தனியாய்ச் செய் புரட்சி
தனியாய்ச் செய் புரட்சி
'தாவரங்கள் விழித்துக்கொண்டே தூங்குகிறதா? – இல்லை தூங்கிக்கொண்டே விழித்திருக்கிறதா ? *
கேட்ட பகுத்தறிவாளனிடம் குரு,
'தெரிந்தென்ன பயன் ? விழித்துக்கொண்டே தூங்கும் உனக்கு ?'
என்றாவது பகுத்தாயா உன் அறிவை !
உலகைப் பகுத்து அறி! யார் குறை சொன்னது?
உன்னைப் பகுக்காமல் மற்றவரைப் பகுக்கப் புறப்படுவதேன் என்றாவது யோசித்தாயா?
முறைப்படுத்து பகுத்தறிவுப் பயன்பாட்டை
முறைபடுவாய்
முறைக்கும் குணம் வெறிக்கும் மனம் நெறிக்குள் வரும் தானாய்...
சமுதாயப் புரட்சிக்கு நாட்டிய அடிக்கல் நல்லதே யார் குறை சொன்னது ?
இதைவிட முக்கியமானது தனிமனிதப் புரட்சி விட்டுவிட்டாயே அதை !
வெளியே விழித்து உள்ளே தூங்குவதால் துக்கம் வழியும் இதயத்தை இதப்படுத்து ! செய் தனிமனிதப் புரட்சி! பகுக்காதே ! வகுக்காதே ! மற்றவர்களைப் பகு வகு உன்னைப் புகு புது சுக வாழ்வுக்குள்' எனச் சொன்னார்.
ஆடவிட்டதே ... ஆஹா! பாடவிட்டதே ... ஓஹோ!
குடும்பஸ்தன்: உலகம் என்னை நசுக்குகிறது. உறவுகள் என்னைப் பொசுக்குகின்றன. சொல்லுங்கள் என்ன உலகம் இது ! அத்வைத ஞானி: உலகம் அப்படித்தான் கூண்டுக்குள் அடைத்துதான் பறக்கச் செய்யும் இன்னும் அது காலை உடைக்கவில்லையே... ஆடு இன்னும் அது கழுத்தை நெறிக்கவில்லையே ... பாடு உலகம் இப்படித்தான் நீ ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் ! ஆடவிட்டதே ... ஆஹா பாடவிட்டதே... ஓஹோ என்றே ஆடு! பாடு! கொண்டாடு! தொல்லைகள் ஒடும் பார் ... இன்பவெள்ளம் பாயும் பார் ... கிடைத்ததைக் கொண்டு கொண்டாட !