ஆறாவது அத்யாயம் ஆத்மஸம்யம் யோகம் ஸ்ரீ பகவான் உவாச
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
6.1
ஸ்ரீ பகவானுவாச-
அனாச்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய: |
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்னிர் ந சாக்ரிய: ॥ 1
ஸ்ரீ பகவான் உவாச - ஸ்ரீ பகவான் கூறினார் ; ய - எவனொருவன் ; கர்மபலம்
- கர்மத்தின் பயனை ; அநாச்ரித - சார்ந்திராமல் ; கார்யம் - செய்யவேண்டிய ; கர்ம
- கர்மத்தை ; க்ரோதி - செய்கிறானோ ; ஸ - அவன் ; ஸந்ந்யாஸீ - ஸந்யாஸியும் ; யோகீச - யோகியும் ; ச - மேலும் ; நிரக் நி - அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ந - ஆகமாட்டான் ; அக்ரிய : ச - செயல்களைச் செய்யாமல் துறப்பவனும் ; ந-
6.4
யதா ஹி நேந்த்ரியார்த்தேஷு ந கர்மஸ்வனுஷஜ்ஜதே |
ஸர்வஸங்கல்ப-ஸந்ந்யாஸீ யோகாரூடஸ்-ததோச்யதே || 4
யதா - எப்பொழுது; இந்த்ரியார்த்தேஷு - புலன்களுக்குரிய போகப் பொருட்களில்; ந அநுவஜ்ஜதே - பற்றுக் கொள்வதில்லையோ ; கர்மஸீ ஹி - கர்மங்களிலும் ; ந - பற்றுக் கொள்வதில்லையோ ; ததா - அப்பொழுது ; ஸர்வஸங்கல்ப ஸந்ந்யாஸீ - எல்லா சங்கல்பங்களையும் துறந்தவனான அவன் ; யோகாரூடே - யோகாரூடன் ; உச்யதே - கூறப்படுகின்றனை.
6.4 : எப்பொழுது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ, கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ, அப்பொழுது எல்லா சங்கல்பங்களையும் துறந்தவனான அவன் யோகாரூடன் என்று கூறப்படுகின்றனை.
6.5
உத்தரே-தாத்மனாத்மானம் நாத்மான-மவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்து-ராத்மைவ ரிபு-ராத்மன: || 5
ஆத்மநா - தானே ; ஆத்மாநம் - தன்னை ; உத்தரேத் - உயர்த்திக் கொள்ளவேண்டும். ஆத்மாநம் - தன்னை; ந அவஸாதயேத் - வீழ்த்திக் கொள்ளக்கூடாது ; ஹி - ஏனெனில் ; ஆத்மா ஏவ - தானே தான் ; ஆத்மந - தனக்கு ; பந்து - நண்பன் ; ஆத்மா ஏவ - தானே தான் ; ஆத்மந - தனக்கு ; ரிபு - பகைவன்.
6.5 : தானே தன்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னை தானே வீழ்த்திக் கொள்ளக்கூடாது. ஏனெனில் தனக்குத் தானே தான் நண்பன். மேலும் தனக்குத் தானே தான் பகைவன்.
6.6
பந்து-ராத்மாத்மனஸ்-தஸ்ய யேனாத்மைவாத்மனா-ஜித: |
அனாத்மனஸ்து சத்ருத்வே வர்தேதாத்மைவ சத்ருவத் || 6
யேந ஆத்மநா - எந்த ஜீவாத்மாவினால் ; ஆத்மா - மனம் ; புலன்களுடன் கூடிய உடல் ; ஜீத: - அடக்கி ஆளப்பட்டிருக்கிறதோ ; தஸ்ய ஆத்மந - அந்த ஜீவாத்மாவிற்கு ; ஆத்மா ஏவ - தனக்குத் தானே ; பந்து நண்பன் ; து - ஆனால் ; அநாத்மந - மனம் புலன்களுடன் கூடிய உடலை அடக்கி ஆளாதவன் ; ஆத்மா ஏவ - தனக்குத் தானே ; சத்ருவத் - பகைவனைப் போல ; சத்ருத்வே - பகைமை செய்வதில் ; வர்தேத -
6.9
ஸஹ்ருன்-மித்ரார்-யுதாலீந மத்யஸ்த்த-த்வேஷ்ய பந்துஷு |
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்-விசிஷ்யதே || 9
ஸீஹ்ருத் மித்ர அரி உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷீ - தன்னலம் கருதாது அனைவருக்கும் ஹிதம் செய்பவன், நண்பன், பகைவன், உதாஸீனன், நடுநிலையில் நிற்பவன், வெறுக்கத்தக்கவன், உறவினர் ஆகியவர்களிடம், ஸாதுஷ்ச - நல்லோர்களிடத்தும் ; பாபேஷீ அபி - பாவிகளிடத்தும் கூட ; ஸமபுத்தி - ஸமமான பாவனை கொண்டுள்ளவன் ; வசிஷ்யதே - மிகவும் சிறந்தவன் ஆகிறான்.
6.9 : தன்னலம் கருதாது அனைவருக்கும் ஹிதம் செய்பவன், நண்பன், பகைவன், உதாஸீனன், நடுநிலையிலே நிற்பவன், உறவினர், வெறுக்கத்தக்கவன் ஆகியவர்களிடத்தும் நல்லோர்களிடத்தும் பாவிகளிடத்தும் கூட ஸமமான பாவனை கொண்டுள்ளவன் மிகவும் சிறந்தவன் ஆகிறான்.
6.10
யோகீ யுஞ்ஜீத ஸதத-மாத்மானம் ரஹஸி ஸ்தித: |
ஏகாகீ யத-சித்தாத்மா நிராசீ-ரபரிகிரஹ: || 10
யத சித்தாத்மா - மனம், புலன்களுடன் கூடிய உடலை அடக்கி ; நிராஸீ - எதிலும் ஆசையில்லாமல் ; அபரிக் ரஹ - சேர்த்து வைத்துக் கொள்ளாத யோகீ - யோகி ; ஏகாகீ - தனி ஒருவனாக ; ரஹஸி - தனியான இடத்தில், ஸ்தித - அமர்ந்து கொண்டு ; ஆத்மாநம் - ஆத்மாவை ; ஸததம் - இடைவிடாது ; யுஞ்ஜீத - இணைக்கவேண்டும்.
6.10 : மனம், புலன்களுடன் கூடிய உடலை அடக்கி எதிலும் ஆசையில்லாமல், தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாத யோகி தனி ஒருவனாகத் தனியான இடத்தில் அமர்ந்து கொண்டு ஆத்மாவை இடைவிடாது பரமாத்மாவில் இணைக்கவேண்டும்.
6.11
சுசௌ தேசே ப்ரதிஷ்டாப்ய ஸ்திர-மாஸன-மாத்மன: |
நாத்யுச்சரிதம் நாதிநீசம் சைலாஜின-குசோத்தரம் || 11
சீசௌ - தூய்மையான ; தேசே - இடத்தில் ; சைல அஜிநகுசஉத்தரம் - தர்ப்பை, மான்தோல், துணி இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக விரித்து ; ந அத்யுச்சரிதம் - மிக உயரமாக இல்லாமலும் ; ந அதிநீசம் - மிகத்தாழ்வாக இல்லாமலும் ; ஆத்மந - தன்னுடைய ; ஆஸநம் - இருக்கையை ; ஸ்திரம் - அசைவற்றதாக; ப்ரதிஷ்டாப்ய - அமைத்துக் கொண்டு ; நினைத்தவனாக ; மத்பர - என்னையே அடையத்தக்க சிறந்த கதி எனக் கொண்டு ; ஆஸீத - நிலைபெற்றிருக்கவேண்டும்.
6.14 : ப்ரம்மசர்ய விரதத்தில் நிலைத்து நின்று அச்சமின்றி நன்கு மன அமைதி பெற்ற, விழிப்புணர்வோடு பெற்ற யோகி தன் மனதை அடக்கி என்னையே மனதில் நினைத்தவனாக என்னையே அடையத்தக்க சிறந்த கதி எனக் கொண்டு நிலைபெற்று இருக்கவேண்டும்.
6.15
யுஞ்ஜன்-னேவம் ஸதாத்மானம் யோகீ நியத-மானஸ: |
சாந்திம் நிர்வாண-பரமாம் மத்-ஸம்ஸ்த்தா-மதிகச்சதி || 15
நியதமானஸ - மனதைத் தன்வசப்படுத்திய ; யோகீ - யோகி; ஏவம் - இவ்விதம் ; ஆத்மாநம் - ஆத்மாவை ; ஸதா - இடையறாது ; யுஞ்ஜந் - இணைத்துக் கொண்டு ; மத்ஸம்ஸ்தாம் - என்னிடம் விளங்குகின்ற ; நிர்வாண பரமாம் - பரமானந்தத்தின் பெருநிலையாகிய சாந்திம் - அமைதியை ; அதிகச்சதி - அடைகிறான்.
6.15 : மனதைத் தன்வசப்படுத்திய யோகி இவ்விதம் ஆத்மாவை இடையறாது பரமேசுவரனான என்னுடைய ஸ்வரூபத்தில் இணைத்துக் கொண்டு என்னிடம் விளங்குகின்ற பரமாணந்தத்தின் பெருநிலையாகிய அமைதியை அடைகிறான்.
6.16
நாத்யச்னதஸ்து யோகோள்ஸ்தி ந சைகாந்த-மனச்னத: |
ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன || 16
அர்ஜுந - அர்ஜூனா ; யோக - யோகம் ; அத்யச்நத : து - மிகுதியாக ; உண்பவனுக்கும் ; ந அஸ்தி - கைகூடாது ; ஏகாந்தம் - அறவே ; அநச்நத : ச -உண்ணாமல் இருப்பவனுக்கும் ; ந - கைகூடாது. அதிஸ்வப்நசீலஸ்ய ச - மிகுதியாக உறங்கும் இயல்புடையவனுக்கும் ; ந - கைகூடாது ; ஜாக்ரத ஏவச்ச - எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் ; ந- கைகூடாது.
6.16: அர்ஜீனா! இந்த யோகம் மிகுதியாக உண்பவனுக்கும் அறவே உண்ணாமல் இருப்பவனுக்கும் கைகூடாது. மிகுதியாக உறங்கும் இயல்புடையவனுக்கும், எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் கைகூடாது.
6.17
யுக்தாஹார-விஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸ |
யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா || 17
6.20
யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோக ஸேவயா |
யத்ர சைவாத்ம-னாத்மானம் பச்யன்-னாத்மனி துஷ்யதி || 20
யோக ஸேவயா - யோகப்பயிற்சியினால் ; நிருத்தம் - கட்டுண்ட ; சித்தம் - சி த்தம் ; யத்ர - எந்த நிலையில் ; உபரமதே - ஓய்ந்து நிற்கிறதோ ; ச - மேலும் ங யத்ர
- எந்த நிலையில் ; ஆத்மநா - நுண்ணிய புத்தியினால் ; ஆத்மாநம் - பரமாத்மாவை ; பச்யந் - நேரில்கண்ட ; ஆத்மநி ஏவ - ஸச்சித் ஆனந்தமயனான பரமாத்மாவிலேயே ; துஷ்யதி - மகிழ்ந்து கொண்டிருக்குமோ.
6.20 : யோகப்பயிற்சியினால் கட்டுண்ட சித்தம் எந்த நிலையில் ஓய்ந்து நிற்கிறதோ, மேலும் எந்த நிலையில் பரமாத்ம தியானத்தால் தூய்மை பெற்ற நுண்ணிய புத்தியினால் பரமாத்மாவை நேரில் கண்டு ஸச்சித் ஆனந்தமயமான பரமாத்மாவிலேயே மகிழ்ந்து கொண்டிருக்குமோ.
6.21
ஸுக-மாத்யந்திகம் யத்தத் புத்தி-க்ராஹ்ய-மதீந்த்ரியம் |
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச் சலதி தத்வத: || 21
அதீந்த்ரியம் - புலன்களுக்கு அப்பாற்பட்ட ; புத்திக்ராஹ் யம் - தூய்மையான நுண்ணிய புத்திக்கு மட்டும் புலப்படும் ; யத் - எந்த ; ஆத்யந்திகம் - முடிவற்ற ; ஸுகம் - ஆனந்தம் உண்டோ ; தத் - அதை ; யத்ர - எந்த நிலையில் ; வேத்தி - அனுபவிக்கிறானோ ; ச - மேலும் ; ஸ்தித - நிலைபெற்று ; அயம் - இந்தயோகி ; தத்த்வத - பரமாத்ம ஸ்வரூபத்திலிருந்து ; ந ஏவ சலதி - விலகுவது இல்லையோ.
6.21 : புலன்களுக்கு அப்பாற்பட்ட தூய்மையான நுண்ணிய புத்திக்கு மட்டும் புலப்படும் எந்த முடிவற்ற ஆனந்தம் உண்டோ அதை எந்த நிலையில் அனுபவிக்கிறானோ மேலும் எந்த நிலைபெற்று இந்த யோகி பரமாத்ம ஸ்வரூபத்திலிருந்து விலகுவது இல்லையோ.
6.22
யம் லப்³த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத: |
யஸ்மின் ஸ்திதோ ந து:கேன குருணாபி விசால்யதே || 22
யம் லாபம் - பரமாத்மாவை அடைவதாகிற எந்தப்பேற்றை ; லப்த்வா - பெற்றதும் தத - அதைக் காட்டிலும் ; அபரம் - வேறொரு பேற்றை ; அதிகம் - உயர்வான
- தென்று ; நமந்யதே - கருதமாட்டானோ ; ச - மேலும் ; யஸ்மிந் - பரமாத்மாவுடன் ஒன்றிவிட்ட எந்நிலையில் ; ஸ்தித - நிலை பெற்ற யோகி ; குருணா - மிகப்பெரிய ; து: கேந அபி - துயரத்தால் கூட ; ந விசால்யதே - கலங்க மாட்டானோ.
6.22 : பரமாத்மாவை அடைவதாகிற எந்தப்பேற்றைப் பெற்றதும் அதைக் காட்டிலும் வேறொரு பேற்றை உயர்வானதென்று கருதமாட்டானோ, மேலும் பரமாத்மாவுடன் ஒன்றிவிட்ட எந்நிலையில் நிலை பெற்ற யோகி மிகப்பெரிய துயரத்தால் கூடக் கலங்க மாட்டானோ.
6.23
தம் வித்யாத் து:க்க-ஸம்யோக-வியோகம் யோக-ஸம்ஜ்ஞிதம் |
ஸ நிச்சயேன யோக்தவ்யோ யோகோSநிர்விண்ண சேதஸா || 23
து: கஸம்யோக வியோகம் - துன்பமயமான ஸம்ஸார சேர்க்கையிலிருந்து விடுபடுவதும் ; யோகஸம்ஜ்ஞிதம் - யோகம் என்ற பெயர் கொண்டதுமான ; தம் - அந்த யோகத்தை ; வித்யாத் - அறியவேண்டும் ; அநிர்விண்ண சேதஸா - சோர்வற்ற சி த்தத்தோடு ; நிச்சயேந - உறுதியுடன் ; யோக்தவ்ய - ஆற்றப்படவேண்டும்.
6.23: துன்பமயமான ஸம்ஸாரச் சேர்க்கையிலிருந்து விடுபடுவதும் யோகம் என்ற பெயர் கொண்டதுமான அந்த யோகத்தை அறியவேண்டும். அந்த யோகம் சோர்வற்ற தைர்யமும் உற்சாகமும் உள்ள சித்தத்தோடு உறுதியுடன் ஆற்றப்படவேண்டும்.
6.24
ஸங்கல்ப ப்ரபவான் காமான்ஸ்-த்யக்த்வா ஸர்வா-னசேஷத: |
மனஸை-வேந்த்ரிய-க்ராமம் விநியம்ய ஸமந்தத: || 24
ஸங்கல்பப்ரபவாந் - ஸங்கல்பத்தினால் உண்டாகக் கூடிய ; ஸர்வாந் - எல்லா ; காமாந் - விருப்பங்களையும் ; அசேஷத - மீதமின்றி ; த்யக்த்வா - துறந்து ; மநஸா - மனதினால் ; இந்த்ரியக்ராமம் - புலன்களின் கூட்டத்தை ; ஸமந்தத : ஏவ - எல்லாப் புறங்களிலிருந்தும் ; விநியம்ய - நன்கு அடக்கி.
6.24 : ஸங்கல்பத்தினால் உண்டாகக்கூடிய எல்லா விருப்பங்களையும் மீதமின்றித் துறந்து மனதினால் புலன்களின் கூட்டத்தை எல்லாப் புறங்களிலிருந்தும் நன்கு அடக்கி...
6.25
சனை: சனை-ருபரமேத் புத்³த்யா த்⁴ருதி-க்³ருஹீதயா |
ஆத்ம-ஸம்ஸ்தம் மன: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் || 25
சநை: சநை:- படிப்படியாக ; உபரமேத் - உலகியலிலிருந்து ஒதுங்கச் செய்ய வேண்டும் ; த்ருதிக்ருஹீதயா - உறுதி பூண்ட ; புத்த்யா - புத்தியினால் ; மந - மனதை ; ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா - பரமாத்மாவிடம் நிலை பெறச் செய்து ; கிஞ்சித் அபி - வேறு எதையும் ; நசிந்தயேத் - நினையாதிருக்க வேண்டும்.
6.25: படிப்படியாகப் பயின்று மனதை உலகியலிலிருந்து ஒதுங்கச் செய்ய வேண்டும். உறுதி பூண்ட புத்தியினால் மனதை பரமாத்மாவிடம் நிலை பெறச் செய்து பரமாத்மாவைத் தவிர வேறு எதையும் நினையாதிருக்க வேண்டும்.
6.26
யதோ யதோ நிச்சரதி மனச்-சஞ்சல மஸ்திரம் |
ததஸ்-ததோ நியம்யைத-தாத்மன்யேவ வசம் ந யேத் || 26
ஏதத் - இந்தத் அஸ்திரம் - நிலையில்லாத ; சஞ்சலம் - சஞ்சலமான ; மந - மனம் ; யத : யத : - எந்தந்த ஒலி முதலிய விஷயங்களின் காரணமாக உலகில், நிச்சரதி
- அலைகிறதோ ; தத: தத:- அந்தந்த விஷயங்களிலிருந்து ; நியம்ய - தடுத்து நிறுத்தி ; ஆத்மநி ஏவ - பரமாத்மாவினிடமே ; வசம் நயேத் - நிலை பெறச் செய்ய வேண்டும்.
6.26 : ஆனால் இந்த நிலையில்லாத அலைந்து கொண்டே இருக்கிற மனம் எந்தந்த ஒலி முதலிய விஷயங்களின் காரணமாக உலகில் அலைகிறதோ அந்தந்த விஷயங்களிலிருந்து தடுத்து நிறுத்தி அதைத் திரும்பத் திரும்பப் பரமாத்மாவினிடமே நிலை பெறச் செய்ய வேண்டும்.
6.27
ப்ரசாந்த மனஸம் ஹ்யேனம் யோகினம் ஸுகமுத்தமம் |
உபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்மபூத-மகல்மஷம் || 27
ஹி - ஏனெனில் ; பிரசாந்தமநஸம் - மனம் நன்கு அமைதியடைந்தவனும் ; அகல்மஷம் - பாவங்கள் அற்றவனும் ; சாந்தரஜஸம் ; ரஜோகுணம் அடங்கியவனும் ; ப்ரஹ்மபூதம் - ஸத் சித் ஆனந்தமயனான ப்ரம்மத்திலே ஒன்றியவனும் ஆன ; ஏநம் யோகிநம் - இந்த யோகியை ; உத்தமம் ஸுகம் - உயரிய ஸுகம் ; உபைதி - வந்தடைகிறது.
6.27 : ஏனெனில் மனம் நன்கு அமைதியடைந்தவனும் பாவங்கள் அற்றவனும் உலகியல் ஈடுபாடு அடங்கியவனும் ஸத்சித் ஆனந்தமயனான ப்ரம்மத்திலே ஒன்றியவனும் ஆன இந்த யோகியை உயரிய ஸுகம் வந்தடைகிறது. போவதில்லை ; ஸ:ச - அவனும் ; மே - எனக்கு ; ந ப்ரணச்யதி - காணப்படாமல் போவதில்லை.
6.30 : எவன் எல்லா சராசரங்களிலும் எல்லோருக்கும் ஆத்மாவான வாஸீதேவனான நானே வியாபித்திருப்பதாகப் பார்க்கிறோனோ, எல்லா சராசரங்களும் வாஸீதேவனான என்னிடம் அடங்கி இருப்பதாகப் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணப்படாமல் போவதில்லை. அவனும் எனக்குக் காணப்படாமல் போவதில்லை.
6.31
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்-யேகத்வ-மாஸ்தித: |
ஸர்வதா வர்தமானோSபி ஸ யோகீ மயி வர்ததே || 31
ய - எவன் ; ஏகத்வம் - ஒன்றிய நிலையில் ; ஆஸ்திக - நிலைபெற்று ; ஸர்வபூதஸ்திதம் - அனைத்துக் சராசரங்களிலும் ஆத்மாவாக விளங்கும் ; மாம் - ஸத் சித் ஆனந்தமயனான வாஸீதேவனான என்னை ; பஜதி - வழிபடுகிறானோ ; ஸ யோகீ - அந்த யோகி ; ஸர்வதா - எவ்வகையில் ; வர்தமாந: அபி - செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் ; மயி - என்னிடத்திலேயே ; வர்ததே - செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
6.31: எவன் ஒன்றிய நிலையில் நிலைபெற்று அனைத்துக் சராசரங்களிலும் ஆத்மாவாக விளங்கும் ஸத் சித் ஆனந்தமயனான வாஸீதேவனான என்னை வழிபடுகிறானோ, அந்த யோகி எவ்வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னிடத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவனுடைய அனுபவத்தில் என்னைத் தவிர வேறொன்றும் இல்லவே இல்லை.
6.32
ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பச்யதி யோSர்ஜுன |
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத: || 32
அர்ஜுந - அர்ஜூனா ! ; ய - எந்த யோகி ; ஸர்வத்ர - எல்லா சராசரங்களையும் ; ஆத்ம ஔபம்யேந - தன்னைப் போலவே ; ஸமம் - ஸமநோக்கில் ; பச்யதி - பார்க்கிறானோ ; வா - மேலும் ; ஸுகம் - ஸுகத்தையும் ; யத்வா - அல்லது : து : கம் - துக்கத்தையும் ; ஸ: யோகி - அந்தயோகி ; பரம : மத: - உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான்.
6.32 : அர்ஜூனா! எந்த யோகி எல்லா சராசரங்களையும் தன்னைப் போலவே ஸமநோக்கில் பார்க்கிறானோ, மேலும் ஸுகத்தையும் துக்கத்தையும் தன்னுடையவை போன்று ஸமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகி உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான்.
6.33
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார் ; மதுஸூதந - மதுஸூதனா ; அயம் - இந்த ; யோக - யோகம்; ஸாம்யேந - ஸமபாவனையோடு கூடியதென்று ; ய - எது ; his - உங்களால் ; ப்ரோக்த - சொல்லப்பட்டதோ; ஏதஸ்ய - அந்த யோகத்தினுடைய ; ஸ்திராம் - உறுதியான ; ஸ்திதிம் - இருப்பை ; சஞ்சலத்வாத் - சஞ்சலத்தினால் ; அஹம் - நான் ; நபச்சாமி - உணரவில்லை.
6.33 : அர்ஜுனன் சொன்னார் ! மதுஸூதனா! இந்த யோகம் ஸமபாவனையோடு கூடியதென்று உங்களால் சொல்லப்பட்டதோ அந்த யோகத்தினுடைய உறுதியான நிலையை மனதின் சஞ்சலத்தினால் நான் உணரவில்லை.
6.34
சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்-த்ருடம் |
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸதுஷ்கரம் || 34
ஹி - ஏனெனில் ; க்ருஷ்ண - க்ருஷ்ணா ; மந - இந்த மனம் ; சஞ்சலம் - எதிலும் நிலைக்காமல் அழியும் தன்மையுடையது ; ப்ரமாதி - புலன்களை மிகவும் கலக்கும் தன்மையுடையது ; த்ருடம் - திடமானது ; பலவத் - வலிமை பொருந்தியது ; தஸ்ய - அதை ; நிக்ரஹம் - அடக்குதல் ; வாயோ : இவ - காற்றைத் தடுத்து நிறுத்துவது போன்று : ஸீதுஷ்கரம் - மிகவும் கடினமானது ; அஹம் - நான் ; மந்யே - நினைக்கி றேன்.
6.34 : ஏனெனில் க்ருஷ்ணா! இந்த மனம் எதிலும் நிலைக்காமல் அழியும் தன்மையுடையது. புலன்களை மிகவும் கலக்கும் தன்மையுடையது. திடமானது. வலிமை பொருந்தியது. ஆகவே அதை அடக்குதல் காற்றைத் தடுத்து நிறுத்துவது போன்று மிகவும் கடினமானது என்று நான் நினைக்கிறேன்.
6.35
ஸ்ரீபகவானுவாச-
அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம் |
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே || 35
ஸ்ரீ பகவான் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே ; அஸம்சயம் - ஸந்தேகமின்றி ; மந - மனம் ; சலம் - சஞ்சலமானது தான் ; துர்நிக்ரஹம் - வசப்படுத்துவதும் கடினம் தான் ; து - ஆனால் ; கௌந்தேய குந்தியின் மகனான அர்ஜூனா !; அப்யாஸேந - அப்யாஸத்தாலும் ; வைராக்யேணச - வைராக்கியத்தாலும் ; க்ஹ்ருயதே - வசப்படுத்தப்படுகிறது.
6.35 : ஸ்ரீ பகவான் சொன்னார் ! வலிமையான கைகளை உடையவனே!, ஸந்தேகமின்றி மனம் சஞ்சலமானது தான். இதை வசப்படுத்துவதும் கடினம் தான். ஆனால் குந்தியின் மகனான அர்ஜூனா! அப்யாஸத்தாலும் வைராக்கியத்தாலும் மனம் வசப்படுத்தப்படுகிறது.
6.36
அஸம்யதாத்மனா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: |
வச்யாத்மனா து யததா சக்யோளவாப்து-முபாயத: ॥ 36
அஸம்யத ஆத்மநா - மனதை வசப்படுத்த இயலாதவனால் ; யோக - யோகம் ; துஷ்ப்ராப - அடைய முடியாதது ; து - ஆனால் ; வச்ய ஆத்மநா - மனதை அடக்கிய ; யததா - முயற்சியுள்ள மனிதனால் ; உபாயத - பயிற்சியினால் ; அவாப்தும் - யோகத்தை அடைவது ; சக்ய - ஸாத்யமானது ; இதி - என்பது ; மே மதி - என் கருத்து.
6.36 : மனதை வசப்படுத்த இயலாதவனால் யோகம் அடைய முடியாதது. ஆனால் மனதை அடக்கிய முயற்சியுள்ள மனிதன் பயிற்சியினால் யோகத்தை அடைவது ஸாத்யமானது, எளிது என்பது என் கருத்து.
6.37 அர்ஜுன உவாச-
அயதி: ச்ரத்தயோபேதோ யோகாச்-சலித-மானஸ: |
அப்ராப்ய யோக-ஸம்ஸித்திம் காங் கதிங் க்ருஷ்ண கச்சதி ॥ 37
அர்ஜூந உவாச - அர்ஜீனன் சொன்னார் ; கிருஷ்ண - கிருஷ்ணா! ; ச்ரத்தயா உபேத - யோகத்தில் ச்ரத்தை உள்ளவனாக இருந்தும் ; அயதி - மன அடக்கம் இல்லாமையினால் ; யோகாத் - யோகத்திலிருந்து; சலித மாநஸ - மனம் நழுவி இத்தகைய ஸாதகனான யோகி ; யோக ஸம்ஸித்திம் - யோகத்தின் பயனை ; அப்ராப்ய
- அடையப்பெறாது ; காம் கதிம் - எந்த கதியை ; கச்சதி - அடைகிறான்.
6.37 : அர்ஜீனன் சொன்னார் ; கிருஷ்ணா! யோகத்தில் ச்ரத்தை உள்ளவனாக இருந்தும் மன அடக்கம் இல்லாமையினால் யோகத்திலிருந்து மனம் நழுவி இத்தகைய ஸாதகனான யோகி யோகத்தின் பயனை பகவானின் தரிசனத்தை அடையப்பெறாது போனால் எந்த கதியை அடைகிறான்?
6.38
கச்சின்னோபய-விப்ரஷ்டச் சின்னாப்ரமிவ நச்யதி |
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி ॥ 38
மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே ; ப்ரஹ்மண - பகவானை அடைகின்ற ; பதி - மார்க்கத்தில் ; விமூட - மயங்கி ; அப்ரதிஷ்ட - பிடிப்பு இல்லாத மனிதன் ; உபயவிப்ரஷ்ட - இரண்டு வழிகளினின்றும் நழுவி; சிந்ந அப்ரம் இவ - சிதறிய மேகம் போல ; கச்சித் ந நச்சதி - அழிந்து விடமாட்டானா?
6.38: அகன்ற தோள்களுடையவனே ! பகவானை அடைகின்ற மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி பிடிப்பு இல்லாத மனிதன் இரண்டு வழிகளினின்றும் நழுவிச் சிதறிய மேகம் போல அழிந்து விடமாட்டானா?
6.39
ஏதன்மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்து-மர்ஹஸ்-யசேஷத: |
த்வதந்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே ॥ 39
கிருஷ்ண - கிருஷ்ணா! மே - என்னுடைய ; ஏதத் - இந்த ; ஸம்சயம்
- ஸந்தேகத்தை ; அசேஷத - மீதமின்றி ; சேத்தும் - போக்குவதற்கு ; அர்ஹஸி - தகுதியானவர் ; ஹி - ஏனெனில் ; அஸ்ய - இந்த ; ஸம்சயஸ்ய - சந்தேகத்தை ; சேத்தா - போக்குபவர் ; த்வத் அந்ய - உங்களைத் தவிர வேறொருவர் ; ந உபபத்யதே
- கிடைப்பது ஸாத்யமில்லை.
6.39 : கிருஷ்ணா! என்னுடைய இந்த ஸந்தேகத்தை மீதமின்றிப் போக்குவதற்கு நீங்களே தகுதியானவர். ஏனெனில் இந்த சந்தேகத்தைப் போக்குபவர் உங்களைத் தவிர வேறொருவர் கிடைப்பது ஸாத்யமில்லை.
6.40 ஸ்ரீபகவானுவாச-
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்-தஸ்ய வித்யதே |
ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி ॥ 40
ஸ்ரீ பகவான் உவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; பார்த - அர்ஜீனா! ; தஸ்ய - அந்த மனிதனுக்கு ; இஹ - இவ்வுலகில் ; விநாய - அழிவு ; நவித்யதே - இல்லை ; அமுத்ர ஏவ - மேலுலகிலும் ; ந- இல்லை ; தாத - பிரியமானவனே ; ஹி - ஏனெனில் ; கல்யாணக்ருத் - ஆன்மீக மேம்பாட்டிற்காக ; கச்சித் - எந்த மனிதனும் ; துர்கதிம் - தாழ்ந்த நிலையை ; நகஅச்சதி - அடைவதில்லை.
6.40 : ஸ்ரீ பகவான் சொன்னார் ; அர்ஜீனா! அந்த மனிதனுக்கு இவ்வுலகிலோ, மேலுலகிலோ அழிவு இல்லை. ஏனெனில் பிரியமானவனே ஆன்மீக மேம்பாட்டிற்காக பகவானை அடைவதற்காக ஸாதனை புரியும் எந்த மனிதனும் தாழ்ந்த நிலையை அடைவதில்லை.
6.41
ப்ராப்ய புயக்ருதாம் லோகா-னுஷித்வா சாச்வதீ: ஸமா: |
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ ள்பிஜாயதே || 41
யோகப் ரஷ்ட - யோகத்தினின்றும் வழுவியவன் ; புண் யக்ருதாம் - புண்யம் செய்தவர்களுக்குரிய ; லோகாந் - ஸ்வர்கம் முதலிய உயர்ந்த உலகங்களை ; ப்ராப்ய
- அடைந்து ; சாச்வதீ: ஸமா - பல்லாண்டுகள் ; உஷித்வா - வாழ்ந்து ; சீசீநாம் - நல்லொழுக்கமுள்ள ; ஸ்ரீமதாம் - செல்வந்தர்களுடைய ; கேஹே -வீட்டில் ; அபிஜாயதே - பிறக்கிறான்.
6.41 யோகத்தினின்றும் வழுவியவன் புண்யம் செய்தவர்களுக்குரிய ஸ்வர்கம் முதலிய உயர்ந்த உலகங்களை அடைந்து அங்கு வாழ்ந்து மறுபடியும் நல்லொழுக்கமுள்ள செல்வந்தர்களுடைய வீட்டில் பிறக்கிறான்.
6.42
அதவா யோகினாமேவ குலே பவதி தீமதாம் |
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜன்ம யதீத்ருசம் || 42
அதவா - அல்லது ; தீமதாம் - ஞானிகளான ; யோகிநாம் - யோகிகளுடைய குலே ஏவ - குலத்திலேயே; பவதீ - பிறக்கிறான் ; ஈத்ருயம் - இத்தகைய ; யத் - எந்த ; ஏதத் ஜந்ம - இந்தப்பிறப்பு ; லோகே - இந்த உலகில் ; ஹி - ஐயமின்றி ; துர்லபதரம் - மிகவும் அரிதாகவே உள்ளது.
6.42 : அல்லது வைராக்யமுள்ள யோகப்ரஷ்டன் அந்த உலகங்களுக்குச் செல்லாமல் ஞானிகளான யோகிகளுடைய குலத்திலேயே பிறக்கிறான். ஆனால் இத்தகைய பிறப்பு இந்த உலகில் ஐயமின்றி மிகவும் அரிதாகவே உள்ளது.
6.43
தத்ர தம் புத்தி ஸம்யோகம் லபதே பௌர்வ தேஹிகம் |
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தன || 43
தத்ர - அங்கு ; தம்பௌர்வதேஹிகம் - முற்பிறவியில் சேர்த்து வைக்கப்பட்ட அந்த ; புத்திஸம்யோகம் - புத்தி ஸம்யோகத்தை ; லபதே - பெறுகிறான் ; ச - மேலும் ; குருநந்தந - குருநந்தனான அர்ஜூனா ; தத - அதனுடைய ப்ரபாவத்தினால் ; பூய - மறுபடியும் ; ஸம்ஸித்தௌ - பரமாத்மாவை அடைகிற வழியில் ; யததே - முயல்கிறான்.
6.43 : அங்கு முற்பிறவியில் சேர்த்து வைக்கப்பட்ட அந்த புத்தி ஸம்யோகத்தை
தபஸ்விப்யோ௨திகோ யோகீ ஜ்ஞானிப்யோ௨பி மதோ௨திக: |
கர்மிப்யச்-சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜன ॥ 46
யோகீ - யோகியானவன் ; தபஸ்விப்ய - தவம் செய்வோர்களைக் காட்டிலும் ; அதிக - மேலானவன் ; ஜ்ஞாநிப்ய அபி - சாஸ்திரங்களை அறிந்தவர்களைக் காட்டிலம் ; அதிக - மேலானவனாக ; மத - கருதப்படுகிறான் ; ச - மேலும் ; கர்மிப்ய - பயனில் ஆர்வம் கொண்டு கடமையைச் செய்பவர்களைக் காட்டிலும் ; யோகீ - யோகி ; அதிக
- உயர்ந்தவன் ; அர்ஜுன - அர்ஜீனா! ; தஸ்மாத் - ஆகையால் ; யோகீபவ - யோகி ஆவாயாக.
6.46 : யோகியானவன் தவம் செய்வோர்களைக் காட்டிலும் மேலானவன், சாஸ்திரங்களை அறிந்தவர்களைக் காட்டிலம் மேலானவனாகக் கருதப்படுகிறான். மேலும் பயனில் ஆர்வம் கொண்டு கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும் யோகி உயர்ந்தவன். அர்ஜுனா! ஆகையால் யோகி ஆவாயாக.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸபநிஷத்ஸ ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜனஸம்வாதே த்யானயோகோ நாம ஷஷ்டோ௨த்யாய: ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்மவித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத் எனப்படும் ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அர்ஜீனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ஆத்மஸம்யமயோகம் எனப்பெயர் படைத்த ஆறாவது அத்யாயம் நிறைவுற்றது.