நான் ஏன் மற்றவர்களை வளப்படுத்த வேண்டும் ?
நான் ஏன் மற்றவர்களை வளப்படுத்த வேண்டும் ?
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எங்கோ தனித்திருக்கும் ஒரு காட்டிற்குள்ளோ அல்லது ஒரு குகைக்குள்ளோ வாழவில்லை. வாழ்க்கை உங்களுக்கு வெளியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் மற்றவர்களுடன் இணைந்தே வாழ்கிறீர்கள். வாழ்க்கை மற்றவர்களுடன்தான் நிகழ்கிறது. நீங்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் உங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் இப்படி உங்கள் வாழ்க்கை நூற்றுக்கணக்கானவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கும்பொழுது, இயற்கையாகவே, உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் உணர்வுருமாற்றத்தை விரும்பினீர்களென்றால், நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையிலும் உணர்வுருமாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வேலைசெய்தாக வேண்டும் !
| உங்களை கைவிடாதீர்கள் | ||
|---|---|---|
| மற்றவைரை வளப்படுத்துங்கள் | உங்களை வளப்படுத்துங்கள் | |
| மக்களை கைவிடாதீர்கள் |
இல்லையென்றால், நீங்கள் நாட்கணக்காக, மாதக்கணக்காகத் தொடர்ந்து அமர்ந்து தியானம்செய்து, உங்களை உயர்நிலை இன்பத்திற்கும் ஆனந்தத்திற்கும் உயர்த்திக்கொள்ளலாம், ஆனால் உங்கள் வீட்டுக்குத் திரும்பிய பத்தே நிமிடத்தில், உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைக் கீழ்நிலைக்கு கொண்டுவந்துவிடுவார். பத்து நிமிடங்கள் என்பதுகூட அதிகம்தான்! ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு தொலைபேசி அழைப்பு போதும்! மற்றவர்களை வளப்படுத்தும்பொழுது மட்டுமே, உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு உணர்வுருமாற்றத்தையும் ஏற்று, அதைக் கடக்க முடியும்.
பொறுப்பெடுத்தல் என்றால், நீங்கள் மற்றவர்களின் ஒருங்குவித்தலின்மையையும் அசிரத்தையையும் ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கான பழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொருள் அல்ல. இல்லை! அவர்கள் வாழ்வில் விடுவிக்காமல் இருக்கும் இந்த 4 சக்திகளையும் அவா்களும் உணர்ந்துகொள்வதற்கு, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களைப் பலமிக்கவர்களாக்கவும் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.