Chapter 36

அனைத்தும் உங்களின் அங்கமே

1 sections

அனைத்தும் உங்களின் அங்கமே

கேளுங்கள்: மற்றவர்களை உங்களிடமிருந்து வேறானவர்களாக நீங்கள் நினைக்க ஆரம்பிக்கும் அக்கணமே, உங்கள் வாழ்வில் அனைத்துவிதமான போராட்டங்களும் ஆரம்பித்துவிடுகிறது! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்வில் 'மற்றவர்' என்று எவருமே இல்லை. 'மற்றவர்' என்பது மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட உங்களின் ஒரு பகுதியே! மற்றவர்களுடனான போராட்டம் என்பது, மறக்கப்பட்ட உங்களின் பகுதியுடனான போராட்டமே.

மற்றவர்களை வளப்படுத்தும்பொழுது, இயற்கையாகவே கைவிடப்பட்ட உங்களின் ஒரு பகுதியையும் சேர்த்தே வளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதனால் மற்றவர்களை எந்தளவிற்கு வளப்படுத்துகிறீர்களோ அந்தளவிற்கு உங்களை நீங்களே வளப்படுத்திக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் உங்களின் ஒரு பகுதியே என்ற சத்தியத்திற்கு விழித்துக் கொள்கிறீர்கள். Above all, you wake up to the truth that everyone and everything is part of you.