இந்த முறையை கடந்த காலத்தில் பல மதங்களும் முயற்சி செய்தன. இன்றும்கூட நம்பிக்கை இல்லாதவர்களையும் கட்டாயப்படுத்தி, தங்களுடைய மதத்திற்கு மாற்றி கொண்டிருக்கிறார்கள்.
ஒருவருடைய கடவுள் தன்மையைப் பற்றிய உண்மையை, ஸத்யத்தை நம்முடைய இருப்புத் தன்மை தானாகவே உணரவேண்டும்; தானாகவே அங்கீகரிக்க வேண்டுமே தவிர அங்கே கட்டாயப்படுத்துதல் இருக்கக் கூடாது. ஆன்மாவால், அதாவது நம்முடைய சுயத் தன்மையால் அதன் மூலத்தை மறக்க முடியாது. கடவுளின் ஒரு பாகமான தன்னை ஒருபோதும் அதனால் மறக்க முடியாது. வன்முறைக்கும் வற்புறுத்தலுக்கும் இங்கே இடமே இல்லை. அதற்கு அச்சுறுத்தலையும் பேராசையையும் பிரயோகிக்க வேண்டியதில்லை. நம்முடைய இருப்புத் தன்மைக்கே தெரியும்.
ஒரு மதம் மற்றும் அதன் பிரச்சாரகர்கள் வன்முறையைப் பயன்படுத்தியோ அல்லது ஏமாற்றி மயக்கியோ தங்களுடைய மதநம்பிக்கையைப் பற்றிய உண்மைகளை மற்றவர்களுக்குப் பரப்புவார்கள் என்றால், இரண்டு விஷயங்களில் ஏதோ ஒன்று, உண்மை ஆகிறது. ஒன்று அவர்களுக்கு அவர்கள் மேலேயே நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டு, அவர்கள் நம்பும் ஸத்யங்கள் பின்பற்றுவதற்குத் தகுதியற்றவையாக இருக்க வேண்டும்.
ஒரு ஞானியிடமிருந்து
வெளிப்படுவதெல்லாம்
ஸத்யங்கள்தான்.
தெய்வீக இருப்பின் இந்த ஸத்யத்தைத்தான்,
'நடந்ததற்கு வருத்தப்படுதல்' என்னும்
வார்த்தையால் இயேசு குறிப்பிட்டார்.
பழமையான மொழியில், 'நடந்ததற்கு
வருத்தப்படுதல்' என்ற இந்த வார்த்தை,
'ஒருவர் தம்முடைய மூலத்திற்கு
(ஆதிநிலைக்கு) திரும்பப் போய்விடுதல்'
என்ற அர்த்தத்தைத் தருகிறது.
இதைத்தான் ஸம்ஸ்க்ருட்டத்தில், ஸமாதிஎன்று சொல் குறிப்பிடுகிறது. அதாவது, 'தன்னுடைய மூல நிலைக்குத் திரும்புதல்' என்று பொருள். இந்த மூலநிலையை நம்மால் ஒருபோதும் மறக்கவோ அல்லது பொய்யாக வெளிப்படுத்தவோ முடியாது.
இந்த இடத்தில்தான் மதமாற்றம் செய்யும் மதங்கள் எல்லாம் பொய்த்துப் போய்விடுகின்றன. மக்களை ஆசை காட்டி வளைப்பது அல்லது அச்சுறுத்தி மடக்குவது போன்ற வழிமுறைகளை அந்த மதத்தினர்கள் பின்பற்றுகிறார்கள். இனிப்பைக் காட்டுவது அல்லது பிரம்பைக் காட்டுவது என்ற வகையில் மக்களுக்குப் பேராசையையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி மதம் மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
மனிதர்கள், கழுதைகள் இல்லை. 'ஸத்யத்தை' என்றுமே பயத்தாலும் பேராசையாலும் உணர முடியாது. பொய்களை 'ஸத்யங்கள்' என்று பல நூறு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டும், அச்சுறுத்துதல், ஆசை காட்டுதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தியும் மக்களை மதம் மாற்றிக் கொண்டிருந்தாலும் என்றாவது ஒரு நாள் உண்மையான ஸத்யம் வென்றே தீரும். வேறு வழியே இல்லை.
தெய்வீக தன்மை நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்
மக்களை அச்சுறுத்தியும், பேராசைக்கு உட்படுத்தியும் அவர்களிடம் தம்முடைய போதனைகளைப் பரப்புவதில் எந்த ஓர் உயர்ந்த ஞானியும் நம்பிக்கை வைக்க மாட்டார். எல்லா ஜ்ஞான குருமார்களும் தங்களுடைய போதனைகளை நிபந்தனையற்ற அன்பாலும் கருணையாலும்தான் மக்களிடம்கொண்டு சேர்ப்பார்கள். ஸத்யத்தை இந்த வழியில் மட்டும்தான் பரப்ப முடியும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆன்மீக
குருமார்களைப் பின்பற்றிய சீடர்கள் பலர்
ஞானமடையாமல் போனார்கள். அவர்கள்
மதங்கள் என்ற பெயரில் வியாபார
மையங்களை நிர்மாணிக்கவே முனைப்போடு
இருந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் அமைப்பாளர்களாக
இருந்தார்களே தவிர, தலைவர்களாக
இருக்கவில்லை.
எல்லா
ஜ்ஞான குருமார்களும்
தங்களுடைய
போதனைகளை
நிபந்தனையற்ற
அன்பாலும்
கருணையாலும்தான்
மக்களிடம்கொண்டு
சேர்ப்பார்கள்.
இந்தச் சீடர்களுக்குள், ஸத்யத்தைப் பற்றிய அனுபவம் நிகழவில்லையாதலால், இந்த மத நிறுவனங்களுக்கு, அச்சுறுத்தலும் பேராசைக்கு உட்படுத்துதலும் மதப்பிரச்சாரம் செய்வதற்கேற்ற சரியான உபகரணங்களாகி விட்டன.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆன்மீகம் என்பது ஸத்யம். உயர்ந்த ஞானிகளான புத்தர், இயேசுபிரான், கிருஷ்ணர் இன்னும் இவர்களைப் போன்ற எத்தனையோ குருமார்கள் ஸத்யத்திற்காகவே வாழ்ந்தார்கள்.
ஆனால், இவர்களைப் பின்பற்றிய மதத்தினரால் ஸத்யத்தின் பக்கம் நிற்பதாகப் பாவனை மட்டுமே செய்ய முடிந்தது. அவர்கள் தங்களுடைய குருமார்களுக்காக மட்டுமே வாழ்ந்தார்கள். அந்தக் குருமார்களால் உணரப்பட்ட, உணர்த்தப்பட்ட அனுபவங்களுக்காக அவர்களால் வாழ முடியவில்லை. அந்த மதங்களின் குருமார்களால் சொல்லப்பட்டவற்றுள் அதனுடைய சீடர்கள், ஸத்யங்கள் என்று எதைப் புரிந்துகொண்டார்களோ, அவற்றை அவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.
இந்தச் சீடர்களுக்குள் ஸத்யத்தின் அனுபவம் நிகழவே இல்லை. ஸத்யம் என்று அவர்கள் எதைப் புரிந்துகொண்டார்களோ, நம்பினார்களோ, அதையே ஸத்யம் என்று வெளிப்படுத்தினார்கள்.
இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் அவர்களுடைய அஹங்காரம் என்னும் சாயம் பூசப்பட்டு, அவர்களுடைய சுய இலாபங்களுக்கு உதவும் வகையில் திரித்துச் சொல்லப்பட்டன.
நீங்கள் ஒருவரோடு ஆழமான இணைப்பை உணரும்போது, அவர் கடவுளாகத் தெரிவார்.
ஆனால் சூஃபிகளுக்கும், ஞானிகளுக்கும் ஸத்யத்தை அறிவதற்கு மத விளக்கங்கள் தேவைப்படவில்லை. அவர்களுடைய இதயங்கள் அதை உணர்ந்தன. அவர்களது இருப்புநிலை (Self) அதைப் புரிந்துகொண்டது. அவர்கள், தங்களுடைய குருநாதர்களின் ஸத்யங்களை எடுத்து விளக்குவதாக நடித்த மதத் தலைவர்களை, "போய்விடுங்கள்," என்று இகழ்ந்தார்கள். "நாங்கள் ஸத்யத்தை அறிகிறோம். நாங்கள் ஸத்யத்தை உணர்கிறோம். நாங்கள் உங்களிடம் இருந்து இந்த ஸத்யத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. ஜ்ஞாந குருமார்களின் சார்பாக நீங்கள் எழுதியதை நாங்கள் படிக்கத் தேவையில்லை," என்றார்கள்.
அதன் காரணமாக சூஃபி ஞானிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளானார்கள், தண்டிக்கப்பட்டார்கள்.
ஒருவர் உண்மையான ஞானியா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? அவர், ஞானம் அடைந்தவரா அல்லது வெறும் அஹங்காரம் நிறைந்தவரா என்பதை எந்த நிரூபணத்தினால் தெரிந்து கொள்வது?
தமக்குள் நிகழ்ந்த அனுபவத்தை மற்றவருக்குள்ளும் ஒருவரால் நிகழ்த்த முடியுமானால், அவரிடம் இருந்து வெளிப்படுவதெல்லாம் ஸத்யங்கள்தான். இதுதான் அளவுகோல். நானே அனைத்துமாக இருக்கிறேன் என்று இங்கே கிருஷ்ணர் மிகத் தெளிவாகக் காட்டுகிறார். அவர், தம்முடைய தெய்வீக தன்மையை அர்ஜுனனுக்கு நிரூபிக்கிறார். தாம் பேசியதை, இந்த அத்தியாயத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார்.
அனுபவம் பெறத் தயாராகுங்கள்
பாகவதத்தில், தமக்கு எல்லாமுமாக இருக்கும் கிருஷ்ணரை நினைத்து, பிருந்தாவனத்து கோபிகை (ஆயர்குலப் பெண்) பாடும் பாடல் இந்த ஸத்யத்தை உறுதிபடுத்துகிறது.
தவ கதாம்ரு'தம் தப்த ஜீவனம்
கவிபீரீரிதம் கல்மஷாபஹம்
ச்'ரவணமங்களம் ஸ்ரீமதாததம்
புவி க்ருஹணந்தி தே பூரிதா ஜநா:
"'ஓ கிருஷ்ணா, தவ கதாம்ருதம், நீ உச்சரிக்கின்ற வார்த்தைகள் மற்றும் உன்னைப் பற்றி உச்சரிக்கப்படும் வார்த்தைகள் எல்லாமுமே அழியாத நித்தியமான வார்த்தைகள். உன்னைப் பற்றிப் பேசப்படும் வார்த்தைகள், நீ பேசுகின்ற வார்த்தைகள், இரண்டுமே நித்யத்துவம் வாய்ந்தவை, அமுதம் நிறைந்தவை. இந்த வார்த்தைகளை கேட்பதனாலேயே நீ எங்களுக்குள் மங்களத் தன்மையை உருவாக்குகிறாய்.
இந்த வார்த்தைகள் சிறந்த ரிஷிகளால் வெளிப்படுத்தப்பட்டவையாகவும்,மிக உயர்ந்த ஸத்யங்களாகக் கொண்டாடுபவையாகவும், இருக்கின்றன. உன்னை உணர்ந்த நாங்கள் உன்னைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதனாலேயே அந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.
எங்கள் முழு இருப்புத் தன்மையையே
நீ உயிர்ப்பிக்கிறாய். நீ பேசிய
வார்த்தைகளையும், உன்னைப் பற்றி
சொல்லப்பட்ட வார்த்தைகளையும்
கேட்பதனாலேயே நாங்கள் வேறு ஒரு
வித்தியாசமான தளத்திற்கு, நிலைக்கு
உயர்த்தப்படுகிறோம்."
> நீங்கள் கிருஷ்ணரிடம் காதல் வயப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், இந்த அத்தியாயம் அவரைத் தெரிந்துகொள்வதற்கும், அவரை ஆனந்தமாக அனுபவிப்பதற்கும்தான்.
நீங்கள் கிருஷ்ணரிடம் காதல் வயப்பட்டு
இருக்கிறீர்கள் என்றால், இந்த அத்தியாயம்
அவரைத் தெரிந்துகொள்வதற்கும், அவரை
ஆனந்தமாக அனுபவிப்பதற்கும்தான்.
இங்கே இந்த அத்தியாயத்தில் அவர் எந்த போதனைகளையும் கொடுக்கவில்லை, தர்க்க ரீதியான எல்லா போதனைகளும் முடிந்துவிட்டன. செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை அனைத்தும் சொல்லி முடித்தாகிவிட்டது. கிருஷ்ணர், 'தானே அனைத்துமாக இருக்கும்' அனுபவத்தை நேரடியாக வழங்குகிறார்.
இறுதி பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தையும், எல்லாவற்றிலும் அவரே ஊடுருவி நிறைந்திருக்கிறார் என்ற அனுபூதியையும் தருகிறார்.
அர்ஜுனன் பிரபஞ்ச விழிப்புணர்வை அனுபவிக்கிறார். இந்த அத்தியாயம் முழுவதுமே ஓர் தூய்மையான அனுபவம் தான்.
முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தை பெறுவது என்பது சாத்தியமா என்பதைத்தான்! இரண்டாவதாக, அந்த அனுபவத்தைப் பெறுவதற்கான அடிப்படை தகுதி என்ன?
மூன்றாவதாக, அந்த அனுபவத்தின்போது நம் இருப்பில் என்னதான் நடக்கிறது?
இந்த மூன்றையுமே இந்த அத்தியாயத்திலிருந்து நாம் புரிந்து கொள்வோம்.
பிரபஞ்சத்தின் ஜன்னலாக இருக்கும் கிருஷ்ணரை உணர்வதற்காகவும், அனுபவிப்பதற்காகவும் உள்ள அற்புத சாத்தியக் கூற்றுக்குள் பயணம் செய்வோம்.
முந்தைய அத்தியாயத்தில், கிருஷ்ணர், அவரே இறுதியானவர் என்பதற்கான அறிவுப்பூர்வமான விளக்கத்தைக் கொடுத்தார். அறிவுப்பூர்வமான வெளிப்பாட்டிற்கும் மேலாக, நான் சொல்லுவது என்னவென்றால், இந்த விளக்கம் கிருஷ்ணரிடம் ஆழமாகக் காதல் கொண்ட ஒருவருக்காகக் கொடுக்கப்பட்டது.
சீடராக மனமுதிர்ச்சி தேவை
அர்ஜுனனைப்போல் பக்குவம் (மன முதிர்ச்சி) அடைந்த ஒருவருக்குத்தான் கிருஷ்ணர் கடவுளாக முடியும். ஒருவர் தேவையான தகுதியும், பக்குவமும் அடையும்போது மட்டும்தான் இந்த ஸத்யங்கள் அவருக்கு அறிவிக்கப்படும்.
நீங்கள் அர்ஜுனரைப்போல பக்குவம் அடையும்போது மட்டும்தான், கிருஷ்ணரின் கடவுள் தன்மையை உங்களால் உணர முடியும்.
நீங்கள் ஒருவரோடு ஆழமான இணைப்பை உணரும்போது, உண்மையில் அவர் சாதாரண மனிதராக இருந்தாலும் கூட, அவர் உங்களுக்கு கடவுளாகத் தெரிவார்.
"ஒருவர் தமது கற்பனைகளை
விட்டுவிடும்போது, அவர் சிவனாகவும்,
அவரது மனைவி உமாதேவியாகவும்
மாறுகிறார்," என்று தந்திரா-வில் சிவ
பெருமான சொல்கிறார். கற்பனைகளை
விட்டுவிட்ட ஒருவர் சிவத்துவம் எனும்
சிவநிலையையும், அவரின் மனைவி தேவியின்
நிலையையும் அடைகிறார்கள்.
கேட்பவர் உள்வாங்க தயாராக இருந்தால் மட்டுமே ஸத்யத்தை அவருக்கு வெளிப்படுத்த முடியும். பாருங்கள், இயேசுவிற்கு என்ன ஆனது? அவர் காலத்திய யூதர்கள் இயேசு வின் ஸத்யங்களைக் கேட்பதற்குத் தயாராக இல்லாத காரணத்தால் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.
அவர் காலத்திய யூதர்கள், அஹங்காரம் கொண்டவர்களாகவும், இயேசு சொன்னதை ஏற்கத் தயாராக இல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் தங்களுடைய பிழைப்பை அழித்துவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். ஒரு ஞானியின் போதனைகளால் ஞானமடைவதைக் காட்டிலும் ரோமானியர்களிடம் அடிமைகளாக வாழ்வதையே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் புத்தர் விஷயத்தைப் பார்த்தால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக

இருந்தார். அவர் கொல்லப்படுவதில்
இருந்து தப்பித்தார். அவரின்
போதனைகளைக் கேட்ட பல
ஆயிரக்கணக்கானவர்களுள்
சில நூறு பேர்கள் அவரைப்
புரிந்துகொண்டார்கள். அவர்
சொன்னதை எல்லாம் ஏற்றுக்
கொண்டார்கள். அவரைப்
பின்பற்றவும் செய்தார்கள்.
புத்தர், பத்தாயிரம் சீடர்களை உலகத்திற்கு விட்டுப் போனார். இயேசுவோ பன்னிரெண்டு சீடர்களை மட்டுமே விட்டுப் போனார்.
தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்,
எல்லோருமே கடவுள்தான்,
உங்களையும் சேர்த்து!
கிருஷ்ணர் அன்பினால் ஆட்சி செய்தார்.
யாதவகுல மன்னராக இருந்தபோதிலும்,
மக்களை அதிகாரத்திற்கு பணிய
வைத்தோ அல்லது அடிமைப்படுத்தியோ
ஆட்சி செய்யவில்லை. அவர் தாமே ஒரு
முன்னுதாரணமாக இருந்து, கருணையோடு
ஆட்சி செலுத்தினார். யாரெல்லாம் அவரோடு
வாழ்ந்தார்களோ, அவர்கள் கிருஷ்ணரிடம்
தங்களைப் பார்த்தார்கள்; அவரே
அவர்களுடைய அடையாளமாக இருந்தார்.
அவர்கள், தங்கள் உயிரைவிடவும் மேலாக,
அவரிடம் அன்பு செலுத்தினார்கள்.
யமுனை நதியில் கிருஷ்ணரோடு நீராடும்போதுகூட, கோபிகைகளுக்கு வெட்கம் என்ற உணர்ச்சி தோன்றவில்லை ஏனென்றால் கிருஷ்ணரைச் சுற்றி இருக்கும்போது, கோபிகைகளுக்கு உடலைப் பற்றிய உணர்வு இல்லை.
அவர்களுடைய முழு உணர்வும் கிருஷ்ணரோடு கலந்திருந்தது. அவர்கள் கிருஷ்ணரோடு, கிருஷ்ணரின் பிரபஞ்ச விழிப்புணர்வோடு இணைந்திருந்தனர். ஆடையில்லாமல் இருப்பதைக்கூட அவர்கள் உணரவில்லை. அவர்களுக்குள் கற்பனைகள் இல்லை. கோபிகைகள் நிஜமான தெய்வீக நிலையில் இருந்தார்கள்.