உணர்வின் விஞ்ஞானம்
உணர்வின் விஞ்ஞானம்
உணர்வின் விஞ்ஞானத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஒன்றையும் மகிழ்ச்சியாகவும் உணரலாம் அல்லது வலியாகவும் உணரலாம். அது உங்கள் சுதந்திரம்! சிறந்த வாழ்நாள் சாதனைகள் கூட சில சமயங்களில் உங்களுக்கு வலியைக் கொண்டுவரும். அதேபோல் மிக மோசமான ஒரு அனுபவம் கூட, உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான பாடமாக இருக்கலாம். நீங்கள் அதை எப்படி உணர வேண்டும்' என்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலை நீங்களேதான் பெற்றிருக்கிறீர்கள்.
கேளுங்கள்: எப்பொழுதெல்லாம் உங்களை ஆற்றலுடையவராக உணர்கிறீர்களோ, அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீாகள். எப்பொழுதெல்லாம் உங்களைச் சக்கியற்றவராக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் துக்கத்தையே அனுபவிக்கிறீர்கள். உங்களுடைய எல்லாவிதமான துக்கமுமே - வலி, கோபம், குற்றவுணர்ச்சி, பொறாமை, விரக்தி - இவையெல்லாமே, உங்களுடைய சக்தியற்ற நிலை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வழிகளே! உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்திற்குமே நீங்கள் தான் பொறுப்பு என்று உணரும்பொழுது, எல்லாமே மகிழ்ச்சிதான் என்று உணர்வீர்கள்; ஏனெனில் எதுவுமே உங்களைச் சக்கியற்றவாாக்க முடியாது. அதனால், பொறுப்பெடுத்தல் மூலம் உங்களை ஆற்றலுடையவராக்கிக் கொள்ளுங்கள். உணர்வின் சக்தியை விடுவித்துக் கொள்ளுங்கள்.