KAILASA Library/பகவத் கீதை/முன்னுரைSign in
பகவத் கீதை

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் பகவத்கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற் கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூக்ஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

சிறந்த ஸத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர், “கீதையைச் சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்,” என்று சொல்கிறார். “நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்,” என்று சொல்கிறார்.

பரமஹம்ஸரின் பகவத்ீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், பரமஹம்ஸரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்குாகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதெப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில் பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யத்தை உணர்வதற்கான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

  • நித்யானந்தா பதிப்பகம்

பதினாங்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சி செய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவரும் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான ‘கிருஷ்ணர்’ அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால் துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் ‘மஹாபாரத யுத்தம்’.

இப்பொழுது ‘இந்தியா’ என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கெளரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவருடன் சேர ஒப்புக் கொண்டார். “என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் ‘நான்’ மட்டும் ஒருபுறம் இருப்பேன். என்னுடைய அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை முழுவதும் ஒரு புறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்,” என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் துரியோதனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், எல்லோரும் எதிர்பார்த்தபடி துரியோதனன் நிறைய ஆயுதங்களுடன்கூடிய கிருஷ்ணரின் யாதவ சேனையைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரைத் தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

இரு சேனைகளும் குருக்ஷேத்ரத்தின் மிகப்பெரிய போர்க்களத்தில்கூடியது. குருக்ஷேத்ரம், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால் ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கெளரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச் செல்ல விரும்பினார்.