KAILASA Library/பகவத்கீதை/முடிவிற்கான தொடக்கம்Sign in
பகவத்கீதை

முடிவிற்கான தொடக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

1.13 சங்குகளும் எக்காளங்களும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அந்த ஒலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

1.14 வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்கள் தெய்விக சங்குகளை ஊதினார்கள்.

1.15 கிருஷ்ணர் தம்முடைய ‘பாஞ்சஜன்யம்’ என்ற தெய்விக சங்கை ஊதினார். அர்ஜுனன் தம்முடைய ‘தேவதத்தம்’ என்னும் சங்கை முழங்கினார். பீமன் தம்முடைய ‘பௌண்ட்ரம்’ என்னும் பெரிய சங்கை ஒலித்தார்.

1.16,17,18 குந்தியின் மைந்தன் ராஜா யுதிஷ்டிரர் தம்முடைய அனந்த விஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் தங்களுடைய ‘ஸுகோஷம்,’ ‘மணிபுஷ்பகம்’ என்னும்

சங்குகளையும் ஊதினார்கள். சிறந்த வில்லாளியும் காசிராஜனும் மஹா வீரனுமாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராட தேசத்தரசனும் பிறரால் வெல்லப்படாத சாத்யகியும் துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும் தோள்வலிமையுடையவனாகிய சுபத்திரையின் மகனும் அவரவர்கள் தங்களுக்குரிய சங்குகளை ஊதினார்கள்.

மாயையின் அழிவிற்கு தெய்விக முழக்கம்

கடலில் வாழும் நத்தை, சிப்பி என்னும் உயிரினத்தின் கூடான சங்கு ஸம்ஸ்க்ரு தத்தில் ச'ங்க என்று அழைக்கப்படுகிறது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய வேத நூல்களும்கூட இந்தச் சங்கின் பயன்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன. கொண்டாட்ட காலங்களிலும் பக்திப்பூர்வமான பூஜைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும்போதும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, கடவுளுக்கோ அல்லது அரசருக்கோ மரியாதை செலுத்தும்போதும், புனித நாள்களிலும் வெற்றித் தருணங்களைக் கொண்டாடும் நேரங்களிலும் சங்கு முழங்கப்படுகிறது. சங்கு முழக்கம், மகிழ்ச்சியைக் குறிக்கிறது.

வலம்புரி ச'ங்க என்றழைக்கப்படும் வலப்பக்க வளைவோடு இருக்கும் சங்குகள் தெய்விக ச'க்தியைக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வலம்புரி ச'ங்கை முழக்கும்பொழுது அஉம் (ஓம்)எனும் ப்ரணவ மந்த்ரம் வெளிவருகிறது. இதுவே ப்ரஹ்மத்தின் மூல மந்த்ரம்.

> வலம்புரி ச'ங்கை
> முழக்கும்பொழுது
> அஉம் (ஓம்)எனும்
> ப்ரணவ மந்த்ரம்
> வெளிவருகிறது.
> இதுவே ப்ரஹ்மத்தின்
> மூல மந்த்ரம்.

கணினியில் அ உ ம் (ஓம்) என்னும்
ஒலிகளைப் பதிவு செய்தபொழுது,
அதிலிருந்து வெளிப்பட்ட ஒலி அலையின்
வடிவம், வலம்புரி ச'ங்கின் சுருளைப்
போன்று இருப்பதாக ஆராய்ச்சிகள்
நமக்குக் காட்டுகின்றன! மஹாபாரதப்
போரில் ஈடுபட்ட ஒவ்வொரு மிகச்சிறந்த
போர்வீரரும் தங்களுக்கென தனிப்பட்ட
சங்கை வைத்திருந்தார்கள். அவரவரது சங்கை
ஒலித்தபொழுது எழுந்த நாதமே அவரவரது
முத்திரைகளாயின.

பெரும்பாலான மஹாவீரர்கள் தங்களுக்கென தனிக்கொடியை தங்களது தேரில் பறக்க விட்டிருந்தார்கள். அவர்களுக்கென பிரத்யேகமான ஆயுதங்களையும் குறிப்பாக, ஆன்மீக முக்கியத்துவம்வாய்ந்த தனிச் சிறப்புமிக்க விற்களையும் பெற்றிருந்தார்கள். அவர்களின் மிகக் கடுமையான, நீண்டதொரு தவத்திற்குப் பிறகு, கடவுளே அளித்த பிரத்யேகமான பரிசுகள்தான் இந்த வில் அம்பு போன்ற ஆயுதங்கள்.

அர்ஜுனனது தேரில் பறக்க விடப்பட்டிருக்கும் கொடி தூசியால் மறைக்கப்பட்டாலும் சரி அல்லது அவரது தேர் வெகுதொலைவிற்கு அப்பால் இருந்தாலும் சரி அவரது சங்கிலிருந்து எழுகிற ஒலியும் வில் எழுப்பும் நாணின் ஒலியும் போர்க்களத்தின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

துரியோதனனுக்கு ஆதரவாகத் தமது சங்கை எடுத்து பீஷ்மர் ஊதியபொழுது, இரண்டு பக்கங்களிலும் சேனைகள் எழுப்பிய ஒலி மிக்க ஆரவாரத்தோடும், பேரொலியாகவும் இருந்தது.

ஒவ்வொரு பெரிய போர் வீரரும் தங்களது தனித்துவம்வாய்ந்த சங்கை எடுத்து ஒலித்து, தங்களது அடையாளத்தைக் காட்டினார்கள். அந்தக் கணத்தில் ஒலித்த எல்லா ஒலிகளிலும் சில ஒலிகள் மட்டும் மற்றவற்றைவிட மிஞ்சி ஒலித்தன.

சங்கு

விஷ்ணுவின் சங்காகிய பாஞ்சஜந்யம் என்ற
சங்கையெடுத்து கிருஷ்ணர் ஊதினார். அந்த
ஒலி போர்க்களத்தில் மற்ற எல்லோருடைய
சங்கொலிகளையும் மூழ்கடித்துவிட்டது.

பாண்டவ சேனையுடன் பரந்தாமனாகிய
இறைவன் நிறைந்துள்ளார் என்பதனை
அனைவருக்கும் உணர்த்தும்விதமாக
அந்தச் சங்கொலி அமைந்தது.

Peacock feather

தெய்வம் இருக்கிறது!

கிருஷ்ணர் தமது தெய்விக சங்கை எடுத்து ஒலித்ததாக ஸஞ்ஜயனின் மூலமாக வியாஸ மஹரிஷி சொல்கிறார்.

வியாஸ பகவான், கிருஷ்ணருடைய சங்கிற்கு மட்டுமே 'தெய்விக' என்னும் அடைமொழியை வழங்குகிறார். வேறு யாருடைய சங்கிற்கும் அப்படிப்பட்ட அடைமொழி வழங்கப்படாததால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சங்காகிறது.

மாதவன் என்றும், பிறகு ஹ்ருஷீகேசன் என்றும் கிருஷ்ணரைக் குறிப்பிடுகிறார்.

செல்வத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் கடவுளாகிய லஷ்மியின் கணவனாகிய விஷ்ணுவின் அவதாரமே 'கிருஷ்ணர்' என்பதுதான் மாதவன் என்ற பதம் உணர்த்துகிறது.

கிருஷ்ணர் யார்பக்கம் இருக்கிறாரோ, அவர்களை யாராலும் வெற்றிபெற முடியாது. அவர்கள் வெற்றிகொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள் என்பதுதான் இந்த இடத்தில் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

கிருஷ்ணர் ஹ்ருஷீகேசன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார். ஐம்புலன்களையும் கட்டி ஆள்பவர், மஹா பிரபஞ்ச சக்தி, மஹாபாரதப் போரின் சாரமாகிய மாயையை உருவாக்கியவர் என்றெல்லாம் பொருள்படும்விதமாக ஹ்ருஷீகேசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

'நிகழும் அனைத்துமே கிருஷ்ணரால்
உருவாக்கப்பட்டவையே' என்று
வியாஸர் சுட்டிக்காட்டுகிறார். அவை
எந்த நோக்கத்திற்காக நிகழ்கின்றன?
அதை அவர் மட்டுமே அறிவார்.
உண்மையில், தெய்விகத்திற்கு எந்த
ஒரு குறிக்கோளும் இல்லை. தெய்விகம்
'இருக்கிறது' அவ்வளவுதான்.

கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரோட்டியாக
இருக்கிறார். அந்தத் தேர், அக்னி
பகவானிடமிருந்து பெறப்பட்ட ஒரு
வரப்பிரசாதம்.

கிருஷ்ணர் யார்பக்கம்
இருக்கிறாரோ,
அவர்களை
யாராலும்
வெற்றிபெற முடியாது.

அந்தத்தேர் மூவுலகிலும் பயணிக்கக்கூடிய
திறமைபெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
காண்டீவம் என்னும் அர்ஜுனனின் வில்கூட
அக்னி பகவானின் அன்பளிப்பே.

அர்ஜுனன் தநஞ்ஜயன் என்னும் பெயரால்
அழைக்கப்படுகிறார். தநஞ்ஜயன் என்றால்
மறைந்து இருக்கும் செல்வத்தைச்
சேகரிப்பவர்' என்று பொருள். அவர்
தமது சகோதரர் யுதிஷ்டிரருக்கு
வேண்டியபொழுதெல்லாம் தேவையான
செல்வம் திரட்டிக் கொடுக்கக்கூடிய
திறமைகொண்டவராக இருந்தார்.

> பிரபஞ்ச சக்திக்கு
> எந்த ஒரு
> குறிக்கோளும்
> இல்லை.
> அது இருக்கிறது,
> அவ்வளவுதான்.

ஆற்றல் மிக்க பீமன், பௌண்ட்ரம் என்னும் தமது சங்கை ஒலிக்கச் செய்தார். அந்தச் சங்கின் பயங்கரமான ஒலி கௌரவ படையினரிடையே பீதியைக் கிளப்பியது.

பீமன் இங்கு வ்ரு'கோதரன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஓநாய் போன்ற வயிறு உடையவர் என்று பொருள். பீமன் எப்போதும் மிகுந்த பசியுடன் இருந்தார். தமது எல்லா சகோதரர்களும் உண்பதைவிடவும் அதிகம் உண்டார். இருந்தும் ஓநாய் போன்று ஒடுங்கிய வயிறை உடையவராகவே இருந்தார்.

மற்ற பிராணிகளை உண்டு வாழும் ஒரு விலங்கைக் கண்டு அஞ்சுவது போல், பீமனது எதிரிகள், அவரது ஆற்றலையும் கோபத்தையும் கண்டு அஞ்சி நடுங்கினார்கள்.

பீமனது சங்கொலியைத் தொடர்ந்து மற்ற மூன்று பாண்டவ இளவரசர்களான யுதிஷ்டிரரும் நகுலனும் ஸஹதேவனும்கூட தங்களது சங்குகளை ஒலிக்கச் செய்தார்கள்.

மிகச்சிறந்த வீரர்களாகிய துருபதன், விராடன், சாத்யகி, சிகண்டி, திருஷ்டத்யும்னன், அபிமன்யு மற்றும் பலரும் தாங்கள் பெறப் போகும் வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் தங்களது சங்கினை எடுத்து ஒலிக்கச் செய்தார்கள்.

# எவராலும் வெல்ல முடியாதவர்கள்!

போர்வீரர்கள் ஒவ்வொருவருக்குமே மிகச்சிறந்த வரலாறு இருந்தது.

நீதி, மரணம் இவற்றின் தேவனாகிய எம தர்மராஜனின் அருளால் குந்திக்கு மகனாகப் பிறந்தவர் யுதிஷ்டிரன். பஞ்ச பாண்டவர்களில் மூத்த இளவரசனாகிய தர்மராஜன் என்னும் பெயருடைய இவர், வாழ்நாளில் ஒருபோதும் பொய் சொல்லாத ஸத்யவந்தனாக, ஸத்யம் தவறாத அரசராக இருந்தார்.

பாண்டுவின் இரண்டாவது மனைவியாகிய மாத்ரிக்கு, தேவர்களாகிய அஸ்வினி குமாரர்களின் அருளால் பிறந்த மக்கள்தான் நகுலனும் ஸஹதேவனும்.

பாஞ்சால அரசனாகிய துருபதன், திரௌபதி மற்றும் திருஷ்டத்யும்னனின் தந்தை.

துருபதன், துரோணரைப் போன்ற வீரமும், போரில் அவரை வெற்றிகொள்ளக்கூடிய வலிமையும্বாய்ந்த ஒரு வீரமகனைப் பெறுவதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்து பெற்ற மகனே திருஷ்டத்யும்னன்.

அடுத்து விராடராஜன், இவரது நாட்டில்தான் பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் தங்களது ஓர் ஆண்டு அஜ்ஞாத வாஸ காலத்தை மறைந்திருந்து கழித்தார்கள். கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்த அபிமன்யு, விராடராஜனின் மகளையே மணந்தார்.

சிகண்டி பீஷ்மரின் தீவினைப் பயனாகப் பிறந்தார்.

பீஷ்மர், அம்பா எனும் இளவரசியை தமது சகோதரர் விசித்திர வீரியனுக்கு (மாற்றாந்தாயின் மகன்) மணமுடிப்பதற்காகக் கைப் பற்றி அழைத்து வந்தார். அதனால் அம்பா, தன்னைத் தீக்கு இரையாக்கினாள். தமக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிக்கு பழி வாங்க சபதம் பூண்டு, மறுபிறவியில் சிகண்டியாகப் பிறந்தாள்.

யுத்தத்தில் நிகழும் சம்பவங்களை உள்ளது உள்ளபடி பார்வையற்ற

திருதராஷ்டிரருக்கு விளக்கும் ஸஞ்ஜயன் மீண்டும் மீண்டும் பாண்டவர்களுடைய குணத்திண்மையையும் அவர்களது வியக்கத்தக்க முந்தைய சம்பவங்களையும் சொல்லி அவற்றை திருதராஷ்டிர மன்னரின் மனத்தில் பதிய வைக்க முயற்சி செய்கிறார்.

போரில் குரு குலத்தவராகிய கௌரவர்களுக்கு நேரிடப் போகும் அழிவு திருதராஷ்டிர மன்னருக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஸஞ்ஜயன் அப்படிச் செய்கிறார்.

பாண்டவர்களை ஸஞ்ஜயன் குறிப்பாக அபராஜிதர்கள் என்று அழைக்கிறார். 'எளிதில் எவராலும் வெல்ல முடியாதவர்கள்' என்பதே அதன் பொருள்.

மேற்கொள்ளும் எந்தக் காரியத்திலும்
வெற்றிபெறும் தன்மை கொண்டவர்களாகிய
இவர்கள், இந்தப் போரிலும் தங்களது
கடமையைச் செய்து வெற்றிவாகை
சூடுவார்கள் என்பதைக் குறிப்பால்
உணர்த்துகிறார்.

> ஆன்மீக ரீதியாக
> இயற்கையில் அமைந்த
> எதுவொன்றிலும்
> முழுக்க முழுக்க
> நன்மை அல்லது
> முழுக்க முழுக்க தீமை
> என்று
> எதுவுமே இல்லை.

கௌரவர்களின் படைத்தளபதியாக
விளங்கும் பீஷ்மர், யுத்தம் ஆரம்பிக்கலாம்
என்று அறிவிக்கும்விதமாகச் சங்கை எடுத்து
முழக்கினார்.

அந்தச் சங்கிற்குப் பதிலொலி, பாண்டவ சேனையின் படைத்தளபதியான திருஷ்டத்யும்னனிடமிருந்தோ அல்லது பஞ்ச பாண்டவர்களிடமிருந்தோ வரவில்லை.

மாறாக, கிருஷ்ணரிடமிருந்து வந்தது. இது மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. ஏனென்றால் கிருஷ்ணரின் சங்கொலி பீஷ்மரின் சவாலுக்கு எதிரொலியாக இல்லாமல் மறுமொழியாக, பதிலொலியாக அமைந்தது.

தெய்வம் மனித உருவில் வந்திறங்கி பாண்டவர் சேனையுடன் இருப்பதால், அவர்களை நோக்கி வீசப்படும் எதுவும் கிருஷ்ணரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை இது குறிப்பால் உணர்த்துகிறது.

கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்களின்
அதி உன்னத விழிப்புணர்வு நிலை
வழிகாட்டியாக இருக்கிறார். குற்றமோ
அல்லது தவறான செயலோ எதுவாக
இருந்தாலும் சரி, அதிலிருந்து அவர்களை
விடுவித்து, மன்னித்து, என்ன நடந்தாலும்
அதற்கான பொறுப்பைத் தானே
ஏற்றுக்கொள்கிறார்.

அர்ஜுனனை உள்ளடக்கிய பாண்டவ
சேனையினர் கிருஷ்ணரது தலைமையை
ஏற்று, தங்களது சங்குகளை முழக்கினார்கள்.

பிரபஞ்ச இருப்புத்
தன்மை, தீர்மானிக்க
முடியாததாக இருக்கிறது.
எது நடக்கிறதோ அது
வெறுமனே நிகழ்கிறது;
எதிர் விளைவாக ஏதோ
ஒன்று நிகழும்.

கேள்வி: மஹாபாரதப் போர் அஹங்காரங்களுக்கு இடையே நிகழும் போரா? அப்படி என்றால் அஹங்காரத்திலேயே நல்ல அஹங்காரம், கெட்ட அஹங்காரம் என்று உள்ளனவா?

இது மிகவும் அழகான ஒரு கேள்வி! நான் முன்பே முன்னுரையில் சொன்னதுபோல், மஹாபாரதம் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போர் அல்ல.

ஆன்மீக ரீதியாக இயற்கையில் அமைந்த எதுவொன்றிலும் முழுக்க முழுக்க நன்மை அல்லது முழுக்க முழுக்க தீமை என்று எதுவுமே இல்லை. நீங்கள் சொன்னதுபோல, அது இரண்டும் கலந்ததாக இருக்கலாம்.

‘தாவோ’ எனும் ஞானி இதையே சொல்கிறார்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை, தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது. எது நடக்கிறதோ அது வெறுமனே நிகழ்கிறது; எதிர் விளைவாக ஏதோ ஒன்று நிகழும்.

மஹாபாரதப் போர் ஒரு உருவகப் போர். ஸம்ஸ்காரங்கள் என்றழைக்கப்படுகின்ற நேர்மறை மற்றும் எதிர்மறை நம்பிக்கைகள், எண்ணங்கள், மதிப்பீட்டு முறைகள் இவற்றிற்கிடையே நிகழும் உருவகப் போர்.

நமது விழிப்புணர்வற்ற மனத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கும் எண்ணப்பதிவுகளே ஸம்ஸ்காரங்கள் என்றழைக்கப்படுகிறது.

முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளே நம்முள் எண்ணப்பதிவுகளாக பதிவாகியுள்ளன. இந்த எண்ணப்பதிவுகள்தான் கர்மாவை, செயல்களைத் தூண்டி விடுகின்றன. இந்தக் கர்மாக்களே இந்த உடல்மன அமைப்பிலிருந்து விடுபட்டுச் செல்லும் உயிரோடு ஒட்டிக்கொண்டு செல்லும் வாஸனா என்றழைக்கப்படும் நமது மன அமைப்பு உருவாகக் காரணமாகின்றன.

எண்ணப்பதிவுகளில் இருந்தும், நிறைவேறாத ஆசைகளில் இருந்தும், இவற்றால் எழுகிற மன அமைப்பில் இருந்தும் ஒருவர் விடுதலை பெறுவது மட்டுமே, ஆனந்தத்தையும் முக்தியையும் அடைவதற்கான வழி.

ஒருவர் ஸம்ஸ்காரங்கள், வாஸனைகள், கர்மாக்கள் இவற்றில் இருந்து முற்றிலும் விடுதலை அடைந்த நிலையே, முக்தி நிலை என்று சொல்லப்படுகிறது.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வகுத்துக் கொடுத்த யுக்தி, செயல்முறை இந்த ஜீவன் முக்தி நிலைக்கே அழைத்துச் செல்லக்கூடிய செயல்முறையாக இருக்கிறது. இந்த எதிர்மறை மற்றும் நேர்மறை சார்ந்த மனப்பாங்குகளின் ஒரு சிறு தடம்கூட, அடையாளம்கூட நம்முள் இல்லாமல், மனம், உடல், ஜீவன், இந்த மூன்றும் ஒருமைப்படும் அந்தச் செயல்முறையே யோகம் என்று சொல்லப்படுகிறது.

பகவத்கீதையின் சாரமும், செய்தியும் இதுவே.

ஜீவன், ஈச்வரன், ஜகத் (உலகம்) இந்த மூன்றும் வெவ்வேறல்ல, ஒன்றுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதுதான், நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய அந்த யோக நிலையை அடைவதற்கான ஒரு எளிமையான வழி.

நாம் எல்லோருமே, இந்த மூன்று
இருப்புகளின் இடையே நடக்கும் எதிரெதிர்ச்
செயல்களின் விளைவால் உருவாக்கப்பட்ட
ஒரு படைப்பாகவே இருக்கிறோம்.
நாம் அவற்றின் இருப்புத் தன்மையை
கொண்டாடும்பொழுது, அவை மூன்றும் மனித
அறிவுக்கு எட்டாத தங்களது இரகசியங்களை
நமக்கு வெளிப்படுத்துகின்றன.

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இது
நல்லொழுக்க அறிவுரை அல்ல. இது ஒரு
ஆன்மீக நுட்பம்.

> ஸம்ஸ்காரங்கள்,
> வாஸனைகள், கர்மாக்கள்
> இவற்றில் இருந்து
> முற்றிலும் விடுதலை
> அடைந்த நிலையே,
> முக்தி நிலை என்று
> சொல்லப்படுகிறது.

நம்மை நாமே ஏற்றுக்கொள்ளாதவரை நாம் என்னவாக இருக்கிறோமோ அதைக் கொண்டாடாதவரை நம்மால் நம் சுயத்தை ஒருபோதும் உணர முடியாது, நம்மை நாமே புரிந்துகொள்ளவும் முடியாது. நாம் என்னவாக இருக்கிறோமோ அதனுடன் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தால், நம்மால் ஒருபோதும் ஜீவனை, நமது சுயத்தை உணரவே முடியாது.

பொதுவாகவே நாம் இரு அடையாளங்களைச் சுமந்துகொண்டு இருக்கிறோம். ஒன்று அஹங்காரம் ; நமது வெளி அஹங்காரம், மற்றொன்று மமகாரம்; நம் உள் அஹங்காரம்.

நாம் நம்மைப் பற்றி வெளியுலகிற்கு வெளிப்படுத்திக் காட்டும் அடையாளமே, அஹங்காரம். உலகத்தினர் நம்மை இவ்வாறுதான் காணவேண்டுமென்று நாம் விரும்புகிறோம். மற்றொன்று, உண்மையாகவே நம்முடைய அடையாளம் என்று நாம் எதை நம்புகிறோமோ, அந்த உள் அஹங்காரமாகிய மமகாரம்.

நம் முழு வாழ்க்கையையும் பார்த்தீர்களானால், இந்த உள் மற்றும் வெளி அஹங்காரங்களுக்கிடையில் நிகழும் போரைத் தவிர உண்மையில் வேறொன்றும் இல்லை.

உங்களுக்கும் உங்களுக்குமே நிகழும் இந்தப் போராட்டம்தான் உங்கள் வாழ்க்கையையே வீணடித்து விடுகிறது. நிறுத்தி விடுங்கள்!

நீங்கள் என்னவாக இருந்தாலும் வெறுமனே ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களைக் கொண்டாடுங்கள்.

> உங்களுக்கும்
> உலகிற்கும்
> இடையில் ஏற்படுகிற
> எல்லாப்
> பிரச்சினைகளுக்கும்
> நீங்கள்
> இந்த உலகத்தை
> இரகசியங்கள்
> நிறைந்த ஒன்றாகப்
> பார்க்காததே!

நீங்கள் உங்கள் சுயத்தை உணர்ந்து
கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே
காண்பீர்கள். உங்கள் அஹங்காரத்திற்கும்
மமகாரத்திற்கும் இடையில் நடக்கும்
சண்டையின் காரணமாக ஆத்மஞானம்
எனப்படும் 'தன்னை உணர்தல்' மீண்டும்
மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே
இருக்கிறது.

நீங்கள் சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தும்
அந்தக் கணத்தில், திடீரென்று இந்த இரு
அடையாளங்களும் 'தன்னை உணர்தல்'

என்ற புள்ளியில் மாயமாக மறைவதைக்
காண்பீர்கள். இந்த இருவிதமான
அஹங்காரங்களும் உண்மையில் இதுவரை
அவற்றுக்கிடையில் இருந்த பதட்டத்திலேயே
உருவாகி வாழ்ந்து வந்ததை உணர்வீர்கள்.

நீங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒருமுறை சத்தமாக ‘ஆம்’ என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். திடீரென்று மமகாரம், அஹங்காரம் இரண்டுமே மறைந்து விடுவதைக் காண்பீர்கள்.

உங்கள் இருப்புத்
தன்மையை
உள்ளவாறே
ஏற்றுக்கொண்டு
கொண்டாடுங்கள்.
திடீரென்று உங்களை
நீங்களே உணரத்
தொடங்குவீர்கள்.

உங்களது சுய இருப்புத் தன்மையை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள். வெளியுலகத்திலும் உங்களை முன்னேற்றிக்கொள்ள நீங்கள் எதுவும் செய்யத் தேவை இல்லை. உள்ளுலகத்திலும் உங்களை முன்னேற்றிக்கொள்ள நீங்கள் எதுவும் செய்யத் தேவை இல்லை. உங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு கொண்டாடத் தொடங்குங்கள். திடீரென்று உங்களை நீங்களே உணரத் தொடங்குவீர்கள்.

அடுத்து, ஜகத் என்னும் உலகத்தைப் பார்ப்போம். புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கும் உலகிற்கும் இடையில் ஏற்படுகிற எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம், நீங்கள் இந்த உலகத்தை இரகசியங்கள் நிறைந்த, அதிசயங்கள் நிறைந்த ஒன்றாகப் பார்க்காததே!

உங்களது தர்க்க அறிவினால் தொடந்து இந்த உலகத்தை அளவுக்கு அதிகமாகவே ஆள முயற்சி செய்கிறீர்கள். உலகத்தை உள்ளவாறே ஏற்றுக்கொண்டு, அனுபவித்துக் கொண்டாடி மகிழ்வதற்குப் பதிலாக, உங்களுடைய புத்தியினால் உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள்.

நீங்கள் வெறுமனே பகுதி பகுதியாக பிரித்து ஆராய்ந்து, கூறுபோட்டு உலகை உங்கள் ஆளுமையின் கீழ், கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள்.

இந்த உலகை, நீங்கள் தொடர்ந்து உங்கள் பகுத்தறிவினால் தர்க்க அறிவினால், பிரித்து ஆராய்ந்து, எடைபோட்டு, உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தீர்களேயானால், நீங்கள் அதை இழந்து விடுவீர்கள்.

இயற்கையையும் இருப்புத் தன்மையையும் உலகத்தையும் அவற்றின் வித்தியாசமான, பல்வேறு பரிணாமங்களோடு, முரண்பாடுகளோடு ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள். எடைபோட்டுக்கொண்டே இருக்காதீர்கள். தொடர்ந்து நாம் எதையாவது சரி என்றும் தவறு என்றும் எடைபோட்டுக்கொண்டே இருக்கிறோம்.

எதுவோ ஒன்று கண்டிப்பாக நடக்க
வேண்டும் அல்லது எதுவோ ஒன்று
கண்டிப்பாக நடக்கக் கூடாது என்று
எண்ணுகிறோம். புரிந்துகொள்ளுங்கள்
எது நடந்தாலும் மங்களத்துவமே.

ஸம்ஸ்க்ரு தத்தில் சிவம் என்னும்
வார்த்தைக்கு ‘காரணமின்றிப் பொங்கும்
மங்களத்துவம்’ என்பதே பொருள். அது
மங்களத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது.

Lord Shiva

எந்த ஒரு காரணமும் இல்லாமல், இந்த மங்களத்துவம் பொங்கிக்கொண்டே இருக்கிறது.

இந்த மங்களத்துவம் பொங்குவதற்கு எந்த ஒரு காரணமும் தேவை இல்லை. உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களும் உங்களது அலைவரிசையை, புத்திக் கூர்மையை அதிகரிக்கவே செய்கின்றன.

உங்கள் வாழ்க்கையில்
நிகழும் அனைத்து
சம்பவங்களும்
உங்களது
அலைவரிசையை,
புத்திக் கூர்மையை
அதிகரிக்கவே
செய்கின்றன.

காரணமில்லாத விரிவடைதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

இம் முழு உலகிலுமே இரண்டே
இரண்டுவிதமான மக்கள்தான் வாழ்கிறார்கள்.
முதல்வகையினர், இவ்வுலகில்
நடப்பதெல்லாம் அவர்களது விருப்பத்திற்கு
எதிராகவே நடப்பதாகவும் அது மாற்றப்பட
வேண்டும் என்றும் நினைப்பவர்கள்.

அவர்கள் தொடர்ந்து மாற்றங்களை
ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டும்,
எடை போட முயற்சி செய்துகொண்டும்,
உலகத்தில் நடப்பவனவற்றை எல்லாம்
விமர்சித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

மற்றொரு குழுவினர் இருக்கிறார்கள்.
இவர்கள் மிகவும் அரிதானவர்கள். என்ன
நடந்தாலும் அது காரணமின்றி பொங்கும்
மங்களத்துவமே என்று எண்ணுபவர்கள்.
யாரெல்லாம், உள்ளேயும் வெளியேயும்
நடப்பதெல்லாம் மங்களத்துவமே
என்று எண்ணுகிறார்களோ அவர்கள்
சிவனைப்போலவே வாழ்கிறார்கள்.

> யாரெல்லாம்,
> நம் உள்ளேயும்
> வெளியேயும்
> நடப்பதெல்லாம்
> மங்களத்துவமே என்று
> எண்ணுகிறார்களோ
> அவர்கள்
> சிவனைப்போலவே
> வாழ்கிறார்கள்.

அவர்கள் சிவத் தன்மையிலேயே, சிவ விழிப்புணர்விலேயே வாழ்பவர்கள். அவர்கள் நித்யஆனந்தத்தில் வாழ்பவர்கள். அவர்கள் கொண்டாட்டத்திலேயே வாழ்கிறார்கள்.

புரிந்துகொள்ளுங்கள், ஒவ்வொரு நிகழ்ச்சியும்... வியாதியும் மரணமும்கூட நமக்கு ஒரு செய்தியை வைத்திருக்கின்றன. அவை நமக்கு ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துவிட்டே செல்கின்றன.

நம் அறிவையும் விழிப்புணர்வையும் அவை மேம்படுத்துகின்றன. இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த நாடகத்திலும் உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்துமே, உங்களுக்கு மங்களத்துவத்தையேகொண்டு வருகின்றன. அது உங்களுக்குள் மங்களத்துவத்தையே சேர்க்கிறது.

உலகத்தை, அதிசயங்கள் நிறைந்ததாக மட்டுமல்ல, மிகவும் புத்திசாலித்தனமான அதிசயங்கள் நிறைந்ததாகப் பாருங்கள்.

அது, தன் வழியில் தனித்து இயங்கும் ஒரு நுட்பமான அறிவு, அதிசயம் என்பதனைப் புரிந்துகொண்டீர்களானால், உங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு தாம் கொண்டுவந்த பாடத்தை உங்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டே செல்லும்.

உங்களுக்கு ஒரு துன்பம் வரும்பொழுது, அதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கும்பொழுதுதான், அது உங்களுக்குள் வலியை ஏற்படுத்துகிறது. அது மேன்மேலும் துன்பத்தையே சேர்க்கிறது.

ஆனால் அதே சம்பவத்தை, அதே துயரத்தை,
ஆழ்ந்த மரியாதையுடனும் ஏற்றுக்கொள்ளும்
தன்மையுடனும் அணுகுவீர்கள் என்றால்,
திடீரென்று அந்தத் துயரம் தம்முடைய
இரகசியங்களை வெளிப்படுத்தக் காண்பீர்கள்.

அது உங்கள் வாழ்வில் ஏன் நிகழ்ந்தது, உங்கள் வாழ்க்கைக்கு அதுகொண்டு வந்த பாடம் என்ன என்கிற காரணங்களை உங்களுக்குக் காட்டுகிறது.

இந்த உலகத்தில் நடப்பவை அனைத்துமே,
மங்களத்துவம்தான், ‘இயற்கை சீரழிவுகள்’
என்று நீங்கள் குறிப்பிடுவது உட்பட!

இந்த உலகத்தில்
நடப்பவை அனைத்துமே,
மங்களத்துவம்தான்,
‘இயற்கை சீரழிவுகள்’
என்று நீங்கள்
குறிப்பிடுவது உட்பட!

அங்கு, மங்களமற்ற தன்மை என்று ஒன்று இல்லவே இல்லை. ஒரு பிரிவினர் சிவத்தைப்போல வாழ்கிறார்கள். மற்றொரு பிரிவினர் ச’வத்தைப்போல (உயிரற்ற உடல்) வாழ்கிறார்கள்.

நீங்கள் சிவத்தைப் (கடவுள்) போன்று வாழப் போகிறீர்களா அல்லது ச’வத்தைப் போன்று வாழப் போகிறீர்களா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்ச சக்தியே காரணமின்றி பொங்கும் மங்களத்தும்தான். இந்த உலகமும் காரணமின்றி பொங்கும் மங்களத்துவமே. இதை ஏற்றுக்கொண்டு, இருப்புத் தன்மையின் இயல்பிலேயே உலகத்தைக் கொண்டாடுங்கள்.

மூன்றாவதாக ஜீவன், ஜகத் இந்த இரண்டிற்கும் ஆதி மூலமாக இருக்கும் ஈச்’வரனைப் பற்றிப் புரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

கடவுளைப் பற்றிய நம்பிக்கை அல்லது சந்தேகம் இவ்விரண்டையும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும்வரை நீங்கள் கடவுளை உணரமுடிவதே இல்லை.

சந்தேகத்தைப்போலவே நம்பிக்கையும்கூட ஒரு தடைதான். கடவுள் மீது நம்பிக்கைகொண்ட, ஆனால் கடவுளை அனுபவமாக உணர முயற்சி செய்யாத மக்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து நம்பிக்கொண்டு இருக்க மட்டுமே முயற்சி செய்கிறார்கள். அனுபவத்தில் உணர ஒரு முயற்சியையுமே செய்வது இல்லை. எனவே இப்பொழுது உங்கள் நம்பிக்கை, சந்தேகம் இரண்டையும் கீழே போட்டு விடுங்கள். உங்கள் எதிரில் ஒரு பொருளைக் கண்ட மறுகணமே கடவுள் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

படைப்பு இருக்குமானால் படைத்தவரும்கூடவே இருக்கிறார்.

உங்கள் முன் பரந்து விரிந்து இருக்கும் இந்தப் படைப்பே படைத்தவர் இருப்பதற்கான ஒரே சாட்சி. அவர் படைப்பாற்றலோடு காரணமில்லாமல் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கிறார்.

அவர், தொடர்ந்து விரிவடைந்து விரிவடைந்து விரிவடைந்துகொண்டே போகும் ஒரு தொடர் படைப்பாற்றலாகவே இருக்கிறார், ஒரு தொடர் பிரம்மாண்ட வெடிப்பு.

அவரே படைப்பாகவும் படைக்கப்பட்டதாகவும் படைத்தவராகவும் இருக்கிறார். இந்த மூன்றையும் சேர்த்துத்தான் 'படைப்பாற்றல்' என்ற சொல் விளக்குகிறது.

படைப்பாற்றலின் இருப்புத் தன்மையைக் கொண்டாடுங்கள். படைப்பின் இருப்புத் தன்மையே படைத்தவரும் படைப்பாற்றலும் இருப்பதற்கான திடமான சாட்சி.

தனித்துவம் மிக்க அறிவாற்றலின் இருப்புத் தன்மையை வெறுமனே கொண்டாடுங்கள். கடவுளின் இருப்புத் தன்மையையே படைப்பாற்றலாகக் கொண்டாடுங்கள். ஈச்வரன், ஜீவன், ஜகத் இந்த மூன்றையும் கொண்டாடுங்கள். அப்பொழுது திடீரென்று, இம்மூன்று இருப்புகளும் சுதந்திரமாகவும் எல்லைகளால் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதுவும் போன்ற ஒரு தோற்றத்தை உங்களது விழிப்புணர்வற்ற மனம்தான் உருவாக்கியது என்பதனை உணர்வீர்கள்.

உண்மையில் அங்குப் பிரிவுகள் என்பதே
இல்லை, அங்கு இருப்பது ஒன்றே
ஒன்றுதான், அதுவே தூய்மையான இருப்புத்
தன்மையாக, தூய்மையான விழிப்புணர்வாக,
தூய்மையான கொண்டாட்டமாக அதாவது

உங்கள் நம்பிக்கை
மற்றும் சந்தேகம்,
இரண்டையும் கீழே
போட்டு விடுங்கள்.

ஸத், சித், ஆனந்தம் என்றழைக்கப்படுகிற ஸத்யம், விழிப்புணர்வு, ஆனந்தமாக இருக்கிறது.

ஜீவன், கடவுள், உலகம் இவை தனித்தனியான மூன்று வெவ்வேறு பொருள்கள் அல்ல என்பதனைப் புரிந்துகொண்டு, இந்த 'ஒருமை' புள்ளியை, இந்த ஒருமை மையத்தின் இருப்பைக் கொண்டாடி வாழ்வதையே, நான் ஜீவன் முக்த வாழ்க்கையை வாழுதல் என்று சொல்கிறேன்.

இந்த மூன்றின் இருப்புத் தன்மையைப் புரிந்துகொண்டு கொண்டாடுங்கள். திடீரென்று கொண்டாட்டம் மட்டுமே நிலைத்து நிற்க, மற்ற மூன்றும் கொண்டாட்டத்திற்குள் மறைந்து விட்டிருப்பதைக் காண்பீர்கள்.

அது நிகழும்பொழுது, அந்த ஆனந்தத்தையே நான் நித்யானந்தம் என்று அழைக்கிறேன்.

ஜீவன் முக்த வாழ்வை வாழுங்கள், நிலையான ஆனந்தத்தைப் பெற்று நித்யானந்தமாக வாழுங்கள்.

நீங்கள் அனைவரும் நித்யானந்தத்தை அடைந்து, நித்யானந்தத்தை வெளிப்படுத்தி, நித்யானந்தமாக இருப்பீர்களாக!

கைகளில் புல்லாங்குழல் ஏந்திய சித்திரம்

அர்ஜுனனது

தயக்கம்

Krishna playing flute

விண்ணையும் மண்ணையும் சேர்ந்து ஒலிக்கச் செய்த
அந்தச் சங்குகளின் பெருமுழக்கம் திருதராஷ்டிர மக்களின்
நெஞ்சங்களை பிளக்கச் செய்தது.

பிறகு, அனுமனைக் கொடியில் உடையவனாகிய அர்ஜுனன்,
தம் ரதத்தில் அமர்ந்தவாறு, போர் தொடங்க ஆரம்பிக்கும்
முன்பு, திருதராஷ்டிர மக்களை நோக்கி, அம்புகளை பறக்கவிட
ஆரம்பிக்கும் முன்பு, வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணருக்கு
இச்சொல்லை உரைத்தார்.

“பிழையற்றவரே! படைகள் இரண்டுக்கும் இடையில் என்
தேரை நிறுத்துக. போர் செய்யவிரும்பி என் முன்னே நிற்பவர்
யார் யார் என்பதையும் இப்போரில் நான் யாரோடு போர் புரிய
வேண்டும் என்பதையும் பார்க்கிறேன்.”

Peacock feather

மாயைக் கோட்டையைத் தகர்த்திடும் பதிலொலி

பீஷ்மர் அவரது சங்கை முழக்கியபொழுது, பஞ்ச பாண்டவ வீரர்களும் மறுமொழியாக தங்களது சங்குகளை முழக்கி பதிலளித்தார்கள்.

பீஷ்மரின் சங்கொலியோ, கௌரவ சேனையினரின் பறை, தம்பட்டங்கள் இவற்றின் பெரு முழக்கங்களோ, எந்தவிதத்திலாவது பாண்டவ சேனையினரிடையே கவலையை ஏற்படுத்தியதாக, ஸஞ்ஜயன் சொல்லியதாக எங்குமே குறிப்பிடப்படவில்லை.

> சங்குகளில் இருந்து
> எழும்புகிற நாதம்,
> மிகவும் சக்திவாய்ந்த
> புனிதமான
> அதிர்வுகளாக,
> மந்த்ரங்களாக
> இருக்கின்றன.

இப்பொழுது அவர் சொல்வது முற்றிலும்
வித்தியாசமானதாக இருக்கிறது. கிருஷ்ணன்
மற்றும் அர்ஜுனன் இவ்விருவரால் வழி
நடத்தப்பட்ட பாண்டவ சேனையினர் ஊதிய
சங்குகளின் பெரு முழக்கம் திருதராஷ்டிரப்
புதல்வர்களின் நெஞ்சங்களைப்
பிளக்கச் செய்தன என்று ஸஞ்ஜயன்
சொல்லியிருக்கிறார்.

இங்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்
வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம்
நிறைந்தவை. சங்குகளின் முழக்கத்தால்
ஏற்பட்ட ஒலி, விண்ணையும் மண்ணையும்
அதிரச்செய்ததாக ஸஞ்ஜயன் குறிப்பிடுகிறார்.

பஞ்ச பாண்டவ இளவரசர்கள் மற்றும் ஏனைய மாவீரர்களின் சங்குகள் வெறும் இசைக் கருவிகள் அல்ல. அவை ஒவ்வொன்றுமே தெய்விக சக்திகொண்டவையாக இருந்தன.

தேவர்களால் பரிசாக அளிக்கப்பட்ட அந்தச் சங்குகளை அவர்கள் ஊதியபொழுது, அவற்றிலிருந்து எழுப்பப்பட்ட ஒலிகள் தெய்விக சக்தி நிரம்பியவையாக இருந்தன.

உண்மையில், அந்தச் சங்குகளில் இருந்து எழும்பிய நாதம், மிகவும் சக்திவாய்ந்த புனிதமான அதிர்வுகளாக, மந்த்ரங்களாக இருந்தன. அந்த அதிர்வுகள் சுற்றுப்புறச் சூழலில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த முழக்கத்தைப் பற்றித்தான் ஸஞ்ஜயன் குறிப்பிடுகிறார்.

ஸம்ஸ்காரங்களையே அழித்திடும் சக்திவாய்ந்த அஸ்திரம்

ஹிந்துக்களின் காப்பியங்களில், அஸ்த்ரம் எனப்படும் ஆயுதங்களைப் பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுவதைக் காணலாம். அஸ்த்ரம் என்பது பொருள் ரீதியான ஆயுதம் அல்ல.

அது, ஒரு எண்ணம் அல்லது வார்த்தை மட்டுமே! இந்த எண்ணத்தை அல்லது வார்த்தையை உருவாக்கும் ஒருவர், அதற்கு ஒரு அளப்பரிய சக்தியைக் கொடுக்கிறார்; அந்தச் சக்தி எதிரிகளை அழிக்கிறது. இந்த எண்ணமோ அல்லது வார்த்தையோ, அழிப்பதற்கான சக்தியை அதனை உருவாக்குபவரிடமிருந்தே பெறுகின்றன.

அஸ்த்ரம் என்பது பொருள் ரீதியான ஆயுதம் அல்ல. அது ஒரு எண்ணம் அல்லது வார்த்தை மட்டுமே!

இவை மந்த்ரங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை, ஒரு அணு ஆயுதத்தைப்போல், அழிவை உண்டாக்கக்கூடிய சக்திவாய்ந்த அதிர்வுகளையோ அல்லது சக்திவாய்ந்த ஆற்றலையோ உருவாக்கக்கூடியவையாக இருந்தன.

இப்படிப்பட்ட உருவகங்களின் மூலமாக நமக்கு சில ஸத்யங்கள் உணர்த்தப்படுகின்றன. அதாவது அஸ்த்ரங்கள் என்று சொல்லப்படுகிற இவை அனைத்துமே, ஒரு தனிமனிதனுக்குள் பதிந்து இருக்கக்கூடிய எண்ணப்பதிவுகளை, ஸம்ஸ்காரங்களை அழிக்கவல்ல சக்திவாய்ந்த த்யான நுட்பங்களே.

மஹாபாரத யுத்தத்தின் கடைசி கட்டங்களில், கௌரவப்படைகள் முற்றிலும் வேரறுக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருந்த மாவீரர்களில் ஒருவர் அஸ்வத்தாமன். துரோணாச்சாரியாரின் மகனான இவர், பாண்டவர்களைப் பழிவாங்க எண்ணினார். ஆனால் அவர்களை நேர்மையான வழியில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துகொண்ட பின், அந்த நம்பிக்கை இழந்த நிலையில் மிகப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, கொடிய அஸ்த்ரமாகிய ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பிரயோகித்தார்.

அணு ஆயுதங்களைப்போல தாங்க முடியாத வெப்பத்தையும் பேரழிவையும் தாக்கப்பட்ட நிலத்தில் குறைந்த பட்சம் பன்னிரண்டு ஆண்டுகளுக்குக் கடுமையான பஞ்சத்தையும் ஏற்படுத்தவல்ல அஸ்த்ரம் ப்ரஹ்மாஸ்த்ரம்.

பல்வேறு கடுமையான தவங்களுக்குப் பிறகு, படைக்கும் கடவுளான பிரஹ்மதேவனால் அஸ்வத்தாமனுக்கு அளிக்கப்பட்ட அஸ்த்ரமே ப்ரஹ்மாஸ்த்ரம்.

ப்ரஹ்மாஸ்த்ரத்திற்குப் பதிலளிக்கும்விதமாக, அர்ஜுனன் சிவபெருமானிடமிருந்து பெற்ற பாஷுபதாஸ்த்ரத்தைப் பிரயோகித்தார்.

இந்த இரண்டு அஸ்த்ரங்களின் மூலம் இப்பூவுலகிற்கு ஏற்படவிருந்த பெரும் அழிவினைத் தடுக்கும் பொருட்டு, இருவரையுமே தங்களது அஸ்த்ர பிரயோகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கிருஷ்ணர் அறிவுறுத்தினார் .

அதனால் அர்ஜுனன் தமது பாஷுபதாஸ்த்ரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் அஸ்வத்தாமாவினால் அவ்வாறு செய்ய இயலவில்லை.

இவ்வுலகிற்கு ஏதாவது அழிவு நிகழும் முன்பே, கிருஷ்ண பரமாத்மா அந்தப் ப்ரஹ்மாஸ்த்ரத்தைத் தாமே பெற்றுக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

யுத்தத்திற்கான ஆயத்தம்!

பாண்டவர்களது சங்கொலிகள் கௌரவர்களை உடல் ரீதியாக அழிக்கவில்லை. ஆனால் அவை கௌரவர்கள் மனத்தில் வளர்த்து வைத்திருந்த கற்பனைகளையும் மனக்கோட்டைகளையும் அழிப்பதில் வெற்றி கண்டன.

போருக்கான ஆயத்தங்களைச்
செய்வதற்காகவும் அவரவர்களது
எல்லைகளை வகுப்பதற்காகவும்தான்
யுத்தபூமியில் சங்கொலிகள்
முழங்கப்படுகின்றன. இந்த எல்லைகளை
வகுப்பதில் பாண்டவர்கள் வெற்றி
கண்டார்கள்.

பாண்டவர்களது
சங்கொலிகள்
கௌரவர்களின்
மனத்தில் இருந்த
கற்பனைகளையும்
மனக்கோட்டைகளையும்
அழிப்பதில் வெற்றி
கண்டன.

பஞ்ச பாண்டவர்களும் அவர்கள் சார்பாகப் போரிட வந்திருக்கும் மற்ற மாவீரர்களும் தங்களுடைய இதயப்பூர்வமாகவும், புத்திப்பூர்வமாகவும் மட்டுமல்ல, கடவுளின் பார்வையில் கூட, எது சரியான செயலோ அதையே தாங்கள் செய்து கொண்டிருப்பதாக அறிந்துகொண்டதாலும் கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததாலும் நிறைவான உணர்வைப் பெற்றிருந்தார்கள்.

கௌரவர்கள் அச்சத்துடன் இருந்தார்கள். பேராசை மற்றும் பொறாமையினால் அவர்கள் பீடிக்கப்பட்டிருந்தார்கள். இறைவனை அடைய வேண்டும் என்னும் லக்ஷியம் அவர்களிடம் இருக்கவில்லை.

ஸஞ்ஜயன் போர்க்களத்தில் இருந்த மனிதர்களுக்கிடையே மேலோட்டமாக வெளிப்பட்ட எதிர்ச்செயல்களையும் தாண்டி, அவர்களுடைய உள்ளுணர்வை ஆழமாக நோக்கக்கூடிய திறன் பெற்றிருந்தார் என்பதனை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

தம்முடைய ஞானக்கண் பார்வையினால் ஆஜ்ஞா சக்ரத்தின் சக்தியினால், மாவீரர்களின் ஆழ்மனம்வரை ஊடுருவிச் சென்று, அவர்களைக் குழப்பமுறச் செய்து கொண்டிருக்கும் தீவிரமான உணர்ச்சிகளையும் அந்த உணர்ச்சிகளுக்கேற்ப அவர்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்ச்செயல்களையும் அவரால் மிக நன்றாகக் காண முடிந்தது.

> ஆஜ்ஞாசக்ரம்
> திறக்கும்பொழுது
> நீங்கள் அதீத
> ஆற்றல்களைப் பெற
> முடியும்!

பாண்டவ வீரர்களால் அளிக்கப்பட்ட மறுமொழிக்கு, கௌரவர்களின் எதிர்ச்செயல் வெளிப்பார்வைக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கௌரவர்கள் நம்பிக்கையிழந்து அச்சமடைந்தார்கள் என்றே ஸஞ்ஜயன் முடிக்கிறார்.

இராணுவ அணிவகுப்புபோல் அணிவகுத்து நின்றிருந்த இருதரப்பு சேனைகளும் நேருக்குநேர் சந்தித்தார்கள். யுத்தத்தை எதிர்பார்த்துச் சங்குகள் முழங்கப்பட்டன. இருதரப்பு மாவீரர்களும் யுத்தம் புரிவதற்குத் தங்கள் படைத்தளபதிகளின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

Krishna and Arjuna blowing conches

பாண்டவ சேனையின் முன்னணியில் அர்ஜுனன் நின்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணர் தமது சங்கை ஊதிய அதே
நேரத்தில், அர்ஜுனனும் அவரது
தேவதத்தம் என்னும் சங்கை ஒலிக்கச்
செய்தார்.

அர்ஜுனன் தமது தெய்விக வில்லாகிய காண்டீவத்தை எடுத்து நிறுத்தி, அம்பு தொடுக்கத் தயாரானார். ஆனால் வில்லிலிருந்து அம்பு தொடுக்காமல், அர்ஜுனன் தம் கண்முன்னே ஒன்று திரண்டிருந்த கௌரவர்களையும் அவரது சகோதரர்களையும் கண்டு மலைத்து நின்றார்.

வில்லை ஏந்தியவாறே, தமது தோழனும் இரத ஓட்டியும் வழிகாட்டியும் தெய்வ சக்தியுமாக வீற்றிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.

தர்ம யுத்தத்திற்குத் தொடர்ந்து உதவும் இறைசக்தி

நாம் ஏற்கெனவே பார்த்தது போன்று அர்ஜுனனது ரதம் அவருக்கு அக்னி என்னும் நெருப்புக் கடவுளால் பரிசளிக்கப்பட்டது. கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பு நிகழ்ந்த இராம அவதாரத்தில், வாயுபகவானின் மகனாகவும் இராமருக்கு மிக நெருங்கிய நண்பராகவும் சீடராகவும் இருந்த வானரக் கடவுளான ஹனுமானின் உருவம் பதிக்கப்பட்ட கொடி அர்ஜுனனின் தேரில் பறக்க விடப்பட்டிருந்தது.

ஒரு சமயம் தேவர்களின் தலைவராகிய தேவேந்திரன் அக்னி பகவானிடம், அக்னி பகவானுடைய சக்தியான தீயைத் தாம் மழை பொழிந்து அணைத்துவிடப் போவதாகப் பயமுறுத்தினார். அதனால் அக்னி பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் உதவியை நாடினார்.

அப்பொழுது அர்ஜுனனின் உதவியோடு கிருஷ்ணர் அக்னி பகவான் விழுங்குவதற்காக ஒரு கானகத்தையே அளித்தார். இந்த உதவியால் பெரிதும் மகிழ்ச்சியுற்ற அக்னிபகவான் அர்ஜுனனுக்கு, காண்டீவம் எனும் வில்லையும் நான்கு குதிரைகள் பூட்டிய ஒரு ரதத்தையும் எடுக்க எடுக்கக் குறையாத இரண்டு அம்பறாத்தூணிகளையும் ஒரு கவசத்தையும் பரிசாகத் தந்தார்.

ஒருமுறை பீமன் வனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, தாம் நடக்கும் பாதையில் ஒரு தளர்ச்சியடைந்த வயோதிக வானரம் படுத்திருப்பதைக் கண்டார்.

பீமன், அந்த வயோதிக வானரத்திடம் சற்றே நகர்ந்து வழி விடுமாறு கேட்டார். ஆனால் அந்த வானரமோ, தாம் மிகவும் பலஹீனமாக இருப்பதனால், முடிந்தால் பீமனே தமது வாலை நகர்த்தி விட்டு, பிறகு செல்லலாம் என்று சொன்னது.

பீமன், அந்த வானரத்தினுடைய
வாலைத் தமது விரல்களால் தூக்க
முயற்சி செய்தார். ஆனால் அவர்
நினைத்ததைப்போல், வாலை நகர்த்துவது
அவ்வளவு எளிதாக இல்லை. அந்த வாலை
நகர்த்துவதற்கு பலவழிகளிலும் அவர்
கடுமையாக முயற்சி செய்தார்.

எட்டாயிரம் யானைகளின் பலம்
பொருந்தியவராக சொல்லப்படும் பீமனைப்
போன்ற வலிமைவாய்ந்தவராலேயே,
அந்தக் கிழவானரத்தின் வாலை
இம்மியளவுகூட அசைக்க முடியவில்லை.

> அஹங்காரத்தோடு
> செய்யப்படும்
> எந்த ஒரு செயலும்
> வெற்றியைத்
> தருவதில்லை.

நிச்சயமாக இது ஒரு சாதாரண வானரமாக இருக்க முடியாது என்பதனை உணர்ந்துகொண்ட பீமன், அந்த வானரத்திற்குச் சகல மரியாதைகளையும் அளித்து, நமஸ்கரித்து "தாங்கள் யார்," என்று பணிவாகக் கேட்டார்.

தம் பெயர் ஹனுமான் என்றும், வாயு பகவானின் மற்றொரு மகன் என்றும், அந்த வகையில் அவர் பீமனுக்கு சகோதரன் என்றும் தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காட்டினார்.

அப்பொழுது, பாண்டவ இளவரசர்களுடனேயே தாம் எப்பொழுதும் இருப்பதாகவும் மேலும் அர்ஜுனனது இரதத்தின் மேல் பறக்கும் கொடியில் தானே சின்னமாக இருப்பதாகவும் ஆசீர்வதித்தார்.

ஹனுமான் இருக்கும் இடங்களிலெல்லாம் இராமபிரான் எழுந்தருளுவதாக ஐதீகம் இருக்கிறது. ஆகவே அர்ஜுனனுடன் கிருஷ்ணர் மட்டுமல்ல, அவரது முந்தைய அவதார சக்தியாகிய இராமபிரானும் இருக்கிறார்.

Peacock feather

மனித குலத்தின் மொத்த நாயகன்

அர்ஜுனனும் பாண்டவ இளவரசர்களும் ஒருமுறைக்கு இரு முறை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!

கீதை எனும் இந்நூலில், அர்ஜுனன் முதன் முறையாகப் பேசுகிறார். இங்கு அர்ஜுனன், மஹாபாரதத்தின் நாயகனாக மட்டும் இருக்கவில்லை. மனித குலத்தின் மொத்த வடிவமாக, உருவகமாக இருக்கிறார்.

இப்பொழுது கிருஷ்ணராக அவதரித்திருக்கும் பகவான் விஷ்ணுவின், அந்த நாராயணனின் மனித அம்சம்தான் நரன் என்று புராணங்களும் இதிஹாஸங்களும் குறிப்பிடுகின்றன. அந்த நரனாகவும் இங்கு அர்ஜுனன் இருக்கிறார்கள்.

கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களை நர நாராயணர்களாக, இறைசக்தி மற்றும் மனித சக்தியாக, வெளிப்படுத்திக்கொண்ட கருத்துத்தான் கீதை முழுவதும் மட்டுமல்ல, மஹாபாரத்தின் பெரும் பகுதியிலுமே ஊடுருவி இருக்கிற மையக் கருத்தாக இருக்கிறது.

"தம் நிலையிலிருந்து தவறாதவரே!" என்று அர்ஜுனன் தமது தோழனும் வழிகாட்டியுமாகிய கிருஷ்ணரை அழைக்கிறார்.

குழப்பம்
ஏற்படும்பொழுது
நம்முடைய செயல்கள்
எதுவுமே
அறிவுப்பூர்வமானதாக
இருப்பதில்லை.

"தயைகூர்ந்து, எதிரிசேனையை நான் நன்கு
பார்க்கும் வகையில் இரண்டு சேனைகளுக்கு
மத்தியில் ரதத்தை செலுத்துங்கள் அச்யுதா,
அப்படியானால்தான் நான் யார் யாரோடு
யுத்தம் செய்யப் போகிறேன் என்பதை நானே
பார்க்க முடியும். இந்தப் போர்க்களத்தில்
யார் யாரெல்லாம் போர் புரிய விரும்பி
என் முன்னே கூடியிருக்கிறார்கள், நான்
யார் யாரிடம் போர்புரிவதற்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்ள வேண்டும். யாரை
எல்லாம் நான் அழிக்க வேண்டும் என்பதை
நான் காணவிரும்புகிறேன்," என்று
அர்ஜுனன் சொன்னார்.

குருக்ஷேத்ர போர்க்களத்தில் நிற்கும்
ஒவ்வொரு மனிதரையும் முதலில் நிற்கும்
மனிதரிலிருந்து கடைசி மனிதர்வரை
அர்ஜுனன் நன்றாக அறிவார். அவர் போரில்
யாரை எதிர்கொள்ள வேண்டும்; எவருடன்
போர்புரிய வேண்டும் என்பதில் எந்த ஒரு
குழப்பமும் அர்ஜுனனுக்கு இல்லை.

இராஜ விசுவாசத்தை மாற்றிக்கொள்ளுதல்,
போர் புரியாமல் போரிலிருந்து விலகிக்
கொள்ளுதல் என்கிற இந்த எல்லா முடிவுகளும்
யுத்தத்திற்குப் பல நாட்களுக்கு முன்பே
எடுக்கப்பட்டுவிட்டன.

அர்ஜுனனுடன்
கிருஷ்ணர் மட்டுமல்ல,
அவரது முந்தைய
அவதார சக்தியாகிய
இராமபிரானும்
இருக்கிறார்.

எல்லாப் பேச்சுவார்த்தைகளும் பரிமாற்றங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன; விரும்பியோ, விரும்பாமலோ எல்லைக்கோடுகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன.

இந்தக் கடைசி நிமிடத்தில், நான் யாருடன் போர் புரியப் போகிறேன் என்று காண விரும்புகிறேன் என்று கேட்பதால், அர்ஜுனனுக்கு எந்தவித பலனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனாலும் அவர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

அர்ஜுனனின் இந்தச் செயல், ‘கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து, நிகழ்ச்சிகளின் போக்கையே மாற்றி அமைத்துவிடாதா’ என்று நம்புவதுபோல் தோன்றுகிறது.

அப்படி ஏதாவது ஒன்று நிகழ வேண்டுமானால் அது தமது சாரதியாவும் தோழனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் கிருஷ்ணர் மூலமாக மட்டும்தான் நிகழ முடியும் என்பதையும் அர்ஜுனன் அறிவார்.

இது, அர்ஜுனன் நம்பிக்கை இழந்த நிலையில், கிருஷ்ணரிடத்தில் தாழ்மையோடு, ‘தயவு செய்து எனக்குத் தெரியாத அந்த ஏதோ ஒன்றினைக் காட்டி அருளுங்கள், தம் நிலையிலிருந்து இறங்காதவரே, இறைவனே, நீங்கள் மட்டுமே அறிந்த அந்த ஒன்றினை எனக்குக் காட்டி அருளுங்கள், நீங்கள் என்னை எங்கு அழைத்துச் செல்ல முடியுமோ, அங்கே அழைத்துச் செல்லுங்கள்,’’ என்று வேண்டுகோள் விடுப்பதைப் போன்று இருந்தது.

கேள்வி: ஸ்வாமிஜி, இந்தச் சடங்குகள், மந்த்ரங்கள் மற்றும் அஸ்த்ரங்கள், இவை அனைத்தும் இந்த நவீன விஞ்ஞானத் தொழிநுட்ப யுகத்தில் அவ்வளவு நிஜமாகத் தோன்றவில்லையே? உங்களைப் பின்பற்றுபவர்கள் அணியும் உங்கள் படத்துடன் இருக்கும் இந்தக் காப்பும், மாலையும்கூட ஒரு ‘சமய வழிபாட்டு’ சூழலை உருவாக்குவது போன்று இருக்கிறது.

நான் இதை நம்ப விரும்புகிறேன். ஆனால் நான் கற்றதெல்லாம் இதற்கு மாறுபட்டதாக இருக்கிறது. தயவு செய்து இதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு உதவுங்கள்.

ஒரு உண்மையான
மனப்போராட்டத்தில்
இருந்துதான்
தேடுதலுக்குரிய
கேள்விகள்
வர முடியும்.

இது ஒரு நேர்மையான கேள்வி. நீங்கள் எதை நம்ப வேண்டும் என்று உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கும் இப்பொழுது நீங்கள் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருப்பதற்கும் இடையே பல முரண்பாடுகளைக் காணும்பொழுது எழுகிற மனப் போராட்டத்திலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆன்மீகத்திற்கு எதிரானவை அல்ல. சில விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவாதிகளும் இதை எதிர்க்கலாம். ஆனால் அவர்கள் கண்டுபிடித்த உண்மைகள் இதை எதிர்க்கவில்லை.

உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகிய ஐன்ஸ்டீன், "விஞ்ஞானத்தின் கடைசிப் படியே ஆன்மீகத்தின் முதல் படியாக இருக்கிறது," என்று சொல்லி இருக்கிறார்.

அவர், பருப்பொருள்களுக்கும் சக்திக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். ஆனால் அவை அழிவிற்காகவே உபயோகப்படுத்தப்பட்டன. அதனால் விரக்தியடைந்த அவர், பின்னாளில் மன அமைதிக்காக ஆன்மீகத்தை நோக்கித் திரும்பினார். வேதங்களையும் உபநிஷதங்களையும் படித்தார்.

முதல் உபநிஷதத்தின், முதல் வரி அறிவிக்கிறது:

ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் ‘எல்லாப் பொருட்களும் சக்தியில் இருந்துதான் தோன்றுகின்றன.’

விஞ்ஞானமும் ஆன்மீகமும் சகலவிதங்களிலும் ஒத்துப்போகிறது. இதனைப் புரிந்துகொள்ளும்பொழுது, இவற்றிற்கிடையே எந்தவிதமான தேர்வும் செய்யத் தேவை இல்லை.

அவை இரண்டும் சமமாக ஓடும் பாதைகள் மட்டும் அல்ல; எல்லா அம்சங்களிலும் ஒத்துப்போகிற வேறுபாடு இல்லாத பாதைகளாகவே இருக்கின்றன.

பல ஆயிரம் வருடங்களுக்கும் முன்பே ஞானகுருமார்கள் எவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருந்தார்களோ, அவற்றைத்தான் நாம் இன்று கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறோம்.

அவர்கள், அன்று தங்கள் உள்ளுலகில் பார்த்ததை, இன்று விஞ்ஞானிகள் வெளியுலகத்தில் பார்க்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அணுக்களும் அணுத்துகள்களும் வெவ்வேறு சமயத்தில் வெவ்வேறுவிதமாக நடந்துகொள்கின்றன என்று மக்களிடம் சொல்லி இருப்போம் என்றால் அவர்கள் நகைத்திருப்பார்கள். அது விஞ்ஞானத்தின் அடிப்படையையே ஆட்டம்கொள்ளச் செய்திருக்கும்.

பொருட்களும் சக்தியும் வேறுபட்டவை என்றும், அவை ஒரே காலகட்டத்தில் ஒரே வெளியை (space) ஆட்கொள்ள முடியாதவை என்றும் விஞ்ஞானம் சொன்னது.

உங்கள் குழந்தைப்பருவத்தில் இதைத்தான் கற்றுக் கொடுத்தார்கள், இல்லையா? ஆனால் இன்றைய விஞ்ஞான சமுதாயம் இதை உண்மையில்லை என்று நிரூபித்திருக்கிறது.

இந்த விஞ்ஞானிகள் நிச்சயம் மிகவும் துணிச்சல் உடையவர்கள்தான். இந்த அனுமானத்தைத் துணிவுடன் எதிர்த்து, அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, பலவித ஆராய்ச்சிகளைச் செய்து, இந்த ஸ்தூல உலகத்தின் உண்மைகளை நிரூபிக்கும் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த விஞ்ஞானிகள் எல்லோருமே,
இப்பொழுது விஞ்ஞான தொழில்நுட்பத்தில்
முன்னேறிய பிரிவுகளாகக் கருதப்படும்

விஞ்ஞானத்தின் கடைசிப் படியே ஆன்மீகத்தின் முதல் படியாக இருக்கிறது.
Sub-atomic particle orbits illustration

குவாண்டம் இயற்பியல் (Quantum
physics) மற்றும் மூலக்கூறு உயிரியல்
(molecular Biology) துறையில்
முன்னணியில் இருப்பவர்கள்தான்.

அணுத்துகள்களின் (sub-atomic particles) பண்பு நலன்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வண்ணம் இருப்பதில்லை என்பதை குவாண்டம் இயற்பியல் வல்லுனர்கள், பல வருடங்களாக ஆராய்ந்து இப்பொழுது கண்டுபிடித்துள்ளார்கள்.

அவர்கள் சொன்ன கருத்து: “உங்களால் அவற்றின் நிலைகளைப் பற்றி எதையும் நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. ஒரே நேரத்தில், ஒரே வெளியில் (space) ஒரே அணுத்துகளை இரு வேறு விஞ்ஞானிகள் ஆராயும்பொழுது அது பார்ப்பவர்களின் பார்வைக்கேற்ப இருவேறு நிலைகளில் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது.”

இதைத்தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, ஹிந்து தத்துவஞானியும் ஞானமடைந்த குருவுமாகிய ஆதி சங்கரர் சொன்னார்.

“எதுவுமே நிஜம் இல்லை, எல்லாமே ஒப்பு நோக்கத் தக்கவைதான்,” என்று சொன்னார்.

பார்ப்பவர், பார்க்கப்படுபவை மற்றும் பார்த்தல் இவற்றின் இடையே ஏற்படும் இடைத் தாக்கம்தான் (Interaction), நாம் எதைப் புரிந்து கொள்வது, எப்படிப் புரிந்து கொள்வது என்பதனை முடிவு செய்கிறது.

எதுவுமே
நிஜம் இல்லை,
எல்லாமே
ஒப்பு நோக்கத்
ತಕ್ಕவைதான்!

பார்ப்பவர், பார்க்கப்படும் பொருள்
அல்லது செயல், மற்றும் பார்த்தல் என்னும்
உணர்ச்சி இவை மூன்றும் கலந்து ஒரே
அனுபவமாக ஆகும்பொழுது, அவை
எல்லா அம்சங்களிலும் ஒத்துப் போகிறது;
அப்பொழுது ஸத்யம் தன்னைத்தானே
வெளிப்படுத்திக்கொள்கிறது என்று
கிருஷ்ணர் சொல்கிறார்.
அது ஒன்றே ஸத்யம்; அதுவே நிதர்சனம்,
மாயையைக் கடந்த ஸத்யம்.

மாயா என்ற சொல் உண்மை இயல்புக்கு
மாறான ஒன்றைக் குறிப்பிடுவதற்காக
சொல்லப்படுகிற சொல். மாயா என்றால்
'இல்லாதது' என்று பொருள். 'இருப்பதுபோல்
தோன்றுகிற, ஆனால் இல்லாத ஒன்று'தான்
மாயா.

எது உண்மையில் இல்லையோ, ஆனால்
உண்மையைப்போல் தோற்றமளிக்கிறதோ
அதுவே மாயா!

மக்கள் இதைக் கேட்டுச் சிரித்தார்கள். “நான் உங்களை இப்பொழுது காயப்படுத்தலாம். நான் உங்களை இப்பொழுது கொல்ல முடியும். அது உண்மையில்லையா?" என்று கேள்வி கேட்டார்கள்.

ஆம், அது உண்மையில்லைதான்; உள்ளுலக விஞ்ஞானிகள் கண்டறிந்த ஸத்யத்தின் பார்வையில் கொல்வதுகூட உண்மையில்லைதான்.

என் உடலாக நீங்கள் எதைக் காண்கிறீர்களோ அதனை அழிக்க முடியும். என்னுடைய சக்தியை எந்தவிதத்திலும் அழிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அதைத் தொடக்கூட முடியாது.

பொருள், சக்தியின் பரிமாணத்திற்குச் சென்று விடுகிறது. அவ்வளவே. ஸ்தூல ரீதியான, பொருள் ரீதியான பரிமாணத்தின் அனுபவத்தில் கட்டுண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கும்வரை உங்களால் அந்தப் பரிமாணத்தைக் கடந்து பார்க்கவோ, உணரவோ முடியாது. இது உங்களுக்குள் எந்தவித புரிதலையும் ஏற்படுத்திவிடாது.

அதுபோலவே, ஒரே காலத்தில் ஒரே இடத்தில் வெவ்வேறு ஆய்வாளர்களுக்கு வெவ்வேறுவிதமாகத் தோற்றமளிக்கும் அணுத்துகள்களின் செயல்பாட்டினைப் பற்றி குவாண்டம் இயற்பியல் வல்லுனர்கள் விவரிக்கும்பொழுது, அது நியூட்டனின் சித்தாந்தத்தை நம்பும் விஞ்ஞானிகளுக்குப் புரிவதில்லை.

நம்மில் பலருக்கும் நம் மனக் கட்டுப்பாடு மட்டும்தான் உண்மையாகத் தெரிகிறது. நாம் இத்தனை ஆண்டுகளாக கற்றுக்கொண்டவையும் நம் சிறு வயதிலிருந்து மற்றவர்களால் என்னவெல்லாம் நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டனவோ, அவையே நமக்கு உண்மையாகத் தெரிகின்றன.

அதிகாரப்பூர்வமான ஓர் இடத்திலிருந்து செய்தி வந்தால் நாம் நம்பத் தயாராக இருக்கிறோம். அது நமக்கு ஒரு உண்மையாகவும் ஒரு மதிப்பீட்டு முறையாகவும் ஒரு நம்பிக்கையாகவும் மாறி விடுகிறது.

இந்த மதிப்பீட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும்தான் சங்கரரும் மற்ற ஞானமடைந்த ரிஷிகளும் ஸம்ஸ்காரங்கள் என்றும், ‘கட்டுண்ட விழிப்புணர்வற்ற நினைவுகள்’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்த விழிப்புணர்வற்ற நினைவுகள்தான் நமது எல்லா முடிவுகளையும் செயல்களையும் செய்யத் தூண்டுகின்றன என்றும், நாம் நினைப்பதுபோல நம்முடைய தர்க்க ரீதியான, யோசனைத் திறனுள்ள மனம் நம்மை வழி நடத்துவதில்லை என்பதனையும் தற்போதைய நரம்பியல் நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

> நாம்தான்
> நம்முடைய
> வாழ்க்கையைக்
> கட்டுப்படுத்துகிறோம்.
> மாய எண்ணத்தில்
> வாழுகிறவரையில்,
> நாம்
> துன்பத்தில்
> வாழுகிறோம்.

நம்முடைய வாழ்வு நம்முடைய
கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.
நாம்தான் நம்முடைய வாழ்க்கையைக்
கட்டுப்படுத்துகிறோம் என்ற மாய
எண்ணத்தில் வாழுகிறவரையில், நாம்
துன்பத்தில் வாழுகிறோம்.

நாம், நம் தர்க்க அறிவின் வழியில் சிந்தித்துத்தான் முடிவுகள் எடுக்கிறோம், அதன் அடிப்படையில்தான் செயல்படுகிறோம். அதன் அடிப்படையில்தான் நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று நாம் எண்ணுகிறவரையில், நாம் முழுமையாக அறியாமையில் மூழ்குவதோடு மட்டுமல்லாமல், மிகவும் ஆழமான துக்கத்திலும் விழுந்து விடுகிறோம்.

மனத்தின் பத்து சதவீதத்திற்கும் குறைவான பகுதிதான் விழிப்புணர்வு நிலையில் செயல்படுகிறது.

மீதியுள்ள மனத்தின் பகுதி, ஆழமான விழிப்புணர்வற்ற, உள்ளுணர்வின் உந்துதலால்தான் செயல்படுகிறது; அதனுடன் நம்மையும் இழுத்துச் செல்கிறது.

நாம், நம் அடிப்படை ஆதார சக்தியாக இருக்கும் உள்ளுணர்வினால் உந்தப்படுகிறோம். நமது மூளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குரிய நினைவுகளைச் சேர்த்து வைத்து இருக்கிறது. அதுதான், நாம் ஆபத்தில் இருக்கும்பொழுது நம்மைக் கட்டுப்படுத்துகிறது, காப்பாற்றுகிறது.

ஆனால் எதுவாக இருந்தாலும் நம்மால் அந்த நினைவுகளின் மீது எந்தவிதமான கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாது.

நம்மால் சமாளிக்க முடியாத பெரிய ஆபத்து நிகழும்பொழுது நம்முள் எழும் பய உணர்வை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை; நம்மால் தடுக்க முடிவதில்லை.

குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும்பொழுது நாம் காம ரீதியாகத் தூண்டப்படுவதிலிருந்து நம்மை நாம் தடுத்துக்கொள்ள முடிவதில்லை.

நம் விழிப்புணர்வற்ற மூளை, விழிப்புணர்வு
உள்ள மூளையைக் காட்டிலும் மிக
வேகமாகவும் மிகவும் நம்பத் தகுந்த
வகையிலும் செயல்படுகிறது.

அந்த ஒரே காரணத்தினால்தான் நாம்
உயிரோடு இருக்கிறோம். நாம் உயிரோடு
இருக்கிறோம் என்றால் அது நம்மால் அல்ல,
அது நம்மையும் மீறிய ஒரு செயலாக
இருக்கிறது!.

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் எல்லாம்
கருவிகளே. நாம் அவற்றை வெறுமனே
கருவிகளாக உபயோகப்படுத்தும்வரை நம்
வாழ்வை அவை உயர்த்தும்.

நாம் உயிரோடு இருக்கிறோம் என்றால் அது நம்மால் அல்ல, அது நம்மையும் மீறிய ஒரு செயலாக இருக்கிறது!

ஆனால் நம் வாழ்வையும் நம் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்த அவற்றை அனுமதித்தோமானால் நாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறோம்.

தம்மைப் புனிதமானவராகக் காட்டிக்கொள்ளும் ஒருவரை நம்பும்பொழுது, அதைவிட பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்கிறீர்கள்!

சங்குகள், மந்த்ரங்கள், அஸ்த்ரங்கள் - இவற்றின் முக்கியத்துவத்தை இப்பொழுது நான் விளக்குகிறேன். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேதங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள் இவை அனைத்தும் ஸத்யங்களைப் பற்றியவை, உண்மைச் சம்பவங்களைப் பற்றியவை அல்ல.

ஸத்யத்திற்கும் உண்மைச் சம்பவத்திற்கும்
மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
உண்மைச் சம்பவம் என்பது வரலாற்றுச்
சிறப்பு வாய்ந்த, அளவிடக்கூடிய தன்மை
உடையவை.

உண்மைச் சம்பவங்கள் மூன்று
பரிமாணங்களிலும் காலம், வெளி
(space), பொருள் என்று இவற்றுக்குக்
கட்டுப்பட்டுச் செயல்படுபவை. ஸத்யம்
இந்தப் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டது.
ஸத்யம் தெளிவான உணர்வையும்
விழிப்புணர்வையும் குறித்தது.

> ஒரு ஞானிக்கு
> உயிருள்ள மற்றும்
> உயிரற்ற அனைத்தும்,
> தமது உயிரின்
> நீட்டிக்கப்பட்ட
> ஒரு பாகமாகவே
> தோன்றுகிறது!

இயேசுநாதர் ரொட்டியையும் மதுவையும் கொடுக்கும் பொழுது, “என் உடலை உண்ணுங்கள், என் இரத்தத்தைக் குடியுங்கள்,” என்றார்.

இவை ஸத்யங்கள். தன்னையுணர்ந்த ஞானியிடமிருந்து வருகிற முழுமையான ஸத்யங்கள். இவை நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்வதைப் போன்ற உண்மைச் சம்பவங்கள் அல்ல.

ஒரு ஞானிக்கு உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துமே, தமது உயிரின் நீட்டிக்கப்பட்ட ஒரு பாகமாகவே தோன்றுகிறது. அது போன்று, உடல் எல்லையைத் தாண்டி வாழ்ந்த ஒரு ஞானியின் உருவகிக்கப்பட்ட ஸத்யங்கள் இந்த வார்த்தைகள். நீங்கள் அவர் சொல்லிய வார்த்தைகளின் உள் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், அதை வெறும் சடங்காக மட்டுமே மாற்றும்பொழுது, அது அர்த்தமற்றதாக மாறி விடுகிறது, இன்று இருப்பதைப்போல!

இந்த உவமான ஸத்யங்களைப் புரிந்து கொள்வதற்கான சாவியை நாம் தொலைத்து விட்டோம். அதனால்தான் உயர்ந்த உண்மைகளை உள்ளடக்கிய சடங்குகள் அனைத்தும் தரம் தாழ்ந்து மூடநம்பிக்கைகளாகவும் இயந்திரத்தனமாகத் திரும்பத் திரும்பச் செய்யும் செயல்களாகவும் மாறிவிட்டன.

நீங்கள் ஒவ்வொரு கவளத்தை உண்ணும்போதும், இயேசுவின் சக்தியை உண்பதுபோல் உண்டால், நீங்கள் தண்ணீரைச் சுவைத்து குடிக்கும்பொழுது, இயேசுவின் சக்தியைக் குடிப்பதுபோல் குடித்தால், நீங்கள் மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

நீங்கள் இயேசுவின் உணர்வு நிலைக்கு உயர்ந்து விடுவீர்கள். நீங்கள் இன்னுமொரு கிறிஸ்துவாகிவிட முடியும்! ஸத்யங்கள் என்பது இதுதான்.

கிருஷ்ணர், அர்ஜுனன் போன்ற மாபெரும் வீரர்களின் சங்கொலியானது வெறும் ஒலி மட்டும் அல்ல.

அவை ப்ரபஞ்ச சக்தியின் அதிர்வுகள். இந்த அதிர்வுகளே இந்த ப்ரபஞ்சத்தை உயிரோட்டமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

கோயில்களில் பிரார்த்தனையின்பொழுது சங்கை ஊதுவதற்கான நோக்கம் இதுவே. அவை, நாம் இந்த ப்ரபஞ்ச சக்தியின் அதிர்வுடன் ஒருங்கிணைய உதவுகிறது; நாம் இந்தத் தூய ப்ரபஞ்ச சக்தியோடு ஒத்திசைந்துவிட உதவுகிறது.

புனித சப்தங்களை உச்சரிக்கும் மந்த்ரமும் இதைப்போலத்தான். இந்த மந்த்ரங்கள் உங்களுக்குள் அதிர்வுகளை உருவாக்கி, இந்த ப்ரபஞ்ச சக்தியோடு ஒருங்கிணைய உதவுபவை.

நீங்கள் இந்த மந்த்ரங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் அவற்றின் உச்சரிப்பும், ஒலி அசைவும் மிகவும் முக்கியமானவை. அவற்றால் உங்களது சக்தியை மிகச் சீக்கிரமாக எழச்செய்ய முடியும். பல வருடங்களாக நடத்தப்பட்ட பல விஞ்ஞானச் சோதனைகள் இதனை நிரூபித்திருக்கின்றன.

உங்கள் ஆரோக்கியம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மற்றும் உணர்வு ரீதியாகவும் மேன்மையடையும். இதன் விளைவாக உங்கள் பொருள் ரீதியான உலக வாழ்வும் மேன்மையடைகிறது.

அஸ்த்ரங்கள், அதிசயமான ஆச்சரியமான
இந்த ஆயுதங்கள் உண்மையிலேயே
இருந்திருக்கின்றன. இந்த ஆயுதங்கள்
உருவத்துடன்கூடிய பொருள் அல்ல.

அஸ்த்ரங்கள், மிக நன்றாகக் கற்றுத்தேர்ந்த ஒரு குருவின் சக்தியுள்ள, ஒருமுகப்படுத்தப்பட்ட எண்ணங்களே. அவர் அந்த எண்ணங்களின் சக்தியைக்கொண்டு ஆக்கவும் அழிக்கவும் முடியும்.

ஸத்யங்களைப்
புரிந்து கொள்வதற்கான
சாவியை நாம்
தொலைத்து விட்டோம்.
அதனால்தான்
உயர்ந்த உண்மைகளை
உள்ளடக்கிய சடங்குகள்
மூடநம்பிக்கைகளாக
மாறிவிட்டன

எண்ணங்களின் வலிமையைப் பற்றி தற்பொழுது பரவலாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தச் சோதனைகளைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

ஹிந்து யோகிகளும் சீன, ஜப்பானிய குருமார்களும் தங்களது எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனை சில அடி தூரம்வரை தூக்கி எறிந்துவிட முடியும் என்றும், ஒரு பொருளை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நகர்த்த முடியும் என்றும் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

எண்ணங்களின் மூலம் கரண்டிகளை வளைக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் இவற்றின் ஒரு பகுதியே. கோடிக்கணக்கான மக்கள் இத்தகைய சக்தியை உணர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதர் அடுத்த நொடி தொடர்ந்து சுவாசிப்பார் என்று உங்களால் உறுதி அளிக்க முடியுமா?

நீங்கள் அவ்வாறு நிகழ்வதற்கான ‘சாத்தியக்கூறு’ பற்றி மட்டுமே சொல்ல முடியும். ஆனால் அதன் ‘உறுதிப்பாடு’ பற்றிச் சொல்ல முடியாது. இதனைத்தான் புத்திசாலியான விஞ்ஞானிகள் இன்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் பொருள் ரீதியான இவ்வுலகத்தில், ஒரு நிகழ்வு நிகழ்வதற்கான சாத்தியக்கூற்றைப் பற்றித்தான் பேச முடியுமே தவிர, ஒருகாலும் அதைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது என்று அந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

எண்ணங்களின் சக்தியைக்கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

நமக்கு விஞ்ஞானம் என்று எது
கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதன் முழு
அடிப்ப Gitயும் இப்பொழுது மாறிவிட்டது.

விஞ்ஞானம் என்பது மீண்டும் மீண்டும்
நிகழ்வதற்கான ‘உத்திரவாத’த்தைப் பற்றியது
அல்ல; மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கான
‘சாத்தியக்கூறை’ப் பற்றியது, அவ்வளவுதான்.

ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறு குறைவுதான் என்றால், விஞ்ஞானப்பூர்வமானது இல்லை என்று சொல்லிவிட முடியாது. அது ஒருமுறை

நிகழ்ந்தாலும்கூட, நாம் அதனை உறுதிபடுத்த
முடிகிறது. அது கனவாக இருக்கப்
போவதில்லை. அது ஒரு விஞ்ஞான
உண்மை.

நீங்கள் ருத்ராக்ஷ மாலையைப் பற்றிக் கேட்டீர்கள். இந்த மாலைகள் ப்ரபஞ்ச சக்தியை தன்னுள் கொண்டுள்ளது. அவை பேட்டரிகளைப் போன்று, உங்களுக்கு சக்தி தேவைப்படும்பொழுது உங்களை சக்தியூட்டுகின்றன. இதனைக் கண் மூடித்தனமாக நம்ப வேண்டியது இல்லை. நாம் விஞ்ஞானக் கருவிகளை உபயோகித்து, விஞ்ஞானப்பூர்வமான பரிசோதனைகள் மூலம் அவற்றிலிருந்து சக்தி வெளிப்படுவதை நிரூபிக்க முடியும்.

ஒருவர் இந்த மாலையை அணிந்துகொண்டு த்யானம் செய்யும்பொழுது, அந்த த்யான சக்தியினால் அந்த மாலைகளை மேன்மேலும் சக்தியூட்டுகிறார்.

இவை, ஒரு மனிதனுக்கு வேண்டிய மனோசக்தியை வழங்கும் வற்றாத ஊற்றாக இருக்கிறது. நீங்கள் இதை நம்ப வேண்டியதில்லை. நீங்கள் நம்பாவிட்டாலும் அவை வேலை செய்யும். அவை உங்களை குணப்படுத்தும். ஒருவர் என்னுடன் ஒன்றுபட்ட உணர்வுடன், என்மீது நம்பிக்கைகொண்டு இருப்பாரேயானால், குறிப்பாக, அந்த மனிதர் என்னிடம் தீட்சை பெற்றிருப்பாரேயானால், அவர் அந்த மாலையின் மூலமாக என்னுடன் தொடர்புகொள்ள முடியும்.

அந்த மாலையை என்னுடைய ‘அலைபேசி' (Cell Phone) என்றே சொல்வேன்! எத்தனை பேர் வேண்டுமானாலும் இதனைப் பரிசோதித்துப் பார்க்கலாம்.

மறுபடியும் சொல்கிறேன். இது கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட அதிசயமான எண்ணப்பரிமாறல் பற்றிய ஆச்சரியமான நிகழ்ச்சிகளுக்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் உள்ளது.

இதனைப் பூஜ்ய புள்ளித்தளம் (Zero point field) என்று குவாண்டம் பிஸிக்ஸில் (Quantum physics) சொல்வார்கள். உங்களுக்குள்ளும் இது நிகழ்வதற்கு உதவும் ஒரு கருவிதான் இந்த மாலை.

இந்த மாலை மனோ ரீதியான பாதுகாப்பை அளிக்கிறது. உலகம் முழுவதும், பல்வேறு கலாச்சாரத்தை அடிப்படையாகக்கொண்டு வாழும் மக்கள்கூட, பிறரது எண்ணங்கள், பில்லி சூன்யம் போன்றவற்றினால் தங்களுக்குத் தீங்கு விளைவிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

ஆம். உங்கள் மனோசக்தியினுடைய தற்காப்பு சக்தி குறையும்பொழுது, உங்களது மனோசக்தி தளத்தில் யாரோ ஒருவரை அனுமதிக்கும்பொழுது இது போன்று நடக்க முடியும்.

அப்பொழுது இந்த மாலை உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போவது மேற்கத்திய நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகளின் பிரெஞ்சுக் குடியிருப்பில் இருக்கும் ‘குவாடிலோப்’ என்னும் இடத்திலிருந்து மக்கள் எங்களது வகுப்புகளுக்கு வரத் தொடங்கினார்கள். நிறைய பிரெஞ்சு மக்களும் என்னுடைய சொற்பொழிவிற்கு வந்தார்கள், மாலையையும் அணியத் தொடங்கினார்கள்.

அப்பொழுது, தமது இளம் வயது மகனுடன் வாழ்ந்து வந்த விவாகரத்து பெற்ற ஒரு பெண்மணி, பிரான்சில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொன்னார்.

ஒரு நாள் இரவு அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் அவரிடம், அவரது ஆடைகளைச் சரியாக அணிந்து கொள்ளுமாறு சொன்னதுபோல் இருந்ததாம். உடனே எழுந்து அவர், தம் ஆடைகளைச் சரியாக அணிந்துகொண்டு உறங்கச் சென்று விட்டார்.

திடீரென்று அவருக்கு விழிப்பு தட்டியது.
கண்திறந்து பார்த்தால்... எதிரே கையில்
கத்தியுடன் ஒரு மனிதன் தம் கட்டிலுக்குப்
பக்கத்தில் நின்று கொண்டிருப்பதைக்
கண்டார்!

ஒரு அனிச்சைச் செயலாக, இந்த
மாலையைப் பாதுகாப்பிற்காகப் பிடித்துக்
கொண்டார். அந்த மனிதன் அவரைக்

மாலை,
ஒரு மனிதனுக்கு
வேண்டிய
மனோசக்தியை
வழங்கும்
வற்றாத ஊற்றாக
இருக்கிறது.

கத்தியால் குத்த முயற்சி செய்தான். ஆனால்
அவனால் அசையக்கூட முடியவில்லை.
திடீரென்று அவனது கைகால்கள் பக்கவாதம்
வந்தாற் போன்று ஸ்தம்பித்து விட்டது.

அதே சமயத்தில், அவரது மகன் எழுந்து
அந்த அறைக்குள் வந்தார். அவரைப்
பார்த்தவுடன் அந்தத் திருடன் அவரைக்
காயப்படுத்தினான். அவர்கள் இருவரும்
சண்டையிட்டுக்கொண்டு இருந்தபொழுது
அப்பெண்மணி மீண்டும் அந்த மாலையைப்
பிடித்துக் கொண்டார். மறுபடியும் அந்தத்
திருடனால் நகரமுடியாமல் போய் விட்டது.

> ருத்ராக்ஷ மாலைகள்
உங்கள்
மனோசக்தியினுடைய
தற்காப்பு சக்தி
குறையும்பொழுது,
உங்களது உடல்
மன வளர்ச்சி மற்றும்
நோய் எதிர்ப்புத்திறனை
அதிகப்படுத்துகின்றன.

இறுதியில், அந்தத் திருடன் ஒரு திறந்த ஜன்னலின் வழியே கீழே குதித்து ஓடி விட்டான். அந்தப் பெண்மணி இச்சம்பவத்தைப் பற்றி காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.

ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குப் பிறகு, காவலர்கள் வந்து அவரிடம், தாங்கள் ஒரு திருடனைப் பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு வேளை அவன் அவரைத் தாக்கியவனாகக்கூட இருக்கலாம் என்றும், வந்து அடையாளம் காண்பிக்குமாறும் அழைத்துச் சென்றார்கள்.

காவல் நிலையத்தில் அந்தத் திருடன் இவரைக் கண்டவுடன் பயந்து விட்டான். அவன் காவலர்களிடம், இவர் ஆச்சரியமான சக்திகள்கொண்ட ஒரு சூனியக்காரி என்றும், மறுபடியும் அவரிடம்தான் வாலாட்ட விரும்பவில்லை என்றும் சொல்லி இருக்கிறான்.

இந்த மாலை ஒரு உயிர்ப்பான பொருளால் தயாரிக்கப்பட்டது.

ருத்ராக்ஷம் - எனப்படும் இந்த விதைகள் நேபாளம், இந்தோனேஷியாவில் வளரும் ஒரு வகை மரத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த விதைகளைக் கோர்த்து ருத்ராக்ஷ மாலைகளாகத் தருகிறார்கள். ருத்ராக்ஷ- என்றால்

ருத்ராக்ஷ மாலை

ருத்ரனின் அதாவது சிவனின் ஆனந்த கண்ணீர்த்துளி என்றுபொருள். இந்த விதைகள் காலம் காலமாக இந்தியாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் மிகவும் புனிதமானவையாகவும் நோய் தீர்ப்பனவையாகவும் கருதப்படுகின்றன.

ரக்த சந்தன மாலை என மற்றொரு வகையான
மாலையும் உள்ளது. இவையிரண்டுமே
உங்கள்ின் உடலுக்கும் மனத்திற்கும்
சக்தியூட்டக்கூடியவை. குறிப்பாக ஒரு
ஜ்ஞான ஸத்குருவின் கைகளில் இருந்து
பெறப்படும்பொழுது, அவை மேலும்
சிறப்புவாய்ந்தவையாகின்றன.

அவை உங்களது தொண்டை மற்றும் இருதய சக்தி மையங்களில், அதாவது விசுத்தி மற்றும் அநாஹத சக்ரங்களில் வேலை செய்கின்றன. அப்படியென்றால் அது உங்களது தைராய்டு மற்றும் தைமஸ் சுரப்பிகளின் மீது வேலை செய்கின்றன. உங்களது உடல் மன வளர்ச்சி யையும் நோய் எதிர்ப்புத்திறனையும் அதிகப்படுத்துகின்றன.

நீங்கள்
முக்தியடைவதற்கும்
விழிப்புணர்வடைவதற்கும்
உங்களுக்கென்று,
ஒரு பாதை
இருக்கிறது.

சமீப காலமாக நான் சக்தியூட்டப்பட்ட தாமிரக் காப்புகளையும் பாதுகாப்பிற்காகக் கொடுக்கிறேன். இவைகூட உங்களது உடல், மனம், உணர்வுகளின் பாதுகாப்பிற்காகத்தான்.

நன்றாகச் சுத்திகரிக்கப்பட்ட தாமிரம் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற குறைகள் உள்ளவர்களுக்கு நல்லது.

காலப்போக்கில், இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவை அனைத்தும் வேத கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்த, இயற்கையாகவே விஞ்ஞானத்தை அடிப்படையாகக்கொண்ட ஸத்யங்கள்.

A beaded necklace with a pendant looped around a smooth stone

நீங்கள் சமய வழிபாட்டு முறையைப் பற்றிச் சொன்னீர்கள். சமயப் பிரிவினர் ஆசையாலும் அச்சத்தாலும் வழிநடத்தப்படுவார்கள். அவர்கள் மற்ற பிரிவினருக்கு மாற்றாகத் தங்களை சொல்லிக் கொண்டாலும் சமயவழிபாடு அவர்களையே கட்டுண்டு இருக்கச் செய்து விடுகிறது.

எங்கள் ஆச்ரமங்களில் என் உருவம் வழிபடப்பட்டாலும் எங்கள் பீடத்தைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என்றால், எல்லா நிலையிலும் உருவ வழிபாட்டில் இருந்து உருவமில்லாததற்குச் செல்ல கடுமையான உத்தரவு இருப்பதைக் காண்பீர்கள்.

எங்களது எல்லா நுட்பங்களும் போதனைகளும் உருவமில்லாததை அடிப்படையாகக்கொண்டே இருக்கிறது. மக்கள் உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் சுதந்திரம் இருக்கிறது.

உங்கள் பயணத்தின் முதல் படியாக இந்த உருவம் உதவுகிறது. நான் எப்போதும் மக்களுக்குச் சொல்வதுண்டு, “நீங்கள் ஆச்ரமத்தின் கதவுகளைக் கடந்து உள்ளே வந்து விட்டால் நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். என்னை விட்டுச் செல்ல நினைத்தீர்களானால், எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் வெளியே போவதற்கான சுதந்திரமும் இருக்கிறது.”

நீங்கள் என் ஆசிகளுடன் வெளியில் செல்வீர்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த ஆச்ரமத்தை விட்டு வெளியே சென்றவர்களிடம் கேட்டீர்களானால், அவர்கள் இதைப் பற்றி உங்களுக்குச் சொல்வார்கள். அவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் என்னைப் பார்ப்பதற்கு ஆனந்தத்துடன் வருவார்கள்.

இது, ஒரு சமய வழிபாட்டு முறையில் நடக்க முடியாதது; அங்கு உங்கள் கை, கால்கள் கட்டப்பட்டு விடும், நீங்கள் பிணைக்கப்பட்டு இருப்பீர்கள்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. நீங்கள் முக்தியடைவதற்கும் விழிப்புணர்வடைவதற்கும் உங்களுக்கென்று ஒரு பாதை இருக்கிறது.

யார் ஒருவர் விடுதலை அடைய, ஜீவன் முக்தி அடைய விரும்பி அவருடைய பாதையில் என்னை நாடுகிறாரோ, அவருடைய பாதையில் நான் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறேன், நான் அவருக்காக இருக்கிறேன். சில சமயங்களில், விஷயங்கள் வேறுவிதமாகப் போவதும் உண்டு. நான் உங்களது குருவாக இருந்தாலும் இது சரியான நேரமாக இல்லாமல் இருக்குமானால், நீங்கள் என்னைவிட்டு விலகிப் போகிறீர்கள். நான் நடப்பதை வருத்தத்துடன் பார்க்கிறேன். ஏனென்றால் உங்களது 'ஜீவன்' முக்தி பெற ஏங்குகிறது என்று எனக்குத் தெரியும்.

என்னை விட்டு நீங்கள் விலகிப் போகும்பொழுது, உங்களது ஜீவன், தம் ஆதாரத்தையே விட்டு விலகிச் செல்வதுபோல் துக்கப்படுகிறது.

அது, உடலை விட்டுப் பிரியும் ஜீவன் துக்கப்படுவதுபோல் துக்கப்படுகிறது. ஆனால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

உங்கள் மாற்றம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

மேல்நாட்டு மக்கள் பலரும் ஆச்'ரமத்திற்கு வருகிறார்கள். என் போதனைகள் சா'ஸ்த்ரங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது என்பதனை நன்கு அறிந்த இந்தியர்களும் ஹிந்துக்களுமே அவற்றை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் தயங்கும்பொழுது, மேலை நாட்டு மக்கள் ஏன் அவ்வளவு தொலைவிலிருந்து வர வேண்டும்?

மேலை நாட்டவர்கள் எதையும் எளிதில் நம்பக்கூடியவர்கள் என்பதனால் அல்ல. அவர்கள் வருகிறார்கள், ஏனென்றால் இங்கே ஒரு தொடர்பு இருக்கிறது; ஒரு ஆன்மீகத் தொடர்பு அவர்களை இங்கு அழைத்துக்கொண்டு வருகிறது.

அவர்களை முழுமையாக்கி, திருப்திப்படுத்தி முக்தியளிக்க நான் இங்கு இருக்கிறேன். அதனால் அவர்கள் இன்னொரு பிறவி எடுத்துத் துன்பப்படத் தேவையில்லை.

இங்கு ஒரு வருடம் தங்கி வேத கலாச்சாரத்தைக் கற்க விரும்புபவர்களுக்கு நாங்கள் இலவசமாகத் தங்கும் இடம், உணவு மற்றும் அனைத்து வசதிகளையும் அளிக்கிறோம்.

இது உங்களுக்குச் சரிபட்டு வரவில்லை என்றால், நீங்கள் வெளியில் செல்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

நான் உங்களுக்குப் போதிப்பதெல்லாம், யாருடைய வார்த்தைகளையும் நம்பாமல், ஏன் எனது வார்த்தைகளைக்கூட நம்பாமல், நீங்களே ஸத்யத்தை உணர வேண்டும் என்பதே.

நீங்களே ஸத்யத்தை உணரும்பொழுது அது உங்களது ஆகிறது. அந்த ஸத்யமே உங்களுக்கு முக்தி அளிக்க முடியும். அதை யாரும் உங்களிடம் இருந்து எடுத்துச் செல்ல முடியாது.

Krishna's hands playing flute
Sri Krishna