Chapter 7

Vii. உறுதிமாழி! உங்களுக்கே நீங்கள் செய்து கொடுக்கும் சத்தியம்!

1 sections

Vii. உறுதிமாழி! உங்களுக்கே நீங்கள் செய்து கொடுக்கும் சத்தியம்!

உறுத் மொழி-1

சுவாமிஜியால் கொடுக்கப்பட்ட சக்தியைக் கொண்டு எல்லா நேரத்திலும், எல்லோருக்கும் (உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாவற்றிற்கும்) எந்தவித மறுப்பும் இல்லாமல் தியான சிகிச்சையளிப்பேன் - என்று உறுதி கூறுகிறேன்.

  • ★ மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் என்ற எதுவாக இருந்தாலும் எந்த மறுப்பும் கூறாமல் தியான சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • ★ உங்கள் தனிப்பட்ட விரோதங்கள், சச்சரவு களுக்காக யாருக்கும் மறுப்பு கூறக் கூடாது.

(உங்களுக்குள் இருந்து வெளிப்படும் சக்தி இறை சக்தி. இறைவனுக்கு பாவியும், புனிதனும் ஒன்றே. இந்த சக்தியை பெற நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. இது உங்கள் சக்தி அல்ல. குருவின் கருணையால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு. இதை உபயோகப்படுத்துவதில் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு இடமே இல்லை).

★ உங்கள் உடல், உயிர், உடமைகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் துஷ்டர்களுக்கு மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் தியான சிகிச்சை கொடுக்க மறுக்கலாம். வேறு யாருக்கும் மறுக்கக் கூடாது.

உறுதி மொழி - 2

இனிமேல் தொடர்ந்து, மனமுவந்து தியான சிகிச்சையை தியான சிகிச்சை மையங்களுக்குச் சென்று செய்வேன் அல்லது என்னுடைய இல்லத்திலேயே தியான சிகிச்சை மையத்தை ஆரம்பித்து சிரத்தை யோடு நடத்துவேன் - என்று உறுதி கூறுகிறேன்.

நீங்கள் சுவாமியின் சக்தியை எடுத்துச் செல்லும் வாய்க்கால் என்பதை உணர்ந்து - உங்களுடைய சொந்த கற்பனைகள், அகங்காரம், சமுதாய கட்டுகளை விட்டு வெளியேறி முழு சிரத்தையோடு செயல்படுங்கள்.

(நீங்கள் உங்களுடைய கற்பனைகளிலிருந்தும் சமுதாய கட்டில் இருந்தும் வெளிப்பட்டால்தான் -உங்களிடம் தியான சிகிச்சைக்காக வருபவர்களை அவர்களின் கற்பனை உலகில் இருந்தும், சமுதாய பாதிப்புகளில் இருந்தும் வெளிக் கொண்டு வர முடியும்.)

  • ★ மக்களை துன்பத்தில் இருந்து மீட்டு ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும் அற்புதச் சேவையில் நீங்கள் ஈடுபட்டுடிருக்கிறீர்கள். எனவே, முழு உற்சாகத்தோடு, முழு ஈடுபாடோடு செயல்படுங்கள்.
  • ★ என்னுடைய வார்த்தைகளை வெறுமனே கேட்பதில் எந்த பலனும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் வாழ்க்கையில் நடை முறைப்படுத்துங்கள்.

ஆனந்தம் என்றும் உங்களினுள் மலரும்.

உறுதி மொழி - 3.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜியாலும், தியான பீடத்தாலும், வகுக்கப்பட்ட எல்லா விதிமுறைகளையும் முழு உணர்வோடு ஏற்றுக் கொண்டு செயல்படுவேன். இப்போது இருக்கும் விதிமுறைகளையும், எதிர்காலத்தில் வகுக்கப்படும் எந்த ஒரு விதிமுறையையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு செயல்படுவேன் - என்று உறுதி கூறுகிறேன்.

★ விதி முறைகளை மீறாமல் - தியான பீடத்திற்கான உங்களுடைய சேவையை எல்லா வழிகளிலும் தொடர்ந்து செய்யுங்கள்.

உங்களுக்கு வழங்கப்படும் தியான சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக, பல ஞானிகளால், கணக்கிலடங்காத தபஸ்களினாலும், பல ஆழ்ந்த தியான அனுபூதிகளாலும் மிக எளிமையான ஒரு முறையாக மாற்றப்பட்டிருக்கிறது.

முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட ரேடியோ ஒரு சிறிய Room அளவிற்குத்தான் இருந்தது. ஆனால் இன்று கைக்கடிகாரத்தின் ஒரு பகுதியாக இயங்கும் அளவுக்கு எளிமையாகி விட்டது. இந்த எளிமையாக்கலுக்காக எவ்வளவு பேர் தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்கள் தெரியுமா???

ஒரு சாதாரண பொருளின் கண்டு பிடிப்பிற்கே பலர் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டி யிருக்கிறது. இவ்வளவு மகத்தான ஒரு முறையை கண்டுபிடிக்க எவ்வளவு பேர் வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பார்கள், கொஞ்சம் உணர்ந்து பாருங்கள்.

பதஞ்சலிதான் முதன்முதலில் இந்த சிகிச்சை முறைக்கு வித்திட்டவர். அதன் பிறகு பலர் கடுமையான தபஸ்கள் பல செய்து இன்று இதை ஒரு சுலப்மான சிகிச்சை முறையாக தந்திருக்கிறார்கள்.

இவ்வளவு ஓர் அற்புதமான கலையை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன் படுத்துங்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்படும் சக்தி விலை மதிப்பற்றது.