பூமியைப் புனிதமாக்கிய ஓர் போர்க்களம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
திருதராஷ்டிரர் சொன்னார், "ஸஞ்ஜயா, அந்தப் புனித
குருகேஷத்ர பூமியில், போர் புரிய விரும்பி ஆர்வத்துடன்கூடிய
எனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள்?
ஸஞ்ஜயன் சொன்னார், பாண்டவ சேனையின் மொத்த
வியூகத்தையும் பார்த்த துரியோதனன் தம்முடைய ஆச்சாரியாரிடம்
சென்று சொன்னார்:
என் ஆச்சாரியாரே! உமது சீடரும் துருபதனின் மகனுமான அந்தப்
புத்திசாலியால் மிகச் சிறப்பாக வியூகம் அமைக்கப்பட்டுள்ள
பாண்டு புத்திரர்களின் சிறந்த சேனையைப் பாருங்கள்.
இந்தப் படையில் பலம் பொருந்திய, சிறந்த வில்லாளிகளான
பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான அனேக வீரர்கள்
இருக்கிறார்கள்.
திருஷ்டகேது, சேகிதானன், வீரிய காசி ராஜன் மேலும் புருஜித்,
குந்தி போஜன், சிறந்த மனிதர் சைபியா.
பேராற்றல் படைத்த யுதாமன்யு, வல்லமை பொருந்திய
உத்தமௌஜஸ், சுபத்திரை புதல்வன், திரௌபதி புதல்வர்கள்
எல்லோரும் பெரிய போர்வீரர்களே!
சிறந்த பிராஹ்மணரே! நீங்கள் அறிந்துகொள்வதற்காக
நம்முடைய சேனையை வழிநடத்தும் வீரர்களைப் பற்றியும்
சொல்கிறேன்.
இங்கிருந்துதான் தொடங்குகிறது
பகவத்கீதை என்ற இந்தச் சிறந்த பெருமைவாய்ந்த நூலின் தொடக்கமே ஒரு கண்பார்வை இழந்தவர் மூலமாகத்தான் தொடங்குகிறது. அதில் ஒரு மிக முக்கியமான குறிப்பிடத்தக்க விஷயம் இருக்கிறது. அவர் கண்பார்வை இழந்தது மட்டுமல்ல, உள்முகப் பார்வையையும் இழந்து விட்டிருந்தார்.
நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்திக் காணும் மதி நுட்பத்தை, விவேகத்தை, அறிவுக் கூர்மையை இழந்திருந்தார்.
திருதராஷ்டிரரின் தம்பி பாண்டு, அவரிடம் அரசையும் அதனோடு அவரது பிள்ளைகள் ஐவரையும் ஒப்படைத்தார். எந்த ஒரு கோணத்திலிருந்து பார்த்தாலும் பாண்டவர்கள் ஐவரும்கூட திருதராஷ்டிரரின் பொறுப்புதான்.
> ஒவ்வொரு போரும்
> நீதியையும் நேர்மையையும்
> நிலைநாட்டவே
> நடைபெறுவதாக
> இரு தரப்பினரும்
> நம்புகிறார்கள்.
> அவர்கள் அவ்வாறு
> நம்புவதனாலேயே
> போர்கள்
> நிகழ்ந்திருக்கின்றன.
இருந்தாலும் “எனது பிள்ளைகளும்
பாண்டுவின் பிள்ளைகளும்” என்று
திருதராஷ்டிரர் சொன்னதிலிருந்தே, அவரது
மனம் அவர்களைத் தம்மிடமிருந்து பிரித்து
வேற்று மனிதர்களாகக் கருதுவதைத்
தெளிவாகக் காணமுடிகிறது.
“அவர்கள் என்ன
செய்துகொண்டிருக்கிறார்கள்?” என்று
ஸஞ்ஜயனிடம் வருத்தம் தோய்ந்த குரலில்
கேட்கிறார். “எனது பிள்ளைகளான
நூறு கௌரவ இளவரசர்களும் அந்த
பாண்டுவின் பிள்ளைகளான ஐந்து
பாண்டவ இளவரசர்களும்” என்றதன்
மூலம், திருதராஷ்டிரர் பாண்டவ
இளவரசர்கள் மீது எந்த ஒரு பொறுப்பும்,
அவர்களுடைய நலனில் எந்த ஒரு
அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை
என்பதைத் தெளிவாக்குகிறார்.
அவரது கவலையெல்லாம்,
அக்கறையெல்லாம் அவருடைய
மகன்களைப் பற்றி மட்டுமே.
நமது
பகுத்தறியும்
திறனை
பாசமும் பற்றும்
குருடாக்கி விடுகிறது.
திருதராஷ்டிரருக்கு அவரது மகன்கள் மீதுள்ள பற்றானது, முக்கியமாகப் பட்டத்து இளவரசர் துரியோதனனின் மீதுள்ள பற்றானது, அவரது பகுத்தறியும் திறனையே குருடாக்கிவிட்டது. அவரது மகனான துரியோதனன் எதைச் செய்தாலும் அது அவரது ஒப்புதலைப் பெற்றதாகவே இருந்தது.
துரியோதனன் இளமைப் பருவம் தொட்டே பாண்டவர்களைத் தீர்த்துக் கட்ட பல உபாயங்களைக் கையாண்டவர். துரியோதனனின் தீய செயல்கள் எதுவும் தமக்குத் தெரியாது என்பது போன்று திருதராஷ்டிரர் பாசாங்கு செய்து கொண்டிருந்தாலும், அவருக்குத் தமது மகன் எதைக் குறி வைத்துச் செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.
பாண்டவர்களின் மனைவி திரௌபதியைத் துகிலுரியும் உச்சக்கட்ட நடவடிக்கைகூட அவரது அரசவையிலேயேதான் நிகழ்ந்தது. திரௌபதியைப் பலர் முன்னிலையில் மானபங்கம் செய்யும் அளவுக்குத் துணிந்த துரியோதனனையும் துச்சாதனனையும் சிறிதும் தடை செய்யாமல், திருதராஷ்டிரர் தமக்கு அதிகாரம் ஏதும் இல்லாததுபோல் நடந்து கொண்டார்.
முடிவாக, துரியோதனன் பாண்டவர்களுக்கு ஒரு ஊசிமுனை அளவுகூட இடம் தர மறுத்தபோதும், திருதராஷ்டிரர் மௌனமாகவே இருந்தார். இவ்வாறு மௌனமாக இருந்ததன் மூலம், இரத்தம் சிந்தியே ஆக வேண்டும் என்பதை அவர் உறுதி செய்தார்.
இந்தக் கதையின் துக்கமான, வருத்தமான பகுதி என்னவென்றால், திருதராஷ்டிரர், தாம் தீய வழியில் செல்வதையும், அது அவரையும் அழித்து, அவரது குலத்திற்கே முடிவாக அமைந்துவிடும் என்பதையும் நன்றாக உணர்ந்தே அனைத்தையும் செய்தார். இருந்தாலும், தமக்கு எந்த
ஒரு அதிகாரமும், அதை மாற்றியமைக்கும்
சக்தியும் இல்லாதது போன்றே நடந்து
கொண்டார்.
திருதராஷ்டிரரின் கதை மனித குலத்திற்குப் பொதுவானது.
ஒரு குறிப்பிட்ட பாதை தவறானது என்று
நமக்குத் தெரிந்தபோதிலும் மீண்டும்
மீண்டும் நாம் அதே பாதையிலேயே சென்று
கொண்டிருப்போம். ஒரு மயக்க நிலையில்
ஆட்கொள்ளப்பட்டதுபோல் தவறான
வழியிலேயே சென்று கொண்டிருப்போம்.
யுத்தம் வெறுமனே
தீமைக்கும்
நன்மைக்கும்
இடையேயான
போர் அல்ல.
அது
நமக்குள் நடக்கும்
மனப் போராட்டத்தைப்
பற்றியது.
நமக்கே நன்றாகத் தெரியும் அந்த வழியில் சென்றால் எதிர்காலத்தில் அது நமக்குப் பிரச்சினைகளையே ஏற்படுத்தும் என்றும், நம்முடைய சிறந்த நலனுக்கு அது ஏற்றதல்ல என்றும் தெரிந்தாலும், நம்மால் அந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதை நிறுத்த முடிவதில்லை.
அதனால் கீதை, இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது.
யுத்தம் நின்றுவிடும்
யுத்தம், வெறுமனே தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் அல்ல. இது அதற்கும் மேலானது. இது, சரியான செயலைச் செய்ய முடியாமல் இருக்கும் நமது இயலாமை நிலைக்கும், அப்படியே செய்ய ஆரம்பித்தாலும் அதிலேயே தொடர்ந்து நிலைத்து நிற்கும் துணிவு இல்லாமல் இருக்கும் நமது உறுதியற்றத் தன்மைக்கும் இடையே நமக்குள்ளேயே நடக்கும் மனப் போராட்டத்தைப் பற்றியது; தர்ம பாதையில் நடப்பதற்குத் தேவையான விழிப்புணர்வோ, மனத் தெளிவோ, துணிவோ இல்லாத நிலையைப் பற்றியது.
நம்முடைய வெளியுலகில் இருக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நடக்கும் யுத்தம் மட்டுமல்ல, நம் உள்ளுலகில் இருக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நடக்கும் யுத்தத்தைப் பற்றியது.
கிருஷ்ண உணர்வு நிலை மிகச்சிறந்த விழிப்புணர்வு நிலை, இது நமது உள்ளுணர்வின் மீது தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் நமக்குள்ளிருந்து ஒலிக்கும் இத்தெய்விக குரலைக் கவனிக்காமல், அலட்சியமாக ஒதுக்கி விடுகிறோம்.
அதற்குப்பதிலாக மாயையில் சிக்கி, நாம் தேர்ந்தெடுக்கும் வழிதான், நமக்கு ஆனந்தத்தைத் தரும் என்று முடிவெடுக்கிறோம்.
திருதராஷ்டிரன், குருக்ஷேத்ரத்தை, யுத்த பூமியை, புனித நிலமாகவும் தர்ம க்ஷேத்ரமாகவும் குறிப்பிடுகிறார்.
மக்கள் கேட்கிறார்கள், "யுத்த பூமியை எவ்வாறு புனித நிலம் என்று சொல்ல முடியும்?"
நீங்கள் மனித குலத்தின் சரித்திரத்தைப் படித்தீர்களென்றால், அது எப்பொழுதுமே ஒரு யுத்த களமாகவே இருந்திருக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள். அந்தப் போர்கள் எல்லாம் நீதிநெறிப் படிதான் நடத்தப்பட்டதா அல்லது தவறான வழியில் நடத்தப்பட்டதா என்பது ஒரு சர்ச்சைக்குரிய, விவாதத்திற்குரிய விஷயமாகவே இருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு நியாயமானதாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாயிருக்க வேண்டிய தேவையில்லை.
நடைமுறையில், ஏறத்தாழ ஒவ்வொரு
நூற்றாண்டிலும் உலகின் ஏதாவது ஒரு
பகுதியில் போர் நடந்துகொண்டே
இருந்திருக்கிறது.
> கிருஷ்ண உணர்வு நிலை
> நமது
> உள்ளுணர்வின் மீது
> தொடர்ந்து
> தோன்றிக்கொண்டே
> இருக்கிறது.
ஒரு குழுவினர் தங்களையே நேர்மையானவர்களாகவும், மற்ற குழுவினரை நேர்மையற்றவர்களாகவும் கருதியதாலேயே, அநேகமாக எல்லாச் சண்டைகளுமே நிகழ்ந்திருக்கின்றன.
இந்த நோக்கத்தில் பார்க்கும்பொழுது, ஒவ்வொரு போருமே, தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவே நடைபெற்றதாக இருதரப்பினருமே நம்பினார்கள்.
அதனால், அந்த நோக்கத்தில் பார்க்கும்பொழுது ஒவ்வொரு போர்க்களமும் புனித பூமியே. இருவரில் யாரோ ஒருவர் உயர்ந்த கொள்கைகளையும் நியாயத்தையும் நிலைநாட்டியதாக நம்புவதால் போர்க்களமும் புனித பூமியாகிறது.

உங்களின் விதி உங்களால் பார்க்கக்கூடியதே!
திருதராஷ்டிரர் அமைதியாக இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர், கிருஷ்ணரின் தெய்विक தன்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தார். கிருஷ்ணர், இந்த யுத்தக் களத்தில் வெறுமனே இருந்ததே, அந்தக் களத்திற்கே நீதி, நேர்மையை வழங்கி, அதைப் புனித பூமியாக்கியது.
கிருஷ்ணர் எங்கெங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் நியாயம் நிலைத்திருக்கும்.
அந்தக் குழப்பமான மன நிலையிலும் கிருஷ்ணரின் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நிலையை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு திருதராஷ்டிரருக்கு மனத் தெளிவு இருந்தது. அது அவரது வார்த்தைகளின் உபயோகத்திலிருந்து தெளிவாகிறது. எது எப்படியோ ஒருவிதத்தில் பார்க்கும்பொழுது, திருதராஷ்டிரர், கௌரவ குலத்தின் விதி முடியப் போகிறது என்பதை அறிந்திருந்தார்.
கிருஷ்ணர் நீதி நேர்மையின் உருவம் என்றால், அவர் பாண்டவர்கள் பக்கம் இருக்கிறார் என்றால், பாண்டவர்கள் எவ்வாறு தோற்க முடியும்?
திருதராஷ்டிரரின் துன்பகரமான விதி என்னவென்றால், அவரது குலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதை அறிந்திருந்தார்.
உங்கள்
உள்ளுணர்வில்
எப்போதும்
தெய்விக குரல்
ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.
இருந்தபோதிலும், அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாதவராகவும் இருந்தார்.
ஸஞ்ஜயன், திருதராஷ்டிரரின் அமைச்சராகவும் தேரோட்டியுமாக இருந்தவர்.
வியாஸ மஹரிஷியின் கருணையால்,
ஸஞ்ஜயன், போர்க்களத்தில் நடப்பவற்றை
எல்லாம் நேரடியாகப் பார்க்கும்
திறன் பெற்றிருந்தார். அதன் மூலமாக
ஸஞ்ஜயன், அரசர் திருதராஷ்டிரருக்கும்
அரசி காந்தாரிக்கும் போர்க்களத்தில்
நடப்பதை உள்ளது உள்ளபடியே, அந்தத்
துன்பமயமான, அழிவை உண்டாக்குகிற
நிகழ்வுகளை விவரிக்க முடிந்தது.
ஸஞ்ஜயனின் மூன்றாவது கண், அதாவது நுண்ணறிவின் மையம் திறக்கப்பட்டது. அதன் மூலமாக அவர் வெகு தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க முடிந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்து வரப்போகும் நிகழ்வுகளையும் முன்னரே அறியும் வகையில் நுண்ணறிவுத் திறனும் வாய்க்கப் பெற்றிருந்தார்.
கீதையின் செய்தி:
ஸஞ்சயனைப்
போன்று
நம்மாலும் நம்
மூன்றாவது
கண்ணைத்
திறக்க முடியும்
என்பதே!
நாம் அனைவருமே, ஏதோ ஒரு வகையில் குருடர்கள்தான்.
திருதராஷ்டிரர், மனிதகுலத்தின் பெரும் பகுதியின் உருவமாக இருக்கிறார். இங்கே குருடர் என்பது, கண் பார்வையிழந்தவர் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமல்ல, முக்கியமாக நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வேறுபாட்டை அறியும் திறமையின்மையைக் குறிப்பதாக இருக்கிறது.
மேலும் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டு அறியும் ஆவலின்மையைக் குறிக்கிறது.
நம் எல்லோராலுமே, திருதராஷ்டிரரைப் போன்று கண்மூடித்தனமான அறியாமையில் குருடராக இல்லாமல், ஸஞ்ஜயனைப் போன்று மூன்றாவது கண்ணைத் திறக்க முடியும். கீதையின் பல செய்திகளுள், படிப்பினைகளுள் இதுவும் ஒன்று.

நமக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும்
உள் மனப் போராட்டங்களைப் பற்றி
அறிந்து கொள்வதே, அதைப் பற்றிய
விழிப்புணர்வை அடைவதே, மூன்றாவது
கண் திறப்பதற்கான முதல் படி.
மூன்றாவது கண் என்பது புருவங்களின்
மத்தியில் அமைந்துள்ள சக்தி மையம்.

உங்களை உயர்த்திரும் ஒரே யுக்தி
ஸஞ்ஜயன் நிகழ்ச்சிகளை, போர் நடவடிக்கைகளை விவரிக்கத் தொடங்கும்விதமும் கவனத்தைக் கவருகிறது.
தம்முடைய தந்தை குருடராகவும், தம்முடைய செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய சக்தியற்றவராகவும் இருந்ததால், பட்டத்து இளவரசரான துரியோதனன் தாமே மன்னருக்குரிய நடைமுறை அதிகாரங்களைத் தம் கையில் எடுத்துக் கொண்டார். துரியோதனன், தமக்கு முன்னால் அணி வகுத்து நின்ற பாண்டவ சேனையைப் பார்த்தார். அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, துரியோதனனுக்கு, தம் உள்ளுணர்ச்சியை வெளிப்படுத்துவதற்குப் பல வழிகள் இருந்தன.
ஒன்று, ஒரு தனிமனிதராக இந்தப் போரைத் தூண்டிவிட்டு துவக்கியதற்காக, அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் அல்லது 'நிச்சயமாக எதிரிகளை வீழ்த்தி வெற்றி அடைந்துவிடலாம்' என்று நினைத்து மகிழந்திருக்கலாம் அல்லது தமது படையினரையும் தன்னையும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்ளும் வகையிலும் எதிரிக்கு சவால்விடும் வகையிலும் அவர் கோபத்துடன் கர்ஜித்திருக்கலாம்.
ஆனால் துரியோதனன் இதை எதையுமே செய்யாமல் எதிரியின் படையைப் பார்த்தவுடன், அவர் தமது ஆச்சாரியரும் வழிகாட்டியுமான துரோணரிடம் செல்ல முயற்சி செய்தார். கௌரவ சேனையின் சேனாதிபதிகளுள் ஒருவரும் அவரது ஆச்சாரியருமான துரோணரிடம் ஆசி பெறச் சென்றார்.
அவரது அந்தச் செய்கை, ஒன்றை நிச்சயப்படுத்திக் கொள்ளவே
நமக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
உள் மனப்
போராட்டங்களைப்
பற்றி அறிந்து கொள்வதே,
மூன்றாவது கண்
திறப்பதற்கான
முதல் படி.
செய்யப்பட்டது! அதாவது, போரின் முடிவினால் ஏதாவது பழி நேரும் என்றால், அது ஆச்சாரியரின் மீதே இருக்க வேண்டும் என நிச்சயித்தே செயல்பட்டார்.
துரியோதனன், அவரது வழிகாட்டியான
துரோணரை நோக்கிப் போனது,
அவரிடமிருந்து ஆசிகளைப் பெறவும்
வெற்றியைப் பற்றி மீண்டும் உறுதி
செய்துகொள்ளவுமே என்பதைவிட,
அவரையே போருக்குப் பொறுப்பாளராக்க
மட்டுமேதான்.
இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள்
நடந்துகொள்கிறார்கள். ஒரு திட்டப்படி
செயல்படத் தொடங்கும் பொழுதே, அது
தவறுதான் என்பதையும் அது ஆபத்தான பல
பின்விளைவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும்
வழிவகுக்கும் என்பதையும் தெளிவாகத்
தெரிந்துகொண்டே, அதைச்
செயல்படுத்துவார்கள்.
பிறகு எந்தக் காரணத்தையாவது கண்டு பிடித்து மற்றவர்கள் மீது பழி சுமத்துவார்கள். தங்களுடைய இந்தச் செய்கையினால் தொடரப்போவது துன்பகரமான விளைவுகள்தான் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்த விஷயம்தான் என்றாலும் துக்கத்தைத் தோற்றுவிக்கக் காரணமாய் இருக்கப் போவது அவர்களது முட்டாள்தனமான செய்கைகளே என்பது தெரிந்திருந்தாலும்கூட, அதற்கான காரணத்தை மட்டும் வேறு ஒருவர் மீது சுமத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆறுதலடைகிறார்கள்.
அது தர்க்க வாதத்திற்கு சிறிதளவும் ஏற்றுக்கொள்ளத் தகாததாக இருந்தாலும் அவ்வாறே செய்கிறார்கள்.
துரியோதனன், நவீன கால நிர்வாகத்தில் உபயோகப்படும் அதிகார ஒப்படைப்பு முறையைப் பற்றி அன்றே நன்கு புரிந்து வைத்திருந்தார். இக்கால நிர்வாகிகள் பலரைப்போலவே, துரியோதனனும் அதிகார ஒப்படைப்பு மூலமாக, பகிர்தல் மூலமாக, பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டார்.
தகவல் தொழில் நுட்பத்துறையைச் சார்ந்த ஒருவர், அவரது அலுவலகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை என்னிடம் ஒருமுறை விளக்கினார்.
அவர் சொன்னார்...
"வாடிக்கையாளர் ஒருவர், எங்கள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் வந்து, அவர்களுக்காக ஒரு கடினமான பணியை ஒருவாரத்திற்குள் செய்துமுடிக்கக் கோரும் கோரிக்கை மனுவைக் கொடுத்தால், அந்தத் தலைமை அதிகாரி, அந்தக் கோரிக்கை மனுவை மண்டல மேலாளரிடம் (Divisional Manager) கொடுப்பார். அவர் அதைப் பணி மேலாளருக்கு (Project Manager) வைப்பார்.
பணி மேலாளர் அதைச் செயல் திட்டக்
குழுவிற்கு அனுப்பி, அதற்காகும் செலவு
விவரங்களைக் கணக்கிடுமாறு அவர்களுக்கு
அறிவுறுத்துவார்.
அந்தப் பணி, வெறுமனே ஒருவரின் விருப்பத்திற்காக மட்டும் மேற்கொள்ளப்படும் பணியாகவும், நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் கஷ்டத்திற்கும் பயன்தராததாகவும் இருந்தால், செயல் திட்டப் பணியிலிருக்கும் நாங்கள், எங்கள் தொழில் தலைவரான பணி மேலாளரிடம், "இது நடக்காத காரியம், இந்தப் பணியை மேற்கொள்வது படுமுட்டாள் தனமானது. ஒரு மாத கால அவகாசம் அளித்தாலும் இதை எந்தவிதத்திலும் செய்து முடிக்க முடியாது," என்று சொல்லி விடுவோம்.
பணி மேலாளர் மண்டல மேலாளரிடம், "இது மிகவும் கடினமான, அதே சமயம் அதிக செலவாகும்பணி. இதை முடிக்கப் பதினைந்து நாள்களுக்கு மேலாகும்," என்று சொல்லி விடுவார்.
மண்டல மேலாளர் தலைமை அதிகாரியிடம், "இது மிகப்பெரிய சவால். இதற்கு அதிகப் படியான நேரமும் பணமும் செலவு செய்தால், ஒரு வாரத்திற்குள் செய்து முடித்துவிட முடியும்" என்பார்.
தலைமை நிர்வாக அதிகாரி, வாடிக்கையாளரிடம், "எங்கள் அலுவலகம், உங்களுக்கு இந்தப் பணியை மூன்றே நாள்களில் முடித்துத் தரும்," என்று சொல்லி விடுவார். அவர் அவ்வாறு சொல்லும்போதே செயல் திட்டக்குழுவை அதற்குப் பொறுப்பாளியாக்கி விடுகிறார்," என்று சொல்லி முடித்தார்.
அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் ஒருவருக்கு, தாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாதவரை அதிகாரப் பங்களிப்பு மனித சக்திக்கு மீறிய தெய்விக நிகழ்ச்சிகளைக்கூட நடத்திவிடும்!
துரியோதனன், இப்பொழுது இந்தப் பிரிவில் அவரது நிர்வாகத் திறமையைக் காட்டுகிறார். போரில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். இருந்தாலும், பதவிக்கும் செல்வத்திற்குமான அவரது பேராசை, அவரை நிஜத்தைப் பார்க்க முடியாத குருடனாக்கிவிட்டது.
அவர் நிஜத்தையே மாற்றியமைக்க முயற்சி செய்தார். அதன் மூலமாக, அதன் விளைவுகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எண்ணினார்.
அப்போதிருந்த அந்த நிலைமைக்கான மொத்தப் பொறுப்பையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயங்குபவராக இருந்தார். காரணம், எப்படிப் பொறுப்பெடுப்பது என்றே அவருக்குத் தெரியவில்லை.
அவரால் செய்ய முடிந்ததெல்லாம், அவரது வழிகாட்டிகளிடம் சென்று, தம்முடைய வெற்றியை உறுதிப்படுத்தித் தருவது அவர்களது பொறுப்பு என்று சொல்வது மட்டுமே. போர்க்களத்திலே துரோணருக்கு, துரியோதனன் விடுத்த செய்தி அறிவுக் கூர்மையற்று இருந்தது.
பாரபட்சமின்றிக் கற்றுக்கொடுப்பது குருவிற்கே உரிய குணம். துரோணர் ஒரு க்ஷத்ரியர் அல்ல, அவர் ஒரு ப்ராஹ்மணர், மிகச்சிறந்த பண்டிதர், மிகச் சிறந்த அறிஞர். அவர் வில் வித்தைகளையும் போர்க் கலைகளையும் அவரது தந்தை பரத்வாஜ மஹரிஷியிடமிருந்து கற்றார்.
அப்பொழுது துருபதன் என்ற பாஞ்சால தேசத்து இளவரசனும் அவருடன் பயின்றார். இருவரும் நட்புடன் பழகி வந்தார்கள். அப்பொழுது துருபதன், தாம் அரச பதவியேற்றதும், பாஞ்சால தேசத்தின் ஒரு பகுதியை, தமது நண்பனான துரோணருக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்.
காலங்கள் உருண்டோடின. ஒரு சமயம் துரோணருக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்பொழுது, தம் நண்பன் துருபதன் அரசராக இருப்பதை அறிந்து, அவர் துருபதனிடம் உதவி கேட்டுச் சென்றார். ஆனால் துருபதன் அவரை ஏளனம் செய்து, அரசவையிலிருந்து வெளியேற்றி விட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு துரோணர் பாண்டவ, கெளரவ இளவரசர்களுக்கு ஆச்சாரியரானார்.
பயிற்சியின் முடிவில், அக்கால வழக்கப்
படி, ஆச்சாரியாருக்குக் கொடுக்க
வேண்டிய கட்டணமான குரு தக்ஷிணையைக்
கேட்டார். ஆனால் அதைச் செல்வமாகவோ,
பொருளாகவோ அல்லாமல், பாஞ்சால அரசன்
துருபதனைக் கைது செய்து அழைத்து
வரும்படி கேட்டார்.
பாரபட்சமின்றிக்
கற்றுக்கொடுப்பது
குருவிற்கே
உரிய குணம்.
அவரது மாணாக்கர்களில், சீடர்களில், அர்ஜுனன் மட்டுமே அதைச் செய்யத் தயாராயிருந்தார். அதேபோல், ஆச்சாரியார் கேட்டதற்கு இணங்க, துருபதனைப் போரில் வென்று, கைது செய்து துரோணரிடம் தக்ஷிணையாக அளித்தார்.
துரோணர் துருபதனை விடுவித்து, அவரது அரசையும் அவருக்கே திருப்பி வழங்கினார். கைது செய்யப்பட்டு, துரோணரிடம் சரணடைந்த பிறகும் துருபதன் இழிவு படுத்தப்பட்டார்.
அதன்பிறகு அவர் ஆழ்ந்து தவம் செய்து, துரோணரைக் கொல்வதற்காகவே ஒரு மகனை வேண்டி வேள்வி செய்தார். அந்த வேள்வியில் இருந்து தோன்றியவரே திருஷ்டத்யும்னன். அதே வேள்வியில் இருந்துதான் திரௌபதியும் தோன்றினார். விதி வசத்தால், ஊழ்வினையால், திருஷ்டத்யும்னன் துரோணரின் சீடரானார்.
துரோணர், திருஷ்டத்யும்னனின் பின்புலம், அவரது பிறப்பின் காரணம் பற்றி உணர்ந்திருந்தார். இருந்தாலும் அவர் திருஷ்டத்யும்னனை அவருடைய சீடராக, மாணாக்கராக ஏற்று, அவருக்கும் போர்க் கலைகளைப் பயிற்றுவித்தார்.
இந்த மஹாபாரதப் போரில், பாண்டவ படையின் தலைமை சேனாதிபதியாக திருஷ்டத்யும்னனே பொறுப்பே பற்றிருந்தார். துரோணர், அவரை எதிர்க்கும் கௌரவ சேனையின் சேனாதிபதிகளுள் ஒருவராக இருந்தார்.
இப்பொழுது எதிரிப்படையை வழிநடத்துபவரும் தமது உயிரை மாய்க்க வந்தவருமாகிய திருஷ்டத்யும்னனைப் பயிற்றுவித்த துரோணரின் முன்னறிவின்மையைப் பற்றி துரியோதனன் நேரடியாகக் குறிப்பிட்டார்.
நீங்கள்
போர்க்களத்தில்
இருந்தாலும் சரி,
அடுக்களையில்
இருந்தாலும் சரி,
‘பொறுப்பெடுத்தலே’
உங்களை
உருமாற்றும்.
அவர் பேசியவிதம் துரோணரை
எச்சரிக்கும்விதத்தில் இருந்தது.
அவரது மாணாக்கர் என்பதற்காக,
திருஷ்டத்யும்னனை அதிகமாக
நம்பிவிடவும் வேண்டாம்; எதிரியைச்
சுலபமாக, இலகுவாக எண்ணிவிடவும்
வேண்டாம் என்று எச்சரிக்கும்விதமாகப்
பேசினார்.
அதற்குப் பிறகு துரியோதனன் மற்ற சிறந்த
பாண்டவ வீரர்களான பீமன், அர்ஜுனன்
ஆகியோரைக் குறிப்பிட்டு, அவர்களும்
துரோணரின் சீடர்களே என்றார். அதேபோல்
பாண்டவர்களுக்காகப் போரிடும் மற்ற சிறந்த
வீரர்களையும் குறிப்பிட்டார்.
துரியோதனன், அதன்பின் கௌரவர்கள்
பக்கம் உள்ள சிறந்த வீரர்களைப் பற்றியும்
விளக்கி உரைக்க முடிவுசெய்தார்.
துரியோதனன், தமது வழிகாட்டியிடம்
பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையே
முற்றிலும் மறந்திருந்தார்.
> நம்முடைய பேராசை,
> நாம்
> யாரிடம் பேசுகிறோம்,
> எதைப் பேசுகிறோம்
> என்பதையே
> மறக்கச் செய்துவிடும்.
ஏதோ துரோணரைக் கூலிக்காகப் போரிட அழைத்து வந்ததுபோல் பேசினார். ஒரு புறம் எதிரிகளின் வீரர்களைப் பயிற்றுவித்ததற்காக துரோணரைக் கடிந்து பேசினார். மறுபுறம், தமது பக்கத்தில் உள்ள சிறந்த வீரர்களிடையே துரோணரைத் தலைமைப் பீடத்தில் வைத்து அவரைச் சமாதானமும் செய்தார்.
துரியோதனன் முற்றிலும் குழப்பத்தில் இருந்தார். பாண்டவ சேனையைப் புகழ்ந்து பேசினார். அதன் பலத்தைப் பற்றிப் பெருமையாகப் பேச ஆரம்பித்தார். உண்மையில் பாண்டவ சேனையைப் பற்றி அவர் புகழ விரும்பவில்லை. ஆனாலும் துரோணர் செய்த தவறுகள் என்று, தாம் எவற்றை எல்லாம் கருதினாரோ அவற்றை எல்லாம் அவருக்குச் சுட்டிக்காட்டவே அவ்வாறு செய்தார்.
ஒரு வகையில், ஒரு க்ஷத்ரியரான துரியோதனனுக்கு, ஒரு ப்ராஹ்மணப் பண்டிதராகிய, கல்விமானாகிய துரோணரிடம் சிறிதும் மரியாதை இல்லை! போர்புரிதல், ப்ராஹ்மணருக்கான தொழிலே அல்ல என்றுதான் அவர் நினைத்தார்.
இருந்தாலும் துரோணரின் போர்த் திறமையைப் பற்றி அறிந்திருந்ததாலும் துரோணர் பாண்டவர் பக்கம் சேர்ந்துவிட்டால், அது தமக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதற்காகவுமே, வேறுவழியில்லாமல் துரோணரைத் தம் பக்கத்தில் வைத்திருந்தார்.
அதே சமயத்தில் மற்றொரு வகையில், துரியோதனனுக்குத் துரோணரிடம் துளியும் நம்பிக்கையில்லை. அர்ஜுனன் அவரது சிறப்பிற்குரிய,
தனிச் சலுகைக்குரிய மாணவர் என்பதால், எப்பொழுதுமே அவர் பாண்டவர்களுக்கு ஆதரவாக பாரபட்சமாகவே நடந்து கொள்வார் என்றே துரியோதனன் எண்ணி வந்தார்.
வாய்ப்பு கிடைக்குமானால், துரோணர் எப்பொழுது வேண்டுமானாலும் தமக்கு ஆதரவு தராமல் போய் விடுவார் என்றுகூட துரியோதனனுக்குத் தெரியும். அதை இதயப்பூர்வமாகவே அறிந்திருந்தார். துரோணருக்குத் தம் மீது சிறிதும் மதிப்பில்லை என்பதையும், தம்முடைய செய்கைகள் எல்லாம் தவறானவை என்று துரோணர் கருதுகிறார் என்பதையும் துரியோதனன் அறிந்திருந்தார்.
கிருஷ்ணரை மிகவும் சிறப்பானவராக துரோணர் கருதுகிறார் என்பதையும், தாம் இந்தப் போரில் வெற்றியடைய முடியும் என்பதை துரோணர் நம்பவில்லை என்பதையும் அறிந்தே இருந்தார்.
உங்கள் முதல்
சேவை,
உங்களையே
குழப்பத்திலிருந்து
வெளிக்கொண்டு
வந்து கொள்வதே!
மொத்தத்தில் துரியோதனன், ஓர் ஆழ்ந்த உள் மனப் போராட்டத்தில் இருந்தார். மொத்த இராஜ்ஜியத்தையும் தானே ஆள வேண்டும் என்றும், பாண்டவர்கள் உயிரோடு இருக்கும்வரை தமக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் துரியோதனன் நம்பினார். அதனால் முற்றும் நம்பிக்கை இழந்த நிலையில், ஒருவித மூர்க்கத்தனத்துடன் இருந்த அவருக்கு, தமது சகோதரர்களுடனேயே போரிடுவது குறித்து எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.
அவரது மொத்தப் பிரச்சனையுமே நல்லது செய்வதைப் பற்றியோ அல்லது தீயது செய்வது பற்றியோ அல்ல.
அவரைப் பொறுத்தவரையில், அவர் எதைச் செய்தாலும் அது நன்மையானதுதான், சரியானதுதான் என்று நினைத்தார். உண்மையில் அவர் ஆழ்ந்து சிந்திக்கும் வழக்கத்தையோ, திறனையோ கொண்டவரல்ல.
அவரது அணியில் அவருக்குப் பக்க பலமாக மாவீரர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் துரியோதனனுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர் பக்கமிருந்த பல வீரர்கள், முக்கியமாக துரோணர், பீஷ்மர், கிருபாச்சாரியார் போன்ற எல்லோருமே பாண்டவர்களுக்கும் ஆச்சாரியர்களாக இருந்ததால், பாண்டவ சேனையுடன் அவர்கள் போர் செய்வதை விரும்பவில்லை என்பதை துரியோதனன் நன்றாகவே அறிந்திருந்தார்.
அவர்களுக்குரிய கடமையின்படி செயலாற்ற வேண்டும் என்று அவர்கள் கருதுவதால் மட்டுமே, அவர்கள் தம் பக்கத்திலிருந்து போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் தங்களுடைய விழிப்புணர்வின் வழிகாட்டுதலின்படி போர் புரிய வரவில்லை என்பதையும் அறிந்திருந்தார். இவையே அவரது மொத்தக் குழப்பத்திற்கும் நிச்சயமற்ற தன்மைக்குமான மூலக் காரணங்கள்.
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், துரியோதனன், சேனாதிபதிகளின் தலைவரும் தமது பெரிய பாட்டனாருமான பீஷ்மரிடம் செல்லாமல், துரோணரிடமே நேராகச் சென்றார். துரோணரிடம் அவர் சொல்லியதையெல்லாம், பீஷ்மரிடம் சொல்ல அவர் அஞ்சினார் போலும்.
சிந்திக்கும்
திறன் அற்றவர்கள்,
கண் இருந்தும்
குருடர்களாகவே
இருக்கிறார்கள்.
துரோணர், அந்த நாட்டினுடைய ஒரு பிரஜை என்ற முறையில், அவர் அரசருக்குக் கட்டுப்பட்டவர் என்பதனால்தான், துரியோதனனால் அவரை உரசிப் பார்க்கும் வகையில் பேச முடிந்தது. ஆனால் பீஷ்மர் அப்படியல்ல. அவர் அவரது பெரிய பாட்டனார். தமது தந்தையாரின் வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டும், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டும், தமது அரசுரிமையையே துறந்தவர் பீஷ்மர்.
போரின் இந்தக் கட்டத்தில், இப்படியெல்லாம் பீஷ்மரிடம் சென்று பேசுவதற்கு துரியோதனனால் முடியவில்லை. போரில் நம்பிக்கையிழந்து, மூர்க்கத் தனத்துடன் பீஷ்மரிடம் பேசும் நிலைமைக்கு இன்னும் துரியோதனன் வரவில்லை.
போரின் பிற்பகுதியில், கௌரவ சேனைகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தபொழுது, துரியோதனன் பீஷ்மரிடம் சென்று, அவர் பாண்டவர்கள் பக்கம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகச் சொல்லி பீஷ்மர் மேல் குற்றஞ்சாட்டினார்.
கேள்வி: ஸ்வாமிஜி, உடலளவில் கண்பார்வையற்றவர்களைப் பற்றியும் பார்வை இருந்தும் அறியாமையால் குருடர்களாகவே இருப்பவர்களைப் பற்றியும் பேசியிருந்தீர்கள். திருதராஷ்டிரர் போன்ற பேரரசர்களே தம் மகன்மேல் கொண்ட அன்பு எனும் பெரும் திரையால் மூடப்பட்டு அறியாமையால் பார்வையற்றவராக இருக்கும்பொழுது சாதாரண மனிதர்கள் எப்படிச் சிறந்தவர்களாக இருக்க முடியும்?
மஹாபாரதம் எப்படி வாழ்க்கைக்கு
உருவகமாக இருக்கிறதோ, அதேபோல
திருதராஷ்டிரர், மொத்த மனித
குலத்திற்குமான உருவகமாக இருக்கிறார்.
கண்பார்வையற்ற ஒருவர், அதை எதிர்த்துச் சமாளித்து வெற்றிகரமாகச் செயல்படக் கற்றுக்கொள்ள முடியும். அதற்காகச் சிறிது துன்பங்களைக் கடக்க வேண்டியிருக்கும், அவ்வளவுதான். அவர், தமது கண்பார்வையற்ற தன்மையைப் பற்றி அறிந்திருப்பார். அந்தக் குறைப்பாட்டினால் வரும் சுமையை, துக்கங்களைக் கடந்து செல்வதற்குத் தேவையான செயல்களைச் செய்வார்.


ஆனால் அறியாமையின் காரணமாக மனத்தளவில் குருடராய் இருக்கும் ஒருவர்தான், தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாப் பிரச்சி னைகளுக்கும் காரணமாகிறார். ஏனென்றால் மனம் சார்ந்த குறைபாடுகளைக் கண்டறிந்து, அதை எதிர்த்துச் சமாளித்து, வெற்றிகரமாகச் செயல்படுவது மிகவும் கஷ்டம். அநேகமாக நீங்கள் பார்வையற்றிருப்பதே உங்களுக்குத் தெரியாது. இங்குதான் பிரச்சினையே!
உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை அறிந்த பிறகுதான், நீங்கள் அதற்கான தீர்வைத் தேட முடியும்! ஆனால் பிரச்சினை இருப்பதே உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் இயல்பானவராக இருப்பதாகவே நினைக்கிறீர்கள். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இயல்பானவைதான், வழக்கமானவைதான் என்று நினைக்கிறீர்கள்.
உங்களைச் சுற்றிப் பாருங்கள். நிஜ வாழ்வில், பல உதாரணங்களைக் காண்பீர்கள். பல பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகளின் செயல்பாடுகள் தவறு என்று தெளிவாகத் தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களது பிள்ளைகள் தவறு செய்யாதவர்களே!
ஒருமுறை ஒரு தந்தை அவர் வாழ்வில் நடந்ததை விவரித்தார்:
அவர் தமது மகனை, இந்தியாவிலேயே முதன்மையானதாக விளங்கும் தங்கும் வசதியுடன்கூடிய ஒரு பள்ளியில் சேர்த்தார். அதற்காகக் கடன் வாங்கினார். அது அவருக்கு மிகப்பெரிய பொருளாதார சுமையாக இருந்தபோதும், தமது மகன் ஒரு மிகச்சிறந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காகவும், அதிகாரத் தொடர்புடையவர்களின் பிள்ளைகளுடனும் பணக்காரர்களின் பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் அப்பள்ளியில் சேர்த்தார்.
அவரது மகன் விளையாட்டில் மிகச் சிறந்து விளங்கினான். பல விளையாட்டுக் குழுக்களுக்குத் தலைவனாக இருந்தான். அவனது இறுதி வருடப் படிப்பிற்கு முந்தைய ஆண்டில், அவனிடம் போதைப் பொருள் இருந்ததை அறிந்து, விடுதிக் காப்பாளர் அவனை விடுதியில் இருந்து வெளியேற்றினார்.
ஆனால் மகன், தாம் குற்றமற்றவன் என்று சொன்னான். ஆனாலும் மற்ற மாணவர்களும் விடுதிக் காப்பாளரும் அவருடைய மகனுக்குப் போதைப் பொருள் சம்பந்தமான பிரச்சினை இருப்பதாகச் சொன்னார்கள். தந்தையார், தமது மகனை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற பல வழிகளிலும் முயற்சி செய்து தோல்வியுற்றார்.
தனது மகனை வீட்டிலிருந்தவாறே
படிக்குமாறு சொல்லி, அருகில் உள்ள
வேறு ஒரு பள்ளியில் சேர்த்தார். அந்தப்
பள்ளியிலும் ஆசிரியர்கள் பெற்றோரிடம்,
"உங்களது மகனது செய்கைகள் தவறாகத்
தெரிகின்றன, தாங்கள் சிறிது கவனத்துடன்
பார்த்துக்கொள்ளுங்கள்," என்று
அறிவுறுத்தினார்கள்.
> உங்களுக்கு
> ஒரு பிரச்சினை
> இருக்கிறது என்பதை
> அறிந்த பிறகுதான்,
> நீங்கள்
> அதற்கான தீர்வைத்
> தேட முடியும்!
மகன் தந்தையிடம் வேறு கதை சொன்னான். மகன் சொல்வதையே தந்தை நம்பினார். அவனை போதையிலிருந்து மீட்க உதவும் மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார்.
ஒரு வழியாக அவன் எப்படியோ கல்லூரிப் படிப்பை முடித்து விட்டான். இன்று அவன் இருபத்தைந்து வயது நிரம்பிய ஓர் இளைஞன். ஆனாலும் எந்த ஒரு வேலைக்கும் போகாமல், பெற்றோர்களுக்கு ஒரு பாரமாக உள்ளான். அவனுக்கு இப்போதும் போதைப் பிரச்சினை இருக்கிறது. இருந்தாலும், அந்தத் தந்தையார் அதை ஏற்றுக்கொண்டு மகனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறார்.
இது ஏதோ வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வா? இல்லவே இல்லை.
| நமது அஹங்காரத்தை பாதுகாப்பதற்காகவே, நாம் உண்மையை ஏற்க மறுக்கிறோம். | பல வீடுகளில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய், இதே போன்ற பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். அங்கேயும் பெற்றோர்கள் நிஜத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். உண்மை கடுமையானதாக இருக்கும்பொழுது, அவர்கள் பொய்களின் பின்னால் மறைந்துகொள்கிறார்கள். அநேகமாக அவை பொய் என்று தெரிந்தே அவ்வாறு நடந்துகொள்கிறார்கள். |
இன்று நம்மிடையே அத்தனை திருதராஷ்டிரர்கள் இருப்பது ஏன்? உண்மையை ஏற்க மறுப்பது ஏன்?
நமது அஹங்காரத்தைப் பாதுகாப்பதற்காகவே உண்மையை ஏற்க மறுக்கிறோம்.
அந்த மகன் ஒரு போதைப் பொருளுக்கு அடிமையானவன் என்று மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் தந்தையாரே அதை ஏற்றுக்கொண்டால், அது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகிவிடுகிறது.
அவர் ஏற்றுக்கொள்ளாதவரை மொத்த உலகமுமே அதைப் பற்றிப் பேசினாலும் அந்தத் தந்தை ஒரு கொத்துப் பொய்களின் பின்னால் ஒளிந்துகொண்டு, எல்லாம் நல்லதாக நடப்பதாக நினைத்துக்கொள்கிறார்.
மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், அது பிரச்சினையை ஏற்றுக்கொண்டதாகி விடுகிறது. தந்தையின் பார்வையில், அப்படி ஏற்றுக்கொள்வது, ஒரு வெட்கத்திற்குரிய செயலாகவும் அவரது மகனது செய்கைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது.
பலருக்கும் தங்களுடைய செயல்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானதாக இருக்கிறது. அதை இழந்தால், எல்லாவற்றையும் இழந்ததாக நினைக்கிறார்கள்.
அவர்களது மொத்த வாழ்வுமே,
மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவதையும்
சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுதலையும்
சார்ந்தே இருக்கிறது.
மக்கள், தங்களைப் பற்றியும் தங்களது
தீர்மானங்களைப் பற்றியும் மிகவும்
தாழ்வாகவே நினைக்கிறார்கள்.
அதனால்தான் மற்றவர்கள்
எதைச் சொல்கிறார்களோ, எதை
நினைக்கிறார்களோ அதன் படியே
வாழ்கின்றனர். அவர்கள் மற்றவர்களின்
இசைக்கேற்ப நடனமாடுகிறார்கள்.
> உண்மை
> கடுமையானதாக
> இருக்கும்பொழுது,
> பொய்களின் பின்னால்
> மறைந்து
> கொள்கிறோம்.
நாம் எல்லோரும் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே, நம்மீதே நாம் நம்பிக்கை வைத்துக்கொள்ளக்கூடாது என்றே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.
அந்தக் கட்டுறு மனப்பாங்கிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
எப்பொழுதுமே "இதைச் செய், அதைச் செய்," என்றோ அல்லது பல சமயங்களில் "அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே," என்றோ சொல்லப்பட்டே வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
கீழ்ப்படியும் குழந்தைகள் பரிசு பெறுவார்கள், மற்றவர்கள் தண்டனை பெறுவார்கள். அவர்களுக்கு வேறுவழி இல்லை.
குழந்தைகளுக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகொடுக்கப் படுவதில்லை.
அவர்கள் விரும்பியதை அவர்களால்
தேர்வு செய்ய முடியாது. முற்றிலும்
கட்டுப்படுத்தப்பட முடியாத சில
குழந்தைகள்தான் அவர்கள் விரும்பியதைச்
செய்ய முடியும். அப்படிச் செய்து விட்டு,
தண்டனையிலிருந்து தப்பவும் முடியும்.
மற்ற குழந்தைகளைப் பொறுத்தவரையில்,
பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு
நடப்பதுதான் மேலானதாகவும் எளிதாகவும்
பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.
அடிப்படையிலேயே, குழந்தைப் பருவம் முதற்கொண்டே நீங்கள், உங்களுக்கு எது நன்மையைத் தரும், எது தீமையைத் தரும் என்பதை உங்களுடைய பெற்றோரும் மற்ற பெரியவர்களுமே முடிவு செய்வதை ஏற்றுக் கொண்டீர்கள். அது, நீங்கள் வயதிற்கு வந்த பிறகும், வயதான பிறகும் தொடருகிறது. நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே, உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்; உங்களுடைய வழிமுறை என்னவாக இருக்க வேண்டும் என்பவை வரையறைக்கப்பட்டு விடுகின்றன.
‘வாழ்க்கையில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது’ என்பது குறித்த ஒரு கையேடு கொடுக்கப்பட்டு விடுகிறது. அந்தக் கையேட்டில் பத்து, நூறு அல்லது ஆயிரக்கணக்கான கட்டளைகள், தெய்விக கட்டளைகள்போல் தரப்பட்டிருக்கும்.
அதனால் தான் அனேகமான மக்கள் உயிரில்லாமல் ஆழமான மந்தத் தன்மையோடு இருக்கிறார்கள். உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நீங்களும் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், ஆ! இல்லையில்லை, உண்மையில் தாழ்த்தப்பட்டிருக்கிறீர்கள்.
இயல்பான மகிழ்ச்சியுடனும் அறிந்துகொள்ளும் ஆவலுடனும் இருக்கும் குழந்தைத் தன்மையிலிருந்து, அந்த மனிதக் கையேட்டின் உதவியுடன் மட்டுமே வாழ முடிந்த மந்தத் தன்மையுடைய இளைஞராக வளர்க்கப்படுகிறீர்கள்.
கையேட்டில் இல்லாத எதையும் செய்யத்துணிவில்லாமல் பயப்படுகிறீர்கள். நீங்கள் செய்து வந்த ஒன்றை விட்டு விட்டு, மாறுபட்டு வேறொன்றைச் செய்வதற்குப் பயப்படுகிறீர்கள். குறிப்பிட்ட வழிமுறைகளை மட்டுமே

பின் பற்றி, எந்தவொரு மாற்றமும்
இல்லாமல் அப்படியே இருப்பது
மட்டுமே உங்களுக்கு ஆபத்தில்லாத
பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.
சிலரைப் பார்த்தோமானால், அவர்கள் சாப்பிடும்பொழுதுகூட ஒரே இடத்தில் அமர்ந்துதான் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவார்கள். கடைக்குப் போவதென்றாலும் அருகிலிருக்கும் ஒரே கடைக்கே செல்வார்கள்.
வாழ்நாள் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே அவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். அதைப் பற்றி மிகவும் பெருமையாக வேறு சொல்லிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் வாழும்போதே இறந்தவர்கள்தான்.
ஆழ்ந்து சிந்தித்தோமானால், அது நமது பாதுகாப்பற்ற தன்மையின் பிரதிபலிப்பே என்பதை உணரலாம். நமது சாப்பிடும் இடத்தை மாற்றுவதையும் அபாயமாக நினைத்து ஏற்க பயப்படுகிறோம். புதிய நண்பர்களைச் சேர்த்துக் கொள்வது, வழக்கமான வேலை முறையை மாற்றுவது போன்ற எல்லாவற்றையும் அபாயகரமானதாக நினைக்கிறோம்.
காலத்தாலும் இடத்தாலும் நாம் உறைந்து விட்டோம். நிச்சயமாக, அது நமக்கு ஒருவித சௌகரியத்தைக் கொடுக்கும். ஆனால் அது ஒரு உள்ளீடற்ற சாரமற்ற சௌகரியமாகவே இருக்கும். எருமை மாடுகள், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று சேற்றில் வீழ்ந்து கிடப்பதைப்போல்தான்
எருமை
ஒரு விலங்கு.
அது
தன் இயல்பான
உணர்வின்படி
நடக்கிறது. ஆனால்
நாம் அப்படியா?
நாமும் இருக்கிறோம். அது மீண்டும்
அதே இடத்திற்குச் சென்று வீழ்ந்து
கிடக்கும் படியான ஒரு வரையறுக்கப்பட்ட
கட்டமைப்புடன் படைக்கப்பட்டுள்ளது.
எருமை ஒரு விலங்கு. அது தம் இயல்பான
உணர்வின்படி நடக்கிறது. ஆனால் நாம்
அப்படியா?
ஒரு அடையாளத்தை நமக்கென்று ஏற்படுத்திக் கொள்வது நமது வழக்கமாக இருக்கிறது. அதன் பிறகு அந்த அடையாளத்தாலேயே நாம் கட்டப்பட்டு விடுகிறோம். உண்மையில் நாம் யார் என்பதை அறிந்துகொள்ள,
நம்மை நாமே கேட்டுக்கொள்ள பயப்படுகிறோம்; துணிவில்லாமல் இருக்கிறோம்.
நாம் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரமும், நமக்கு நாமே கொடுத்துக்கொண்ட பட்டமோ, பதவியோ அல்லது சமுதாயம் நமக்குக் கொடுத்த பட்டமோ, பதவியுமேதான், நமது வாழ்வில் நமக்கு மிக மிக முக்கியமானதாக ஆகி விடுகிறது.
அதை உடைத்து விட்டு வெளியே வந்தோமானால், சமுதாயத்தின் மதிப்பை நாம் இழக்க வேண்டி வரும். நம்மில் பலருக்கு, உண்மையில் அது இறப்பதைவிட மிக மோசமானதாக இருக்கிறது.
வாழ்வைவிட, புகழ் நல்ல பெயரே மிக முக்கியம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவமரியாதையைவிட உயிர் விடுதலையே சில அரசர்கள் ஆதரித்தார்கள். அதுவே அவர்களது கோட்பாடாக இருந்தது.
ஆனால் மதிப்பு, மரியாதை, புகழ் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள யாராவது முயற்சி செய்கிறார்களா?
நமக்கு, எது நற்பெயரைத் தரும், நமக்கு எது மதிப்பைத் தரும் என்பதை வரையறுப்பது யார்?
ஒரு மகனின் வாழ்வும் மகிழ்வும் சமுதாயத்தின் கருத்தைவிட முக்கியத்துவம் குறைந்ததாக இருப்பது ஏன்?
ஒரு மனைவியின் நடத்தை, நல்லொழுக்கம் ஒரு வழிப்போக்கன் சொல்வதைக்கொண்டு ஏன் வரையறை செய்யப்பட வேண்டும்?
நல்லொழுக்கம்,
நன்னடத்தை
என்பது எல்லாமே
சமுதாயம்
விதித்துள்ள நீதி நெறி
முறைகள்.
ஆசை மற்றும் பயத்தின் மூலமாக நம்மைக் கட்டுப்படுத்துவதற்கென்றே சமுதாயத்தால் உருவாக்கப்பட்டவை. இந்த நன்னடத்தை நீதி வரைமுறைகள். அது ஒரு நீதி நெறி; மனச்சாட்சிக்கான விதிமுறைகள்; வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிமுறைகள்.
அது உங்கள் உள்ளிருந்து வரும் குரல் அல்ல. உங்கள் உள் உணர்விலிருந்து, உங்கள் விழிப்புணர்விலிருந்து வரும் குறிப்பும் அல்ல.
ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் மனச்சாட்சி என்பது உங்களுடைய உள் உணர்வு அல்ல, இருப்பு நிலை அல்ல, விழிப்புணர்வு அல்ல.
மனச்சாட்சி என்பது உங்களுடைய குற்ற
உணர்ச்சிகளை மாட்டி வைத்துக்கொள்ள
உதவும் ஒரு வசதியான கொக்கியாக
மட்டுமே இருக்கிறது.
உங்கள் மகளோ, மனைவியோ உங்களது சமுதாய விதிமுறைகளை மீறுவதுபோல் தோன்றும்பொழுது, நீங்கள் அவர்களை தண்டிக்கவில்லையென்றால், நீங்கள் குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்கிறீர்கள். அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட, அவர்களைத் தண்டித்துவிட்டு, அவர்கள் தவறு செய்ததினால்தான் தண்டித்தேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு, உங்களது மனித நேயமற்ற தன்மையை நியாயப்படுத்திக்கொள்கிறீர்கள்.
இந்த முறையில் நாம் செயல்படும்பொழுது, இந்தச் சமுதாயத்திற்கும் நம்முடைய வாழ்விற்கும் நாம் செய்ய வேண்டிய சில கடமைகள் இருப்பதாக எண்ணிக்கொள்கிறோம்.
வாழ்க்கை நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை.
நம் சார்பாக நாம் இதைச் செய்து முடிக்க வேண்டும் என்று அது நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
நாம், நமது மனைவிக்கோ, கணவருக்கோ, மகன்களுக்கோ, மகள்களுக்கோ, பெற்றோருக்கோ அல்லது வேறு எவருக்குமோ கடன் பட்டிருக்கவில்லை. நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஒன்றுமே இல்லை. கடமை மற்றும் பொறுப்பு என்ற மன நிலையுடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்வரை நாம் நிபந்தனைகளுக்குட்பட்ட ஒருவித வியாபாரத் தன்மையுடன்தான் நடந்துகொள்கிறோம்.
நாம் நிபந்தனைகளுக்குட்படாத உறவு முறைகளுக்கு மாறிக்கொள்ளும்பொழுது, நமக்கு அப்படிப்பட்ட கடமைகள் இருப்பதில்லை.
நீங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆழ்ந்த விழிப்புணர்வுடன்
செயல்களைச் செய்யும்போது, கடமை என்ற வார்த்தை உங்களை விட்டு முற்றிலும் நீங்கி விடுகிறது. மனிதராகிய ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அப்படிப் கருணையோடு செயல்படும்பொழுது, நம்மால் யாருக்கும் தீங்கு செய்யவும் முடியாது; மற்றவருக்குத் தீங்கு வருவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
நாம் கருணையோடு செயல்படும்பொழுது, நாம் புத்திசாலித்தனமாகச் செயல் படுவோம்.
நாம், சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் நீதிநெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் செயல்படும்பொழுது, நாம் கண்மூடித்தனமான கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில் செயல்படுகிறோம், விழிப்புணர்வின்றி செயல்படுகிறோம்.
அதைத்தான் திருதராஷ்டிரர் இங்கே செய்கிறார். கண்பார்வை இழந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவரது மகன்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், முக்கியமாக முதல் மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற சுமையும் அவர் மீது இருந்தது. இளவரசரான துரியோதனனுடைய செய்கைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, ஒரு தந்தை என்ற முறையில், அதை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதாக திருதராஷ்டிரன் உணர்ந்தார்.
துரதிர்ஷ்டவசமாக திருதராஷ்டிரருக்கு, அவரது மகனிடம் உள்ள கடமை சார்ந்த அன்பைக் கடந்து அவரால் வெளியே வர இயலவில்லை. திருதராஷ்டிரரின் அன்பு, துரியோதனன் என்னும் எல்லையைக் கடந்து, பாண்டவ இளவரசர்களை நோக்கியும் விரிவடைந்திருந்தால், இந்த இதிஹாஸம் வேறுவிதமாக முடிந்திருக்கும்.
நாம் விழிப்புணர்வுடன் நமது உறவுகளின் எல்லைகளை விரிவுபடுத்தினோமானால், நம்மால் நம் வாழ்க்கை கதையின் முடிவைக்கூட வேறுவிதமாக மாற்றி அமைக்க முடியும். நமது கண்கள் உண்மையாகவே திறக்கப்பட்டுவிடும்.
நாம் கண்களால் பார்ப்பது மட்டுமல்ல, புத்திசாலித்தனத்துடனும் பார்க்க ஆரம்பித்து விடுவோம். இந்த மனப்பாங்கு சமுதாயத்தில் நாம் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து அமைவதில்லை. இது, சமுதாய விதிமுறைகளின்படி நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று நாம் எப்போதுமே கருதிக் கொண்டிருக்கிற செயல்களையும், நமது அறியாமையையும் நம்மைக் குருடாக்க அனுமதிக்கிறோமோ என்பதைப் பொறுத்தும், நாம் நமது உண்மையான பொறுப்புகளை விழிப்புணர்வுடன் செய்கிறோமோ என்பதைப் பொறுத்தும்தான் அமைகிறது.
