வார்த்தைகளை விழிப்படன் உச்சரிக்க வேண்டும், ஹன்?
வார்த்தைகளை விழிப்படன் உச்சரிக்க வேண்டும், ஹன்?
வார்க்கைகளை உணர்வுடன் உச்சரிப்பதும் விழிப்புடன் உபயோகிப்பதும், அந்த வார்த்தைகள் உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
சரியான வார்க்கைகளை உபயோகிப்பது, உடனடியாக உங்களின் சிந்தனை முறையையும், உங்களைப் பற்றிய உணரும் முறையையுமே மாற்றிவிடும். சரியான வார்த்தைகளைக் கொண்டு ஒரு சூழ்நிலையைக் கையாளும்போது, அதற்கு பதில்செயல் புரியும்பொழுது, உங்கள் உடல் மொழியில் கூட ஒரு மாற்றம் எற்படுவதை நீங்கள் கவனிக்க முடியும். சரியான வார்த்தைகள், உங்கள் உள் உலகை முரண்பாடுகளற்ற அமைதி நிலையில் வைக்கும்; உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீட்டிக்கும்! சரியான வார்த்தைகளை உருவாக்கி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம், உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுத்தபடி உங்கள் வாழ்வை நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம்.
வார்த்தைகளின் சுத்தி மூலம் உங்கள் நிஜ வாழ்வை நாங்கள் உருவாக்கிக் கொள்ளவாம்
நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளே நீங்கள்!
உங்களிடமும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசும் வார்த்தைகளாகவே நீங்கள் ஆகிறீர்கள். ''நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன், நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன்,'' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், நீங்கள் மிக எளிதாக நோயில் விழுவீர்கள். அதேபோல, தொடர்ந்து நீங்கள், "நான் ஆரோக்யமாக இருக்கிறேன். நான் ஆரோக்யமாக இருக்கிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால், உங்களுடைய துணிவும் சக்தியும் விழிப்படைந்துவிடும். நீங்கள் ஆரோக்கியமடைந்து விடுவீர்கள்! உங்கள் உடல் மன அமைப்பில் பிரபஞ்ச சக்தி விழிப்படைந்து, உங்கள் பிரகடனங்களை நிதர்சனமாக்கும். சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் நீங்கள் உங்கள் நிதர்சன வாழ்வைச் சரியான வார்த்தைகளுடன் தொடங்குகிறீர்கள்! உங்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதே இது!
உங்களை நோக்கிய சரியான வார்த்தைகள் உங்களை நோக்கிய தவறான வார்த்தைகள் மற்றவர்களை நோக்கிய சரியான வார்த்தைகள் மற்றவர்களை நோக்கிய தவறான வார்த்தைகள்
வார்த்தைகளின் சுத்தியைப் பற்றி விளக்கும் ஒரு சின்ன கதை:
ஒரு துறவி, ஒருமுறை ஒரு கிராமத்திற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு குடிசையைக் கடந்து செல்கையில், அக்குடிசையிலிருந்து வெளிவந்த ஒரு பெண்மணி அத்துறவியைக் கண்டார். உடனே அவர் அந்தத் துறவியை வணங்கி, நோயால் இறந்துகொண்டிருக்கும் தம்முடைய குழந்தையைக் குணப்படுத்தும்படி மன்றாடி வேண்டினார். அத்துறவி அக்கிராமத்திற்குப் புதியவராகையால், அவர் ஏதாவது அதிசயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஆர்வத்தில் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது. அந்தப் பெண்மணி தம்முடைய குழந்தையை வீட்டிலிருந்து வெளியே தூக்கி வந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், ''மருந்துகள் கொடுத்தும் சரியாகாத ஒரு நோய், உங்கள் பிரார்த்தனை மூலம் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?'' என்று கூக்குரலிட்டார். உடனே அந்தத் துறவி அவரைப் பார்த்து, ''முட்டாளே வாயை மூடு. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ அறிய மாட்டாய்!' என்று கத்தினார். 'முட்டாள்' என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதர் கோபத்தால் கொந்தளித்துப் போனார். அவருடைய முகம் சிவந்து விட்டது! ''என்ன ஒரு தைரியம் உனக்கு, என்னையே அவமானப்படுத்துகிறாயா!'' என்று கூச்சலிட்டான். அந்தத் துறவி சிரித்துக் கொண்டே அமைதியுடன் அவரை நோக்கிக் கேட்டார். ''ஒரு வார்த்தை, இந்தளவுக்கு உனக்குள் கோபத்தைமூட்டுமானால், மற்றொரு வார்த்தை ஏன் குழந்தையைக் குணப்படுத்தாது ?''
இதுவே வார்க்கைகளின் சக்கி!