KAILASA Library/பகவத் கீதை/ஸ்லோகங்கள்Sign in
பகவத் கீதை

ஸ்லோகங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அத ஏகாதஶோ'த்யாய: பதினொன்றாவது அத்தியாயம்

விச்'வரூப தர்ச'ந யோக: விச்வரூப தர்சன யோகம்

அர்ஜுந உவாச

மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் /
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோ'யம் விகதோ மம //

அர்ஜுந உவாச - அர்ஜூனன் சொன்னது; மதத் அநுக்ரஹாய - எனக்கு அருள்புரிவதற்காக; பரமம் - மிக உயர்ந்தது; குஹ்யம் - மறைத்துக் காப்பற்றத்தக்கது; அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம் - அத்யாத்மக கருத்துக்கள் கொண்டதுமான; யத் - எந்த; த்வயா - உங்களால்; உக்தம் - சொல்லப்பட்டதோ; வச - உபதேசம்; தேந - அதனால்; மோஹ: - அஞ்ஞானம்; அயம் - இந்த; விகத: - நீங்கியது; மம - என்னுடைய

அர்ஜூனன் சொன்னது

11.1 இறைவா! பிரபஞ்ச விழிப்புணர்வைப் பற்றிய மேலான இரகசியங்களைப் பற்றிய ஜ்ஞானத்தை நீங்கள் சொல்லிக் கேட்டதால் என்னுடைய குழப்பமான எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதை உணர்கிறேன்.

....................................................................................................

பவாப்யயௌ ஹி பூதாநாம் ச்'ரு'தௌ விஸ்தரஶோ' மயா /
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சா அவ்யயம் //

பவ அப்யயௌ - உற்பத்தி, லயம் இரண்டும்; ஹி - நிச்சயமாக; பூதாநாம்

  • உயிரினங்களுடைய; ச்'ரு'தௌ - கேட்கப்பட்டன; விஸ்தரஶ' - விரிவாக; மயா - என்னால்; த்வத்த: - உங்களிடமிருந்து; கமலபத்ராக்ஷ - தாமரைக் கண்ணனே; மாஹாத்ம்யம் அபி - பெருமையும்; ச - அவ்வாறே; அவ்யயம் - அழிவற்ற

11.2 ஹே! கமலக் கண்ணனே! எல்லா உயிர்களின் படைப்பு பற்றியும், அழிவு பற்றியும் உங்களிடமிருந்து கேட்டு அறிந்தேன். கூடவே தங்களுடைய

எல்லையற்ற மேன்மையையும் மகிமையையும் கேட்டறிந்தேன்.

ஏவமேதத்யதாத்த த்வமாத்மானம் பரமேச்'வர /
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைச்'வரம் புருஷோத்தம // 11-3

ஏவம் - அப்படியேதான்; ஏதத் - அது; யதா - எவ்வாறு; அத்த - சொன்னீர்களோ; த்வம் - நீங்கள்; ஆத்மானம் - உங்களைப் பற்றி; பரமேச்'வர - பரமேசுவரனே; த்ரஷ்டும் - கண்கூடாகக் காண்பதற்கு; இச்சாமி - விரும்புகிறேன்; தே - உங்களுடைய; ஐச்'வரம் - தெய்வீக; ரூபம் - ஸ்வரூபத்தை; புருஷோத்தம - மனிதர்களில் உயர்ந்தவரே

11.3 புருஷோத்தமா! நீ யார் என்பதைத் தெளிவாக அறிவித்துவிட்டாய். எல்லாவற்றிலும் இருக்கும் பிரபுவே, சிறந்தவனாக இருக்கும் பிரபுவே, தங்களுடைய தெய்வீக வடிவைக் காண விரும்புகிறேன்.

மன்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ /
யோகேச்'வர ததோ மே த்வம் தர்ச'யாத்மானமவ்யயம் // 11- 4

மன்யஸே - நினைப்பீர்கள்; யதி - என்று வைத்துக் கொண்டால்; தத் - அந்த; சக்யம் - முடியும்; மயா - என்னால்; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; இதி - என்று; ப்ரபோ - பிரபுவே; யோகேச்'வர - யோகேஸ்வரரே; தத: - அப்பொழுது; மே - எனக்கு; த்வம் - நீங்கள்; தர்ச'ய - காட்டுங்கள்; ஆத்மானம் அவ்யயம் - உங்களுடைய அழிவற்ற ஸ்வரூபத்தை

11.4 என்னால் காண முடியும் என்று நீர் நினைத்தால், யோகத்தின் இறைவா! மறைபொருளின் சாரமே! உம்முடைய ஆதி அந்தமற்ற முழுமையான பிரபஞ்சத் தன்மையை எனக்குத் தயவுசெய்து காட்டி அருள்வீராக.

ஸ்ரீ பகவாநுவாச

பச்'ய மே பார்த ரூபாணி ச'தசோ'த ஸஹஸ்ரச' : /
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ரு'தீநி ச // 11 - 5

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னது; பச்'ய - பார்; மே - என்னுடைய; பார்த -ார்த்தனே; ச'தச' : - நூற்றுக்கணக்காவும்; ரூபாணி - உருவங்களை; அத - இப்பொழுது; ஸஹஸ்ரச' : - ஆயிரக்கணக்காகவும்; நாநாவிதாநி - பற்பல விதங்களாக; திவ்யாநி - தெய்வீகமான; நாநாவர்ண ஆக்ரு'தீநி - நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள; ச - மேலும்

11.5. பகவான் சொன்னார்

ஓ பார்த்தா, விதவிதமான வண்ணங்களிலும் வகைவகையான தெய்வீக வடிவங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது வடிவங்களைப் பார்.

.......................................................................................................

பச்'யாதித்யாந்பஸூந்ருத்ராநச்'விநௌ மருதஸ்ததா /
பஹூந்யத்ரு'ஷ்டபூர்வாணி பச்'யாச்'சர்யாணி பாரத // 11-6

பச்'ய - பார்; ஆதித்யாந் - அதிதியின் புத்ரர்களான பன்னிரெண்டு ஆதித்யர்களையும்; வஸூந் - எட்டு வஸுக்களையும்; ருத்ராந் - பதினொரு ருத்ரர்களையும்; அச்சவிநௌ - அஸ்வினி குமாரர்கள் இருவரையும்; மருத - மருத்களையும்; ததா - அவ்வாறே; பஹூநி - பற்பல; அத்ரு'ஷ்டபூர்வாணி- இதற்கு முன் கண்டிராத; பச்'ய - பார்; ஆச்'சர்யாணி - ஆச்சர்யமான உருவங்களையும்; பாரத - பரதக்குலத் தோன்றலே

11.6. ஓ பார்த்தனே, ஆதித்யர்களையும் வஸுக்களையும் ருத்ரர்களையும்

அஸ்வினி குமாரர்களையும் மருத்களையும் பார், ஒருபோதும் நீ பார்த்திராத அற்புதங்களை எல்லாம் பார்.

.......................................................................................................

இஹைகஸ்தம் ஜகத்க்ரு'த்ஸ்நம் பச்'யாத்ய ஸசராசரம் /
மம தேஹே குடாகேச' யச்சான்யத்ரஷ்டுமிச்சஸி // 11-7

இஹ - இந்த; ஏகஸ்தம் - ஒரே இடத்தில்; ஜகத் - உலகம்; க்ரு'த்ஸ்நம்

  • முழுவதையும்; பச்'ய - பார்; அத்ய - இப்பொழுது; ஸசர அசரம் - அசைகின்ற மற்றும் அசையாத; மம - என்னுடைய; தேஹே - உடலில்; குடாகேச' - உறக்கத்தை வெற்றி கொண்டவனே; யத் - எதை; ச - மேலும்; அந்யத் - மற்றவற்றை; த்ரஷ்டும் - பார்க்க; இச்சஸி - விரும்புகிறாயோ

11.7. உறக்கத்தை வெற்றி கொண்டவனே! அசைகிற மற்றும் அசையாத

எதையெல்லாம் பார்க்க விரும்புகிறாயோ, அனைத்தும் இந்த உடலில் ஒருங்கிணைந்து இருப்பதைப் பார்.

ந து மாம் ச'க்யஸே த்ரஷ்டுமேநேநவ ஸ்வசக்ஷுஷா /
திவ்யம் ததாமி தே சக்ஷுஃ பச்'ய மே யோகமைச்'வரம் //
11-8

ந - இல்லை; து - ஆனால்; மாம் - என்னை; ச'க்யஸே - முடியவே முடியாது; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; அநேந - இந்த; ஏவ - சந்தேகமின்றி; ஸ்வசக்ஷுஷா - உன் கண்களால்; திவ்யம் - தெய்வீகமான; ததாமி - தருகிறேன்; தே - உனக்கு; சக்ஷுஃ - பார்வையை; பச்'ய - பார்; மே - என்னுடைய; யோகம் - சக்தியை; ஐச்'வரம் - தெய்வீகம்

11.8. ஆனால் உன்னுடைய ஸ்தூல கண்களினால் என்னை நீ பார்க்க முடியாது.உனக்குத் தெய்வீக கண்களைத் தருகிறேன். என் தெய்வீக சக்தியை உள்வாங்கிக்கொள்.

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்த்வா ததோ ராஜந் மஹாயோகேச்'வரோ ஹரி: /
தர்ச'யாமாஸ பார்தாய பரமம் ரூபமைச்'வரம் // 11-9

ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; ஏவம் - இவ்வாறு; உக்த்வா - சொல்லிவிட்டு; தத: - அதற்குப்பிறகு; ராஜந் - அரசே; மஹாயோகேச்'வர - மஹாயோகேசுவரரான; ஹரி: - ஹரியானவர்; தர்ச'யாமாஸ - காண்பித்தார்; பார்தாய - பார்த்தனுக்கு; பரமம் - சிறந்ததான; ரூபம் - தம் தெய்வீக உருவை; ஐச்'வரம் - ஈசுவர சக்தி கொண்ட

ஸஞ்ஜயன் சொன்னார்!

11.9 அரசனே, அர்ஜுன் இவ்வாறு சொன்ன பிறகு, யோகத்திற்கே தலைவனாக விளங்கும் ஹரி பார்த்தனுக்குத் தம்முடைய மேலான பிரபஞ்ச வடிவைக் காட்டி அருளினார்.

அநேகவக்த்ரநயநமநேகாற்புததர்ச'நம் /
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் // 11-10

அநேக வக்த்ர நயநம் - அநேக முகங்கேளாடும், அநேக கண்களோடும் கூடியவரும்; அனேக அத்புத தர்ஶ்நம் - பல அற்புதமான காட்சிகள் கொண்டவரும்; அனேக திவ்ய ஆபூரணம் - அனேக விதமான தெய்வீகமான ஆபரணங்களோடு; திவ்யாநேகோத் யதாயுதம் - திவ்யமான பல ஆயுதங்களைக் கைகளில் எந்தியவரும்

11.10. அந்த வடிவம் அனேக வாய்களோடும் கண்களோடும் உடையது; பல அதிசயக்கத்தக்க அற்புதக் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்து, அனேக தெய்வீக ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தது.

..........................................................................................................................

திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தானுலேபநம் /
ஸர்வாஶ்சர்யமயம் தேவமநந்தம் விஶ்வதோமுகம் // 11-11

திவ்யமால்ய அம்பரதரம் - தெய்வீகமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்தவரும்; திவ்ய கந்த அனுலேபநம் - திவ்யமான வாசனை திரவியங்களைத் தம் உடலில் பூசிக் கொண்டிருப்பவரும்; ஸர்வ ஆஶ்சர்யமயம் - எல்லாவிதங்களிலும் ஆச்சரியமானவரும்; தேவம் - ஒளிர்கின்ற; அநந்தம் - எல்லையற்றவரும்; விஶ்வத: முகம் - எல்லாப் புறங்களிலும் முகங்களோடு விளங்குகின்றவரும்

11.11 திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்து, திவ்யமான வாசனை திரவியங்கள் பூசி, பெரும் வியப்பூட்டுவதாக, பிரகாசிப்பதாக, முடிவில்லாததாக, எங்கும் முகமுடையதாக ஜொலித்துக் கொண்டிருந்த இந்தப் பிரபஞ்ச வடிவத்தை அர்ஜுனன் கண்டார்.

..........................................................................................................................

திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா /
யதி பா: ஸத்ருஶீ ஸா ஸ்யாாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந: //
11-12

திவி - ஆகாயத்தில்; ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய - ஆயிரக்கணக்கான சூர்யர்கள்; பவேத் - ஏற்படுமோ; யுகபத் - ஒரே காலத்தில்; உத்திதா - உதயமானால்; யதி - இருக்கக் கூடுமோ; பா: - பிரகாசமானது; ஸத்ருஶீ - நிகராக; ஸா - அந்தப் பிரகாசம்; ஸ்யாத் - ஒருகால்; பாஸ: ப்ரகாசத்திற்கு; தஸ்ய மஹாத்மந: - அந்த விசுவரூப பரமாத்மாவின்

11.12 வானத்தின் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது அந்த மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாக இருந்திருக்கும்.

...........................................................................................................................

தத்ரைகஸ்தம் ஜகத்க்ரு'த்ஸ்னம் ப்ரவிபக்தமனேகதா /
அபச்'யத்தேவதேவஸ்ய ச'ரீரே பாண்டவஸ்ததா // 11-13

தத்ர - அந்த; ஏகஸ்தம் - ஒரே இடத்தில் இருப்பதை; ஜகத் - உலகம்; க்ரு'த்ஸ்னம் - முழுவதையும்; ப்ரவிபக்தம் - பிரிந்துள்ள; அனேகதா - பலவிதங்களாக; அபச்'யத் - பார்த்தார்; தேவதேவஸ்ய - தேவதேவனான ; ச'ரீரே - திருமேனியில்; பாண்டவ: - பாண்டு புத்ரன்; ததா - அப்பொழுது

11.13. அங்கு தேவ தேவனுடைய தேகத்தில், மொத்தப் பிரபஞ்சமும் தன்னுடைய எல்லையற்ற பாகங்களுடன், திகழ்ந்துகொண்டிருப்பதை பாண்டவனான அர்ஜுனன் பார்த்தார்.

...........................................................................................................................

தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ரு'ஷ்டரோமா தனஞ்ஜய: /
ப்ரணம்ய சி'ரஸா தேவம் க்ரு'தாஞ்ஜலிரபாஷத // 11-14

தத: - அதன்பிறகு; ஸ: அந்த; விஸ்மய ஆவிஷ்ட: - வியப்பு மிகுந்து; ஹ்ரு'ஷ்ட ரோமா: - மெய்சிலிர்த்து; தனஞ்ஜய: - அர்ஜுனன்; ப்ரணம்ய - வணங்கி; சி'ரஸா - தலையால்; தேவம் - ஒளி மிகுந்த விஸ்வரூப பரமாத்மாவை; க்ரு'த அஞ்ஜலி: - கைகூப்பிக் கொண்டு; அபாஷத - சொன்னார்

11.14. பிறகு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தெய்வத்தைத் தலையால் வணங்கி, கைகூப்பிப் பேசினார்.

...........................................................................................................................

அர்ஜுந உவாச

பச்'யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
ஸர்வாம்ஸ்ததா பூதவிசே'ஷஸீங்கந் /
ப்ரஹ்மாணமீச'ம் கமலாஸனஸ்த-
ம்ரு'ஷீம்ச'ச ஸர்வாநுரகாம்ச'ச திவ்யாந் // 11-15

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; பச்'யாமி - பார்க்கிறேன்; தேவாந் - தேவர்களையும்; தவ - உங்களுடைய; தேவ - தேவனே; தேஹே - திருமேனியில்; ஸர்வாந் - எல்லா; ததா - அவ்வாறே; பூதவிசே'ஷ ஸங்காந் - அநேக பிராணி வர்க்கங்களையும்; ப்ரஹ்மாணம் - பிரம்ம தேவனையும்; ஈச'ம் - மஹா தேவனை; கமல ஆஸநஸ்தம் - தாமரை மலரில் வீற்றிருக்கும்; ரு'ஷீந் - ரிஷிகளையும்; ச - கூட; ஸர்வாந் - எல்லா; உரகாந் - ஸர்ப்பங்களையும்; ச - மேலும்; திவ்யாந் - தெய்வீகமான

அர்ஜுனன் சொன்னது

11.15 கடவுளே, உம்முடைய உடலில் எல்லாக் கடவுள்களையும், பலவிதமான ஜீவன்களையும் பார்க்கிறேன், தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் படைப்பின் கடவுளான பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.

....................................................................................................

அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம்
பச்'யாமி த்வாம் ஸ்ர்வதோऽநந்தரூபம் /
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம்
பச்'யாமி விச்'வேச்'வர விச்'வரூப // 11-16

அநேக பாஹூ உதர வக்த்ர நேத்ரம் - எண்ணிலடங்காத கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் கொண்டவராகவும்; பச்'யாமி - பார்க்கிறேன்; த்வாம் - உங்களை; ஸர்வத: - எல்லாப்பக்கங்களிலும்; அநந்தரூபம் - எண்ணற்ற உருவங்கள் ஏற்றவராகவும்; ந அந்தம் - அங்கே முடிவான எல்லை இல்லை; ந மத்யம் - அங்கே நடுப்பகுதி இல்லை; ந - இல்லை; புந: - மேலும்; தவ - உங்களுடைய; ஆதிம் - ஆரம்பத்தையும்; பச்'யாமி - பார்க்கிறேன்; விச்'வேச்'வர - அகில லோக நாயகனே; விச்'வரூப - அகிலாண்டரூபனே

11.16 எண்ணிலடங்கா கைகளோடும் வயிறுகளோடும் வாய்களோடும் கண்களோடும் உம்முடைய எல்லையில்லா உருவத்தை எல்லாப் பக்கத்திலிருந்தும் பார்க்கிறேன்.

ஓ பிரபஞ்சத்தின் வடிவானவனே, ஓ பிரபஞ்சத்தின் கடவுளே! உம்முடைய தொடக்கத்தையோ, இடைப்பட்டதையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.

....................................................................................................

கிரீடிநம் கதினம் சக்ரிணம் ச
தேஜோராசி'ம் ஸர்வதோ தீப்திமந்தம் /
பச்'யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத்-
தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம் // 11-17

கிரீடிநம் - கிரீடம் தரித்தவராகவும்; கதினம் - கதையோடு கூடியவராகவும்; சக்ரிணம் ச - சக்ரத்தோடு கூடியவராகவும்; தேஜோராசி'ம் - ஒளிப்பிழம்பாகவும்; ஸர்வத: - எங்கும்; தீப்திமந்தம் - ப்ராசிக்கின்ற; பச்'யாமி - பார்க்கிறேன்; த்வாம் - உங்களை; துர்நிரீக்ஷ்யம் - பார்க்கக் கூசுகின்றது; ஸமந்தாத் - எங்கும் நிறைந்ததுமான; தீப்த அநல அர்க த்யுதிம் - கொழுந்து விட்டெரிகின்ற அக்னி மற்றும் சூரியனுடைய போன்ற ஒளியுடன் கூடியவராகவும்; அப்ரமேயம் - அளவிட முடியாத

11.17 கிரீடம் அணிந்து, கதாயுதம் தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப் பிழம்பாய், காண்பதற்கு அரியவராய், தகிக்கும் சூரியாக்னி போன்றவராய், எல்லையில்லாதவராக உள்ள உம்மை நான் எங்கும் பார்க்கிறேன்.

...........................................................................................................

த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வமஸ்ய விச்'வஸ்ய பரம் நிதாநம் /
த்வமவ்யய: சா'ச்'வததர்மகோப்தா
ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே // 11-18

த்வம் - நீங்கள்; அக்ஷரம் - அழிவற்ற பரமாத்மா; பரமம் - மிக உயர்ந்த; வேதிதவ்யம் - அறியத்தக்க; த்வம் - நீங்களே; அஸ்ய - இந்த; விச்'வஸ்ய - அகில உலகத்திற்கும்; பரம் - மேலான; நிதாநம் - உறைவிடம்; த்வம் - நீங்களே; அவ்யய: - அழிவற்றவர்; சா'ச்'வத தர்மகோப்தா - நிலையான தர்மத்தைக் காப்பாற்றுவர்; ஸநாதந: - சாஸ்வதமான; த்வம் - நீங்களே; புருஷ: - பரமன்; மத: - கருத்து; மே - என்னுடைய

11.18 தாங்கள் அழியாதவர், அறியத் தகுந்த பரம்பொருள் நீரே! இப்பிரபஞ்சத்தின் ஒப்பற்ற பொக்கிஷம்.

தர்மத்தைக் காக்கும் மாறாத அழிவில்லாத ரட்சகர். நீங்கள் அழிவில்லாத பரமாத்மா என்பதை நான் நம்புகிறேன்.

...........................................................................................................

அநாதிமத்யாந்தமநந்தவீர்ய-
மநந்தபாஹும் ச'சிஸூர்யநேத்ரம் /
பச்'யாமி த்வாம் தீப்தஹுதாச'வக்த்ரம்
ஸ்வதேஜஸா விச்'வமிதம் தபந்தம் // 11-19

அநாதி மத்ய அந்தம் - முதல், நடு, முடிவு அற்றவராகவும்; அநந்தவீர்யம் - எல்லையற்ற திறமை கொண்டவராகவும்; அநந்த பாஹும் - எண்ணற்ற தோள்களையுடையவராகவும்; ச'சி'ஸூர்ய நேத்ரம் - சந்திரன், சூரியன் இவர்களைக் கண்களாகக் கொண்டவராகவும்; பச்'யாமி - பார்க்கிறேன்; த்வாம் - உங்களை; தீப்த ஹுதாச' வக்த்ரம் - தீயைக் கக்கும் வாயை உடையவராகவும்; ஸ்வதேஜஸா - உங்களுடைய; விச்'வம் - இந்த உலகத்தை; தபந்தம் - வாட்டுபவராகவும்

11.19 ஆதி நடு அந்தம் இல்லாதவராகவும், எல்லையில்லாச் சக்தியை உடையவராகவும், எண்ணில்லாக் கைகளை உடையவராகவும், சூரிய சந்திரர்களையே கண்களாக உடையவராகவும், தீப்பிழம்பை வாயாகப் படைத்தவராகவும், உமது தேஜஸினால் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவராகவும் உம்மை நான் பார்க்கிறேன்.

.................................................................................................

த்யாவாப்ரு'திவ்யோரிதமந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைேகந திச'ச்'ச ஸர்வா: /
த்ரு'ஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்
லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந் // 11-20

த்யாவா ப்ருதிவ்யோ: - விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையேயுள்ள; இதம் - இந்த; அந்தரம் - இடைவெளியும்; ஹி - நிச்சயமாக; வ்யாப்தம் - நிறைந்திருக்கிறது; த்வயா ஏகேந - உங்கள் ஒருவராலேயே; திச:ச்'ச - திசைகளும்; ஸர்வா: - எல்லா; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; அத்புதம் - அற்புதமான; ரூபம் - உருவத்தை; உக்ரம் - பயங்கரமான; தவ - உங்களுடைய; இதம் - இந்த; லோகத்ரயம் - மூன்று உலகங்களும்; ப்ரவ்யதிதம் - பயத்தால் மிகவும் நடுங்குகின்றன; மஹாத்மந் - பரமாத்மாவே

11.20 விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் இந்த வெளியும், மற்ற அனைத்தும் உம்மாலே நிரம்பப் பெற்று இருக்கின்றன. மஹாத்மாவே, உமது அற்புதமான இந்த உக்கிர

வடிவத்தைக் கண்டு மூன்று உலகும் நடுங்குகிறது.

.........................................................................................................

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஶ'ந்தி
கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ரு'ணந்தி /
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸிித்தஸங்கா:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: // 11-21

அமீ - அந்த எல்லா; ஹி - நிச்சயமாக; த்வாம் - உங்களிடம்; ஸுரஸங்கா - தேவர்களின் கூட்டங்களே; விஶ'ந்தி - புகுகின்றார்கள்; கேசித் - சிலர்; பீதா: - பயந்துபோய்; ப்ராஞ்ஜலய: - கைகூப்பிக் கொண்டு; க்ரு'ணந்தி - உச்சரிக்கின்றார்கள்; ஸ்வஸ்தி - மங்களம் உண்டாகட்டும்; இதி - என்று; உக்தவா - சொல்லிக்கொண்டு; மஹர்ஷிஸிித்தஸங்கா - மஹரிஷிகள், ஸிித்தர்களுடைய கூட்டங்கள்; ஸ்துவந்தி - துதிக்கிறார்கள்; த்வாம் - உங்களை; ஸ்துதிபி: - நாமங்களை; புஷ்கலாபி: - உயர்ந்த

11.21. தேவ கூட்டங்கள் உம்மிடம் புகுகின்றனர்; சிலர் அஞ்சிகைக்கூப்பி உம்மைப் புகழ்கிறார்கள். மகரிஷிகளும், முனிவர்களும் வாழ்க என்று உம்மைப் போற்றுகிறார்கள்.

.........................................................................................................

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா
விச்'வேச்'விநௌ மருதச்'சோஷ்மபாச்'ச /
கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா
வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாச்'சைவ ஸர்வே //
11-22

ருத்ர ஆதித்யா: - சிவனுடைய அம்சங்களான பதினொரு ருத்ரர்களும் பனிரெண்டு ஆதித்யர்களும்; வஸவ: ச - எட்டு வசுக்கள்; யே

  • எந்த; ச - மற்றும்; ஸாத்யா: - ஸாத்யர்கள்; விச்'வே - விஸ்வ தேவர்களும்; அச்'விநௌ - இரண்டு அஸ்வினி குமாரர்களும்; மருத: ச -மருத்துகளும்; ஊஷ்மபா: - பித்ருக்களின் கூட்டங்களும்; கந்தவர்வ யக்ஷ அஸுர ஸித்த ஸங்கா: - கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ஸித்தர்கள் கூட்ட; வீக்ஷந்தே - பார்க்கிறார்கள்; த்வாம் - உங்களை; விஸ்மிதா:
  • ஆச்சரியம் அடைந்தவர்களாய்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; ச - மேலும்; ஸர்வே - எல்லோரும்

11.22 உருத்திரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், ஸாத்யர்கள், விச்வதேவர், அஸ்வினிதேவர்கள், மருத்த்கள், ஊஷ்மபர், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அஸுரர்கள், ஸித்தர்கள் இவர்கள் எல்லோரும்கூடி நின்று வியப்போடு உம்மையே பார்க்கிறார்கள்.

..........................................................................................................

ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம்
மஹபாஹோ பஹுபாஹூருபாதம் /
பஹுதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம்
த்ரு'ஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம் //
11-23

ரூபம் - உருவத்தை; மஹத் - பெரிய; தே - உங்களுடைய; பஹுவக்த்ர நேத்ரம் - பல முகங்களையும் கண்களையும்; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவரே; பஹு பாஹூ ஊருபாதம் - பல கைகள், தொடை கள், திருவடிகளை உடைய; பஹுதரம் - பல வயிறுகளை உடைய; பஹு தம்ஷ்ட்ராகராலம் - பல கோரைப் பற்கள் கொண்டு பயங்கரமான; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; லோகா: - உலகங்கள்; ப்ரவ்யதிதா: - மிகவும் பயந்து நடுங்குகின்றன; ததா - அவ்விதமே; அஹம் - நான்

11.23 பெரிய தோள்களை உடையவரே, பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் பல வயிறுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.

..........................................................................................................

நப:ஸ்ப்ரு'ச'ம் தீப்தமநேகவர்ணம்
வ்யாத்தானநம் தீப்தவிசா'லநேத்ரம் /
த்ரு'ஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா
த்ரு'திம் ந விந்தாமி ச'மம் ச விஷ்ணோ // 11-24

நப:ஸ்ப்ரு'ச'ம் - வானளாவிய; தீப்தம் - ப்ரகாசமான; அநேகவர்ணம் - பல வண்ணங்கள் கொண்டு; வ்யாத்தானநம் - மிகவிரிந்த வாயும்; தீப்த விசா'ல நேத்ரம் - ஒளிமிக்க அகன்ற கண்களும் உடைய; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; ஹி - நிச்சயமாக; த்வாம் - உங்களை; ப்ரவ்யதித அந்தராத்மா - பயத்தினால் மிகவும் நடுங்கிய மனமுடைய நான்; த்ருதிம் - தைரியத்தையும்; ந விந்தாமி - அடையவில்லை; ச'மம் ச - அமைதியையும்; விஷ்ணோ - விஷ்ணுவே

11.24 ஓ விஷ்ணுவே, வானளாவிய உருவத்தையும் திறந்த வாய்களையும் ஜொலிக்கிற பெரிய கண்களையும் பல நிறங்களோடு பிரகாசிக்கிற உம்மைக் கண்டு மனம் நடுங்குகிறது. என்னுள் தைரியத்தையும் அமைதியையும் என்னால் காண முடியவில்லை. நான் மிரண்டுபோய் இருக்கிறேன்.

.........................................................................................................

தன்ஷ்ட்ராகராலானி ச தே முகாநி
த்ரு'ஷ்ட்வைவ காலானலஸந்நிபாநி /
திசோ' ந ஜாநே ந லபே ச 'ர்ம
ப்ரஸீத தேவேச' ஜகந்நிவாஸ // 11-25

தன்ஷ்ட்ரா கராலானி ச - பயங்கரமான கோரைப்பற்களையுடைய; தே - உங்களுடைய; முகாநி - திருமுகங்களை; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; ஏவ - அதனால்; கால அநல ஸந்நிபாநி - பிரளய காலத்து தீ போன்றவையுமான; திச' : - திசைகள்; ந ஜாநே - புரியவில்லை; ந லபே - பெறவில்லை; ச - மேலும்; ச'ர்ம - ஸுகத்தையும்; ப்ரஸீத - அருள் புரிய வேண்டும்; தேமே வச' - தேவதேவனே; ஜகந்நிவாஸ - உலகத்திற்கு ஆதாரமாயிருப்பவரே

11.25 தேவர்களின் தலைவா, பயமுறுத்தும், கோரமான பற்களை உடைய, பிரளய கால அக்னிக்கு சமமான உமது முகங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குத் திசைகள் தெரியவில்லை. என்னால் அமைதியும் அடைய முடியவில்லை. உலகிற்கே அடைக்கலமாக, ஆதாரமாக இருப்பவரே, அருள் புரிவீராக.

.........................................................................................................

அமீ ச த்வாம் த்ரு'தராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை: /
பீஷ்மோ த்ரோண: ஸுதபுத்ரஸ்ததாஸௌ
ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை: // 11-26

அமீ - இவர்கள்; ச - மேலும்; த்வாம் - உங்களிடம்; த்ரு'தராஷ்ட்ரஸ்ய புத்ரா: - திருதராஷ்டிரரின் குமாரர்களான; ஸர்வே - அனைவரும்; ஸஹைவ

  • அவர்களுடன்; அவநிபாலஸங்கை: - அரசர்களின் கூட்டம் கூட; பீஷ்ம:
  • பாட்டனார் பீஷ்மர்; த்ரோண: - துரோணர்; ஸுதபுத்ர: - கர்ணன்; ததா
  • அவ்விதமே; அஸௌ - இந்த; ஸஹ - உடன்; அஸ்மதீயை: - நம்மைச் சார்ந்த; அபி - கூட; யோதமுக்யை: - முக்கியமான போர்வீரர்கள்

வக்த்ராணி தே த்வரமாணா விச'ந்தி

தம்ஷ்ட்ராகராலாநி ப⁴யாநகாநி /
கேசித்விலக்நா தஶ'நாந்தரேஷு
ஸந்த்ரு'ஶ்'யந்தே சூர்ணிதைருத்தமாங்கை³: // 11-27

வக்த்ராணி - வாய்களில்; தே - உங்களுடைய; த்வரமாணா: - பரபரப்புடன்; விஶ'ந்தி - புகுகிறார்கள்; தம்ஷ்ட்ராகராலாநி - கோரைப்பற்களால் கொடுமையாகவும்; ப⁴யாநகாநி - பயங்கரமாகவும் உள்ள; கேசித் - சிலர்; விலக்நா: - சிக்கியவாறு; தஶ'ந அந்தரேஷு - பல்லிடுக்குகளில்; ஸந்த்ரு'ஶ்'யந்தே - காணப்படுகிறார்கள்; சூர்ணிதை: உத்தமாங்கை³: - தூள்தூளான தலைகளுடன்

11.26-27 திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பீஷ்மர், துரோணர், இரத ஒட்டியின் மகனான கர்ணனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன். சிலர் நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன்.

.........................................................................................................

யதா³ நதீ³நாம் ப³ஹவோऽம்பு³வேகா³:
ஸமுத்ரமேவாபி⁴முகா³ த்ரவந்தி /
ததா³ தவாமீ நரலோகவீரா
விஶ'ந்தி வக்த்ராண்யபி⁴விஜ்வலந்தி // 11-28

யதா³ - எவ்வாறு; நதீ³நாம் - ஆறுகளுடைய; ப³ஹவ: - பற்பல; அம்பு³வேகா³: - வேகமான நீரோட்டங்கள்; ஸமுத்ரம் ஏவ - கடலையே; அபி⁴முகா³: - நோக்கி; த்ரவந்தி - பாய்கின்றனவோ; ததா³ - அவ்வாறே; தவ - உங்களுடைய; அமீ - இந்த; நரலோக வீரா: - மண்ணுலக வீரர்கள்; விஶ'ந்தி - புகுகிறார்கள்; வக்த்ராணி - வாய்களில்; அபி⁴விஜ்வலந்தி - தீக்கொழுந்து வீசுகின்ற

11.28 எப்படி வெள்ளப் பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படி, இவ்வுலகைச் சேர்ந்த போர் வீரர்கள், அலை வீசும் உமது வாய்களுக்குள் வேகமாக நுழைகிறார்கள்.

.........................................................................................................

யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா
விஸ'ந்தி நாசா'ய ஸம்ரு'த்தவேகா: /
ததைவ நாசா'ய விஸ'ந்தி லோகாஸ்-
தவாபி வக்த்ராணி ஸம்ரு'த்தவேகா: // 11-29

யதா - எவ்விதம்; ப்ரதீப்தம் - கொழுந்துவிட்டு எரியும்; ஜ்வலநம் - நெருப்பில்; பதங்கா: - விட்டில்பூச்சிகள்; விஸ'ந்தி - புகுகின்றனவோ; நாசா'ய - அழிவதற்காக; ஸம்ரு'த்தவேகா: - வெகுவேகமாக; ததா ஏவ - அவ்விதமே; நாசா'ய - அழிவிற்காக; விஸ'ந்தி - நுழைகிறார்கள்; லோகா: - உலக மக்கள்; தவ - உங்களுடைய; அபி - கூட; வக்த்ராணி - வாய்களில்; ஸம்ரு'த்தவேகா: - வெகுவேகமாக

11.29 எப்படி விட்டில் பூச்சிகள் சுடர்விட்டு எரியும் தீயை நோக்கி வேகமாகச் சென்று விழுந்து அழிந்துபோகின்றனவோ, அப்படியே இவ்வுலகின் ஜீவராசிகள் அனைத்தும் அழிப்பதற்காகவே விரைந்து வந்து உம்முடைய வாய்களில் நுழைகிறார்கள்.

........................................................................................................

லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தால்-
லோகான்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி: /
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம்
பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ // 11-30

லேலிஹ்யஸே - நக்கி ருசிபார்க்கிறீர்கள்; க்ரஸமாந: - விழுங்கிக்கொண்டு; ஸமந்தாத் - எல்லாப் புறங்கிலிருந்தும்; லோகாந் - உலகங்களையும்; ஸமக்ராந் - அனைத்து; வதநை: - வாய்களால்; ஜ்வலத்பி: - தீ உமிழ்கின்ற; தேஜோபி: - மிகுந்த வெப்பத்தினால்; ஆபூர்ய - நிரப்பி; ஜகத்

  • உலகம்; ஸமக்ரம் - முழு; பாஸ: - ஒளிகள்; தவ - உங்களுடைய; உக்ரா:
  • பயங்கரமான; ப்ரதபந்தி - வாட்டுகின்றன; விஷ்ணோ - விஷ்ணுவே

11.30 ஜ்வாலை வீசும் வாய்களால் எல்லா உலகங்களையும், எல்லாப் பக்கத்தில் இருந்தும் விழுங்கி சந்தோஷமாக ருசி பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது குரூரமான சுடர்கள் முழு உலகையும் நிரப்பிக்கொண்டு எரிகின்றன.

........................................................................................................

ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ
நமோऽஸ்து தே தேவவர ப்ரஸீத /

விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம்
ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ரு'த்திம் // 11-31

ஆக்யாஹி - சொல்லுங்கள்; மே - என்னிடம்; க: - யார்; பவாந் - நீங்கள்; உக்ரரூப - பயங்கர வடிவுள்ள; நம: - நமஸ்காரம்; அஸ்து - இருக்கட்டும்; தே - உங்களுக்கு; தேவரவர - தேவர்களில் சிறந்தவரே; ப்ரஸீத - அருள் புரியுங்கள்; விஜ்ஞாதும் - கண்டு தெரிந்து கொள்ள; இச்சாமி - விரும்புகி றேன்; பவந்தம் - உங்களை; ஆத்யம் - ஆதிபுருஷரான; ந - இல்லை; ஹி

  • நிச்சயமாக; ந ப்ரஜாநாமி - புரிந்து கொள்ள; தவ - உங்களுடைய; ப்ரவ்ரு'த்திம் - செயலை

11.31. பயங்கரவடிவராகிய தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்மை வணங்குகிறேன்; தேவர் தலைவா, தயைபுரியுங்கள். மூலப் பொருளே, உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உமது செயல் எனக்குப் புரியவில்லை.

ஸ்ரீ பகவாநுவாச

காலோऽஸ்மி லோகக்ஷயக்ரு'த்ப்ரவ்ரு'த்தோ
லோகாந் ஸமாஹர்துமிஹ ப்ரவ்ரு'த்த: /
ரு'தேऽபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே
யேऽவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: // 11-32

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னது; கால: - மஹாகாலனாக; அஸ்மி - இருக்கிறேன்; லோக க்ஷயக்ரு'த் - உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற; ப்ரவ்ருத்த: - பெருகி வளர்ந்துள்ள; லோகாந் - உலகங்களை; ஸமாஹர்தும் - ஸம்ஹாரம் செய்வதற்கு; இஹ - இப்பொழுது; ப்ரவ்ரு'த்த:

  • முனைந்திருக்கிறேன்; ரு'தே அபி - இல்லாமலும்; த்வாம் - நீங்கள்; ந பவிஷ்யந்தி - இருக்கப் போவதில்லை; ஸர்வே - எல்லோரும்; யே - எந்த; அவஸ்திதா: - இருக்கின்றார்களோ; ப்ரத்யநீகேஷு - எதிரிப்படைகளில்; யோதா:- போர்வீரர்கள்

ஸ்ரீபகவான் சொன்னது

11.32 உலகங்களை அழிக்கிற எல்லாம்வல்ல காலம் நான். நானே உலகங்களை அழித்துக்கொண்டு இருக்கிறேன். நீ போர் புரியாவிட்டாலும் எதிர்த்து நிற்கிற சேனைகளில் அணிவகுத்து

நிற்கும் போர் வீரர்கள் யாரும் உயிர் வாழப் போவதில்லை.

தஸ்மாத்த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ
ஜித்வா ச'த்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ரு'த்தம் /
மயைவைதே நிஹதா: பூர்வ மேவ
நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந் // 11.33

தஸ்மாத் - ஆகையால்; த்வம் - நீ; உத்திஷ்ட - எழுந்திரு; ய'ச: - புகழ்; லபஸ்வ - அடைக; ஜித்வா - வெற்றி பெற்று; ச'த்ரூந் - பகைவர்கள்; புங்க்ஷ்வ - அனுபவி; ராஜ்யம் - அரசை; ஸம்ரு'த்தம் - செல்வம் மிக்க; மாயா - என்னால்; ஏவ - நிச்சயமாக; ஏதே - இந்த எல்லா; நிஹதா: - ஏற்கனவே கொல்லப்பட்ட; பூர்வம் ஏவ - முன்பே; நிமித்தமாத்ரம் - ஒரு கருவியாக மாத்திரம்; பவ - இருப்பாயாக; ஸவ்யஸாசிந் - இரண்டு கைகளையும் ஒரே மாதிரியாக பயன்படுத்தக் கூடியவனே

11.33 இரண்டு கைகளையும் ஒரே மாதிரியாக பயன்படுத்தக் கூடியவனே! நீ எழுந்திரு, புகழைப்பெறு. எதிரிகளை வென்று, செல்வம் நிறைந்த இராஜ்ஜியத்தை அனுபவி. இந்தப் போர்வீரர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ ஒரு கருவியாக மட்டும் இரு!

த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததாந்யாநபி யோதவீராந் /
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா
யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் // 11-34

த்ரோணம் ச - துரோணரையும்; பீஷ்மம் ச - பீஷ்மரையும்; ஜயத்ரதம் ச - ஜயத்ரதனையும்; கர்ணம் - கர்ணனையும்; ததா - அவ்வாறே; அந்யாந் அபி - இன்னும் அநேக; யோதவீராந் - போர் வீரர்களையும்; மயா - என்னால்; ஹதாந் - கொல்லப்பட்ட; த்வம் - நீ; ஜஹி - சொல்வாயாக; மா வ்யதிஷ்டா - பயப்படாதே; யுத்யஸ்வ - போர் புரிவாயாக; ஜேதாஸி - வென்றுவிடுவாய்; ரணே - போரில்; ஸபத்நாந் - எதிரிகளை

11.34 என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்ட துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற போர் வீரர்களையும் நீ கொல். பயப்படாதே; போரில் நீ உன்னுடைய பகைவர்களை வெல்வாய்.

ஸஞ்ஜய உவாச

ஏதச்ச்ருத்வா வசனம் கேஸ'வஸ்ய
க்ரு'தாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ /
நமஸ்க்ரு'த்வா பூய ஏவாஹ க்ரு'ஷ்ணம்
ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய // 11-35

ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னது; ஏதத் - இந்த; ச்'ருத்வா - கேட்டு; வசனம் - வசனத்தை; கேஸ'வஸ்ய - பகவான் ஸ்ரீ கேசவனுடைய; க்ரு'தாஞ்ஜலி: - கைகூப்பிக் கொண்டு; வேபமாந: - நடுங்கிக் கொண்டே; கிரீடீ - மகுடம் அணிந்த அர்ஜுனன்; நமஸ்க்ரு'த்வா - வணங்கி; பூய ஏவ - மறுபடியும்; ஆஹ - சொன்னார்; க்ரு'ஷ்ணம் - ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து; ஸகத்கதம் - தழு தழுத்த குரலில்; பீதபீத: - மிகவும் பயந்து; ப்ரணம்ய - நமஸ்காரஞ்செய்து

ஸஞ்ஜயன் சொன்னது

11.35 கேசவனுடைய இந்த செய்திகளைக் கேட்ட, மணிமகுடம் தரித்த அர்ஜுனன் நடுங்கும் காரங்களால் கைகூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறார். தொண்டை அடைக்க, கண்ணீர் நிரம்பிய கண்களுடன், தலைவணங்கி மீண்டும் கிருஷ்ணரைப் பார்த்துப் பேசுகிறார்.

.......................................................................................................

அர்ஜுந உவாச

ஸ்தாநே ஹ்ரு'ஷீகேஸ' தவ ப்ர கீர்த்யா
ஜகத்ப்ரஹ்ரு'ஷ்யத்யநுரஜ்யதே ச /
ரக்ஷாம்ஸி பீதாநி திசோ' த்ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா // 11-36

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னது; ஸ்தாநே - உமது நிலைக்கு ஏற்றது; ஹ்ரு'ஷீகேஸ' - அந்தர்யாமியான பகவானே; தவ - உங்களுடைய; ப்ர கீர்த்யா - புகழில்; ஜகத் - உலகம்; ப்ரஹ்ரு'ஷ்யதி - மிக்க மகிழ்ச்சி அடைகிறது; அநுரஜ்யதே - அன்பு கொள்கிறது; ச - மேலும்; ரக்ஷாம்ஸி - அரக்கர்கள்; பீதாநி - பயந்து போன; திச' - எல்லாத் திசைகளிலும்; த்ரவந்தி - ஒடுகின்றனர்; ஸர்வே - எல்லா; நமஸ்யந்தி - வணங்குகிறார்கள்; ச - மேலும் ஸித்தஸங்கா: - ஸித்தர்களின் கூட்டமனைத்தும்

அர்ஜுனன் சொன்னது

11.36 ரிஷிகேசா, உம்முடைய புகழைப் பாடுவதில் உலகம் இன்புற்று ஆனந்தமடைகிறது. ராக்ஷஸர்கள் அஞ்சி நாலாப்பக்கமும் ஓடுகிறார்கள். சித்தர்கள் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் உமக்குப் பொருத்தமானவையே.

.........................................................................................................

கஸ்மாச்ச தே ந நமேரன்மஹாத்மந்
கரீயஸே ப்ரஹ்மணோऽப்யாதிகர்த்ரே /
அநந்த தேவேச' ஜகந்நிவாஸ
த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத் // 11-37

கஸ்மாத் - ஏன்; ச - மேலும்; தே - உங்களுக்கு; ந நமேரன் - நமஸ்காரம் செய்யமாட்டார்கள்; மஹாத்மந் - மஹாத்மாவே; கரீயஸே - மூத்தவராகவும் உள்ள; ப்ரஹ்மண: அபி - பிரம்ம தேவனையே; ஆதிகர்த்ரே - உயர்ந்த படைப்பாளர்; அநந்த - முடிவற்றவரே; தேவேச' - தேவர்களுக்கெல்லாம் ஈசனாகவும்; ஜகந்நிவாஸ - ஜகத்திற்கு இருப்பிடமானவரே; த்வம்

  • நீங்களே; அக்ஷரம் - அழிவற்ற; ஸத் - தோன்றியுள்ளதும்; அஸத் - தோன்றாததும்; தத்பரம் - அவற்றிற்கு மேலான; யத் - எது

11.37 மஹாத்மாவே, அனைத்தைக் காட்டிலும் மேலானவரே, உலகைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்தவரே, பிரபஞ்ச பேரண்டத்தின் தோற்றுவாயே, தேவதேவருக்கெல்லாம் சிறந்தவரே, முடிவில்லாதவரே, உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றியுள்ளதும் தோன்றாததும் ஆகிய இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட அழியாப்பொருளும் நீரே!

.........................................................................................................

த்வமாதிதேவ: புருஷ: புராணஸ் -
த்வமஸ்ய விச்'வஸ்ய பரம் நிதாநம் /
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம் விச்'வமநந்தரூப // 11-38

த்வம் - நீங்கள்; ஆதிதேவ: - முழுமுதல் தெய்வம்; புருஷ: - புருஷர்; புராண: - ஸனாதனமான; த்வம் - நீங்கள்; அஸ்ய - இந்த; விச்'வஸ்ய - உலகத்திற்கு; பரம் - சிறந்த; நிதாநம் - இருப்பிடம்; வேத்தா - அறிபவர்; அஸி - இருக்கிறீர்கள்; வேத்யம் ச - அறியப்படுபவராகவும்; பரம் ச - இந்த இரண்டையும் கடந்த; தாம - பரமபதமாகவும; த்வயா - உங்களால்; ததம் - வியாபிக்கப்பட்டுள்ளது; விச்'வம் - உலகனைத்தும்; அநந்தரூப - எண்ணற்ற ரூபங்களை உடையவரே

11.38 நீரே முழுமுதற் பொருள், தொன்மையானவர், பிரபஞ்ச பேரண்டத்திற்கு மேலான புகலிடமாக இருப்பவர். நீரே அறிபவராகவும், அறியத்தக்க விஷயமாகவும் இருக்கிறீர். மேலான இருப்பிடமும் நீரே. கணக்கில் அடங்கா வடிவங்களாக இருப்பவரே! தாங்கள் ஒருவரே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறீர்கள்.

........................................................................................................

வாஸுர்யமோSக்நிர்வருண: ச'சா'ங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹச்'ச /
நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ரக்ரு'த்வ:
புநச்'ச பூயோடபி நமோ நமஸ்தே // 11-39

வாயு: - வாயு; யம: - யமன்; அக்நி: - அக்னி; வருண: - வருணன்; ச'சா'ங்க:

  • சந்திரன்; ப்ரஜாபதி: - மக்களுக்குத் தலைவனான பிரம்மதேவர்; த்வம் - நீங்களே; ப்ரபிதாமஹ: ச - முப்பாட்டனாரும்; நம: நம: - நமஸ்காரங்கள்; தே - உங்களுக்கு; அஸ்து - இருக்கட்டும்; ஸஹஸ்ரக்ரு'த்வ - பல்லாயிரக்கணக்கான முறை; புந: ச - திரும்பத்திரும்ப; பூய: அபி - மீண்டும்; நம: - நமஸ்காரம்; நம: - நமஸ்காரம்; தே - உங்களுக்கு

11.39 வாயு, எமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, ஆகிய எல்லோருக்கும் தாங்களே முப்பாட்டனார். உமக்குப் பல நமஸ்காரங்கள். ஆயிரம் ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரங்கள்!

........................................................................................................

நம: புரஸ்தாதத ப்ரு'ஷ்டதஸ்தே
நமோாஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ /
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோாஸி ஸர்வ: // 11-40

நம:- நமஸ்காரம்; புரஸ்தாத் - முன்புறமிருந்தும்; அத ப்ரு'ஷ்டத:

  • பின்புறமிருந்தும்; தே - உங்களுக்கு; நம: - நமஸ்காரம்; அஸ்து - இருக்கட்டும்; தே - உங்களுக்கு; ஸர்வத: ஏவ - எல்லாப்புறமிருந்தும்; ஸர்வ - அனைத்துமானவரே; அநந்தவீர்ய - அளவற்ற திறமை உடையவரே; அமிதவிக்ரம: - அளவற்ற பராக்கிரமம் உடைய; த்வம் - நீங்கள்; ஸர்வம் - உலகனைத்திலும்; ஸமாப்நோஷி - வியாபித்து இருக்கிறீர்கள்; தத: - எனவே; அஸி - இருக்கிறீர்கள்; ஸர்வ:
  • அனைத்து வடிவமாகவும்

11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் நமஸ்காரம், அளவில்லா வல்லமையையும் முடிவில்லாப் பராக்கிரமத்தையும் உடைய நீர்வி அனைத்திலும் நன்கு வியாபித்து இருக்கிறீர்கள். அதனால் நீரே எல்லாமுமாக இருக்கிறீர்.

.......................................................................................................

ஸகேதி மத்வா ப்ரஸபும் யதுக்தம்
ஹே க்ரு'ஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி /
அஜாநதா மஹிமாநம் தவேதம்
மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி // 11-41

ஸகா இதி - தோழன் என்று; மத்வா - எண்ணி; ப்ரஸபும் - துடுக்காக; யத் - எது; உக்தம் - சொல்லப்பட்டது; ஹே க்ருஷ்ண - கிருஷ்ணா; ஹே யாதவ - ஏ யாதவா; ஹே ஸகே - ஏ நண்பனே; இதி - என்று; அஜாநதா

  • அறியாத; மஹிமாநம் - பெருமையை; தவ - உங்களுடைய; இதம் - இந்த; மயா - என்னால்; ப்ரமாதாத் - கவனமில்லாமலோ; ப்ரணயேந - அன்பினாலோ; வாஅபி - ஏதேனும் ஒன்று

11.41 அர்ஜுனன் சொல்கிறார்: உம்முடைய இந்த மகிமையை அறியாமல், உம்மை வெறும் நண்பராக மட்டும் நினைத்து, கவனமில்லாமலோ அல்லது அன்பாலோ உம்மை 'கிருஷ்ணா, யாதவா, என் நண்பரே' என்றெல்லாம் பணிவில்லாமல் சொல்லிவிட்டேன்.

.......................................................................................................

யச்சாவஹாஸார்தமஸத்க்ரு'தோऽஸி
விஹாரஶய்யாஸநபோஜநேஷு /
ஏகோऽதவாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் // 11-42

யத் - எந்தவிதமாக; ச - மேலும்; அவஹாஸார்தம் - பரிகாசத்திற்காக; அஸத்க்ரு'த: அஸி - அவமதிக்கப்பட்டிருக்கிறீர்களோ; விஹார ச'ய்யா ஆஸந போஜநேஷு - கேளிக்கை, படுக்கை அமர்தல் உணவருந்துதல் இவற்றுக்கிடையில்; ஏக: - நீங்கள் தனியாக இருக்கும் போதும்; அதவா - அல்லது; அபி - கூட; அச்யுத - அச்யுதா; தத் ஸமக்ஷம்

  • பிறர் முன்னிலையிலும் கூட; தத் - அந்த எல்லாக் குற்றங்களையும்; க்ஷாமயே - பொறுத்தருள வேண்டுகிறேன்; த்வாம் - உங்களை; அஹம் - நான்; அப்ரமேயம் - அளப்பதற்கரிய

11.42 ஓ அச்சுதா, உம்முடன் நான் விளையாடும்போதும், ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோதும், உட்கார்ந்திருந்தபோதும், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதும், நாம் தனித்திருந்தபோதும், மற்றவர்களுடன் இருந்தபோதும் உம்மை எளனமாக எந்தவிதத்தில் அவமதித்திருந்தாலும், அதையெல்லாம் மன்னித்தருளுமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்.

.......................................................................................................

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யச்'ச குருகரீயாந் /
ந த்வத்ஸமோடஸ்த்யப்யதிக: குதோந்யோ
லோகத்ரயேப்யப்ரதிமப்ரபாவ //

பிதா - தந்தை; அஸி - இருக்கிறீர்கள்; லோகஸ்ய - உலகத்திற்கு; சராசரஸ்ய - அசைவனவும் அசையாதனவும் கொண்ட; த்வம் - நீங்கள்; அஸ்ய - இந்த; பூஜ்ய: ச - போற்றத் தகுந்தவராகவும்; குரு: - குரு; கரீயாந்

  • எல்லோரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த; ந - இல்லை; த்வத்ஸம: உங்களுக்கு நிகரானவர் கூட; அஸ்தி - இங்கு; அப்யதிக: - மேம்பட்டவர்; குத: - எவ்வாறு இருக்க முடியும்; அந்நய: -வேறு ஒருவர்; லோகத்ரயே
  • மூவுலகிலும்; அபி - கூட; அப்ரதிமப்ரபாவ - இணையற்ற மகிமை உடையவரே

11.43 அசையும், அசையா பொருட்களால் நிறைந்திருக்கும் இப்பிரபஞ்சத்திற்கு நீரே தந்தை, போற்றுதலுக்கு உரிய குருவும் நீரே. உமக்குச் சமமானவரும் வேறு ஒருவரும் இல்லை. ஒப்பற்ற பெருமையுடையவரே, இம்மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மேலானவர் வேறு ஒருவர் எப்படி இருக்க முடியும்?

.......................................................................................................

தஸ்மாத்ப்ரணம்க்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீச’மீட்யம் /
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் // 11-44

தஸ்மாத் - ஆகவே; ப்ரணம்க்ய - நமஸ்கரித்து; ப்ரணிதாய - உங்களுடைய சரணங்களின் நன்கு அர்ப்பணித்து; காயம் - என் உடலை; ப்ரஸாதயே - அருள்புரிய வேண்டுகிறேன்; த்வாம் - உங்களை; அஹம் - நான்; ஈச’ம் - ஈசுவரனான; ஈட்யம் - துதிக்கத்தக்க ; பிதா இவ - தந்தை போன்று; புத்ரஸ்ய

  • புத்திரனுக்கு; ஸகேவ - நண்பன் போன்று; ஸக்யு: - நண்பனுக்கு; ப்ரிய:
  • காதலன்; ப்ரியாயா: - காதலிக்கு; அர்ஹஸி - நீங்கள் நிச்சயம்; தேவ - தெய்வமே; ஸோடும் - பொறுத்துக் கொள்ள

11.44 அதனால் உடலால் விழுந்து வணங்கி, போற்றத்தக்க உம்மை அருள்புரிய வேண்டுகிறேன். மகனுக்குத் தந்தை போலவும், தோழனுக்குத் தோழன் போலவும், காதலிக்குக் காதலன் போலவும், தேவனே என்னைப் பொறுத்து மன்னித்தருளுங்கள்.

........................................................................................................................

அத்ரு’ஷ்டபூர்வம் ஹ்ரு’ஷிதோऽஸ்மி த்ரு’ஷ்ட்வா
பயேந ச ப்ரவயிதிதம் மநோ மே /
ததேவ மே தர்ச’ய தேவரூபம்
ப்ரஸீத தேவேச’ ஜகந்நிவாஸ // 11-45

அத்ரு’ஷ்டபூர்வம் - இதற்கு முன் நான் பார்த்திராத; ஹ்ரு’ஷித: - மகிழ்ச்சி கொண்டவனாக; அஸ்மி - இருக்கிறேன்; த்ரு’ஷ்ட்வா - பார்த்து; பயேந

  • பயத்தினால்; ச - மேலும்; ப்ரவ்யதிதம் - நடுங்கிக் கொண்டிருக்கிறது; மந: - மனம்; மே - என்னுடைய; தத் - அந்த; ஏவ - நிச்சயமாக; மே - எனக்கு; தர்ச’ய - காண்பியுங்கள்; தேவரூபம் - தேவ ஸ்வரூபத்தையே; ப்ரஸீத - திருவருள் புரியுங்கள்; தேவேச’ - தேவதேவனே; ஜகந்நிவாஸ - ஜகத்திற்கெல்லாம் இருப்பிடமானவரே

11.45 பிரபஞ்சத்திற்கே புகலிடமாக விளங்குபவரே, இதற்குமுன்பு பார்த்திராத உம் வடிவத்தைப் பார்த்த பிறகு நான் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறேன்; ஆனால் அதே சமயம், பயத்தால் தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறேன். தேவ தேவர்களுக்கெல்லாம் தலைவரே! உம்முடைய முந்தைய இனிய வடிவத்தையே எனக்கு நீர் கருணைகூர்ந்து காட்டுவீராக.

கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த-
மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ /
தேநைவ ரூபேண சதுர்புஜேந
ஸஹஸ்ரபாஹோ பவ விச்'வமூர்தே // 11-46

கிரீடிநம் - கிரீடம் தரித்தவராகவும்; கதிநம் சக்ரஹஸ்தம் - கதாயுதத்தையும் சக்ராயுதத்தையும் கையில் ஏந்தியவராகவும்; இச்சாமி - விரும்புகிறேன்; த்வாம் - உங்களை; த்ரஷ்டும் - தரிசிக்க; அஹம் - நான்; ததா ஏவ - அந்த விதமாகவே; தேநைவ - அதே; ரூபேண - ஸ்வரூபத்துடனேயே; சதுர்புஜேந - நான்கு கைகள் கொண்ட; ஸஹஸ்ரபாஹோ - ஆயிரக்கணக்கான திருக்கரங்களையுடையவரே; பவ - இருப்பீராக; விச்'வமூர்தே - விசுவரூபம் கொண்டவரே

11.46 ஆயிரம் கரங்களையுடைய விச்'வரூபத்தை உடையவரே! கிரீடம் அணிந்தவராக, கதையும், சக்கரமும் கரங்களில் ஏந்தியவராக நான்கு கரங்களுடன் உம்மைக் காண விரும்புகிறேன்.

நான் இந்த வடிவத்திலேயே உங்களைக் காண விரும்புகிறேன்.

ஸ்ரீபகவாந் உவாச

மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம்
ரூபம் பரம் தர்சி'தமாத்மயோகாத் /
தேஜோமயம் விச்'வமநந்தமாத்யம்
யந்மே த்வதந்யேந ந த்ரு'ஷ்டபூர்வம் // 11-47

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; மயா - என்னால்; ப்ரஸந்நேந

  • அனுக்ரஹபூர்வமாய்; தவ - உனக்கு; அர்ஜுந - அர்ஜுனா; இதம் - இந்த விசுவரூபம்; ரூபம் - வடிவம்; பரம் - மிகச் சிறந்தது; தர்சி'தம் - காட்டப்பட்டதோ; ஆத்மயோகாத் - என்னுடைய யோக சக்தியினால்; தேஜோமயம் - ஒளிமயமானதும்; விச்'வம் - அண்ட சராசரம்; அநந்தம் - முடிவுற்றதுமான; ஆத்யம் - எல்லாவற்றிற்கும் முதலானதும்; யத் - எந்த; மே - என்னுடைய; த்வதந்யேந - உன்னைத் தவிர வேறு எவராலும்; ந த்ரு'ஷ்டபூர்வம் - இதற்கு முன் பார்க்கப்படவில்லை 11.47 பகவான் சொல்கிறார்: அன்புக்குரிய அர்ஜுனா என்னுடைய உள்ளார்ந்த சக்தியின் வெளிப்பாடாக விளங்கும் இந்தப் பொருளியல் சார்ந்த உலகத்தின் உள்ளேயே, மனித அறிவுக்கு எட்டாத என் ஆன்மீக வடிவத்தை உனக்குக் காட்டினேன். உன்னைத் தவிர வேறு யாரும் இதற்கு முன் இந்த இறுதி வடிவத்தைப் பார்த்ததில்லை.

....................................................................................................

ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநைர்-
ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை: /
ஏவம்ரூப: ச'க்ய அஹம் ந்ரு'லோகே
த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர // 11-48

ந - முடியாது; வேத யஜ்ஞ; அத்யயநை: - வேதங்களையும், யாகத்தின் செயல் முறைகளையும் கற்பதாலோ; தாநை: - தானங்களாலோ; ந - முடியாது; ச - மேலும்; க்ரியாபிஃ - கர்மங்களாலும்; ந - முடியாது; தபோபிஃ - தவங்களாலும்; உக்ரை: - உக்கிரமான; ஏவம் ரூப - இந்த விஸ்வரூபம் தாங்கிய; ச'க்ய: - சாத்தியம் ; அஹம் - நான்; ந்ரு'லோகே - மனித உலகில்; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; த்வதந்யேந - உன்னைத் தவிர வேறுயாராலும்; குருப்ரவீர - அர்ஜுனா

11.48 குருவம்சத்தின் சிறந்த வீரனே, உன்னைத் தவிர வேறு யாரும், வேதத்தைப் படித்ததாலும், சமர்ப்பணங்களாலும், தானங்களாலும்்கூட இந்த வடிவத்தைப் பார்க்கவில்லை.

நீ மட்டுமே இவ்வடிவத்தைக் காணும் பேறு பெற்றிருக்கிறாய்.

....................................................................................................

மா தே வ்யதா மா ச வி மூடபாவோ
த்ரு'ஷ்ட்வா ரூபம் கோரமீத்ரு'ங்மமேதம் /
வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம்
ததேவ மே ரூபமிதம் ப்ரபச்'ய // 11-49

மா - வேண்டாம்; தே - உனக்கு; வ்யதா - கலக்கம்; மா - வேண்டாம்; ச - மேலும்; விமூடபாவ: - மதி மயக்கம்; த்ரு'ஷ்ட்வா - பார்த்து; ரூபம் - ஸ்வரூபத்தை; கோரம் - கோரமான; ஈத்ரு'க் - இத்தகைய; மம - என்னுடைய; இதம் - இந்த; வ்யபேதபீ: - பயத்தைத் துறந்து; ப்ரீதமநா: - மனமகிழ்ச்சியுடன்; புந: - மறுபடியும்; த்வம் - நீ; தத் ஏவ - அதே; மே - என்னுடைய; ரூபம் - ஸ்வரூபத்தை; இதம் - இந்த; ப்ரபச்'ய - நன்கு பார் 11.49 அன்பான சீடனே, இனியும் நீ என்னுடைய இந்தக் கோர வடிவத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. அச்சம் நீங்கி, அமைதியான மனத்தோடு மறுபடியும் நீ பார்க்க விரும்பிய எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.

........................................................................................................

ஸஞ்ஜய உவாச

இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்தோக்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஶயாமாஸ பூய: /
ஆச்வாஸயாமாஸ ச பீதமேநம்
பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா // 11-50

ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; இதி - இவ்வாறு; அர்ஜுநம் - அர்ஜுனனிடம்; வாஸுதேவ: - வாஸுதேவன்; உக்த்வா - சொல்லி விட்டு; ததா - அதேவிதமான; ஸ்வகம் - தன்னுடைய; ரூபம் ச - ஸ்வரூபத்தை; தர்ஶயாமாஸ - காண்பித்தார்; பூய: - மறுபடியும்; ஆச்வாஸயாமாஸ - தைரியமூட்டினார் ; ச - மேலும்; பீதம் - பயந்திருந்த; ஏநம் - அவருக்கு; பூத்வா - ஆகி; புந: - மறுபடியும்; ஸௌம்யவபு: - இனிய வடிவாக; மஹாத்மா - மஹாத்மாவான

ஸஞ்ஜயன் சொன்னது

11.50 வாஸுதேவர் இவ்வாறு சொல்லிவிட்டு, அர்ஜுனனுக்கு நான்கு கரங்களுடன் கூடிய தம்முடைய வடிவத்தைக் காட்டினார். பிறகு, தம்முடைய இனிய மானுட வடிவமெடுத்து, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனைத் தேற்றினார்.

........................................................................................................

அர்ஜுந உவாச

த்ருஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந / இதநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத: // 11-51

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னது; த்ருஷ்ட்வா - பார்த்து; இதம் - இந்த; மானுஷம் ரூபம் - மானுடவடிவை; தவ - உங்களுடைய; ஸௌம்யம்

  • மிக இனியதான; ஜனார்தந - ஜனார்தனா; இதாநீம் - இப்பொழுது; ஸம்வ்ரு'த்த: அஸ்மி - கொண்டவனாக ஆகிவிட்டேன்; ஸசேதா: - நிலைபெற்ற மனம்; ப்ரக்ரு'திம் - என் இயல்பான நிலையையும்; கத: - அடைந்துவிட்டேன்

அர்ஜுனன் சொன்னது

11.51 ஜனார்தனா, உமது இந்த இனிய மானுட வடிவம் கண்டு, இப்போது மனம் தெளிந்து சாந்தமாக என்னுடைய இயல்பை அடைந்தவனாக இருக்கிறேன்.

....................................................................................................

ஸ்ரீபகவாநுவாச

ஸுதுர்தர்ஸ'மிதம் ரூபம் த்ரு'ஷ்டவாநஸி யந்மம /
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஸ'நகாங்க்ஷிண: //

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; ஸுதுர்தர்ஸ'ம் - காண்பதற்கரியது; இதம் - இது; ரூபம் - ஸ்வரூபத்தை; த்ரு'ஷ்டவாந் அஸி - இப்போது பார்த்தாயே; யத் - எந்த; மம - என்னுடைய; தேவா: அபி - தேவர்கள்கூட; அஸ்ய - இந்த; நித்யம் - எப்போதும்; ரூபஸ்ய - உருவத்தை; தர்ஸ'நகாங்க்ஷிண: - காண்பதற்கு பெருவிருப்பம் கொண்டு இருக்கிறார்கள்

ஸ்ரீபகவான் சொன்னது

11.52 தரிசிப்பதற்கரிய என்னுடைய இந்த ரூபத்தை நீ தரிசி த்திருக்கிறாய். இந்த ரூபத்தைத் தரிசிக்க தேவர்களும் எப்போதும் விரும்புகிறார்கள்.

....................................................................................................

நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா /
ச'க்ய ஏவம்விதொ த்ரஷ்டும் த்ரு'ஷ்டவாநஸி மாம் யதா //

ந - அல்ல; அஹம் - நான்; வேதை: - வேதங்களைக் கற்பதால்; ந - அல்ல; தபஸா - தவத்தினால்; ந - அல்ல ; தாநேந - தானத்தினாலும்; ந

  • அல்ல; இஜ்யயா ச - யாகம் செய்தாலும்; ச'க்ய: - சாத்தியமானவன்; ஏவம் விதஃ - இவ்விதமான; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; த்ரு'ஷ்டவாந் அஸி - பார்த்தாயோ; மாம் - என்னை; யதா - எவ்வாறு

11.53 நான்கு கரங்களோடு நீ என்னை எப்படித் தரிசித்தாயோ, அதை வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் புரிந்துகொள்ள முடியாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதால் மட்டுமே ஒருவர் என்னை இவ்வாறு தரிசித்துவிட முடியாது.

.........................................................................................................

பக்த்யா த்வநந்யயா ச'க்ய அஹமேவம்விதோேர்ஜ்ஜந /
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப //

பக்த்யா - பக்தியினால்; து - ஆனால்; அநந்யயா - வேறொன்றைப் பயனாகக் கருதாத; ச'க்யஃ - கூடியவன்; அஹம் - நான்; ஏவம்விதஃ - இவ்விதம்; அர்ஜ்ஜந - அர்ஜூனா; ஜ்ஞாதும் - அறிவதற்கு ; த்ரஷ்டும் - பார்ப்பதற்கு; ச - மேலும் ; தத்த்வேந - தத்வரீதியாக; ப்ரவேஷ்டும் - என்னிடம் ஒன்றிவிட; ச - மேலும்; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே;

11.54 என் அன்பிற்குரிய அர்ஜூனா, எதிரிகளை வாட்டுபவனே, ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும்.

.........................................................................................................

மத்கர்மக்ரு'ந்மத்பரமோ மத்புக்தஃ ஸங்கவர்ஜிதஃ /
நிர்வைரஃ ஸர்வபூதேஷு யஃ ஸ மாமேதி பாண்டவ //

மத்கர்மக்ரு'த் - செய்யவேண்டிய எல்லாக் கடமைகளையும் என் பொருட்டே ஆற்றுவானோ; மத்பரமஃ - என்னையே அடையத்தக்க மேலான கதியாகக் கொள்வானோ; மத்புக்தஃ - என்னுடைய பக்தி சேவையில் ஈடுபடுகிறவன்; ஸங்கவர்ஜிதஃ - கடந்த கால செயல்களினால் ஏற்பட்ட களங்கங்களிலிருந்து விடுபட்டவனாகவும் எதிர்காலத்தைப் பற்றிய யூகங்களிலிருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறானோ; நிர்வைரஃ - பகைமை இல்லாதவனோ; ஸர்வபூதேஷு - உயிரினங்கள் அனைத்திலும்; யஃ - எவனொருவன்; ஸஃ - அந்த; மாம் - என்னையே; ஏதி - அடைகிறான்; பாண்டவ - பாண்டு புத்திரனே

11.55 அன்பிற்கினிய பாண்டு புத்திரனே, எனக்காகப் பக்தி சேவை புரிபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனே என்னை அடைகிறான்.

....................................................................................................

ஓம்ப தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶா'ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே விஶ்வரூபதர்ஶநயோகோ நாம ஏகாதஶோ'த்யாய: //

ஓம் தத் ஸத், ஶ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞான்முமாகிய விச்வரூபதர்சந யோகம் எனப் பெயர் படைத்த பதினொன்றாவது அத்தியாயம்.

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

அத்ரு'ஷ்டபூர்வம் ஹ்ரு'ஷி 11-45
அநாதிமத்யாந்தமநந்தவீர்ய 11-19
அநேகபாஹூதரவக்த்ர 11-16
அநேகவக்த்ரநயந 11-10
அமீ ச த்வாம் _ 11-26
அமீ ஹி த்வாம் ஸுர 11-21
ஆக்யாஹி மே கோ 11-31
இத்யர்ஜுநம் வாஸுதேவ 11-50
இஹைகஸ்தம் ஜகத் 11-7
ேதச்ச்ருத்வா வசனம் 11-35
ஏவமுக்த்வா ததோ 11-9
ஏவமேதத்யதாத்த 11-3
ேகஸ்மாச்ச தே ந 11-37
காலோऽஸ்மி லோகக்ஷய 11-32
கிரீடிநம் கதினம் சக்ரஹஸ்த 11-46
கிரீடிநம் கதிநம் சக்ரிணம் 11-17
தத: ஸ விஸ்மயாவேஷ்டோ 11-14
தத்ரைகஸ்தம் ஜகத் 11-13
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணி 11-44
தஸ்மாத்தவமுத்திஷ்ட 11-33
த்வமக்ஷரம் பரமம் 11-18
த்வமாதிதேவ: புருஷ: 11-38
தம்ஷ்ட்ராகராலாநி ச 11-25
திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய 11-12
திவ்யமால்யாம்பரதரம் 11-11
த்ரு'ஷ்ட்வேதம் மானுஷம் 11-51
த்யாவாப்ரு'திவ்யோரி 11-20
த்ரோணம் ச பீஷ்மம் 11-34
ந து மாம் ச'க்யஸே 11-8
நபஃஸ்ப்ரு'ச'ம் தீப்த 11-24
நம: புரஸ்தாதத 11-40
ந வேதயஜ்ஞாத்யய 11-48
நாஹம் வேதைர்ந தபஸா 11-53
பச்'ய மே பார்த ரூபாணி 11-5

பச்'யாதித்யான்வஸுன்ருத்ரா 11-6
பச்'யாமி தேவாமீஸ்தவ 11-15
பிதாஸி லோகஸ்ய 11-43
பக்த்யா த்வநந்யயா ச'க்ய 11-54
ப்ரவாப்யயௌ ஹி 11-2
மத்கர்மக்ரு'ந்மத்பரமோ 11-55
மதநுக்ரஹாய பரமம் 11-1
மன்யஸே யதி தச்சக்யம் 11-4
மயா ப்ரஸந்நேந 11-47
மா தே வ்யதா மா ச 11-49
யச்சாவஹாஸார்தமஸத் 11-42
யதா நதீநாம் பஹவோ 11-28
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் 11-29
ருத்ராதித்யா வஸவோ 11-22
ரூபம் மஹத்தே பஹுவக்த்ர 11-23
லேலிஹ்யஸே க்ரஸமாந: 11-30
வக்த்ராணி தே த்வர 11-27
வாயுர்யமோऽக்னிர்வருண: 11-39
ஸ்தாநே ஹ்ரு'ஷீகேச' 11-36
ஸகேதி மத்வா ப்ரஸபும் 11-41
ஸுதுர்தர்ச'மிதம் ரூபம் 11-52