அருஞ்சொற் பொருள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அக்நி - தீ
அங்குலீ-மால் - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தாரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார்.
அஞ்ஜந - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை.
அத்வைத - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று ‘த்வைத’மும் ‘விசிஷ்டாத்வைத’மும் கருதுகிறது.
அநாஹத - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம்
அப்யாஸ - தொடர்ந்த பயிற்சி
அம்ரு'த - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம்
அண்ணாமலை ஸ்வாமிகள் } - ஞான குருவாகிய பகவான் ரமண மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர்
அஹிம்ஸ - துன்புறுத்தாமை
அபரிக்ரஹ - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை
அஷ்டவக்ர - அஷ்டவக்ர ஸம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி.
அஷ்டாங்கயோக - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச' - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச'க்தி.
ஆசார்ய - ஆசிரியர், ‘உடன் வருபவர்’
ஆதார - அடிப்படை ஆத்ம, ஆத்மன் - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ஷட்கம் - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆநந்த - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும்
ஆபரண - அணிகலன்
ஆபஸ் - நீர்
ஆரதி - தீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச்'ரய - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச்'ரய தோஷ - உண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆசீர்வாத் - ஆசீர்வாதம்
ஆஹார - உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞா - ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இச்சா - ஆசை
இடா - பிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
இதிஹாஸ - ராமாயணம், மஹாபாரதம்
உத்தராயண - சூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத் - ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல்
க்ரியா - செயல்
க்ரு'ஹஸ்த - கிருஹ - குடும்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கதாயுதம் - தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம்
கர்மா - ஆன்மீக விதியின்படி காரண விளைவு
கல்ப - வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு
சிறிய பகுதி
கல்பநா - கற்பனை
கால - நேரம்
காண்டவ - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் ಅರ್ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்
குண்டலினி - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்பமேளா - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள்
- கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
- ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
- உஜ்ஜைபில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
- நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர்
குருகுல் - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
குஷ - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோபிகைகள் - இடையர் குலப் பெண்கள், பகவான்
| கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள். | ||
| கோபுர | - | கோயில் கோபுரம் |
| கோயந் | - | ஜெயின் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர். |
| கோவிந்த பாத | - | ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு. |
| கோச' | - | நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு 5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு |
| சக்ரம் | - | மன-உடல் அமைப்பில் உள்ள சக்தி மையங்கள் |
| சண்டாள | - | தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன். |
| சந்தந | - | சந்தனமரம் |
| சகஷு | - | கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல் |
| சித்த | - | மனம், மேலும் மனஸ், புத்தி |
| சித்ரகுப்த | - | ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாப்பாத்திரம் |
| சைதன்ய மஹாப்ரபு | - | கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி |
| டாக்டர். ப்ரையின் வெய்ஸ் | - | புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர் |
| த்ரி காலம், | - | முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம். |
| த்ரி கால ஜ்ஞானி | - | இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர் |
| தந்த்ரா | - | நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள் |
| தபஸ் | - | தீவிர ஆன்மீக முயற்சி. |
தமஸ் - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்த - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸமாதி - சமாதி நிலை, மனமற்ற நிலை
த்ரு'ஷ்டி - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்யான - ஆழ்ந்த சிந்தனை
தர்ச'ந் - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தர்ம - நேர்மையான
தக்ஷிணாயன சூரியனின் - ஜூன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம்
தீ - விவேகம்
தீக்ஷை - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தோஷ - குறைபாடு
நசிகேத - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நடராஜ - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள்
நமஸ்கார் - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை
நதி - ஆறு
நாக - பாம்பு
நாக ஸாது - உடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள்
நாடி - நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை
நாரீ - பெண்மணி
நாந்த - முடிவில்லாத
நிதித்யாஸநா - வெளிப்படுத்தியவை
நிமித்த - காரணம் நிமித்த தோஷ - காரணத்தை அடிப்படையாகக் கொண்ட குறைபாடு
நியம - பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்வாண, ஸமாதி - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
நிஸர்கதத்தமஹராஜ் - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞான குரு செப்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார்
ப்ரத்யாஹார - பொதுவாக ‘உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்’ என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ராண - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணாயாம - மூச்சை அடக்குவது
ப்ரு’த்வீ - பூமி சக்தி
பதஞ்சலி - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பரமஹம்ஸ - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும்
பரமஹம்ஸ யோகாநந்த - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு.
பரிக்ரம - ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜக - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்’ருதி - பழம், இறை வழிபாட்டின் பலன்கள்
பாப - பாவம்
பிங்கள - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிரகாச’நந்த ஸரஸ்வதி - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்டவை.
புண்ய - சிறப்பு, நன்மை செய்தல்
புத்ர - மகன்
புரோஹித் - அர்ச்சகர்
பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூஜா - ஒரு வகையான சடங்கு வழிபாடு.
ப்ரம்ஹந் - தெய்விகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரம்ஹ - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரம்ஹன்
ப்ரம்ஹசர்ய - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரம்ஹசாரீ - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
பக்தர் - பக்தன்
பக்தி - உணர்வு வழிபாடு
பகவாந் - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம் - வேத வியாசரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந - கற்பனை
பிக்பேங் (Bigbang) - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி
பீஜ - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்த - ‘நிர்வாண’ நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு
புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புத்து - முட்டாள்
மங்கல் - நன்னிமித்தமான மங்கள ஸூத்ர - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு
மந்த்ர - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்தீர் - கோயில்
மநந - சிந்தித்தல், தியானம்
மநஸ் - மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷி - மிகப்பெரிய ஞானி
மஹா - மிகப்பெரிய
மஹாவாக்ய - மிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர் - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர்.
மாயா - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மாலா - மாலை
மீமாம்ஸா - பழங்கால இந்திய தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார் - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம - நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நிதித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்
யோக - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யுக - இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.
- ஸத்ய
- த்ரேதா
- த்வாபர
- கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)
ரக்த - இரத்தம்
ரஜஸ் - மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
ராத்ரி - இரவு
இராமகிருஷ்ண பரமஹம்ஸ - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.
ராமாயண - இந்தியாவின் மிகச்சிறந்த இதிகாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவண - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், இந்தியாவின் இதிகாஸமான ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.
ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின் தந்தை.
லாவோட்ஸ்ீ - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. ‘மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார்.
| வர்ண | - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள சாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. |
| வானப்ரஸ்த | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலட்சியத்தில் கவனம் செலுத்துதல். |
| வாயு | - காற்று |
| வாஸந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. |
| வித்யா | - அறிவு, கல்வி |
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமாயணத்தை எழுதியவர் |
| விதி | - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி |
| விபூதி | - இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது महिமை என்ற மற்றொரு பொருளும் உண்டு |
| விவேகாநந்த | - இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர். |
| விச்'வரூப | - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் |
| விஷ்ணு | - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், |
பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத - மனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்'ய - வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்
வேத - ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்'ருதி என்பார்கள்.
ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி - 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி - உருவாக்குதல்
ஸ்வதந்த்ர - சுதந்திரமான
ஸ்வப்ந - கனவு
ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்ப - முடிவு
ஸந்யாஸீ - துறவி
ஸத்ய - ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ - ஆன்மீக அமைதி
ஸம்ச'ய - சந்தேகம்
ஸம்யம - முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார - கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்
ஸமாதி - மனம் கடந்த நிலை, ஞான நிலை
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | - ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதனா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி. |
| ஸித்தி | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்ஹ | - சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்னா | - பயங்கரக் கனவு |
| ஸுமேரியன் நாகரிகம் | - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். |
| ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ச்'ரவண | - கேட்டல் |
| ச்'ருதி | - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. |
| ச்'க்தி | - சக்தி, அறிவு சக்தி |
| ச்'ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| சா'ஸ்த்ர | - புனித நூல்கள் |
| சி'வ | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. |
| சி'ஷ்ய | - சீடன். |
| சூ'த்ர | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம். |
| சூ'ந்ய | - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த |
சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஜ்யோதிஷ் - ஜோதிடம்
ஜோதிஸி - ஜோதிடர்
ஜநக்ராஜா - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிகாஹஸமான இராமாயணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.
ஐசிங் - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.
ஜப - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜராதுஸ்டரா - பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.
ஜாக்ரத் - விழிப்பு நிலை
ஜாதி - பிறப்பு
ஜாதி தோஷ் - பிறப்பில் உள்ள குறைபாடு
ஜீவ - வாழ்தல்
ஜீவஸமாதி - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
ஹடயோக - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.
ஹம்மரபீ - Hammarabhi's Code
முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம்
மெசபடோமிய அரசர் புகழ்பெற்றார்.
ஹோம - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை... வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய - படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்
க்ஷண - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்