Chapter 4

உங்களின் வார்த்தைகளை உங்களின் வாழ்வு!

1 sections

உங்களின் வார்த்தைகளை உங்களின் வாழ்வு!

உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவற்றை நிறைவேற்றுவது என்பது ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது ?

நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உங்கள் வார்த்தைகளின் மீதும் வாக்குறுதிகளின் மீதும்தான் உங்கள் வாழ்க்கை கட்டப்படுகிறது.

உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள்தான் அடிப்படை கட்டமைப்பு, அதன் மீதுதான் உங்கள் வாழ்வு என்னும் கட்டிடம் கட்டப்படுகிறது! உங்கள் வாழ்க்கையை ஒரு கட்டிடத்துக்கு ஒப்பிட்டால்,

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள்தான் அந்தக் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் ! அஸ்திவாரம், தூசுபடிதலோ துருப்பிடித்தலோ இல்லாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகிறது, 'தூசுபடிதலோ துருப்பிடித்தலோ இல்லாமல்' என்பதன் பொருள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள், விழிப்பற்ற மனப்பாங்குகள் இல்லாமல் இருப்பது அவசியம்.

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக் கொள்ளும் விழிப்பற்ற வார்த்தைகளே உங்கள் வாழ்வு என்னும் கட்டிடத்தில் படியும் மாசுக்களும், துருவும்! மாசுக்களும், துருவும் படிந்த அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் கட்டிடம் நீண்ட நாட்களுக்கு நீடித்து நிலைக்காது. அது உறுதியான, தூய்மையான மற்றும் நம்பகமான இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதைப் போலவே, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகள் மீது உங்கள் வாழ்க்கை கட்டப்படுவதால், உங்கள் வார்த்தைகளும் வாக்குறுதிகளும் விழிப்பற்ற மனப்பாங்குகளோ, உணர்வற்ற மனப்பாங்குகளோ அற்றதாக இருக்க வேண்டியது

அவசியம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் வாழ்வின் உறுதி அமைகிறது. உங்கள் வார்த்தைகள் விழிப்புமிக்கதாக இருந்தால், உங்கள் வாழ்வும் விழிப்படையும். உங்கள் வார்த்தைகள் விழிப்பற்றதாக இருந்தால், உங்கள் வாழ்வும் விழிப்பறு நிலையிலேயே கழியும்.

அதனால்தான் ஒருங்குவித்தல், உங்கள் வாழ்வின் அஸ்திவாரத்தை வடிவமைக்கிறது. ஒருங்குவித்தல் உங்கள் வாழ்வு சக்தியின் பாகமாகவே இருக்கிறது. நீங்களும் இந்த முழு பிரபஞ்சமும் இயங்குவதே இந்த ஒருங்குவித்தல் சக்தி மீதுதான்!