Chapter 10
இறைவன் கேட்கும் கேள்வி
இறைவன் கேட்கும் கேள்வி
சொர்க்கம் சென்றால், இறைவனைப் பார்த்தால், இது நடக்கும்.
'யாருக்கு என்னென்ன செய்தாய் ? ' எனக் கேட்க மாட்டார்
'நீ என்ன செய்தாய் உனக்கு' என்றே கேட்பார் முதல் கேள்வியாய்
நீ ஒன்றுமில்லையென சொன்னால் 'ஈவு இரக்கமில்லாதவனே!' எனத் திட்ட மறக்க மாட்டார்.
பின் குறிப்பு :
உங்களுக்குத்தான் வாழ்கிறீர்கள் என நினைக்கிறீர்கள். அது சுயநலம்! என்பர் உம் அன்பர். காரணம், 'நீங்கள் செய்யும் சேவையெல்லாம்' உங்களுக்கு என நினைத்து, உங்களையே உறிஞ்சி வாழும் 'உயிர்குடிப்பான்' அகங்காரத்திற்கே செய்கிறீர்கள்! சுயநலம் தாண்டி சுயம் நலமாக ஏதாவது செய்யுங்கள் ! அப்படிச் செய்தால் ... 'தியானமா செய்தாய் ... நல்லது கண்ணே!' என்பார் இறைவன்
சொர்க்கத்தில்
உங்களைச் சந்திக்கையில்.