Chapter 40
வளப்படுத்துதலைப்பற்றிய சில சூத்திரங்கள்
வளப்படுத்துதலைப்பற்றிய சில சூத்திரங்கள்
வளப்படுத்துதல்தான் உங்கள் இயல்பே! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், அது மற்றவர்களை வளப்படுத்தும் செயல்தான். உங்கள் சுவாசம் கூட மரங்களையும், செடி, கொடிகளையும் வளப்படுத்துகிறது.
மற்றவா்களை வளப்படுத்துவது உங்களையும் வளப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவருமே உங்களின் பாகமே.
உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்காகத்தான் என்ற சத்தியத்தை, உங்கள் மனத் திற்கு ஒருமுறை புரியவைத்து விட்டால்போதும், உங்கள் இதயத்தில் பதிந்திருக்கும் அனைத்து துக்கங்களும் உங்களை விட்டுச்சென்று விடும்.
அவரவர்களுடைய உச்சபட்ச சத்தியத்தில் வாழ்வதற்கு மற்றவர்களை வளப்படுத்துவதே, நீங்கள் அவர்களை வளப்படுத்தும் இறுதி, அறுதி வழி.
அதனால் உங்கள் வாழ்க்கை முறையை வளப்படுத்த தீர்மானியுங்கள்.