விருப்பத்தை நிதர்சமையக்குதல்
விருப்பத்தை நிதர்சமையக்குதல்
கேளுங்கள் !
ஏதாவது ஒன்று நிகழ்வதற்கான உணர்வை உருவாக்கும்பொழுதெல்லாம், துரதிர்ஷ்டவசமாக அது நிதர்சனமாகுமா என்ற சந்தேகத்தையும், அதன் சாத்தியத்தைப் பற்றிய சந்தேகத்தையும் சேர்த்தே உருவாக்குகிறீர்கள்! இதுபோன்று நீங்கள் உருவாக்கிய உணர்வைப் பற்றி சந்தேகப்படும்போது, நீங்கள் ஏற்கெனவே அந்த உணர்வை களங்கப்படுத்தி விட்டீர்கள்.
குறிப்பிட்ட ஒரு நோயால் நீங்கள் துக்கப்படுகிறீர்களென்றால், பாதிக்கப்படுகிறீர்களென்றால், நீங்கள் ஆரோக்கியமானவராக ஆவதற்கான உணர்வை உருவாக்குங்கள். ஆனால் நீங்கள் சரியான உணர்வை உருவாக்கத் தொடங்கியவுடனேயே, உங்களுக்குள் எல்லாவிதமான சந்தேகங்களையும் -உணர்வு தளத்தின் சக்தியைப்பற்றிய சந்தேகம், உங்கள் திறமையைப் பற்றிய சந்தேம் - என்று உங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு எல்லா விதமான சந்தேகங்களையும் கொள்கிறீர்கள். சரியான உணர்வை உருவாக்கத் தொடங்கியவுடனேயே, உங்களுடைய கடந்த கால தோல்விகள் அனைத்தும் உங்கள் முன் வந்து நிற்கும், அரக்கர்கள் போல!
மிகவும் துரதிர்ஷ்டமிக்க ஒரு விஷயம் - நீங்கள் உணர்வுதளத்தின் சக்தியைப் பற்றி சந்தேகம்கொள்வதுதான். அதனால் முதலில், சரியான உணர்வை உருவாக்குவதிலுள்ள சிக்கல்களைத்தான் முழுமை செய்ய வேண்டும். அந்த நிறைவுணர்விலிருந்து சரியான உணர்வை உருவாக்குங்கள்.