KAILASA Library/பகவத்கீதை/அஹங்காரத்திற்குத் தேவை ஆதரவே!Sign in
பகவத்கீதை

அஹங்காரத்திற்குத் தேவை ஆதரவே!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1.8 போரில் வெற்றியை மட்டுமே காணும் தாங்கள் மற்றும் பீஷ்மர், கர்ணன், கிருபர் போன்றவர்கள் இருக்கிறீர்கள். மேலும் அஸ்வத்தாமன், விகர்ணா, ஸோமதத்தரின் மகன் இவர்கள்கூட எப்போதும் போரில் வெற்றியடைபவர்கள்தான்.

1.9 இங்கே இருக்கும் வீரர்களில் பலர் என் நலனுக்காக உயிரையும் தருவார்கள். என் பொருட்டு எதையும் செய்வார்கள். அவர்கள் போர்க்கலையில் வல்லவர்கள், ஆயுதங்கள் பலவும் செலுத்தவல்லவர்கள்.

1.10 பீஷ்மமால் காக்கப்படும் நமது படை யாராலும் வெல்ல முடியாததாக இருக்கிறது. ஆனால் பீமனால் காக்கப்படும் அவர்களது படை வெல்லக்கூடியதாக இருக்கிறது.

1.11 நீங்கள் அனைவரும் அவரவர்கள் படை பிரிவுகள் இருக்கும் இடத்திலிருந்து கொண்டு, பாட்டனார் பீஷ்மரைக் காத்திடுங்கள்.

1.12 துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவகையில் குரு குலத்தின் பாட்டனரான வல்லமை மிக்க பீஷ்மர் சிங்கம் போன்று கர்ஜித்து விட்டு, தம்முடைய சங்கை முழுங்கினார்.

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கதாபாத்திரங்கள்

இயல்பிலேயே துரியோதனன் கோழை குணமுடையவராகவும் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவராகவும் பலரின் கவனத்திற்காக ஏங்குபவராகவும் இருந்தார். அவர் செய்கிற செயல்கள், எண்ணுகிற எண்ணங்கள் எல்லாவற்றிற்கும் எல்லோரின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் எதிர்ப்பார்ப்பவராகவும் இருந்தார்.

அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் அவரைவிடவும் அவரது சகோதரர்களைவிடவும் சிறந்தவர்கள், வல்லவர்கள் என்ற காரணங்களினாலேயே அவர் தொடர்ந்து பயத்திற்குள்ளானார்.

முக்கியமாக, தன்னைவிட பலத்திலும் நுட்பங்களிலும் வலிமையானவர்களாக விளங்கிய அர்ஜுனனிடத்திலும் பீமனிடத்திலும் அதிக பயம்கொண்டவராக இருந்தார்.

காலங்காலமாக இருந்துவந்த கொடுங்கோலர்களைப் போன்றே, துரியோதனனும் தன்னைவிட அதிக பலம்வாய்ந்த பாண்டவர்கள் தம்மை வீழ்த்தி விடுவார்கள் என்றே பயந்தார்.

> ஆதரவில்லாமல்
> அஹங்காரம்
> செயல்படாது.
> ஆதரவு அளிப்பதை
> நிறுத்துங்கள்.
> அஹங்காரம்
> அழியத்தொடங்கும்.

துரியோதனன் நெருங்கிய நண்பர்களால்
சூழப்பட்டிருக்கும்பொழுது மட்டுமே
மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தார். அவரது
சேனை அவரைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கிறது
என்ற உணர்வினாலும் அவரது குலத்தினர்
அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்
என்ற உணர்வினாலும்தான் அவருக்குப்
பலமும், தைரியமும், போரிடும் ஆற்றலுமே
எழுந்தது.

அவரிடம் நல்ல குணங்களும் இருந்தன.
அவர் எல்லை கடந்த, தன்னலமற்ற,
பெருந் தன்மையுள்ள நண்பராக இருந்தார்.

தான் நம்பும் ஒருவருக்குத் தம்மிடம்
இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கும்
இயல்புடையவராக இருந்தார்.

இந்த உயர்ந்த குணங்கள்தான்
வலிமைவாய்ந்த கர்ணன் போன்ற வீரர்களை
அவர் பால் ஈர்த்தன. இதனால் அவர்கள்
தங்களுடைய உயிரையே கொடுக்கும்
அளவுக்கு துரியோதனனிடம் மிகுந்த
விசுவாசமாகவே இருந்தார்கள்.

> நேர்மறை மற்றும்
> எதிர்மறை
> எண்ணங்களின்
> கலவைதான்
> மனித மனம்.

துரியோதனனுக்கு அளவில்லா நன்றியுணர்வை உறுதி செய்த மாவீரர் கர்ணன். அர்ஜுனன் தமது சொந்த தம்பிதான் என்பதை அறிந்த பிறகும்கூட, அர்ஜுனனைக் கொல்வதாக துரியோதனனுக்குக் கொடுத்த தமது உறுதிமொழியிலிருந்து கொஞ்சம்கூட பின்வாங்கவில்லை. அவர், தம் தாய் குந்தியிடம் போருக்குப் பின்னரும்கூட, அவர் ஐந்து மகன்களுக்குத் தாயாக இருப்பார் என்று சொன்னார். இதன் மூலம் தானோ அல்லது அர்ஜுனனோ போரில் உயிரிழப்பது உறுதி என்பதைக் குறிப்பாகத் தெரிவித்தார். அந்த அளவுக்கு நன்றியுணர்வை தம் நண்பர்களிடம் ஏற்படுத்தியிருந்தார் துரியோதனன்.

துரியோதனன் தனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த மாவீரர்கள் தம் பக்கம் இருப்பதை, மிகத் தெளிவாக உணர்ந்தார். அதைப் பெருமையோடு எல்லோருக்கும் அறிவித்தார். துரியோதனன் ஒழுக்கமற்று நடந்து கொள்வது அந்த வீரர்களுக்குத் தெரிந்தே இருந்தாலும் அவர்கள் அவரிடம் கொடுத்த வாக்குறுதியின் காரணத்தால், அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

அடுத்ததாக, துரியோதனன் தமது மனத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் 'தளபதி பீஷ்மரால் வழி நடத்தப்பட்ட கௌரவ சேனை' மிகவும் வலிமை வாய்ந்தாக இருக்கிறது என்று பெருமிதப்பட்டார்.

பீமனால் வழி நடத்தப்படும் பாண்டவ சேனை சிறியதாகவும் வலிமை குறைந்தாகவும் இருக்கிறது என்றும் மகிழ்ந்தார்.

துரியோதனன், பீஷ்மரைப் பற்றிப் பேசும்பொழுது பீமனையும் அவருடன் இணைத்துக் குறிப்பிட்டது, அவருடைய பய உணர்வையே காட்டுகிறது.

திரௌபதிக்கு இழைக்கப்பட்ட
அவமானத்திற்குப் பழிவாங்கும்விதமாக,
துரியோதனனின் தொடையைப்
பிளந்து, இரத்தம் குடிப்பதாகப் பீமன்
செய்த சபதத்தின் விளைவாக எழுந்த
பயமே அது. அந்தச் சபதம் நிச்சயம்
பீமனால் நிறைவேற்றப்படும் என்று
துரியோதனன் அவரது மனத்தின்
ஆழத்தில் அறிந்திருந்தார். ‘பீஷ்மரால்
கொடுக்கப்படும் பாதுகாப்பு மட்டுமே
அதைத் தடுக்கும் சக்திவாய்ந்தது’
என்றும் அறிந்திருந்தார்.

Draupadi Vastraharan

அடுத்ததாக துரியோதனன் கௌரவ சேனையைப் பார்த்து, அவர்கள் எல்லோரும் தளபதி பீஷ்மருக்கு பக்க பலமாயிருந்து போர்புரிய வேண்டும் என்று அவர்களை உற்சாகமூட்டினார். அதற்குப் பதிலளிக்கும்விதமாக, பீஷ்மர் அவரது சங்கை எடுத்து, ஒரு சிங்கம் கர்ஜனை செய்வது போன்று முழக்கி, துரியோதனனை மகிழ்வித்தார்.

பீஷ்மரே கௌரவர்களின் தலைமை படைத்தளபதி என்பதையும், அவருக்குக் கட்டுப்பட்டே மொத்தக் கௌரவப் படையும் செயல்படும் என்பதையும் பீஷ்மருக்குத் துரியோதனன் உறுதிபடுத்த விரும்பினார்.

துரியோதனன் இதுவரை பீஷ்மர் பாண்டவர்களின் சார்பாக பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறார் என்று பீஷ்மருக்கு வெளிப்படையாகவே உணர்த்தி வந்திருக்கிறார்.

இக்கால நிர்வாகிகள்
பலரைப்போலவே,
துரியோதனனும்
அதிகார ஒப்படைப்பு
மூலமாக, பகிர்தல்
மூலமாக,
பொறுப்பைக் கழித்து
விட்டார்.

ஆனால் இப்பொழுதோ, அனைத்திற்கும்
ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டது. பீஷ்மர் மஹா
வீரர், இரு சேனைகளிலும் முதன்மையான
மஹாவீரர், அவர் கௌரவ சேனையை வழி
நடத்துகிறார்.

பீஷ்மரைக் குறித்த தமது கடந்தகாலச் செயல்பாடுகள், அங்கே கூடியிருக்கும் தமது படைவீரர்களின் மனத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்று விரும்புகிறார்.

துரியோதனனுக்கு வேறு எந்த வழியும்
இல்லை. பீஷ்மரும் துரோணரும்
தங்களுடைய வலிமையான கடமை
உணர்வினால் மட்டும் கட்டுப்படுத்தப்படாமல்
இருந்திருந்தார்களேயானால், அவர்கள்
கிருஷ்ணருடன் பாண்டவர்கள் பக்கம்
போயிருப்பார்கள். இது துரியோதனனுக்கு
நன்றாகவே தெரிந்திருந்ததால்தான்,
அவர்களை எதிர்த்தோ அல்லது அவர்களுக்கு
மாறாகவோ அவரால் செயல்பட
முடியவில்லை.

பீஷ்மர், பாண்டவ கௌரவ குலங்களின் மிக மேலான குடும்பத் தலைவராக இருக்கிறவர். 'தேவ விரதன்' என்ற பெயருடன் கங்கைக்குப் பிறந்தவர்.

கங்கைக்குப் பிறந்த எட்டுக் குழந்தைகளில் இவர் மட்டுமே உயிருடனிருந்தார். அவரது தந்தை ஸந்தனு, ஸத்யவதி என்னும் மீனவக் குடும்பத்துப் பெண்ணை விரும்பியபொழுது, தாம் எப்பொழுதுமே திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், தம் சிற்றன்னையான ஸத்யவதியின் பிள்ளைகளே தம் தந்தைக்குப் பின் அந்த அரியணைக்கு உரிமை உடையவர்கள் என்றும் ஒரு சபதத்தைச் செய்தார். ஸத்யவதி - பாண்டு, திருதராஷ்டிரர் இருவரின் பாட்டியாவார்.

பீஷ்மரது புத்திசாலித்தனம், விவேகம், மதிநுட்பம், வீரம் இவற்றிற்காக அவர் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டார். புத்திமான்களான பீஷ்மரும் துரோணரும்கூட, துரியோதனன் நீதி நெறிகளுக்கு எதிராகச் செல்கிறார் என்று தெரிந்தபிறகும் துரியோதனன் பக்கமிருந்து போரிட சம்மதித்தார்கள்! மஹாபாரதத்தில் இருக்கும் பல புரியாத, முரண்பட்ட கருத்துகளில் இதுவும் ஒன்று.

Hands playing flute

இறை நிலைக்கே உயர்த்திவிடும் தெய்வீக குணம்

எப்படிப் பார்த்தாலும் மிக உயர்வான ஆன்மீகக் கருத்துப்படி ‘சரி, தவறு’ என்ற நீதி நெறிகள் எதுவும் இல்லை. எல்லாமே சமம்தான். பீஷ்மரும் துரோணரும் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் வேதங்களின் உண்மைகளைக் கற்றறிந்தவர்கள். கிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

கிருஷ்ணர் பாண்டவர்களுடன் இருப்பதிலிருந்தே, போரின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள். மிகச்சிறந்த வீரர்களான அவர்களுக்குத் தங்களது மரணத்தைப் பற்றிய அச்சம் இல்லை. மிக முக்கியமாக, அவர்கள் ஏற்றுக்கொண்ட செயல்களைக் குறித்து அவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.

பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார்,
இவர்கள் தங்களின் விழிப்புணர்வையே
நம்பியிருந்தார்கள். துரியோதனன்தான்
அவர்களது இளவரசர். அவர்கள் அவருக்குக்
கடமைப்பட்டவர்கள். போரின் முடிவைப்
பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
அதனால் பாதிக்கப்படவில்லை.

போரில் துரியோதனன் அழியப்போவது உறுதி என்பதையும், அவருடன் சேர்ந்து தாங்களும் அழியப்போவது உறுதி என்பதையும் அறிந்தே அவர்கள் துரியோதனனின் பக்கம் இருந்தார்கள்.

உண்மையில், ஒருமுறை போரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பீஷ்மரால் பாண்டவர்கள் நிலை குலைவதையும், அர்ஜுனன் பீஷ்மரிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதையும் கண்டு பெருங்கோபம் கொண்டார் கிருஷ்ணர். உடனே அர்ஜுனனிடம்,“பீஷ்மரை நானே கொல்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டே அர்ஜுனனின் இரதத்தை விட்டுக் கீழிறங்கி, கையில் ஸுதர்சந சக்ரத்தை ஏந்திக்கொண்டு பீஷ்மரை நோக்கி, பயமுறுத்தும்விதமாகச் சென்றார்.

தெய்விக ஆயுதமான ஸுதர்சந சக்ரம் விரலில் சுழல கிருஷ்ணர் வருவதைக்

கண்ட பீஷ்மர் உடனே ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு, இரு கைகளையும் கூப்பி, "கிருஷ்ணா! உங்கள் கையால் மடிவது என்பது எனக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமே!" என்று சொல்லிப் பிரார்த்தனை உணர்வோடு வணங்கினார்.

போர்க்களத்தில் மடிவது என்பது ஒரு க்ஷத்ரியனின் கடமையாகவே கருதப்பட்டது. அதனால் இந்த மஹாவீரர்களும் தங்களது மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், போர்க்களத்தில் வீரமரணம் அடைவதை தங்களது கடமையாகவே கருதினார்கள். நிகழ்காலத்திலேயே, முழு விழிப்புணர்வுடன் ஆழ்ந்து, தமது கடமைகளை நிறைவேற்றுவதே அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

துரியோதனனது நோக்கம் பற்றியோ, அதன் நீதி நெறிகளைப் பற்றியோ அவர்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை. அது அவர்களது நோக்கமாயிருக்கவில்லை. அவர்களது விழிப்புணர்வு, சமுதாயக் கோட்பாடுகளிலும் சமயக் கோட்பாடுகளிலும் விதிக்கப்பட்டிருக்கும் சரி தவறுகளைக் கடந்ததாக இருந்தது.

அவர்கள், அரசவையில் பாண்டவ
இளவரசர்களையும் திரௌபதியையும்
துரியோதனன் அவமானப்படுத்தியதை
ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதைத்
தடுத்துநிறுத்தவும் இல்லை.

> நிகழ்காலத்திலேயே,
> முழு விழிப்புணர்வுடன்
> ஆழ்ந்து,
> நமது கடமைகளை
> நிறைவேற்றுவதே
> மிகவும்
> முக்கியமானது.

துரியோதனனால் தூண்டப்பட்ட இந்தப் போரை, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எதிர்ப்பே தெரிவித்தார்கள். இருந்தபோதிலும், துரியோதனனின் பக்கமிருந்தே சண்டையிட்டார்கள். தங்களை எதிர்கொண்டு வரும் பேரழிவை அவர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள்.

இது முட்டாள்தனமானதோ அல்லது பொறுத்துக்கொண்டதாகவோ ஆகாது. அவர்கள், தவிர்க்க இயலாத நிகழ்விற்குச் சரணடைதல், தெய்விகத்திடம் சரணடைதல் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இந்த மேன்மை மிக்க குருமார்கள், அவர்களுடைய உள்ளுணர்வு நிலையில், பிரபஞ்ச இருப்புத் தன்மையை அதனது வழியில் செல்ல அனுமதித்தார்கள்.

தாங்களும் அதன் அலைகளால்
அடித்துச் செல்லப்படுவதையும் அறிந்தே
அனுமதித்தார்கள். தளர்வாகவும்
பதற்றமில்லாமலும் நடப்பவற்றை அப்படியே
நடக்க அனுமதிப்பது பரிணாம வளர்ச்சி
பெற்ற ஆத்மாவின் அடையாளம்.

சாමාන්ய மனிதர்களுக்கு யோசிக்கவும் தேர்வு செய்யவும் அதன்படி செயல்படவும் சுதந்திரம் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் தங்களது விதியைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக எண்ணுகிறார்கள். அவர்களுடைய கருத்துப் படி, அவர்களாகவே அவர்களது தீர்மானங்களை எடுப்பதாகவும் அதன்படி செயல்படுவதாகவும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் அவர்களது விழிப்புணர்வற்ற மனத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களும் எண்ணப்பதிவுகளும் அவர்களது நம்பிக்கைகளும் அவர்கள் மதிக்கும் வாழ்க்கை முறைகளும்தான் அவர்களை அப்படிப்பட்ட தீர்மானங்களை எடுக்கச் செய்து, அவர்களை அப்படி நடத்திச் செல்கின்றன.

ஸம்ஸ்காரங்கள், அவர்களைச் செயல் புரியத் தூண்டும்பொழுது, அங்கே ஒரு சுழற்சி உருவாக்கப்படுகிறது. முதலில் ஸம்ஸ்காரங்கள் ஒருவரை செயல் புரியத் தூண்டுகின்றன. அந்தச் செயல்கள் ஒருவித மன அமைப்பை அவர்களுக்குள் உருவாக்குகிறது; அந்த மன அமைப்பு மீண்டும் அந்த ஸம்ஸ்காரங்களையே உறுதிப்படுத்துகின்றன. ஸம்ஸ்காரங்கள், → செயல்கள், → மன அமைப்பு → மீண்டும் ஸம்ஸ்காரங்கள் என்ற இந்தச் சுழற்சிக்குள் மாட்டிகinternal மாட்டிக்கொள்கிறோம். இருந்தபோதிலும், ஒவ்வொரு மனிதனும் இந்தச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் சுதந்திரமாக வாழும் வழியைத் தேர்வு செய்ய முடியும்.

இயற்கையை நாம் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம். இயற்கையினுடனான நமது முரண்பாடே, நம்மைத் துன்பத்திற்கு அழைத்துச் செல்கிறது.

பெரும்பாலான சமயங்களில், நாம் நமது உள்ளுணர்ச்சியினாலும்

ஸம்ஸ்காரங்கள் நிறைந்திருக்கும்
விழிப்புணர்வற்ற பகுதியாலும்
தூண்டப்பட்டும்தான் நமது செயல்களைச்
செய்கிறோம். ஆனால் நாம் நமது
புத்திசாலித்தனத்தால் தூண்டப்பட்டுச்
செயல்படுவதாக நம்புகிறோம்.

இயற்கையை
எதிர்க்கும்பொழுது,
நாம்
துன்புறுகிறோம்.

விழிப்புணர்வற்ற மனம் மிக வேகமாகச்
செயல்படும். விழிப்புணர்வு உள்ள
மனத்தைக் காட்டிலும் விழிப்புணர்வற்ற
மனத்தில் மிக அதிகமான விவரங்கள்
அடங்கியுள்ளன. விழிப்புணர்வற்ற மனம்,
விழிப்புணர்வோடு இருக்கும் மனத்தைவிட
மிக வேகமாகவும் மிக அதிக விவரங்களையும்
சேகரிக்கக்கூடியது.

உதாரணத்திற்கு விழிப்புணர்வற்ற மனத்தால் 60 மில்லியன் (6 கோடி) படங்களை மிகக் குறைந்த காலத்தில் சேமித்தும், பகுத்தாயவும் முடியுமானால், விழிப்புணர்வு உள்ள மனத்தால் அதே கால நேரத்தில், அதிகபட்சமாக 60 படங்களை மட்டுமே கையாள முடியும்.

விழிப்புணர்வற்ற மனம்தான் அதி வேகமாகச் செயல்புரியும் வகையில் இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வாழ்வா சாவா என்கிற பிரச்சினைகளை எதிர்நோக்கும்பொழுது செயல்படுவதற்காக அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த வகையான செயல்முறைத் திட்டம்தான், சாதாரண உலகியல் பிரச்சினைகளுக்கும்கூடப் பயன்படுத்தப்படுகிறது. நாம் இந்தச் செயல்முறைத் திட்டத்தை அன்றாட நடைமுறை பிரச்சினைகளுக்கும்கூட பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உங்களின் மாற்றம், உலகையே உயர்த்தீடும்!

தாவோயிசத்தில் சொல்வார்கள், “நாம் ஆற்றோரம் காணப்படும் நாணலைப்போல இயற்கையுடன் இணைந்து நடக்கக் கற்றுக்கொண்டோமானால், நாம் எப்பொழுதுமே சரியானவற்றை மட்டுமே செய்வோம். இயற்கையை எதிர்க்கும்போதும், நமது விருப்பங்களுக்குள் அதைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்யும்போதும்தான் நாம் துன்புறுகிறோம்.”

வாழ்க்கையை இரு வழிகளில் வாழலாம். முதலாவது, உலகையும் வாழ்வையும் உள்ளது உள்ளவாறே ஏற்றுக் கொள்வது. இதை ஸம்ஸ்க்ரு'தத்தில் ஸ்ரு'ஷ்டி த்ரு'ஷ்டி என்று சொல்கிறோம். மற்றொன்று, சுற்றுப்புற சூழ்நிலைகளை நமது கருத்துப்படி வளர்ச்சியடையச் செய்ய முயற்சிப்பது. இதை த்ரு'ஷ்டி ஸ்ரு'ஷ்டி என்று சொல்கிறோம்.

ஒரு ஞானி
வாய்ப்புகளைத்
தேர்ந்தெடுக்கும்
நிலையைக் கடந்தவர்.

முதலாவதான ஏற்றுக்கொள்ளும்
வழிமுறை மகிழ்ச்சியையும்,
இரண்டாவதான எதிர்க்கும் மனப்பாங்கு
துக்கத்தையும்கொண்டு வருகிறது.

யாருமே உலகைத் தங்கள் கருத்துப்படி மாற்றியமைக்க முடியாது. இது தோல்விகளை எதிர்க்கும் நமது மனப்பான்மைக்குத் தண்டனை அளிக்கக்கூடிய ஒரு பயிற்சியாகவே இருக்கிறது.

நம் வாழ்வில், நமது வாழ்க்கைத் துணையின் மன அமைப்பையோ அல்லது அடுத்த வீட்டுக்காரரின் மன அமைப்பையோ மாற்ற முடியாது.

அதிகபட்சமாக, நாம் நம்மை மாற்றிக்கொள்ள முடியும். அவ்வளவுதான்.

உங்களை இறைசக்தியே அணைத்துக்கொள்ளும்!

இந்த உலகைப் புரட்சியால் மாற்றலாம் என்கிற புரட்சிகரமான வாதங்கள் எல்லாம் எதற்கும் உதவாத வீண்பேச்சே. இதுவரை எந்த ஒரு புரட்சியும் சொல்லத் தக்க வகையில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி பெற்றதில்லை.

சர்வாதிகாரத்திற்கு எதிராகப் புரட்சி செய்த புரட்சியாளர்கள் எல்லோரும் தாங்களும் சர்வாதிகாரிகளாகவே ஆகி விடுகிறார்கள். அதுதான் எப்பொழுதுமே நடக்கிற சரித்திரமாக இருக்கிறது.

ஆனால் ஒரு ஞானமடைந்த குருவுக்கு அப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் இல்லை. அவர், தெய்விகம், ப்ரபஞ்ச ச'க்தி, பராச'க்தி வெளிப்படுவதற்குரிய நம்பிக்கைக்குரிய ஒரு வாய்க்காலாக, ஒரு வழியாக இருக்கிறார்.

அவரது ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு அசைவும் தெய்விகத்தின் தூண்டுதலால், கட்டளையால் நடைபெறுகிறது.

ஒரு ஞானி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் நிலையைக் கடந்தவர், விருப்பங்களைக் கடந்தவர்.

ஒரு ஞானமடைந்த குரு, தெய்விகத்திடம் முழு சரணாகதி அடைந்த நிலையில் இருக்கிறார்.

சாதாரண மனிதர்களை அள விடுவதற்கு நாம் பயன்படுத்தும் கருத்துக்களைக்கொண்டு, நாம் ஞானிகளின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் அளவிட முடியாது.

அவர்களது செயல்பாடுகள் அனைத்துமே மனமற்ற நிலையிலும், நிகழ்காலத்திலேயே தொடர்ந்து இருக்கும் எண்ணங்களற்ற நிலையிலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையிலும், கடந்தகாலத்தில் நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய வருத்தங்கள் இல்லாத நிலையிலும் செய்யப்படுகின்றன.

ஞானிகளின் செய்கைகளை சமுதாயத்தின் சட்ட திட்டங்களையும் கோட்பாடுகளையும் கொண்டு ஒப்புநோக்கினால், அவை நீதிக்குப் புறம்பானதாகத் தோன்றும். இல்லையென்றால் குறைந்த பட்சம், அது வினோதமாகவாவது தோன்றும். ஆனால் அவர்கள் சமுதாயத்தைக் கடந்தவர்கள்.

பீஷ்மர், கங்கையின் மைந்தர். தெய்விகத்திலிருந்து உருவானவர், எத்தனை காலம் வாழ விருப்பமோ அத்தனை காலம் வாழவும், எப்பொழுது இறக்க விருப்பமோ அப்பொழுது இறக்கவும் அவர் வரம் பெற்றிருந்தார். அவரது நேர்மையும் ஒழுக்கமும் நன்னடத்தையுமே அவர் வாழ்ந்த காலத்தில் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்குமான அளவு கோலாக இருந்தது.

இருந்தபோதிலும், திரௌபதி
துகிலுரியப்பட்டு அவமானமடைய
நேர்ந்தபொழுது, அவர் அமைதியாக
இருந்தார்.

சில சமயங்களில்
ஞானிகளின்
செய்கைகள்
நீதிக்குப்
புறம்பானதாகவும்
வினோதமாகவும்கூட
இருக்கும். அவர்கள்
சமுதாயத்தைக்
கடந்தவர்கள்.

துரியோதனன் பாண்டவர்களுக்கு ஒரு சிறு துண்டு நிலப் பகுதியும் தர மறுத்தபோதும் அவர் செயல்படவில்லை. அவர், துரியோதனனுக்காகப் போரிட முடிவு செய்தார்.

துரியோதனன் அவரிடம், கௌரவ சேனையை வழி நடத்தித்தருமாறு கேட்டபொழுது, பாண்டவ இளவரசர்களும் துரியோதனனைப்போலவே அவருக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றும், பாண்டவர்கள் சேனையை எதிர்த்துப் போர் செய்தாலும் பாண்டவர்களது உயிரை அவர் மாய்க்க முடியாது என்றும் சொல்லிவிட்டார். பீஷ்மர், இந்த நிபந்தனையுடன்தான் துரியோதனனுக்காகப் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடச் சம்மதித்தார்.

பீஷ்மர், துரியோதனனுக்குப் பலமுறை அறிவுரை சொல்லியுள்ளார். துரியோதனன் பாண்டவர்களுக்கு எதிராக ஏதாவது சூழ்ச்சி செய்யும்போதெல்லாம், அவரது தவறான செய்கைகளைக் கண்டித்துள்ளார்.

பீஷ்மர், தமது செய்கைகளை எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பதை துரியோதனன் உணர்ந்திருந்தார்.

ஆனாலும் இப்பொழுது பீஷ்மருக்குத் துரியோதனனது தீய செயல்களால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்பைவிட, அவர் மீது கொண்ட கருணை அதிகமாக இருந்தது. துரியோதனனின் மனத்தில் உள்ள நம்பிக்கையிழந்த பய உணர்வுகளை பீஷ்மர் நன்கு புரிந்திருந்தார். அவருக்குத் தைரிய மூட்டவேண்டிய தேவையையும் உணர்ந்தார்.

துரியோதனனின் மிகையான சொற்களுக்குப் பதிலாக, பீஷ்மர் தமது சங்கை எடுத்து ஊதினார். அது, துரியோதனன் சொன்னதை ஆமோதித்து, அவருக்குத் தெம்பூட்டும்விதமாக இருந்தது.

பீஷ்மரின் சங்கு நாதம் ஒரு சிங்கத்தின்
கர்ஜனையைப்போல இருந்தது என்று
ஸஞ்ஜயன் சொல்கிறார். அது, அந்தப்
போர்க்களத்தில் குழுமியிருந்தவர்களிலேயே
மிகவும் வயதானவரும் மிகச்சிறந்த
வீரருமான பீஷ்மரிடமிருந்து வந்தது.
அது கௌரவ இளவரசருக்கு ஆதரவு
தருவதாகவும் பீஷ்மரின் ஆதரவு
துரியோதனனுக்கு முழுவதுமாக இருப்பதைத்
தெரிவிப்பதாகவும் உறுதிப்படுத்துவதாகவும்
போர் தொடங்கியதற்கான அறிகுறியாகவும்
இருந்தது.

நம் தர்க்க அறிவுக்குத்
தெரிந்த எந்த
நிபந்தனைகளையும்
இயற்கை,
ஏற்றுக்கொள்வதே
இல்லை.

பீஷ்மரின் சங்கு, கொண்டாட்டத்திற்குரிய வெற்றியை மட்டுமே விரும்பும் ஒரு அடையாளச் சின்னமாக இருந்தது.

கேள்வி: ஸ்வாமிஜி, நாம் செய்யும் செயல்களில் சரி என்றும் தவறு என்றும் எதுவுமே இல்லை என்று எப்படி இருக்க முடியும்? அப்படியானால் நாம் விரும்பிய எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் செய்யலாமா?

சமுதாயப் பொறுப்பை மீறும் அளவுக்கு
சக்திவாய்ந்த ஒருவர் பின் விளைவுகளைப்
பற்றிய பயம் இல்லாமல் இருக்கலாமா?

இயற்கை,
நமது
சமுதாயம் விதிக்கும்
‘சரி, தவறு’ பற்றிய
விதிமுறைகளைக்
கடைப்பிடிப்பது
இல்லை.

ஆன்மீகத்தின் உச்ச நிலையில், இருப்புத் தன்மையின் நிலையில், சரி என்பதும் தவறு என்பதும் நாம் நினைப்பதுபோல நிகழ்வதில்லை. இயற்கை, நமது சமுதாயம் விதிக்கும் ‘சரி, தவறு’ பற்றிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை.

இதனால்தான், இயற்கைச் சீரழிவுகளில் ஆயிரக்கணக்கானோர் அழிக்கப்படும்போதும், சின்னச் சின்ன குழந்தைகள் விபத்துக்களில் இறக்கும்போதும் பெரும்பாலும் நாம் இறைவன் மீது கோபம்கொள்கிறோம்; துக்கத்திற்கு உள்ளாகிறோம். இயற்கை கொடூரமானது என்று சொல்கிறோம். “கடவுள் இருக்கிறாரா, கடவுள் கருணை வடிவானவர் என்றால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க அவர் எப்படி அனுமதிக்கலாம்,” என்று கேட்கிறோம்.

இயற்கை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி நமக்குப் புரிவதே இல்லை. இயற்கை இயங்குகிறது. அவ்வளவே. நம் தர்க்க அறிவுக்குத் தெரிந்த எந்த நிபந்தனைகளையும் அது ஏற்றுக் கொள்வதே இல்லை.

இயற்கையின் விதிமுறைகளை மக்கள் மிகவும் குறைவாகவே புரிந்துகொள்கிறார்கள்.

இப்பொழுது நாம் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்துபார்ப்போம். நீங்கள் ஒரு காரை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓர் எறும்புப் புற்றின் மீது ஏற்றி விடுகிறீர்கள்.

ஒரு முழு எறும்புக் கூட்டத்தின் குடியிருப்பையே அந்தக் கார்

அழித்து விடுகிறது. அதை நீங்கள்
கவனித்திருப்பீர்களா? நீங்கள் அந்த
எறும்பு கூட்டத்திற்கு ஏற்படுத்திய அழிவு,
உங்கள் கவனத்திற்குக்கூட வந்திருக்காது.
நீங்கள் அதை அறியாமலேயே வண்டி
ஓட்டிக்கொண்டு இருப்பீர்கள்.

ஒரு மானின் மீதோ அல்லது ஏதோ விலங்கின்
மீதோ உங்கள் கார் ஏறியிருக்குமேயானால்,
உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஏனென்றால் அப்பொழுது உங்கள் கார்
பாதிப்படைந்திருக்கும். ஆனால் ஒரு
எறும்புப் புற்றில் ஏற்றும்பொழுது, உங்கள்
கார் பாதிப்படைவதில்லை.

இந்த நிகழ்வில், எறும்புகளை நாம் எந்த அளவுக்கு கவனிக்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் இயற்கை நம்மை கவனிக்கிறது. நமது வடிவமும், அலைவரிசையும் எறும்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதேபோல் இயற்கையின் அலைவரிசையும் நமது அலைவரிசையும் வெவ்வேறானவை.

ஞானிகள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அலைவரிசையில் இருந்து இயங்குகிறார்கள். அவர்கள் இயற்கையின் விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். மனிதர்களின் விதிமுறைகளை அல்ல.

இயற்கையில் சரி, தவறு என்று எதுவுமே கிடையாது என்று நான் சொன்னது ஞானிகளுக்கும் இருப்புத் தன்மைக்கும் பொருந்தும் .

எறும்புகள்

சரி அல்லது தவறு, எவை செய்யக்கூடியவை அல்லது எவை செய்யக் கூடாதவை என்பவற்றைப் பற்றிய வழிநடத்தல்கள் அனைத்தும் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது என்பது உண்மைதான்.

ஆனால் கவனமாக இருங்கள். சரியான புரிதல் இல்லாமல் இவை நம் மீது கட்டாயத்தின் பேரில் திணிக்கப்பட்டால், அவை ஒருபோதும் பலனளிக்காது.

பல்வேறு மதத்தினரால் விதிக்கப்பட்டு இருக்கும் பெரும்பாலான விதிமுறைகள் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. ஒரு மதம் பன்றி இறைச்சியை உண்ணக் கூடாது என்று சொல்கிறது. மற்றொரு மதம் பசுவின் மாமிசத்தைத் தடைசெய்கிறது. வேறொரு மதமோ அனைத்தையுமே கண்டிப்பாக உண்ண வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

ஒரே ஒருமுறை மட்டுமே நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அந்த வாழ்க்கைத் துணையுடன்தான் உங்கள் முழு வாழ்க்கைக் காலத்தையும் கழிக்க வேண்டும் என்றும் ஒரு மதம் சொல்கிறது.

ஒரே ஒருமுறை வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்துவிட்டு மற்றொரு வரைத் திருமணம் செய்ய ஒரு மதம் அனுமதிக்கிறது. மற்றொரு மதமோ ஒரே சமயத்தில் நால் வரைத் திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி அளிக்கிறது.

‘எது சரி, எது தவறு’ என்பதைப் பற்றிப் பேசும்பொழுது, பல்வேறு மதங்களும் பல்வேறு முரண்பாடான கருத்துகளைச் சொல்கின்றன. அது மட்டுமல்ல, சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய பல்வேறுவிதமான விளக்கங்களையும் விதவிதமான கடவுள்களையும் இந்த மதங்கள் நமக்குக் கொடுக்கின்றன.

இது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு மதமும் நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்கு ஒரு வித்தியாசமான பாஸ்போர்ட்டையும் விசாவையும் வழங்குவது போன்று இருக்கிறது.

இவை அனைத்தையும் பற்றி ஒருவர் விழிப்புணர்வுடன் சிந்திப்பாரேயானால், இவற்றின் பின்னணியில் உள்ள காரணங்கள் தெளிவாகப் புரியவரும்.

சமுதாயத்தாலும் மதங்களாலும் உருவாக்கப்பட்ட ‘சரி, தவறு’ போன்ற நிபந்தனைகளுக்கும் இருப்புத் தன்மை நிலையில் இருக்கும் ஆழமான ஸத்யங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனையும் காணலாம்.

நம் நடத்தையை வரையறுக்கும் இந்த
நிபந்தனைகள், அவை சரியோ அல்லது
தவறோ, தம்மையே தற்காத்துக்
கொள்ளவேண்டிய நிலையில்தான்
இருக்கின்றன.

> சரியான
> புரிதல் இல்லாமல்
> சமுதாயக் கோட்பாடுகள்
> நம் மீது
> கட்டாயத்தின் பேரில்
> திணிக்கப்பட்டால்,
> அது ஒருபோதும்
> பலனளிக்காது.

இது எப்படி என்றால், “நான் உன்னைக்
கொல்லப்போவதில்லை என்று உறுதி
அளிக்கிறேன். பதிலுக்கு நீயும் என்னைக்
கொல்லப்போவதில்லை என்று உறுதி
கொடுப்பாயாக,” என்று சொல்வதற்குச்
சமமானது.

இது மெல்ல மெல்ல எல்லாச்
சமுதாயங்களுக்கும் பரவிவிட்டது.
ஆனால் இப்படிப்பட்ட நிபந்தனைகள்,
அந்தச் சமுதாயத்தில் வாழும் அனைவரது
பாதுகாப்பிற்காகவும் தேவைப்பட்டது.

> தேசபக்தியின்
> பெயரால் கொலை
> செய்தால்
> அது நியாயமாகி
> விடுமா?

இந்த விதிமுறைகள் தனிநபரைத் தாண்டிச்செல்லும்பொழுது, அவற்றை எப்படிக் குறிப்பிடுவது? ஒரு குழு மற்றொரு குழுவை துன்புறுத்தியோ அல்லது துன்புறுத்தாமலோ தாக்கி அழிக்கும்பொழுது, நீங்கள் அதை எப்படிச் சரியென்று சொல்ல முடியும்? உங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக நீங்கள் யாரையாவது கொல்லும்பொழுது, 'தேசபக்தர்' என்று அழைக்கப்படுகிறீர்கள், ஒரு தலைவராகப் போற்றப்படுகிறீர்கள்.

ஆனாலும் நீங்கள் இன்னமும் ஒரு கொலைகாரர்தான்!

தேசபக்தியின் பெயரால் கொலை செய்தால் அது நியாயமாகி விடுமா?

மனித குல வரலாற்றில், நூற்றுக்கணக்கான போர்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு போரிலும் வெற்றிபெறுபவரே சரியானவர் என்று கருதப்பட்டது.

இந்தப் போர்கள் அனைத்தும் 'உயர்ந்த கொள்கைகள்' என்று அழைக்கப் படுபவற்றைப் பாதுகாப்பதற்காகவே நடத்தப்பட்டன. வென்றவர் யாராக இருந்தாலும் சரி, அவரிடத்தில் ஒரு 'உன்னத கொள்கை' இருந்தது, அவ்வளவுதான்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால், வரலாறு வேறுவிதமாகத் திருத்தி எழுதப்பட்டிருக்கும்; அவர் ஒரு தலைவராகப் போற்றப்பட்டிருப்பார்.

இது 'தாவோ' சொல்வதைப் போன்றது. சரி என்றும் தவறு என்றும் எதுவும் இல்லை. நல்லது என்றும் கெட்டது என்றும் எதுவும் இல்லை. இருள் என்றும் ஒளி என்றும் எதுவுமே இல்லை.

மிகக் கொடிய தவறுகள் அனைத்தும் யாரோ ஒருவருக்குச் சரியாகவே இருந்திருக்கின்றன. மிக மிகச் சரியானது என்பவை அனைத்தும் யாரோ ஒருவருக்குத் தவறாகவே இருக்கின்றன. வாழ்வின் ஸத்யங்களே இப்படித்தான் இருக்கின்றன.

ஒரு காலக் கட்டத்தில் சரி என்று எது கருதப்பட்டதோ, அதுவே மற்றொரு காலக் கட்டத்தில் தவறு என்று கருதப்பட்டது. ஒரு நூற்றாண்டில் முற்றிலும் தவறானது என்று கருதப்பட்டவை, மற்றொரு நூற்றாண்டில் உலகளாவிய முறையில் ஒத்துக்கொள்ளப்பட்டன.

ஒரு காலத்தில், இந்தியாவில் இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறுவது ஒரு பெண்மணிக்கு மிகுந்த மதிப்பை அளிப்பதாகவும் அது அவருடைய கடமையாகவும் கருதப்பட்டது. அவர்கள் விருப்பத்துடன் சிதையை நோக்கி நடக்கவில்லை என்றால் கட்டாயப்படுத்தி எரிக்கப்பட்டார்கள்.

அதே காலத்தில், வேறொரு நாட்டில், சூனியக்காரிகள் என்று கருதப்பட்டவர்கள் கழுமரத்தில் ஏற்றி எரிக்கப்பட்டார்கள். அது நியாயமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றோ இப்படிப்பட்ட செயல்கள் காட்டுமிராண்டித்தனமான புத்தி மாறாட்டங்களாகவே கருதப்படுகின்றன.

ஆனால் அடிப்படையான வாழ்வியல் ஸத்யங்கள், இந்தச் சமுதாய விதிகளைப்போல சரி மற்றும் தவறு என்ற இவற்றுக்கு இடையில் ஊசலாட முடியாது. அவை எப்போதும் எல்லா நேரங்களிலும் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, உண்மையான
வாழ்வியல் முறையில் அப்படி எதுவும்
வரையறுக்கப்படவில்லை.

ஏனென்றால் பிரபஞ்ச சக்தி அவ்விதமாக
இயங்குவதில்லை. உண்மையில் பிரபஞ்ச
சக்தி எந்தவொரு நோக்கமும் இல்லாமல்
செயல்படுகிறது. நோக்கமற்ற தன்மையை,

சரி தவறு,
நல்லது கெட்டது,
இருள் ஒளி
என்று எதுவுமே
இல்லை.
- தாவோ

சரியான நோக்கமற்ற தன்மை என்றோ அல்லது தவறான நோக்கமற்ற தன்மை என்றோ வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

எப்பொழுதெல்லாம் விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவற்றை மீற வேண்டும் என்பதே மனித மனத்தின் இயல்பாக இருக்கிறது.

எல்லாத் தடைகளிலிருந்தும் வெளிவர வேண்டும் என்று நம்முள் மிக ஆழமாக வேரூன்றி இருக்கும் நமது விருப்பத்தின் ஒரு பகுதியாகவே இந்த உணர்ச்சி வேகம் இருக்கிறது.

குறிப்பிட்ட வேகத்திற்குள்தான் செல்ல வேண்டும் என்னும் விதிமுறை இருக்கும்பொழுது, காவல்காரர் உங்களைப் பார்க்கவில்லை என்றால் அதிவேகமாகச் செல்கிறீர்கள்.

அதிவேகமாக சென்றதற்காகப் பிடிக்கப்பட்டால், இலஞ்சத்தை ஏற்றுக்கொள்ளும் பழக்கமுடைய நாடாக இருக்குமானால், இலஞ்சம் அளித்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்.

ஒரு குழந்தை இவ்வாறு செய்வதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பெரியவர்களின் கண்ணோட்டத்தின்படி சரியில்லாததாகவும் ஆபத்தானதாகவும் தோன்றக்கூடிய பல விஷயங்களை ஆர்வமிகுதியால் ஒரு சிறு குழந்தை செய்யக் கூடும்.

ஆனால் நல்ல நிலையில் இருக்கும் ஒரு வளர்ந்த மனிதர், இதுபோன்ற விதிகளை ஏன் மீற வேண்டும்? காரணம், முதலில் அந்த விதிமுறைகள்

பிரபஞ்ச சக்தி
எந்தவொரு
நோக்கமும் இல்லாமல்
செயல்படுகிறது.

தமக்கும் பொருந்தும் என்பதை அவர் நம்பாமல் இருப்பதே!

தன்னைத் தவிர மற்ற அனைவருக்கும்
பொருந்தக்கூடிய விதிமுறைகளை
வைத்துக் கொள்வதில்தான் அவர் மிகவும்
சந்தோஷப்படுகிறார்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களைப்
பிணைத்திருக்கும் விதிமுறைகளில்
இருந்து வெளிவரவே விரும்புகிறார்கள்.
ஆனால் இந்த விதிமுறைகளைப் பிறர்
கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்

என்று விரும்புகிறார்கள். அப்பொழுதுதான்
தாங்கள் எந்தத் தொந்தரவுமில்லாமல் வாழ
முடியும் என்று எண்ணுகிறார்கள்.

மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு கடமை
உணர்வோடு நீங்கள் செய்யும் எந்த
ஒரு செயலும் எப்போதும் உங்கள் மீது
திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
ஏனெனில் சரி, தவறு என்று நீங்கள்
கற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே
அந்தச் செயல் அமைகிறது.

அவை உங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதனால், ஏதோ ஒருவிதத்தில் சில விதிமுறைகளையாவது மீற விரும்புகிறீர்கள்.

உங்கள் உள் நிலையில், ஆழமான விழிப்புணர்வில் ஒன்றைச் சரி என்றோ தவறு என்றோ உணரும்பொழுது மட்டுமே, அதனை நீங்கள் நேர்மையுடன் செயல்படுத்துகிறீர்கள். இப்படிச் செய்வதுதான் சரியானது என்று உங்கள் ஆழ்மனத்தில் ஏதோ ஒன்று சொல்வதனாலேயே, நீங்கள் அதனைச் செய்கிறீர்கள். மனச்சாட்சி என்பது சமுதாயம் சார்ந்தது. ஆனால் விழிப்புணர்வு என்பது இயல்பானது.

ஒரு வளர்ந்த மனிதராக, நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும் முழு விழிப்புணர்வு நிலையிலிருந்து செய்யப்படவேண்டுமே தவிர, கட்டாயத்தின் மூலமாக செய்யப்படக் கூடாது.

துரதிர்ஷ்டவசமாக எது சரி, எது தவறு என்று தேர்ந்தெடுக்கும் விளையாட்டில் நாம் எப்பொழுதுமே சிக்கிக்கொள்கிறோம். நாம், சிறுவயதிலிருந்தே இந்த விளையாட்டை விளையாட பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

Puppeteer controlling a shadow puppet

ஒரு பொம்மலாட்டக்காரர்,
கயிறுகளைக்கொண்டு பொம்மைகளைக்
கட்டுப்படுத்துவதுபோல, நம்முடைய
ஆசை மற்றும் அச்சம்தான், நம்முடைய
உணர்ச்சிகள் என்னும் கயிற்றைக்கொண்டு
நம்மைக் கட்டுப்படுத்துகின்றன.

பிறர் மனைவியை அபகரித்தால் நரகத்திற்குச்
செல்வீர்கள்' என்று நமது சமயங்கள்
சொல்கின்றன. சரியாக வரி செலுத்தவில்லை
என்றால் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும்
என்று நமது சட்ட முறைகள் சொல்கின்றன.

எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு வழியில் பயத்தாலோ, பேராசையாலோ நாம் ஆளப்படுகிறோம். சரி என்றும் தவறு என்றும் பழக்கப்படுத்தப்பட்ட நம் மன அமைப்பின் வழியாகத்தான் அச்சமும், ஆசையும் நம் ஆழ்மனத்தில் மிக ஆழமாகப் பதிகின்றன.

> உங்கள் உள்
> நிலையில், ஒன்றைச்
> சரி என்றோ
> தவறு என்றோ
> உணரும்பொழுது
> மட்டுமே, அதனை
> நீங்கள் நேர்மையுடன்
> செயல்படுத்துகிறீர்கள்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது விழிப்புணர்வு உள்ள மனம் நம்மை வழி நடத்துவதே இல்லை. நமது விழிப்புணர்வு இல்லாத மனம்தான், நம்மால் மிக எளிதில் அணுக முடியாத, இந்த ஆழ்மன எண்ணப் பதிவுகளின் வழியாக நம்மைச் செயல்பட வைக்கிறது.

பேராசையினால் உந்தப்பட்டுச் செயல்படும்பொழுது, தற்காலிகமான இன்பத்தைப் பெறுகிறோம். பெரும்பாலும் அந்த இன்பம்கூட குற்ற உணர்ச்சி என்னும் சாயம் பூசப்பட்டே இருக்கிறது.

உதாரணமாக, பிச்சைக்காரர்களுக்குத் தருமம் அளிக்கும்பொழுதுகூட, நீங்கள் சரியான செயலைத்தான் செய்கிறீர்களா அல்லது பிச்சைக்காரர்களின் தவறான ஒரு பழக்கத்திற்குத் துணை போகிறீர்களா என்று மனத்தின் ஒரு ஓரத்தில் யோசித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

நன்றாக உழைக்க முடிந்த மனிதர்களுக்குப் பிச்சை இடுவதால் அவர்களைப் பிச்சையெடுக்க ஊக்குவிக்கிறோமோ என்று எண்ணி குழப்பமடைகிறீர்கள்.

ஒருவேளை அந்தப் பிச்சைக்காரர் உடல் ஊனமுற்றவராக இருந்தாரேயானால், உடனே உங்கள் மனத்தில், சில நாடுகளில் இருக்கும் சில மனிதர்கள் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை ஊனப்படுத்தி, அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கதைகள் எல்லாம் உங்கள் ஞாபகத்திற்கு வரும்.

ஒவ்வொரு நல்ல நோக்கமுடைய செயலின்போதும், நமது மனம் அதற்கு எதிராக சில வாதங்களையாவது முன் வைக்கிறது.

சரி மற்றும் தவறுபற்றிய நம்முடைய கருத்துகள் நமக்கு மிகவும் சரியானதாகவே தோன்றுகிறது அல்லது நமக்குப் பழக்கப்பட்டவிதத்தில் அது முழுமையானதாகவே தோன்றுகிறது.

முதலில், ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரைச் சரி என்றோ தவறு என்றோ தீர்மானிக்கும் நமது மனப்பான்மையை நாம் விட்டுவிட வேண்டும்.

எந்த ஒரு விஷயத்திலும் ஒருவரை மதிப்பிட, நமக்கு எந்தவித உரிமையும் இல்லை.

ஏனென்றால் நமது சமுதாயக் கட்டுறு மனப்பாங்குகளின் அடிப்படையில்தான், நமது மதிப்பீடுகளும் அமைகின்றன.

ஆனால் எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் சமுதாயக் கட்டுப்பாடுகளின் அடிப்படையிலோ, மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலோ நம் செயல்களை மதிப்பீடு செய்வதில்லை. அதனால் நமது எதிர்மறை குணங்களை நாம் முதலில் விட்டு விடுவதுதான் நல்லது.

அப்பொழுது மற்ற மக்களைப் பற்றிய நமது எதிர்மறையான எண்ணப்பதிவுகளும் நம்மை விட்டு விலகுவதை உணர்ந்து கொள்வோம்.

பார்க்கிற ஒவ்வொரு மனிதரிடமும், சந்திக்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் நல்லதையே காணத் தொடங்குவோம்.

இரண்டாவதாக, நாம் த்யானத்தின் மூலமாக நமது விழிப்புணர்வை மேம்படுத்தத் தொடங்க வேண்டும்; உள்முகமாகச் சென்று நம் விழிப்புணர்வுடன் நாம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் இயற்கையின் வழிகளைப்
புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இதை
விட்டால் வேறுவழியே இல்லை. முற்றிலும்
'சரி தவறு' என்ற தன்மை இயற்கைக்குக்
கிடையாது.

இயற்கை வெறுமனே அதன் போக்கில் செல்கிறது. த்யானத்தின் உதவியுடன் நாமும்கூட இயற்கையுடன் இயைந்து செல்லக் கற்றுக் கொள்ளலாம்.

> ஒவ்வொரு நல்ல
> நோக்கமுடைய
> செயலின்போதும்,
> நமது மனம்
> அதற்கு எதிராக
> சில
> வாதங்களையாவது
> முன் வைக்கிறது.

அப்படிப் பயணிக்கும்பொழுது, விழிப்புணர்வுடன் செயல்படக் கற்றுக்கொள்கிறீர்கள். உங்களைக் கடந்து செல்லும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டக் கற்றுக்கொள்கிறீர்கள். அது உங்களைத் தொல்லையில் சிக்க வைக்கக்கூடியதாக இருந்தாலும் சரி, அவருக்கு உதவி புரிவதற்கு நீங்கள் தயங்குவதில்லை.

உண்மையில், பிரபஞ்ச சக்தியுடன் நீங்கள் ஒத்திசைவுடன் இருக்கும்பொழுது, உங்களை அச்சுறுத்தும் எந்த ஆபத்தும் இருப்பதாகக்கூட உணர மாட்டீர்கள்.

'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று உணரத் தொடங்குவீர்கள்.

சமீபத்தில் நமது தியான சிகிச்சையாளர் ஒருவர் சொன்ன சம்பவம் இது.

ஒரு நாள் அவர் ஏதோ ஒரு கூட்டத்தில்
கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக
சாலையில் நடந்து சென்றுகொண்டு
இருக்கும்பொழுது, அங்கே சாலையோரத்தில்
ஒரு மனிதர் முகம் தரையில்படுமாறு
கவிழ்ந்துப்படுத்துக் கிடந்ததைக் கண்டார்.
சாதாரணமாக, இதுவரை அவர் அப்படிபட்ட
சூழ்நிலைகளைச் சந்திக்கும்பொழுது,
அதைப் பொருட்படுத்தாமல் செல்வதுதான்
அவருடைய வழக்கமாக இருந்திருக்கிறது.
அன்றும் அப்படித்தான் கடந்து சென்றார்.

| பார்க்கிற | | ஒவ்வொரு | | மனிதரிடமும், | | சந்திக்கிற | | ஒவ்வொரு | | சூழ்நிலையிலும் | | நாம் நல்லதையே | | காணத் | | தொடங்குவோம். |

ஆனால் வித்தியாசமாக அவருள் ஏதோ நிகழ்ந்தது. உடனே அவர் மனத்தில் என்னை நினைத்தார். என்னை நினைத்தவுடன் அவரது கால்கள் நகர மறுத்துவிட்டன. உண்மையில் அவர் கால்கள் பின்னோக்கி நகர்ந்து அந்த மனிதர்படுத்துக்கிடந்த இடத்திற்கே வந்து நின்றது.

நேரமாவதைப் பொருட்படுத்தாமல், ஆம்புலன்ஸ் வண்டி வந்து அம்மனிதரை ஏற்றிச் செல்லும்வரை அங்கேயே இருந்தார்.

இது, சரி தவறு என்பதனைப் பற்றியது அல்ல. இது, விழிப்புணர்வைப் பற்றியது. இது, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் அல்லது செய்வார்கள் என்பது பற்றியதல்ல. சில நூறு பேர்களாவது, சாலையோரம் விழுந்துகிடந்த மனிதரைப் பார்த்தார்கள். ஆனாலும் எதுவும் செய்யாமல் கடந்து சென்றார்கள் என்று அவர் சொன்னார்.

பலர் ஒரு செயலைச் செய்யாமல் தவிர்க்கும்பொழுது, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிலருக்கு அதுதான் சரியான செயல் என்று நினைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, இல்லையா?

ஆனால் நின்று உதவ வேண்டும் என்று தீர்மானித்த ஒருவருக்கு, சரியான செயல் என்பது, 'சேவை செய்வதே' என்பது தோன்றியது.

'தங்கள் கடவுளையோ, தங்கள் மதத்தின் கொள்கைகளையோ, நம்பாதவர்களை அழித்துவிட வேண்டும்' என்று தங்கள் மத நூல்கள் சொல்வதாக அர்த்தம்கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆன்மீக அணுகு முறையை
உற்சாகப்படுத்தும் மதத் தலைவர்களை,
அதைப் பின்பற்றும் மக்களை நீங்கள் என்ன
பெயர் சொல்லி அழைக்க முடியும்?

இந்தக் கருத்துகளை முழுமையாக
நம்பிக்கொண்டு, எந்தவித விழிப்புணர்வும்
இல்லாமல் செயல்படும் மக்கள்
லட்சக்கணக்கில், இல்லை இல்லை, கோடிக்
கணக்கில் இருக்கிறார்கள்.

ஆன்மீகம் எப்படிப் பிரத்யேகமானதாக இருக்க முடியும்?

பிரபஞ்சத்துடன்
நீங்கள் ஒத்திசைவுடன்
இருக்கும்பொழுது,
உங்களை
அச்சுறுத்தும் எந்த
ஆபத்தும்
இருப்பதாகக்கூட
உணர மாட்டீர்கள்.

அது ஒருபோதும் பிரத்யேகமானதாக இருக்க முடியாது. அது எல்லோருக்கும் உரியது. அது ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒருபோதும் தவிர்க்க முடியாதது.

ஆன்மீகம் அனைத்திற்குள்ளும் அடங்கியது, எப்போதும் இயற்கைக்கு உட்பட்டது.

ஆனால் பிரிவினை வாதம்தான், பகுக்கக்கூடிய தன்மைதான் நம் சமுதாயத்தில் கூட்டு விழிப்புணர்வில்லாததன்மையை அதிகப்படுத்துகிறது.

எது ஒன்று கூட்டமாகவும் மொத்தமாகவும் இருக்கிறதோ, நிச்சயமாக அது விழிப்புணர்வற்ற தன்மையில் இருந்துதான் வர முடியும்.

விழிப்புணர்வுடன் இருப்பதற்கு நீங்கள் தனிமனிதராக உழைக்க வேண்டும். மனச்சாட்சியோடு இருப்பதற்குக் கூட்டமாக இருக்க முடியும். ஆனால் விழிப்புணர்வு என்பது தனித்துப் பயணிக்க வேண்டிய பாதை.

சரி மற்றும் தவறு இவற்றைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றிக் கவலைப்படாதீர்கள், நான் சொல்லும்பொழுதுகூட அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது என்னுடைய விழிப்புணர்வு, உங்களுடையது அல்ல. உங்களது இருப்புத் தன்மைக்குள் செல்லுங்கள். உங்கள் விழிப்புணர்வுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உங்களுக்கான பதில்களை நீங்களே பெறலாம்.

அப்பொழுதுதான் பேராசை, அச்சம், குற்ற உணர்ச்சி போன்ற அடிமைப்படுத்தும் சங்கிலிகளில் இருந்து உங்களால் விடுதலை அடைய முடியும். அப்பொழுதுதான் உங்களால் முக்தி அடைய முடியும்.

Flute played by hands