KAILASA Library/பகவத் கீதை/மூன்றாவது அத்யாயம்Sign in
பகவத் கீதை

மூன்றாவது அத்யாயம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கர்மயோகம்

அர்ஜூந உவாச

3.1

அர்ஜுன உவாச-

ஜ்யாயஸீ சேத் கர்மணஸ் தே மதா புத்திர் ஜனார்த்தன |
தத் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ || 1

அர்ஜூந உவாச - அர்ஜீனன் சொன்னார் ; ஜநார்தந - ஜனார்தன ; கர்மண :- கர்மத்தைக் காட்டிலும்; புத்தி :- ஞானம் ; ஜ்யாயஸீ - சிறந்தது ; தே உங்களால் ; மதாதேத் - கருதப்பட்டால் ; கேசவ - கேசவ ; தத் - பின்னர் ; மாம் - என்னை ; கோரே - பயங்கரமான ; கர்மணி - கர்மத்தில் ; கிம் - ஏன் ; நியோஜயஸி - ஈடுபடுத்துகிறீர்கள்.

3.1 : அர்ஜீனன் சொன்னார் ; ஜனார்த்தன! கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சி றந்தது என்று உங்களால் கருதப்பட்டால் கேசவா! பின்னர் என்னை பயங்கரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்துகிறீர்கள்.

3.2

வ்யாமிச்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே |
ததேகம் வத நிச்சித்ய யேந ச்ரேயோஹ-மாப்னுயாம் || 2

வ்யாமிச்ரேணேவ - குழம்பியது போன்ற : வாக்யேந - பேச்சினால் ; மே புத்திம் - என் புத்தியை ; மோஹயஸி இவ - கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே. யேநஎதனால் ; அஹம் - நான் ; ச்ரேய - மேன்மையை ; ஆப்நுயாம் - அடைவேனோ ; தத்ஏகம் - அந்த ஒன்றை ; நிச்சித்ய - தீர்மானித்து ; வத - கூறுங்கள்.

3.2: குழம்பியது போன்ற பேச்சினால் என் புத்தியை கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே! எதனால் நான் மேன்மையை அடைவேனோ அந்த ஒன்றைத் தீர்மானித்துக் கூறுங்கள்.

3.3

ஸ்ரீ பகவானுவாச-

லோகேள்ஸ்மின் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக |
ஜ்ஞானயோகேந ஸாங்க்யானாம் கர்மயோகேன யோகினாம் || 3

3.6

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் |
இந்த்ரியார்த்தான் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே || 6

ய : விமூடாத்மா - அறிவிலியான எவன் ; கர்மேந்த்ரியாணி - புலன்கள் அனைத்தையும் வலுவில் ; ஸம்யம்ய - அடக்கிவிட்டு ; மநஸா - மனதினால் ; இந்த்ரியார்தான் - புலன்நுகர் பொருட்களை ; ஸ்மரந்ஆஸ்தே - நினைத்துக் கொண்டிருக்கிறானோ ; ஸ: - அவன் ; மித்யாசார : - பொய் நடத்தையுள்ளவன் ; உச்யதே

  • கூறப்படுகிறான்.

3.6: அறிவிலியான எவன் புலன்கள் அனைத்தையும் வலுவில் - வெளித் தோற்றத்தில் அடக்கிவிட்டு மனதினால் அந்தப் புலன்நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ ; அவன் பொய் நடத்தையுள்ளவன் - ஆஷாடுபூதி எனக் கூறப்படுகிறான்.

3.7

யஸ்த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதேஸுர்ஜன |
கர்மேந்த்ரியை: கர்மயோக-மஸக்த: ஸ விசிஷ்யதே || 7

து - ஆனால் ; அர்ஜுந - அர்ஜூனா! ; ய : - எவனொருவன் ; மநஸா - மனதினால் ; இந்த்ரியாணி - புலன்களை ; நியம்ய - வசப்படுத்தி ; அஸக்த: - பற்றில்லாதவனாக ; கர்மேந்திரியை :- எல்லாப் புலன்களாலும் ; கர்மயோகம் - கர்மயோகத்தை ; ஆரபதே

  • கடைப் பிடிக்கிறானோ; ஸ: - அவனே ; விசிஷ்யதே - சிறந்தவன்.

3.7: ஆனால் அர்ஜீனா! எவனொருவன் மனதினால் புலன்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்புடிக்கிறானோ அவனே சிறந்தவன்.

3.8

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண: |
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்யே-தகர்மண: || 8

த்வம் - நீ ; நியதம்கர்ம - சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை ; குரு

  • ஆற்றுவாயாக ; ஹி - ஏனெனில் ; அகர்மண - கர்மங்கள் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் ; கர்ம - கர்மங்களை ஆற்றுவது ; ஜ்யாய :- சிறந்தது ; ச - மேலும் ; அகர்மண :- கர்மம் செய்யாமல் இருப்பதால் ; தே - உனக்கு ; சரீரயாத்ரா அபி - உடலைப் பேணுவதுகூட நப்ரஸித்யேத் - ஸாத்யமாகாது.

3.11

தேவான் பாவஸதானேன தே தேவா பாவயந்து வ:।
பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமவாப்ஸ்யத ॥ 11

அநேந - இந்த வேள்வியினால் ; தேவான் - தேவதைகளை ; பாவயூத - வளரச் செய்யுங்கள் ; தேதேவா - அந்த தேவதைகள் ; வ - உங்களை ; பாவ்யந்து - வளரச் செய்யட்டும் ; பரஸ்பரம் பாவ்யந்த :- ஒருவர் மற்றொருவரை வளரச் செய்து ; பரம்ச்ரேய - மேன்மையான நன்மையை ; அவாப்ஸ்யத - அடைவீர்களாக.

3.11: இந்த வேள்வியினால் தேவதைகளை வளரச் செய்யுங்கள் ; அந்த தேவதைகள் உங்களை வளரச் செய்யட்டும். தன்னலம் கருதாத தன்மையுடன் ஒருவர் மற்றொருவரை வளரச் செய்து நீங்கள் மேலான நன்மையை அடைவீர்களாக.

3.12

இஷ்டான போகான் ஹிவோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா: ।
தைர்-தத்தா-னப்ரதாயைய்போ யோ புங்க்தே ஸ்தேன ஏவஸ: ॥
12

யஜ்ஞபாவதா - வேள்வியினால் வளர்ச்சியடைந்த ; தேவா - வேதவதைகள் ; வ - உங்களுக்கு ; இஷ்டாந்போகாந் - விரும்பிய போகங்களை ; ஹி - நிச்சயமாக தாஸ்யந்தே - கொடுப்பார்கள் ; தை : தத்தாந் - அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை ; ஏய்ய - அவர்களுக்கு ; அப்ரதாய - அர்ப்பணம் செய்யாமல் ; ய - எவன் ஒருவன் ; புங்க்தே - அனுபவிக்கிறானோ ; ஸ - அவன் ; ஸ்தேந : ஏவ - திருடனே.

3.12: வேள்வியினால் வளர்ச்சியடைந்த தேவதைகள் உங்களுக்குக் கேட்காமலேயே விரும்பிய போகங்களை நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடனே.

3.13

யஜ்ஞசிஷ்டாசின: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை: ।
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்-யாத்மகாரணாத் ॥
13

யஜ்ஞசிஷ்டாசுக :- வேள்வில் எஞ்சிய உணவை உண்கின்ற ; ஸந்த : சான்றோ றார்கள் ; ஸர்வகில்பிஷை: - எல்லாப் பாவங்களிலிருந்தும், முச்யந்தே - விடுபடுகிறார்கள் ; யே பாபா :- எந்த பாவிகள் ; ஆத்மகாரணாத் - தம் உடலைப் பேணுவதற்காகவே ; பசந்தி - உணவைச் சமைக்கிறார்கள் ; தே து - அவர்கள் ; அகம் - பாவத்தையே ;

3.16

ஏவம் ப்ரவர்த்திதம் சக்ரம் நானுவர்த்தயதீஹ ய: |
அகாயு-ரிந்த்ரியாராமோ மோகம் பார்த்த ஸஜீவதி || 16

பார்த்த - பார்த்தா ; ய: - எவனொருவன் ; இஹ - இவ்வுலகில் - ஏவம் - இவ்வாறு ; ப்ரவர்த்திதம் சக்ரம் - பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட படைப்பும் சக்கரத்திற்கு அனுகூலமாக ; நஅநுவர்தயதி - பின்பற்றி நடக்கவில்லையோ ; இந்த்ரியாராம :- புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் ; ஸ: - - அகாயு :- அந்தப் பாவ வாழ்க்கையுடையவன் ; மோகம் - வீணே ; ஜீவதி - வாழ்கிறான்.

3.16 : பார்த்தா ! எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட படைப்புச் சக்ரத்திற்கு அனுகூலமாகப் பின்பற்றி நடக்கவில்லையோ - தன் கடமையை ஆற்றவில்லையோ, புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கையுடையவன் வீணே வாழ்கிறான்.

3.17

யஸ்த்வாத்ம-ரதிரேவ ஸ்யா-தாத்ம-த்ருப்தச்ச மானவ: |
ஆத்மன்யேவ ச ஸந்துஷ்டஸ் தஸ்ய கார்யம் ந வித்யதே || 17

து - ஆனால் ; ய :மாநவ :- எந்த மனிதன் ; ஆத்மரதி : ஏவ - ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் ச- மேலும் ஆத்மத்ருப்த : ச - ஆத்மாவிலேயே த்ருப்தி கொண்டவனாகவும் ; ஆத்மந்யேவ - ஆத்மாவிலேயே ; ஸந்துஷ்ட - மகிழ்பவனாகவும் ; ஸ்யாத் - இருக்கிறானோ ; தஸ்ய - அவனுக்கு, கார்யம் - செய்ய வேண்டிய செயல் எதுவும் ; நவித்யதே - இல்லை.

3.17 : ஆனால் எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் மேலும் ஆத்மாவிலேயே த்ருப்தி கொண்டவனாகவும் ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ, அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை.

3.18

நைவ தஸ்ய க்ருதேனார்த்தோ நாக்ருதேனேஹ கச்சன |
ந சாஸ்ய ஸர்வபூதேஷ கச்சிதர்த்த-வ்யபாச்ரய: || 18

தஸ்ய - அந்த ; இஹ - இவ்வுலகில் ; க்ருதேந - கர்மங்களைச் செய்வதாலும் ; கச்சந - எந்த விதமான; அர்த :ந - பயனும் இல்லை ; அக்ருதேந ஏவ :- கர்மங்களைச் செய்யாவிட்டாலும் ; ந- ஒரு பயனுமில்லை ; ச- அவ்வாறே ; ஸர்வ பூதேஷீ - உயிரினங்கள் அனைத்திலும் ; அஸ்ய - அவனுக்கு ; அர்தவ்யபாச்ரய :- தனக்காக ஆக

3.24

உத்ஸீதேயு-ரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் |
ஸங்கரஸ்ய ச கர்த்தாஸ்யா-முபஹன்யா-மிமா: ப்ரஜா: || 24

அஹம் - நான்; கர்ம - கர்மங்களை ; நகுர்யாம்சேத்- செய்யாமல் விட்டால் ; இமேலோகா - இம்மனிதர்கள் அனைவருமே ; உத்ஸீதேயு - சீர்குலைந்து போவார்கள் ; ச- மேலும் ; ஸங்கரஸ்யகர்தா - சீர் குலைவு செய்கிறவனாகவும் இமா : ப்ரஜா :- இந்த மக்கள் அனைவரையும் ; உபஹன்யாம் - அழிப்பவனாகவும்; ஸ்யாம் - ஆவேன்.

3.24 : நான் கர்மங்களைச் செய்யாமல் விட்டால் இம்மனிதர்கள் அனைவரும் சீர்குலைந்து போவார்கள். மேலும் நான் சீர் குலைவு செய்கிறவனாகவும் இம்மாந்தர் அனைவரையும் அழிப்பவனாகவும்; ஆவேன்.

3.25

ஸக்தா: கர்மா-யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத |
குர்யாத் வித்வாம்ஸ்-ததாஸக்தச் சிகீர்ஷுர்லோக ஸங்க்ரஹம் || 25

பாரத - பரதகுலத் தோன்றலே ; கர்மணி - கர்மங்களில் ; ஸக்தா - பற்றுக் கொண்ட ; அவித்வாம்ஸ - அஞ்ஞானிகள் ; யதாகுர்வந்தி - எவ்விதம் கர்மங்களைச் செய்கிறார்களோ ; அசக்த - பற்றில்லாத ; வித்வாந் - தத்வஞானியும்; லோகஸங்க்ரஹம் -உலகத்திற்கு வழி காட்டுதலை ; சிகீர்ஷீ - செய்ய விரும்பி ; ததா - அவ்விதமே ; குர்யாத் - செய்ய வேண்டும்.

3.25: பரதகுலத் தோன்றலே ! கர்மங்களில் பற்றுக் கொண்ட அஞ்ஞானிகள் எவ்விதம் கர்மங்களைச் செய்கிறார்களோ பற்றில்லாத தத்வஞானியும் உலகத்திற்கு வழி காட்டுதலைச் செய்ய விரும்பி அவ்விதமே கர்மங்கள் செய்ய வேண்டும்.

3.26

ந புத்திபேதம் ஜனயே-தஜ்ஞானாம் கர்மஸங்கினாம் |
ஜோஷயேத் ஸர்வகர்மாணி வித்வான் யுக்த: ஸமாசரன் || 26

யுக்த : வித்வாந் - பரமாத்ம ஸ்வரூபத்தில் நிலைத்து நிற்கின்ற ஞானி ; கர்மஸங்கிநாம் - சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைப் பற்றோடு செய்யும் ; அஜ்ஞானாம் - அஞ்ஞானிகளின் ; புத்தி பேதம் - புத்தியில் குழப்பத்தை அதாவது கர்மங்களையாற்றுவதில் சிரத்தையின்மையை ; நஜநயேத் - உண்டாக்கக் கூடாது ; ஸர்வகர்மாணி - சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை ; ஸமாசரந் - செவ்வனே ஆற்றி ; ஜோஷயேத் - அவர்களையும் செய்ய வைக்க வேண்டும்.

3.26 : பரமாத்ம ஸ்வரூபத்தில் நிலைத்து நிற்கின்ற ஞானி சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைப் பற்றோடு செய்யும் அஞ்ஞானிகளின் புத்தியில் குழப்பத்தை அதாவது கர்மங்களை செய்வதில் சிரத்தையின்மையை உண்டாக்கக் கூடாது. மாறாகத் தானும் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செவ்வனே செய்து அவர்களையும் செய்ய வைக்க வேண்டும். 3.27

ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வச: |
அஹங்கார-விமூடாத்மா கர்த்தாஹமிதி மன்யதே ॥ 27

கர்மாணி - எல்லாச் செயல்களும் ; ஸர்வஸீ - எல்லா விதங்களிலும் ; ப்ரக்ருதே :- ப்ரக்தியின் ; குணை - குணங்களால் ; க்ரியமாணாநி - செய்யப்படுகின்றன ; அஹங்காரவிமூடாத்மா - அஹங்காரத்தால் மழுங்கிய அறிவை உடைய அஞ்ஞானி ; அஹம்கர்தா - நான் கர்த்தா; இதிமன்யதே - என்று நினைத்துக் கொள்கிறேன்.

3.27 : எல்லாச் செயல்களும் எல்லா விதங்களிலும் ப்ரக்ருதியின் குணங்களால் செய்யப்படுகின்றன. ஆயினும் அஹங்காரத்தால் மழுங்கிய அறிவை உடைய அஞ் ஞானி நான் கர்த்தா என்று நினைத்துக் கொள்கிறேன்.

3.28

தத்வவித்து மஹாபாஹோ குணகர்ம-விபாகயோ:|
குணா குணேஷ வர்த்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே ॥ 28

து - ஆனால் ; மஹாபாஹோ - வலிமையான கைகளை உடையவனே ; குணகர்மவிபாகயோ :- குணங்களின் பிரிவு, கர்மங்களின் பிரிவு இவற்றின் ; தத்த்வவித் - தத்வம் அறிந்த ஞானயோகி ; குணா - குணங்கள் அனைத்தும் ; குணேஷீ

  • குணங்களில் ; வர்தந்தே - செயல்படுகின்றன ; இதி - என்று ; மத்வா - அறிந்து ; ந ஸஜ்ஜதே - பற்றுக் கொள்ளாதிருக்கிறேன்.

3.28 : ஆனால் வலிமையான கைகளை உடையவனே குணங்களின் பிரிவு, கர்மங்களின் பிரிவு இவற்றின் தத்வம் அறிந்த ஞானயோகி, குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து அவற்றில் பற்றுக் கொள்ளாதிருக்கி றன்.

3.29

ப்ரக்ருதேர்-குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு |
தானக்ருத்ஸ்னவிதோ மந்தான் க்ருத்ஸ்னவிந்-ந விசாலயேத் ॥ 29

ப்ரக்ருதே - ப்ரக்ருதியில் உண்டான ; குணஸம்மூடா - குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் ; குணகர்மஸு - குணங்களிலும் கர்மங்களிலும் ; ஸஜ்ஜந்தே - ஈடுபடுகிறார்கள் ; தாந் - அந்த ; அக்ருதஸ்நவித - முற்றும் அறிந்திரூந்த ; மந்தாந் - குறைமதியுடைய அஞ்ஞானிகளை ; க்ருத்ஸ்நவித - முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி ; ந விசாலயேத் - தடுமாறச் செய்யலாகாது.

3.29 : ப்ரக்ருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறைமதியுடைய அந்த அஞ்ஞானிகளை முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகாது.

3.30

மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்ம-சேதஸா |
நிராசீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: ॥

அத்யாத்மசேதஸா - அந்தர்யாமியான பரமாத்மாவாகிய என்னிடம் ஒன்றிய மனத்துடன் ; ஸர்வாணி கர்மாணி - எல்லாக் கர்மங்களையும் ; மயி - என்னிடம் ; ஸந்ந்யஸ்ய - அர்ப்பணம் செய்துவிட்டு ; நிராயீ - ஆசையற்றவனாக ; நிர்மம் - மமகாரமற்றவனாக ; விகதஜ்வர - தாபமற்றவனாக ; பூத்வா - ஆகி ; யுத்யஸ்வ - யுத்தம் செய்.

3.30 : அந்தர்யாமியான பரமாத்மாவாகிய என்னிடம் ஒன்றிய மனத்துடன் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு ஆசையற்றவனாக மமகாரமற்றவனாக தாபமற்றவனாக ஆகி யுத்தம் செய்.

3.31

யே மே மதமிதம் நித்ய-மனுதிஷ்ட்டந்தி மானவா: |
ச்ரத்தாவந்தோளனஸுயந்தோ முச்யந்தே தேள்பி கர்மபி: ॥

யே மாநவா - எந்த மனிதர்கள் ; அநஸீயந்த - குற்றங்குறை காணாதவர்களை ச்ரத்தாவந்த - சிரத்தை உடையவர்களாக ; கே - என்னுடைய ; இதம் மதம் - இந் கொள்கையை ; நித்யம் - எப்பொழுதும் ; அறுதிஷ்டந்தி - பின்பற்றுகிறார்களோ ; தே அபி - அவர்களும் ; கர்மபி ; - அனைத்துக் கர்மங்களிலிருந்தும்; முச்யந்தே - விடுபடுகிறார்கள்.

3.31: எந்த மனிதர்கள் குற்றங்குறைகாணாதவர்களாக, சிரத்தை உடையவர்களாக என்னுடைய ; இக்கொள்கையை எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ அவர்களும் இருக்கின்றன; தயோ - அவ்விரண்டின்; வசம் ந ஆகச்சேத் - பிடியில் அகப்படக்கூடாது; ஹி - ஏனெனில்; தௌ - அவ்விரண்டும் தான்; அஸ்ய இவனுடைய; பரிபந்தினௌ

  • இடையூறு விளைவிக்கும் பெரும் எதிரிகள்.

3.34: ஒவ்வொரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருளிலும் விருப்பு வெறுப்புகள் மறைந்து இருக்கின்றன. மனிதன் அவ்விரண்டின் பிடியிலும் அகப்படக்கூடாது. ஏனெனில் அவ்விரண்டும் தான் இவனுடைய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் பெரும் எதிரிகள்.

3.35

ச்ரேயான் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத் ।
ஸ்வதர்மே நிதனம் ச்ரேய: பரதர்மோ பயாவஹ: ॥ 35

ஸ்வனுஷ்டிதாத் - நன்கு கடைப்பிடிக்கப்பட்ட; பரதர்மாத் - பிறருடைய தர்மத்தைக் காட்டிலும்; விகுண - குணக் குறைவிருப்பினும்; ஸ்வதர்ம - தன்னுடைய தர்மம் ; ச்ரேயான் - மிகவும் உயர்ந்தது; ஸ்வதர்மே - ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ; நிதனம் - இறப்பதும்; ச்ரேய - மேன்மையே தரும்; பரதர்ம - பிறருடைய தர்மம் : பயாவஹ - பயத்தை விளைவிக்கும்.

3.35 : நன்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக் குறைவிருப்பினும் தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இறப்பதும் மேன்மையே தரும். பிறருடைய தர்மம் பயத்தை விளைவிக்கும்.

3.36

அர்ஜூன உவாச-

அத கேன ப்ரயுக்தோப்யம் பாப:ஞ் சரதி பூருஷ: ।
அனிச்சன்னபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: ॥ 36

அர்ஜுன உவாச :- அர்ஜுனன் கூறினார்; வார்ஷ்ணேய - க்ருஷ்ணா; அத - பின் ; அயம் - இந்த ; பூருஷ - மனிதன்; அநிச்சந்அபி - தான் விரும்பாவிட்டாலும்; பலாத்

  • பலவந்தமாக; நியோஜித ; இவ - தூண்டப்பட்டவன் போல; கேந - எதனால்; ப்ரயுக்த - ஏவப்பட்டு; பாபம் - பாவத்தை; சரதி - செய்கிறான்?

3.36 : அர்ஜுனன் கூறினார்! க்ருஷ்ணா! பின் இந்த மனிதன் தான் விரும்பாவிட்டாலும் பலவந்தமாகத் தூண்டப்பட்டவன் போல எதனால் ஏவப்பட்டுப் பாவத்தை செய்கிறான்? ஜ்ஞாநிந - ஞானிகளுக்கு ; நித்ய வைரிணா - என்றுமே பகைவனுமாகிய ; ஏதேந - இந்தக் காமத்தினால் ; ஜ்ஞாநம் - ஞானம் ; ஆவ்ருதம் - மறைக்கப்பட்டிருக்கிறது.

3.39 : மேலும் அர்ஜூனா ! திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும் காமம் என்ற வடிவத்தில் உள்ளதும் ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்தக் காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

3.40

இந்த்ரியாணி மஸோபுத்தி-ரஸ்யாதிஷ்டான-முச்யதே ।
ஏதைர்-விமோஹயத்-யேஷ ஜ்ஞான-மாவ்ருத்ய தேஹினம் ॥ 40

இந்த்ரியாணி - புலன்கள் ; மந - மனம் ; புத்தி - புத்தி ; அஸ்ய - இந்தக் காமத்தின் ; அதிஷ்டாநம் - இருப்பிடம் ; உச்யதே - சொல்லப்படுகிறது. ஏஷ ; இந்தக் காமம் தான் ; ஏதை - இவற்றால் ; ஜ்ஞாநம் - ஞானத்தை ; ஆவ்ருத்ய - மறைத்து ; தேஹிநம் - ஜீவாத்மாவை ; விமோஹயதி - மோஹத்திற்கு உட்படுத்துகிறது.

3.40 : புலன்கள். மனம், புத்தி இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம் தான் மனம், புத்தி, புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து ஜீவாத்மாவை மோஹத்திற்கு உட்படுத்துகிறது.

3.41

தஸ்மாத்-த்வமிந்த்ரியா-யாதௌ நியம்ய பரதர்ஷப ।
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் ஜ்ஞான-விஜ்ஞான-நாசனம் ॥ 41

தஸ்மாத் - ஆகவே ; பரதர்ஷப - அர்ஜூனா! ; த்வம் - நீ ; ஆதௌ - முதலில் ; இந்த்ரியாணி - புலன்களை ; நியம்ய - வசப்படுத்தி ; ஜ்ஞாந விஜ்ஞாந நாசநம் - ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற ; நம் பாப்மாநம் - இந்தப் பெரும் பாவியான காமத்தை ; ஹி - நிச்சயமாக ; ப்ரஜஹி - வீறுடன் ஒழித்து விடு.

3.41 : ஆகவே அர்ஜூனா! நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற இந்தப் பெரும் பாவியான காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்து விடு.

3.42

இந்த்ரியாணி பரா-யாஹு-ரிந்த்ரியேப்ய: பரம் மன:
மனஸஸ்து பரா புத்திர் யோ புத்தே: பரதஸ்து ஸ: ॥ 42