Chapter 5
ஒருங்குவித்தல் என்றால் என்ன?
ஒருங்குவித்தல் என்றால் என்ன?
நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணங்களையும் வாக்குறுதிகளையும் உயிராகவே நினைந்து நிறைவேற்றி, உங்களோடும் வாழ்க்கையோடும் பூர்ணத்வ நிலையை உணர்தல் !
ஒருங்குவித்தல் என்பது நம் வாழ்க்கையில் கொடுக்கும் பெரிய பெரிய வாக்குறுதிகளைப் பற்றியது மட்டுமல்ல. 'நான் நாளையிலிருந்து அதிகாலை எழுந்து யோகப் பயிற்சிகளைச் செய்வேன்' என்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வாக்குறுதியாகட்டும் அல்லது 'நாம் மாலை ஐந்து மணிக்குச் சந்திக்கலாம்' என்று உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் வாக்குறுதியாகட்டும் -
இது போன்ற சின்ன சின்ன வாக்குறுதிகளையும் உள்ளடக்கியதுதான். உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் எந்த மாதிரி வார்த்தையைக் கொடுக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அதற்கு மதிப்பளித்து நிறைவேற்றுவதே உண்மையான ஒருங்குவித்தல்.