Chapter 15

முக்கியத்துவம்

1 sections

முக்கியத்துவம்

குரு முன் வரிசையில் அமர்ந்திருந்த அழகிய பெண்ணுக்கு அளித்த பதிலின் கடைசி வரி 'நீ மிகவும் அழகானவன் தனித்துவம் பெற்றவள்' சான்றிதழாக வந்த பதிலில் பூரித்துப்போனவள் 'அப்படியா, சுவாமி!' என்றாள் மலர்ந்த முகத்தோடு. 'ஆம், நீ மிகவும் அழகானவள் தனித்துவம் பெற்றவள் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரைப்போல!' குருவின் நியாயமான பதிலுக்குப் பதிலாகச் சுருங்கிப்போனது அவளின் மலர்ந்த முகம் தன் முக்கியத்துவம் முறிந்துபோனதால் தன்னை எப்படியாவது முக்கியமானவராகக் காட்டிக்கொள்ளத்

துடிக்கும் துடிப்பே – தன் முனைப்பு !

யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?

ஞானத்தைப் படிக்காதே ! குடித்துவிடு ...

என்றோ செய்த தப்புத்தவறுக்கு இன்று அழுதான். அழுவதை 'அழாதே!' என்று கண் துடைத்து விடாமல் 'அழுதென்ன பயன் ? கண்ணீரால் கழுவிவிட முடியாது கள்ளத்தனத்தை! தவறுக்கு வருந்தாதே! திருந்து'. 'சுருக்' என்று தைத்துவிட்டது குருவின் இவ்வரிகள். குருவின் வரிகளை விரித்துப் பார்த்தான் அழுகையும் தவறும், சுருங்கி எங்கோ போய் 'விழுந்தது' விழுந்த இடத்திலிருந்து பிறந்தது 'தெளிவு!' ஒளிந்து கொண்டிருந்த புத்திசாலித்தனம் விழித்துக்கொண்டு சொன்னது 'வருந்தாதே! திருந்து !' கற்றுக் கொண்டான் வருத்திக்கொள்ளாமல் திருத்திக்கொள்ள.