Chapter 11

அன்று உருகியவன் இன்று உற்சாகமாக ...

1 sections

அன்று உருகியவன் இன்று உற்சாகமாக ...

'நான் பேசுவது தமிழ் என்ன மொழி பேசுவாய் என்னைப் போல் இருப்பாயா? ஏனென்றால் என்னை உருவாக்கியது நீதானே. அறநூறு கோடிக் குழந்தைகளை அனாதைகளாக்கிவிட்டு எங்கு போய்த் தொலைந்தாய் நீ ? படைத்ததுதான் படைத்தாய் கொஞ்சம் நிம்மதியையும் சேர்த்துப் படைத்திருக்கக் கூடாதா? படைத்ததும் வேலை முடிந்ததென்று உடைத்துக் கொண்டாயோ உறவை !!' 'உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது ... முகுந்தா இதுபோல் உளறி உருகுபவர்களை" எனச் சொன்ன நிட்டி தொடர்ந்தார் ... ஆனால் நானும் உருகுவேன் நான் யார் ? நான் யார் ? நான் யாரென்று ! சமீபத்தில் தான் தெரிந்துக்கொண்டேன்

என் கேள்வியே ரமண மகரிஷியின் தியான முறையென்று ... என் கேள்விக்குப் பதிலில்லாத போதும் ஏதோ ஒரு சந்தோஷம் நெஞ்சோரத்தில் தொற்றிக் கொண்டது. கொடர்ந்தேன் தியானத்தை ஞானப் பாதையில்..

இன்று பதிலுக்கருகில் நெருங்கிவிட்டேன் !

அது… நான் யாரென்ற கேள்விக்கு பதில் – கடவுளென்றும் ! கடவுள் யாதெரன்ற கேள்விக்குப் பதில் – நானென்னும் வந்தது ?

வார்த்தைகளாக வந்த பதில் வார்த்தைகளைத் தாண்டிய அனுபவமாகுமென்ற நம்பிக்கை நெஞ்சோரத்தில் உதித்திருக்கிறது"

உற்சாகமாய் உதிர்த்தார் நிட்டி.

உங்களுக்கு ஒரு போட்டி… உங்களையே ஒரு பேட்டி காணுங்கள். நான் யார் ? நான் யார் ? நான் யார் ? என ஓயாமல் கேளுங்கள் 'நான்' ஓயட்டும் "ஞானம்" விழித்துக்கொள்ளட்டும்.

யாரை ஏமாற்ற ... ?

ஒருவர் புலம்பினார்...

'என்ன செய்வது கடவுள் கொடுத்து விட்டான் பத்து குழந்தைகளை' அவரிடம் சொன்னேன் ... பிள்ளை இல்லாவிட்டால், பெண் மலடி என்பது அக்காலம். ஆண் ? ? ? என்பது இக்காலம் பிள்ளைகள் நிறைய பெற்றால், 'கடவுள் கொடுத்தான்' என்பது எக்காலமும் கடவுளா கொடுத்தான் ?