KAILASA Library/பகவத்கீதை/கற்று மனப்பாங்கின் கட்டுப்பாடுகள்Sign in
பகவத்கீதை

கற்று மனப்பாங்கின் கட்டுப்பாடுகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுவதில்
எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றியையும்
இராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் விரும்பவில்லை.

ராஜ்ஜியத்தாலோ இன்பங்களாலோ அல்லது இந்த
வாழ்க்கையினாலோ என்ன பயன்?

கிருஷ்ணா, யார் பொருட்டு நாம் ராஜ்ஜியங்களையும்
இன்பங்களையும் சுகங்களையும் விரும்புகிறோமோ அவர்கள்
போர்க் களத்தில் உயிரையும் செல்வங்களையும் இழக்கத் தயாராக
நிற்கிறார்கள்.

ஆச்சார்யர்கள், தந்தையர், மகன்கள், பாட்டன்மார், தாய்வழி
மாமன்மார், மாமனார், பேரர், மைத்துனர் மற்றும் எல்லா
உறவினர்கள்.

1.35 மதுஸூதனா! நான் கொல்லப்பட்டாலும், மூவுலகங்களின் அரசாட்சி கிடைத்தாலும்கூட நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை. இந்தப் பூமிக்காக நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சந்தேகத்தில் தெளிவிருந்தால் தீர்வு நிச்சயம்

அர்ஜுனன் இப்பொழுது தமது கருத்தை மிகவும் விளக்கமாகச் சொல்ல ஆரம்பிக்கிறார். தமது சந்தேகங்களைத் தெளிவாக விளக்க ஆரம்பிக்கிறார். "இப்படிப்பட்ட சந்தேகங்கள் எப்படித் தெளிவாக இருக்க முடியும்?" என்று நீங்கள் கேட்கலாம்.

சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவை தெளிவாக இருப்பது மிகவும் அவசியம். தெளிவற்ற சந்தேகங்கள் மேலும் மேலும் குழப்பத்திற்கே வழி வகுக்கும்.

அறிவற்றவர்களுக்குத்தான் தெளிவில்லாத சந்தேகங்கள் இருக்கும். அவர்கள்தான் தெளிவற்ற சந்தேகங்களுடன் இருப்பார்கள். ஆனால் அர்ஜுனனின் சந்தேகங்கள் எல்லாம் சரியானவை, திட்டவட்டமானவை.

தம்முடைய உறவினர்களையே கொல்வதன் மூலம் கிடைக்கும் அந்த மகிழ்ச்சியை, தன்னால் எப்படி விரும்ப முடியும் என்று கேட்கிறார். இந்தச் செயல்களால் என்ன நன்மை வர முடியும்?

| சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால், அவை தெளிவாக இருப்பது மிகவும் அவசியம். | இத்தகைய செயலின் மூலமாக வரும் வெற்றியையும் இன்பங்களையும் இராஜ்ஜியத்தையும் அவரால் எப்படி விரும்ப முடியும்? தமது உற்றார் உறவினர்களை அழிப்பதனால் கிடைக்கப் போகும் இந்தப் பொருட்களால், அவர் அடையப்போகும் பயன்தான் என்ன? அர்ஜுனனது குழப்பம் அறியாமையால் ஏற்பட்டது இல்லை, மாறாக புத்திசாலித்தனத்திலிருந்து பிறந்த குழப்பம். அர்ஜுனன், அவருடைய சிறுவயதிலிருந்தே வெற்றி, இராஜ்ஜியம், இன்பங்கள் |

ஆகியவற்றை அடைய வேண்டும் என்றே
கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். அதனால்
அவரும் அவ்வாறே வாழ்ந்தார்.

அவர் இதுவரை இவற்றைப் பெறுவதற்குக்
கொடுக்கவேண்டிய விலை, அதனால்
கிடைக்கும் லாபத்தைவிட, மகிழ்ச்சியைவிட
அதிகமாக இருந்த ஒரு சூழ் நிலையைக்கூட
சந்தித்ததில்லை.

அவர், இவற்றைப் பெறுவதற்கான விலை மற்றும் பலன்கள் பற்றிய மதிப்பீடு குறித்து சிந்தித்ததே இல்லை.

வாழ்க்கையில் முதல் முறையாக அவர், அவரது விருப்பங்களை, தேர்வுகளை மதிப்பீடு செய்ய வேண்டிய சூழ் நிலையைச் சந்தித்தார்.

“போரில் ஏற்படும் துக்கங்களை எல்லாம் தகர்த்து முன்னேறி, உயிரினும் மேலானவர்களை அழிப்பதன் மூலம், எனக்கு அதிகாரமும், பதவியும் இன்னும் அதிகமாக இன்பங்களும் கிடைக்கப் போகின்றனவா என்ன?!” என்று அர்ஜுனன் கேட்கிறார்.

peacock feather decoration

முதல் இலக்ஷியம் நம் இலக்ஷியத்தைக் கண்டுபிடிப்பதே

நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி இது.

பொருளாதார ரீதியாகப் பலனளிக்கக்கூடிய செயல்களின் பின்னால் செல்லும்பொழுது, அது ஏதோ ஒரு வகையில் நம்முடைய வாழ்வையும் நாம் அன்பு செலுத்துபவர்களின் வாழ்வையும் பாதிப்படையச் செய்யும் என்ற உண்மையை நாம் அறிந்திருந்தாலும்கூட, பெரும்பாலான சமயங்களில் நாம் அந்தப் பாதையில்தான் செல்கிறோம்.

பலருக்கு வாழ்க்கையே இயந்திரத்தனமாகி விட்டது. நிகழ்காலத்தின் தன்னிச்சையான இயல்புத் தன்மையில் வாழ்வதை விட்டு விட்டு, எப்போதும் கடந்தகால நினைவுகளையே தீவிரமாக நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம், நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறோம்.

துக்கமான கடந்தகால நிகழ்வுகளை எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தவிர்க்க முற்படுகிறோம். சந்தோஷமான கடந்தகால நிகழ்வுகளை எதிர்காலத்தில் மீண்டும் உருவாக்க முயற்சி செய்கிறோம்.

குற்ற உணர்ச்சியையும் வருத்தங்களையும் தவிர்த்துவிட்டு சந்தோஷத்தை மட்டுமே எதிர்காலத்தில் அனுபவிக்க விரும்புகிறோம்.

பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கை என்பது அத்தனை சுலபமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்படக்கூடியது இல்லை. இருந்தாலும் நாம் என்ன செய்கிறோம்? அப்படித் தீர்மானித்துவிடலாம் என்று நினைக்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம்.

பெரிய பிரச்சினை என்னவென்றால், நம்முடைய பழக்கவழக்க முறைகளினால்தான், நாம் மிகவும் கட்டுறுத்தப்பட்டிருக்கிறோம். என்னதான் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சரி, நம்முடைய எல்லாவிதமான முன் எச்சரிக்கைகளையும் தாண்டி, நாம் மீண்டும் மீண்டும் ஒரேவிதமான தவறுகளையே செய்து கொண்டிருக்கிறோம்.

நமது விழிப்புணர்வற்ற மனமும், நம்முடைய ஸம்ஸ்காரங்களும் அதை ஊர்ஜிதம் செய்கின்றன. நம்மில் வெகு சிலரே, சிந்தித்து நமது செயல்களின் நோக்கம் மற்றும் மதிப்பு குறித்து கேள்வி கேட்கிறோம்.

நம்மில் வெகு சிலரே, நாம் எப்படி வாழ வேண்டும், நம்முடைய வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் முதலில் குடும்பத்தினார் மூலமாகவும் பிறகு சமூகத்தின் மூலமாகவும் கற்றுக் கொடுக்கப்படுகிறோம்.

நிகழ்காலத்தில்
வாழ்வதை விட்டு விட்டு,
கடந்தகால
நினைவுகளிலேயே
வாழ்வதால்
நிகழ்காலத்தைத்
தவற விட்டு
விடுகிறோம்.

நாம் நம்மால் முடிந்தவரையில் முழுமையைத் தேட முயற்சி செய்கிறோம். நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முறையில் அதற்கான ஒரு பங்களிப்பையும் தருகிறோம். பெரும்பாலும் நாம், நமது தனிப்பட்ட மற்றும் தொழில் தொடர்பான பொறுப்புகளில் மூழ்கி விடுகிறோம்.

நாம் நம்முடைய வாழ்க்கையை
முழுமையாக, நிறைவாக வாழ்ந்தோமா என்ற
கேள்வியை நமக்குள் கேட்கக்கூட நமக்குத்
தோன்றுவதில்லை. நம் வாழ்க்கையே

அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று
எதையோ தேடி ஓடுகிற நிலையான தொடர்
சங்கிலியாகி விடுகிறது.

உதாரணத்திற்கு, இளைஞர்களாக இருக்கும்பொழுது, 'எப்பொழுது என் பெற்றோரை விட்டு விட்டு கல்லூரி விடுதியில் போய்த் தங்குகிறேனோ, அன்றிலிருந்து நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்று நினைக்கிறோம்.

அந்த ஆசை நிறைவேறியவுடன், நமது மனம் ‘அடுத்து என்ன’ என்று அடுத்த லக்ஷியத்தை நோக்கித் தாவுகிறது. ‘படிப்பு முடிந்து வேலை கிடைத்துவிட்டால் போதும், நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்று நினைக்க ஆரம்பிக்கிறோம்.

அதுவும் முடிந்த பிறகு, திருமணம், குடும்பம், குழந்தைகள், ஓய்வு நாள்கள் என்று இந்த எண்ணங்கள் ஒரு சங்கிலித் தொடராக நீண்டு கொண்டே செல்கின்றன.

முடிவில்லாமல் செல்லும் இந்த எண்ணங்கள் நிறைவேறிய பிறகும்கூட, நாம் பாடுபட்டதற்கான திருப்தி மட்டும் நமக்கு என்றைக்குமே கிடைப்பது இல்லை.

இறுதியில், நம் வயோதிக காலத்தில்தான், நாம் வாழ்ந்தவிதத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை நாம் எல்லோருமே உணர்கிறோம்.

## துணிச்சலின் உச்சமே துறவறம்

நம் வாழ்க்கையையும் நம் செயல்களையும் சமூகம் நமக்காக வகுத்து வைத்துள்ள திட்டங்களையும் எதிர்த்து நின்று கேள்வி கேட்க வேண்டுமானால் நமக்கு மிகுந்த துணிச்சல் தேவைப்படுகிறது.

“நிறுத்துங்கள், நான் இறங்கிக்கொள்கிறேன்; நான் என் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்று, உள்ளுலக ஆனந்தத்தைத் தேட விரும்புகிறேன்!'' இப்படி உலகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டுமானால் ஒருவருக்கு அத்தீமான மனவலிமை தேவைப்படுகிறது.

> ஒருவர்
> உண்மையான
> லக்ஷியத்தை நோக்கி
> ஒரு தேடுதலுடன்கூடிய
> பயணத்தை
> மேற்கொள்ள
> அளவிடமுடியாத
> தைரியம் தேவை.

ஸந்யாஸிகள் மிகவும் துணிச்சலானவர்கள்.
அவர்கள், சமுதாயம் வகுத்துள்ள
விதிமுறைகளில் வெற்றிபெற முடியாமல்,
சமூகத்தை விட்டு விலகவில்லை.
கோழைத்தனமாக ஸந்யாஸம்
மேற்கொண்டவர்கள் யாரும் கிடையாது.

வாழ்வின் நிலையில்லாத தன்மையையும்
அது அளிக்கும் எல்லைக்குட்பட்ட
ஆனந்தத்தையும் அடையாளம் கண்டுகொண்டு,
'இதைவிட மேலான ஒன்றைப் பெற
விரும்புகிறேன்' என்று ஒருவர் சொல்ல
அத்தீமான தைரியமும், ஆழ்ந்த உள்முக
நோக்கும் தேவைப்படுகின்றன.

பொருள்சார்ந்த இவ்வுலக வாழ்க்கையில் இருந்து தப்பித்து, ஒருவர் உண்மையான லக்ஷியத்தை நோக்கி, ஒரு தேடுதலுடன்கூடிய பயணத்தை மேற்கொள்ள அளவிடமுடியாத தைரியம் தேவை.

குழப்பத்திற்கான தீர்வு நம் குருவைக் கண்டுபிடிப்பதே

"கிருஷ்ணா, என் வாழ்வின் லக்ஷியம்தான் என்ன?" என்று அர்ஜுனன் அழுது புலம்புகிறார்.

tதனது சொந்த பந்தங்களை எதிர்த்துப் போரிட வேண்டிய கடமையை எதிர்கொள்ளும்பொழுதுதான், அர்ஜுனன் தன்னையும் தனக்களிக்கப்பட்ட பயிற்சியையும் தம் வாழ்வின் லக்ஷியத்தையும் கேள்விகேட்கத் தொடங்குகிறார்.

தேரில் நின்றுகொண்டு அவர் காண்கிறகாட்சி அவரை நிலைகுலையச் செய்து விட்டது. அவர் செய்ய இருப்பது சரியே என்று அவர் உள்மனம் சொல்கிறது.

ஒரு க்ஷத்ரியராக அவருக்களிக்கப்பட்ட பயிற்சிகள் எல்லாமே அதை உறுதி செய்கின்றன. ஆனால் நெருங்கிய சொந்த பந்தங்களை அழிக்க வேண்டிய நிதர்சனத்தை எதிர்கொள்ளும்பொழுது மட்டும் தமது மன உறுதியை இழக்கிறார். ஏன்?

அர்ஜுனன் ஒரு துணிச்சலான மனிதர்தான். ஒரு தைரியமான மனிதரிடம் மட்டுமே, எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் தம் மனத்தினைத் திறந்து, தம் ஆழ் மனத்தில் இருக்கும் பயங்களை எல்லாம் வெளிப்படுத்தி, அவற்றிலிருந்து விடுபடுவதற்குரிய உதவியை நாடக்கூடிய தன்னம்பிக்கை இருக்க முடியும்.

அர்ஜுனன் மனச்சோர்விற்குள் விழவில்லை; அவருக்கு விரக்தி ஏற்படவில்லை. உண்மையில் அவர் பயப்படவில்லை. அர்ஜுனன் குழப்பமடைந்திருந்தார். ஆனால் துரியோதனனது நடத்தையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதொரு தன்மையில் குழப்பமடைகிறார்.

தான் செய்கிற செயல்களிலேயே எது சரியான செயல், எது தவறான செயல் என்பதை சமூகத்தின் வழிநடத்துதலாலும் அவர் இதுநாள்வரை பெற்று வந்த பயிற்சியின் அடிப்படையிலும் அர்ஜுனனால் நிச்சயமாக வேறுபடுத்த முடியும்.

வாழ்நாள் முழுவதும் அவருக்கு எது
கற்றுக்கொடுக்கப்பட்டதோ, எதன்
அடிப்படையில் அவர் இப்பொழுது
செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ, அது
தவறானதாகத்தான் இருக்க வேண்டும்
என்ற ஒரு கவலையில் இருந்துதான்
அர்ஜுனனின் குழப்பம் அதிகரிக்கிறது. ‘இது
சாத்தியம் தானா?’ என்று முதன் முறையாக
தன்னைத்தானே கேள்வி கேட்கிறார்.

> ஒரு தைரியமான
> மனிதரால் மட்டுமே
> தமது ஆழ்மன
> பயத்தை வெளியிட்டு,
> தம்மை முழுமையாக
> வெளிப்படுத்திக்கொண்டு
> தன்னம்பிக்கையுடன்
> உதவியை நாட முடியும்.

அதிர்ஷ்டவசமாக, அர்ஜுனனின் தேர் ஒட்டியாக இருப்பவர், அனைத்து உயிர்களையும் படைத்தவரும் உயிர்களின் உள்ளத்திலே இருப்பதை நன்கு அறிந்தவருமாகிய கிருஷ்ண பரமாத்மா. அர்ஜுனனின் உள்ளத்தில் இருக்கும் கவலையை அவர் மட்டுமே பார்க்க முடியும்.

அர்ஜுனனின் சந்தேகங்களுக்குச் சரியான விடையையும் அர்ஜுனனின் சிக்கலான சூழ் நிலைக்குச் சரியான தீர்வுகளையும் அவரால் மட்டுமே அளிக்க முடியும்.

Hands playing a flute
peacock feather

மனம்போகும் நாடகத்தில் இருந்து தப்பி விடுங்கள்

“ஒருவர் போரிட்டு இராஜ்ஜியங்களையும் செல்வங்களையும் அடைவதே தம் சுற்றத்தாருடன் ஆனந்தமாக இருப்பதற்காகத்தான்; ஆனால் இப்பொழுது அந்தச் சுற்றத்தார்களே, தங்களது செல்வங்களையும் உயிரையும் இழப்பதற்கும் தயாராகி இங்கே போர்க்களத்தில் வந்து நிற்கிறார்கள். பிறகு யாருக்காக நான் போர் புரிய வேண்டும்?" என்று அர்ஜுனன் வாதிடுகிறார்.

நாம் முன்பே பார்த்ததுபோல, அவர்கள் எல்லோரும் அர்ஜுனனது ஆச்சாரியார்கள், தந்தையர், பாட்டன்மார், மாமன்மார், மாமனார், பேரன், மைத்துனர் மற்றும் உறவினர்கள்.

அவர்களைக் கொல்வதன் மூலம் தமக்கு இந்த மூவுலக இராஜ்ஜியமே பரிசாகக் கிடைத்தாலும் சரி அல்லது அவர்கள் தம்மையே கொன்றாலும் சரி, தாம் அவர்களைக் கொல்லப் போவதில்லை என்று அர்ஜுனன் அறிவிக்கிறார்.

‘மூவுலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் கொல்ல விரும்பாத அவர்களை, இந்தப் பூமியின் காரணமாக எப்படி அழிக்க முன்வருவேன்? என்று தமது பேச்சுத் திறமையை வெளிக்காட்டி கிருஷ்ணரைக் கேள்வி கேட்கிறார்.

இந்தக் கேள்வியைக் கேட்கும்பொழுது, அர்ஜுனன் கிருஷ்ணரை மதுஸூதனனே! என்று அழைக்கிறார். மதுஸூதனன் என்றால் ‘மது என்னும் அரக்கனை கொன்றவன் என்று பொருள்!

கிருஷ்ணர் வேண்டுமானால் அழிப்பவராக
இருக்கலாம். ஆனால் அவர்
கிருஷ்ணரைப்போல இருக்க விரும்பவில்லை
என்பதனையே அர்ஜுனன் இங்கே குறிப்பால்
உணர்த்துகிறார்.

அர்ஜுனனுடைய குழப்பம் மேலும் ஆழமாகவும் சிக்கலாகவும் உருமாறியது.

நம்முடைய மனம்
நம்மைப்
பலவிதங்களில்
ஏமாற்றக்கூடியதாக
இருக்கிறது.

இப்பொழுது அர்ஜுனன், ஏன் அவர்
எதிரில் இருப்பவர்களை கொல்லக் கூடாது
என்பதற்கான நியாயங்களையும் ஒரு
போர்வீரராக இருக்கும் அவருக்கு எது அழகு
இல்லை, எது பெருமை தரக்கூடியது இல்லை
என்பதை பற்றிய தமது மதிப்பீடுகளையும்
சொல்ல முற்படுகிறார்.

அர்ஜுனனது ஆரம்பக் குழப்பம் அவரது மதிப்பீடு முறையில் இருந்தது. ஒரு க்ஷத்ரியராக எதிரிகளை அழித்து ராஜ்ஜியத்தையும் செல்வங்களையும் கைப்பற்றுவது அவரது கடமையாக இருந்தது.

> பரிசுப் பொருள் நடைமுறைக்குச் சாத்தியப்படாததாகவும் நாம் விரும்பாததாகவும் இருக்கும்பொழுது, அதனை எளிதாக வேண்டாம் என்று நம்மால் ஒதுக்கிவிட முடிகிறது .

ஆனால் இங்கு எதிரிகள் அவரது ஆச்சாரியர்களாக, தோழர்களாக, உற்றார் உறவினர்களாக இருந்ததே அவரது குழப்பத்திற்கு மிகப்பெரிய காரணம். இதைப் பார்க்கும் எவருக்கும் அவரது குழப்பம் நியாயமாகத்தான் இருந்தது.

ஆனால் இப்போதோ வலுவில்லாத வாதங்களால் தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார். அவருடைய மனம் அவரைப் பலவிதங்களில் ஏமாற்றிக் கொண்டிருந்தது.

இது நம்முடன் நாமே விளையாடும் ஒரு பொதுவான விளையாட்டு. போட்டி மிகுந்த சூழலில் ஆபத்துக்கள் அதிகமாகும்போதும், வசதி வாய்ப்புகள் குறையும்போதும் நாம் இந்த விளையாட்டை விளையாடுகிறோம்.

உண்மையில் கிடைக்கக்கூடிய பரிசுகளைவிடவும் நமது மனம் கட்டும் கோட்டைகள் பிரமாண்டமாக இருக்கின்றன. பரிசுப் பொருள் நடைமுறைக்குச் சாத்தியப்படாததாகவும் நாம் விரும்பாததாகவும் இருக்கும்பொழுது, அதனை எளிதாக 'வேண்டாம்' என்று நம்மால் ஒதுக்கிவிட முடிகிறது .

நாமே ஒரு பரிசை கற்பனை செய்துகொள்கிறோம், பிறகு அதனைத் தியாகம் செய்வதாகவும் கற்பனை செய்துகொள்கிறோம்.

நாம் கற்பனைப் பரிசுகளைத் தியாகம் செய்கிறோம், கற்பனையாகவே! கற்பனைப் பரிசுகளை கற்பனையாகவே தியாகம் செய்யும் நம்முடைய இந்தச் செயலை நாமே அங்கீகரித்துக்கொள்ளும்பொழுது, வாழ்வில்

நமக்கு இருக்கும் உண்மையான, கடினமான
சவால்களில் இருந்து விலகி எளிதாக
நடந்துவிட முடிகிறது.

அர்ஜுனன் இந்த விளையாட்டைத்தான்
விளையாடுகிறார். அவர்களால் தாம்
கொல்லப்பட்டாலும் சரி, தாம் அவர்களைக்
கொல்லப்போவதில்லை என்று சொல்கிறார்.
இது, அவருடைய மனம் அவர் மேல்
திணிக்கிற ஒரு பொய்.

> சத்தியமே உங்களுக்கு
> முக்தி அளிக்க முடியும்.
> அதை யாரும்
> உங்களிடம் இருந்து
> எடுத்துச் செல்ல
> முடியாது.

உண்மையில், அவர் நிகழ்த்தவிருக்கும் குல நாசத்தின் மூலம், தம்முடைய சொந்த அடையாளமும் பறிபோய்விடும் என்கிற எண்ணம்தான், அவரைக் கவலைகொள்ளச் செய்கிறது.

மேலும் இம்மூவுலகையும் பரிசாகப் பெற நேர்ந்தாலும் தமது சுற்றத்தாரையும் ஆச்சாரியர்களையும் கொல்லப் போவதில்லை என்றும் சொல்கிறார்.

இவ்வளவு சிறந்த பரிசே அவரைக் கவராதபொழுது, அவர்களை அழிப்பதால் பெறக்கூடிய இந்தப் பூவுலகம் மட்டும் எப்படி அவரைக் கவர முடியும் என்றும் அர்ஜுனன் கேட்கிறார். எப்படியானாலும் அர்ஜுனனுக்கு இந்த மூவுலகையும் யார் பரிசாக அளிக்கப் போகிறார்கள்?! மிகவும் உணர்ச்சி வயப்பட்டதின் விளைவாக, அவரது கற்பனையில் விளைந்த நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒரு காட்சியே அது.

தம் மனத்தையே ஏமாற்றத் தெரிந்தவரை யாராலும் ஏமாற்ற முடியாது

ஒருவேளை கிருஷ்ணபகவான், இந்தப் பிரபஞ்சத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் அர்ஜுனனிடம் கொடுத்திருந்தால், அர்ஜுனனின் குழப்பம் உண்மையில், இதைவிட மோசமானதாக இருந்திருக்கும்.

எது எப்படியோ, தமக்குள் உருவான ஒரு கேள்வியாக அர்ஜுனன் அதனைக் கேட்டதால், அவர் உயர்ந்த மனிதராகக் காட்சி அளிக்கிறார்.

தமிழில் நாட்டுப்புறக் கதை ஒன்று இருக்கிறது. ஒரு நரி ஒரு காகத்திற்குப்

நரியும் காகமும்

பழங்களை உண்ணக் கொடுத்து, அதனை வசீகரித்து பிடிக்க முயன்றது. நரி அருகில் சென்றால் அது தன்னைப் பிடித்து தின்றுவிடும் என்று அந்தக் காகத்திற்குத் தெரியும். அதனால் அந்தப் பழங்களின் மேல் அதற்கு ஒரு ஈர்ப்பு இருந்தாலும்கூட, அது புத்திசாலியான காகமாக இருந்ததால், அந்தப் பழங்களை நிராகரித்து விட்டது.

நரியிடம் "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் எனக்கு இது வேண்டாம்," என்று சொன்னது.

பிறகு தமக்குத்தானே, "அந்தப் பழம் புளிப்பாகத்தான் இருக்க வேண்டும்; இல்லையேல் நரியே அந்தப் பழங்களைச் சாப்பிட்டிருக்கும்!" என்று சொல்லி, தன்னைத் தானே தேற்றிக்கொண்டது.

இதேபோல்தான் அர்ஜுனனின் கதையும். போர்களை வெல்வதில் கிடைக்கும் பரிசு சிறியது என்றும், இந்த அகிலத்தையே ஆளுவதற்குக் கொடுத்தாலும்கூட, அவர் அதில் மயங்கப் போவதில்லை என்றும் தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.

அது, அலைபாயும் அவர் மனத்தைச் சாந்தப்படுத்தவும், உண்மையான பயத்தின் மூலத்திலிருந்து விடுபடவும் அவருக்கு உதவியது.

ஏனென்றால் பிரபஞ்சத்தின்
முழுக்கட்டுப்பாட்டையும் அர்ஜுனனிடம்
கொடுத்திருந்தால், அர்ஜுனனின் குழப்பம்
உண்மையில், இன்னும் மோசமானதாக
இருந்திருக்கும்.

மீண்டும் மீண்டும் மனிதர்கள் தங்களுடனும்
மற்றவர்களுடனும் இதே விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம்
ஸத்யத்தை எதிர்கொள்ள முடியாத நிலை
ஏற்படும்பொழுது இந்த விளையாட்டு
ஆரம்பிக்கிறது. அதனால் நம்மால் ஸத்யத்தைச்
சொல்ல முடிவதில்லை.

> காரணம் எதுவாக
> இருந்தாலும் சரி,
> ஸத்யத்தைச் சொல்பவர்
> மற்றும் ஸத்யத்தைக்
> கேட்பவர்
> ஆகிய இருவருக்குமே
> ஸத்யம்
> ஆபத்தானதுதான்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி,
ஸத்யத்தைச் சொல்பவர் மற்றும் ஸத்யத்தைக்
கேட்பவர் ஆகிய இருவருக்குமே ஸத்யம்
ஆபத்தானதுதான்.
அதனால் ஸத்யத்தை எல்லோரும்
ஏற்றுக்கொள்கிறவிதத்தில் மூடி
மறைத்துத்தான் வழங்குகிறோம். பின்பு
அதனை மறுப்பதில் சிக்கிக்கொள்கிறோம்.

அர்ஜுனன், தாம் இதுவரை பேணிக்காத்து வளர்த்து வந்த தம் சொந்த பந்தங்களை இழப்பதன் மூலம் தம்முடைய சொந்த அடையாளத்தை இழக்க நேரிடுமோ என்று பயப்பட்டார். இந்த உண்மை அவரைக் காயப்படுத்துமென்பதனால், அதைப் பார்ப்பதற்கு அவர் தயாராக இல்லை.

உண்மையில் இந்தச் ஸத்யத்தை அவர் உணரக்கூட இல்லை. ஒரு வேளை அது, அவரது விழிப்புணர்வற்ற தன்மையில் நன்றாக மறைக்கப்பட்டிருந்திருக்கலாம். நம்மில் பலருக்கும் நாம் வகிக்கும் பாத்திரங்கள், நாம் ஏற்கும் பொறுப்புகள், நமது கவலைகள், மற்றும் சமுதாயத்தின் அங்கீகாரம் போன்றவற்றில்தான் நமது அடையாளமே இருக்கிறது.

நம்முடைய தனித் தன்மைக்கு, நம்முடைய அடையாளத்திற்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் 'எனது' என்கிற இந்த உடைமைகள் மற்றும் சொந்தங்கள் இல்லாவிட்டால், நாம் நம்மைத் தொலைத்ததாகவே உணர்கிறோம். மேலும் 'நான்' என்னும் அடையாளத்தையும் இழக்கிறோம்.

நம்மைப்போலவே, அர்ஜுனனும் உண்மையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக, நிறைய காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார்.

Hands playing a flute

இறைவன் பேசுவது கேட்கும்...

மனத்தை நிறுத்தினால்!

ஒருமுறை, ஓர் அரசு உயர் அதிகாரி, நடு இரவில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். என்னை உடனடியாகப் பார்க்க விரும்பினார். "உங்களை இப்போதே பார்க்க வேண்டும்," என்று சொன்னார்.

"நான் நம்பிக்கை இழந்து இருக்கிறேன். நான் பிரச்சினைகளால் சூழப்பட்டு, மனச்சோர்வுடன் இருக்கிறேன். நான் தற்கொலைகூட செய்து கொள்ளலாம். 'வாழ்வா சாவா' என்கிற சூழல் இருக்கிறது, நான் உங்களை இப்போதே பார்த்தாக வேண்டும்," என்று சொன்னார்.

நான் அவருடன் சிறிது நேரம் பேசியதில் அவரை அமைதிப்படுத்த முடிந்தது. நாளை காலை வந்தால் அவரைச் சந்திக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்தேன்.

"இல்லை, இல்லை என்னால் நாளை அங்கு வர முடியாது. எனக்குத் தவிர்க்க முடியாத அவசரக் கூட்டங்கள் இருக்கின்றன. வேறொரு சமயத்தில் நேரம் கிடைக்கும்பொழுது நான் வருகிறேன்," என்று சொன்னார்.

சில நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் என்னைப் பார்ப்பது அவரைப் பொறுத்தமட்டிலும் 'வாழ்வா, சாவா' என்னும் பிரச்சினையாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, காலையில் நிகழப்போகும் கூட்டம் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது!

நாம், நாம் சந்திக்கும் சூழ் நிலைகளைப் பற்றிய மாயத் தோற்றங்களையும் அவை நமது இருப்புத் தன்மைக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்ற கற்பனைகளையும் மனத்தில் உருவாக்குகிறோம்.

பிறகு, நம் மனத்தில் இனி நமக்கு
என்னவெல்லாம் நடக்கப் போகின்றன
என்பவற்றைக் குறித்த மனக்கோட்டைகளைக்
கட்ட ஆரம்பித்து விடுகிறோம். அவை
நல்ல முடிவுகளாகவும் இருக்கலாம் அல்லது
கஷ்டமான முடிவுகளாகவும் இருக்கலாம்.

> நம்முடைய மனம்
> உண்மையை
> எதிர்கொள்ளாமல்
> அதிலிருந்து
> தப்பிப்பதற்காக,
> நிறைய
> காரணங்களைக்
> கண்டுபிடித்துக்
> கொண்டே
> இருக்கும்.

நாம் நிகழ்காலத்தை விழிப்புணர்வுடன்
எதிர்கொள்வதைத் தவிர, மற்ற
எல்லாவற்றையுமே செய்கிறோம்.

நிகழ்காலத்தை, இந்தக் கணத்தை
எதிர்கொள்ளச் சொல்கிறார் கிருஷ்ணர்.
அர்ஜுனனை நிகழ்காலத்தில் இருக்கும்படி
வற்புறுத்துகிறார்.

ஒவ்வொரு
முயற்சியுமே ஒரு
புதிய
முயற்சிதான்.
அது முன்பு
நடந்தவற்றுடன்
தொடர்புடையது
இல்லை.

எப்போது அர்ஜுனன் கிருஷ்ணரின் உபதேசங்களுக்குச் செவி சாய்த்து, தமது கவனத்தை நிகழ்காலத்தில் செலுத்துகிறாரோ, அப்போதே அவரது சந்தேகங்களும் மாயத் தோற்றங்களும் மாயமாகக் கரைந்து விடுகின்றன. அதற்குப் பிறகுதான், தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனன் உண்மையில் புரிந்துகொள்கிறார். முழுமனத்துடன் அந்த நோக்கத்தை நிறைவேற்றத் துணிகிறார்.

கேள்வி: அர்ஜுனன் வெற்றிகளைக் குவித்திடும் மாவீரராக இருந்த போதிலும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார். அவருக்காக உதவிபுரிய ஒரு குரு தயாராக இருந்தார். மற்றவர்களால் என்ன செய்ய முடியும்?

மனச் சோர்வுகளில் இரண்டுவிதமான மனச்சோர்வு உண்டு.

ஒன்று, தோல்வியினால் ஏற்படும் மனச்சோர்வு. ஒரு முடிவை எதிர்நோக்கி உழைத்து, அதில் நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடையும்பொழுது, நீங்கள் ஏமாற்றமடைகிறீர்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு உங்கள் விடாமுயற்சியின் தன்மையைப் பொறுத்து, நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து அதில் வெற்றி அடைவீர்கள்; அல்லது அதனை விட்டுவிட்டு வேறு ஒரு பொருளை நோக்கிச் சென்று விடுவீர்கள்.

இதனால்தான் பொறுமையும் விடாமுயற்சியும் மிகச்சிறந்த நற்குணங்களாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு முயற்சியுமே ஒரு புதிய முயற்சிதான்.

அது முன்பு நடந்தவற்றுடன் தொடர்புடையது இல்லை. இதைத்தான் அன்க்ளட்ச் என்கிறேன்.

எதுவரை உங்களது பழைய தோல்வியைப் புதிய தோல்வியோடு தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருக்கிறீர்களோ, அதுவரை நீங்கள் சக்திவாய்ந்தவராக இருக்க முடியும்.

தொடர்ந்து முயற்சி செய்து, முடிவில் வெற்றியையும் பெற முடியும்.

பெரும்பாலும் நீங்கள் செய்வதெல்லாம், ஒரு நாணயத்தைச் சுண்டி விடுவதுபோலத்தான் இருக்கிறது! இறுதி முடிவு, எது வேண்டுமானாலும் நிகழக்கூடிய தன்மைவாய்ந்ததாகவும் ஒரு சாத்தியக்கூறாகவும் மட்டுமே இருக்கிறது.

எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

வளர்ச்சி அடையாத நாடுகளில் பொதுவாக பெரும்பான்மையான மக்கள் தோல்வியால் ஏற்படும் மனச்சோர்வினால்தான் துன்பப்படுகிறார்கள். அவர்கள் பொருளாதார ரீதியில் பெறக்கூடிய உடைமைகளையும் பொருட்களையும் அடையவே விரும்புகிறார்கள்.

அவற்றை அடையும்வரை தொடர்ந்து உழைக்கிறார்கள். அது கிடைக்காதபொழுது, சில சமயங்களில் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

மற்றொரு வகையான மனச்சோர்வு, வெற்றியால் உண்டாகும் மனச்சோர்வு, இது பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகளில்தான் காணப்படுகிறது.

இங்கு, எதையெல்லாம் அடைய வேண்டும் என்று கற்பனை செய்தீர்களோ அவை எல்லாவற்றையும் வெற்றிகரமாக அடைந்து விடுகிறீர்கள்.

ஆனால் அடைந்த பிறகு, இவை
அனைத்தையும் அடைந்ததன் லக்ஷியம்தான்
என்ன என்று வியக்க ஆரம்பித்து
விடுகிறீர்கள்!

செல்வம், உறவு முறைகள்,
இன்பங்கள் என்று வெளியுலகத்தில்
தேடிப்பெற்ற இந்த அனைத்து வெளியுலக
தேவைகளுமே, மேலும்மேலும்
தேவைகளையே உருவாக்குகின்றன.

> வேத காலத்தில்
> நீங்கள்
> உங்கள் துணையை
> மாற்றவே முடியாது.
> அதற்குப் பதிலாக
> உங்கள்
> குணாதிசயத்தையே
> வேண்டுமானால்
> மாற்றிக் கொள்ளலாம்.

ஒன்றை அடைவதால் ஏற்படும் மகிழ்ச்சி நம்முடைய லக்ஷியமாக இருப்பதில்லை. அந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதில்லை. அதற்குள் அடுத்தப் பொருளை அடைவதற்கான இலக்கை நிர்ணயித்து விடுகிறோம். ஆகவே 'அடைய வேண்டும்' என்பது மட்டும்தான் நமது லக்ஷியமாகிறது. அடைவதினால் ஏற்படும் 'மகிழ்ச்சி', நம் லக்ஷியமாக இருப்பதில்லை; இந்த ஓட்டப்பந்தம் ஒருபோதும் முடியப்போவதில்லை.

இது ஒரு போதையாகி விடுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் அதிகம் பெறுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அவர் இன்பத்தை இழக்கிறார்.

அமெரிக்காவில், மக்கள் மீண்டும் மீண்டும் என்னிடம், “நாங்கள் விரும்பியது எல்லாமே எங்களிடம் இருக்கின்றன, சொல்லப்போனால் நாங்கள் கற்பனை செய்ததைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கின்றன; இருந்தும் எங்களிடம் திருப்தி இல்லை. நாங்கள் விரும்பியதெல்லாம் எங்களிடம் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஏன் இவற்றை விரும்பினோம் என்றுதான் புரியவில்லை. எங்களிடம் மகிழ்ச்சி இல்லை,”என்று சொல்வதுண்டு.

ஆம், மகிழ்ச்சி இல்லைதான். சந்தோஷம் வெளியில் இருந்து வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால்தான் உங்களின் வாகனத்தை வருடத்திற்கு ஒருமுறையும், வீட்டை மூன்று வருடத்திற்கு ஒருமுறையும், மனைவியை ஐந்து வருடத்திற்கு ஒருமுறையும் மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.

இல்லை, நீங்கள் நினைப்பதுபோல மகிழ்ச்சி வெளியிலிருந்து

உள்ளுலக மாற்றம்
மட்டுமே
ஆனந்தத்தைக்
கொண்டுவருகிறது.

வருவதில்லை. மகிழ்ச்சி உள்ளிருந்தே
வருகிறது. அதனால்தான் வேத கலாச்சாரத்தில்
விவாகரத்து என்ற வார்த்தையே இல்லை.
அவர்களுக்கு அந்தக் கருத்துக்கூட
தெரியாமலேயே இருந்தது.

வேத காலத்தில் நீங்கள் உங்கள் துணையை மாற்றவே முடியாது.

அதற்குப் பதிலாக உங்கள்
கண்ணோட்டத்தையே, குணாதிசயத்தையே
வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

வெளியில் ஏற்படும் மாற்றங்கள் ஒருபோதும்

உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு
வருவதில்லை; உள்ளுலக மாற்றம் மட்டுமே
ஆனந்தத்தைக் கொண்டுவருகிறது.

எப்படி மனிதர்கள் வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வைச் சமாளிக்கிறார்கள்?

ஒன்று, போதையின் மூலமாகச்
சமாளிக்கிறார்கள். ஒருவர் ஏன் பொருட்களைச்
சேகரிக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல்
பொருட்களைச் சேகரித்துக்கொண்டே
இருக்கிறார்.

> உங்கள்
> மனத்தின் கட்டமைப்பை,
> மென்பொருளை
> மாற்றுங்கள்!
> ‘இது கடினம்’ என்று
> சொல்வதற்குப்
> பதிலாக
> ‘இது எளிது’ என்று
> சொல்லத்
> தொடங்குங்கள்.

மிகச்சரியான உதாரணம் என்னவென்றால், பொருட்களின் வரவு அதிகமாக அதிகமாக, அவற்றினுடைய மதிப்பை அவை இழந்து விடுகின்றன. அவற்றினுடைய மதிப்பு குறைந்து விடுகிறது. இது ஒருபோதும் தீர்வாக முடியாது.

மதுபானம், போதைப் பொருட்கள், சொத்துக்கள் அல்லது, காமம் என்று எதுவாக இருந்தாலும் சரி, அதிகமாக அதிகமாக அது அளிக்கும் பலன் குறைந்து கொண்டே போகிறது. உண்மையில் அவை மேலும் மேலும் துக்கத்தைத்தான் கொடுக்கிறது. அவ்வளவே.

வெற்றியினால் ஏற்படும் மனச்சோர்வு, போதை பழக்கத்திற்கு வழிவகுக்கும் அல்லது உங்களை தற்கொலைக்கு இட்டுச் செல்லும் அல்லது மெதுமெதுவாக உள்ளுக்குள் இருந்து கொன்ற படி, உங்களை உயிருடன் இருக்கும் ஒரு ஜடப்பொருளைப்போல ஆக்கிவிடும்.

போதை நேரடியாகத் துக்கத்தை வரவழைக்கும்; மனச்சோர்வு மறைமுகமாகத் துக்கத்தை வரவழைக்கும்; இரண்டு வழிகளுமே ஒரே முட்டுச்சந்தில்தான் முடியும்.

மூன்றாவது வழியைப் புத்திசாலியான சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள், அது தியானம் செய்வது. நீங்கள் மனச்சோர்வைப் பற்றி அறிய வேண்டுமானால், அதில் விழுந்து மூழ்கி, ஆராய்ச்சிகள் செய்து, அதிலிருந்து வெளிவர வேண்டும்.

மனச்சோர்வை எதிர்த்துச் சமாளிக்க இந்த மூன்றுவழிகள்தான் இருக்கின்றன. நீங்கள்தான் உங்களுடைய சொந்தப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும்.

"ஆனால் இது கடினமல்லவா?" என்று நீங்கள் கேட்கலாம்.

இல்லை!

வெறுமனே, உங்கள் மனத்தின் கட்டமைப்பை, மென்பொருளை மாற்றுங்கள்! 'இது கடினம்' என்று சொல்வதற்குப் பதிலாக 'இது எளிது' என்று சொல்லத் தொடங்குங்கள்.

'கடினம்' என்ற வார்த்தையை உங்கள் மனத்தில் உருவாக்குவதே நீங்கள்தான். 'இது எளிது' என்பதை முதலில் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாது. அது எதிர்க்கும்.

நீங்கள்தான்
உங்களுடைய
சொந்தப் பாதையைத்
தேர்வு செய்ய
வேண்டும்.

'இது எளிது, இது எளிது' என்று
உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் சொல்வதன்
மூலம், வாழ்க்கையைப் பற்றிய உங்களது
பார்வையே முற்றிலும் நேர்மறையாக,
உறுதியாக மாறுவதை நீங்கள் காண
முடியும்.

தன்னையுணர்ந்த ஞானி ரமண மஹரிஷி அழகாகப் பாடுகிறார்,

அய்யே அதி ஸுலபம் ஆத்ம வித்தை அய்யே அதி ஸுலபம்!

தன்னையுணர்தல் மிக எளிது, ஞானமடைதல் மிக எளிது!

அவருடைய பக்தர்கள், "ஆத்ம வித்தை எப்படி சுலபம் என்று நீங்கள் சொல்ல முடியும்" என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், "வெளியுலக வாழ்க்கையில் ஒரு நல்ல வாழ்க்கை முறை வேண்டுமானால் அல்லது வேறு எதனை அடைய வேண்டுமானாலும் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆனால் உள்ளுலகில் எதனையாவது அடைய வேண்டுமானால், நாம் தளர்வாகவும் அமைதியாகவும் இருப்பதே போதுமானது," என்று சொல்கிறார்.

உங்களுக்கு கடினமானவற்றை அடைவது எப்படி என்பதற்கான பயிற்சி போதிய அளவுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள்

எளிமையானதை மறந்துவிட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அது உங்களுக்குள் ஆழ்ந்து பார்ப்பதே!

உங்கள் மனத்தை நல்ல வார்த்தைகளால் அழைப்பதோ அல்லது உங்களுடன் நீங்களே அன்பாகப் பேசுவதோ உங்களுக்குக் கடினமானது என்று நீங்கள் சொல்ல முடியாது. நிச்சயமாக உங்களால் இதைச் சுலபமாக செய்ய முடியும்.

இதைப் பெறுவதற்கு உங்களுக்குக் கடினமான நுட்பங்கள் எல்லாம் தேவையில்லை. மக்கள், மனத்தின் சலனமற்ற தன்மை, ப்ராணாயாமம் போன்ற பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசுவார்கள். அவை மேலும் மேலும் குழப்பத்தையே உண்டாக்கும்.

த்​யானம் எளிமையானது. இப்பொழுது நீங்கள்
இங்கு எப்படி உட்கார்ந்திருக்கிறீர்களோ
அப்படியே அமர்ந்துகொண்டு, வெறுமனே
உங்கள் எல்லையை உணருங்கள். நீங்கள்
எங்கு இல்லையோ, அங்கு போகாமல்
இருப்பதே த்​யானம். நீங்கள் எங்கு
இருக்கிறீர்களோ அங்கேயே இருப்பதுதான்
த்​யானம்.

பொதுவாக, நீங்கள் இங்கு இருக்கும்போது, உங்கள் வீட்டைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்பொழுது மாலையில் நடக்க இருக்கும் சொற்பொழிவைப் பற்றி யோசிக்கிறீர்கள்.

> உங்கள்
> உடலுக்குள்
> நீங்கள் முழுமையாக
> இருந்தாலேபோதும்,
> உங்கள்
> வாழ்க்கையை
> உணரத் தொடங்கி
> விடுவீர்கள்

சொற்பொழிவில் இருக்கும்போது, வீட்டிற்கு எப்போது திரும்ப முடியும் என்று யோசிக்கிறீர்கள். வீட்டிற்குப் போனதும் மறுநாளின் அலுவலக வேலையைப் பற்றி யோசிக்கிறீர்கள்.

அலுவலகத்தில், மாலையில் வெளியில் செல்வதைப் பற்றித் திட்டமிடுகிறீர்கள். வெளியில் இருக்கும்பொழுது மீண்டும் வீட்டைப் பற்றி நினைக்கிறீர்கள்.

உங்கள் உடம்பு இருக்கிறஇடத்தில் நீங்கள் ஒருபோதும் இருப்பதில்லை. அதனால் நிகழ்காலத்தில் இருப்பதையும் விழிப்புணர்வுடன் வாழ்வதையும் நான் த்​யானம் என்று சொல்கிறேன்.

அதிகமான வார்த்தைகளாலும்
கருத்துகளாலும் நாம் எப்போதுமே
பாதிப்படைகிறோம். வெறுமனே தளர்வாக
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே
இருங்கள்.

பூமியின் தொடுதலை உணருங்கள், எப்படி
உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்பதை
உணருங்கள். உங்கள் உடலின் எல்லாப்
பாகங்களையும் உணருங்கள்.

வெறுமனே நிகழ்காலத்தை அனுபவியுங்கள்,
உணருங்கள். உங்கள் உடலுக்குள் நீங்கள்
முழுமையாக இருந்தாலேபோதும், உங்கள்
வாழ்க்கையை உணரத் தொடங்கி விடுவீர்கள்.

ஸத்யம் மிகவும்
எளிமையானது ;
அது அங்கு
நமக்கு
வழிகாட்டுவதற்காகவே
இருக்கிறது.
ஆனால் நாம்தான்
அதை மிகவும்
கடினமாக்கி விடுகிறோம்!

இந்தக் கருத்து மிக எளிமையாக இருப்பதனால்தான், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கிறது!

ஸத்யத்தைப் பற்றிய ஜென் பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது:

“அது மிகவும் தெளிவாக இருப்பதனாலேயே, அதைப் பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறது.”

ஒருமுறை ஒரு முட்டாள் கையில் விளக்கை வைத்துக்கொண்டு தீயைத் தேடிக் கொண்டிருந்தார்.

‘தீ’ என்றால் என்னவென்று அவர் அறிந்திருப்பாரேயானால் அவருடைய அரிசியைச் சீக்கிரம் சமைத்திருக்க முடியும்.

Man walking with a lantern

ஸத்யம் மிகவும் எளிமையானது ; அது அங்கு நமக்கு வழிகாட்டுவதற்காகவே இருக்கிறது. ஆனால் நாம்தான் அதை மிகவும் கடினமாக்கி விடுகிறோம்!

நம் வாழ்க்கை முழுவதும், ஆனந்தத்தை நம் உடலைவிட்டு வெளியில் தேடி அலைகிறோம். அதனால் இந்தத் தேடுதலில் இருந்து வெளியில் வர மிகவும் சிரமப்படுகிறோம்.

நாம் பொதுவாக, கடந்தகாலத்தில் நாம் செய்ததைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையோ அல்லது அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதையோ அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று கற்பனை செய்து வாழ்வதையுமே நமது பழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் கடந்தகாலத்திலும் எதிர் காலத்திலுமே, வாழப் பழகியிருக்கும் உங்கள் இயல்பைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? அதற்காகக் கவலைப்படாதீர்கள். இதுவே நீங்கள் ஆனந்தத்திற்கான பாதையை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

இதோ ஒரு தர்க்க ரீதியான உதாரணம்; உங்களுக்குத் தலைவலி இருக்கும்பொழுது, அதிலிருந்து வெளியில் வர முயற்சி செய்கிறீர்கள். ஒரு மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, வலியிலிருந்து வெளிவருகிறீர்கள்.

காரணம், வலியில்லாமல் இருப்பதுதான் உங்கள் இயற்கையான சுபாவம். சீக்கிரம் இந்த நிலைக்கு வரவே நினைக்கிறீர்கள்.

அதேபோல் நீங்கள் கடந்தகாலத்தைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதையுமே வழக்கமாகக் கொண்டிருக்கும் உங்களுடைய இயல்பைப் பற்றி வருத்தப்படுகிறீர்கள் என்றால், அதன் பொருள் என்ன? ஏனென்றால் இந்த இயல்பிலிருந்து நீங்கள் வெளிவர நினைக்கிறீர்கள்.

அது உங்கள் இயல்பாக இல்லாததினால்தானே அதனிடம் இருந்து வெளிவர நினைக்கிறீர்கள்?

பின் ஏன் கவலையுடன் உங்களைத்
தொடர்புபடுத்திக்கொள்கிறீர்கள்?
நிகழ்காலத்தில் வாழ்வதுடனேயே உங்களைத்
தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள்.

நீங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து
அமெரிக்காவிற்கு வந்து குடியேறி முப்பது
வருடமாகிறது. நீங்கள் பிரெஞ்சு மொழி
பேசிப் பழகாததால், பிரெஞ்சு மொழி
உங்களுக்கு மறந்துவிட்டது.

பிறகு ஒரு நாள், உங்களுடன் ஒருவர் பிரெஞ்சு மொழியில் பேசத் தொடங்கினால்,

> நீங்கள்
> நிகழ்காலத்திற்குள்
> நுழையும்பொழுது
> குற்ற உணர்ச்சி,
> வேதனை, பேராசை,
> கற்பனை இவற்றிலிருந்து
> விடுபடுவீர்கள்.

உங்களுக்கு அது புரியாமல் போய் விடுமா அல்லது அந்த மொழியே ஞாபகம் இல்லாமல் போய் விடுமா?

இதேபோல்தான், ஆனந்தம் மற்றும் 'நிகழ்காலத்தில் வாழுதல்' இவை எல்லாம் உங்கள் தாய்மொழியைக் காட்டிலும் அருகாமையில் இருக்கும் மொழி. ஏழு வயதுவரையில் நீங்கள் அந்த நிலையில்தான் இருந்தீர்கள்.

அதனால் மறந்துவிட்ட அந்த மொழியை, அந்த நிலையை நீங்கள் மீண்டும் அடைய தொடங்குங்கள்.

நிகழ்காலத்திற்குள் நுழையும்பொழுது குற்ற உணர்ச்சி, வேதனை, பேராசை மற்றும் கற்பனைகளிலிருந்து விடுபடுவீர்கள். அது, கடந்தகால நிகழ்வுகளை, எதிர்காலத்தோடு பொருந்திப் பார்க்கும் குணத்திலிருந்து உங்களை விடுவிக்கிறது. பொருத்திப் பார்க்கும் இந்தக் குணம்தான் உங்களை நோக்கித் துன்பங்களை ஈர்க்கிறது.

வெற்றியும்,
தோல்வியும் உங்கள்
மனத்தில்தான்
இருக்கிறது என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வெற்றியும்
தோல்வியும் உங்கள் மனத்தில்தான்
இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்,
இறுதி விளைவைப் பற்றிக் கவலைப்படாமல்
செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.

பிறகு, எந்தவிதமான சூழலிலும் மனச்சோர்விற்கு ஆளாகாமல், எந்த ஒரு நிகழ்விலிருந்தும் வெளிவந்து விடுவீர்கள். மனச்சோர்விற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளிலிருந்தும் நீங்கள் வெளிவந்து விடுகிறீர்கள்!

Hands playing a flute

வாழ்வில் குழப்பமில்லை

செயலின் விளைவை

எதிர்பார்க்காதவரை!

Lord Krishna with flute

ஜனார்த்தனா! திருதராஷ்டிர புதல்வர்களைக் கொல்வதால் நமக்கு
என்ன இன்பம் வரப்போகிறது? இவர்களைக் கொல்வதால்
பாவமே நம்மை வந்தடையும்.

நம் தோழர்களையும் திருதராஷ்டிரப் புத்திரர்களையும் கொல்லுதல்
நமக்குத் தகாது. மாதவா, நம் உற்றாரைக் கொன்றுவிட்டு, நாம்
எப்படி இன்புற்று இருப்பது?

ஜனார்த்தனா! பேராசையால் கவரப்பட்ட மனத்தையும்
குலநாசத்தால் உண்டாகும் கேட்டையும் நண்பர்களுடன்
சண்டையிடுவதால் உண்டாகும் பாதகத்தையும் இவர்கள்
பார்ப்பதில்லை.

குலநாசத்தால் விளையும் கேட்டினை நன்கு உணர்ந்த நாம் ஏன்
இப்பாதகத்திலிருந்து பின்வாங்கக் கூடாது?

இங்கு அர்ஜுனனின் குழப்பம் மிகத் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. அர்ஜுனனின் முன்பு இரண்டுவிதமான முடிவுகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றை தாம் தெளிவாக நம்பிவிட வேண்டும் என்று எண்ணுகிறார்.

முதல் முடிவானது, “போர் புரிவதே தவறானது, குறிப்பாக உற்றார் உறவினர்களுக்கு எதிராகப் போர் புரிதல் மிகவும் தவறானது. அதனால் போர் தொடங்குவதற்கு முன்பே அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறிவிட வேண்டும்,” என்று நினைக்கிறார்.

இதுவரையில் அவர் புரிந்த வாதங்கள் அனைத்தும் இந்தச் சிந்தனையின் அடிப்படையில்தான் இருந்தன. ஆனாலும் அதே சமயத்தில், அவர் ஒரு க்ஷத்ரியர் என்ற வகையில் அவர் போர்புரிவது சரிதான் என்றும் நினைக்கிறார். இவ்வாறு அவர் நினைக்கிறபட்சத்தில், ‘போர்புரிய வேண்டும்’ என்ற தம்முடைய அந்த பழைய மன நிலைக்கே செல்ல அவர் வேண்டியிருக்கிறது.

உண்மையில் சுற்றத்தாருக்கு எதிராகப் போர் புரிதல் தவறானது என்பதை அர்ஜுனன் நம்பி இருந்தால், அவர் போர்க்களத்திற்கு வந்திருக்கவே மாட்டார்.

அர்ஜுனனது விழிப்புணர்வின் காரணமாக,
“நான் கடமையில் இருந்து பின்வாங்குவதா?”
என்ற கேள்வியும் அவருள் எழுகிறது.

ஓர் உண்மையான சீடர்,
தம் மனம் என்ன
சொல்கிறது என்பதையும்
கேட்டுக்கொள்கிறார்.
அதே சமயம்
வழிகாட்டுதலுக்காக
தம் குருவை
நோக்கித் திரும்புகிறார்.

நல்லவேளையாக, அர்ஜுனன் தம் மனம் என்ன சொல்கிறது என்பதையும், விழிப்புணர்வு சொல்வதையும் கேட்டுக்கொள்கிறார், அதே சமயம் வழிகாட்டுதலுக்காகவும் தீர்வுக்காகவும் தம் குருவை நோக்கித் திரும்புகிறார்.

அர்ஜுனனது மனம் இப்பொழுது இன்னுமொரு வாதத்தை முன் வைக்கிறது. துரியோதனனையும் அவரது உறவினர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், தவறிழைத்தவர்கள் என்றும் அர்ஜுனன் ஏற்றுக்கொள்கிறார்.

தமக்கும் தம் சகோதரர்களுக்கும் தம் மனைவிக்கும் அவர்கள் செய்தது எல்லாமே மன்னிக்க இயலாத குற்றம் என்றும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அர்ஜுனன் சொல்கிறார்.

நாட்டின் சட்டமும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை, அவை அதை ஏற்றுக்கொள்ளவே செய்யும். எந்தவிதத்தில் பார்த்தாலும் தவறிழைத்தவர்களை, அவர்கள் செய்த தவறுகளுக்கான தண்டனையாக, அவர்களைக் கொல்லும் அர்ஜுனனுடைய செய்கைகள் நியாயமானதாகவே இருக்கின்றன.

"ஆனால் ஒரு தவறால் மற்றொரு தவறைச் சரிசெய்துவிட முடியுமா? எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் என் சுற்றத்தாரைக் கொல்லுவதால் நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

அவர்களது தவறுகளுக்கு, நான் செய்யப் போகும் தவறு ஒரு பரிகாரமாக முடியாதே. அது என்னை மேலும் மேலும் துக்கத்தில்தானே ஆழ்த்தும்," என்று அர்ஜுனன் கேட்கிறார்.

அர்ஜுனனது குழப்பத்திற்கு இரு காரணங்கள் மையமாக இருக்கின்றன.

முதலாவதாக, அது உறவுகளோடு சம்மந்தமுடையது. நமக்கு ஏற்கெனவே தெரிந்தவர்களுக்குத் தீங்கிழைக்கும்படி நம்மை யாராவது கேட்டுக் கொண்டால், நாம் எப்படி உணர்வோமோ அதுபோன்று அர்ஜுனனும் உணர்ந்தார். எப்பொழுதுமே அறிமுகமில்லாத மனிதர்களைக் குறை சொல்வதும் தண்டிப்பதும் மிகவும் எளிதானது. முகம் தெரியாமல் இருந்துவிட்டால் பயப்பட வேண்டியதில்லை.

நன்கு பழகி நட்புறவோடு இருக்கும் மனிதர்களிடமும், நன்கு அறிந்தவர்களிடமும் எதிர்மறையாக நடந்துகொள்ளும்பொழுது, அந்த நட்பே உடைந்துவிடும் அளவுக்கு அபாயம் இருக்கிறது, அது நியாயமான செய்கையாக இருந்தாலும்கூட!

இதுபோன்ற குழப்பமான சூழலை எதிர்கொள்ள வேண்டுமானால், ஒருவர் பற்றற்ற மன நிலையை உருவாக்கிக்கொள்வது அவசியமாகிறது. அது மட்டுமே அவரை செயல்களினால் விளையும் பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் செயல் புரிய அனுமதிக்கும். அவர் செயல்முறையையும் வழியையும் பின்பற்றி, விளைவை செயல்முறையிடமே விட்டு விடுகிறார்.

அறியாமை விலகிட வன்முறையும் விலகிடும்

போகும் பாதை சரியானதாக இருக்கும்வரையில், அந்தப் பாதை எந்த ஒரு இலக்கை நோக்கிப் போனாலும் சரி, அது சரியானதாகவே இருக்கும்.

பயணம் செய்யும் பாதை சரியானதாக இருந்ததேயானால், அடையப்போகும் இலக்கைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, நிச்சயம் அது சரியான இலக்காகவே இருக்கும்.

காலப்போக்கில், செயல்முறை - பயன் அல்லது பாதை - இலக்கு இவற்றிற்கிடையே இருக்கும் இந்தத் தொடர்பு, மதங்கள் மற்றும் சமுதாயம் ஏற்படுத்திய பிரிவினைகளால் உடைக்கப்பட்டுவிட்டன. மதம் மக்களை இணைக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அனைவரது கூற்றுக்கும் முரண்பாடான வகையில், மதம் பிரிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மதம், பிரித்து வைத்து அழிக்கிறது. வேறு எந்தக் காரணத்தைக் காட்டிலும் மதங்களால் உண்டான போர்களாலேயே அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ரஷ்ய அதிபராக இருந்த லெனின் தமது புகழ்பெற்ற உரையில் சொல்லியிருப்பது போல், "மதம் என்னும் அபின், மனிதர்களுக்கு இடையே உள்ள உணர்ச்சிகளை மழுங்கடித்து விடுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இழிவுபடுத்தவும் முடமாக்கவும் கொல்லவும்கூட அது அனுமதிக்கிறது."

போகும் பாதை
சரியானதாக
இருக்கும்வரையில்,
எந்த ஒரு
இலக்கை நோக்கி
அந்தப் பாதை
போனாலும் சரி,
அது
சரியானதாகவே
இருக்கும்.

பல நூற்றாண்டுகளாக, பல தேசங்களில்,
மதத்தின் பெயரால் என்ன நடந்ததோ
அதன் நவீன பிரதிநிதிகளே, இன்றைய
தீவிரவாதிகள். இது ஒன்றும் புதிதல்ல.

காலங்காலமாக ஒருவரை ஒருவர்
அழித்துக் கொள்ளுவது என்பது நடந்து
கொண்டேதான் இருக்கிறது. மதங்களுக்கு
உள்ளே செயற்கையாக உருவாக்கப்பட்ட
பிரிவுகளாலும், மதங்களுக்கு இடையே
கடவுள்களின் பெயராலும், கடவுளைக்
காக்கும் முயற்சியிலும் இந்த அழிவுகள்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

மதத்தின் பெயரால் கொல்வதற்குப் போதுமான
காரணங்கள் கிடைக்காதபொழுது, மனிதன்,
தோலின் நிறம், மொழி மற்றும் கலாச்சார
வித்தியாசங்கள், எல்லைப் பிரச்சினைகள் என
இப்படிப் பல விவேகமுள்ள காரணங்களைக்
கண்டறிந்து, பிரிவினையை ஏற்படுத்திக்
கொல்லத் தொடங்கினான்.

வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிற
எந்த ஒன்றுமே, பயத்தையோ அல்லது
நெருக்கடியையோ உருவாக்கக்கூடிய எந்த
ஒரு வாய்ப்புமே, மக்களிடையே பிரிவை
ஏற்படுத்தி அழிவை உண்டாக்கப் போதுமான
காரணமாக இருந்தது.

தனிமையைத்
தவிர்க்க
வேண்டுமானால்
எந்த ஒரு மனிதனும்
ஒரு தனித் தீவல்ல
என்பதை நாம்
புரிந்துகொள்ள
வேண்டும்.

இன்றைய சமூகநலத் தொண்டர் ஒருவர் சொல்லியிருப்பது போல்...

அறியாமை அச்சத்தை வளர்க்கிறது.

அச்சம் வெறுப்பை வளர்க்கிறது.

வெறுப்பு வன்முறையை வளர்க்கிறது.

நமது அறியாமையில் இருந்தே இது தொடங்குகிறது.

இந்தத் தனிமையை தவிர்க்க வேண்டுமானால், எந்த மனிதனும் தாம் தனித் தீவு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருப்பவர்களே!

இணைந்து வாழ்வதே உங்களின் உண்மை சுபாவம்

ஆன்மீக நிலையில், நாம் அனைவரும் உள்ளுலகில் தொடர்புடையவர்கள்தான். சமீபத்திய கண்டுபிடிப்புகள், நாம் நமது அணுக்களின் நிலையிலும் அல்லது செல்களின் நிலையிலும் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகின்றன.

செல்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்துகொள்ளவே விரும்புகின்றன என்பதை அந்த ஆய்வுகள் நிரூபிக்கிறது. அவை தனித்தனியாக இருக்க விரும்புவதில்லை.

அணுக்களின் மூலக்கூறுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் முக்கியமாக ப்ரூஸ் லிப்டன் (Bruce Lipton) போன்ற நவீன விஞ்ஞானத்திற்கு வழிவகுத்த விஞ்ஞானிகள், டார்வினின் (Darwin) பரிணாமக் கொள்கைகள் தவறானவை என்று நிரூபித்திருக்கிறார்கள்.

ஒரு உயிர் மேலும் மேலும் உயர்வடைவதற்கு அது மற்றவர்களோடு போட்டியிட வேண்டும்; சண்டையிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் டார்வினின் இந்தக் கருத்துகள் இங்கு மாறுபட்டதாக இருக்கிறது. ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து, தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதே உயிர்களின் இயல்பு.

text banner

உண்மையில், நாம் உயிர்வாழ
வேண்டுமானால் நாம் கூடித்தான் வாழ்ந்தாக
வேண்டும். இதைத்தான் நம் உடலில்
இருக்கும் செல்கள் செய்கின்றன.

அவை தாங்கள் ஒருவருக்கொருவர்
இணைக்கப்பட்டவர்கள் என்பதனை
உள்ளுணர்வில் அறிந்துகொள்கின்றன.
மேலும் மிகப்பெரிய ஒரு அமைப்பின்
பகுதியே தாங்கள் என்பதையும் உணர்கின்றன.

நாம் இந்தப் பூமி கிரகத்தை வந்தடைந்தபோது எல்லாவிதமான சாத்தியங்களுக்கும் தயாராகவே இருந்தோம். குழந்தைகளாக இருந்தபொழுது, எளிமையான அழகான முறையில் நம்முள்ளே மையம்கொண்டு, அனைத்துவிதமான தொடர்புகளுக்கும் தயாராகத்தான் இருந்தோம்.

இது எப்படியென்றால், யாராலும் வெகு எளிதில் வந்துபோகக்கூடிய ஒரு பெரிய திறந்தவெளியாக இருப்பதைப் போன்றது.

நாளாக நாளாக நாம் அந்தப் பரந்தவெளியில் சுவர்களைக் கட்டி விட்டோம். நாம் எழுப்பிய சுவர்கள் நம்மைப் பாதுகாக்கும் என்றே நம்பினோம். சுவர்களுக்குள்ளே நாம் நிலைநாட்டியிருக்கும் இணைப்புகள் நம்முடையவை என்றும் நம்பினோம். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெற்றிடம் ஒரு சிக்கலான பாதையாக மாறியது.

இப்பொழுது அதைவிட்டு எப்படி வெளியேறுவது என்பதே நமக்குத் தெரியவில்லை. அப்படியே வெளியேறினாலும் மீண்டும் எப்படி உள்ளே செல்வது என்பதும் நமக்குத் தெரியவில்லை. நாம் உள்ளே 'தொலைந்து' விட்டோம்!

இந்தக் குழிகளைத் தகர்க்க வேண்டும். இந்தத் தீவுகள் பாலங்களால் இணைக்கப்பட வேண்டும். மக்கள் தனிமைப்பட்டு, தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்ளாமல், ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு கூடி வாழப் பழக வேண்டும்.

அடிப்படையான செல்லின் நிலையில், செல்கள் கொத்தாகக் கூடியிருக்கவே விரும்புகின்றன என்றும், குழுக்களை உருவாக்கி, தங்களுக்குள் தொடர்பை

செல்கள்

ஏற்படுத்திக்கொள்கின்றன என்றும்
தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
செல்கள் தங்களின் சுற்றுச் சுவர்களின்
மூலமாகத்தான் தொடர்புகொள்கின்றன
என்றும், நாம் இதுவரை
கருதிக்கொண்டிருந்ததுபோல், அதன்
மையக்கருவின் மூலமாக இல்லை
என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போட்டியிடுதல், ஒருபோதும் உயிர் வாழுவதற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. ஒன்றாக இணைந்து வாழ்வதும், தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதும்தான் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நாம் பலன்களை, விளைவுகளை மட்டும் கருத்தில்கொண்டு உழைக்கும்பொழுது, நமது முயற்சிகள் உற்பத்தித் திறனைக் குறைக்கின்றன.

'இணைந்து வாழ்தல்' என்பது, நாம்
சுயநலமற்ற தன்மையுடன் இருக்கும்
போதும், கூட்டு நன்மைக்கும் கூட்டு உயிர்
வாழுதலுக்கும் உதவியாக இருக்கும்போதும்,
நாம் அனைவருமே அந்தக் கூட்டு
விழிப்புணர்வின் ஒரு பாகம்தான்
என்ற விழிப்புணர்வு நிலையிலிருந்து
நாம் செயல்படும்போதும் மட்டுமே
அத்தீமான பலனைக் கொடுக்கக்கூடியதாக
இருக்கிறது. நாம் செயல்முறையையும்
செயலின் மூலத்தையும் அதன் பலனையும்
கருத்தில்கொள்ள வேண்டும்.

> ஒன்றாக இணைந்து
> வாழ்வதுதான்
> வாழ்வதற்கு
> உத்தரவாதம்
> அளிக்கிறது.

தெளிவு மலரும்வரை குழப்பத்தின் வாதங்கள் ஓயாது

அர்ஜுனன் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சினை, செயலின் நேரடித் தன்மை. அதாவது செயலை நேரடியாகச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம். படைகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் நின்றுகொண்டு போரிடும் நிலையில் அர்ஜுனன் தமது செயலின் நேரடியான, வெளிப்படையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

தம் உறவினர் ஒருவரை அம்பெடுத்துக் கொல்லும்போது, அங்கு நிகழும் அந்த மரணம், அவரது செயலின் நேரடியான விளைவாக இருக்கிறது. இது நவீன காலப் போர் முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது.

இன்று ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், கோடிக்கணக்கான உயிர்கள் பலியாக நேரிடும். இந்தப் பூமி கிரகத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் அழிப்பதற்குப் போதுமான அணு ஆயுதங்கள் உலகின் ஆயுதக் கிடங்குகளில் குவிக்கப்பட்டு இருக்கின்றன.

தொலை தூரத்திலிருந்து அழிப்பதற்கான வசதிகள் அர்ஜுனனுக்கு இருக்கவில்லை. வில்லில் இருந்து அம்பை எய்வதற்கு முன்னர் எதிராளியின் கண்களை அவர் உற்று நோக்கியே ஆக வேண்டும்.

தான் யாரைக் கொல்கிறோம், எதற்காகக் கொல்கிறோம் என்பவற்றை அவர் அறிந்தே இருப்பதால், யாரையாவது கொல்லும்பொழுது அந்த அழிவை அவர் தமக்குள்ளும் உணர்கிறார்.

| 'இணைந்து வாழ்தல்' என்பது, நாம் சுயநலமற்ற தன்மையுடன் இருக்கும் பொழுது மட்டுமே, அதீதமான பலனைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. | இந்த இரு காரணங்களாலும் அர்ஜுனன் பாதிக்கப்பட்டார். முதலில், எதிரிகளுடன் உறவு என்னும் பந்தத்தால் பிணைக்கப்பட்டிருந்தார். இரண்டாவதாக, அவரே முன்னின்று நேரடியாக அவர்களைக் கொல்ல வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறார். அர்ஜுனனை இது பாதித்தது. ஏனென்றால் அவர் துரியோதனனைப் போன்றவர் இல்லை. துரியோதனன் தன்னையும் தம் செயல்களின் விளைவுகளையும் பொருட்படுத்தாதவர். |

அவர் கிருஷ்ணரைப் போன்றவரும் இல்லை.
ஏனென்றால் கிருஷ்ணரைப் போன்று எல்லாச்
சமயங்களிலும் முழு விழிப்புணர்வுடன் தமது
செயல்களுக்கு முழுப் பொறுப்பெடுக்கும்
தன்மை அவரிடம் இல்லை.

அர்ஜுனன் கிருஷ்ணரைப்போலவோ, துரியோதனனைப்போலவோ இல்லை. அர்ஜுனனுடைய மனம், அவர் ஒரு வேளை தவறு இழைத்துக் கொண்டிருக்கலாம் என்றே அவருக்குச் சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அவர் மனம், இது போன்ற எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பேற்கும் உணர்வு நிலைக்கு இன்னும் உயர்ந்துவிடவில்லை.இதுவே அர்ஜுனனின் குழப்பத்திற்குக் காரணமாக இருந்தது.

இப்பொழுது அர்ஜுனன் தமது உற்றார் உறவினர்களிடம் இருந்து தம்மை மேலும் தூரப்படுத்திக் கொண்டார்.

தம் உறவினர்கள் பெரிய தவறுகளைச் செய்தாலும்கூட, அவரும் அதே தவறுகளைச் செய்யக் கூடாது என்றும், இந்தப் பிரபஞ்சத்தையே அவருக்குப் பரிசாகக் கொடுத்தாலும் போர் செய்யமாட்டேன் என்றும் முன்பு சொன்னார்.

தம் சுற்றத்தாரை அழிப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்க முடியும், ஒரு அரசராக அவர் மட்டும் தனியாக இருந்து அனுபவிப்பது எல்லாம் ஒரு வாழ்க்கையா என்ன? என்று எண்ணி வியந்தார்.

தம் உற்றார் உறவினர்கள் இருளில் இருப்பதாகவும், அதனால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும், தம்முடைய சொந்த உறவினர்களையே அழிப்பதையும்கூட அவர்கள் தவறாக நினைக்கவில்லை என்றும், அதிகாரம் மற்றும் ஆதிக்கத்திற்கு ஆசைப்படும் குருடர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள் என்றும், கண்மூடித்தனமான அஹங்காரத்தால் அவர்கள் ஆளப்படுகிறார்கள் என்றும், அர்ஜுனன் அவர்கள் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார்.

அவர் கிருஷ்ணரிடம் கேட்டார், "பேராசையால் கவரப்பட்ட மனத்தையும், குலநாசத்தைக் கண்டு அஞ்சாத மனப்பாங்கையும் பெற்றிருக்கும்

இந்த மக்களிடமிருந்து, அறியாமையில் இல்லாத, இருளில் இல்லாத, குருடர்களாக இல்லாத நாம் ஏன் விலகிச் செல்லக் கூடாது?’’

அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கெஞ்சிக் கேட்கிறார், “தயவுசெய்து சொல்லுங்கள், நான் சொல்வது சரிதானா? தயவுசெய்து சொல்லுங்கள், இந்தப் போரிலிருந்து நான் விலகலாமா?’’

அர்ஜுனன், சில கணங்களுக்கு முன்பு உணர்ச்சி ததும்ப, தம் உறவினர்கள் என்று குறிப்பிட்ட அதே தந்தைமார்களையும் பாட்டன்மார்களையும் ஆச்சாரியர்களையும் மாமன்மார்களையும் மற்றும் தோழர்களையும் இப்பொழுது கண்டனம் செய்கிறார்.

இதே மக்களைத்தான் மரியாதைக்கும் அன்பிற்கும் பாத்திரமானவர்கள் என்று சொல்லி, அவர்களைக் கொல்வதற்கு விருப்பமில்லை என்று முன்பு சொன்னார்.

அர்ஜுனன் இப்போது தமது போக்கையே மாற்றுகிறார். அவருக்கு அவர்கள் இரத்த சம்பந்தம் உடைய உறவினர்களாக இருப்பதால், அவர்களைக் கொல்வதில் அவருக்கு விருப்பமில்லை என்று இருந்த நிலையிலிருந்து, அவர்களைக் கொல்லுவது தார்மீக ரீதியாகக் கண்டிக்கத்தக்கது என்னும் உயர்ந்த நீதி நிலைக்குச் செல்கிறார்.

அர்ஜுனன், ஒரு குலத்தையோ அல்லது ஒரு ராஜவம்சத்தையோ அழிப்பது தீமையானது என்று சொல்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் இம்மாதிரியான கொள்கைகள் இல்லாமலும் கண்மூடித்தனமான ஆசை வயப்பட்டவர்களாக இருந்தாலும் பேராசையின் காரணமாக குருடர்களைப் போன்று செயல்பட்டாலும்கூட, அவர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதிலிருந்து பின்வாங்கினார்.

குடும்பம் பற்றிய வாதங்களில்
இருந்து குலம், ராஜவம்சம் என்று
யோசிக்கும் உயர்ந்த நிலைக்கு அர்ஜுனன்
சென்றார்.

இப்போது அது, பண்பாடு பற்றியதாகவும்
சந்திர குலத்தோடு தொடர்புடைய
பழமையான, பாரம்பரியமான ராஜவம்சத்தின்
மரியாதையைப் பற்றியதாகவும் அவற்றைத்

மனத்தில்
குழப்பம்
உள்ளபொழுது
நம்முடைய
தீர்மானங்கள்
கணத்திற்கு கணம்
மாறிக்கொண்டே
இருக்கின்றன.

தனித்தனியாகப் பிரிப்பதும், அழிப்பதும்
ஒரு பாவமான செயல் என்பதாகவும்
மாறிவிட்டது.

நம் ஆத்மாவுக்கு
பிறப்பு இறப்பைத்
தேர்ந்தெடுக்கும்
உரிமை இருக்கிறது.

அர்ஜுனனது குழப்பம் இப்போது
பெரியதொரு தளத்திற்குச் செல்கிறது.
தனிமனிதர்கள் எனும் எல்லையைத்
தாண்டி, தேவர்களே முன்னோர்களாக
இருந்திருக்கக்கூடிய, பல்லாயிரக்கணக்கான
வருடங்கள் பழமையான, ஒரு குலத்தின்
அழிவைப் பற்றி யோசிக்கலானார்.

இம்மாதிரியான ஒரு கொடூரமான செயலை அவர் செய்ய வேண்டும் என்று, கிருஷ்ணர் எப்படி எதிர்பார்க்க முடியும் என்று அவர் மன்றாடினார்.

அர்ஜுனனது மனத்தில் அது மிகப்பெரிய சந்தேகமாக இருந்தது. தனி ஒரு உறவினரைக் கொல்வதே தவறு, அதிலும் ஒரு முழு சந்ததியையே கொல்வது என்பது அதை விடப் பெரிய பாவம்.

ஆனால் இப்பொழுதோ ஒரு முழு இனத்தையும் பெருமைமிக்க, பாரம்பரியமிக்க ராஜ வம்சத்தின் அடிப்படையையே அவர் அழிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். அவர் அப்படிச் செய்தால் எதிர்கால சந்ததியினர் அவரை எப்படி மன்னிப்பார்கள்?

இப்படியாக அர்ஜுனனுடைய குழப்பத்தின் வாதம் தடம் மாறுகிறது. அர்ஜுனன் இராஜவம்சத்தின் அழிவைப் பற்றி பேசும்போது, அவருடைய உயிர்மேல் இருக்கும் பயத்திலிருந்தும் அந்த அச்சம் எழுகிறது.

அவர் கேட்கிறார், "நான் இறக்க நேரிட்டாலும்கூட என்னுடைய முத்திரை, எனது அடையாளம், என்னுடைய மரபணு, எனது ராஜவம்சம் தழைத்தோங்க நான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் அல்லவா?"

கேள்வி: நீங்கள் அர்ஜுனனது குழப்பத்தைப் பற்றிச் சொன்னீர்கள். அதிகமான வாய்ப்புக்கள் இருக்கும் ஒருவருக்குத்தான் குழப்பம் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் அர்ஜுனனுக்குத் தமது சகோதரர்களோடு சண்டையிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. உண்மையில் அர்ஜுனனுக்குக் குழப்பம் இருந்ததா அல்லது பயம்தான் இந்த எல்லாக் குழப்பத்திற்கும் காரணமா?

நாம் முடிவெடுத்து செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. நம் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் பிறப்பிலும் இறப்பிலும்கூட தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது.

நம் ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பைத்
தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. நாம்
அடுத்த பிறவியில் எங்கே, யாருக்குப்
பிறக்க வேண்டும் என்று இந்த மரணமில்லா
ஆத்மா முடிவு செய்கிறது.

வாழ்க்கையில் இருக்கும்
வாய்ப்புகளுக்குச்
சுவையோ சாரமோ
கிடையாது என்பதைப்
புரிந்துகொண்ட
ஒரு புத்திசாலி
மனிதனாக
அர்ஜுனன் இருந்தார்.

நாம் உயிருடன் இருக்கும்போது, நம்முடைய வாழ்க்கைத் துணையையும் வேலையையும் தேர்ந்தெடுத்து வாழ்வது போல், நாம் பிறக்கும் முன்பு நம் பெற்றோரையும் தேர்ந்தெடுக்கிறோம். நம் குழந்தைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்கள்தான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நம் ஆத்மாதான் நம்முடைய இறப்பையும் முடிவு செய்கிறது. நாம் நம் வாழ்நாளை ஆழமான விழிப்புணர்வற்ற நிலையில் வெறுமனே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதனால் நாம் இதைப் பற்றி அறியாமலேயே இருக்கிறோம்.

ஒரு நூறு வருடங்களுக்கு முன்புகூட, நம் இந்தியாவில் வாழ்ந்த முதியோர்கள் தாங்கள் எந்த இடத்தில், எந்த நேரத்தில் இறப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லும் திறன் பெற்றிருந்தார்கள்.

இன்றளவிலும்கூட சில மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களால் உங்கள் மரணம் எப்பொழுது நடக்கும் என்பதையும் மேலும் அதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதையும் சொல்ல முடியும்.

அதனால் நமக்கு, தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு என்பது இருக்கிறது. அதுபோன்றே அர்ஜுனனுக்கும் இருந்தது.

குருக்ஷேத்ர போர்க்களத்தில் மட்டும் அல்ல. ஒவ்வொரு தருணத்திலுமே அர்ஜுனனுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது. இதற்கு முன், அவரைச் சுற்றி என்னவெல்லாம் நிகழ்ந்ததோ, அவற்றோடு இணைந்து செயல்பட தம்மைத்தாமே அனுமதித்துக் கொண்டார்.

வாழ்க்கையில் இருக்கும் வாய்ப்புகளுக்குச் சுவையோ சாரமோ கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட ஒரு புத்திசாலி மனிதனாக அர்ஜுனன் இருந்தார்.

குழப்பத்தின் ஆதிக்கத்தில் வாழ்வது என்பது நம் ஆளுமையின் விளிம்பில், நம் மனத்தின் ஆதிக்கத்தில் நாம் வாழ்வதைக் குறிக்கிறது. வாழ்வைப் பற்றிய வேறு எந்த வழியையும் நமக்கு யாரும் வெளிப்படுத்தாததால் இதுவே சரியானது மற்றும் பயனுள்ளது என்று நினைக்கிறோம்.

ஆனால் அது உண்மை இல்லை. நாம் நம் இருப்புத் தன்மையின் மையத்திலிருந்து இயங்கும்போது, ஒரு தெளிவான தளத்தில் உள்ளுணர்வுடன்கூடிய வாழ்க்கையோடு நாம் மிகவும் அழகாக இயைந்து செல்கிறோம்.

இது மிகவும் பயனுள்ளதாகவும் படைப்புத் திறனுடன்கூடியதாகவும் இருக்கிறது.

குருக்ஷேத்ர போர்க்களத்தில், அர்ஜுனன் தனக்கான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதுவரையில் அவர் தம் சகோதரர்களுக்கும் மனைவிக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எது நல்லதோ அதன் போக்கிலேயே இயங்கினார்.

அவர் பிறருக்காகவே அனைத்தையும் செய்தார். அவர் தேர்வு செய்வதன் தேவையைப் பற்றி யோசித்ததே இல்லை.வாழ்க்கை, எந்த வாய்ப்பை அவர் முன் வைத்ததோ, அதையே அவர் தேர்ந்தெடுத்தார்.

அப்படி முடிவெடுத்து இயங்கும்பொழுது, அவர் க்ஷத்ரிய தர்மத்தின்படி வழி நடத்தப்பட்டார்.

கிருஷ்ணரைத் தேர்ந்தெடுக்கும் முடிவுகூட
அவர் எடுத்த முடிவல்ல. கிருஷ்ணர்
துரியோதனனுக்குத்தான் வாய்ப்பளித்தார்;
"நிராயுதபாணியான என்னைத்
தேர்ந்தெடுக்கப் போகிறாயா அல்லது
நிகரில்லாத எனது யாதவப் படையை
விரும்புகிறாயா?" என்றார்.

பேராசையில் துரியோதனன் யாதவப் படையையே தேர்ந்தெடுத்தார்.

உள்ளுணர்வுடன்
இயங்கும்பொழுது
வாழ்க்கை
பயனுள்ளதாகவும்
படைப்புத்
திறனுடன்கூடியதாகவும்
இருக்கிறது.

துரியோதனனால் புறக்கணிக்கப்பட்ட நிராயுதபாணியான கிருஷ்ணரை, அர்ஜுனன் ஆனந்தமாக ஏற்றுக் கொண்டார்!

முதன் முறையாக அர்ஜுனன் ஒரு பிரச்சினையில் இருந்தார். ‘முடிவு எடுக்க வேண்டிய நேரம் முடிந்து விட்டது’ என நினைத்தார். போர் செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

திரௌபதியிடம் துரியோதனன் நடந்துகொண்டவிதத்தினால், துரியோதனன் மீது வெறுப்புகொண்ட அர்ஜுனனுடைய சகோதரர்களில் ஒருவரான பீமன் போர் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

மூத்தவராகிய யுதிஷ்டிரர் (தருமர்)கூட நாட்டை இழப்பதற்குத் தயாராக இருந்தபோதிலும் கிருஷ்ணரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போருக்கு ஒப்புக் கொண்டார். அவர் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகவே அந்தப் போரை யுதிஷ்டிரர் கருதினார்.அவரது இரு இளைய சகோதரர்களும் பீமன், தர்மருடன் இணைந்து சென்றார்கள்.

மஹாபாரதப் போரின் சாரமே கிருஷ்ணர் உருவாக்கியதுதான்.

அவரது இனத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்காக பழிதீர்க்க வேண்டியது அவர் பொறுப்பு என்றுதான் அர்ஜுனனும் நினைத்தார். இணையில்லாத் துணிச்சலுடனும் திறமையுடனும் இருக்கும் அர்ஜுனன் பயம் என்பதை அறியாதவராக இருந்தார். அர்ஜுனன் பயமே இல்லாத ஒரு மனிதர்தான்.

ஆனால் போர்க்களத்தில் அவருக்கு நடந்தது என்னவென்றால், இப்போது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பு, அவர் சற்றும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றாக இருந்தது.

மஹாபாரதப் போரின்
சாரமே
கிருஷ்ணர்
உருவாக்கியதுதான்.

அவருடைய சுற்றத்தார் மற்றும் பெரியோர்கள்
கொலை செய்யப்படுவதற்கும் தயாராக
இருக்கும் அந்தக் காட்சி...

திட்டமிட்டபடி முன்னேறிச் சென்று போர்
புரிவதா அல்லது போர்க்களத்திலிருந்து
வெளியேறி விடுவதா என்ற வாய்ப்பினை
முதல் முறையாக அர்ஜுனனுக்கு உருவாக்கிக்
கொடுத்தது.

இந்தத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள்
அவருடைய விழிப்புணர்வற்ற தன்மையின்
ஆழத்திலிருந்து, நான் முன்பு சொன்ன,
அவரது ஸம்ஸ்காரத்திலிருந்து வந்தது, ஏன்?

ஒரு க்ஷத்ரியராக, ஒரு பயமறியா மாவீரராக
இருக்கும் அர்ஜுனனுக்குள் வாழ்க்கை
முறையினாலும் சரி, பிறப்பினாலும் சரி
உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கு
என்னவென்றால், பழிதீர்ப்பதும்
சண்டையிடுவதும் வெல்வதும் மட்டும்தான்.

ஏன் இந்த ஸம்ஸ்காரங்கள் திடீரென்று அவர் மனத்தில் சந்தேகத்தை உருவாக்குகின்றன?

நமக்குள்
குழப்பம் ஏற்பட
காரணம்,
நாம்
நிகழ்காலத்திலிருந்து
நழுவுவதே!

உண்மை என்னவென்றால், இந்த இக்கட்டான சமயத்தில், படைகள் போர் புரிவதற்குத் தயாராக இருக்கிற இந்த நிலையில், விழிப்புணர்வும் ஆழ்ந்த ஒருமுகப்பட்ட தன்மையும் தேவைப்படும் இந்தக் கணத்தில், அர்ஜுனன் நிகழ்காலத்திலிருந்து நழுவுகிறார்.

இதுதான் குழப்பத்தை உருவாக்குகிறது. அர்ஜுனனது குழப்பம் என்னவென்றால் அவர் கடந்தகாலத்தைப் பற்றிய கவலைகளிலும் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளிலும் சிக்கிக் கொண்டார்.

அர்ஜுனன், கடந்தகால வாழ்க்கையில் தமது பாகமாக விளங்கிய பெரியவர்களை எதிர்த்துப் போரிடவேண்டுமே என்று வருந்துகிறார். பல விஷயங்கள் எதிர்காலத்தில் தவறாகப் போய்விடும் என்று கவலைப்படுகிறார்.

அவரால் நிகழ்காலத்தில் இருக்கவே முடியாமல் போகிறது. நெருக்கடியான சூழ்நிலை எழும்போது நமக்கும் இதேதான் நிகழ்கிறது. எப்போது நாம் ஆழ்ந்து ஒருமுகப்பட்டு இருக்க வேண்டுமோ, அப்போது சூழ் நிலையின் தீவிரத்தின் காரணமாக, நாம் பெரும்பாலும் சிதறிய மன நிலையிலேயே இருக்கிறோம்.

எப்படியோ கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் சம நிலைக்குக்கொண்டு வருவதால், நிகழ்கால சூழ் நிலையை வெற்றிகரமாக முடித்திட முடியும் என்று நாம் எண்ணுகிறோம்.

நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நடந்து முடிந்த சம்பவங்களோ அல்லது நடக்கவிருக்கும் சம்பவங்களோ, நிகழ்கால தருணத்தைச் சமாளிப்பதற்கு ஒருபோதும் உதவுவதே இல்லை.

நிகழ்காலத்தில் நீங்கள் நிலைபெறும்பொழுது மட்டுமே, உங்களுக்குள் தன்னிச்சையான, படைப்புத்திறமையுடன்கூடிய புத்திசாலித்தனம் எழுகிறது. அப்பொழுது நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடிகிறது. நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மட்டுமே சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

பொதுவாக நாம் பேரச்சத்திலோ அல்லது குழப்பத்திலோ இருக்கும்பொழுது, நாம் தெளிவாகச் சிந்திப்பதில்லை. நமது மனம், நம்மைத் திசை திருப்பும் எண்ணங்களாலும் கற்பனைகளாலும் முழுவதுமாக நிறைந்திருக்கிறது.

நமது திறன்மிக்க, ஆற்றல்வாய்ந்த
எதிர்காலத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும்
எதிர்மறை எண்ணங்கள்தான், நம்மை
எப்போதும் வழி நடத்தத் தயாராயிருக்கும்
நமது 'உள் புத்திசாலித்தனத்திற்கு', நமது
முழுக் கவனத்தையும் செலுத்த முடியாதபடி
நம்மைத் தடுத்து விடுகின்றன.

இப்போதைய நிலவரப்படி அச்சமும், கற்பனைகளுமே அர்ஜுனனது மனத்தை ஆட்சி செய்கின்றன. அவரது விழிப்புணர்வற்ற மனமே அவரை ஆள்கிறது. இதுவே அவருக்குள் குழப்பத்தை உருவாக்குகிறது.

தோழராகவும் குருவாகவும் விளங்கும் கிருஷ்ணரின் வழிகாட்டுதல் மட்டுமே, அவரை இந்தக் குழப்பத்திலிருந்து வெளியில்கொண்டு வர முடியும்; அவருக்கு ஒரு தெளிவைக் கொடுக்க முடியும்.

இப்போது அர்ஜுனன், அந்தத் தெளிவிற்காகக் கிருஷ்ணரை நோக்கித் திரும்புகிறார்.