Books / Upanishads

12. isbn 979-8-88572-883-6

isbn 979-8-88572-883-6

கடவுளின் சாம்ராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. எப்படி விடுவது? 17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒருகடமையாக கருதி தேவைப்படுபவர்களுக்கு, தன்னால் எதையும் திரும்ப கொடுக்க முடியாதவர்களுக்கு, கொடுக்கப்படும் தானம் தான் நல்லெண்ண நிலையில் இருந்து கொடுக்கப்படுவதாக கருதப்படும். 17.21 விருப்பமின்மையாலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தானம் ஆணவம் தன்மையில் இஇுந்து கொடுக்கப்படுவதாகும். 17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில் தேவையற்றவர்களுக்கு அல்லது மரியாதை இல்லாமல் கொடுக்கப்படும் தானம் அறியாமையில் இருந்து கொடுக்கப்படுவதாகும். கிருஷ்ணர் தானம் பற்றி பேசுகிறார், இதை நான் ஏற்கனவே விளக்கி இருந்தேன். தானம் என்பது பகிர்ந்து கொள்வதாகும். நான் இதை கொடுக்கிறேன் என்ற மனோநிலையில் இருந்து கொடுக்க கூடாது. பகிர்ந்து கொள்கிறேன் என்ற மனோநிலையில் இருந்தும், இதனால்என்ன பலன்கிடைக்கும்என்று எதிர்பார்க்காமலும், இதனால் எனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்க்காமலும் கொடு க்க வேண்டும். அன்புடன், நன்றியுணர்வுடனும் தானம் கொடுக்க வேண் டும். ஓ கடவுளே, நீங்கள் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள், இதிலிருந்து கொஞ்சம் நான் இந்த சமூகத்தோடும், உலகத்தோடும் பகிர்ந்து கொள்கிறேன். தானம் என்பது பகிர்ந்து கொள்ளும் குணம். கடமையாக கருதி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்செய்யப்படும் தானம்தான் புண்ணியத்திற்கு, கடவுளுக்கு கொடுக்கப்படும் தானமாகும். ஓர் இயற்கையான பொறுப்புணர்வாக அது நடக்க வேண்டும். இது என்னுடைய குணம், அதை நான் செய்கிறேன். எந்த மனோநிலையில் இருந்து கொடு க்க வேண்டும். அப்போது தான் அது நிஜமான தானமாக இருக்கும். சரியான நேரத்தில், சரியான நபருக்கு கொடுக்கப்படும் தானம் தான் நல்லெண்ணத்தில் இருந்து உண்மையது. மூன்று விதமான தானங்கள் இருக்கின்றன. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், அன்னதானம் - இது உணவு, உடை மற்றும் ஒருவரின் உடல் தேவைக்கு கல்வி அறிப்பது, மற்றும் ஒருவரின் மன வளர்ச்சிக்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் கொடுப்பது. அடுத்தது வித்யாதானம். இது போது, நீங்கள் அவருக்கு சில ஆதரவு கருத்துக்களை வழங்குவீர்கள் என்றால், அது தான் வித்யாதானம். ஓர் அறையை எப்படி துடைப்பது என்று ஒருவருக்கு தெரியாமல் இருக்கும் போது, நீங்கள் அதை அவருக்கு கற்று தருவீர்கள் என்றால், அது தான் வித்யாதானம். ஒருவருக்கு புல் வெட்ட தெரியவில்லை, அவருக்கு நீங்கள் கற்று கொடுப்பீர்கள் என்றால் அது தான் வித்யாதானம். மூன்றாவது தானம் ஞானதானம், அதாவது இறைவுணர்வை கொடுப்பது. நாம் அன்னதானம் கொடுக்கும் போது, ஒருவரை மூன்று மணி நேரங்களுக்கு திருப்தி செய்கிறோம். ஆகவே மூன்று மணி நேரங்கள் சழித்து, அவருக்கு மீண்டும் உணவு தேவைப்படும். வித்யாதானத்திற்கு கொடுக்கும் போது, அதாவது கல்வி அல்லது அறிவை ஒருவருக்கு கொடுக்கும் போது, அவரே அவருடைய வாழ்க்கை முழுவதும் உணவை தேடி கொள்ளகூடிய திறனை வளர்த்து போது, அவரே அவருடைய மன வளர்ச்சிக்கு தேவையான உணர்வை தேடி கொள்கிறார். வித்யாதானம் கொடுப்பதே சிறந்தது. அவர் தமக்கு தேவையான பணத்தை தாமே சம்பாதித்து, உணவை பெறுகிறார். ஞானதானம் கொடுக்கும் போது, நாம் ஒருவருக்கு அவரின் ஒவ்வொரு பிறவிக்கும் தேவையான இறுப்பிதையை தருகிறோம்! அன்னதானம் மூன்று மணி