Chapter 7
வாக் சக்த்தைத் த்றக்கும் த்றவுகோல் ஒருங்குவித்தல்.
வாக் சக்த்தைத் த்றக்கும் த்றவுகோல் ஒருங்குவித்தல்.
ஒருங்குவித்தல் இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகளை நிறைவேற்றுவது. மற்றொன்று மற்றவர்களுக்கு கொடுக்கும் வார்த்தைகளை நிறைவேற்றுவது.
சரியான வார்த்தைகள் உங்களிடமிருந்துதான் ஆரம்பமாகின்றன.
நீங்கள் உச்சரிக்கும் வார்ததைகளை, முதலில் கேட்கும் நபர் யார்?
நீங்களே!
உங்கள் வார்த்தைகளை நிறைவேற்றும்பொழுது, உங்களுள் தன்னம்பிக்கை வளரும். உங்கள் சுய-சந்தேகங்கள் கரைந்து விடும். நீங்கள் பலமிக்கவர்களாகி விடுகிறீர்கள்.
மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வளரும். அந்த நபருடனான உங்கள் உறவு பலப்படும் !