காரணங்கள் Vs பொறுப்பெடுத்தல்
காரணங்கள் Vs பொறுப்பெடுத்தல்
'எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பெடுப்பது' என்பது பற்றி கேட்டவுடனேயே, உங்கள் மனத்திற்குள் எழும் மிகப்பெரிய கேள்வி இது, 'என்னைச் சுற்றி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும்?'
''எனக்குள் நிகழ்பவற்றுக்கு நான்தான் பொறுப்பாளி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்னைச் சுற்றி நடப்பவற்றிற்கு, எனக்கு வெளியில் நடப்பவற்றிற்கு நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும். உதாரணத்திற்கு, எனக்கு ஒரு விபத்து நிகழ்ந்தால், அதற்கு நாம் எப்படி பொறுப்பாளியாக முடியும் ?''
எல்லோரும் கேட்கும் கேள்வி இது!
கேளுங்கள்: ஏதோ ஒன்றுக்கு காரணமாக இருப்பதற்கும், அதற்கான பொறுப்பெருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது!
சில சமயங்களில், சில நிகழ்வுகள் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிகழ்வு உங்கள் வாழ்வைப் பாதிக்குமானால், நீங்கள்தான் அந்நிகழ்வுக்குப் பொறுப்பு! உதாரணத்திற்கு, உங்கள் நாட்டில் நிலவும் பொருளாதார லஞ்ச-லாவண்யங்களுக்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்நாட்டின் பிரஜை என்ற முறையில் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு! உங்கள் தர்க்கத்தின்படி, நீங்கள் அதற்குக் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் அதற்கு பொறுப்பு அல்ல என்பது அதன் பொருள் அல்ல. You may not be the reason, as per your logic, but that doesn't mean that you are not responsible in truth.
நீங்கள் பொறுப்பெடுக்காவிட்டால், நீங்கள் உங்களை மேம்படுத்தப்போவதும் இல்லை, உங்களுடைய உள் உலகை விரிவுப்படுத்திக் கொள்ளப்போவதும் இல்லை என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.