KAILASA Library/பகவத்கீதை/அதிசய முடிச்சுகள்Sign in
பகவத்கீதை

அதிசய முடிச்சுகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna playing flute

1.40 குலம் அழிந்தால் என்றென்றும் நிலைத்திருக்கும் குல தர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.

1.41 அதர்மம் மிகும்பொழுது குலப்பெண்கள் களங்கப்படுகிறார்கள். வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவரே! பெண்கள் தூய்மை கெடும்போது, சமுதாயப் பிரச்சினைகள் உண்டாகிறது.

1.42 சமுதாயப் பிரச்சினைகள் அதிகமாகும்பொழுது, குலத்தோர்க்கும் அதனை அழித்தோர்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து விடுகிறார்கள்.

1.43 குல நாசகர்கள் செய்யும் கேடுகளால் எல்லா ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிக்கப்படுகின்றன.

1.44 ஜனார்தனா! குல தர்மத்தை அழித்தவர் நரகத்திலேயே எப்போதும் வசிக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

## தீர்வுகள் அன்றே வழங்கப்பட்டுவிட்டன

இப்பொழுது அர்ஜுனன் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார். அவருடைய வாதங்கள் அவருக்கே பலஹீனமாகத் தோன்றியது. இது கிருஷ்ணரிடம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது நமக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்; இச்செயல் நம்மை அதிசயிக்கச் செய்யலாம்.

தம்முடைய வாதம் கிருஷ்ணரிடம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்த அர்ஜுனன் தம் அடுத்த முயற்சியாக தம்முடைய வாதத்தினை விரிவுபடுத்தினார். அவருடைய அந்த வாதம், இந்தப் போரின் சோகமான முடிவுகள் எதிர்கால வம்சத்தினரையும் குரு வம்சத்தினரையும் எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை விளக்குவதாக இருந்தது.

அர்ஜுனன், தம்முடைய அழிவுப்பூர்வமான செயலின் கொடுமை, தம் ராஜ வம்சத்தின் எதிர்கால சந்ததியினரை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சமூக நீதி நூல்களின் மூலம் மேற்கோள் காட்டி கிருஷ்ணரிடம் விவரித்தார்.

இந்த உயர்ந்த குலத்தின் அழிவு, இந்தச் சமூகத்தை இதுநாள்வரை நாகரித்தோடும், நல்லொழுக்கத்தோடும் பிணைத்துவைக்க உதவிய சடங்கு, சம்பிரதாயங்கள் மீதுள்ள நம்பிக்கையையே இழக்கச் செய்துவிடும் என்கிறார்.

அதன் பிறகு ஒழுக்கமில்லாத மற்றும்
நேர்மையற்ற செயல்களைப் பற்றி
விவரிக்கலானார்.

குடும்பத்தில் இருக்கும் பெண்கள்,
கற்பிழப்பார்கள் மற்றும் மற்ற ஜாதியினரோடு
கலப்பது தொடரும். அதனால் அவர்களுக்குப்
பிறக்க இருக்கும் குழந்தைகளும் கலப்பின
ஜாதியினராக உருவாக நேரிடும்.

இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அர்ஜுனன் சொல்கிறார்.

> குடும்பப் பழக்க
> வழக்கங்களை
> அழிப்பவர்கள்,
> புனிதமான
> பழக்கவழக்கங்களையும்
> அழித்து விடுவார்கள்.

இதுபோன்று குடும்பப் பழக்க
வழக்கங்களை அழிப்பவர்கள், புனிதமான
பழக்கவழக்கங்களையும் அழித்து
விடுவார்கள். அது குடும்பங்களை மாசுபட்ட
கலப்பின வாரிசுகளைக்கொண்டதாக
மாற்றிவிடும். இதுபோன்று நடப்பதற்குக்
காரணமாக இருந்தவர்கள் நரகத்தைத் தவிர
வேறு எங்கும் செல்ல முடியாது.

அர்ஜுனன் சொல்வதை எளிதாகப்
புரிந்துகொள்ள வேண்டுமானால், ஹிந்து
மதத்தில் எப்படியெல்லாம் ஜாதி முறைகள்
உருவாகின என்பதை முதலில் புரிந்துகொள்ள
வேண்டியது மிக அவசியமாகிறது

> ஞானமடைந்த குருவின்
> ஸாந்நித்யதில் வாழும்
> குழந்தைகளின்
> குணாதிசயம் மற்றும்
> வெளிப்பாடு ஆகியவை
> குருவாலேயே
> படிப்படியாகக்
> கவனிக்கப்பட்டன.

பழமையான வேத கால குருகுல கல்வி முறையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஐந்து வயது ஆனவுடன், அவர்களை ஒரு ஆன்மீக குருவின் அரவணைப்பில் விட்டு விடுவார்கள்.

குருவானவர் அந்தக் குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் மற்றும் குருவாகவும் இருந்து அவர்களை வளர்ப்பார். ஞானமடைந்த குருவின் ஸாந்நித்யத்தில் வாழும் குழந்தைகளின் குணாதிசயம் மற்றும் வெளிப்பாடு ஆகியவை அவராலேயே படிப்படியாகக் கவனிக்கப்பட்டன.

இந்தக் காரணிகளையும் மற்றும் உடல் மலர்ச்சி பெறும் முன் அவர்களுக்குள் நிகழ்ந்த ஆன்மீக அனுபவங்களையும் கொண்டுதான் அந்தக் குழந்தைகளுக்கு ஸந்யாஸபயிற்சியை அளிப்பதா அல்லது க்ரு'ஹஸ்த வாழ்க்கைக்கான பயிற்சியை அளிப்பதா என்ற முடிவெடுக்கப்பட்டது.

முனிவரும் சீடர்களும்

அந்தக் குழந்தைகளின் இயற்கையான
குணமும், திறமைகளுமே ஜாதிப்பிரிவுகள்
வர்ணாச்'ரமம் உருவாவதற்குக்
காரணமாயின. இந்த முறையில்தான்
ப்ராஹ்மணர் (அர்ச்சகர்/ஆச்சாரியர்கள்),
க்ஷத்ரியர் (அரசர்கள்/போர்வீரர்கள்),
வைச்'யர் (வியாபாரிகள்/வணிகர்கள்)
மற்றும் சூ'த்ரர்கள் (விவசாயம்/சேவை)
என்ற நான்கு பெரும்பிரிவுகளும்
உருவாகின.

மொத்த
கீதையின்
சாரமும்
நிகழ்காலத்தோடு
தொடர்புகொள்வதைப்
பற்றியது.

இந்த அளவிலான புரிதல் நமக்குள்
நிகழ்ந்தாலேபோதும், கீதையில்
சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்கள்
ஒவ்வொன்றும் நமக்குள் சுய
உருமாற்றத்தையே நிகழ்த்திவிடும். கீதையில்
சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஸ்லோகமும்
ஒரு ஸூத்ரம் என்பார்கள்.

ஒவ்வொரு ஸூத்ரமுமே உங்களின் ஜீவன்வரை
ஆழ்ந்து வேலை செய்து உங்களை
உருமாற்றம் அடையச் செய்யும் த்யான
நுட்பமாக விளங்குகிறது.

கீதையின் மொத்தச் சாரம்... நிகழ்காலத்தோ டு தொடர்புகொள்வதைப் பற்றியதுதான். இப்படித்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குள் விழிப்புணர்வை வரவழைக்கிறார்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கீதையை தாகீ என்பார். த்யாக் என்னும் வார்த்தையின் திரிபுதான் தாகீ, இதன் பொருள் ‘தியாகம்’ அல்லது சரணாகதி அடைதல் என்பதுதான்.

கீதை நமக்களிக்கும் செய்தி, இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத்திற்குச் சரணடையச் செய்வதைப் பற்றியது.

பிரிவினைகள் பிறப்பால் அல்ல குணத்தின் பிரிவால் வருவது

வேத கால குருகுல கல்வி முறை, குழந்தைகளின் பெற்றோர்கள் ப்ராஹ்மணரா அல்லது வைச்யரா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரு குழந்தையின் இயற்கையான திறமையும் புத்தியும் வேத நூல்களைக் கற்பதில் வெளிப்படுமானால், குருவானவர், அந்தக் குழந்தைக்கு ஒரு ப்ராஹ்மணர் ஆவதற்கான பயிற்சியை அளிப்பார்.

பெற்றோர்கள் என்ன குலம் என்பதையெல்லாம், குருவானவர்பார்ப்பதில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழு வயதிலேயே காயத்ரி மந்த்ரம் கற்றுக் கொடுக்கப்படும். இந்த மந்த்ரம், அவர்களுடைய இயல்பான புத்திசாலித்தனம் மலருவதற்கு அனுமதிக்கிறது.

ஆன்மீகப் பாதையில் செல்லும் திறன்
பெற்று இருப்பவர்களும் அந்தத்
திறமைகளை சுய முன்னேற்றத்தின்
மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும்
யாரெல்லாம் வெளிப்படுத்துகிறார்களோ,
அவர்களுக்கு வேதங்களைக் கற்பதில் பயிற்சி
அளிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு உலகியல் வாழ்க்கைக்குத் தேவையான கலை மற்றும் அறிவியல் சார்ந்த கல்வியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனால்தான் அவர்களால், ஒரு முதிர்ச்சி அடைந்த, ஒருமைப்பட்ட குணாதிசயத்தோடு உலக வாழ்க்கையில் மீண்டும் நுழைய முடிந்தது.

ஒருவர்
ஆன்மீக வாழ்வை
வாழ முடிவு
செய்யும்பொழுது
தன்னை
ப்ராஹ்மணன் என்று
சொல்லிக்கொள்ளும்
உரிமையும் தகுதியும்
பெறுகிறார்.

இப்படித்தான் ஒவ்வொரு ஜாதி முறைகளுமே தோன்றின. இந்திய வேத காலாச்சாரத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய இங்கிலாந்தின் 'கில்ட் அமைப்பு' (Guild System) இந்த வேத கலாச்சார ஜாதி அமைப்பு முறையை ஒத்தே இருந்தது.

இந்த முறைகள் இங்கிலாந்தின் தொழில்புரட்சிக்கு வெகுவாக உதவிபுரிந்ததாகவும் அது இங்கிலாந்தை ஒரு வலிமை மிகு அதிகார குடியரசாகவே மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

காலப்போக்கில், இந்த ஜாதிஅமைப்பு முறையே மனிதனின் பேராசையால் சிதைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு யாரெல்லாம் பொறுப்பான வேலையில் பெரிய பதவியில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்களே அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.

ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் அதிகமாக மதிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஜாதியின் தகுதியையே, தங்களின் பிறப்புரிமையாகக் கருதினார்கள். அதையே தங்கள் குழந்தைகளுக்கும் வழங்க முடிவெடுத்தார்கள்.

வேதங்கள் இத்தகைய முறைகளை அங்கீகரிக்கவில்லை.

ப்ராஹ்மணருக்கே உரிய தன்மையும் கூர்மையான புத்திசாலித்தனமும் இல்லாத ஒரு ப்ராஹ்மணருடைய மகன், "தான் ஒரு ப்ராஹ்மணன்," என்று சொல்லிகொள்ளும் உரிமையும் தகுதியும் இழந்து விடுகிறார். ஒரு சூத்ரரின் மகன், ஸூக்ஷ்ம அறிவையும் வேத நூல்களைக் கற்கும் திறமையையும் வளர்த்துக்கொண்டு, ஆன்மீக வாழ்வை வாழ முடிவு செய்தால் தம்மை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமையும் தகுதியும் பெறுகிறார். இதுவே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்கள்.

உங்களின் உள்ளுலகம்

விழித்தெழுவதற்கான நுட்பம்

ஜாதிக் கலப்பினம் பற்றிய அர்ஜுனனின் சந்தேகங்களுக்கு வேதத்தில் சான்றோ அல்லது அடிப்படையோ எதுவும் இல்லை! எந்த பாரம்பரியமிக்க தம்முடைய குரு பரம்பரையையே அழிந்துவிடும் என்று அர்ஜுனன் நினைத்தாரோ, அந்தப் பரம்பரையிலேயே ஜாதிக்கலப்பினம் இருந்ததற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

அவருடைய கொள்ளுப் பாட்டனாரான ஸந்தனு மோகவயப்பட்டு மணந்த அவரது கொள்ளுப்பாட்டி ஸத்யவதி, ஒரு மீனவரின் மகள். அர்ஜுனன்கூட பிறப்பால் க்ஷத்ரிய குலம் இல்லாதவர்களை மனைவிகளாகக் கொண்டிருந்தார்.

அர்ஜுனன் சடங்கு சம்பிரதாயங்களை நல்லொழுக்கம் மற்றும் கற்புடன் தொடர்புபடுத்திப் பேசுவது, ஏதோ குழப்பத்தின் பிடியிலிருந்து பேசுவதுபோலவே இருந்தது.

மக்கள், சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாதபொழுது, பெண்கள் கற்பிழப்பார்கள் என்கிறார். அவருடைய தர்க்க அறிவு சிதைந்திருந்தது.

বেদங்களில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சடங்கு
சம்பிரதாயங்களும் ஒருவருடைய உள்ளுலக
விழிப்புணர்வின் வெளிப்பாடுகளாகவே
இருக்கின்றன. ஒருவர் விழிப்புணர்வுடன்
இருக்கும்போது மட்டுமே அவை
உபயோகமானதாக இருக்கும்.

சடங்கு சம்பிரதாயங்களைக்
கண்மூடித்தனமாகச் செய்வதினால்
மட்டுமே, ஒருவர் விழிப்புணர்வை
அடைந்துவிட முடியாது. பெரும்பாலான
மக்கள் பிரார்த்தனை செய்யும் போதும்,

বেদங்களில்
சொல்லப்பட்ட
ஒவ்வொரு சடங்கு
சம்பிரதாயங்களும்
ஒருவருடைய
உள்ளுலக
விழிப்புணர்வின்
வெளிப்பாடுகளே!

ஜபமாலையை உருட்டிக்கொண்டே மந்த்ர
உச்சாடனம் செய்யும்போதும, மனத்தில்
வேறு எதையோ கற்பனை செய்துகொண்டு
இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அவரது நாவில் இருப்பது கடவுளின்
பெயர். ஆனால் மனத்தினில் ஓடுவதோ
கடையில் வாங்க வேண்டிய பொருட்களின்
பட்டியல்!

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும் உரிமைகளை தங்களிடமே வைத்துக்கொண்டு, அதன் மூலம் பணத்தையும் அதிகாரத்தையும் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட மதத்தைப் பற்றியும் அதன் புரோஹிதத்துவத்தைப் பற்றியும் அர்ஜுனன் குரல் எழுப்புகிறார். அவர்கள் சடங்கு சம்பிரதாயங்களையும் அதைச் செய்ய தங்களுக்கு இருக்கும் தனி உரிமையையும் பொதுமக்களை அடக்கி ஆளும் ஒரு துருப்புச் சீட்டாகவே உபயோகப்படுத்துகிறார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மதத்திலும் தாங்கள் மட்டுமே கடவுளிடம் பேசும் தகுதிபெற்ற இடைத்தரகர்கள் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, மதகுருமார்கள் தங்களுக்கென்று ஒரு தனிப்பிரிவை உருவாக்கினார்கள்.

அர்ஜுனன், முன்னோர்களை வழிபடும் முறையைப் பற்றிப் பேசும்பொழுது, கலப்பின ஜாதியினர் தங்கள் குலத்தின் முன்னோர்களுக்குப் பிண்டம் வைக்கும் தகுதியை இழந்து விடுவதாகச் சொல்கிறார்.

இதனால் அவர்களது ஆத்மா மரணமடைந்த பிறகும் நிம்மதி இழந்து அலைந்து திரியும்.

காலம் காலமாக நிலவி வரும் இந்தக் குழப்பத்தை அர்ஜுனன் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு எடுத்துரைக்கிறார். மனித குலத்தின் சார்பாக அவர் தொடர்ந்து வினாக்களை எழுப்பி விடைகளைத் தேடுகிறார். இந்தக் குழப்பம் அர்ஜுனனுக்கானது மட்டுமல்ல, மொத்த மனித குலத்திற்குமானது.

எந்த முன்னோர்களின் ஆத்மாவும் நாம் சாந்தப்படுத்துவதற்காகக்

காத்துக்கொண்டு இருப்பதில்லை. தம்மை
உணர்ந்த ஆத்மாவாக இருக்குமானால்,
முடிவில்லா அந்த ப்ரபஞ்ச சக்தியோடு
கலந்துவிடும்.

இல்லையென்றால் மூன்றே க்ஷணத்தில்
அது மறுபிறப்பு எடுத்துவிடும். ஆத்மாக்கள்
நாம் சாந்தப்படுத்துவதற்காக ஒருபோதும்
சுற்றிக்கொண்டு இருப்பதில்லை.

நாம் சாந்தப்படுத்தவில்லையென்றால் அது ஒன்றும் நரகத்திற்குச் சென்றுவிடாது.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டதுபோல நரகம் என்றோ சொர்க்கம் என்றோ எதுவும் கிடையாது. சொர்க்கம், நரகம் எல்லாமே நம் மனத்தில்தான் உள்ளது. அவை புவியியல் ரீதியானது அல்ல. நம் மனவியல் ரீதியானது.

நாம் மனச்சோர்விலும் குற்ற உணர்ச்சியிலும் துன்பப்படும் நிலையிலும் இருக்கும்போது நரகத்திலேயே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,

நாம் அன்பையும் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் நன்றியுணர்ச்சியையும் வெளிப்படுத்தும் போது சொர்க்கத்திலேயே இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

நம்முள்ளிருக்கும் தெய்வீகத்தை உணராதிருப்பதே நாம் செய்யும் ஒரே பாவம்

நாம் வாழும்போதே ஒவ்வொரு நாளும், ஒவ்வொருமணி நேரமும், ஒவ்வொரு கணமும் சொர்க்கம் மற்றும் நரகத்தின் வழியாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறோம்.

உண்மையில், சொர்க்கம் நரகம் பற்றி உணர, நாம் மரணம்வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

மதங்களும் மதகுருமார்களும்தான் சொர்க்கம், நரகம் என்ற கருத்துகளையும் உருவாக்கினார்கள். மக்கள் மனத்தில் குற்றவுணர்வை விதைக்கவும் மற்றவர்களை ஆதிக்கம் செய்யவும் மட்டுமே இதை உருவாக்கினார்கள்.

அவர்கள்தான் 'பாவம்' எனும் கருத்தையும் உருவாக்கினார்கள். உண்மையில், ஆன்மீகத்தில் பாவம் என்பதே இல்லை. 'பாவம்' இருக்கிற இடத்தில்தான் புண்ணியமும் இருக்கும். அதுதான் 'தாவோ'வின் கொள்கையும்கூட.

தீமை இல்லாமல் நன்மை இல்லை. நன்மை இல்லாமல் தீமை இல்லை.

நம்முடைய ஒரே பாவம், நம் செய்யும் முதல் பாவம், நம்முள் இருக்கும் 'தெய்வீக'த்தை அறியாமல் இருப்பதே!

அர்ஜுனன் ஒன்றும் முட்டாள் இல்லை. இதையெல்லாம் அவர் சரியாகத்தான் புரிந்துகொண்டு இருக்கிறார். இருந்தும் ஒன்றும் அறியாதவர்போல், குழப்பமடைந்தவர்போல் இந்தச் சந்தேகங்களை எல்லாம் கேட்கிறார்.

மனித சமுதாயத்தின் மேல் இருக்கும் இரக்கத்தின் பேரில் அர்ஜுனன் இந்தச் சந்தேகங்களை விரிவாகக் கேட்கிறார். இறைவனாகிய கிருஷ்ண பரமாத்மாவின் பதில்களால் நாம் அனைவரும் நன்மை அடைவதற்காக இதைக் கேட்கிறார். அறிவில் சிறந்த மனிதராகிய அர்ஜுனன் ஆண்களைத் தூற்றாமல் பெண்கள் கற்பிழப்பதைப் பற்றிப் பேச முடியாது.

ஏனென்றால் ஆண்களும் இதற்குச் சரிசமமாகப் பொறுப்பாவார்கள்.

அர்ஜுனன் இங்கே காலங்காலமாக பெண்கள்
மீது ஆதிக்கம் செலுத்திய ஆணதிக்கத்தை
எதிரொலிக்கிறார்.

அவர் எழுப்பிய சந்தேகங்கள்
ஒவ்வொன்றுமே காலத்தோடு
தொடர்புடையது. அவர் வாழ்ந்த
ஆயிரமாயிரம் வருடங்களுக்குப் பின்பும்
இன்றளவிலும் இதே சந்தேகங்கள் மாறாமலே
இருக்கின்றன.

> நம்முடைய
> ஒரே பாவம்,
> நம் முதல் பாவம்,
> நம்முள் இருக்கும்
> 'தெய்வீக'த்தை
> அறியாமல் இருப்பதே!

கேள்வி: ஜீவன் முக்த நிலையை அடைந்த ஒரு மனிதர் உடல்சார்ந்த சூழலில் எப்படிச் செயல்படுவார்?

ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு நடந்துகொள்வாரோ அதேபோலத்தான் ஒரு ஞானியும் நடந்துகொள்கிறார்.

ஒரு அருமையான ஜென் பழமொழி இவ்வாறு சொல்கிறது. ஞானமடைவதற்கு முன்பு...

ஒரு மலை மலையாகவும் மரம் மரமாகவும் நதி நதியாகவுமே காட்சி தந்தது.

ஒருவர் குழப்பமடைந்து, விளக்கங்களையும் ஸத்யத்தின் உட்பொருளையும் எல்லா இடங்களிலும் தேடுகிற தீவிர ஆன்மீகத் தேடலில் இருந்தபொழுது...

மலை, மலையாக இருக்கவில்லை. மரம் மரமாகத் தோன்றவில்லை; நதி நதியாக இல்லை.

ஞானம் அடைந்த பிறகு...

மீண்டும் ஒரு மலை மலையாகவும் மரம் மரமாகவும் நதி நதியாகவுமே காட்சி தந்தது.

ஒரு ஞானி, தன்னைச் சுற்றி இருக்கும் பல்வேறு விஷயங்களுக்கும் தம்மை ஒரேவிதமாகத்தான் வெளிப்படுத்திக்கொள்கிறார். இருந்தாலும் ஞானம் அடைந்த பிறகு, இவை அனைத்தையும் அவர் ஒரு வேறுபட்ட தளத்திலிருந்தே பார்க்கிறார். ஆனால் ஒரு சாதாரண மனிதர், அவர் இந்த உலகை எப்படிப் பார்க்க விரும்புகிறாரோ, அப்படித் திரித்துப் பார்க்கிறார்.

ஒரு சின்ன கதை:

இரண்டு வயதான பெண்கள் பல
வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்
கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் கேட்டார்: "உன் மகன் எப்படி இருக்கிறான்?"

அதற்கு இரண்டாமவர், “என் மகனா?
அவன் மிகுந்த துரதிருஷ்டசாலி. ஒரு
வீட்டுவேலையையும் செய்யாத ஒரு
பெண்ணை அவன் திருமணம் செய்து
கொண்டிருக்கிறான். அவள் சமைப்பதில்லை;
துணி துவைப்பதோ அல்லது பாத்திரம்
தேய்ப்பதோகூட இல்லை.

அவள் செய்வதெல்லாம் மூன்றே மூன்று
விஷயங்கள்தான், நன்றாகச் சாப்பிடுவாள்,
தூங்குவாள்,படுக்கையில்படுத்துக்கொண்டே
புத்தகம் படிப்பாள். பாவம்! என் மகன்,
காலை உணவைக்கூட அவள் படுத்திருக்கும்
இடத்திற்கே எடுத்துச் சென்றுதான்
கொடுக்கிறான்,” என்று சொன்னார்.

ஒரு ஞானி,

தன்னைச் சுற்றி

இருக்கும் பல்வேறு

விஷயங்களுக்கும்

ஒரேவிதமாகத்தான்

தம்மை

வெளிப்படுத்திக்

கொள்கிறார்.

முதல் பெண்மணி, “அய்யோ, பாவம்! சரி... உன் மகள் எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டார்.

உடனே இரண்டாம் பெண்மணி, “அவள் ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஒரு நல்ல மனிதரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். அவர் அவளை எந்த ஒரு வீட்டுவேலையையும் செய்ய விடுவதில்லை. அவரே சமையல் செய்வது, துணி துவைப்பது, சுத்தம் செய்வது என்று எல்லாவற்றையும் செய்து விடுகிறார்.

தினமும் காலையில் காலை உணவை அவள் படுத்திருக்கும் இடத்திற்கே கொண்டுவந்து தருகிறார். அவள் செய்வதெல்லாம், இஷ்டப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கிவிட்டு, நிதானமாக எழுந்து, சாப்பிட்டுவிட்டு, அவளுக்குப் பிடித்த புத்தகங்களை ஓய்வாகப் படித்தபடி நாட்களைக் கழிப்பதுதான்,” என்று பெருமையுடன் சொல்லிமுடித்தார்.

நாம் எப்படி விஷயங்களைக் கவனிக்கிறோம் என்று பாருங்கள். ஒரே சூழ்நிலை, ஒரே மனிதர், ஆனால் வெவ்வேறுவிதமான பதில்கள். அந்த வீட்டு வேலைகளைச் செய்வது மகனா, மருமகனா என்பதைப் பொறுத்தே அந்தப் பதில்கள் அமைகிறது.

‘நம்முடைய புரிதலுக்கு ஏற்றால்போல் பார்க்கிறோம்’ என்று நான் சொல்லும்பொழுது இதைத்தான் குறிப்பிடுகிறேன்.

நீச்சல் வீரர்

ஆனால் ஒரு ஞானி, எல்லாப்
பொருட்களையும் விஷயங்களையும்
உள்ளவாறே பார்க்கிறார். பற்றுடனும்
பார்க்கவில்லை. பற்றற்றும் பார்க்கவில்லை.
உள்ளது உள்ளபடியே பார்க்கிறார்.

ஒரு ஞானி வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே எடுத்துக்கொள்கிறார். அவருடைய வசதிக்காக வாழ்க்கையை மாற்ற விரும்புவதே இல்லை. அவர் சோம்பேறித்தனமாக இருப்பதில்லை. ஆனால் எதிர்ப்பு தன்மையில்லாத உற்சாகத்தோடு இருக்கிறார்.

'சோம்பேறித்தனம்' மற்றும் 'எதிர்ப்பில்லாமல் வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்தல்' இவ்விரண்டையும் நாம் எப்படி வேறுபடுத்துவது?

சோம்பேறித்தனத்தில் நீங்கள் எப்போதும் சோர்ந்தே இருப்பீர்கள்.

எவ்வளவு ஓய்வு எடுக்கிறீர்களோ அவ்வளவு சோர்வுக்கு ஆளாவீர்கள், ஓய்வெடுப்பதனாலேயே சோர்வாக உணர ஆரம்பித்து விடுவீர்கள்.

வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று வாழ ஆரம்பிக்கும்பொழுது நீங்கள் உயிர்ப்புடனும் உற்சாகத்தில் துள்ளிக்கொண்டும் புத்துணர்வோடும் சக்தியை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள் குழப்பம் அடைந்தீர்களென்றாலே சோம்பேறித்தனமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் சரணாகதிசெய்யும் அந்த நிமிடத்திலிருந்து உங்களுக்குள் குழப்பமே இருக்காது.

ஒரு ஞானி,
எல்லாப்
பொருட்களையும்
விஷயங்களையும்
உள்ளது உள்ளபடியே
பார்க்கிறார்.

பிறகு இயற்கையாகவே நீங்கள் வாழ்வை
அதன் போக்கிலேயே வாழ ஆரம்பித்து
விடுகிறீர்கள். உங்களால் ஆனந்தமான பரவச
நிலையில் மட்டுமே இருக்க முடியும்.

கேள்வி: மக்கள், தாங்கள் ஜீவன் முக்தர்கள் ஆவதற்குத் தகுதிபெற வேண்டியது தேவையா? என்று வியக்கிறார்கள். அவர்கள் அவசியம் நற்செயல்களைச் செய்ய வேண்டுமா? பண்டிதர்களாக, அதிகம்

கற்றவர்களாகவும் இருக்க வேண்டுமா? ஒரு குறிப்பிட்ட இனத்தை, வகுப்பை, மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டுமா?

தீண்டத் தகாத ஜாதியில் இருப்பவர்கள்
ஞானம் அடைவது என்பது சாத்தியமா என்று
இந்தியாவில் ஒருவர் என்னிடம் கேட்டார்.

நீங்கள் உங்களை தீண்டத் தகாதவர்
என்றோ, தகுதி அற்றவர் என்றோ நினைத்துக்
கொண்டிருக்கும்வரையில் உங்களால் ஞானம்
அடையவே முடியாது.

நீங்கள்
சரணாகதி
செய்யும்
அந்த நிமிடத்திலிருந்து
உங்களுக்குக்
குழப்பமே
இருக்காது.

அந்த எண்ணத்தைக் கைவிட்ட மறுகணமே உங்களால் ஞானம் அடைய முடியும். யாருமே தீண்டத் தகாதவர் இல்லை. அந்தக் கருத்தே தவறானது. தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவே இது நிகழ்கிறது.

யாராவது உங்களிடம், அவர் உங்களைவிட உயர்ந்தவர் என்றும், புனிதமானவர் என்றும், அதனால் நீங்கள் அவரைத் தொடக்கூடாது என்று சொன்னால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அவரே தீண்டத் தகாதவர்.

புரிந்துகொள்ளுங்கள், புனிதர்களும் சரி, பாவிகளும் சரி ஞானமடைதல் என்னும் இலக்கிலிருந்து, சம அளவு தூரத்தில்தான் இருக்கிறார்கள்.

ஞானம் அடைய வேண்டும் என்னும் ஏக்கம் பாவிகளுக்கும் இருக்கும் பட்சத்தில், புனிதர்களுக்கு என்று எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லை.

"நீங்கள் ஏன் சுற்றுச்சூழல் முன்னேற்றம், மக்கள் தொகை நிர்வாகம், போர் நிறுத்தம் போன்ற திட்டங்களில் ஈடுபடக் கூடாது?" என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

சமூக ரீதியான சரியான பதில், "ஆம், நான் உலக அமைதி, சிறப்பான சுற்றுச்சூழல், சமமான பொருளாதாரப் பங்கீடு மற்றும் பல விஷயங்களுக்காகப் பாடுபடத்தான் வேண்டும்," என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் எனது உண்மையான பதில் இதுவே, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். தனிமனித உருமாற்றம் மட்டுமே இவை

அனைத்தையும் ஒரே சமயத்தில் உறுதி செய்ய முடியும். வேறு எந்த ஒரு வழியிலும் இது சாத்தியமாகாது.

சமூக ரீதியாக வேறு எதையாவது செய்திருக்க முடியுமானால், இந்நேரம் அது நடந்திருக்க முடியும். ஆனால் நம்மால் சமூக ரீதியாக எதுவும் செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

இன்று உலகம் முற்றிலும் சீர்கேடு அடைந்திருக்கிறது என்றும், பழங்காலத்தில் அது மிகவும் அழகாக இருந்தது என்றும்தான் எப்போதும் நினைக்கிறோம்.

ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான ஹரப்பா-மொகஞ்ச தாரோ நாகரிகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட குறிப்புகள், அன்றைய காலக்கட்டத்தின் நிலவரத்தைப் பற்றி வருத்தத்தோடு எழுதியுள்ளன.

அந்தக்காலக்கட்டத்தின்குறிப்புகளைப் பூமியிலிருந்து கண்டெடுத்துள்ளனர். அவை சொல்கின்றன, "போர் அதிகமாகிவிட்டது. சமுதாயம் படிப்படியாக தரம் குறைந்து சீர்கேடு அடைந்து வருகிறது. ஆனால் பழங்காலத்தில் சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருந்தது," என்று சொல்கின்றன. மக்கள், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்புகூட, தங்கள் காலத்திற்கு முன்பு இருந்த கடந்தகாலமே சிறந்தது என்று எண்ணியுள்ளார்கள்.

நல்லது மட்டுமே நிலவி இருந்த காலம் என்று எதுவுமே இல்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே கடந்தகாலம், பொற் காலம் என்னும் கருத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

> புனிதர்களும் சரி,
> பாவிகளும் சரி
> ஞானமடைதல்
> என்னும்
> இலக்கிலிருந்து,
> சம அளவு
> தூரத்தில்தான்
> இருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் நடக்கும் செய்தி மற்ற இடங்களில் இருக்கும் மக்களுக்குச் சென்றடையாத காரணத்தினால், அவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நன்மையும் தீமையும் கடந்தகாலத்தில் நிலவி இருந்ததைப்போலவே எதிர்காலத்திலும் நிலவும்.

உங்களை நீங்களே விழிப்புproc
செய்துகொள்வதனால் மட்டுமே,
இவ்விரண்டினையும் நீங்கள் கடந்து செல்ல
முடியும். நீங்கள் ஞானமடைவதன் மூலம்
கூட்டு எதிர்மறை விழிப்புணர்விலிருந்து

வெளியில் வர முடியும்; அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

அனைவரும் தங்களது
கண்ணோட்டத்திலேயே அமைதியைப்
பரப்ப விரும்புகிறார்கள். யாருமே
பிறரது கண்ணோட்டத்தில் அமைதியைப்
பரப்புவதற்கு விரும்புவதில்லை.

நான் ஒரு சர்வ சமய மாநாட்டிற்குச்
சென்றிருந்தபொழுது, அங்கு ஒருவர்
இவ்வாறு போதித்துக் கொண்டிருந்தார்.

“நீங்கள் எல்லாம் எங்கள் மதத்தை ஏற்றுக்கொண்டு மதம் மாறி விடுங்கள். அதன்பின் நாம் சண்டை போடாமல் இருப்போம்!”

அந்தக் கூற்று, அது சொல்லப்பட்டவிதத்திலேயே தெள்ளத் தெளிவாக அதன் மொத்த அர்த்தத்தையும் இழந்திருந்தது.

அனைவரையும் உங்கள் மதத்திற்கு மாற்றுவது உங்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது. எல்லா மதமும் ஒன்றே என்று ஏற்றுக்கொண்டு, உண்மையான ஆன்மீகத்தை நோக்கிச் செல்வதுதான் உங்கள் குறிக்கோளாக வேண்டும்.

பிரச்சினை என்னவென்றால் எல்லா மதமும் கையில் கத்தியுடன் அமைதியைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள்! இப்படிப்பட்ட புரட்சிகள் உதவாது. அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

தனிமனித ஆன்மீக எழுச்சி மட்டுமே நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும். ஏனென்றால் உங்கள் விழிப்புணர்வு உயர்ந்தால் நீங்கள் இந்தப் பூமியின் கூட்டு நேர்மறை சக்திக்கு வலு சேர்ப்பீர்கள். மேலும் கூட்டு எதிர்மறை சக்தியை வலுவிழக்கச் செய்வீர்கள்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு, உங்களுக்கு என்ன தேவையென்றால், நீங்கள் விழிப்புணர்வில் உயர வேண்டும். மனச்சாட்சியில் அல்ல.

“ஹிட்லர், சதாம்ஹுசேன் மற்றும் தொடர் கொலைகாரர்கள், மனச்சாட்சி இல்லாமல் அழிவை ஏற்படுத்தும்பொழுது நீங்கள் எப்படி இப்படிச்

சொல்லலாம், எது நல்லது, எது கெட்டது என்று எங்களுக்கு அறிவுறுத்த மனச்சாட்சி தேவையில்லையா?'' என்று மக்கள் என்னைக் கேட்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உண்மையான விழிப்புணர்வு பெற்ற ஒருவரால் மற்றவர்களைக் காயப்படுத்த முடியாது. மற்றவர்களைக் கொல்ல முடியாது. ஏனென்றால் அவர் பிறரைத் தம்முடைய ஓர் அங்கமாகவே உணர்கிறார்.

மனச்சாட்சியுள்ள ஒருவர் மற்ற வரைக் கத்தியால் கொல்லாமல் இருக்கலாம். ஆனால் வார்த்தைகளால் கொல்லுவார்கள். ஏனென்றால் அவர்களது இருப்பில் தீவிரவாதம் இருக்கிறது.

மனச்சாட்சியுடன் இருப்பவர், சமூகத்தில் வேண்டுமானால் சாந்தமானவராக இருக்கலாம். ஆனால் விழிப்புணர்வுடன் இருப்பவர் தமது இருப்புத் தன்மையிலேயே அமைதியாக இருப்பார்.

என்னைப் பொறுத்தவரையில், நல்லொழுக்கம் என்பது விழிப்புணர்வைப் பொறுத்தது. மனச்சாட்சியைப் பொறுத்தது அல்ல. விழிப்புணர்விற்கு ஒரு மலிவான மாற்றாகத்தான் மனச்சாட்சி இருக்க முடியும்.

எங்களது நித்யானந்த ஸ்பூரண முகாமில் விழிப்புணர்வின் ஒரு சிறிய தரிசனத்தை மக்கள் அனுபவமாகப் பெற உதவுகிறோம். அதனால் அவர்கள் வாழ்வை மனச்சாட்சிக்குப் பதிலாக விழிப்புணர்வுடன் வாழத் தொடங்குவார்கள்.

உண்மையான
விழிப்புணர்வு
பெற்ற ஒருவரால்
மற்றவர்களைக்
காயப்படுத்த
முடியவே முடியாது.

மனச்சாட்சியின் அடிப்படையில் இயங்கும் எதுவும் மேலோட்டமாகத்தான் இருக்க முடியும். இது நிரந்தரமானது அல்ல.

விழிப்புணர்வின் அடிப்படையில் இயங்கும் எதுவும் நிரந்தரமானது.

விழிப்புணர்வின் அனுபவத்திற்காகவே நாம் உழைக்க வேண்டும். நாம் விழிப்புணர்வின் அனுபவத்தை உணராத காரணத்தினால், நல்ல மனச்சாட்சி இருந்தால் போதும் என்று ஏற்றுக்கொண்டு அதிலேயே இருந்துவிடாதீர்கள்.

நம்முடைய நல்லொழுக்கம், புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் வாழ்க்கை முறை இவை ஒவ்வொன்றுமே விழிப்புணர்வின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். மனச்சாட்சியின் அடிப்படையில் இருக்கும்பொழுது, இவை மூன்றுமே அச்சத்தையும் ஆசையையும் பொறுத்து அமைகிறது.

அதிவிரைவாக வண்டி ஓட்டக் கூடாது என்ற கருத்து அச்சத்தின் அடிப்படையில் இருக்குமானால், காவல் அதிகாரி உங்களை கவனிக்கவில்லை என்றால் நீங்கள் வேகமாக வண்டி ஓட்ட நினைப்பீர்கள்.

சட்டத்தை மீறுவது உங்களுக்குச் சுவையானதாகிவிடும். அவ்வாறு செய்யும்பொழுது, நீங்கள் தைரியமானவராக உணர்வீர்கள். பயம் மற்றும் ஆசை காரணமாகச் சட்டத்தை பின்பற்றுபவராக இருந்தால், நீங்கள் அதைத் தாண்டுவதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குழந்தைகள் பெற்றோரிடம், "முடியாது,"
என்று சொல்லும்பொழுது, சட்டத்தை
மீறிவிட்ட மகிழ்ச்சியையே உணர்கிறார்கள்.
இது, தங்களை நிரூபித்துவிட்டதாக
அவர்களை உணரச்செய்கிறது.

நல்லொழுக்கம் மனச்சாட்சியின்
அடிப்படையில் இருந்தால் நீங்கள்
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
எப்போதுமே அதை மீற நினைப்பீர்கள்.

விழிப்புணர்வின்
அடிப்படையில்
இயங்கும்
எதுவுமே
நிரந்தரமானதுதான்.

விழிப்புணர்வே உங்கள் ஆசான், அதுவே உங்கள் குரு; மனச்சாட்சி உங்கள் ஆசான் அல்ல; குரு அல்ல. மனச்சாட்சி என்பது எப்போதுமே 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக் கூடாதவை' என்பதைப் பற்றிய சில சட்டதிட்டங்களுடன் இருப்பது.

நீங்கள் எப்பொழுதுமே அதனுடன் சண்டை இட்டுக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் மனச்சாட்சியுடன் வாழ முயற்சி செய்ய, செய்ய உயிரற்ற தன்மையோடு இருப்பீர்கள், மனக்கோளாறு போன்ற நோய்களுக்கும் ஆளாக நேரிடும்.

விழிப்புணர்வுடன் இருந்தால் உங்களுக்குள் சந்தேகம் இருக்காது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டுமே செய்வீர்கள்.

மக்கள் கேட்பார்கள், "தான்
ஞானமடைந்துவிட்டதை ஒருவர்
எப்படித் தெரிந்து கொள்வது?" நீங்கள்
ஞானமடைந்துவிட்ட அந்தக் கணத்திலேயே
இந்த மாதிரியான சந்தேகங்கள் எல்லாம்
மாயமாய் மறைந்துவிடும். எப்படி
உங்களுக்கு இப்பொழுது என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தில்
எந்தவித சந்தேகமும் இல்லையோ,
அதுபோல ஞானமடைதலும் ஒரு தெளிவான
அனுபவம்தான். அப்பொழுது இந்தக்
கேள்விகள் எல்லாம் மறைந்துபோகும்.
உங்களுக்குள் கேள்விகள் இருக்கும்வரையில்
நீங்கள் ஞானமடையவில்லை என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்,

> விழிப்புணர்வுடன்
இருந்தால்
உங்களுக்குள்
சந்தேகம் இருக்காது.
நீங்கள் என்ன
செய்ய வேண்டுமோ
அதை மட்டுமே
செய்வீர்கள்.

அடுத்த கேள்வி, "ஒருவர் எப்படி ஞானமடைய முடியும்?"

இது ஒன்று, இரண்டு, மூன்று சொல்வதுபோல் எளிதானது.

  1. த்​யானம் செய்யத் தொடங்குங்கள்.
  1. த்​யானத்தைத் தொடருங்கள்.
  1. த்​யானத்தைத் தொடருங்கள்.

ஞானமடைதல் என்ற அனுபவத்தை அடைவதற்கும் நீங்கள் ஞானமடைந்து விட்டீர்கள் என்பதை உணர்வதற்கும் த்​யானம் ஒன்றே வழி. ஏதாவது ஒரு தியான நுட்பத்துடன் உங்கள் ஸாதனாவை, பயிற்சியைத் தொடங்குங்கள். நிச்சயமாக முடிவான உண்மையை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் ஒரு சிங்கம்தான் என்பதை நீங்களே நம்ப மறுத்தாலும் நீங்கள் ஒரு சிங்கம்தான்.

உண்மையில், நீங்கள் அனைவரும் ஞானமடைந்தவர்களே. அதுவே உங்களது உண்மையான இயல்பு நிலை. நீங்கள்தான் அதை உணரவில்லை. அவ்வளவுவே.

அதனால் ஞானமடைதலை நோக்கிச் செல்வது உங்களது லக்ஷியமாக இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே லக்ஷியத்தை அடைந்து விட்டவர்கள்.

விழித்திருங்கள், எழுந்திருங்கள், நிறுத்துங்கள்! நீங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்! சந்தேகங்களைக் கீழே போடுங்கள்.

"நீதான் எனக்கு நம்பிக்கையும் அவநம்பிக்கையையும் (சந்தேகத்தையும்) கொடுத்தாய். இந்த இரண்டையும் நீயே வைத்துக்கொள். என்னைச் சுதந்திரமாக விட்டு விடு," என்று இறைவனிடம் சொல்லி சரணாகதி அடையுங்கள்.

உங்களின் ஒரு பாகம் உங்களை நம்புகிறது. ஆனால் மற்றொரு பாகம் உங்கள் மீது சந்தேகம்கொள்கிறது. நம்பிக்கையையும் சந்தேகத்தையும் தெய்வத்திடமே சரணாகதி செய்து விடுங்கள்.

நீங்கள் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு சந்தேகத்தைக் கொடுக்க நினைக்கிறீர்கள். அங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இரண்டையும் சமர்ப்பித்து விடுங்கள். அந்த இரண்டையுமே கடந்து செல்வீர்கள்.

நீங்கள் என்றென்றும் ஆனந்தமயமான, நித்யானந்தத்தை உணர்வீர்கள்.

Hands playing a flute
Lord Krishna