KAILASA Library/பகவத் கீதை/நான்காவது அத்யாயம்Sign in
பகவத் கீதை

நான்காவது அத்யாயம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஞானகர்மஸந்யாஸ யோகம்

ஸ்ரீ பகவான் உவாச

4.1

ஸ்ரீ பகவானுவாச-

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா-னஹ-மவ்யயம் ।
விவஸ்வான் மனவே ப்ராஹ மனு-ரிக்ஷ்வாகவேள்ப்ரவீத் ।। 1

ஸ்ரீ பகவானுவாச - ஸ்ரீ பகவான் சொன்னார் ; அஹம் - நான் ; இமம் - இந்த ; அவ்யயம் - அழிவற்ற ; யோகம் - யோகத்தை ; விவஸ்வதே - சூரியனுக்கு ப்ரோக்தவாந் - சொன்னேன் ; விவஸ்வாந் - சூரியன் ; மநவே - வைவஸ்வத மனுவுக்கு ; ப்ராஹ - சொன்னார் ; மனு - மனு; இஷ்வாகவே - இஷ்வாகு மன்னனுக்கு; அப்ரவீத் -சொன்னார்.

4.1 : ஸ்ரீ பகவான் சொன்னார். நான் இந்த அழிவற்ற யோகத்தை சூரியனுக்குச் சொன்னேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார். மனு தன் குமாரனான இஷ்வாகு மன்னனுக்குச் சொன்னார்.

4.2

ஏவம் பரம்பரா-ப்ராப்த-மிமம் ராஜர்ஷயோ விது: ।
ஸ காலேனேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப ।। 2

பரந்தப - பரந்தப அர்ஜூனா! ; ஏவம் - இவ்விதம் ; பரம் பராப்ராப்தம் - வழிவழியாக வந்த ; இமம் - இந்த யோகத்தை ; ராஜர்ஷய - ராஜரிஷிகள் ; விது - அறிந்திருக்கிறார்கள் ; ஸ - அந்த ; யோக - யோகம் ; மஹதா காலேந - வெகுகாலமாக ; இஹ - இவ்வுலகில் ; நஷ்ட - மறைந்தாற் போல் ஆகிவிட்டது.

4.2 : பரந்தப அர்ஜூனா! இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருக்கிறார்கள். அந்த யோகம் வெகுகாலமாக இவ்வுலகில் மறைந்தாற் போல் ஆகிவிட்டது.

4.3

ஸ ஏவாயம் மயா தே ஏத்ய யோக: ப்ரோக்த: புராதன: ।
பக்தோள்ஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேத-துத்தமம் ।। 3

4.5 : ஸ்ரீபகவான்சொன்னார்! எதிரிகளை வாட்டும் அர்ஜூனா! உனக்கும் எனக்கும் பலப் பிறவிகள் கழிந்து விட்டன. அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய். நான் அறிவேன்.

4.6

அஜோன்Sபி ஸன்-னவ்யயாத்மா பூதானா-மீச்வரோSபி ஸன் ।
ப்ரக்ருதிம் ஸ்வா-மதிஷ்ட்டாய ஸம்பவாம்-யாத்மமாயயா ॥ 6

அஜ - பிறப்பற்றவனாகவும் ; அவ்யயாத்மா - அழிவற்றவனாகவும் ; ஜந் அபி

  • இருந்தும் கூட ; பூதாநாம் எல்லா உயிரினங்களுக்கும் ; ஈச்வர - ஈசுவரனாக ; ஸந் அபி - இருந்தும் கூட ; ஸ்வாம் - என்னுடைய ; ப்ரக்ருதிம் - ப்ரக்ருதியை ; அதிஷ்டாய
  • வசப்படுத்திக் கொண்டு ; ஆத்மமாயயா - என்னுடைய யோக மாயையினால் ; ஸம்பவாமி - வெளிப்படுகிறேன்.

4.6 : நான் பிறப்பற்றவனாகவும் எல்லா உயிரினங்களுக்கும் ஈசுவரனாக இருந்தும் கூட என்னுடைய ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு என்னுடைய யோக மாயையினால் வெளிப்படுகிறேன்.

4.7

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத ।
அப்யுத்தான-மதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ॥ 7

பாரத - பரதக்குலத் தோன்றலே ; யதாயதா - எப்போதெல்லாம் ; தர்மஸ்ய

  • தர்மத்திற்கு ; க்லாநி - குறைவும் ; அதர்மஸ்ய - அதர்மத்தின் ; அப்யுத்தானம் - ஓங்குதலும் ; பவதி - ஏற்படுகின்றனவோ ; ததாஹி - அப்போதெல்லாம் ; அஹம் - நான் ; ஆத்மாநம் - என்னை ; ஸ்ருஜாமி - தோற்றுவிக்கிறேன்.

4.7 : பரதக்குலத் தோன்றலே ! எப்போதெல்லாம் தர்மத்திற்குக் குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் நான் மீண்டும் மீண்டும் தோன்றுகிறேன். அதாவது மக்கள் கண் முன்னே காணக் கூடிய உருவத்துடன் வெளிப்படுகிறேன்.

4.8

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் ।
தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ॥ 8

ஸாதூநாம் - ஸாதுக்களை ; பரித்ராணாய - கடைத்தேற்றுவதற்காகவும் ;

4.11

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்-ததைவ பஜாம்யஹம் |
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த்த ஸர்வச: || 11

பார்த்த - அர்ஜீனா ; யே - எந்த பக்தர்கள் ; மாம் - என்னை ; யதா - எவ்விதம் ; ப்ரபத்யந்தே - வழிபடுகிறார்களோ ; அஹம் - நானும் ; தாந் - அவர்களை ; ததாஏவ

  • அதற்கேற்பவே ; பஜாமி - அணுகுகிறேன். மனுஷ்யா - எல்லா மனிதர்களும் ; ஸர்வச
  • எல்லா விதங்களிலும் ; மம - என்னுடைய ; வர்த்ம - வழியை ; அநுவர்தந்தே - பின்பற்றுகிறார்கள்.

4.11: அர்ஜீனா! எந்த பக்தர்கள் என்னை எவ்விதம் வழிபடுகிறார்களோ நானும் அவர்களுக்கு அதற்கேற்பவே அருள் புரிகிறேன். ஏனெனில் எல்லா மனிதர்களும் பல்வேறு விதங்களிலும் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்கள்.

4.12

காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: |
ப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்-பவதி கர்மஜா || 12

இஹ - இந்த ; மானுஷேலோகே - மானிட உலகில் ; கர்மணாம் - கர்மங்களின் ஸித்திம் - பயனை ; காங்க்ஷந்த - விரும்புகிறவர்கள் ; தேவதா - தேவதைகளை யஜந்தே

  • வழிபடுவார்கள் ; ஹி - ஏனெனில் ; கர்மஜா - கர்மங்களினால் விளையும் ; ஸித்தி - பயன் ; ப்ரம் - விரைவில்; பவதி - கிடைத்து விடுகிறது.

4.12 : இந்த மானிட உலகில் கர்மங்களின் பயனை விரும்புகிறவர்கள் தெய்வங்களை வழிபடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு கர்மங்களினால் விளையும் பயன் விரைவில் கிடைத்து விடுகிறது.

4.13

சாதுர்-வர்ாயம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச: |
தஸ்ய-கர்த்தாரமபி மாம் வித்யகர்த்தார-மவ்யயம் || 13

சாதுர்வார்ணயம் - வேதியர், வேந்தர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணங்கள் கொண்ட சமூகம்; குணகர்மவிபாகச - குணங்களையும், கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக ; மயா - என்னால் ; ஸ்ருஷ்டம் - படைக்கப்பட்டது ; தஸ்ய - அந்த ; கர்தாரம் அபி - கர்த்தாவாக இருந்த போதிலும் ; அவ்யளம் - அழிவற்ற ; மாம்

  • என்னை ; அகர்தவம் - கர்த்தா அல்லன் என்றே ; வித்தி - அறிவாயாக. கர்ம - கர்மம் ; கிம் - என்ன? அகர்மம் - அகர்மம் ; கிம் - என்ன ; இதி - என்று ; அத்ர - தீர்மானிப்பதில் ; கவய: அபி - அறிவாளிகள் கூட : மோஹிதா - திகைக்கிறார்கள் ; யத் - எதை ; ஜ்ஞாத்வா - அறிந்து கொண்டபின்னர் ; அசுபாத் - அமங்களத்திலிருந்து ; மோக்ஷ்யஸே - விடுபடுவாயோ ; தத் - அந்த ; கர்ம - கர்மத்தின் தத்வத்தை ; தே - உனக்கு ; ப்ரவக்ஷ்யாமி - சொல்லப் போகிறேன்.

4.16 : கர்மம் என்றால் என்ன? அகர்மம் என்றால் என்ன என்று தீர்மானிப்பதில் அறிவாளிகள் கூடத் திகைக்கிறார்கள். ஆகவே எதை அறிந்து கொண்டபின்னர் நீ அமங்களத்திலிருந்து - கர்மபந்தங்களில் இருந்து விடுபடுவாயோ, அந்த கர்மத்தின் தத்வத்தை நீ நன்கு உணருமாறு நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.

4.17

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யஞ்ச விகர்மண: |
அகர்மணச்ச போத்தவ்யம் கஹனா கர்மணோ கதி: || 17

கர்மண, அபி - கர்மத்தினுடைய ; போத்தவ்யம் - அறியப்பட வேண்டும் ; ச - மேலும் ; அகர்மண - அகர்மத்தினுடைய ; போத்தவ்யம் - அறியப்பட வேண்டும் ; ச

  • அவ்விதமே ; விகர்மண - விகர்மத்தின் ; போத்தவ்யம் - அறியப்படவேண்டும் ; ஹி
  • ஏனென்றால் ; கர்மண - கர்மத்தின்; கதி - போக்கு ; கஹநா - ஆமானது.

4.17 : கர்மத்தினுடைய ஸ்வரூபமும் அறியப்பட வேண்டும். மேலும் அகர்மத்தினுடைய ஸ்வரூபமும் அறியப்படவேண்டும். அவ்விதமே விகர்மத்தின் ஸ்வரூபமும் அறியப்படவேண்டும். ஏனென்றால் கர்மத்தின் போக்கு ஆமானது; அறிய முடியாதது.

4.18

கர்மண்-யகர்ம ய: பச்யே-தகர்மணி ச கர்ம ய: |
ஸ புத்திமான் மனுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்ன-கர்ம-க்ருத் || 18

ய - எந்த மனிதன் ; கர்மணி - கர்மத்தில் ; அகர்ம - அகர்மத்தை ; பச்யேத் - பார்க்கிறானோ ; ச - மேலும் ; ய- எவன் ; அகர்மணி - அகர்மத்தில் ; கர்ம - கர்மத்தை ; ஸ -அவன் ; மனுஷ்யேஷி - மனிதர்களில், புத்திமாந் - புத்திமான் ; ஸ - அந்த ; யுக்த

  • யோகி ; க்ருத்ஸ் நகர்மக்ருத் - அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன்.

4.18 : எந்த மனிதன் கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறானோ மேலும் எவன் அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ, அவன் மனிதர்களின் புத்திமான். மேலும் அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் ஆகிறான்.

4.24

ப்ரஹ்மார்ப்ரணம் ப்ரஹ்ம-ஹவிர்
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா ஹுதம் |
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்மகர்ம ஸமாதினா || 24

அர்பணம்- வேள்வியில் உபயோகிக்கப்படும் ஸ்ருவம் என்னும் ஹோமக்கரண்டி முதலிய உபகரணங்களும் ; ப்ரஹம - ப்ரம்மம் தான் ; ஹவி - ஹோமம் செய்யப்படும் திரவியமும் ; ப்ரஹ்ம - ப்ரம்மம்தான் ; ப்ரஹ்மணா - ப்ரம்மமேயான கர்த்தா மூலம் ; ப்ரஹ்மாக்நௌ- ப்ரம்மம் ஆகிய அக்னியில் ; ஹீதம் - ஆஹுதிசெய்வது என்ற செயலும் ; ப்ரஹ்மகர்மஸமாதிகநேந - ப்ரம்மம் ஆகிய செயலில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால் ; கந்தவ்யம் - அடையத்தக்கப் பயனும் ; ப்ரஹ்ம ஏவ - ப்ரம்மமே தான்.

4.24: வேள்வியில் உபயோகிக்கப்படும் ஸ்ருவம் என்னும் ஹோமக்கரண்டி முதலிய உபகரணங்களும் ப்ரம்மம் தான். ஹோமம் செய்யப்படும் திரவியமும் ப்ரம்மம்தான். ப்ரம்மமேயான கர்த்தா மூலம் ப்ரம்மம் ஆகிய அக்னியில் ஆஹுதி செய்வது என்ற செயலும் ப்ரம்மம் தான். ப்ரம்மம் ஆகிய செயலில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால் அடையத்தக்கப் பயனும் ப்ரம்மமே தான்.

4.25

தைவமேவாபரே யஜ்ஞம் யோகின: பர்யுபாஸதே |
ப்ரஹ்மாக்னாவபரே யஜ்ஞம் யஜ்ஞேனைவோ பஜஹ்வதி || 25

அபரே - மற்றும் சில ; யோகிந - யோகியர் ; தைவம் - தேவபூஜை என்னும் ; யஜ்ஞம் ஏவ - யாகத்தையே ; பர்யுபாஸதே - செவ்வனே செய்கிறார்கள்; அபரே - மற்றும் சில யோகியர் ; ப்ரஹ்மாக்நௌ - பரப்ரம்ம பரமாத்மா வடிவான அக்னியில் ; யஜ்ஞேந ஏவ - யாகத்தின் மூலமே ; யஜ்ஞம் - யாகத்தை ; உபஜீஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள்.

4.25 : சில யோகியர் தேவபூஜை என்னும் யாகத்தையே செவ்வனே செய்கிறார்கள். மற்றும் சில யோகியர் பரப்ரம்ம பரமாத்மா வடிவான அக்னியில் தானும் ப்ரம்மமும் வெவ்வேறு என்ற பாவனையின்றி யாகத்தின் மூலமே ஆத்மரூபமான யாகத்தை ஹோமம் செய்கிறார்கள்.

4.26

ச்ரோத்ராதீ-னீந்த்ரியா-யன்யே ஸம்யமாக்னிஷு ஜஹ்வதி |

சப்தாதீன் விஷயான்யே இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி ॥ 26

அந்யே - வேறு சில யோகிகள் ; ஸ்ரோத்ராத்தீ - காது முதலிய ; இந்திரியாணீ - எல்லாப்புலன்களையும் ; ஸம்யமாக்நிஷு - அடக்கம் என்னும் அக்னிகளில்; ஜிஹ்வதி

  • ஹோமம் செய்கிறார்கள் ; அந்யே - மற்றும் சில யோகிகள் ; சப்தாதீந் - ஒலி முதலிய ; விஷயாந் - எல்லாப் புலன்நுகர் பொருட்களையும் ; இந்த்ரியாக்நிஷீ - புலன்கள் என்னும் அக்னிகளில் ; ஜிஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள்.

4.26 : வேறு சில யோகிகள் காது முதலிய எல்லாப் புலன்களையும் அடக்கம் என்னும் அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சில யோகிகள் ஒலி முதலிய எல்லாப் புலன்நுகர் பொருட்களையும் புலன்கள் என்னும் அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள்.

4.27

ஸர்வாணீந்த்ரிய-கர்மாணி ப்ராண-கர்மாணி சாபரே |
ஆத்ம-ஸம்யம்-யோகாக்னௌ ஜுஹ்வதி ஜ்ஞானதீபிதே ॥ 27

அபரே - வேறு யோகிகள் ; ஸர்வாணி இந்த்ரியகர்மாணி - புலன்களின் செயல்கள் அனைத்தையும் ; ப்ராணகர்மாணி ச - ப்ராணன்களின் செயல்கள் அனைத்தையும் ; ஜ்ஞாநதீபிதே - ஞானத்தினால் ஒளிபெற்ற; ஆத்ம ஸம்யம யோக அக்நௌ - ஆத்மஸம்யமயோகம் என்னும் அக்னியில் ; ஜிஹ்வதி - ஹோமம் செய்கிறார்கள்.

4.27 : வேறு சில யோகிகள் புலன்களின் செயல்கள் அனைத்தையும், ப்ராணன்களின் செயல்கள் அனைத்தையும் ஞானத்தினால் ஒளிபெற்ற ஆத்மஸம்யமயோகம் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். இங்கே ஹோமம் செய்வது என்பது ஸச்சித் ஆனந்தஸ்வரூபம் ஆகிய பரமாத்மாவைத்தவிர வேறெதையும் சிந்திக்காமல் இருப்பதாகும்.

4.28

த்ரவ்யயஜ்ஞாஸ்-தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்-ததாபரே |
ஸ்வாத்யாய ஜ்ஞானயக்ஞாச்ச யதய: ஸம்சிதவ்ரதா: ॥ 28

அபரே - வேறு சிலர் ; த்ரவ்யயஜ்ஞா - திரவியங்களைக் கொண்டு யாகம் செய்பவர்கள் ; தபோயஜ்ஞா - தவம் என்னும் யாகம் செய்பவர்கள் ; ததா - அவ்வாறே ; யோகயஜ்ஞா - அஷ்டாங்க யோக வடிவான யாகம் செய்பவர்கள் ; ச - மேலும் ; ஸம்சீதவ்ரதா - அஹிம்சை முதலிய தீவிரக் கொள்கையோடு கூடி ; யதய - முயற்சி செய்பவர்கள் ; ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞா - ஸ்வாத்யாய வடிவான ஞானயக்ஞத்தைச் செய்பவர்கள் ஆவர்.

4.28 : வேறு சிலர் திரவியங்களைக் கொண்டு யாகம் செய்கிறவர்கள் ; சிலர் குருஸத்தம - குருவம்சத்தில் சிறந்தவனான அர்ஜூனா! ; யஜ்ஞ சிஷ்ட அம்ருதபுஜ - யக்ஞத்தில் எஞ்சிய அமுதத்தை பருகுகின்ற ; ஸநாதநம் - சாஸ்வதமான ; ப்ரஹ்ம - பரப்ரம்ம பரமாத்மாவை ; சாந்தி - அடைகிறார்கள் ; அயஜ்ஞஸ்ய - யக்ஞம் செய்யாதவருக்கு ; அயம் லோக - மனித உலகமே ; ந அஸ்தி - இல்லை ; அந்ய - பரலோகம் ; குத - எப்படி?

4.31: குரு வம்சத்தில் சிறந்தவனான அர்ஜீனா! யக்ஞத்தில் எஞ்சிய அமுதத்தைப் பருகுகின்ற யோகிகள் சாஸ்வதமான பரப்ரம்மம் பரமாத்மாவை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு இவ்வுலகமே சுகமளிப்பதாக இல்லை. அப்படியிருக்கப் பரலோகம் எப்படி சுகமளிக்கும்?

4.32

ஏவம் பஹுவிதா யஜ்ஞா வித்தாக ப்ரஹ்மணோ முகே |
கர்மஜான் வித்தி தான் ஸர்வான் ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே || 32

ஏவம - இவ்விதம் ; பஹீவதா - அநேகவிதமான ; யஜ்ஞா - யக்ஞங்கள் ; ப்ரஹ்மணமுகே - வேதங்களில் ; வித்தா - விரிவாகக் கூறப்பட்டுள்ளன தாந் ஸர்வாந் - அவை எல்லாவற்றையும் ; கர்மஜாந் - மனம், புலன்கள், உடல் ஆகியவற்றில் செய்து நிறைவேற்றப்பட வேண்டியவை என்று ; வித்தி - அறிந்து கொள் ; ஏவம் ஜ்ஞாத்வா - இவ்வாறு தத்வரீதியாக அறிந்து ; விமோக்ஷ்யஸே - விடுதலை பெறுவாய்.

4.32 : இவ்விதம் இன்னும் அநேகவிதமான யக்ஞங்கள் வேதங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவை எல்லாம் மனம், புலன்கள், உடல் ஆகியவற்றால் செய்து நிறைவேற்றப்பட வேண்டியவை என்று நீ அறிந்து கொள். இவ்வாறு தத்வரீதியாக அறிந்து அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீ கர்மபந்தத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுவாய்.

4.33

ச்ரேயான் த்ரவ்யமயात्-யஜ்ஞாத் ஜ்ஞானயஜ்ஞ: பரந்தப |
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரிஸமாப்யதே || 33

பரந்தப பார்த - பரந்தப அர்ஜீனா! ; த்ரவயமயாத் - த்ரவியங்களால் நிறைவேற்றக்கூடிய ; யஜ்ஞாத் - யக்ஞத்தைவிட ; ஜ்ஞாநயஜ்ஞ - ஞான யக்ஞம் ; ச்ரேயாந் - மிகவும் சிறந்தது ; அகிலம் கர்ம - என்னென்ன கர்மங்கள் உண்டோ ; ஸர்வம் - அந்தக் கர்மங்கள் அனைத்தும் ; ஜ்ஞாநே - ஞானத்தில் ; பரிஸமாப்யதே - நிறைவு பெறுகின்றன.

4.33: பரந்தப அர்ஜீனா! த்ரவியங்களால் நிறைவேற்றக்கூடிய யக்ஞத்தைவிட ஸர்வேப்ய - மற்ற எல்லா ; பாபேப்ய ; அபி - பாவம் செய்தவர்களைக் காட்டிலும் ; பாபக்ருத்தம - அதிகமான பாவத்தை செய்தவனாக ; அஸிசேத் - ஒருகால் நீ இருந்தாலும் கூட ; ஜ்ஞானப்லவேந - ஞானம் என்னும் படகினால் ; ஏவ

  • ஸந்தேகமின்றி ; ஸர்வம் வ்ருஜிநம் - பாவக்கடல் முழுவதையும் ; ஸந்தரிஷ்யஸி - நன்கு கடந்து விடுவாய்.

4.36 : மற்ற எல்லா பாவம் செய்தவர்களைக் காட்டிலும் அதிகமான பாவத்தைச் செய்தவனாக நீ ஒருகால் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் சந்தேகமின்றி பாவக்கடலை கடந்து விடுவாய்.

4.37

யதைதாம்ஸி ஸமித்தோக்னிர்-பஸ்மஸாத் குருதேர்ஜுன |
ஜ்ஞானாக்னி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா || 37

அர்ஜுனா அர்ஜுனா ; யதா - எப்படி ; ஸமித்த - கொழுந்து விட்டெரியும் ; அக்நி

  • நெருப்பு ; ஏதாம்ஸி - விறகுகளை ; பஸ்மஸாத் - சாம்பலாக ; குருதே - செய்கிறதோ ; ததா - அதேபோன்று ; ஜ்ஞானாக்நி - ஞானம் என்னும் நெருப்பு ; ஸர்வகர்மாணி - எல்லாக் கர்மங்களையும் ; பஸ்மஸாத் - சாம்பலாக ; குருதே - செய்கிறது.

4.37 :அர்ஜுனா ! எப்படி கொழுந்து விட்டெரியும் நெருப்பு விறகுகளைச் சாம்பலாகச் செய்கிறதோ, போன்று ஞானம் என்னும் நெருப்பு எல்லாக் கர்மங்களையும் சாம்பலாகச் செய்துவிடும்.

4.38

ந ஹி ஜ்ஞானேன ஸத்ருசம் பவித்ர-மிஹ வித்யதே |
தத் ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேனாத்மனி விந்ததி || 38

இஹ - இவ்வுலகில் ; ஜ்ஞாநேந - ஞானத்திற்கு ; ஸத்ருசம் - நிகராக ; பவித்ரம்

  • பரிசுத்தம் செய்யக்கூடியது ; ஹி - ஸந்தேகமின்றி ; நவித்யதே - இல்லை ; தத் - அந்த ஞானத்தை ; காலேந - நெடுங்காலமாக ; யோகஸம்ஸித்த - கர்மயோகத்தின் மூலம் உள்ளத் தூய்மையடைந்த மனிதன் ; ஸ்வயம் - தனக்குத் தானே ; ஆத்மநி - ஆத்மாவினிடம் ; விந்ததி - எய்தப் பெறுகிறான்.

4.38 : இவ்வுலகில் ஞானத்திற்கு நிகராகப் பரிசுத்தம் செய்யக்கூடியது சந்தேகமின்றி எதுவும் இல்லை. அந்த ஞானத்தை நெடுங்காலமாகக் கடைபிடித்து கர்மயோகத்தின் மூலம் உள்ளத் தூய்மையடைந்த மனிதன் தானே ஆத்மாவினிடம் போய் சேர்கிறான்.