புத்திசாலித்தனமான கேள்விகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
1.23 திருதராஷ்டிரருடைய, கெட்ட புத்தியுடைய புதல்வர்களின் சார்பாகப் போர்புரிய இங்கே திரண்டிருப்போரை நான் காண வேண்டும்.
1.24, 25 ‘பாரத குலத்தில் வந்தவரே’, அர்ஜுனன் இவ்வாறு சொன்னதும் ஹ்ருஷீகேசர், இரண்டு சேனைகளுக்கு மத்தியில் பீஷ்மர், துரோணர் மற்றும் எல்லா வேந்தர்களுக்கு எதிரிலும் அந்த அழகிய தேரைக்கொண்டு நிறுத்திவிட்டுச் சொன்னார், “பார்த்தா, இங்கே கூடியுள்ள எல்லா கௌரவர்களையும் பார்.”

விதியையே வெல்லும் நாயகனாக்கிவிடும் உங்கள் சரணாகதி
அர்ஜுனன் ஒருவித எதிர்ப்பு மனப்பான்மையோடுதான் முதலில் பேசத் தொடங்கினார்.
கெட்ட புத்தியுடைய துரியோதனனுக்காகப் போர் புரியத் திரண்டிருக்கும் அனைவரையும் தாம் பார்க்க விரும்புவதாக அர்ஜுனன் சொல்கிறார்.
அதற்கு ஏற்றாற்போல், கிருஷ்ணரும் தேரை இரண்டு சேனைகளுக்கு மத்தியில், அங்கே திரண்டிருக்கும் அனைவரையும் அர்ஜுனன் நன்கு பார்க்கும்படி கொண்டு வந்து நிறுத்தினார்.
அர்ஜுனனுக்கு, தூக்கத்தைக் கடந்தவர் அல்லது தூக்கமே தேவைப்படாதவர் என்று பொருள்படும் குடாகேசன் என்ற பெயரும் உண்டு. தூக்கம் என்பது இங்கு விழிப்புணர்வற்ற மனத்தையே குறிக்கிறது.
நமது எல்லாச் செயல்களையும் வழிநடத்துகிற ஸம்ஸ்காரங்களும்- எண்ணப்பதிவுகளும் நம் ஒழுக்க விதிமுறைகளும் மற்றும் நம் நம்பிக்கைகளும் நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்திலேயே தங்கி விடுகின்றன.
ஒருவர் முழுமையாக கிருஷ்ணரிடம் சரணாகதி அடைவதன் மூலம், அவர் தம் புலன்களையே வென்றவராக முடியும் என்பதற்கு ஒரு
ஸம்ஸ்காரங்களும்
எண்ணப்பதிவுகளும்
நம்
விழிப்புணர்வற்ற
மனத்திலேயே தங்கி
விடுகின்றன.
உதாரணமாக அர்ஜுனன் இங்கே சுட்டிக் காட்டப்படுகிறார்.
கிருஷ்ணர் ஹ்ருஷீகேசர் என்றும்
அழைக்கப்படுகிறார். ‘புலன்களைக் கட்டி
ஆளுபவர்’ என்பது அதன் பொருள்.
கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில்
ஏற்பட்டிருக்கும் உறவு முறையானது,
தெய்வத்திற்கும் மனிதருக்கும் இடையில்
ஏற்பட்ட மிக உயர்ந்த உன்னதமான உறவு
முறையாக இருக்கிறது.
‘விழிப்புணர்வில்லா வாழ்க்கை’
என்னும் உறக்கத்தில் மாட்டிக்கொண்டு
இருக்கும் ஒருவருக்கு, மாயா வடிவான
இவ்வுலகம் முற்றிலும் உண்மையாகவே
தோற்றமளிக்கிறது.
முழுமையான விழிப்புணர்வு நிலையில்
வாழுகிற ஒரு ஞானி, தம்மை உணர்ந்த ஒரு
ஞானி, இந்த உலகம் என்பது மற்றொரு
கனவுதான் என்பதைப் புரிந்துகொள்கிறார்.
> முழுமையான
> விழிப்புணர்வு நிலையில்
> வாழுகிற ஞானி,
> இந்த உலகம் என்பது
> மற்றொரு கனவுதான்
> என்பதைப்
> புரிந்துகொள்கிறார்.
ஒரு சீடர், தமது புலன்களின் கருத்தான இந்த உலகமே நிஜமானது, அதுவே எல்லா மகிழ்ச்சிக்கும் காரணம் என்பதை நம்பாமல், தமது குருவின்வார்த்தைகளான இவ்வுலகமே ஒரு கனவுதான் என்பதை முழுமையாக நம்பும்பொழுது, அவருக்குள் முழுமையான சரணாகதி நிகழ்ந்து விடுகிறது.
கிருஷ்ணர் தம் புலன்களை அடக்கி ஆளுமை செய்தார் என்று சொல்லும்பொழுது, தமது புலன்களின் மூலம் பெறக்கூடிய இன்பங்கள் ஆனந்தத்திற்கு அடிப்படை அல்ல என்பதனை அவர் தமது அனுபவத்தின் மூலம் நன்றாக உணர்ந்திருந்தார் என்பதையும், அதனால் அவர் தமது திருப்திக்கும் முழுமைக்கும் புலன்களினால் அடையக்கூடிய சிற்றின்பங்களை நாடிச்செல்லவில்லை, அதன்பின் ஓடவில்லை என்பதையும்தான் குறிக்கிறது.
புலன் இன்பங்களை நாடிச் செல்லாத தன்மை கிருஷ்ணருக்கு இருந்ததால்தான், அவர் ‘புலன்களை அடக்கி ஆளுமை செய்தார்’ என்ற புகழுக்குரியவராகிறார்.
தனது குருவையோ அல்லது இறைவனையோ அணுகும் ஒருவருக்கு, இறுதியான நிலை ‘முழுமையான சரணாகதியே’.

ஒருபோதும் பதிலளிக்கப்பட
முடியாதவை கேள்விகள்
சரணாகதி மூன்று நிலைகளில் ஏற்படுகிறது. முதல் நிலை பட்டறிவுப்பூர்வமான சரணாகதி.
கடவுள் என்றால் என்ன, ஒரு குரு என்பவரின் தன்மை என்ன, நமக்கு அவர் என்னவாக இருக்கிறார் - என்பவற்றை எல்லாம் அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதையே அறிவுப்பூர்வமான சரணாகதி என்கிறோம்.
ஓர் உண்மையான சாதகர், அவருக்கான குருவைச் சந்திக்கும்பொழுது, இந்த நிலையை அடைகிறார். நீண்ட நெடுங் காலமாக அவரது மனத்தில் இருந்த கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தேடிக்கொண்டிருந்த குண நலன்களையும் தம் குருவிடம் ஒருங்கே காண்கிறார்.
அறிவுப்பூர்வமாக சரணாகதி அடைந்த இந் நிலையில், ஒரு சீடர் தமது குருவைச் சந்திக்கும்பொழுது அவருடைய அனைத்துக் கேள்விகளும் அவரைவிட்டு அகன்று விடுகின்றன.
கேள்விகள் எழும் முன்பே, அவற்றிற்கான விடைகள் அவரது மனத்தில் தோன்றி விடுவதைப் போன்று அவர் உணர்கிறார்.
உண்மையில், கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க முடியாது. அவை நமது அஹங்காரத்தின், நம் உள் நிலையில் இருக்கும் வன்முறையின் பிரதிபலிப்பே.
| தனது குருவையோ அல்லது இறைவனையோ அணுகும் ஒருவருக்கு, இறுதியான நிலை ‘முழுமையான சரணாகதியே!’ | மற்றவரின் மீது ஒருவருக்கு இருக்கும் ஆளுமையை நிரூபிப்பதற்காகவே கேள்விகள் எழுகின்றன. நம் கேள்விகளை நாமே ஆராய்ச்சி செய்தோமானால், நாம் ஏதோ ஒன்றை அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காகவே கேட்கிறோம் என்பதை உணர்வோம். மிக அரிதாகவே நாம் சிறு குழந்தைகளைப்போல அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகளைக் |
கேட்கிறோம். ஒரு குழந்தை, "வானம் ஏன் நீலமாக இருக்கிறது?" என்று கேட்கக் கூடும்.
ஆனால் ஒரு வளர்ந்த மனிதர் மிக
அரிதாகவே அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்
கேள்விகளைக் கேட்கிறார்.
ஒரு புத்திசாலியான விஞ்ஞானி மட்டுமே,
அவரது அறிவின் அடிப்படையைக் கடந்து,
ஒரு குழந்தையைப்போலவே உண்மையை
அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்கிறார்.
அறிவுப்பூர்வமான சரணாகதி ஒரு குருவிடம் நிகழும்பொழுது கேள்விகள் அனைத்தும் சந்தேகங்களாக மாறுகின்றன. கேள்விகளைப் போன்று சந்தேகங்கள் வன்முறையானவை அல்ல.
அறிவுப்பூர்வமான
சரணாகதி
நிகழும்பொழுது
கேள்விகள்
அனைத்தும்
சந்தேகங்களாக
மாறுகின்றன.
அவை அஹங்காரத்திலிருந்து எழுவதில்லை. அவை உண்மையாகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கேட்கப்படுகின்றன.
உங்கள் சொந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவீர்கள்
நம்பிக்கையும் சந்தேகமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களாக இருக்கின்றன. தமது குருவைப் பற்றிய சந்தேகங்கள் இல்லாமல், ஒருவர் தமது குருவிடம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியாது.
அர்ஜுனனின் சரணாகதி மிக உயர்ந்த தன்மைவாய்ந்ததாக இருந்த போதிலும் அவரிடம் ஆரம்ப நிலையாகிய 'கேள்வி கேட்கும் மன நிலை' இருப்பதையும் காணமுடிகிறது. ஒருவேளை, சாதாரண மனிதர்களாகிய நமக்கும் அது ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பதற்காகக்கூட அர்ஜுனன் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கலாம்.
கீதையின் அடுத்தடுத்த அத்தியாயங்களில், அர்ஜுனன் கேள்விகள் கேட்கும் மன நிலையிலிருந்து உயர்ந்து, அறிவுப்பூர்வமான சரணாகதி அடையும் நிலைக்கும் சந்தேகங்களை எழுப்பும் உயரிய நிலைக்கும் படிப்படியாக உயர்கிறார்.
இறுதியாக, சந்தேகம், நம்பிக்கை என்னும் இவ்விரு தன்மைகளையும் கடந்து, குருவிடம் ஆழ்ந்த பரிபூர்ண நம்பிக்கைகொள்ளும் ஒரு உன்னத நிலைக்கு நாமும் உயர வேண்டும்.
குரு வெளிப்படுத்துகிறஅனைத்துமே நமது முக்திக்கான வழியே என்பதை உணரும் பக்குவத்தைப் பெற வேண்டும்.
அடுத்த நிலையில், இதயப்பூர்வமான சரணாகதி நிகழும் தன்மையை ஒருவர் அடைகிறார்.
அதாவது சா'ஸ்த்திரங்களிலிருந்து ஸ்தோத்ரங்களுக்குச் செல்கிறார். தமது அறிவின் இருப்பிடமான மூளையிலிருந்து, உணர்வுகளின் இருப்பிடமான இதயத்திற்கு அவர் முன்னேறுகிறார்.
இதயப்பூர்வமாகச் சரணடையும்பொழுது ஒருவர்
தமது நிரந்தரமான வீட்டை அடைந்ததைப்
போன்று உணர்கிறார். தமது குருவுடன்
ஆத்மார்த்தமான உணர்வு ரீதியான தொடர்பை
அவர் உணர்கிறார்.

குருவை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவர வேண்டும் என்று அவர் முயற்சி செய்ய வேண்டியதே இல்லை. குருவின் திருமுகத்தை அவரால் ஒருபோதும் மறக்கவே முடியாது.
குருவின் நினைவுகள் கண்ணீரை வரவழைக்கும் சக்தி படைத்தவை. நன்றியுணர்வினால் பொங்கும் கண்ணீரை அவரால் மறைக்க முடிவதில்லை.
குரு வெளிப்படுத்துகிற
அனைத்துமே,
நமது
முக்திக்கான
வழியே!
இராமகிருஷ்ணர் மிக அழகாகச்
சொல்கிறார், “எப்பொழுது கடவுளுடைய
பெயரையோ, குருவினுடைய பெயரையோ
நினைத்த மாத்திரத்திலேயே
உங்களது கண்கள் கசிகின்றனவோ
அப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள்,
இதுதான் உங்களது கடைசிப் பிறவி.”
இதயப்பூர்வமான சரணாகதி ஒருவரை
முக்திக்கு மிக அருகில்கொண்டு செல்கிறது.
அது உங்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து
வந்துவிடும்.
இறுதியான நிலை, புலன்களை சரணாகதி செய்வதே. அப்பொழுது அவர் தன்னுள் ஷ்ரு'ஷிகேச' தன்மையை உணர்ந்து, தம்மை இதுவரை தவறான வழியில் வழிநடத்திச் சென்று கொண்டிருந்த புலன்களின் உண்மை இயல்பைப் புரிந்துகொண்டு, அதை விட்டுவிட்டு, ஞானகுருமார்கள் வெளிப்படுத்திய பூர்ணத்துவத்தின், முழுமை நிலையின் ஸத்யத்தைத் தழுவிக்கொள்கிறார்.
அர்ஜுனன் அந்த சரணாகதி நிலையில்தான் இருக்கிறார். கீதையின் அடுத்த அடுத்த அத்தியாயங்களில் வெளிப்படுத்தப்பட்ட உபதேசங்களின் மூலம் அர்ஜுனனது சரணாகதி படிப்படியாக மேம்பட்டு, நம்பகமற்ற தன்மை படிப்படியாகக் கழன்றுகொண்டே வந்தது.
அர்ஜுனன், துரியோதனனை 'கெட்ட
புத்தியுடையவன்' என்று அழைக்கிறார்.
கௌரவர்களுக்கும் கௌரவ
சேனையினருக்கும் துரியோதனனின் மன
நிலைக்கும் தமக்கும் உள்ள மாபெரும்
வித்தியாசத்தைக் காட்டவே அர்ஜுனன்
இவ்வாறு சொல்கிறார்.
ஒருவரது மனம் ஆசை, அச்சம்,
காமம், பொறாமை என்னும் எதிர்மறை
எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு
இருக்கும்பொழுது, பொருள் ரீதியிலான
பலன்களில் மட்டுமே அவரது மனம்
ஒருமுகப்படுகிறது.
இதயப்பூர்வமான
சரணாகதி
ஒருவரை
முக்திக்கு
மிக அருகில்
கொண்டு செல்கிறது.
தாம் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றிய எந்தவொரு சந்தேகமும் துரியோதனனுக்கு இல்லை. அவரது குறிக்கோள் மிகவும் தெளிவானது.
'பஞ்ச பாண்டவர்களை ராஜ்ஜியத்திலிருந்து அகற்றி விட்டு, முழு நாட்டையும் கைப் பற்றிக்கொள்ள வேண்டும்;' அவ்வளவுதான்.
துரியோதனன் மிருகத்தைப் போன்ற இயல்பான ஒரு குணத்திலிருந்து செயல்படுகிறார். அவர் அர்ஜுனனைப்போல புத்திசாலியானவர் இல்லை. அர்ஜுனன்போல் அவர் எந்தவிதமான சந்தேகங்களாலும் குற்றஉணர்ச்சிகளாலும் துன்பப்படவில்லை.
மிருகங்கள் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படுவதில்லை. இயற்கையாக என்ன தோன்றுகிறதோ அவற்றையே அவை செய்கின்றன. இரையை வேட்டையாட வேண்டும் எனும்பொழுது, அதைப் பற்றி மற்றவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவை கருதுவதில்லை.
பசித்தபொழுது வேட்டையாடிக் கொன்று உண்பதே அவற்றின் வாழ்க்கைக் கோட்பாடு. துரியோதனனும் அப்படித்தான், அவருக்குத் தேவை இராஜ்ஜியம் மற்றும் அதிகாரம்.
அவற்றை அடைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அவற்றைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற அவருக்கு எந்தவித தயக்கமும் இருக்கவில்லை.
ஒரு மனிதர், விலங்குகளைவிடவும் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார். இந்த விழிப்புணர்வின் அடிப்படையில், சரி என்றும் தவறு என்றும் பகுத்தாராய்ந்து, தாம் விரும்பியவாறு செயல்படும் தன்மையை பெற்றிருக்கிறார்.
ஒரு மனிதர் துரியோதனனைப்போல செயல்படும்பொழுது, அவர் தெளிவில்லாத விழிப்புணர்வில்லாத நிலையில் இருக்கிறார்.

ஸம்ஸ்காரத்தை அழித்திடும் ஒரே சக்தி
தெளிவற்ற, விழிப்புணர்வற்ற மன நிலையில் துரியோதனனும் அவரது கூட்டாளிகளும் இருப்பதால், அவர்களுக்குச் சந்தேகங்களே இல்லை.
விழிப்புணர்வற்ற
நிலையில் இருந்து
செயல்படும் ஒருவர்
எந்தவிதமான
சந்தேகங்களாலும்
குற்ற
உணர்ச்சிகளாலும்
துன்பப்படுவதில்லை.
விழிப்புணர்வில்லாத இருளால் சூழப்பட்டு
இருப்பதால், கெளரவ சேனையின் வீரர்கள்
துரியோதனனைக் குருட்டுத்தனமாகப்
பின்பற்றுகிறார்கள். அவர்கள் பின்பற்றும்
அந்தத் தலைவரே குருடர்தான் என்பதைக்கூட
அவர்களால் உணர முடியவில்லை!
இதற்கு மாறாக, அர்ஜுனன் முற்றிலும் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். கிருஷ்ணர் அர்ஜுனனது தேரை 'இரு சேனைக்களுக்கும் இடையில் நிறுத்துகிறார்' என்று சொல்லும்பொழுது, அர்ஜுனனது மனத்தை ஒருநிலையான, குழப்பமில்லாத நிலையில் நிலை நிறுத்துகிறார் என்பதே அதன் பொருள்.
துரியோதனன் இருளில் இருக்கிறார்.
விலங்கினைப் போன்றதொரு இயல்பில்
அவர் இயங்குகிறார். ஸம்ஸ்காரங்களால்
தூண்டப்பட்டு, முற்றிலும் விழிப்பு நிலையே
இல்லாததொரு தளத்திலிருந்து அவர்
செயல்படுகிறார்.
அதாவது அவராலேயே அவரைக்
கட்டுப்படுத்த முடியாத படி, அவரது
ஸம்ஸ்காரங்களே அவரை முற்றிலுமாக
ஆக்கிரமித்து இயக்குகின்றன.
> ஸம்ஸ்காரங்கள்
> வலிமையானதாக
> இருக்கும்பொழுது,
> நமக்கு
> அறிவுப்பூர்வமான
> அறிவுரைகள்கூட
> அர்த்தமற்றதாகத்
> தெரியக்கூடும்!
'அவர் போகும் பாதை அழிவிற்கான பாதை' என்ற அவரது மந்திரிகளின் அறிவுப்பூர்வமான அறிவுரைகள்கூட அவரது காதில் விழவில்லை. அவருடைய ஸம்ஸ்காரங்களும் மாயையும் அவ்வளவு வலுவாக இருக்கின்றன.
இதற்கு மாறாக, அர்ஜுனன் சற்றே ஒளி பொருந்திய பகுதியில் இருக்கிறார். அர்ஜுனன், துரியோதனனைப்போல் இல்லாமல், தமது ஸம்ஸ்காரங்களைப் பற்றி நன்கு அறிந்தவராக மட்டுமல்ல, அவற்றின் அடிமைத்தளத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்.
ஆனாலும் அவர், முற்றிலும் ஒளி பொருந்திய பகுதியை இன்னும் எட்டிவிடவில்லை.
சரணாகதி அடையும் திறமையைப் பொறுத்ததே உங்களின் வெற்றி!
அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஏற்படும் போர், எல்லா மனிதர்களும் தங்களுக்குள் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது இனி சந்திக்கப் போகும் போராட்டமே.
ஸம்ஸ்காரங்களால் தூண்டப்படுகிற ஆழமான விழிப்புணர்வற்ற ஆசைக்கும் ஆற்றல் மிக்க விழிப்புணர்வு நிறைந்த அவர்களின் உள் தன்மைக்கும் இடையே நிகழும் போராட்டத்தைத்தான் மனிதர்கள் தங்களுக்குள் சந்திக்கிறார்கள்.
இந்த இரண்டில் எந்தப் பகுதி வெற்றி பெறுகிறது என்பது இறைவனிடமோ, குருவிடமோ சரணாகதி செய்யும் திறமை ஒருவருக்கு இருப்பதைப் பொறுத்தே முடிவாகிறது.
இப்பொழுது ஒருவர் இருளில் இருக்கிறார் என்பதற்காக மட்டுமே, அவர் ஒளியை இழந்துவிட்டார் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பிறவிக் குருடனாகிய ஒருவருக்கு, பார்வை என்றால் என்ன? வெளிச்சம் என்றால் என்ன? அவர் வாழ்க்கையில் எதைத் தவற விடுகிறார் என்பவை எல்லாம் தெரியாது. அவர் எதை இழந்து கொண்டிருக்கிறார் என்பதுகூட அவரது அனுபவத்தில் அவருக்குத் தெரிவதில்லை. பிறர் சொல்வதன் அடிப்படையில்தான் அவர் உணர முடியும்.
> இப்பொழுது
> ஒருவர் இருளில்
> இருக்கிறார்
> என்பதற்காக மட்டுமே,
> அவர்
> ஒளியை
> இழந்துவிட்டார் என்று
> சொல்லிவிட முடியாது.
ஆனால் பார்வையுடன் பிறந்து, சிறிது
காலத்திற்குப் பிறகு பார்வை இழந்தவர்
நிச்சயமாக ஒளி இழந்ததை உணர்கிறார்.
அவர் இருளில், ஒளியின் இழப்பை நினைத்து
தவிக்கிறார்.
தான் இருக்கும் அந்த இருளை எண்ணி
அவர் வருந்துகிறார். இருளை எண்ணி அவர்
அச்சப்படுகிறார். ஆனால் ஒரு பிறவிக்
குருடரோ, இருளே அவரது அனுபவமாக
இருப்பதால் அதைப் பற்றி அச்சம் கொள்வதே
இல்லை.
முதலில் பார்வை பெற்றிருந்து பிறகு அதனை இழந்த ஒரு மனிதர் எப்படியெல்லாம் துக்கப்படுவாரோ, எப்படிப்பட்ட மன நிலையில் இருப்பாரோ, அதைப்போலவே அர்ஜுனனும் இருக்கிறார்.
அவர் ஒரு புத்திசாலி மனிதர்தான். ஆனாலும் திடீரென்று தாம் செய்வது சரியா, தவறா அல்லது அது தீங்கிழைக்கும் காரியமா? என்று குழப்பமடைந்து கலங்குகிறார்.
துரியோதனனோ எப்போதும் இருளில் இருக்கும் ஒரு மன நிலையில் இருக்கிறார். அவர் ஒருபோதும் உண்மையான அறிவையோ, தெளிவையோ அனுபவித்ததே இல்லை.
எனவேதான், எவை நீதிநெறிகளுக்கு உட்பட்ட செயல்கள், எவை நியாயமான வார்த்தைகள் என்பதும், எவை நீதி நெறிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள், எவை நியாயமற்ற வார்த்தைகள் என்பதும்கூட அவருக்குப் புரிவதே இல்லை.
கேள்வி: பூர்ண அவதாரமான கிருஷ்ணர் உபதேசித்தார் என்ற காரணத்தினால் மட்டுமே, கீதை வேதங்களின் உரிமையைப் பெற்றிருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் வேதங்கள் துறவிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டவை. கிருஷ்ணர் ‘கடவுளின் அவதாரம்’ என்பதற்கான சரித்திரப்பூர்வமான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?
மிக நல்ல கேள்வி.
பகுத்தறியும் மனத்தில் இயற்கையாக எழும் கேள்வி இது. “இதற்குச் சான்று இருக்கிறது,” என்று நான் சொன்னால், உடனே உங்களின் அடுத்த கேள்வியாக, “கடவுள் இருக்கிறார் என்பதற்கான சான்றைக் காட்ட முடியுமா?” என்பதாகத்தான் இருக்கும்.
கடவுள் இருக்கிறார் என்பதனை நான்
உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க
முடிந்தால்தான், கிருஷ்ணரும் கடவுளின்
அவதாரமே என்று என்னால் நிரூபிக்க
முடியும்.
கடவுள் மீது நாம் வைக்கும் முழு
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கடவுளைப்
பற்றி நாம் கொண்டிருக்கும் ஊகங்களின்
அடிப்படையிலேயே அமைகின்றன.
நமது உருவத்தின் பிரதிபலிப்பாகவே நாம் கடவுளையும் வடிக்கிறோம். நாம் எது செய்தாலும் அது நாம் உருவாக்கிய அடையாளங்களே! அது ஒரு மாயத்தோற்றமே; அது ஒரு கனவே; அது ஒரு அனுபவம் அல்ல.
மனிதர்களுக்கு விதவிதமான கற்பனைகள் இருக்கின்றன. சிலர் தங்களையே கடவுளாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. கடவுள் இருக்கிறார் என்று சிலர் ஏற்றுக் கொண்டாலும்கூட, தங்களது கடவுளே மற்றவரது கடவுளை
காட்டிலும் சிறந்தவர்; வேகமாகப்
பலனளிக்கக்கூடியவர் என்ற விவாதம் செய்து
கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.
சில நேரங்களில், ‘மக்கள் கடவுளை
நம்பாமல் இருப்பதே சிறந்தது’ என்று
நான் நினைப்பதுண்டு. அதனால் பூமியில்
வன்முறையும் இரத்தம் சிந்துவதும்
எவ்வளவோ குறைந்திருக்கும்.
பெரும்பான்மையான போர்கள்
மதக்கலவரத்தாலேயே தோன்றி
இருக்கின்றன. ‘மதம்’தான் தீவிரவாதிகளை
உற்பத்தி செய்கிறது.
> கடவுள் மீது
> நாம்கொள்ளும்
> முழு நம்பிக்கையும்
> அவ நம்பிக்கையும்
> கடவுளைப் பற்றி
> நாம் கொண்டிருக்கும்
> ஊகங்களின்
> அடிப்படையிலேயே
> அமைகின்றன.
நாத்திகவாதிகள் போர் புரிவது இல்லை. அவர்கள் வாதம் மட்டுமே புரிகிறார்கள். உங்களில் பெரும்பாலானோருக்கும் கடவுளைப் பற்றி ஒரு எண்ணம் இருக்கிறது. உங்களுடைய அடையாளத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்.
குறைந்த பட்சம் ‘நீங்கள் யார்?’ என்று உங்களைப் பற்றி நினைக்கிறீர்களோ, அதைப் பிறரும் நம்பும் படியாக, தெளிவாக உங்களால் பேச முடிகிறது. ஆனால் கடவுளைப் பற்றிச் சொல்லும்பொழுது அந்தக் கருத்து முழுவதும் உங்களது கட்டுறு மனப்பாங்கு, நம்பிக்கைகள், கலாச்சாரம், சூழ்நிலை இவற்றைப் பொறுத்தே அமைகிறது.
இது மிகவும் சக்திவாய்ந்த, விழிப்புணர் வில்லாத ஒரு நம்பிக்கை. இதை மாற்றுவது மிகவும் கடினம். சிலருக்குக் கடவுள் என்பவர் கனிவான கண்களுடனும் தாடியுடனும்கூடிய ஓர் ஆத்மா என்று உருவகப்படுத்திப் பார்ப்பார்கள்.
சிலருக்கோ, கடவுள் என்பவர் உருவமே இல்லாதவராகவும் உருவ வழிபாட்டில் அவரைக் காண்பது என்பதே புனிதமில்லாத செயலாகவும் இருக்கிறது.
பல கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கோ கடவுள் என்பவர், சிவன், விஷ்ணு, காளி, கிருஷ்ணர் என்று பல உருவங்களுடன் இருக்கக்கூடியவராகவும் அதனதற்கே உரிய தனி இயல்புகள் கொண்டவராகவும் இருக்கிறார்.
புத்தர்பிரான் கடவுளை மறுத்தார். அவர் கடவுள் என்னும் கருத்தினைக்

கடந்து சென்றார். நூற்றுக்கணக்கான
வருடங்கள் 'போதிமரம்' மட்டுமே
புத்தராகக் கருதப்பட்டு வந்தது.
இதில் முரண்பாடான விஷயம்
என்னவென்றால் கடைசியில் புத்தரைப்
பின்பற்றியவர்கள் அவரையே கடவுளாக
மாற்றிவிட்டார்கள் என்பதுதான்!
உங்களில் பலருக்கும் கடவுள் என்பவர் ஒரு கருத்தாக மட்டுமே இருக்கிறார்.
ஆனால் உங்களுக்கு, 'நான்' என்று
உங்களைப் பற்றி இருக்கும் எண்ணம்
உண்மையானது.
எனக்கோ, 'நான்' என்னும் இந்த வடிவம் உண்மையில்லாததாக இருக்கிறது. ஆனால் கடவுள் என்பவர் நிதர்சனமாக இருக்கிறார்.
ஒவ்வொரு கணமும், நான் செய்கிற ஒவ்வொரு செயலும் அந்த இறுதி சக்தியினால் அனுமதி அளிக்கப்பட்டே செய்யப்படுகிறது.
எனவே கடவுள் இருக்கிறார் என்று சொல்வதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. கிருஷ்ணர் உண்மையில் கடவுள்தான். ஏனெனில் நான் அவரைக் கண்டிருக்கிறேன். ஆகவே எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
நான் உங்கள் ஒவ்வொரு வரையும் இறைவனை
அனுபவமாக உணர என்னுடன் வருமாறு
அழைக்கிறேன். இது ஒரு உறுதிமொழி. இந்த
உறுதிமொழி மிக எளிதில் கொடுக்கப்படுவது
இல்லை.
நான், உங்களுக்கு வழங்குவதாக
உறுதியளிக்கும் இந்த அனுபவத்தை,
உங்களுக்குள் நிகழ்த்தக்கூடிய தொழில்
நுட்பத்துடனும் கருணையுடனும்
ஞானத்துடனும் ஸூத்ரங்களுடனும்
ஸ்தோத்ரங்களுடனும் சாஸ்த்ரங்களுடனும்
அவதரித்திருக்கிறேன்.
நீங்கள்
எந்த உருவத்தில்
அவரைக் காண
விரும்பினாலும் சரி,
எந்தப் பெயரில்
அவரை அழைக்க
விரும்பினாலும் சரி,
கடவுள்
அனைவருக்கும்
உரியவர்.
இது நன்கு பரிசோதிக்கப்பட்ட, இறுதியான நடைமுறை நுட்பம். இது வெற்றியளிக்கக்கூடியது என்பதனையும் நான் அறிவேன்.
கடவுள் என்பவர் ஏதாவது ஒரு மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கக்கூடியவர் அல்ல. நீங்கள், ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்தவராகவோ அல்லது வேறு ஒரு மதத்தை நம்புபவராகவோ இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
நீங்கள் எந்த உருவத்தில் அவரைக் காண விரும்பினாலும் எந்தப் பெயரில் அவரை அழைக்க விரும்பினாலும் சரி, கடவுள் அனைவருக்கும் உரியவர்.
கடவுள் என்பவர்
ஏதாவது
ஒரு மதத்திற்கு
மட்டுமே முன்னுரிமை
அளிக்கக்கூடியவர்
அல்ல.
நீங்கள் கிறிஸ்துவரோ, முஸ்லிமோ, ஹிந்துவோ அல்லது புத்தமதத்தைச் சார்ந்தவரோ... எவராக இருந்தாலும் சரி, கடவுளை அனுபவமாக உணர்வதால் நீங்கள் ஒரு சிறந்த கிறிஸ்தவராகவும் சிறந்த முஸ்லிமாகவும் ஒரு சிறந்த ஹிந்துவாகவும் சிறந்த புத்த மதத்தவராகவும் மாற முடியும்.
உங்களில் எவரும் உங்களது சொந்த
மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு
மதமாற்றம் செய்யப்பட மாட்டீர்கள்.
கடவுள் நம்பிக்கை என்பது மதம் மாற்றுவதாக இருக்கக் கூடாது. தங்களது கடவுள் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளில் பாதுகாப்பை உணராதவர்கள் மட்டுமே, தங்கள் மத நம்பிக்கைகளைப் பிறரின் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தப் பார்க்கிறார்கள்.
ஒரு நம்பிக்கையான மதம் மற்றவரது நம்பிக்கை முறையை (மதத்தை) மாற்ற விரும்புவதே இல்லை.
சில காலம் முன்பு, மும்பையில் நடந்த ஒரு 'சர்வ சமய மாநாடு' ஒன்றில் ஒரு மதபோதகரைச் சந்தித்தேன். நான் அவரிடம் நாம் நடத்தும் முகாம்களைப் பற்றியும் நூற்றுக்கணக்கான மக்களை அது ஈர்ப்பதைப் பற்றியும் சொன்னேன்.
அவர் அமைதியாகக் கேட்டார். பின்பு அவர் நடத்தும் முகாம்களுக்கும்
ஆயிரக்கணக்கானோர் வருவதாகச் சொன்னார். சில நாட்களுக்குள் அவர் என்னிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தார், பிறகு அந்தரங்கமாக அவர் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லலானார். நான் அவருக்கு சில அறிவுரைகளையும் சில தியான நுட்பங்களையும் சொன்னேன். அவை வேலை செய்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த மாநாட்டின் முடிவில் அவர் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அவர் சொன்ன பல பிரச்சினைகளில் ஒன்று, அவர் பிறருக்குப் போதித்துக் கொண்டிருக்கும் விஷயங்களுள், பலவற்றைப் பற்றி அவருக்கே சரியாகத் தெரியவில்லை என்பதுதான்.
நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்,
“உங்களுக்கே சரியாகத் தெரியவில்லை
என்னும்பொழுது மற்றவர்களை எப்படி
ஏற்றுக்கொள்ளச் செய்கிறீர்கள்?”
அவருடைய பதில், உண்மையை
விளக்குவதாக இருந்தது. “இவ்வளவு மக்கள்
என்னிடம் வந்து, நான் சொல்வதைக் கேட்டு
எனக்கு மரியாதை அளிப்பதால், நான்
சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும்
என்று என்னை நானே நம்பத் தொடங்கி
விட்டேன்,” என்று சொன்னார்.
> ஒரு நம்பிக்கையான
> மதம் மற்றவரது
> நம்பிக்கை முறையை
> (மதத்தை) மாற்ற
> விரும்புவதே இல்லை.
உங்களை நீங்களே மூளைச்சலவை செய்து கொள்வதோ அல்லது பிறரால் மூளைச்சலவை செய்யப்படுவதோ மிகவும் சுலபம். எனினும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்னும் குற்ற உணர்ச்சியைச் சுமக்கிறீர்கள்.
தர்க்க அறிவால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாது. அவர் தர்க்க அறிவைக் கடந்தவர். நீங்கள் உங்கள் மனத்தைத் துறந்தால்தான் அவரைக் காண முடியும்!
அதனால் அறிவார்ந்த விவாதங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை மட்டுமே சூடேற்ற முடியும்!
ஒரு சின்ன கதை:
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு நாத்திகவாதியும் ஒரு ஆத்திகவாதியும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஒருமுறை, அந்தக் கிராமத்து மக்கள் அவர்கள் தினம் தினம் போட்டுக்கொள்ளும் சண்டையைப் பார்த்து வெறுப்படைந்து, உங்கள் சண்டையை ஒரு முடிவிற்குக்கொண்டு வாருங்கள். இந்த முறை முழுவதுமாக ஆராய்ந்து உங்கள் இருவரில் யார் சொல்வது சரி என்ற இறுதி தீர்மானத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டதால், அவர்கள் இருவரும் பலநாட்கள் விவாதித்தார்கள்.
முடிவில் நாத்திகவாதி, உண்மையாகவே கடவுள் இருக்கிறார் என்பதனை அவர் நம்புவதாக அறிவித்துவிட்டார்.
அந்தக் கிராமத்து மக்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே, ஆத்திகவாதி எழுந்து, "இல்லை, நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன், கடவுள் இல்லை என்பதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்!" என்று சொன்னார்.
நீங்கள் கிருஷ்ணர் உண்மையில் இருந்தாரா? என்று கேட்டீர்கள். ஆம் அவர் இருந்தார், இன்றும் இருக்கிறார்.
பகவத்கீதை, கிருஷ்ணர் கடவுள் என்று நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் வேதம் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடவில்லை.
தர்க்க அறிவால்
கடவுள் இருப்பதை
நிரூபிக்க முடியாது.
நீங்கள் உங்கள்
மனத்தைத்
துறந்தால்தான்
கிருஷ்ணரைக் காண
முடியும்!
கீதை உயர்ந்த வேத நூலாக அங்கீகரிக்கப்பட்டதற்குக்காரணம், அது மறுக்க முடியாத ஸத்யங்களை எடுத்துரைத்ததால்தான். யார் அந்த உரையாடலை நடத்தினார்கள் என்பது பெரிதல்ல. யார் அந்த உரையாடலை வெளிப்படுத்தி இருந்தாலும் கிருஷ்ணர் விழிப்பு நிலையில் இருந்தே அதைச் செய்திருக்க வேண்டும். அதனால் அவர் கிருஷ்ணரே!
கிருஷ்ணரின் மீது மிகவும் பற்றுகொண்ட ஒரு
குழுவினர், ஒரு சொற்பொழிவிற்குப் பிறகு
என்னை வழிமறித்துக் கோபமாக, "நீங்கள்
கீதையைப் பற்றி இவ்வளவு ஆழமான
சொற்பொழிவு வழங்குகிறீர்கள். இருந்தாலும்
நீங்கள் சிவனை வழிபடுகிறீர்கள். இது
எப்படிச் சாத்தியம்? நீங்கள் புனிதமற்ற
ஒரு செயலைச் செய்கிறீர்கள்,” என்று
சொன்னார்கள்.
ஞானமடைந்த குருமார்கள் மற்றும் மற்ற அவதார புருஷர்களைப்போல கிருஷ்ணரும் சிவனும் ஒரே சக்திதான் என்று நான் அவர்களுக்குச் சொன்னேன்.
அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள்
நான் சிவ வழிபாடு செய்வதை நிறுத்த
வேண்டும் என்று சொன்னார்கள்.
“நீங்கள் அனு கீதையைப் படித்திருக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். “இல்லை, அது என்ன?” என்று கேட்டார்கள்.
மஹாபாரத போருக்குப் பிறகு, அர்ஜுனன் கிருஷ்ணருடன் தனியாக இருந்தபொழுது, அவர் கிருஷ்ணரிடம், “கிருஷ்ணா, போரின்பொழுது நீங்கள் எனக்குச் சொன்ன அறிவுரை அனைத்தும் மறந்துவிட்டது. தயவு செய்து அதை எனக்குத் திரும்பச் சொல்வீர்களா?” என்று கேட்டார்.
கிருஷ்ணர், “ஓ, நீ மறந்துவிட்டாயா அர்ஜுனா! நான்கூட மறந்து விட்டேன்!” என்று சொன்னார்.
அர்ஜுனன் ஆச்சரியப்பட்டுக் கேட்கிறார், “கிருஷ்ணா இது எப்படிச் சாத்தியம்? நீ குருவிற்கே குருவானவன். நீ போதித்த ஸத்யங்களை நீயே எப்படி மறக்க முடியும்?”
கிருஷ்ணர், “கீதையை உரைக்கும்பொழுது, நான் அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருந்தேன். நான் பரப்ரஹ்ம கிருஷ்ணராக, கடவுளின் அவதாரமாக இருந்தேன்.
இப்பொழுது நான் வஸுதேவனின் மகனான வாஸுதேவ கிருஷ்ணராக, மனித உருவத்தில் உன் நண்பனாக இருக்கிறேன். அதனால் எனக்கு இப்பொழுது ஞாபகம் இல்லை,” என்று எளிமையாகச் சொல்கிறார்.
இருந்தாலும் அர்ஜுனனைத் திருப்திப்படுத்த கிருஷ்ணர் மீண்டும் ஒருமுறை எதை உரைத்தாரோ, அதுதான் ‘அனுகீதை’ என்று அழைக்கப்படுகிறது என்று நான் அவர்களுக்குச் சொன்னேன்.
"பரப்ரஹ்ம நிலையான உயர்ந்த விழிப்புணர்வு நிலையில், சிவன், கிருஷ்ணர், புத்தர் என்று நாம் குறிப்பிடும் அனைத்தும் ஒரே சக்திதான்," என்று நான் அவர்களுக்குச் சொன்னேன்.
அவர்களில் ஒரு வயதானவர் என்னிடம், "ஐயா, நீங்கள் வயதில் சிறியவராக இருப்பதால், தவறான வழிகாட்டுகிறீர்கள் என நினைத்து விட்டோம். என்றாலும் இப்பொழுது நீங்கள் எங்களுக்கு ஸத்யத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டீர்கள்," என்று சொன்னார்.
கிருஷ்ணர் வாழ்ந்ததற்கோ அல்லது கிருஷ்ணர் கடவுளாக இருந்தமையால் கீதை ஒரு வேத நூலாகக் கருதப்பட்டதற்கோ வரலாற்றுச் சான்று எதுவும் தேவையில்லை.
கிருஷ்ணரின் விழிப்புணர்வு நிலைதான் கீதை. கீதையை உரைத்தவர் யாராக இருந்தாலும் அவர் கிருஷ்ணரே!
