Chapter 37

வளப்படுத்துதல், வல்லா சக்திகளுக்கும் உயிரளிக்கிறது

1 sections

வளப்படுத்துதல், வல்லா சக்திகளுக்கும் உயிரளிக்கிறது

ஒருங்குவித்தலுடன் வாழும்பொழுது நீங்கள் நேர்மறை உணர்வை உணர்கிறீர்கள், சிரத்தையுடன் வாழும்பொழுது நீங்கள் சாத்திய உணர்வை உணர்கிறீர்கள், பொறுப்பெடுத்தலில் தலைமை உணர்வை உணர்கிறீர்கள். வளப்படுத்தலுடன் வாழும்பொழுது, ஞான உணர்வை, ஜீவன் முக்த உணர்வை உணர்கிறீர்கள். ஜீவன் முக்த வாழ்க்கை என்பது உங்களுடைய 4 உள் சக்திகளையும் விடுவித்து, அவற்றை உங்களையும், மற்றவர்களையும் வளப்படுத்தப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, வேறொன்றுமில்லை. அதனால் வாழ்க்கை சக்தி, எல்லா சக்திகளையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.

ஒருங்குவிக்கப்பட்ட கேட்டலையும் (சிரவணம்), சிரத்தையுடன் கூடிய சிந்தனையையும் (மனனம்), பொறுப்பான பிரகடனத்தையும் (நிதித்யாசனம்) செய்யும்போது, நீங்கள் வளப்படுத்தும் வாழ்வையே வாழ்வீர்கள்.

உங்களையும், மற்றவர்களையும் வளப்படுத்தினால், அது பொறுப்படுத்தலைவிட ஒருபடி மேலானதுதான். வளப்படுத்துதல் ஒன்றே உங்களுள் இருக்கும் எவ்வித ஒருங்குவித்தலின்மை, அசிரத்தை மற்றும் பொறுப்பின்மையையும் எரித்துவிட முடியும்! மற்றவர்களின் ஒருங்குவித்தலின்மை மற்றும் அசிரத்தை உட்பட ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் பொறுப்பெடுப்பதே 'வளப்படுத்துதல்'! ஏனென்றால் அவர்கள் உங்களின் ஒரு அங்கமே!