Chapter 31

நான் பொறுப்பு என்று உணர்வது' என்பதன் பொருள் என்ன ?

1 sections

நான் பொறுப்பு என்று உணர்வது' என்பதன் பொருள் என்ன ?

உங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிற்குமே நீங்கள் தான் பொறுப்பு என்று நான் சொல்வதைக் கேட்டவுடன், உடனே நீங்கள், 'தெருவில் கிடக்கும் குப்பைகளுக்கெல்லாம் நான் தான் பொறுப்பு என்றால், அதைச் சுத்தம் செய்வதிலேயே என்னுடைய நாள் முழுவதுமே செலவழிந்து விடுமே! நான் அதற்குப் பிறகு எதுவுமே செய்ய முடியாகே!' என்று நினைக்கலாம்.

கேளுங்கள்: தெருவில் கிடக்கும் குப்பைக் கூளங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்று நீங்கள் உணர்ந்தால், நீங்களேதான் அவற்றைச் சுக்கம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை ;

மேலும் நீங்கள் அதைச் சுத்தம் செய்யக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. என்ன வேண்டுமானாலும் நிகழட்டும். ஆனால் உங்களுடைய கற்பனையான சிக்கல்கள் imaginary complications காரணமாக, பொறுப்பெடுத்தலில் குதிப்பதற்குப் பயப்படாதீா்கள். அப்படி உணர்வதற்கே கூட உங்களை நீங்களே தடுத்துக் கொள்ளாதீர்கள்!

அந்தக் கற்பனையான சிக்கல்களை (imaginary complications) முழுமைப்படுத்துங்கள். சிறிதுகால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள், இந்தப் பொறுப்புணர்வு உங்களுக்குள் மூழ்கவும், உங்கள் செயல்களுடன் ஒத்திசைந்து செல்லவும் அனுமதியுங்கள். இப்படி செய்யும்போது, பொறுப்பே (responsibility) ஒருங்குவிக்கப்பட்ட சக்தியாகிவிடும் (synergy).