Chapter 3
தத்துவங்கள்: – 4 சக்திகளுக்கான திறவுகோல்கள்
தத்துவங்கள்: – 4 சக்திகளுக்கான திறவுகோல்கள்
4 சக்திகளுமே, தத்துவங்கள் எனப்படும் 4 ஆன்மிகக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தத்துவமுமே, உங்களுக்குள் உறைந்திருக்கும் அதனதனுக்குரிய சக்தியைத் திறக்கும் திறவுகோலாகத் திகழ்கிறது.
நீங்கள் ஒருங்குவித்தல் என்னும் தத்துவத்தை உங்கள் வாழ்வின் பாகமாக்கும்பொழுது, நீங்கள் வாக்சக்தியைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு வாக்கு சித்தி வாய்க்கிறது.
நீங்கள் சிரத்தையைப் பயிற்சி செய்யும்போது, சிந்தனை சக்தி உங்களுக்குத் திறக்கப்படுகிறது.
நீங்கள் பொறுப்புகளை எடுத்துச் செயலாற்றும்போது, உங்களுக்கு உணர்வின் சக்தி சாத்தியமாகிறது.
நீங்கள் மற்றவர்களை வளப்படுத்த முடிவு செய்த அக்கணமே, வாழ்வின் சக்தியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.