காதல் இன்றி வாழலாம்
காதல் இன்றி வாழலாம்
கல்லூரி மாணவன்: காதல் இன்றி வாழமுடியுமா? ஞானகுரு: கண்ணை மூடி கணவில் வாழும் மானிடா! தெரிந்து கொள் நீ செய்யும் காதல் இன்றி மணிதனால் வாழ முடியும். ஏற்கனவே அப்படித்தான் வாழ்கிறாய் காதல் பற்றி என்ன தெரியும் என கடவுள் கேட்டால் சில கற்பனைகள் சில சோகங்கள் சில சந்தோஷங்களைத் தாண்டி என்ன சொல்ல முடியும் உன்னால் காதல் என்பது கனவுகள் தாண்டிய பின் மலர்வது.
நீ வாழ்வது போலவே வாழ் ! காதல் இன்றி வாழ்வாய்.
முன் அல்ல.
Part 2: Who Asked You to Take Birth
வீட்டுக்குள் தொலைத்து விட்டேன்
சூரியன் சென்றுவிட்டானென்ற தைரியத்தில் தன்னை முழுமையாக வெளிப்படுத்திவிட்டது இருள். இருளில் இங்குமங்குமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தார் ஜென் பெண் ஞானியான சியோனோ ஆர்வமிகுதியால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் 'என்ன தேடுகிறாய்? ஒரு மணி நேரமாய்' எனக் கேட்டார்கள். தேடுவது எதுவென்றே தெரியாமல் – நீ இருளில் தேடுவது முட்டாள்தனமில்லை? ' எனக் கேட்டவர்களிடம், 'எதுவென்றே தெரியாமல் முழு சுகத்தை எங்கெங்கோ நிம்மதி திருப்தி அமைதி வடிவில் கிடைக்காதா – என்று தேடுவது முட்டாள்தனமில்லையா? – என்ற சியானோவின் கேள்வி சிலிர்க்க வைத்தது. அத்தோடு சிதறிப் போனார்கள் அவரவர் வீட்டுக்கு. சீர்மிகு சிந்தனையில் மூழ்கியவர்களாய் அடுத்த நாள் காலை ... சூரியன் வந்துவிட்டானே என்ற பயத்தில் தன்னை முழுழமையாக மறைத்துக் கொண்டது இருள். ' காலை வெளிச்சத்தில் உற்சாகத்தின் உச்சியில் துள்ளலோடு மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்த குரு சியானோவிடம் 'இப்போது என்ன தேடுகிறீர்கள்' அவர்கள் கேட்டதற்கு
'என் வீட்டுக்குள்' என் வைர மோதிரத்தைத் தொலைத்து விட்டேன் அதைக் கண்டுபிடிக்கவே நம்பிக்கையோடு இங்கு தேடிக் கொண்டிருக்கிறேன்'
குரு சியானோ தெளிந்த பதிலால்
புதுக் கேள்வியொன்று பிறந்தது அவர்களுக்குள். அதனால் கேட்டார்கள் மீண்டும்.
'மோதிரம் தொலைத்ததும் உள்ளே தொலைந்த மோதிரமிருப்பதும் உள்ளே -இதில் வெளியே தேடுவானேன் ... எவ்விதத்திலாவது இது புத்திசாலித்தனமாகுமா? எனக் கேட்டவர்களிடம்
முழுக்கத்தைத் தொலைத்ததும் உள்ளே தொலைந்து போன முழுகுகமிருப்பதும் உள்ளே - இதில் வெளியே சுகம் தேடி அலைவதேன் எவ்விதக்கிலாவது இது புத்திசாலித்தனமாகுமோ?' என்ற
சியானோவின் கேள்வியால், சிரிப்பின் கேலியை நிறுத்திச் சிந்தித்தார்கள்.
சிந்தித்தவர்களின் சிந்தனையைத் தடுத்து 'அகத்தில் சுகம் அடைந்தவனே இகத்தில் சுகம் அடைய முடியும் முழுமையாக ' எனக்கூறி கூரைவீட்டுக்குள்ளே புகுந்து கொண்டார் சியானோ.