4 சக்திகளை விடுவிக்கும்போது என்ன நிகழ்கிறது ?
4 சக்திகளை விடுவிக்கும்போது என்ன நிகழ்கிறது ?
வார்த்தைகளின் சக்தியை விடுவிக்கும்பொழுது, உங்களை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் சரியான, ஆற்றல் வாய்ந்த, பயன்மிக்க வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தன்னிச்சையான புத்திசாலித்தனத்தைப் பெறுகிறீர்கள்.
சிந்தனை சக்தியை வெளிப்படுத்தும்பொழுது, உங்கள் வேலையில், உறவில், கல்வித்துறையில் மற்றும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையே வெற்றிபெற, உங்கள் எண்ணங்களை ஒருங்குவிக்க உங்களால் முடியும்.
உங்களை வலிமையானவராக்கும் ஆற்றல் மிக்க பொறுப்புக்களை எடுத்துச் செயலாற்றுவதன் மூலம், உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி உணர்வின் சக்தி போதிக்கிறது.
மற்றவர்களுக்காக வாழும்போதுதான், மிகச்சிறந்த வெகுமதிகள் உங்களை நோக்கி வருகின்றன என்பதை நீங்கள் புரிந்துணரும்பொழுதுதான், உண்மையிலேயே நீங்கள் வாழ்வின் சக்தியை உணர்ந்து மகிழ்கிறீர்கள்.