குழப்பத்திற்கான தீர்வு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தைமார்களையும்
பாட்டன்மார்களையும் ஆச்சாரியர்களையும் தாய்வழி
மாமன்மார்களையும் சகோதரர்களையும் மகன்களையும்
பேரக்குழந்தைகளையும் தோழர்களையும் மாமனார்களையும் நலம்
விரும்பிகளையும் அர்ஜுனன் பார்த்தார்.
அங்கே நிற்கிற நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும்
பார்த்து, இரக்கத்தால் மூழ்கடிக்கப்பட்ட அர்ஜுனன் இவ்வாறு
சோகத்துடன் பேசினார்.
போர் புரிவதற்குக் கூடியுள்ள என் உற்றார் உறவினர்களைப்
பார்த்து என் கை, கால்கள் நடுங்குகிறது. கிருஷ்ணா என் வாயும்
வறள்கிறது.
என் உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கிறது. கையிலிருந்து
காண்டீவம் நழுவுகிறது; தோல் எரிகிறது.
1.30 இனி இங்கு என்னால் நிற்க முடியாது. என்னுடைய மனம் குழப்பமடைவது போல் இருக்கிறது. கேசவா! கெடுதல்களைக் கொடுக்கக்கூடிய சகுனங்களை நான் பார்க்கிறேன்.
குழப்பத்திலிருந்து விடுதலை அளித்திடும் கீதை
கிருஷ்ணர் இரண்டு படைகளுக்கும் இடையில் தேரை நிறுத்தி விட்டு, "அர்ஜுனா, நீ காண விரும்பிய மக்களை இதோ பார்த்துக்கொள்," என்று சொல்கிறார்.
அர்ஜுனனுக்கு முன்பாக உறவினர்களும் தோழர்களும் கூடி இருந்தார்கள். கிருஷ்ணர் இங்கே எதுவும் பேசவில்லை. அர்ஜுனன், தாம் யாருடன் போர் புரியப்போகிறோம், யாரைக் கொல்லப் போகிறோம் என்று காண விரும்புகிறார். கிருஷ்ணரும் எந்தவித கருணையும் காட்டாமல், அவர்கள் எல்லோரும் அர்ஜுனனுடைய நெருங்கிய உற்றார், உறவினர்களே என்பதை தெளிவாகக் காண்பித்தார்.
கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உறவுதான். அர்ஜுனனின் தாய், ப்ரீத்தா என்று அழைக்கப்பட்ட குந்திதேவி, கிருஷ்ணரின் தந்தையாகிய வஸுதேவரின் சகோதரி. எனவே கிருஷ்ணருக்கு குந்திதேவி அத்தை உறவாகிறார்.
ப்ரீத்தாவின் மைந்தனாகிய அர்ஜுனனைப் பார்த்து, "பார்த்தனே," என்று அவர்களது உறவு முறைக்கு முக்கியத்துவம் அளித்து கிருஷ்ணர் அழைக்கிறார். பார்த்தனாகிய அர்ஜுனனுக்குத் தேரோட்டியதால் பார்தஸாரதி என்ற பெயரும் கிருஷ்ணருக்கு உண்டு.
அங்கே அர்ஜுனனுக்கு முன், அர்ஜுனனின் தந்தையாகிய பாண்டுவின்

மீது பற்றுகொண்டவர்கள், பாட்டன்மார்கள், பீஷ்மரைப் போன்ற பெரிய பாட்டன்மார்கள், மேலும் துரோணர், கிருபர் போன்ற அவருக்கு கற்றுக் கொடுத்த ஆச்சார்யார்கள், சகுனி போன்ற மாமன்மார்கள், அவருடைய சகோதரர்களான அனைத்து கெளரவ இளவரசர்கள்,
நண்பர்கள் மற்றும் அவருடைய நலத்தை
விரும்புபவர்கள் என்று, இவர்கள்
அனைவரும்தான் கூடியிருந்தார்கள்.
இவர்கள் ஒவ்வொரு வரையும் அர்ஜுனன்
நன்றாக அறிவார். இவர்கள்
ஒவ்வொருவருமே ஏதோ ஒரு சமயத்தில்
அர்ஜுனனின் மதிப்பிற்கும் அன்பிற்கும்
உரியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது, அவர்கள் எதிரிசேனையின் அங்கமாக இருக்கிறார்கள்.
> கீதையின் மொத்த
> சாரமுமே, ‘கிருஷ்ண
> பரமாத்மா
> அர்ஜுனனை
> குழப்பத்திலிருந்து
> எப்படி விடுவிக்கிறார்’
> என்பதே.
அர்ஜுனனின் சிக்கலான, குழப்பமான மன நிலையைப் பற்றியும் அக்குழப்பத்தை கிருஷ்ணர் எப்படிப் போக்குகிறார் என்பதைப் பற்றியும்தான் கீதை விளக்குகிறது. கீதையின் மொத்த சாரம் இதுதான்.
குடும்பமும் குழப்பமும்
அர்ஜுனனின் குழப்பம் இங்கிருந்துதான் வெளிப்படத் தொடங்குகிறது.
ஒரு க்ஷத்ரியனாக, போர்வீரராக போர்க்களத்தில் உயிர்களைக் கொல்லுவது அர்ஜுனனுக்குப் பழக்கமான ஒன்றுதான். மரணமும், வன்செயலும்கூட அவருக்குப் புதியதல்ல.
எதிரில் இருப்பவர்கள் எதிரிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே என்பதை அவர் மனம் ஒப்புக்கொள்ளும்பொழுது, அவர்களைக் கொல்லுவதில் அர்ஜுனனுக்கு எந்தச் சிரமமும் இதற்கு முன் இருந்ததில்லை.
ஆனாலும் இப்பொழுது அர்ஜுனன் முன் கூடியிருப்பவர்கள் அவர் மனம் கற்பனை செய்வதுபோல எதிரிகள் அல்ல. அவர்கள் பல ஆண்டுகளாக சொந்தங்களாகப் பழகிய உற்றார் உறவினர்கள். அவருடைய பாசத்துக்கும் நேசத்திற்கும் மரியாதைக்கும் உட்பட்டவர்கள்.
அவர்கள் எல்லோரும் அவருடைய உறவினர்களாகவே இருந்தார்கள்; தந்தையைப் போன்றவர்கள், பாட்டன்மார்கள், மாமன்மார்கள்,
சகோதரர்கள், குழந்தைகள், பேரக்குழந்தைகள்
என அவருடன் இரத்த சம்பந்தமுடைய
உறவினர்களாக இருந்தார்கள்.
அங்கு கூடியிருக்கும் பலரோ,
அர்ஜுனனோடு, நம்பிக்கையுடன் பழகிய
நெருங்கிய நண்பர்களாக, உறவினர்களுமாக
இருந்தவர்கள்.
ஒரு க்ஷத்ரியனான, போர்வீரரான
அர்ஜுனனின் அகராதியில் அஹிம்ஸா என்ற
வார்த்தைக்கே இடமில்லை.
நான் என்ற அடையாளத்தின், அஹங்காரத்தின் விளைவாக எழுந்த வன்முறையே அவரது குழப்பமாக இருந்தது.
முன்பின் அறியாதவர்களை, அவரது அடையாளத்தோடு தொடர்புகொள்ளாதவர்களைக் கொல்லுவதில் அர்ஜுனனுக்கு எந்த ஒரு சிரமமும் இதற்கு முன் இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது அவருக்குப் பரிட்சயமானவர்களை, அவருடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகொண்டவர்களைக் கொல்ல வேண்டுமென்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குடும்ப பந்தம் அர்ஜுனன் கற்பனை செய்திருந்ததைவிடவும் மிக ஆழமாக இருந்தது. அவரது அஹங்காரத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்த இந்தச் சொந்த பந்தங்களை அறுத்தெறிவது என்பது, அவரையே அழித்துக் கொள்வதுபோல இருந்தது. இதுவே அர்ஜுனனின் குழப்பம்.
கருணை நிறைந்தவருக்கு இவ்வுலகமே அவருடைய அங்கம்
மஹாபாரதம் என்னும் பெரும் போர் நூறு கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையில் நிகழும் போர் மட்டும் அல்ல. நன்மைக்கும் தீமைக்கும் இடையே நிகழும் போர் மட்டும் அல்ல. மனம், அது பார்ப்பவற்றை எல்லாம் 'நல்லது கெட்டது' என்று பிரித்து அவற்றிற்கு 'நன்மை தீமை' என்று முத்திரை குத்தும்பொழுது, மனிதனின், நரனின் மனத்திற்குள் நிகழும் போராட்டமும்கூட.
இங்கு அர்ஜுனன், மனித குலத்தின் பிரதிநிதியாக, நரனாக சித்தரிக்கப்படுகிறார். அர்ஜுனனின் குழப்பத்தை நியாயப்படுத்துவதற்காக அவர் மனம் உற்பத்தி செய்யும் கற்பனைகளின் தொகுப்பையே, நாம் இனி பார்க்கப் போகிறோம்.
விழிப்புணர்வற்ற ஸம்ஸ்காரங்களின் தூண்டுதலால், மனித மனம் மீண்டும் மீண்டும் பல்வேறு காரணங்களைக் கற்பித்து, தமது செயல்களை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறது.
அர்ஜுனன் இரக்க உணர்வினால் ஆட்கொள்ளப்படுவதாக ஸஞ்ஜயன் சொல்கிறார். ஆனால் சிலர் இந்த உணர்வை கருணை என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
இரக்கம் என்பது வேறு, கருணை என்பது வேறு. ஞானிகளின் தனித் தன்மையாக இருக்கும் கருணை பாரபட்சம் பார்ப்பதில்லை, வேற்றுமை பாராட்டுவதில்லை.
உண்மையான கருணை உணர்வுள்ள ஒரு மனிதர், இம்முழு உலகையும் உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாப் பொருட்களையும் தம்முடைய உடலின், உயிரின் ஒரு பகுதியாகவே காண்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு மனிதரைச் சுற்றி எந்த ஒரு பொருள் பாதிக்கப்பட்டாலும் அந்தப் பாதிப்பை, அதன் வலியை அம்மனிதர் தன்னுள் உணர்கிறார்.
ஆனால் தமது உற்றார் உறவினர்களைக் கண்டவுடன் அர்ஜுனனுக்குள் தோன்றும் கருணை இத்தகைய உயர்வான தன்மைகொண்டது இல்லை. அர்ஜுனனது உணர்வு பாரபட்சமானது.
தனது உறவினர்களுடன் தன்னைத்
தொடர்புபடுத்திப் பார்ப்பதாலும் அவர்கள்
தமது உறவினர்கள் என்ற உணர்வாலும்
மட்டுமே அர்ஜுனனுக்குள் இரக்க உணர்வு
ஏற்படுகிறது.
முன்பே சொன்னதுபோல, இந்த இரக்க
உணர்வு அஹிம்ஸாவினால் ஏற்பட்டது அல்ல,
மாறாக இது ஹிம்ஸா, வன்செயலினால்
ஏற்பட்டது.
ஞானிகளின்
தனித் தன்மையாக
இருக்கும் கருணை
பாரபட்சம்
பார்ப்பதில்லை,
வேற்றுமை
பாராட்டுவதில்லை.
அர்ஜுனனது உணர்வுகள் அவரது அஹங்காரத்தினால் ஏற்பட்டவை.
உண்மையான கருணை உணர்வு
அஹங்காரமில்லாத, எண்ணங்களற்ற, மனம்
கடந்த நிலையில் இருந்துதான் தோன்ற
முடியும். இந்த நிலையில் 'நான்,' 'எனது'
என்ற உணர்வுகள் முற்றிலும் மறைந்து
விடுகின்றன.
உண்மையான கருணை என்பது
பிரபஞ்சத்திடம் முழுமையாக சரணாகதி
அடைந்து விட்ட ஒருநிலை, அது ஒரு
ஆனந்த நிலை.
ஒரு தனிமனித இருப்புத் தன்மை பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலக்கும்பொழுது, பிரபஞ்ச விழிப்புணர்வும் தனிமனித விழிப்புணர்வும் அந்த ப்ரஹ்மத்தின் ஒரு பகுதிதான் என்ற 'உணர்ந்து கொள்ளுதல்' நிகழ்கிறது. அப்பொழுது மட்டுமே உண்மையான கருணை தோன்றுகிறது.
உங்கள் தர்க்கம்தான் உங்களைப் பயமுறுத்தும் கயவன்
அர்ஜுனனது இரக்க உணர்வானது, தம்முடைய அடையாளத்தை, அஹங்காரத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால் உருவானதுதான். அர்ஜுனன் மனிதர்களுக்கே உரிய அச்ச உணர்வினால் பாதிக்கப்படுகிறார்.
அர்ஜுனன், தமக்கு முன்பாகக் கூடியிருக்கும் தம் உறவினர்களைக் பார்த்ததும் தமது தொண்டை வறள்வதாகவும் ரோமங்கள் சிலிர்ப்பதாகவும் வியர்வை மிகுந்து கைகளில் இருந்து தெய்வீகமான காண்டீவம் நழுவுவதாகவும் சொல்கிறார்.
அர்ஜுனனை முழுவதும் அறியாதவர்கள், அவரைக் கோழை என்று கருதிவிட முடியும்.
ஆனால் அர்ஜுனன் கோழை அல்ல. தமது உயிருக்கும் உடலுக்கும் பாதிப்பு நேர்ந்திடுமோ என்று ஒருபோதும் அவர் அச்சம்கொள்ளவில்லை. எங்கே காயம் அடைந்து தாம் இறக்க நேரிடுமோ என்று அவர் ஒருபோதும் எண்ணவில்லை.
மாவீரனாகிய அர்ஜுனனுக்குள் இத்தகைய எண்ணங்கள் எழவும் செய்யாது. ஆனால் அர்ஜுனன் சமுதாய நெறி முறைகளையும் தர்மத்தின் வரைமுறைகளையும் உடைத்து விடுமோ என்று அச்சம் அடைகிறார்.
அவரது நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் விழிப்புணர்வற்ற ஆழமான எண்ணங்களும் ஸம்ஸ்காரங்களும் அவர் மிகப்பெரிய அளவுக்கு தவறிழைப்பதாகவே அவருக்குச் சுட்டிக் காட்டுகின்றன.
இந்த ஆற்றல் மிக்க உணர்ச்சிகளின் தாக்கத்தால் அவர் தடுமாற்றமும், நடுக்கமும் அடைந்தவராகவும் தெளிவாகச் சிந்திக்க முடியாதவராகவும் எதைச் செய்வது என்பதைப் பற்றிய முடிவெடுக்கவோ செயல்படவோகூட முடியாதவராகவும் இருக்கிறார்.
உண்மையில் இப்படி ஒன்று நிகழ முடியுமா?
ஒரு மாவீரன் தமது மன அமைதியை இழந்து கோழைக்குரிய லக்ஷணங்களை வெளிப்படுத்த முடியுமா?
அவருடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே மாபெரும் ஆச்சார்யர்களால் உடலையும் மனத்தையும் தம் வசத்தில் வைத்திருக்க பெரும் பயிற்சி பெற்றவர் அர்ஜுனன்.
மரணத்தைக்கூட விளையாட்டாகக் கருதும் ஒரு உண்மையான வீரனுக்குள் இதுபோன்ற அச்சம் தோன்ற முடியுமா என்ன?
மனித மனம் எப்படியெல்லாம் தமது விளையாட்டை விளையாட முடியும் என்பதையும் எண்ணப்பதிவுகளாகிய ஸம்ஸ்காரங்கள் எப்படியெல்லாம் நம் மனத்தை தம் வசப்படுத்திக்கொண்டு, நம்முடைய இருப்பு நிலையேகூட, இதைப் பற்றித் தெரிந்துகொள்ளமுடியாதபடி விழிப்புணர்வற்ற நிலையில் அதை மூழ்க வைத்து, நம் மனத்தையே ஆட்டிப் படைக்கும் அளவுக்கு சக்திவாய்ந்தவை என்பதையும் அவரது சூழ்நிலை மிகத்தெளிவாக விளக்குகிறது.
போரில், உறவினர்கள், தந்தையார், பாட்டன்மார் மற்றும் தம்
> குற்ற உணர்ச்சி
> நம்மை
> கோழையாக்கிவிடும்.
அன்பிற்குரியவர்களின் மரணத்திற்குத் தானே பொறுப்பேற்க நேரிடுமோ என்று அர்ஜுனன் அஞ்சுகிறார்.
பிறர் அவரைத் தூற்றவில்லை என்றாலும்கூட, அர்ஜுனனது மனமே அவரைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தி, செய்த செயல்களை எண்ணி எண்ணி வாழ்நாள் முழுதும் வருந்துமாறு செய்துவிடும் என்று அவர் அச்சம் கொள்கிறார்.
சக்தி மிக்க இந்தக் குற்ற உணர்ச்சினைப் பற்றிய அச்சமே, அர்ஜுனனை ஒரு கோழையைப்போல நடந்துகொள்ளச் செய்கிறது.
அவரால் அழிவையும் கெடுதல்களையுமே எங்கும் காண முடிகிறது. அவருக்கும் அவர் குலத்தோருக்கும் நிகழ இருக்கும் மாபெரும் அழிவையும் அவர் பெயருக்கும் புகழுக்கும் வரவிருக்கும் களங்கத்தையும் மாபெரும் பொருட்சேதத்தையும் மட்டுமே அர்ஜுனன் காண்கிறார்.
வன்முறைக்கே வழிவகுக்கும் தவறான உணர்வு ‘உரிமை பாராட்டுதல்’

அர்ஜுனன் மேலும் ஓர் ஆழமான நிலையில், தமது சொந்த அழிவினை எண்ணி மிரட்சி அடைகிறார். ஒருவர் தம்மை தமது சொந்தபந்தங்கள், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் தொடர்புபடுத்திக்கொள்ள ஆரம்பிக்கிற அந்தக் கணமே, அவருள் ‘பொருள் சார்ந்த அடையாளப்படுத்துதல்’ நிகழத் தொடங்குகிறது.
மனித மனம்
எப்படியெல்லாம்
தமது விளையாட்டை
விளையாட முடியும்
என்பதையே
அர்ஜுனனின் சூழ்நிலை
நமக்கு மிகத் தெளிவாக
விளக்குகிறது.
இந்த அடையாளப்படுத்துதல் பற்றுதலினாலும்
உரிமையினாலும் ஏற்படுகிறது. ஒருவரின்
அஹங்காரத்திலிருந்தும், 'நான்', 'எனது'
என்ற எண்ணத்திலிருந்தும்தான் இந்த
அடையாளப்படுத்துதல் தோன்றுகிறது.
'உரிமை கொண்டாடுதல்' என்ற பண்பு பந்தத்திலிருந்து பிறந்து பந்தத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.
ஒரு பொருளின் மீது பற்றுதல் வைத்தால்
ஒழிய, அப்பொருளின் மீது உரிமை
கொண்டாடும் எண்ணம் தோன்றுவதில்லை.
மக்கள் அன்பு, விருப்பம், பற்றுதல்
என்பதைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள்.
இவை அனைத்தும் உரிமை கொண்டாடும்
எண்ணம் இருக்கும்வரை மட்டுமே நிலைத்து
நிற்கும்.
எப்பொழுது அன்பு செலுத்தப்படும் பொருள்
தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும்
இயங்க ஆரம்பிக்கிறதோ, அதனை
உரிமை கொண்டாடுவதற்கு நம்மை
அனுமதிப்பதில்லையோ, எப்பொழுது
அது நமக்கு "இல்லை," என்று மறுப்பு
தெரிவிக்கிறதோ, அப்போதே விருப்பமும்
அன்பும் அங்கே மறையத் தொடங்கிவிடும்.
> 'உரிமை கொண்டாடுதல்'
> என்கிற பண்பு
> பந்தத்திலிருந்து பிறந்து
> பந்தத்திற்கே
> நம்மை
> அழைத்துச் செல்கிறது.
நமது முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் சக்தி மையமாகிய மூலாதார சக்ரத்திலிருந்து, 'வாழ வேண்டும்' என்கிற தேவையில் இருந்துதான் இந்த உரிமை கொண்டாடுதல் பிறக்கிறது.
நம்மைப் பூமித்தாயுடன் பிணைத்து வைக்கும் மூலாதார சக்தியாக இது விளங்குகிறது. இந்த உரிமை கொண்டாடிடும் குணத்தின் காரணமாகவே ஆசை, அச்சம், கோபம் இவை எல்லாமே உருவாகின்றன.
பெரும்பாலான சமயங்களில் ஒருவர் தம்மால் அடைய முடியாத ஒன்றை அழித்துவிடவே விரும்புகிறார். "எனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது," என்றே நாம் பெரும்பாலும் நினைக்கிறோம்.
உரிமை பாராட்டுதல் வன்முறைக்கே வழி வகுக்கிறது.
நமக்குப் பிடித்திருப்பதே நம்மைப் பிடித்திருக்கிறது
உங்களுடைய அடையாளமான 'நான்' என்பது உயிர்ப்புடன் இருப்பதற்கு உங்களுக்குள் ஆழமாக வேரூன்றி இருக்கும் உரிமை கொண்டாடுதலுக்கான விருப்பமும், 'எனது' என்ற எண்ணமும்தான் காரணமாகின்றன.
தயவு செய்து ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு பொருளை உங்கள் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு உங்களின் 'நான்' என்ற
அடையாளத்திலிருந்து தோன்றுவதில்லை. ‘எனது’ என்ற உணர்வுதான் ஒரு பொருளை வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது.
‘எனது’ என்னும் உணர்வே, ‘நான்’ என்னும் அடையாளத்திற்கு அழைத்துச் செல்கிறது. ‘நான்’ என்பது, ‘எனது’ என்பதற்கு இட்டுச் செல்வதில்லை.
அதனால் தான் நீங்கள், உங்கள் எல்லா ஆசைகளின் மீதும், பொருட்களின் மீதும் கொண்டுள்ள பற்றுதல்களைத் துறக்கும்வரை உங்கள் அடையாளத்தை உங்களால் நீக்க முடிவதில்லை.
நீங்கள் முதலில் ‘எனது’ என்னும் உணர்வை விட்டாக வேண்டும். அதன்பிறகே ‘நான்’ என்பது மறையத் தொடங்கும்.
அர்ஜுனன் இந்த மனப்பாங்கிலும் மன நிலையிலும்தான் இருக்கிறார். போர் புரியப் போகும் இந்தக் கடைசித் தருணத்தில்தான், எ வரையெல்லாம் அவர் அழிக்க இருக்கிறாரோ அவர்கள் எல்லாருமே அவருடைய சொந்த அடையாளங்கள் என்பது அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இவர்கள் எல்லோருமே அர்ஜுனனின் பந்தங்கள். அவரது சொந்த அடையாளத்தின் பகுதிகள். இவர்களை எல்லாம் அழிப்பது என்பது தம்முடைய உணர்வின் ஒரு பகுதியையே அழிப்பதற்குச் சமம் என்று உணர்கிறார்.அர்ஜுனன், அவரது தந்தையைப் போன்றவர்கள், பாட்டனார், மகன், சகோதரன், மாமன் மற்றும் தோழர்கள் அனைவரையும் அழிக்கும்பொழுது, தமது சொந்த உடல்-மன அமைப்பையே அழித்துக் கொள்வதுபோலாகிவிடும் என்பதை மிக நன்றாக அறிவார்.
ஒரு பொருளை
உங்கள்
வசப்படுத்திக்கொள்ள
வேண்டும் என்ற
உணர்வு
உங்களின்
‘நான்’ என்ற
அடையாளத்திலிருந்து
தோன்றுவதில்லை.
ஏனென்றால் நம் அன்பிற்குரியவர் ஒருவர்
இறக்கும்போது, நம் உடல்-மன அமைப்பின்
ஒரு பகுதியும் அவர்களுடன் இறந்து
போகிறது. அர்ஜுனன் இதனை நன்கு
அறிவார்.
அவர் மனத்திற்கினிய மற்றும் அன்பிற்குரிய பலரின் அழிவு, அவர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துமென்பதை அவர் அறிந்தே இருந்தார். இது நிச்சயமாகத் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானதுதான்.
தெளிவான குழப்பமே தெளிவைத் தரும்
அர்ஜுனனுக்கு ஏற்பட்ட குழப்பம் இயல்பான
ஒன்றே. பிறரை அழித்துவிட்டு வாழும் ஒரு
செயலானது ஒருவனது சொந்த அழிவிற்கு
வழி வகுக்குமானால், அந்தச் செயலால்
விளையும் பலன்தான் என்ன?
முதலில் நீங்கள்
‘எனது’
என்னும் உணர்வை
விட்டாக வேண்டும்.
அதன்பிறகே
‘நான்’ என்பது
மறையத் தொடங்கும்.
ஆனால் அர்ஜுனனின் இந்தக் குழப்பம் பாரபட்சமான தெளிவில்லாத புரிந்து கொள்ளுதலால்தான் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கூட்டு விழிப்புணர்வின் ஸத்யத்தை மேலோட்டமாக உணர்வதால் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கிறது.
துரியோதனனைப்போல விழிப்புணர்வற்ற் தன்மையில் அர்ஜுனனும் இருந்திருந்தால் இந்தச் சந்தேகம் அவர் மனத்தில் ஒருபோதும் தோன்றியே இருந்திருக்காது.
அல்லது கிருஷ்ண பரமாத்மாவைப்போல ஞானியாக இருக்கும் பட்சத்தில், விடைதெளிவாகத் தெரிந்து இருக்கும். அதனால் அப்போதும் இந்தக் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் அர்ஜுனன் இவ்விருவருக்கும் இடைப்பட்டவராக இருந்ததனாலேயே இந்தக் குழப்பம் ஏற்படுகிறது.
“நான் ஏன் என்னை அழித்துக்கொள்ள வேண்டும்? எதற்காக இதைச் செய்ய வேண்டும்?’’ போன்ற கேள்விகள் எல்லாம் தர்க்க ரீதியில் இயல்பாக எழக்கூடிய கேள்விகளே.

இன்றைய தத்துவவாதிகள், தங்களது
சந்தேகங்களுக்கான பதில்களைத்
தேடும் துணிச்சல் இல்லாமல், தங்களது
சந்தேகங்களை சந்தேகங்களாகவே விட்டு
விடுகிறார்கள். ஆனால் அர்ஜுனன்
தமது சந்தேகங்களுக்குரிய விடைகளைப்
பெறத் துணிவதால், அவர் மிகச்சிறந்த
புத்திசாலியாக நம் முன் நிற்கிறார்.
பல தத்துவவாதிகளும் இத்தகைய கேள்விகளைச் சந்தித்தபொழுது, வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்ற முடிவிற்குத்தான் வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு, அர்ஜுனனிடம் இருந்த பணிவும் கிருஷ்ணருடைய வழிகாட்டுதல்களும் இல்லாத காரணத்தினால்தான், தர்க்க ரீதியான முறையில் தாங்கள் எந்த விடைகளைக் கண்டறிந்தார்களோ அந்த விடைகளையே அளித்தார்கள்.
அவர்களது தர்க்க அறிவுக்கு அனுபவ ரீதியான பின்புலமோ, அடிப்படை ஆதாரமோ இல்லாததினால், அவை அனைத்துமே தவறாகவே இருக்கின்றன.
மனத்தளவில் ஒரு தன்மையில் இருந்து மற்றொரு தன்மைக்கு மாறுகிற, அதாவது உணர்வு மாற்ற நிலையை அனுபவமாக உணருகிற செயல்முறையை அர்ஜுனன் மேற்கொண்டிருந்தார்.
ஒரு க்ஷத்ரியனுக்கு உரிய லக்ஷணங்களோடு போர் புரிய வேண்டும் என்ற நினைவில்தான் போர் புரியத் தொடங்குகிறார்.
போருக்கு அழைக்கப்படும்போது ஒரு க்ஷத்ரியன், சாமுராய் படை வீரனைப் போல் போர் புரிந்தே ஆக வேண்டும். அதுதான் அவரது குல தர்மமும்கூட.
இதேவிதமான நம்பிக்கையிலேயே வளர்க்கப்பட்டு இருந்ததால், அர்ஜுனன் எந்தக் கணக்கிடுதலும் இல்லாமல் போர் புரியத் தயாராக இருக்கிறார்.
தனது
சந்தேகங்களுக்குரிய
விடைகளைப் பெறத்
துணிபவரே
மிகச்சிறந்த
புத்திசாலியாகிறார்.
அர்ஜுனனது சிந்திக்கும் திறனே, அவருக்குப் பிரச்சினையாகவும் இருக்கிறது. துரியோதனனைப்போலவோ அல்லது தமது சொந்த சகோதரர் பீமனைப்போலவோ அவர் சிந்திக்கத் தெரியாதவராக இருந்திருந்தால், அவருக்கு இந்தப் பிரச்சினை எழ வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால் சிந்திக்கும் திறனும் விழிப்புணர்வுமே அவரது மொத்த குழப்பத்திற்கும் துக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. இதனால் பல சந்தேகங்கள் அவரைத் தாக்குகின்றன.
"நான் சரியான செயலைத்தான்
செய்கிறேனா? என் உற்றார் உறவினருக்கு
எதிராகத் தொடங்கும் இந்தப் போரில்
என்னையும் அழித்துக்கொண்டு, எனக்காக
வாழும் மற்றவர்களையும் அழிக்கிறேனே,
இது சரிதானா?"
அர்ஜுனன் ஸத்யத்தைத் தேடுபவராக மாறி விடுகிறார். சா'ஸ்த்ரங்கள், ஸ்தோத்ரங்கள், ஸூத்ரங்கள் இவற்றின் வாயிலாக இதுநாள்வரை கற்று அறிந்தவற்றினால் அவர் திருப்தி அடையவில்லை.
போருக்கு
அழைக்கப்படும்போது
ஒரு க்ஷத்ரியன்,
சாமுராய்
படை வீரனைப் போல்
போர் புரிந்தேயாக
வேண்டும்.
அதுதான் அவரது
குல தர்மமும்கூட.
இவற்றைக்கடந்து செல்லத்தான் விரும்புகிறார். அவருள் எழுந்த சந்தேகங்களினால் அவற்றைக் கேள்வியாகக் கேட்கிறார். அர்ஜுனன் அப்பொழுது முற்றிலுமாகக் குழப்பத்தில் இருந்தார்.
மொத்த மனித சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட சத்தியம்
கீதையின் இந்த முதல் அத்தியாயத்திற்கு விஷாத யோகம் என்று பெயர்
ஸம்ஸ்க்ரு'த மொழியில் விஷாத எனும் வார்த்தைக்கு வருத்தம், துக்கம், ஏக்கம், மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, மனக்குழப்பம் என்று பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன.
அர்ஜுனனுக்குள் இருந்த குழப்பம் எல்லாம் இதுதான்: 'தம் வாழ்நாள் முழுவதும் தமக்குக் கற்பிக்கப்பட்டவையும் தான் இதுவரை எதையெல்லாம் ஸத்யம் என்று நம்பினாரோ, அதுவெல்லாம் உண்மையிலேயே ஸத்யம்தானா என்பதும்தான். இந்தக் குழப்பமே அவரை தடுமாறச் செய்தது.
கிருஷ்ணர் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் வாயிலாக படிப்படியாக அர்ஜுனனை வழிநடத்திச் சென்று, அர்ஜுனனுக்குள் ஏற்படுத்திய உருமாற்றம்தான், அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, மொத்த மனித சமுதாயத்திற்குமே வழங்கப்பட்ட ஸத்யத்தின் வெளிப்பாடு.
கீதையில் கிருஷ்ணர் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
அவற்றில் சில பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இங்கே பார்க்கலாம்.
க்ருஷ்ணன் என்னும் சொல் கருநீலவர்ணமுடையவர் என்ற அர்த்தத்தை வழங்குகிறது. அதாவது நீலநிற வானத்தைப் போன்ற எல்லையில்லாத தன்மைகளை உடையவர் என்று அர்த்தம்.
க்ருஷ்ண என்னும் சொல்லிற்கு, ஸத் சித் ஆனந்தம் அதாவது இருப்புத் தன்மை, புத்திசாலித்தனம், ஆனந்தம் என்று பொருள்.
'தம்மிடம் சரணடைந்தவர்களின் துயரத்தைத் துடைப்பவர்' என்பதே அதன் பொருள்.
கிருஷ்ணரது இன்னொருபெயர் கேசவ. அவர் கேசவ என்றே மேலுள்ள ஸ்லோகத்திலும் அழைக்கப்படுகிறார். கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் என்பதே அதன் பொருள்.
மேலும் 'அழகான ரோமத்தையுடையவர்' என்ற அர்த்தமும் அதற்குண்டு. இந்து பாரம்பரியத்தில் மும் மூர்த்திகளாகக் கருதப்படும் பிரஹ்மா, விஷ்ணு, சிவன் - இந்த மூவரும் ஒன்றாகச் சேர்ந்த உருவம் என்ற பொருளும் உண்டு.
ஸம்ஸ்க்ருதத்தில், க என்ற எழுத்து - ப்ரஹ்மா, அ - விஷ்ணுவையும் ஈச - சிவனையும் குறிக்கின்றன.
கோவிந்தா என்னும் பெயர் ( கோ - உயிர், விந்தன் - அறிபவன்) உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அறிபவர் என்னும் பொருளை வழங்குகிறது.
குருவின் வழிகாட்டுதல்
இல்லாமல்
ஸத்யத்தை
மேலோட்டமாக
உணர்ந்தால்
குழப்பம் மட்டுமே
வரும்.
கேள்வி: ஸ்வாமிஜி, துரியோதனன் அறியாமையினாலும் அர்ஜுனன் பாரபட்சமான விழிப்புணர்வாலும் செயல்பட்டார்கள் என்று தாங்கள் விளக்கம் அளித்தீர்கள். இருந்தாலும் அர்ஜுனன் போரில் தமது சொந்தங்களையே கொல்லுவார் என்றால் அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
நல்லது, கெட்டது என்பதனைத்தும் நம் மனத்தின் கட்டுறு மனப்பாங்கே என்று தாங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். பிறகு எந்தவிதத்தில் அர்ஜுனன் துரியோதனனைக் காட்டிலும் சிறந்தவர்?
இது, ஒரு அற்புதமான கேள்வி. துரியோதனன்
குருடனைப்போல இருந்தார். அதனால்தான்
அவருக்கு ‘சரி, தவறு’ என்ற வார்த்தைகளே
பயனற்றவையாக இருக்கின்றன. அவரைப்
பொறுத்தமட்டிலும் ‘சரி, தவறு’ என்ற
வார்த்தைகளுக்கு எந்தவித அர்த்தமும்
கிடையாது.
எந்தவொரு மனிதரும்
எந்தவொரு இருப்பும்,
அது
உயிருள்ளவையோ
அல்லது
உயிரற்றவையோ...
அவை தீயவையாக
இருக்க முடியாது.
எவ்வாறு ஒரு ஞானி சரி என்றும், தவறு என்றும் பாரபட்சம் பார்ப்பதில்லையோ அது போன்ற ஒரு தன்மையில்தான் துரியோதனன் இருக்கிறார். ஆனால் இத்துடன் இந்த ஒற்றுமை முடிவடைகிறது.
நிறப்பிரிகையின் மூலம் நாம் செயற்கையாக ஏற்படுத்தும் ஏழு வண்ணங்களைக்கொண்ட ஒரு நிறமாலை, தோற்றத்தில், இயற்கையாக உண்டாகும் வானவில்லைப் போன்றே இருக்கும். ஆனால் இவை இரண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அதேபோல் முழுமையான விழிப்புணர்வopenற்ற தன்மையில் துரியோதனன் இருக்கிறார். முழுமையான விழிப்புணர்வு நிலையில் ஒரு ஞானி இருக்கிறார். இரண்டும் வேறு வேறு நிலைகள். இவை இரண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்த இரண்டு நிலையும் அல்லாத, முற்றிலும் வேறொரு நிலையில் அர்ஜுனன் இருக்கிறார்.
அர்ஜுனன் சமுதாயத்தால் கற்றுக்கொடுக்கப்பட்ட ‘சரி, தவறு’ என்பவற்றின் உண்மை நிலையினை ஒப்புக்கொள்ளும் கட்டுறு மனப்பாங்குடன் வளர்க்கப்பட்ட ஒரு சராசரி மனிதர்.
மேலும் க்ஷத்ரியகுல தர்மத்தின் மேல் மிக ஆழமான நம்பிக்கை கொண்டவராகவும் அர்ஜுனன் இருக்கிறார். அதுவே அவரை நியாயமான, உண்மையான போர் செய்யத் தூண்டுகிறது.
இரு தனிப்பட்ட மனிதர்களை, நமது சொந்தக் கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் நாம் வித்தியாசப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு
தனிமனிதரும்
தனித்துவம்
வாய்ந்தவராக
இருக்கிறார்.
ஒவ்வொரு தனிமனிதரும்
தனித்துவம்வாய்ந்தவராக இருக்கிறார்.
எந்தவொரு மனிதரும் எந்தவொரு
இருப்பும், அது உயிருள்ளவையோ அல்லது
உயிரற்றவையோ அவை தீயவையாக
இருக்க முடியாது.
கருணைமயமான இருப்புத் தன்மை, தமது
குணாதிசயத்திற்குச் சற்றும் பொருந்தாத
ஒன்றைப் படைக்க முடியாது.
நாம் குழந்தையாக இருக்கும்பொழுது, மக்களை எந்தவித வேறுபாடும் இல்லாமல் பார்க்க முடிகிறது. சிறு குழந்தையைக் கவனித்தீர்கள் என்றால், அது யாரிடத்திலும் மிக இயல்பாகச் சென்று, அவர்களுடன் பழக ஆரம்பித்து விடுகிறது. ஒரு மனிதர் துப்பாக்கி வைத்திருந்தாலும் மிட்டாய் வைத்திருந்தாலும் அதன் பார்வையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.
ஆர்வத்தின் அடிப்படையில் இயங்குவதால் இவை எல்லாம் ஒரு பொருட்டாக அக்குழந்தை கருதுவதில்லை. ஒரு குழந்தை யாரையும் எடை போட்டுப் பழகுவதில்லை.
ஆனாலும் அக்குழந்தை வளர வளர, சரி தவறு, பாதுகாப்பு ஆபத்து என்பவற்றைப் பற்றிப் பெரியோர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டு விடுகிறது.
தங்கள் பெற்றோர்களால் கற்றுத் தரப்படும் கட்டுறு மனப்பாங்கான சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள்தான் நல்ல மனிதர்கள் என்றும், அந்தச் சூழ் நிலையில் இருந்து வராதவர்கள் கெட்டவர்கள் என்றும் அந்தக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஒரு குழந்தை ஒருபோதும்
வித்தியாசப்படுத்துவதில்லை. ஆனால் வயது
வந்த ஒரு பெரியவர் வேற்றுமைப்படுத்திப்
பார்ப்பதோடு மட்டுமல்லாமல் விலக்கவும்
செய்கிறார். நன்மை தீமை, சரி தவறு,
விருப்பு வெறுப்பு, அன்பு வெறுப்பு -
இவை அனைத்துமே வித்தியாசப்படுத்திப்
பார்ப்பதனாலேயே எழுகின்றன. இவை
எல்லாம் வளர்ந்தவர்களின் குணாதிசயங்கள்.
இந்தப் பண்புகள் அனைத்தையும்
ஒவ்வொரு தலைமுறையும்
மற்றொரு தலைமுறையினரிடமிருந்து
கிரகித்துக்கொள்கிறது. அப்படியென்றால்
மட்டுமே தமது தலைமுறையும் தமது
கலாச்சாரமும் பாதுகாப்புமிக்கதாக இருக்க
முடியும் என்று அது கருதுகிறது.
கருணைமயமான
இருப்புத்
தன்மை, தமது
குணாதிசயத்திற்குச்
சற்றும் பொருந்தாத
ஒன்றைப் படைக்க
முடியாது.
இருப்பினும் குற்றவியல் புள்ளிவிவரங்கள், பெரும்பான்மையான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை, குற்றங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுடைய உறவினர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கின்றன.
அதனால்தான் எந்த ஒரு கொலைக் குற்றத்தின் விசாரணையிலும் முதலில் சந்தேகப்படும் நபர், இறந்தவரின் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ இருக்கிறார்கள். இதுதான் உண்மை.
அறிமுகமில்லாதவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். உங்களை நன்கு அறிந்தவர்களே உங்களுக்குத் தீங்கிழைக்கிறார்கள். இருந்தாலும் அறிமுகமற்றவர்களைக் கண்டால் எழும் அச்சம் என்பது மனித மனத்தில் நன்கு வேரூன்றப்பட்டு இருக்கிறது.
இந்தப் பயத்திற்கு அடிப்படை நம்முடைய மூதாதையர் மற்றும் விலங்குகளின் மூலத் தன்மையில் இருந்து எழுகிறது.
விலங்குகளும் பழங்குடியினரும் உயிர்மீது இருந்த பற்றுதலின் காரணமாகவே கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களது வாழ்க்கையே புதியவர்களை எவ்விதம் எதிர்ப்பது, தடுப்பது என்கிற போராட்டமாகத்தான் இருந்தது.
ஆனால் நல்லவேளை, ஓர் இனம் நீண்ட நெடுங் காலம் உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த மனப்பான்மை, இந்த அணுகு முறை ஆபத்தானது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள்ளாகவே பெருகி, தம் இனத்தை
மட்டுமே வளர்ப்பது என்பது அவர்கள் நீண்ட
நாள் உயிர் வாழும் வாய்ப்பினைக் குறைத்து
விடுகிறது. அது உயிர்வாழும் வாய்ப்பினை
அதிகப்படுத்துவதில்லை.
இந்த நவீன காலக் கட்டத்தில் முழு உலகமும்
தொலைத் தொடர்பு வசதியினால் மிக
நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது.
யாரும் தனித்தீவாக வசிக்க முடியாது.
எந்த ஒரு குழுவோ அல்லது இனமோ
அல்லது நாடோ மற்றவர்களிடமிருந்து
தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு
வாழ்வதோ, தழைப்பதோ இயலாத ஒன்று.
அறிமுகமில்லாதவர்கள்
உங்களுக்குத்
தீங்கிழைக்க
மாட்டார்கள்.
உங்களை
நன்கு அறிந்தவர்களே
உங்களுக்குத்
தீங்கிழைக்கிறார்கள்.
மற்றவர்களுடன் சேர்ந்து வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய காலக் கட்டத்தில், வாழ்வைச் சிறப்பான முறையில் நடத்துவதற்கு கூட்டுறவும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் தன்மையும்தான் மிக முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன; சண்டையும் ஆபத்தான போட்டி மனப்பான்மையும் இங்கு உதவாது.
செல்களைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவில், செல்கள் மற்ற செல்களுடன் இணைந்து இருக்கவே விரும்புவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. அவை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில்லை.
இயற்கையின் பரிணாம வளர்ச்சி, போட்டியிலும் பலம் மிகுந்த தன்மையிலும் இல்லை. மாறாக சேர்ந்து வாழ்வதன் மூலமாகவும் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும்தான் நிகழ்கிறது.
டார்வின் (Darwin) தமது பரிணாம வளர்ச்சிக் கொள்கையில், ஓர் இனம் போர் புரிவதாலும் விலகிச் செல்வதனாலும் மட்டுமே உயிர் பிழைத்து வாழ்கிறது என்று சொல்கிறார். இது முற்றிலும் தவறான கருத்து.
நாம் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம், வேறுபடுத்திக் பார்க்கும் அளவுகோலாக எதைப் பயன்படுத்துகிறோமோ, அதையேதான் அறிமுகமானவர்களுக்கும்கூட பயன்படுத்துகிறோம்.
நாம், நம் அனுபவத்தின் அடிப்படையில்தான் பொதுவானதொரு அளவு கோலை உருவாக்குகிறோம். யாரெல்லாம் அவற்றை உறுதியாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை நல்லவர்கள் என்றும், அவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கெட்டவர்கள் என்றும் தீர்மானிக்கிறோம்.
இது சராசரிக்கும் கீழானதொரு அடித்தளத்தை உருவாக்குகிறது. சராசரி மற்றும் சராசரிக்கும் கீழான பொது பிரிவு என்று உருவாக்கப்படும் எவையுமே வளர்ச்சிப் பாதைக்கு உதவுவதில்லை. மாறாக அழிவிற்கே இட்டுச் செல்லும்.
உங்கள் தலையைக் கொதிக்கும் நீரிலும் உங்கள் கால்களை குளிர்ச்சியான பனிக்கட்டியிலும் வைத்திருப்பீர்களானால், உங்களது சராசரி தட்பவெப்ப நிலை ஒரு சாதாரண மனிதனின் சராசரி தட்பவெப்ப நிலையைக் காட்டக் கூடும். ஆனால் இந் நிலையில் அதிக நேரம் நீங்கள் உயிரோடிருக்க மாட்டீர்கள்.
அனைத்து விஷயங்களிலும் நாம் சராசரியாகச் சிந்தித்து வாழவே பழக்கப்பட்டு உள்ளோம். ஒரு சராசரி குடும்பத்தின் அளவு 4.2 என்றால் ஏதாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை!
நமது விழிப்புணர்வு இல்லாத மனம், உணர்வுப்பூர்வமான நினைவுகளால், ஸம்ஸ்காரங்களால் நிரப்பப்பட்டு உள்ளது. இந்த ஸம்ஸ்காரங்கள் நமது செயல்களையும் முடிவுகளையும் நிர்ணயிப்பதால்தான், நாம் தனிமையையும் பிரிவையும் உருவாக்கி விடுகிறோம்.
இந்த முடிவுகள் எதுவுமே விவேகம் உள்ளவையாகவோ, நியாயமாகவோ இருப்பதில்லை என்பதனை நாம் அறியும்பொழுது அதிர்ச்சி அடைகிறோம். நமது புலன்களோ, மனமோகூட நம்மைச் சார்ந்து இருப்பதில்லை. அவற்றின் தீர்ப்புகளும் கேள்விக்குரியவையாகவே இருக்கின்றன.
“எங்களிடம் இருப்பவற்றைத்தானே நாங்கள்
உபயோகப்படுத்த முடியும்?” என்று நீங்கள்
சொல்லலாம்.
நாம் இவற்றை மட்டுமே பெற்றிருக்கவில்லை.
உச்சகட்ட வெளிப்பாட்டு நிலையில் நாம்
தூய்மையான புத்தியாக இருக்கிறோம்.
ஒவ்வொரு கணமும் தன்னிச்சையான
உள்ளுணர்வு (Intuition) நமக்குக்
கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால்
நாம் நமக்கு
அறிமுகம்
இல்லாதவர்களிடம்,
வேறுபடுத்திக் பார்க்கும்
அளவுகோலாக
எதைப்
பயன்படுத்துகிறோமோ,
அதையே நாம்
அறிமுகமானவர்களுக்கும்
பயன்படுத்துகிறோம்.
இது பற்றிய அறிவு நமக்குக் கற்றுக்கொடுக்கப்படாததால், நம்முள்ளேயே இருக்கும் இந்தப் புத்திசாலித்தனத்தை நாம் ஒருபோதும் பயன்படுத்துவதே இல்லை.
மாறாக, நாம் நமது புலன்களையும் மனத்தையும் சார்ந்து வாழவே விரும்புகிறோம். நமது புலன்களோ, வெளியுலகம் நமக்கு அளிக்கும் இன்பங்களையே நமது வாழ்க்கையின் ஆதாரமாகக் கருதுகின்றன. புலன் இன்பங்களுக்கு அடிமையாகிவிடும் நாம் ஒருபோதும் நமது கவனத்தை உள்முகமாகத் திருப்புவதே இல்லை. அதை எவ்வாறு செய்வது என்பது பற்றிக்கூட நாம் தெரியாமல் இருக்கிறோம். அதனால்தான் ‘நம்முடன் நாம் அமர்தல்’ என்பதே நமக்கு அச்சமூட்டக்கூடியதாகத் தோன்றுகிறது!
நமது விழிப்புணர்வு
இல்லாத மனம்
உணர்வுப்பூர்வமான
நினைவுகளால்,
ஸம்ஸ்காரங்களால்
நிரப்பப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வும் புத்திசாலித்தனமும்
உங்களின் அடிப்படையான குணங்கள்.
அவையே உங்களது ஆழமான
மையப் பகுதி. ஆனால் உங்கள் மனம்
மேலோட்டமான, அற்பமான, நிலையில்லாத
புலனின்பங்களின் விளிம்பை நோக்கியே
கவர்ந்திழுக்கப்படுகிறது.
அவ்வப்பொழுது ‘இந்த மேலோட்டமான
புலனின்ப விளிம்பு எனது வீடல்ல’
என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும்
உங்கள் மையம் நோக்கி நகர்கிறீர்கள்.
பிறகு விளிம்பு மீண்டும் உங்களைக் கவர்ந்திழுக்கிறது. அதனால் நீங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒருபோதும் நீங்கள் உங்களுக்குள்ளே நீண்ட காலம் மையம் கொண்டிருப்பதில்லை.
ஒரே மையத்தில் தங்கமுடியாத, விநோத மன அமைப்பை உடையவராக நீங்கள் மாறி விடுகிறீர்கள்.
துரியோதனன் பெரும்பாலும் விளிம்பு நிலையிலேயே செயல்படுகிறார். மிகவும் அரிதாகவே தன்னுள் மையம்கொள்கிறார். அவர் தம் புலன்களாலும் மனத்தாலுமே ஆளப்படுகிறார். அவற்றின் மீதான தம் ஆளுமையை அவர் இழந்துவிட்டிருந்தார். மாறாக, அர்ஜுனன் தன்னால் இயன்றவரையில் தம் மையத்தை நோக்கி நகர முற்படுகிறார்.
அவர் தம் மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. இவர்களுள் யார் சிறந்தவர், யார் தாழ்ந்தவர் என்று யாரால் மதிப்பிட முடியும்?
என் அறிவுரையை நீங்கள் கேட்கும் பட்சத்தில், அர்ஜுனனைப் போன்று இருங்கள் என்றே நான் சொல்வேன். அர்ஜுனன் ஒரு தேடுதல் உடையவர்.
அவர் தம் அஹங்காரத்தை விட்டொழிக்க முயற்சிக்கும் ஒரு சீடர். ஆனாலும் அவர் தம் மையத்தை அடையும்வரையில், துரியோதனனுக்கும் அவருக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை.
நீங்கள் ஒவ்வொருவரும் அர்ஜுனனையும் துரியோதனனையும்போல, ஞானமடைதலில் இருந்து சம தூரத்தில் விலகியே நிற்கிறீர்கள்.
என் சொற்பொழிவுகளைக் கேட்பதோ, என்
புத்தகங்கள் அனைத்தையும் படிப்பதோ,
அவற்றைப் பட்டறிவுப்பூர்வமாக
புரிந்துகொள்வதோ, ஞானமடைதலின்
அனுபவம் ஆக முடியாது.
இந்த இரு போர்வீரர்களுமே இருளில்தான்
இருக்கிறார்கள், ஆனால் வெவ்வேறு
கோணங்களில் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.
> விழிப்புணர்வும்
> புத்திசாலித்தனமும்
> உங்களின்
> அடிப்படையான
> குணங்கள்.
> அவையே
> உங்களது
> ஆழமான மையப் பகுதி.
நாம் மனிதர்களை புனிதர்கள் என்றும், பாவிகள் என்றும் வேறுபடுத்துவது போல், பிரபஞ்ச சக்தி வேற்றுமை பாராட்டுவதில்லை. பிரபஞ்ச சக்தி இதைப் பொருட்படுத்துவது இல்லை. நீங்கள் உங்கள் கவனத்தை உள் முகமாகத் திருப்பி, உங்களுள் மையம்கொள்ளும்பொழுது, நீங்களே பிரபஞ்ச சக்தி என்பதை உணர்ந்து, ஞானமடைகிறீர்கள்.
ஞான நிலைதான் உங்கள் இயல்பான நிலை என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. ஞானத்தை அடைய நீங்கள் பாடுபட்டு உழைக்கத் தேவை இல்லை. இயல்பாக இருங்கள், அது போதும். நீங்கள் அர்ஜுனனாக இருந்தாலும் சரி, துரியோதனனாக இருந்தாலும் சரி, இது எந்த வித்தியாசத் தையும் உருவாக்கப் போவதில்லை!
நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம் இதுவே:
ஸத்யத்தின் கதவைத் திறப்பதற்கான
சரியானதொரு சாவியைக் கண்டுபிடிக்க,
நான் பத்தாயிரம் சாவிகளைச் சோதனை
செய்ய வேண்டி இருந்தது. நான் அந்தச்
சாவியை இப்பொழுது உங்களுக்கு
அளிக்கிறேன், அதனால் சாவியைத் தேடி
நீங்கள் போராட வேண்டிய தேவை இல்லை.

நீங்கள் அர்ஜுனனாக இருப்பது உங்கள் பயணப் பாதையில் சற்றே வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் வெளி வட்டத்தில் இல்லாமல், மையத்திற்கு அருகில் இருப்பது அந்த வித்தியாசத்திற்குக் காரணமல்ல. ஒரு குருவின் வழிநடத்தலோடு பயணிப்பதே அந்த வித்தியாசத்திற்குக் காரணம்.
கிருஷ்ணபரமாத்மாவை குருவாக அடைந்ததே அர்ஜுனனின் விமோசனத்திற்குக் காரணமாக அமைந்தது. வேறு எதுவும் இல்லை.
கிருஷ்ணரிடம் அர்ஜுனன் அடைந்த சரணாகதியே அந்த வித்தியாசத்தை ஏற்படுத்தியது. வேறு எதுவும் இல்லை.
அர்ஜுனனையும் துரியோதனனையும் மதிப்பிட முயற்சி செய்யாதீர்கள். அவர்களை மதிப்பிடவோ, வேறுபடுத்தவோ எதுவுமே இல்லை. ஆனால் உங்களால் முடிந்தால் அர்ஜுனனைப் போல் செயல்படுங்கள். ஆன்மீகத் தேடுதல் உடையவராக மாறுங்கள். ஒரு குருவைத் தேடுங்கள்.அதனால் உங்கள் பாதை சுலபமாக ஆக முடியும்.
நீங்கள் வாழ்க்கையிடம் இருந்தோ அல்லது உங்கள் குருவிடம் இருந்தோ கற்றுக் கொள்ளலாம்.
குருவுடன் பயணிக்கும்பொழுது, உங்களுக்கு அந்தப் பாதை சுலபமானதாகவும் விரைவானதாகவும் கருணைமிக்கதாகவும் இருக்கிறது.

