KAILASA Library/பகவத்கீதை/எது நன்மை?Sign in
பகவத்கீதை

எது நன்மை?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இராஜ்யசுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல்
என்ற பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்தோம், ஐயகோ!

கையில் ஆயுதம் ஏந்திய கௌரவர்கள், யுத்தத்தில்
எதிர்க்காமலும் ஆயுதம் இல்லாமலும் இருக்கிற
என்னைக் கொல்லுவார்களானால், அதுவே எனக்கு
நன்மையாக இருக்கும்.

துக்கத்தால் மனம் குழம்பிய அர்ஜுனன் இவ்வாறு சொல்லிவிட்டு,
போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டு, தேரின்
பின் பகுதியில் அமர்ந்தார்.

மனித வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் உண்மையான உதாரணம்

peacock feather

அர்ஜுனன் போர்க்களத்தைவிட்டுச் செல்லத் தயாராக இருந்தார். அவர் போர்க்களத்திலிருந்து ஓடி விடுவதற்கே தயாராக இருந்தார். அவருடைய இயல்பான கடமையிலிருந்து தப்பிச் செல்ல இருந்தார்.

அர்ஜுனன் அவர் மனதோடு தொடர்ந்து வாதம் புரிந்து, இப்பொழுது தாம் செய்ய இருக்கும் செயல் முற்றிலும் தீமையானது, தீமையைத் தவிர வேறொன்றுமில்லை என்று அவர் தம்மை நம்பத் தொடங்கிவிட்டார்.

> ஒரு க்ஷத்ரிய வீரர்,
> அதிலும்
> அர்ஜுனனைப்
> போன்ற
> ஒப்புயர்வற்ற
> மாபெரும்வீரர்,
> பயம் என்பதனையே
> அறியாதவர்.

அதனால் அவர் அதில் பங்குகொள்ள
விரும்பவில்லை. அர்ஜுனன் சொல்கிறார்,
"நான் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு,
நிராயுதபாணியாக இருக்கத் தயாராக
இருக்கிறேன். துரியோதனனும் அவரது
வீரர்களும் என்னைக் கொல்லட்டும்."

ஒரு க்ஷத்ரியன் இப்படிச் சொல்வதற்கு
இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்க
முடியும்.

ஒன்று, அவரது செயல் முழு சரணாகதியில்
விளைந்ததாக இருக்க வேண்டும் அல்லது
உச்சக்கட்டக் குழப்பத்தில் ஏற்பட்ட
இயலாமையாக இருக்க வேண்டும்.

ஒரு க்ஷத்ரிய வீரர், அதிலும் அர்ஜுனனைப் போன்ற ஒப்புயர்வற்ற மாபெரும் வீரர், பயம் என்பதையே அறியாதவர், மரண பயமோ அல்லது போரில் காயம்பட்டு விடுவோமோ என்னும் அச்சமோ அவரை அவ்வாறு முடிவெடுக்க கட்டாயப்படுத்தவில்லை.

நான் முன்பே சொன்னதுபோல, அர்ஜுனனுக்குள் இன்னும் முழு சரணாகதி செய்யும் பக்குவமும் நிகழவில்லை; அஹிம்ஸையைக் கடைப்பிடிக்கும் மனப்பக்குவமும் வரவில்லை.

"அவர்கள் என்னுடன் ஒன்றுபட்டு இருப்பதால், அவர்களைக் கொல்லுவதை என்னையே கொல்வது போல் உணர்கிறேன்," என்று சொல்லுமளவிற்கு அவர் ப்ரபஞ்ச விழிப்புணர்வோடு ஒன்றி இருக்கவில்லை.

அவருடைய உறவினர்களைக் கொல்வது என்பது அவரையே கொல்வது போன்றது என்கிற அர்ஜுனனது வாதம், அவர் தம்மை உணர்ந்ததால் ஏற்பட்டவை அல்ல, மாறாக அவை அவரது அஹங்காரத்திலிருந்து உதித்தவை.

அர்ஜுனனின் நம்பிக்கையின்மையும் அவருடைய குழப்பத்தினால் உருவான இயலாமையுணர்வும் நிமிடத்திற்கு நிமிடம் உச்சக்கட்டத்திற்குச் சென்றது. அர்ஜுனன் புத்திசாலியான, தெளிவாக யோசிக்கும் திறன் படைத்த ஒரு மனிதர்தான்.

அவர், தெளிவு என்னும் ஒளியில்
இருந்தே பழக்கப்பட்ட ஒரு மனிதர்தான்.
ஆனால் இப்போதோ அறியாமை எனும்
இருளில் சிக்கிக் கொண்டார். அவர் எங்கே
போய்க்கொண்டு இருக்கிறார் என்று
அவருக்கே தெரியவில்லை.

பெரும்பாலும்
நம்முடைய
வாதங்கள் எல்லாமே
அஹங்காரத்திலிருந்து
உதித்தவைதான்.

க்ஷத்ரிய இளவரசராக அவர் செய்ய
வேண்டிய கடமைக்கும் வேதங்களில்
சொல்லப்பட்டிருக்கும் நல்லொழுக்க
விதிமுறைகளுக்கும் இடையே அவர்
அலைக்கழிக்கப்பட்டார்.

அர்ஜுனன் கவலையிலேயே மூழ்கிவிட்டவராக இருந்தார். அவரது கவலை முழுமையாக இருந்தது. உணர்ச்சி வேகத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவர் கீழேயே அமர்ந்துவிட்டார். அவர் தமது அம்பையும் வில்லையும் கீழே போட்டுவிட்டார். அவ்வாறு அவர் செய்தது அவர் போர்க்களத்திலிருந்து வெளியேறுவதையே குறித்தது.

அர்ஜுனனின் ஏமாற்றம் முழுமையாக இருந்தது. அவர் ஏமாற்றமே வடிவெடுத்ததுபோல் இருந்தார். அவர் தன்னால் அடைய முடிந்த உண்மை நிலையில் இருந்து வெகுதூரத்தில், வெகு தொலைவில் இருந்தார்.

அர்ஜுனன், அவர் காலத்தில் வாழ்ந்த வீரர்களிலேயே மிகச்சிறந்த வீரராக இருந்தவர். அது மட்டுமல்ல, மனிதர்களுள் மிகச்சிறந்த மனிதராகவும் கருதப்பட்டார். அப்பேர்ப்பட்ட சிறந்த வீரரே, தம் உள்தளத்தில் நடந்து

அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர் தேரில்

கொண்டிருந்த கொந்தளிப்பின் காரணமாக மனச்சோர்வின் ஆழத்திற்குள் விழுந்து விட்டார்.

அவர் வளர்க்கப்பட்டவிதம் மற்றும் சமுதாய நல்லொழுக்கம், அவருடைய ஸம்ஸ்காரங்கள் மற்றும் எப்படி அவரது சுற்றத்தாரோடு போர் தொடங்குவது என்று அவருள் எழுந்த மனப்போராட்டம் இவற்றிற்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் அவர் மனநலத்தை நாசமடையச் செய்து அவரை பரிதாப நிலைக்குள்ளாக்கியது.

அவர் இப்பொழுது அவர் ஆயுதங்களை கைவிட்டு தேரிலேயே இடிந்துபோய் உட்காருகிறார்.

அர்ஜுனன் இந்த நிலையில் ஒரு உண்மையான க்ஷத்ரியராக இல்லை.

இப்பொழுது அவர் மனித வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு உண்மையான உதாரணமாக இருந்தார்.

மாயை விரிக்கும் வலையிலிருந்து நம்மைக் காப்பாற்ற வந்தவர்

அர்ஜுனன் சாதாரண மனிதராகச் செயல்பட்டார். இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் அலைக்கழிக்கப்பட்டார்.

அவரை ஆட்கொண்ட விழிப்புணர்வற்ற ஸம்ஸ்காரங்களுக்கும், அவர் செய்யவேண்டிய கடமைக்கும் இடையிலான ஆழ்ந்த போராட்டத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

உன்னதமான ஒரு ஞானியின் உதவியுடன் அவர் அடையப் போகும் தெளிவு நிலையே அவருடைய 'ஞானமடைதலாக' இருக்க முடியும்.

இந்த நிலையில் அர்ஜுனனைச் சூழ்ந்திருக்கும் இருளே மாயை. இந்த மாயை, மனிதர்களின் எல்லா அனுபவங்களிலும் ஆழ்ந்து ஊடுருவி இருக்கும் உண்மையான நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கிறது.

யா மா இதி மாயா ; எது உண்மையில் இல்லையோ, ஆனால் முழுமையான உண்மையைப்போல் தோற்றமளிக்கிறதோ, அதுவே மாயா.

நான், மாயை என்பது ‘உண்மையில் இல்லாதது’ என்று சொல்லும்பொழுது, மாயைக்கென்று தனி ‘இருப்பு’ இல்லை என்பதையே அது குறிக்கிறது. ஆனால் உண்மையைப் போன்றே மாயையும் உண்மையாகவே இருக்கிறது.

அது நிதர்சனத்தை, முடிவான ஸத்யத்தை உள்ளுலக விழிப்புணர்வின் ஸத்யத்தை, உள்ளொளியை, உள் இருக்கும் கடவுள் தன்மையின் ஸத்யத்தை மூடி மறைப்பதனால்தான், மாயா, உண்மை இல்லாதது என்று அழைக்கப்படுகிறது.

ஒருவேளை அர்ஜுனன் கிருஷ்ணரைப்
போல் ஞானமடைந்திருந்தால்,
மாயையின் விளையாட்டிற்குப் பலியாகி
இருக்கமாட்டார். இதுபோன்ற சித்ரவதைக்கு
ஆளாகி இருக்கமாட்டார்.

அல்லது அர்ஜுனன் விழிப்புணர்வு
மலராத துரியோதனனைப்போலவோ,
தமது சகோதரன் பீமனைப்போலவோ
இருந்திருந்தால், கேள்விகளைக் கேட்காமல்
மாயையை அப்படியே ஏற்றுக்கொண்டு
இருந்திருப்பார். அப்போதும் இதுபோன்ற
சித்ரவதைக்கு ஆளாகி இருக்க மாட்டார்.

உண்மையைப்
போன்றே
மாயையும்
உண்மையாகவே
இருக்கிறது.

ஆனால் அர்ஜுனன் புத்திசாலியாக இருக்கிறார். தேடுதல் உடையவராதላል சிறிதளவாவது விழிப்புணர்வைப் பெற்றிருந்தார்.

அவர் ஞானிகளிலேயே தலைசிறந்த ஞானியின் அருகாமையில் இருப்பவர். அவர் தம்மை இந்த மாயையில் இருந்து விடுபடுத்திக் கொள்வதற்காக, தெளிவைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். அர்ஜுனனுடைய அஹங்காரம்தான் அவருள் இந்த மாயையை உருவாக்கியது.

Flute illustration

## எங்கே தேடுகிறீர்கள்?

அர்ஜுனனுடைய சொந்த அடையாளம், சுற்றியிருப்பவர்களோடு அவர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட முறை, அவரது வம்சத்தை அவர்தான் காக்க வேண்டும் என்று அவரே அவருக்குள் ஏற்படுத்திக்கொண்ட தீர்மானம் இவை போன்ற காரணங்கள்தான் அவருக்குள் அந்த மாயையை உருவாக்கி, அவரை சுய நிலையில் இல்லாமலேயே செய்திருந்தது. அவரை அவராக இருக்கவிடாமல் வேறொருவர்போல் நடக்கச் செய்தது.

இவை அனைத்தும்தான் அவர் அங்கு எதைச் செய்வதற்காக வந்திருந்தாரோ, அதைவிட்டுவிட்டு, வேறு எதையோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற சந்தேகத்தை அவருள் உருவாக்கியது.

நாம்
அனைவரும்
இந்த உலகத்திற்கு
எந்த ஓர்
அடையாளமும்
இல்லாமல்தான்
வந்தோம்.

நாம் அனைவரும் இந்த உலகத்திற்கு
எந்த ஓர் அடையாளமும் இல்லாமல்தான்
வந்தோம். நாம் வளர, வளர நம்மை நாமே
விவரிப்பதற்கு, தாய், தந்தை, சகோதரன்,
சகோதரி, சொந்தம், முதலாளி, தொழிலாளி,
சகதொழிலாளி, எதிரி என்றுபலவகையான
அடையாளச் சீட்டுகளைப் பெற்றுக்
கொண்டோம்.

இந்த அடையாளச் சீட்டுகளோடும், அதனைச்
சார்ந்த சூழ் நிலைகளோடும் மிகவும் ஒன்றி
உண்மையில் 'நாம் யார்' என்பதையே
மறந்துவிட்டோம்.

பிறகு அந்தத் திருப்தியை, தவறான இடத்தில் தேடுவதிலேயே நம் வாழ்க்கை போய் விடுகிறது.

ஒரு சின்ன கதை:

மிகுந்த மனச்சோர்விற்குள்ளான ஒருவர், அதற்கான சிகிச்சையைப் பெறுவதற்காக ஒரு மனநோய் மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தார். வித்தியாசமான பாசி மணிகளை அணிந்துகொண்டு, நீளமான முடியோடு, புகைத்துக்கொண்டு, சில இடங்களில் கிழிந்திருந்த கால் சாராயும் அணிந்து இருந்த அவரைப் பார்த்து, அந்த மனநோய் மருத்துவர், "நீ ஒரு ஹிப்பியா?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இல்லை டாக்டர்," என்று பதில் சொன்னார்.

"நீ ஒரு ஹிப்பி இல்லை என்கிறாய். அப்படியானால் உன் முடியும் உன் ஆடைகளும் ஏன் இப்படி இருக்கின்றன?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அந்த வருத்தமான மனிதர் பதிலளித்தார், "அது ஏன் என்று கண்டுபிடிக்கத்தான் டாக்டர், நான் இங்கு வந்து இருக்கிறேன்!"

இப்படித்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். தன்னைப் பற்றி அறிய அந்த ஹிப்பி டாக்டரிடம் சென்றதைப்போல நாமும் ஆனந்தத்தை வெளியுலகில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் நாம் நம் திருப்தியை
வெளியுலகத்தில் தேடுவதற்கு
மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு
இருக்கிறோம். நமக்கு வெளியுலகில்
தேடுவது எப்படி என்பது மட்டுமே தெரியும்.
துரதிருஷ்டவசமாக, நம்முடைய ஆனந்தம்
நம் இருப்புத் தன்மையின் ஆழத்தில்
இருப்பதை அறியாமல், அது வெளியில்
உள்ளதாக எண்ணி நாம் வெளியில் மட்டுமே
தேடிக்கொண்டு இருக்கிறோம்.

நమ్ముள் உள்முகமாகப் பார்த்து அதனை அனுபவிப்பது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளவில்லை. ஆனந்தம் உள்ளிருந்து மட்டுமே வருகிறது. நித்ய ஆனந்தமாக பிரவகித்துக்கொண்டு இருக்கும் ஆனந்தமானது எப்போதும் உள்ளிருந்தே வருகிறது.

நீங்கள் அதை வெளியில் தேட முடியாது. பொருள் சார்ந்த உடமைகள் மூலமாகவோ, சொந்தங்களின் மூலமாகவோ, சுயநல நோக்குடன் செய்யும் தர்மங்கள் மூலமாகவோ ஆனந்தத்தை ஒருபோதும் அடைய முடியாது.

உங்களுக்குள் நீங்கள் உணரும் 'மனமற்ற நிலை'தான் ஆனந்தம்.

Hands playing flute

இழந்த ஆனந்தத்தை மீட்டுத் தருபவர்

peacock feather icon

குழந்தைகளாக இருந்தபொழுது, நாம் ஆனந்தமயமாக இருந்தோம். பசி, தாகம் மற்றும் வலி போன்ற உடல் ரீதியான தொந்தரவுகளின்போது தவிர மற்ற நேரங்களில் வருத்தத்துடன் இருக்கும் குழந்தையை எப்போதாவது நீங்கள் பார்த்ததுண்டா?

ஒரு சிறு குழந்தை எப்போதும் ஆனந்தத்திலேயே திளைத்திருக்கிறது. அது எப்போதும் எதைப் பற்றியாவது அறிந்துகொள்ளும் ஒரு ஆர்வத்துடனும் எப்போதும் ஒருவித தேடுதலுடனும் எப்போதும் சுறுசுறுப்புடனும் சக்தியோடும்தான் இருக்கிறது.

ஆனால் நாம் வளர, வளர அந்த ஆனந்தத்திலிருந்து நம்மை திசை மாற்றிக் கொள்வது எப்படி என்பதை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம்.

நாம் நமது பெரியவர்களிடமிருந்தும், நம் ஆசிரியர்களிடமிருந்தும், நம்மைக் காட்டிலும் அதிக அனுபவம் பெற்றவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறோம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆனந்தத்தை உணராமல் இருப்பது எப்படி என்பதையே கற்றுக்கொள்கிறோம்.

ஆனந்தத்தை உணருவதை எப்படி நாம் நிறுத்தினோமோ, அதுபோலவே, எது ஆனந்தத்தை நிறுத்துகிறதோ, அதை நிறுத்தி விடுவதற்கும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனந்தத்தை
உணருவதை
எப்படி நிறுத்தினோமோ,
அதுபோலவே,
ஆனந்தத்தை
எது நிறுத்துகிறதோ,
அதை
நிறுத்தி விடுவதற்கும்
நம்மால் கற்றுக்கொள்ள
முடியும்.

நமது ஆனந்தமயமான இயல்போடு மீண்டும்
நம்மை இணைத்துக் கொள்வது எப்படி
என்பதனையும் நம்மால் கற்றுக்கொள்ள
முடியும்.

உண்மையில் 'நாம் யார்' என்ற விழிப்புணர்வை
அடைவது எப்படி என்பதையும் நம்மால்
மீண்டும் கற்றுக்கொள்ள முடியும்.

இந்த மாதிரியான ஒரு வழிமுறையைத்தான்
அர்ஜுனன் கடந்துகொண்டு இருக்கிறார்.
அவரது ஸம்ஸ்காரத்தால், அவரது

உள்ளுலக ஆனந்தத்தின் விழிப்புணர்வு
தொலைந்துபோனது. அதனால் அவர்
ஆழமானதொரு ஏமாற்றத்தில் இருந்தார்.

அர்ஜுனன், குருவின் ஸாந்நித்யத்தில், மீண்டும் கற்றுக்கொள்ளும் அந்தச் செயல்முறையை, மனமாற்றத்திற்கான வழிமுறையைத் தொடங்க இருக்கிறார்.

இந்தப் பதினெட்டு அத்தியாயங்களின் வாயிலாக குருவானவர் தம் சீடரை மிகவும் கவனத்தோடு அழைத்துக்கொண்டு செல்லும் அந்த வழிமுறையை நாம் அறிந்துகொண்டு, அதை ச்'ரத்தையோடு பின்பற்றினால், நாமும் அந்த வழிமுறையை உணர முடியும்.

ஆதிசங்கரர் மிக அழகாகச் சொல்கிறார்.

“பகவத்கீதையின் ஒரு துளியை மனத்தில் பதிய வைத்தாலும், கங்கை நதியின் ஒரு துளி நீரைக் குடித்தாலும், கிருஷ்ணரைப் போன்ற ஒரு பெரும் ஞானியை நீ ஒருதடவையேனும் நினைத்தாலும் போதும், நீ மரணத்தை ஒருபோதும் சந்திக்கத் தேவையில்லை.”

கேள்வி: ஸ்வாமிஜி, ஒரு போரின் கதை நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளில் எப்படி உதவும்?

மனித வரலாற்றில் ஆயிரக்கணக்கில் இல்லை என்றாலும் நூற்றுக்கணக்கில் போர் நடந்திருக்கும். அதில் பல விரிவாகத் தொகுக்கப்பட்டும் இருக்கின்றன.

ஆனாலும் அவை மற்ற போர்களை நிறுத்தவும் இல்லை; மனிதகுலம் கற்றுக்கொள்ளவும் உதவவில்லை. எப்படிப் பகவத்கீதை மட்டும் மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியும்?

மஹாபாரதம் ஒரு போரின் கதை மட்டும் அல்ல. அது போரில் ஈடுபட்ட பலரின் வாழ்வைப் பற்றிய கதை. இந்தப் போரே, கௌரவர் மற்றும் பாண்டவர் கதைகளுக்குச் சார்புள்ள ஒரு நிகழ்வுதான்.

இந்தப்போர் எந்தக் காரணத்தினால் உருவானது, இதை எப்படித்

குருவின்
ஸாந்நித்யத்தில்
குழந்தைபோன்று
ஆர்வத்துடன்
கற்றுக்கொள்ளும்
செயல்முறையை,
மனமாற்றத்திற்கான
வழிமுறையைத்
தொடங்க முடியும்.

தடுத்திருக்க முடியும், மிக முக்கியமாக, இது ஏன் தடுக்கப்படவில்லை போன்றவைதான் இந்த இதிகாஸத்திலிருந்து நமக்கு கிடைக்கும் அனுபவப் படிப்பினைகள்.

பல போர்களைப் பற்றிய விளக்கங்கள் சரித்திரச் சான்றாக, ஆவணங்களாக எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றிற்கு முற்றிலும் மாறாக, பகவத்கீதை இருக்கிறது.

தெய்விகத்தின் வெளிப்பாடு, தம்முடைய மனித அம்சத்தை அதற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு நிச்சயம் அது போர் செய்தே ஆக வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளச் செய்கிறது என்பதைப் பற்றியது.

> அர்ஜுனன்
> ஞானமடைந்திருந்தால்,
> மாயையின்
> விளையாட்டிற்குப்
> பலியாகி
> இருக்கமாட்டார்.

பகவத்கீதை போரைப் பற்றியது அல்ல; நம் முன்னே என்ன சூழ் நிலைகள், சந்தர்ப்பங்கள் இருந்தாலும் சரி, எப்படி ஒருவர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியது.

நம் வாழ்வின் சம்பவங்களை நம்மால்
எப்போதும் தேர்ந்து எடுத்துக் கொண்டிருக்க
முடியாது. ஆனால் நாம் விழிப்புணர்வுடனும்
ஆன்மீக முதிர்ச்சியுடனும்
இருந்தோமேயானால், அவற்றைத்
தேர்ந்தெடுத்து வாழ முடியும்.

கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு, "எனது வார்த்தைகளே ஸத்யம்," என்று அளிக்கும் வாக்குறுதியில் இருந்தே பகவத்கீதையின் சாரம் வெளிப்படுகிறது.

இதுவே தெய்வத் தன்மை மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தது. கிருஷ்ணரைப்போல ஒருவர் இந்த உலகில் வாழ்ந்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் அதனை நம்பாமல் இருக்கலாம். ஆனால் காலங்காலமாக பல ஞானிகள் கிருஷ்ணரால் விளக்கப்பட்ட இந்த ஸத்யங்களைத் தியானித்துக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் தங்களது சொந்த அனுபவத்தினால் அந்த ஸத்யங்களை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

எனது உள்ளுலக அனுபவத்தால் உணர்ந்த பிரபஞ்ச ஸத்யங்களின் அடிப்படையில், நான் இந்த ஸத்யங்களை உறுதிப்படுத்துகிறேன்.

பகவத்கீதையின் ஒவ்வொரு வார்த்தையுமே ஸத்யத்தை உறுதிப்படுத்துகிறது.

பகவத்கீதையின் ஸத்யம் பல நிலைகளில் நிலைத்திருக்கிறது. நீங்கள் அதை ஒரு மொழிபெயர்ப்பாகவோ அல்லது ஒரு விளக்க உரையாகவோ படித்தாலும் அது மேலோட்டமானதுதான்.

அது ஸ்தூல நிலையில் நிகழும் ஒரு புரிதலாக மட்டுமே இருக்கும். ஆனால் மேலும் பல்வேறு சக்தி நிலைகளில் பகவத்கீதை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

உன்னதமான நெருங்கிய குரு-சிஷ்ய உறவின் மூலமாக மட்டுமே இவற்றை வழங்க முடியும்.

எந்த ஒரு தனிமனிதருடைய மனமாற்றமும் இரண்டு விஷயங்களைச் சார்ந்தது.

முதலாவதாக, அந்தத் தனிமனிதர் தாம் மாற வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

நாம் மாற்றமடைய விரும்பவில்லை என்றால் எந்த குருவும் எந்தப் புத்தகமும், ஏன் எதுவுமே நமக்கு உதவ முடியாது. நாம்தான் மாறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் நம்முள் மாற்றம் நிகழ்கிறதா, நிகழவில்லையா அல்லது நாம் மாறுகிறோமோ, இல்லையா என்று கவலை கொள்வது இல்லை; அது நம்மைப் பொறுத்ததுதான்.

இரண்டாவதாக, நாம் நிகழ்காலத்தில், இந்தக் கணத்தில் இருந்தால் மட்டுமே, அந்த மாற்றம், அந்த ரஸவாதம் நிகழ முடியும்.

மனமாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்பில் எதிர்காலத்தைப் பற்றிய கனவிலும் இறந்தகாலத்தைப் பற்றிய ஏமாற்றத்திலும் நீங்கள் வாழ முடியாது.

அதனால்தான் தனிமனித மாற்றத்திற்கு த்யானம் மிகச்சிறந்த, சக்திவாய்ந்த கருவியாக இருக்கிறது.

உண்மையில், ஞானமடைந்த குருவுக்கு அடுத்த படியாக த்யானம் மட்டுமே சுயமாற்றத்திற்கு உதவும் ஒரே கருவி. நமக்காக வேறு யாரும் த்யானம் செய்ய முடியாது. நமக்காக நாம்தான் த்யானம் செய்ய வேண்டும். பயிற்சி செய்தால், த்யானம் நம்மை உடனடியாக நிகழ்காலத்திற்கு அழைத்து வந்துவிடும்.

நம்மால் மாற்றமடைய முடியும்;
விடுதலையடைய முடியும்; ஞானமடையவும்
முடியும்.

அடிமைப்பழக்கம் நமது விழிப்புணர்வைக் குறைக்கிறது. ஒருவர் அடிமைப் பழக்கத்திற்குள்ளாகும்பொழுது, மனம் மீண்டும் மீண்டும் அதே அனுபவத்தை நாடுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அதே அனுபவத்தை, அதே பலனை அடைய வேண்டுமானால், அடிமைப் பழக்கத்திற்குக் காரணமாக இருக்கும் அந்தப் பொருளை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதன் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அடிமைப்பழக்கம் நம்முடைய விழிப்புணர்வைக் குறைப்பதால், நம்முடைய முயற்சிகளுக்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியதாகி விடுகிறது. ஆனால் த்யானம் நம் விழிப்புணர்வை உயர்த்தி, மிகக் குறைவான முயற்சியில் ஆழமான பலன்களைப் பெற வைக்கிறது.

த்யானம் நம் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. நாள்கள் செல்லச் செல்ல குறைந்த நேரத்தில் அதே போன்ற ஆழமான பலன்களைப் பெற நேரிடுவதைக் காணலாம்.

அந்த அனுபவத்தின் வாயிலாக, நம்முடைய வாழ்நாள்கள் விழிப்புணர்வுடனும் ஆனந்தத்துடனும் கடந்து செல்வதை நம்மால் உணர முடியும்.

பகவத்கீதையே ஒரு த்யானம்தான். அதன் ஒவ்வொரு ஸ்லோகமும் நம்மால் தியானிக்க முடிகிற ஸூத்ரமே. இந்த ஸ்லோகங்கள், இந்த ஆழ்ந்த ஸத்யங்கள், த்யானத்தின் போது, நம்மை ஆழமான உள்ளுலக விழிப்புணர்விற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

> தனிமனித
> மாற்றத்திற்கு
> த்யானம்,
> ஒரு மிகச்சிறந்த,
> சக்திவாய்ந்த
> கருவியாக
> இருக்கிறது.

இந்த ஸூத்ரங்களை ஆழ்ந்து தியானிக்க தியானிக்க, அவை நமக்குள் நிகரற்ற உருமாற்றத்தை நிகழ்த்திவிடும். வேறு எதுவும் இந்த வகையான மாற்றத்தைக் கொடுக்க முடியாது.

அதனால்தான் ஆதிசங்கரர், "கீதையை வெறுமனே வாசிப்பதுகூட, நமக்கு ஜீவன்முக்தியைத் தந்திடும்!" என்று குறிப்பிடுகிறார்.

இந்த இதிஹாசமே, நம்முடைய உள்ளுலகப் போரைப் பற்றிய ஒரு உருவகம்தான்.

இது, நமது ஆசை மற்றும் அச்சத்திற்கும் எதிர்மறை மனப்பாங்கு மற்றும் நேர்மறை மனப்பாங்கிற்கும் இடையே நிகழும் போர்.

பல வழிகளில் பார்த்தால், நாம் சமூக அமைப்புக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வாழத் தொடங்கிய நொடியில் இருந்தே போர் புரியும் மன நிலையில்தான் இருக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, எப்போதும் நாமே நமக்கு எதிராகச் சண்டையிட்டுக்கொள்கிறோம். நமக்கு நாமே முரண்படுகிறோம்.

உள்ளுலகத்திலும் வெளியுலகத்திலும் நடக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு கொண்டாட நமக்குத் தெரிவதே இல்லை.

நாம், நமது வாழ்க்கையே புனிதமானதுதான், நமது இயல்பே ஆனந்தமாக இருப்பதுதான் என்பதை இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை.

அதனால்தான் நம் வாழ்க்கையில்
நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் ஒரு
வரையறைக்குள்கொண்டு வருவதற்கும் ஒரு
ஒழுங்கு முறைக்குள்கொண்டு வருவதற்கும்
போராடுகிறோம். அதன்மூலம் நாம்
வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவே
இருக்க முடியும் அல்லது குறைந்த
பட்சம் துக்கமில்லாமலாவது இருக்க
முடியும் என்ற நம்பிக்கையை நமக்குள்
வளர்த்துக்கொள்கிறோம். ஆனால் இப்படிச்
செய்வதன்மூலம் நமக்கும் மற்றவர்களுக்கும்
துக்கத்தையும் குழப்பத்தையுமே நாம்
வரவழைத்துக்கொள்கிறோம்.

> நம்முடைய ஆனந்தம்
> நம் இருப்புத்
> தன்மையின்
> ஆழத்தில்
> இருப்பதை அறியாமல்,
> அது வெளியில்
> இருப்பதாக எண்ணி
> நாம் வெளியில்
> தேடிக்கொண்டு
> இருக்கிறோம்.

மஹாபாரதம், இந்த உள்ளுலகப் போரின் கதையே. அதனால்தான் இந்த மாபெரும் வெளிப்பாடான பகவத்கீதை இன்றும் நம்மை ஆழமாகத் தொடுகிறது; நம்முள் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இது அர்ஜுனனின் கதை, ஆனால் அது நம்முடைய கதையும்கூட!

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அர்ஜுநவிஷாதயோகோ நாம ப்ரதமோSத்யாய: ||

இது ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய'அர்ஜுன விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம்.

நித்யானந்தம்

பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்கீதையின் பின்புலமாக இருக்கும் ஸத்யத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மஹரிஷி வேத விஞ்ஞான விச்வ வித்யாபீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத்கீதையின் ஸ்லோகங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஸத்யங்களை அடிப்படையாகக்கொண்ட த்யான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. த்யானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

த்யானம் செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

த்யானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

த்யானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மூளை செயல்பாட்டோடு இணைந்து ஒருமுகப்படும்பொழுது ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை உணரும் தன்மையும் முழுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. மேலும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

த்யானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

7000 மக்கள் (ஆராய்ச்சியின்பொழுது உலக மக்கள் தொகையில் √1 சதவீதத்தின் அடுக்கு) இணைந்து கூட்டு த்யானம் செய்ததால், உலக அளவில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் பெருமளவில் குறைந்தன.

த்யானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், ‘பகவத்கீதை மிக உயர்ந்த ஸத்யத்தை மனித குலத்திற்கு்கொண்டு சேர்க்கிறது’ என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வேத நூலின் ஸத்யத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் சேவையை மிகுந்த நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்: எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை
1. பரிபூரண ஞானம்.
2. பரிபூரண வைராக்கியம்.
3. பரிபூரண பலம்
4. பரிபூரண கீர்த்தி
5. பரிபூரண தேஜஸ்
6. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)

புருஷோத்தமன் : மேலான புருஷன்

மதுஸூதனன் : மது என்ற அரக்கனை அழித்தவர்

மாதவன் : லக்ஷ்மிக்குத் தலைவர்

யாதவன் : ‘யது’ குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்

யோகேச்வரன் : யோகத்திற்குத் தலைவர்

வாஸுதேவன் : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்

வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்

விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்

ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்

ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்

ஹ்ருஷீகேசன் : இந்திரியங்களுக்குத் தலைவர்

அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்

கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்

கிரீடி : கிரீடம் தரித்தவர்

குடாகேசன் : தூக்கத்தை வென்றவர்

குருநந்தனன் : ‘குரு’ வம்சத்தில் பிறந்தவர்

கௌந்தேயன் : குந்தியின் மகன்

தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.

பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்

பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்

பார்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்

பாரதன் : பரத குலத்தில் பிறந்தவர்

ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்

குரு வம்சம் - மாற்றாந்தாயின் பிள்ளைகள் மரபு வரைபடம்

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி)
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்: அரசர் துருபதனின் மகன்
சி'கண்டி: சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர்
யுயுதானன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி போஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை'ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசர்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்: யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரர்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பீமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்: ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்:அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பீஷ்மர்:கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்:கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகர்ணன்:கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்:பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்:துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்'ருபர்:கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்:அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.)
ஸௌமாதத்தி:பகிர்களின் அரசர்
துச்'சாதனன்:கௌரவ சகோதர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்:கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மூத்தவர்