உணர்ச்சிகள்
உணர்ச்சிகள்
'போர்க்களத்தில் சட்டென்று இதயத்தில் இறங்கிய வாளாய் இறங்குகிறது -உணர்ச்சிகள் போர்க்களம் எவ்வளவோ மேல்,
உயிர் உடனே பிரிந்து விடுகிறது - ஆனால் இதயத்தில் இறங்கிய வாள் ! ! ! வாழ்க்கை எவ்வளவு கொடுமை ! உயிர் இருக்கும்வரை போராட்டம். நெஞ்சில் நுழைந்த உணர்ச்சிகள் ! ! ! உணர்ச்சிகளால்
பொங்கும் வேதனை என்று அடங்கும் ?'
உணர்ச்சிவசப்பட்டுக் கேட்ட சீடனுக்கு
'இது போன்ற உணர்ச்சிவசப்படுவதை என்று நிறுத்துகிறாயோ அன்று ! '
குருவின் பதிலில் நெஞ்சே நெறிகட்டிக் கொண்டதைபோல வலித்தது !
'வெந்த புண்ணிலே வேலா... வழி கேட்டால் வலி தருவதுதான் திருவிளையாடலா? - சீடன்
'புண்ணிலே சீழ் கோர்த்து விட்டது ... வலித்தாலும் சரி, வழி இதுவே சென்று வா' – குரு
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
வீட்டுக்குச் சென்றவன் எட்டி உதைத்தான் தூண்டப்பட்ட வேதனையில். துடிதுடித்துத் துள்ளி விழுந்தான். தூணில் உதைபட்ட கால் பெருவிரலில் இருந்த புண்ணால். விழுந்தவன் சிந்தித்தான் 'சின்ன உதைக்குத் துடித்துப் போனது தூணாலா? ? ? புண்ணாலா ? ? ? பதில் 'புண்ணால்தான்' - என்று வந்தது. அடுத்த நொடியே உதித்தது 'உணர்ச்சிகள் வேதனைப்படுத்துவது, உள்ளிருக்கும் புண்ணுக்குத் தியானமென்னும் மருந்திட்டான்
புண் மறைந்தது.
அதே உணர்ச்சிகள் நிறைந்த சமுதாயம் அதன்பின் ஒருமுறை கூடத் தீண்டவில்லை அவனை'.