Chapter 14

சுகமான அவஸ்தை

1 sections

சுகமான அவஸ்தை

'இதென்ன புது அவஸ்தை ! தானுண்டு தன் கவலையுண்டு என்றிருந்தவனுக்கு' – என வினோதமாகக் கேட்டவனை சாதாரணமாகப் பார்த்த ஆன்மீகன்

'தியான முகாம் ஏதும் சென்று வந்தாயா ?' எனக் கேட்டான்.

'ஆமாம்' என்றவன் தொடர்ந்து

'எப்படி வாழவேண்டும் என எனக்கு நேற்றுவரை தெரியாது என்பதையே நேற்றுதான் தெரிந்து கொண்டேன்

கள்ளுண்டவன் காலுங்கையும் கல்லில் பட்டாலும் முள்ளில் பட்டாலும் கள் தெளியும்வரை கவலையேயில்லை அவனுக்கு.

எப்படி வாழ்வதென தெரியாதவரை கவலைப்பட்டாலும் துன்பப்பட்டாலும் புத்தி தெரியும்வரை பிரச்சிணையேயில்லை எனக்கு.

வாழத் தெரியாமல் கள்ளுண்டவன் உடல் போல் மந்தமாயிருந்த மந்த மனம் விழித்துக்கொண்டதே ! என் செய்வேண் நான் ! '

கள்ளடித்தவனின் கள் தெளிந்த பின்தான் கல்லும் முள்ளும் எவ்வளவு ஆழமாக உடலில் கவிதை எழுதியிருக்கிறதெனத் தெரியும்.

தெளிந்தவன் தன் ரணங்களைப் பார்ப்பது போல என் மன குண ரணங்களைப் பார்க்கிறேன் நான்

என்றவனிடம் ஆன்மீகன்

'முதல் நாள் முதல் அனுபவம் இப்படித் தானிருக்கும் அந்த சுகமான அவஸ்தை

முதல் முறை

என் உள் அசிங்கங்கள் உணர்வுக் கண்ணாடியில் தெரிந்த போது எனக்கும் இப்படித்தானிருந்தது

தொடர்ந்து செய்த தியானத்தால் அவஸ்தை நீங்கியின்று சுகமாயிருக்கிறேன்' - என்றான்.

'நல்லவேளை தியான முகாம் சென்றேனே மிச்ச வாழ்க்கையாவது மிச்சம் மீதி வைக்காது வாழ்வேனே' - என

நம்பிக்கைக் குரலில் மலர்ந்த கண்களோடு பார்த்துச் சொன்னான் 'நன்றி!' என்று புது ஆன்மீகன்.

குருவின் வார்த்தை

அன்றோடு ஆஸ்ரமத்திற்குள் நுழைந்து ஆயிரம் நாட்களைத் தாண்டிவிட்டது அலையோசை போல் காதில்விழ - உதிர்த்து விட்டுச் சென்றார் குரு 'கடவுள்' என்ற வார்த்தையை … கடவுள்!... கட-வுள்... 'கட''உள்' !!! என்று தியானித்து தியானித்தே கடந்து உள்ளிருந்து அனுபவித்து விட்டான் ஆனந்தத்தை அரை நொடிக்குள் ஆயிரம் நாட்களுக்கு முன் வந்த சீடன்.

பின் குறிப்பு :

குரு ஒரு வார்த்தை சொன்னாகூட உண்மையாகத் தானிருக்கும் உண்மையின் உள்ளர்த்தமும் உள்மகத்துவமும் புரிந்துவிட்டவனுக்குச் சொல் கூட ஆயுதமே !