உணர்வின் சக்தியை விடுவிப்பதன் மூலம், நீங்கள்...
உணர்வின் சக்தியை விடுவிப்பதன் மூலம், நீங்கள்...
சக்தியும், நிறைவுணர்வும் நிறைந்த ஒரு தளத்திலிருந்தே எப்போதும் செயல்படுவீர்கள்.
உங்கள் கவனத்தைத் தீர்வுகள் மீது செலுத்துவீர்கள்; பிரச்னைகள் மீதல்ல.
உங்கள் உள்உணர்வை விரிவுப்படுத்துவீர்கள். புது சாத்தியக்கூறுகளுக்கு உங்களைத் திறந்து வைப்பீர்கள்.
ு உங்கள் வாழ்க்கை மீது சிறந்த கட்டுப்பாட்டைப் (Gain a high degree of control over your life ) பெறுவீர்கள்.
வெற்றியின் அடுத்த நிலைக்கு உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வீர்கள். ஒரு ஜீவனாக மலர்வீர்கள்.
உங்கள் உணர்வின் சக்தியை விடுவிக்கும் பயிற்சி முறை:
உங்களை நீங்களே எங்கெல்லாம் சுருக்கிக் கொள்கிறீர்களோ, உதாரணத்திற்கு வேலையில், உறவு முறைகளில் என்று எங்கெல்லாம் உங்களைச் சுருக்கிக் கொள்கிறீர்களோ அவற்றைப் பட்டியலிடுங்கள்.
வாழ்வின் இந்த ஒவ்வொரு அம்சத்திலும், நீங்கள் எந்த மாதிரி எண்ணங்களை எண்ணுகிறீர்கள்: எந்த மாதிரியான செயல்களைச் செய்கிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள்.
வாழ்வின் அந்த அம்சக்திற்கு நீங்கள் பொறுப்பெடுக்காமல், அதற்குப் பதிலாக வெளிக் காரணிகள் ஏதாவது அந்த அம்சத்தை மாற்றி விடும் என்று வெளிக் காரணிக்காகக் காத்திருக்கும் அம்சங்களை அடையாளம் கண்டு பட்டியலிடுங்கள்.
அற்றுள் ஏதாவது ஒரு அம்சத்தைத் தேர்ந்தெடுத்து, அதை மாற்றுவதற்குரிய புதிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு நீங்களே பொறுப்பு என்று பிரகடனப்படுத்துங்கள். அது நிகழ நீங்கள் எதை மாற்ற வேண்டுமென்பதை அடையாளம் காணுங்கள். > ஒரு வாரத்திற்கு, உங்களை நீங்களே தொடர்ந்து கவனித்து, உங்கள் முன்னேற்றத்தைக் குறித்து வையுங்கள்.