KAILASA Library/பகவத் கீதை/ஐந்தாவது அத்யாயம் கர்ம ஸந்யாஸ யோகம்Sign in
பகவத் கீதை

ஐந்தாவது அத்யாயம் கர்ம ஸந்யாஸ யோகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

5.1 அர்ஜுன உவாச-

ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புனர்யோகஞ்ச சம்ஸஸி |
யச்ச்ரேய ஏதயோரைகம் தன்மே ப்ரூஹி ஸுநிச்சிதம் || 1

அர்ஜூந உவாச - அர்ஜீனன் சொன்னார் ; க்ருஷ்ண - க்ருஷ்ணா ; கர்மணாம் - கர்மங்களுடைய ; ஸந்ந்யாஸம் - ஸந்யாஸத்தைப் பற்றியும் ; புந : - பின்னர் ; யோகம்ச

  • கர்மயோகத்தைப் பற்றியும் ; சம்ஸஸி - புகழ்ந்து பேசுகிறீர்கள் ; ஏதயோ - இவை இரண்டில் ; யத் ஏகம் - எந்த ஒன்று ; மே - எனக்கு ; ஸுநிச்சிதம் - நிச்சயமாக ; ஸ்ரேய
  • மேன்மையைத் தரக்கூடியதோ ; தத் - அதை ; ப்ரூஹி - சொல்லுங்கள்.

5.1 : அர்ஜூனன் சொன்னார்; க்ருஷ்ணா! நீங்கள் கர்மங்களுடைய ஸந்யாஸத்தைப் பற்றியும் பின்னர் கர்மயோகத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசுகிறீர்கள். ஆகையால் இவை இரண்டில் எந்த ஒன்று எனக்கு நிச்சயமாக மேன்மையைத் தரக்கூடியதோ அதைச் சொல்லுங்கள்.

5.2 ஸ்ரீபகவானுவாச-

ஸந்ந்யாஸ: கர்மயோகச்ச நி:ச்ரேயஸ-கார-வுபௌ |
தயோர்ஸ்து கர்மஸந்ந்யாஸாத் கர்மயோகோ விசிஷ்யதே || 2

ஸ்ரீ பகவானுவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; ஸந்ந்யாஸ - கர்ம ஸந்யாஸம் ; கர்மயோக ; - கர்மயோகம் ; உபௌச - இரண்டுமே; நி:ச்ரேயஸகரௌ - மிகவும் மேன்மையளிப்பவைதான்; து - ஆயினும்; தயோ - இவ்விரண்டிலும்; கர்மஸந்ந்யாஸாத்

  • கர்மஸந்யாஸத்தைக் காட்டிலும் ; கர்மயோக - கர்மயோகம் விசிஷ்யதே - சிறந்தது.

5.2 : ஸ்ரீ பகவான் சொன்னார் ; கர்ம ஸந்யாஸம், கர்மயோகம் இரண்டுமே முக்தியளிப்பவைதான். ஆயினும் கர்மஸந்யாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் ஸாதனை முறை எளிதானதால் சிறந்தது.

5.3

ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி |
நிர்தவந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே || 3

மஹாபாஹோ - அர்ஜூனா ; ய - எவன் ; ந்வேஷ்டி - எதையும் வெறுப்பதில்லையோ ; நகாங்க்ஷதி - எதையும் விரும்புவதில்லையோ ; ஸ - அந்த கர்மயோகி ; நித்யஸந்நியாஸி - எப்பொழுதும் ஸந்நியாஸிதான் என்று ; ஜ்ஞேய - அறியத்தக்கவன் ; ஹி - ஏனெனில் ; நிர்த்வந்தவ - விருப்பு வெறுப்பு எனும் இரட்டைகள் அற்றவன் ; ஸுகம் - எளிதாகவே ; பந்தாத் - ஸம்ஸார பந்தத்திலிருந்து ; ப்ரமுச்யதே - விடுதலை பெறுகிறான்.

5.3 : அர்ஜூனா ! எவன் எதையும் வெறுப்பதில்லையோ, எதையும் விரும்புவதில்லையோ அந்த கர்மயோகி எப்பொழுதும் ஸந்நியாஸியே தான் என்று அறியத்தக்கவன். ஏனெனில் விருப்பு வெறுப்பு என்னும் இரட்டைகள் அற்றவன் எளிதாகவே ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை பெறுகிறான்.

5.4

ஸாங்க்யயோகௌ ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: |
ஏக-மப்-யாஸ்த்தித: ஸம்ய-குபயோர் விந்ததே பலம் || 4

ஸாங்க்யயோகௌ - மேலே கூறிய ஸந்யாஸமும் ; கர்மயோகமும் ; ப்ருதக் - வெவ்வேறு என்று ; பாலா - அறியாதவர்கள் ; ப்ரவதந்தி - கூறுகிறார்கள் ; பண்டிதாந

  • அறிஞர்கள் அப்படி ; ஏகம் அபி - இவற்றில் ஒன்றையாவது ; ஸம்யக் ஆஸ்தித :- உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள மனிதன் ; உபயோ : பலம் - இரண்டினுடைய பயனான ; வந்ததே - அடைகிறான்.

5.4 : மேலே கூறிய ஸந்யாஸமும், கர்மயோகமும் வெவ்வேறு பயன் தரக்கூடியவை என்று அறியாதவர்கள் கூறுகிறார்கள். அறிஞர்கள் அப்படிச் சொல்வதில்லை. ஏனெனில் இவற்றில் ஒன்றையாவது உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள மனிதன் இரண்டினுடைய பயனான பரமாத்மாவை அடைகிறான்.

5.5

யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தானம் தத்-யோகைர பிகம்யதே |
ஏகம் ஸாங்க்யஞ்ச யோகஞ்ச ய: பச்யதி ஸ பச்யதி || 5

ஸாங்க்யை - ஞானயோகிகளால் ; யத்ஸதாநம் - எந்த பரமபதம் ; ப்ராப்யதே - அடையப்படுகிறதோ; தத் - அதுவே ; யோகை : அபி - கர்ம யோகிகளாலும் ; கம்யதே

  • அடையப்படுகிறது. ய - எவன் ஒருவன் ; ஸாங்க்யம் - ஞானயோகம் ; யோகம்ச - கர்மயோகம் ; ஏகம் - ஒன்றென ; பச்சதி - காண்கிறானோ ; ஸ : ச - அவனே ; பச்யதி - காண்கிறான்.

5.5: ஞானயோகிகளால் எந்த பரமபதம் அடையப்படுகிறதோ அதுவே

ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹ்ணன் னுந்மிஷன் நிமிஷன்னபி |
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதி தாரயன் || 9

தத்த்வவித் - தத்வமறிந்த ; யுக்த - ஸாங்க்யயோகி ; பச்சந் - பார்த்தாலும் ; ச்ருண்வந் - கேட்டாலும்; ஸ்ப்ருசந் - தொட்டாலும் ; ஜிக்ரந் - முகர்ந்தாலும் ; அச்நந்

  • உணவு உண்டாலும்; இச்சந் - நடந்து சென்றாலும் ; ஸ்வபந் - உறங்கினாலும் ; ச்வஸந் - மூச்சுவிட்டாலும் ; இஞ்சித் ஏவ - ஸந்தேகமின்றி எதையும்; ந கரோமி - செய்வதேயில்லை ; இதி மந்யேத - என்று நினைக்க வேண்டும் ; ப்ரலபந் - பேசி னாலும் ; விஸ்ருஜந் - கழித்தாலும் ; க்ருஹ்ணந் - பற்றினாலும் ; உன்மிஷன் - கண்களைத் திறந்தாலும் ; நிமிஷன் அபி - மூடினாலும் கூட ; இந்த்ர்யாணி - எல்லா புலன்களும் ; இந்த்ரியார்தேஷீ - பொருட்களில் ; வர்தந்தே - செயல்படுகின்றன ; இதி - என்று ; தாரயந் - உணர்ந்து கொண்டு.

5.8 9 : தத்வமறிந்த ஸாங்க்யயோகி பார்த்தாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், உணவு உண்டாலும், நடந்து சென்றாலும், உறங்கினாலும், மூச்சு விட்டாலும், பேசினாலும் கழித்தாலும், பற்றினாலும், கண்களைத் திறந்தாலும், மூடினாலும் கூட எல்லா புலன்களும் தத்தம் புலன்களுக்குரிய பொருட்களில் செயல்படுகின்றன என்று உணர்ந்து கொண்டு ஸந்தேகமின்றி எதையும் நான் செய்வதேயில்லை என்று நினைக்க வேண்டும்.

5.10

ப்ரஹமண்-யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய: |
லிப்யதே ந ஸ பாபேன பத்மபத்ர-மிவாம்பஸா || 10

ய - எவன் ; கர்மாணி - அனைத்துக் கர்மங்களையும் ; ப்ரஹமparticleணி - பரமாத்மாவிடம் ; ஆதாய - அர்ப்பணம் செய்து ; ஸங்கம் - பற்றுதலை ; த்யந்த்வா - துறந்து ; கரோதி - கர்மங்களைச் செய்கிறானோ ; ஸ - அவன் ; அம்பஸா - தண்ணீரில் ; பத்மபத்ரம் இவ - தாமரை இலை ஒட்டாமல் இருப்பது போல ; பாபேந - பாவத் தினால் ; நலிப்யதே - பாதிக்கப்படுவதில்லை.

5.10 : எவன் அனைத்துக் கர்மங்களையும் பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து உலகியல் பற்றுதலைத் துறந்து கர்மங்களைச் செய்கிறானோ, அவன் தண்ணீரில் தாமரை இலை ஒட்டாமல் இருப்பது போலப் பாவத்தினால் பாதிக்கப்படுவதில்லை.

5.11

காயேன மனஸா புத்த்யா கேவலை-ரிந்த்ரியை-ரபி |
யோகின: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மசுத்தயே || 11

5.14

ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு: |
ந கர்மபல-ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே || 14

ப்ரபு - பகவான் ; லோகஸ்ய - மனிதர்களுடைய ; கர்த்ருத்வம் - கர்த்தா என்னும் தன்மையை ; ந ஸ்ருஜதி - உண்டு பண்ணுவதில்லை ; கர்மாணி - கர்மங்களையும் ; ந - உண்டு பண்ணுவதில்லை ; கர்மபலஸம் யோகம் - கர்மத்தின் பயனோடு சேர்ந்து வைத்தலையும் ; ந - ஏற்படுத்துவதில்லை ; து - ஆனால் ; ஸ்வபாவ : - இயல்புதான் ; ப்ரவர்ததே - செயல்படுகிறது.

5.14 : ப்ரபு - பகவான் மனிதர்களுடைய கர்த்தா என்னும் தன்மையை உண்டு பண்ணுவதில்லை. கர்மங்களையும் உண்டு பண்ணுவதில்லை. கர்மத்தின் பயனோடு சேர்ந்து வைத்தலையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.

5.15

நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு: |
அஜ்ஞானே-னாவ்ருதம் ஜ்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ: || 15

விபு - எங்கும் நிறைந்த பகவான் ; கஸ்யசித் - யாருடைய, பாபம் - பாவச் செயலையும் ; ந ஆதத்தே - ஏற்பது இல்லை ; அஜ்ஞாநேந - அஞ்ஞானத்தினால் ஜ்ஞானம் - ஞானம் ; ஆவ்ருதம் - மூடப்பட்டிருக்கிறது; தேந - அதனால் ; ஜந்தவ - அஞ்ஞானிகளான எல்லா மனிதர்களும் ; முஹ்யந்தி - மோஹம் அடைகிறார்கள்.

5.15: எங்கும் நிறைந்த பகவான் யாருடைய பாவச் செயலையும் ஏற்பது இல்லை. நற்செயல்களையும் ஏற்பது இல்லை. ஆனால் அஞ்ஞானத்தினால் ஞானம் மூடப்பட்டிருக்கிறது. அதனால் அஞ்ஞானிகளான எல்லா மனிதர்களும் மோஹம் அடைகிறார்கள்.

5.16

ஜ்ஞானேன து ததஜ்ஞானம் யேஷாம் நாசித-மாத்மன: |
தேஷா-மாதித்யவ ஜ்ஞானம் ப்ரகாசயதி தத்பரம் || 16

து - ஆனால் ; யேஷாம் - எவர்களுடைய ; தத் - அந்த ; அஜ்ஞானம் - அஞ் ஞானம்; ஆத்மந - பரமாத்மாவினுடைய ; ஜ்ஞாநேந - தத்வ ஞானத்தினால் ; நாசிதம்

  • அழிக்கப்பட்டதோ ; தேஷாம் - அவர்களுடைய ; ஜ்ஞானம் - ஞானம் ; ஆதித்யவத்
  • ஆதவன் போல் ; தத்பரம் - ஸத்சித் ஆனந்தமயமான பரமாத்மாவை ; ப்ரகாசயதி - பிரகாசிக்கச் செய்கிறது.

5.19

இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன: |
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா: || 19

யேஷாம் மந - எவர்களுடைய மனம் ; ஸாம்யே ஸ்திதம் - ஸமபாவனையில் நிலைத்துள்ளதோ ; தை - அவர்களால் ; இஹஏவ - உயிர் வாழும் போதே ; ஸர்க

  • அகில உலகமும் ; ஜித - வெற்றி கொள்ளப்பட்டது ; ஹி - ஏனெனில் ; ப்ரஹ்ம
  • ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவான பரப்ரம்மம் ; நிர்தோஷம் - மாசற்றது. ஸமம் - ஸமமானது. தஸ்மாத் - ஆகவே ; தே - அவர்கள் ; ப்ரஹ்மமணி - ஸத் சித் ஆனந்தமயமான ப்ரம்மத்திலேயே ஸ்திதா - நிலை பெற்றியிருக்கிறார்கள்.

5.19 : எவர்களுடைய மனம் ஸமபாவனையில் நிலைத்துள்ளதோ அவர்களால் உயிர் வாழும் போதே அகில உலகமும் வெற்றி கொள்ளப்பட்டது. ஏனெனில் ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவான பரப்ரம்மம் மாசற்றது, ஸமமானது. ஆகவே அவர்கள் ஸத் சித் ஆனந்தமயமான ப்ரம்மத்திலேயே நிலை பெற்றியிருக்கிறார்கள்.

5.20

ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்யசாப்ரி யம் |
ஸ்த்திரபுத்தி - ரஸம்மூடேரா ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: || 20

ப்ரியம் - விருப்பமான பொருளை ; ப்ராப்ய - அடையும் போது ; ந ப்ரஹ்ருஷ்யேத் - மகிழ்ச்சியடையாமலும் ; ச - மேலும் ; அப்ரியம் ; விரும்பாததை ; ப்ராப்ய - அடையும் போது ; நவத்விஜேத் - கலக்கம் அடையாமலும் இருக்கும் ; ஸ்திரபுத்தி - நிலைத்த மதியுடைய ; அஸம்மூட- ஐயம் நீங்கிய ; ப்ரஹ்மவித் - ப்ரம்மஞானி ; ப்ரஹ்மணி - ஸத் சித் ஆனந்தமய. பரப்ரம்ம பரமாத்மாவில் ; ஸ்தித - நிலைத்து நிற்கிறான்.

5.20 : விருப்பமான பொருளை அடையும் போது மகிழ்ச்சியடையாமலும், விரும்பாததை அடையும் போது கலக்கம் அடையாமலும் இருக்கும் நிலைத்த மதியுடைய ஐயம் நீங்கிய ப்ரம்மஞானி ஸத் சித் ஆனந்தமய. பரப்ரம்ம பரமாத்மாவில் எப்பொழுதும் ஒன்றி நிலைத்து நிற்கிறான்.

5.21

பாஹ்ய-ஸ்பர்சேஷ்-வஸக்தாத்மா விந்தத்-யாத்மனி யத் ஸுகம் |
ஸ ப்ரஹ்மயோக-யுக்தாத்மா ஸுகமக்ஷ்ய்ய-மச்னுதே || 21

பாஹ்யஸ்பர்சேஷீ - வெளியிலுள்ள புலன்நுகர் பொருட்களில் ; அஸக்தாத்மா

5.23: எந்த ஸாதகன் இம் மனிதப்பிறவியிலேயே உடல் அழிவதற்கு முன்பே காமத்தினாலும் உண்டாகின்ற எழுச்சியைப் பொறுத்துக் கொள்வதற்குத் திறன் பெற்றுவிட்டானோ அந்த மனிதனே யோகி அவனே ஸுகம் பெற்றவன்.

5.24

யோ(அ)ந்த: ஸகோ(அ)ந்தராராமஸ்-ததாந்தர்-ஜ்யோதிரேவ ய: |
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூ தோ(அ)திகச்சதி || 24

ய - எவன் ; ஏவ - உறுதியுடன் தீர்மானம் செய்து கொண்டு ; அந்த : ஸீக - ஆத்மாவிலேயே ஸீகம் காண்கிறானோ ; அந்தராராம - ஆத்மாவிடமே இன்புற்றிருப்பானோ ; ததா - அவ்விதமே ; ய - எவன் ; அந்தர்ஜ்யோதி - ஆத்மாவிலேயே உள்ளொளி பெற்றவனோ ; ஸ - அந்த ; ப்ரஹ்மபூத - ஸச்சித் ஆனந்தமயமான ப்ரம்மத்தில் ஒன்றிவிட்டவனான ; யோகீ - ஸாங்க்யயோகி; ப்ரஹ்மநிர்வாணம் - அமைதி நிறைந்த ப்ரம்மத்தை ; அதிகச்சதி - அடைகிறான்.

5.24 : எவன் உறுதியுடன் தீர்மானம் செய்து கொண்டு ஆத்மாவிலேயே ஸீகம் காண்கிறானோ ஆத்மாவிடமே இன்புற்றிருப்பானோ அவ்விதமே எவன் ஆத்மாவிலேயே ஞானம் பெற்றவனோ ஸச்சித் ஆனந்தமயமான ப்ரம்மத்தில் ஒன்றிவிட்டவனான அந்த ஸாங்க்யயோகி அமைதி நிறைந்த ப்ரம்மத்தை அடைகிறான்.

5.25

லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ருஷய: க்ஷீணகல்மஷா: |
சின்னத்வைதா யதாத்மான: ஸர்வபூதஹிதே ரதா: || 25

க்ஷீண கல்மஷா - எவர்களுடைய எல்லாப்பாவங்களும் அழிந்துவிட்டனவோ ; சிந்நத்வைதா - எவர்களுடைய எல்லா ஐயங்களும் ஞானத்தினால் தெளிவாக்கப்பட்டு விட்டனவோ; ஸர்வ பூதஹிதே - எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும் ; ரதா -ஈடுபாடு கொண்டவர்களோ ; யதாத்மாந - எவர்களுடையமனம் சஞ்சலமின்றி பரமாத்மாவிடம் நிலைத்துள்ளதோ ; ருஷ்ய - ப்ரம்மத்தை அறிந்தவர்கள் ; ப்ரஹ்மநிர்வாணம் - ஸச்சித் ஆனந்தமயமான, நிர்குண, நிராகார, பரப்ரம்ம பரமாத்மாவை ; லபந்தே - அடைகிறார்கள்.

5.25 : எவர்களுடைய எல்லாப் பாவங்களும் அழிந்துவிட்டனவோ, எவர்களுடைய எல்லா ஐயங்களும் ஞானத்தினால் தெளிவாக்கப்பட்டு விட்டனவோ, எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும் ஈடுபாடு கொண்டவர்களோ, மேலும் எவர்களுடைய மனம் சஞ்சலமின்றிப் பரமாத்மாவிடம் நிலைத்துள்ளதோ அந்த ப்ரம்மத்தை அறிந்தவர்கள் பரமாத்மாவின் நித்யானந்த நிலையை அடைகிறார்கள்.

5.29

போக்தாரம் யஜ்ஞ-தபஸாம் ஸர்வலோக-மஹேச்வரம் |
ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி ॥ 29

மாம் - என்னை ; யஜ்ஞதபஸாம் - எல்லாயாகங்களையும், தவங்களையும், போக்தாரம் - ஏற்பவன் ; ஸர்வலோகமஹேச்வரம் - அகிலலோக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன் ; ஸர்வபூதாநாம் - அகில சராசர ப்ராணிகளுக்கும் ; ஸீஹ்ருதம் - உற்ற நண்பன் அதாவது தன்னலம் கருதாத அன்பும், அருளும் உடையவன்; ஜ்ஞாத்வா

  • தத்வரீதியாக அறிந்து ; சாந்திம் - மேலான அமைதியை ; ருச்சதி - அடைகிறான்.

5.29 : என் பக்தன் என்னை எல்லா யாகங்களையும், தவங்களையும், ஏற்பவன் என்றும் அகில லோக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன் என்றும் அகில சராசர ப்ராணிகளுக்கும் உற்ற நண்பன் அதாவது தன்னலம் கருதாத அன்பும் அருளும் உடையவன் என்றும் தத்வரீதியாக அறிந்து மேலான அமைதியை- அடைகிறான்.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜூனஸம்வாதே
ஸந்ந்யாஸயோகோ நாம பஞ்சமோஅத்யாய: ॥

ஓம் தத்ஸத் - ப்ரம்மவித்யை, யோக சாஸ்த்ரம், உபநிஷத் எனப்படும் ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் கர்மஸந்யாஸ யோகம் எனப் பெயர் படைத்த ஐந்தாவது அத்யாயம் நிறைவுற்றது.