மற்றவர்களைப் பலமிக்கவர்களாக்குங்கள்
மற்றவர்களைப் பலமிக்கவர்களாக்குங்கள்
'பெற்றிருத்தல்' என்பது இயல்பாகவே உங்களைப் பகிர்தலுக்குப் 'பொறுப்பெடுக்கும்'படி செய்துவிடும். இதுதான் இயற்கை விதி. கண்களைப் பெற்றிருக்கும் ஒருவர், இயல்பாகவே, கண்ணற்ற ஒருவருக்கு பார்த்தலினால் ஏற்படும் பயன்களைத் தருவதற்குப் பொறுப்பாகிறார். பலமிக்க ஒருவர், இயல்பாகவே, பலமற்றர்களைப் பலமுள்ளவர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறார். கல்வியில் சிறந்திருக்கும் ஒருவர், அறியாமையில் இருக்கும் மக்களை அறிவுள்ளவர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறார். நீங்கள் செல்வந்தரானால், ஏழைகளைப் பணக்காரர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறீர்கள்.
உங்கள் செல்வத்தையெல்லாம் மற்றவர்களுக்குப் பங்குபோட்டு கொடுத்துவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியல்ல, நீங்கள் ஒரு 10 ஏழைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் செல்வத்தை அவர்களுக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால், இப்போது நாம் 11 ஏழைகளைக் கொண்டிருப்போம்! அவ்வளவுதான்.
அதனால் உங்கள் செல்வத்தை அவர்களுக்குக் கொடுக்க சொல்லவில்லை. நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், அவா்களுக்குக் கல்வி கொடுப்பதற்கும், அவர்களைச் செல்வந்தராக்குவதற்குமான பொறுப்பெடுங்கள் என்பதுதான். நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் எந்த ஒன்றையும், பகிர்ந்தளித்து, அதை மேலும் மேலும் வளர்ப்பதற்கும் நீங்கள் பொறுப்பாகிறீர்கள்.