Chapter 29

உள்ளிருக்கும் பெண்

1 sections

உள்ளிருக்கும் பெண்

'எப்போதும் ஆண் பெண்ணையே பெண் ஆணையே அடையத் துடிப்பது இயற்கையா? செயற்கையா ?' வெட்கம் மீறி வெட்டவெளியில் துணிந்து விட்டான்! கேட்டுவிட்டான்! சீடன். ்துடிப்பு இயற்கையுமல்ல. செயற்கையுமல்ல. அது இயல்பு. ஆணுக்குள்ளிருக்கும் பெண் - வெளிப் பெண்ணையும், பெண்ணுக்குள்ளிருக்கும் ஆண் – வெளி ஆணையும் அடையத் துடிப்பது இயல்பு. காரணம் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஓர் பெண்ணும் பெண்ணுக்குள் ஓர் ஆணும் ஒளிந்து கொண்டிருப்பது உண்மையென்ற இயற்கையைச் செயற்கையாக நீ மறந்து விட்டதுதான் - இயல்பாகக் கூறினார் குரு.