KAILASA Library/பகவத் கீதை/மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலைSign in
பகவத் கீதை

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்கீதை.

கிருஷ்ணர், "நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டு விடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்களே," என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தில் (ஆன்மீகத்தில்) இறுதியான அனுபூதியின் சாரங்கள் நிறைந்த நூலாக கீதை இருக்கிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது உடல், மனத்தின் நிலையற்ற தன்மைகளைப் பற்றியும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண்கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.

ஸஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். ஸம்ஸ்க்ருத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவர் மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் அவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு ஸத்யத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்குன்றும் ஆழமான ஸத்யமாக உள்ளது.

பகவத்கீதை, ஜீவன் முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல. ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

நேர்மறை எண்ணங்களை ‘பாண்டவர்கள்’ என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை ‘கௌரவ இளவரசர்கள்’ என்று சொல்லலாம்.

குருக்ஷேத்ரப்போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஞானமடைந்த குரு.

தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர். பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவர்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மீக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார். கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது ‘நல்ல செய்கை’களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார். இறுதியாக வீழும் துரியோதனன், நமது ‘தனிமனித அஹங்காரத்தின் சின்னமாக இருக்கிறார்.’ நடைமுறை மரபுகளை எதிர்ப்பதன் மூலம்தான் பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியத்துள்ளது. அதனால்தான் ஞானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஸந்யாஸிகளாக சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால் நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்து விடும்.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும் நம்மை வழிநடத்திச் சென்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச் செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை விடுதல் மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஞானமடைந்த குருவானவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழி நடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. கர்ணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும் நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றை விடுவதற்கு, ஞானமடைந்த குருவானவர் வழி காட்டுகிறார்.

ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜ்ஞானகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியోధனனை அதாவது வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமான நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்து அடைகிறோம். இங்கேதான் ஜ்ஞான ஸத்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞான ஸத்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அஹங்காரம், நம் ஜ்ஞான ஸத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றி எண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர்.இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனைகள் என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும் எழுபது மில்லியன் பாண்டவர் சேனைகள் என்பது நமது நேர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும் எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாட்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் ஆழ்ந்த உட்பொருளுடன் முக்கியத்துவம்வாய்ந்தது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஓட்டங்களையும் குறிக்கிறது. அவற்றுள் ஞானேந்த்ரியங்கள் என்பவை புலனுணர்வுகளான சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்து கர்மேந்த்ரியங்கள் என்பது செயலைத் தூண்டும் புலன்களான பேச்சு மற்றும் உடல் அசைவுகளைக் குறிக்கிறது. எட்டுவித எண்ணங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (குறுகிய மனப்பான்மை), மாற்சரியம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை அறியாமை (அஞ் ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. ‘தன்னை உணர்தல்’ எனப்படும் ஆத்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்த பதினெட்டும் விடப்பட வேண்டும். ‘

மஹாபாரதம் ஒரு இதீஹாஸ கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் மனம் என்கிற அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸம்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. நிலையான சுதந்திரத்திற்கு, இது நடைபெற்றாக வேண்டியுள்ளது. இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை.

மஹாபாரதம் வாழும் வரலாறு. பகவத்கீதை, ஞானமடைதலுக்கான கையேடு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல் நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக ஜ்ஞான ஸத்குருவுடன் உரையாடுகிறீர்கள்.

இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஸத்குருநாதரின் ஸத்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.