KAILASA Library/பகவத் கீதை/வினாக்களின் வாசலில்...Sign in
பகவத் கீதை

வினாக்களின் வாசலில்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • ஸ்வாமிஜி நீங்கள், “இயேசு, ஒரு ‘கிறிஸ்து’வரும் இல்லை, புத்தர், ஒரு ‘பௌத்த’ரும் இல்லை,” என்று ஏதோ ஒரு இடத்தில் சொல்லி இருந்தீர்கள். இதைப் பற்றி விளக்க முடியுமா?
  • ஸ்வாமிஜி, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. ‘முடிவெடுப்பதைக் குருவிடம் விட்டுவிடுவதே’. ச’ரணாகதி எனப்படுகிறது. ஆனால், அப்படி யாராவது ‘முடிவெடுப்பதை’ உங்களிடம் விட்டு விட்டால் அவர்கள் அதை அஹங்காரத்தால் செய்வதாக நீங்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
  • ஸ்வாமிஜி, கடவுள் என்பது ஆனந்தம், கடவுள் என்பது அன்பு என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனந்தத்தையும், அன்பையும் அனுபவ ரீதியாக உணரும்போது நாமும் கடவுளாகி விடுகிறோமா?
  • ஸ்வாமிஜி, கிருஷ்ணருடனான அர்ஜுனனின் உறவுமுறை மாற்றி அமைக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். அர்ஜுனன், போர் ஆரம்பிப்பதற்கு முன்பு கிருஷ்ணருடன் நட்பு ரீதியான சகபாவத்தில் இருந்தார் என்று இதற்கு முன் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் இப்போது கிருஷ்ணருடனான அர்ஜுனனின் உறவுமுறை எப்படி மாறி அமைந்துள்ளது?
  • ஸ்வாமிஜி, ஆனந்தமே கடவுள் என்றும், நாங்கள் கடவுளை உணரவில்லை, எனவே எங்களுக்கு, கடவுள் என்பது ஒரு கருத்தாக மட்டுமே இருக்கிறது என்று சொன்னீர்கள் ஆனால் ஆனந்தத்தை உணர முடியும் என்று சொல்கிறீர்கள், அப்படியென்றால் கடவுளை உணர முடியும் என்றுதானே பொருள். ஆனந்தத்தை உணர நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஸ்வாமிஜி, இஷ்ட தேவதைகள் என்று சொல்லும்போது, நாம் நமக்குப் பிடித்த கடவுளோடு எளிதான முறையில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் பயமுறுத்தும் உருவத்தோடு உள்ள ஒரு கடவுளுடன் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்? இது எப்படிச் சாத்தியமாகும்.
  • மற்ற ஞ்ஞான குருமார்களிடம் இருந்து உங்களுடைய உபதேசங்கள் எந்த விதத்தில் வேறுபடுகின்றன? “ஏற்கனவே உங்களிடம் இருக்கும் எதையும் நீங்கள் துறக்கவேண்டியதில்லை,” என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் பலர் வேத நூல்களுக்கு விளக்கம் அளிக்கும்போது உலகபந்தங்களையும் உலகாயத விஷயங்களையும் துறந்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். இது எனக்குக் குழப்பமாக இருக்கிறது.
  • காலம்தான் எல்லாவற்றிற்கும் ‘மூலம்’ அது தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்றால், சுதந்திரமான விருப்பம், சுதந்திரமான தேர்வு என்ற கேள்விகளுக்கே இங்கே இடம் இல்லை. தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை ஒத்து கொண்டாலும் கூட, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதபோது, நாங்கள் பயத்தில் இருந்து எப்படி விடுபட முடியும்?
  • நாம் எல்லோரும் பாவிகள்; நாம் பாவ பிறவிகள்; நாம் இந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளை அடைய வேண்டும்; கடவுள் ஒருவரே - என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இதைய் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
  • ஞான சத்குருவையோ அல்லது இஷ்ட தேவதையையோ அணுகுவதற்கு உதவும் ஐந்து பாவங்களில்...

ஸகபாவமும் ஒன்று என்று நீங்கள் சொன்னீர்கள்.

பிறகு எதற்காக அர்ஜுனன் தமக்குள் இருக்கும் ஸகபாவத்தை வெளிப்படுத்த பயப்படுகிறார்?

  • ஸ்வாமிஜி நான் இளம் குழந்தைகளின் தாய். என் குழந்தைகளை நல்ல விதத்தில் வளர்த்து ஆளாக்குவது எப்படி என்று எனக்கு அறிவுரை சொல்வீர்களா?
  • விஷ்ணுவையும் லஷ்மியையும் எப்போதும் மென்மையான அழகான வடிவங்களில் வழிபடுகிறார்கள். சிவனையும் காளியையும் கொடூரமான, பயங்கரமான வடிவங்களில் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி உருவகப்படுத்தியிருப்பதுதான் அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பதை குறிக்கிறதா?
  • ஸ்வாமிஜி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் காட்டிய விச்'வரூப தர்ச'னமும், கிறிஸ்துவ மதமும், மற்ற மதங்களும் ‘கருணை’ என்ற வார்த்தையின் மூலம் விளக்குகின்ற நிலையும் ஒன்றுதானா?

‘கருணை’, அது அர்த்தம் பொதிந்த ஒரு அழகான வார்த்தை! தயவுசெய்து நீங்கள் எங்களுக்காக அதை விரிவாக விளக்க முடியுமா?

கிருஷ்ணர் :

பிரபஞ்சத்தின் ஜன்னல்

Lord Krishna

இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவருடைய தெய்வீகமான விச்வரூப தர்சனத்தைக் காட்டுகிறார். கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வின் அனுபவத்தை அர்ஜுனனுக்குக் கொடுக்கிறார். இப்போதுதான் முதன்முறையாக அர்ஜுனன், கிருஷ்ணரின் தெய்வீக தன்மையை அனுபவமாகப்பெற இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே கிருஷ்ணரின் தெய்வீக தன்மையை மீண்டும் மீண்டும் வார்த்தைகளால் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன், இதுவரை கேட்ட அனைத்தையும் இப்போது அனுபவமாகப்பெற இருக்கிறார்.

பகவத்கீதையின்அனைத்து அத்தியாயங்களைக் காட்டிலும் விச்வரூப தர்சன யோகம் என்னும் இந்த அத்தியாயம் மிகவும் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது. இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், தம்முடைய தெய்வீக இருப்புத் தன்மை என்னும் - பரப்ரம்ம கிருஷ்ணரை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

Feather Icon